Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள் : கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் - ஈபிடிபி தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
EPDP-seithy-20131009.jpg

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொறுப்புக்களை உணர்ந்தும், நடைமுறை அரசியல் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டும் வடக்கு மாகாண சபையை செயலூக்கமுள்ள அரசாக நடத்திச் செல்ல எமது அனுபவப் பகிர்வுகளையும் தேவையான பொழுதில் நாம் வழங்குவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள் அமைச்சுப் பொறுப்புக்களுக்காக முட்டிமோதிக் கொண்டிருப்பது, முதலமைச்சர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு தர்மசங்கடமான சூழலையே ஏற்படுத்தும். எனவே கூட்டமைப்பினர் முரண்பாடுகளை கைவிட்டு முதலமைச்சருக்கு உதவுகின்றவகையில் சுமூகமான தீர்வுக்கு வரவேண்டும்.

  

வடக்கு மாகாண சபை ஒன்று இல்லாத சூழலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மத்திய அரசுடன் இணக்கப்பாட்டுடனும், புரிந்துணர்வுடனும் செயற்பட்டு எமது மக்களுக்கும், எமது மாகாணத்துக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்து வந்துள்ளோம். அன்று நாம் கூறிய யதார்த்தத்தை இன்று முதலமைச்சர் விக்கினேஸ்வரனும், கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனும் கூறுவதை நாம் ஆச்சரியமாகப் பார்க்கவில்லை. இதையே நாம் இணக்க அரசியல் என்று கூறினோம். இதனூடாகவே எமது மக்களின் வாழ்வை தூக்கி நிறுத்த முடியும், அழிந்துபோன எமது வாழ்விடங்களையும் புதுப் பொழிவுடன் மீளக்கட்டி எழுப்ப முடியும். இந்த யதார்த்தையே நாம் கூட்டமைப்பினருக்கும் கூறி வந்துள்ளோம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்பிரச்சனைக்கு தீர்வொன்றைக்காணும் முயற்சியிலும் இதே வழிமுறையே வெற்றியளிக்கும். இதை தற்போது உணர்ந்திருக்கும் வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும்.

 

இந்த வழிமுறையை சலுகை அரசியல் என்றும், எலும்புத்துண்டு அரசியல் என்றும் தூற்றியோருக்கு இன்று உண்மை புரிந்திருக்கவேண்டும். எமது அரசியல் உரிமைக் கோரிக்கையின் நியாயத்தை பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கும், மத்திய அரசுடன் பகை தவிர்த்து எமது மக்களுக்கான தேவைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் அரசுடன் புரிந்துணர்வுடனான செயற்பாடு ஒன்று அவசியம். கூட்டமைப்பின் தலைமை அதை உணர்ந்திருப்பதுபோல் கூறியிருக்கின்றது. மன உறுதியோடு இவ்வழி முறையில் அவர்கள் பயணிப்பார்களாக இருந்தால் அதை நாம் வரவேற்போம். வடக்கு மாகாண சபை அரசை புதிய கட்டிடத் தொகுதியிலிருந்தும், புதிய ஆரம்பங்களிலிருந்தும் பெரும் சவால்களுக்கு மத்தியில் ஆரம்பிக்க வேண்டியிருப்பதை நாம் புரிந்து கொள்கின்றோம். இந்த வேளையில் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒவ்வொருவரும் புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பதனூடாகவே வெற்றிகரமான பயணத்தை செய்யமுடியும். நடைமுறைச்சாத்தியமான முயற்சிகளுக்கும், மக்களுக்கான சேவைக்கு முன்னுரிமையளிக்கும் பயன் உள்ள வேலைத்திட்டத்துக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எமது ஒத்துழைப்பு என்றும் இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=94547&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவை தங்கட அனுபவத்தை பகிர்ந்து கொள்ளப் போகினமாமில்ல. யாழ் மாநகரசபையையே ஒழுங்கா நடத்த முடியல்ல. தொட்ட இடமெல்லாம் ஊழல்..! இதில இவை நடத்தினது.. எலும்புத்துண்டு அரசியல் இல்லையாம். சிங்கள மக்களுக்கு புரிய வைப்பு அரசியலாம். கேட்கிறவன் கேணயன் என்றால் எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டுமாம்.

 

இவை செய்த அரசியலை மக்கள் தானே நிராகரித்துவிட்டார்களே. பிறகெதற்கு கூட்டமைப்பும் அதே வழில வரணும் என்று வரவேற்கினம். எல்லாம் தான் தான் நினைச்சது தான் அரசியல் என்று நினைக்கினமே தவிர மக்கள் விரும்பிறதைச் செய்யுறதா ஒருத்தருக்கும் பிளான் இல்லைப் போல. எல்லாம் எலும்புத்துண்டுக்கு அலைஞ்ச பழக்க தோசம்..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு யாரயும் கடத்த வேண்டி வரும் என்றால் இவையள் உதவி செய்வினம் :D

பகவத்கீதை தான் நினைவு வருகின்றது .

நடந்தது நடப்பது எல்லாமே நல்லதிற்குதான் .

  • கருத்துக்கள உறவுகள்
ஐரோப்பாவில் வாழும் நண்பர் ஒருவர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு  சொகுசு பஸ் ஆட்களை வைத்து நடாத்துகிறார்.பஸ்சின் ஒட்டுனராக சிங்களவரை வைத்துள்ளார்.(ராணுவம் ஒன்றும் கேட்காதாம் என்ற நம்பிக்கை ஏறும் தமிழ் மக்களுக்கு வர வேண்டுமாம்).பஸ்சின் பின்னால் டக்ளசினதும் மகிந்தவினதும் பெரிய படம் ஒட்டப்பட்டுள்ளதாம்.வருமானத்தில் சில வீதம் மாதா மாதம் டக்ளசுக்கு கப்பமாக கொடுக்கப்படுகிறதாம்.இவ்வளவு சுதந்திரம் போதாதா சிறிலங்காவில் முதலீடு செய்ய?
சா என்ன ஒரு மக்கள் சேவையாளன். இவரிடம் இருந்து கூட்டமைப்புக்கு உதவி தேவையாம். 

 


பகவத்கீதை தான் நினைவு வருகின்றது .

நடந்தது நடப்பது எல்லாமே நல்லதிற்குதான் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பகவத்கீதை தான் நினைவு வருகின்றது .

நடந்தது நடப்பது எல்லாமே நல்லதிற்குதான் .

 

 

இதன் மூலம்

உலக வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட பெரும் இனப்படுகொலையை  ஏற்றுக்கொள்கின்றீர்கள்

நியாயப்படுத்துகின்றீர்கள்............ :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.