Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[தயவுசெய்து மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழத்திற்கும்..தமிழர்களின் வரலாற்றிற்கும் அபகீர்த்தி உண்டுபண்ணக் கூடிய வகையில் அமையக் கூடிய செவிவழி விடயங்கள் சார்ந்து அமையக் கூடிய கேள்விகளை.. போதிய நிரூபிக்கக் கூடிய ஆதாரமற்ற கேள்விகளை தவிர்க்குமாறு.. குறிப்பாக கடத்தல்கள்.. கொலைகள்.. பற்றிய சரியான விசாரணைகளோ.. நீதியான விசாரணைகளோ.. அவற்றிற்கான உண்மைக்காரணங்களோ தெரியக் கூடிய சந்தர்ப்பங்கள் அற்ற நிலையில்.... அல்லது  அப்படியான ஒரு சூழலில் நிகழ்ந்தவற்றிகான சுயதீர்ப்புக்களை  அடிப்படையாக வைத்து...கேள்விகளை அமைப்பதை தவிர்த்துக் கொண்டு ... மக்கள்... நியாயமான வரலாற்று நிகழ்வுகளை அறியக் கூடிய பதிவு ஒன்றிணை மேற்கொள்ள இதுவரை உதவி நிற்றது போல உதவி நில்லுங்கள் உறவுகளே...!!! ]

[மேலும் போராளிகளின்  மாவீரர்களின் வாழ்க்கை வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்பும் போது பதில்களை தரும் போது.. செத்தான்.. மரணமானான் போன்ற பதங்களை தவிர்த்து  வீரமரணம்.. வீரச்சாவு.. சாவு போன்ற விடுதலைப்புலிகள் அமைப்பு சமூகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த பதங்களைப் பாவியுங்கள். தயவுசெய்து.]

தமிழீழ விடுதலைப் புலிகளால் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் மக்களின் நீண்ட நாள் கனவான.. தமிழீழ தேசத்தின்.. நிர்வாகப் பொருண்மிய சமூகக் கட்டமைப்புக்கள் எவை..??! அவை முறையே எப்போது ஆரம்பிக்கப்பட்டன..?!

Edited by nedukkalapoovan

  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சசி மாஸ்ரரின் இயற்பெயர் என்ன?அவர் எந்த ஊரை சேர்ந்தவர்?

சிவமித்திரன் ,மானிப்பாயை சேர்ந்தவர்.

நீதி நிதி நிர்வாகம்

காவல்துறை

பொருண்மிய மேன்பாட்டு கழகம்.

கலை பண்பாடு கழகம்

நிர்வாக சேவை

பெண்கள் முன்னேற்ற கழகம்

அறிவுச்சோலை

முதியோர் இல்லம்

சுயதொழில் ஊக்குவிப்பு

இன்னும் பல இருக்கு என்று நினைக்கிறேன் .

நான் சாகலாம் நீ சாகலாம் நாங்கள் சாகக்கூடாது என கூறிய தளபதி யார் ?

குறிப்பு :அவரின் பெயரில் புலிகளால் ஒரு ஏறி குண்டுகூட தயாரிக்க பட்டது .

விடைகளுக்கு பாராட்டும் நன்றிகளும் அஞ்சரன்.

இவற்றிற்கு மேலதிகமாக..

தமிழீழ விளையாட்டுக் கழகம்.

தமிழீழ சட்டக் கல்லூரி.

தமிழீழ தொல்பொருளியல் சமர் நூலாக்கப் பிரிவு.

தமிழீழ கோட்ட வட்ட நிர்வாகம்.

தமிழீழ கல்விக் கழகம்

தமிழீழ வங்கி.

தமிழீழ போக்குவரத்துக் கழகம்.

இதைவிட இன்னும் பல................ கீழுள்ள இணைப்பையும் பாருங்கள்...

தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.

அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:

* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.

* தமிழீழ வைப்பகம்.

* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.

* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.

* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.

* கிராமிய அபிவிருத்தி வங்கி.

* அனைத்துலகச் செயலகம்.

* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)

* சுங்க வரித்துறை.

* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.

* அரசறிவியற் கல்லூரி.

* வன வளத்துறை.

* தமிழீழ நிதித்துறை.

* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.

* கலை பண்பாட்டுக்கழகம்.

* மருத்துவப் பிரிவு.

* திலீபன் சிறப்பு மருத்துவமனை.

* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.

* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.

* சுகாதாரப் பிரிவு.

* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.

* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.

* நிர்வாக சேவை.

* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.

* மீன்பிடி வளத்துறை.

* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)

* தொழில் நுட்பக் கல்லூரி.

* சூழல் நல்லாட்சி ஆணையம்.

* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.

* தமிழீழ விளையாட்டுத்துறை.

* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.

* தமிழீழ போக்குவரவுக் கழகம்.

* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).

* வளங்கள் பகுதி.

* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)

* விலங்கியல் பண்ணைகள்.

* விவசாயத் திணைக்களம்.

* தமிழ்மொழி காப்பகம்.

* தமிழீழ சட்டக்கல்லூரி.

* தமிழீழ கல்விக் கழகம்.

* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.

* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).

* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).

* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).

* வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)

* அன்பு முதியோர் பேணலகம்.

* இனிய வாழ்வு இல்லம்.

* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).

* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)

* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)

* சீர்திருத்தப் பள்ளி.

* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).

* உதயதாரகை (விதவைகளுக்கானது).

* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.

* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).

* எழுகை தையல் பயிற்சி மையம்.

* மாணவர் அமைப்பு.

* பொத்தகசாலை (அறிவு அமுது).

* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.

* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).

* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).

* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.

* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).

* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).

* வெளிச்சம் (மாத சஞ்சிகை).

* நாற்று (மாத சஞ்சிகை).

* பொற்காலம் வண்ணக் கலையகம்.

* அருச்சுனா புகைப்படக் கலையகம்.

* ஒளிநிலா திரையரங்கு.

* புலிகளின் குரல் வானொலி.

* தமிழீழ வானொலி.

* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.

* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.

* தமிழீழ இசைக்குழு.

* காலணி (பாதணி உற்பத்தி மையம்)

* சேரன் உற்பத்திப் பிரிவு.

* சேரன் வாணிபம்.

* சேரன் சுவையகம்.

* சேரன் வெதுப்பகம்.

* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).

* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.

* பாண்டியன் சுவையூற்று.

* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.

* சோழன் தயாரிப்புகள்.

* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.

* தென்றல் இலத்திரனியலகம்.

* தமிழ்மதி நகை மாடம்.

* தமிழ்நிலா நகை மாடம்.

* தமிழரசி நகை மாடம்.

* அந்திவானம் பதிப்பகம்.

* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.

* இளவேனில் எரிபொருள் நிலையம்.

* இளந்தென்றல் தங்ககம் (Lodge).

* 1-9 தங்ககம் (Lodge)

* மருதம் வாணிபம்.

* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).

* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).

* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.

* மாவீரர் அரங்குகள்.

* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.

* மாவீரர் நினைவு வீதிகள்.

* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.

* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.

* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.

* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.

* மாவீரர் நினைவு நூலகங்கள்.

* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.

* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)

மூலம்>>>>> https://groups.google.com/forum/#!msg/thamizayam/ws6RXGVztRM/zvWpcfA4MYEJ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாம் எப்பப்போ..ஆரம்பிக்கப்பட்டன என்ற விபரம் அறிந்திருந்தாலும் அறியத் தாருங்கள் உறவுகளே. இவற்றின் நடைமுறை யதார்த்தத்தை நாங்கள் அறிந்திருந்தாலும்.. அனுபவித்திருந்தாலும்.. இவற்றின் ஆரம்பம்.. ஆரம்ப கர்த்தாக்கல் பற்றி போதிய அறிவின்றியே உள்ளோம். அதனை மக்கள்.. மேம்படுத்த உதவி நின்றால் நன்றே அமையும்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சரியமான  விடயங்கள்

பிரமித்து நிற்கின்றோம்

தொடருங்கள்  உறவுகளே......

நெடுக் அண்ணா இவைகள் அனைத்தும் சில பெரிய கட்டமைப்பில் கீழ்நிலையில் இயங்கியவை தனிதனியா பார்க்க முடியாது அல்லவா .

உதாரணம் :நிதித்துறை .

சேரன் ..சோழன் ...பாண்டியன் வாணிபம் (பல்பொருள் அங்காடி ...புடைவை கடை ..உணவகம் ..உதிரிப்பாகம் )

எட்டு நகைக்கடை (தமிழரசி ..தமிழ்நிலா ..இப்படி மிகுதி பெயர் மறந்திட்டு )

வருவாய்துறை .(சந்தை ..கடைகள் ..உள்ளடக்கம் )

இவை அனைத்தும் தமிழேந்தி அப்பாவிடம் இருந்தது அதை முறையே

சேரன் ..பாபு

சோழன் ..ரமேஸ்

பாண்டியன் .(MRS )குட்டி

நகைக்கடை ..பாலவாசன்

வருவாய் ..பாண்டியன்

இப்படி அண்ணா இவைகளை தனியாக தொகுப்பது கடினம் அல்லவா ?

ஆச்சரியமான  விடயங்கள்

பிரமித்து நிற்கின்றோம்

தொடருங்கள்  உறவுகளே......

1984 இலேயே நீங்கள் நாட்டை விட்டு வெளியேறியபடியால் இவற்றைப் பார்க்க ஆச்சரியமாய் தான் இருக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றம் பெற்ற பின் அந்த அமைப்பு தமிழீழ மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி அமைதி வழியில்.. சமாதான முறையில் நம்பிக்கை கொண்டு...எதிரிகளோடு பேசிக் கொண்ட சந்தர்ப்பங்கள் எவை.. அவை எப்பெப்போது எங்கெங்கு நிகழ்ந்திருந்தன.. யார் அவற்றிற்கு தலைமை தாங்கினார்/கள்?!

சசி மாஸ்ரரின் இயற்பெயர் என்ன?அவர் எந்த ஊரை சேர்ந்தவர்?

செல்வரத்தினம் மித்திரன்... ! சொந்த ஊர் மானிப்பாய் ஆனால் தன்னை திருகோணமலை நகர் எண்டு சொல்லிக்கொள்வார்... காரணம் எல்லாம் தெரியாது...

சிங்கள வடபிராந்திய படைத்தலைமையை அழிப்பதுக்காக பிரதான மூளை சசிகுமார் மாஸ்ரரே... அந்த கொப்பேகடுவ கூட்டம் மீதான தாக்குதலுக்கு பரிசாக தலைவர் அவருக்கு ஒரு கைத்துப்பாக்கியை பரிசாக கொடுத்து இருந்தார்...

சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் ஆரம்பத்தில் பயிற்ச்சி நெறிகளுக்கு பொறுப்பாக சசிகுமார் மாஸ்ர நியமிக்க பட்டார்...

மணலாறு மாவட்ட மின்னல் படை நடவடிக்கைக்கு பின்னர் எல்லா மாவட்ட பிரிவுகளின் போராளிகளையும் இணைத்து விசேட வேவு பிரிவை ஆரம்பித்த போது அதன் நிர்வாக பொறுப்பாளராகவும் பயிற்ச்சி ஆசிரியராகவும் சசிகுமார் மாஸ்ரரே நியமிக்க பட்டார்...

1991 ம் ஆண்டு கொப்பேகடுவ இராணுவ நடவடிக்கையை யாழ்ப்பாணத்தின் மீது நடத்த போகும் ஆயத்தம் அறிந்து வேவுப்பிரிவினரை கொண்டு தொல்லைப்படுத்தும் தாக்குதலை நடத்த தீர்மானித்த தலைவர் சசிகுமார் மாஸ்ரரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்...

கட்டைக்காடு ,வெத்திலைக்கேணியில் பிரதேசங்களில் இருந்து படை எடுத்த சிங்கள இராணுவத்துக்கு எதிராக வலிந்த தாக்குதலை வேவுபார்க்க ஒரு தொகுதி போராளிகள் கப்ரன் பாலா அண்ணா தலைமையில் கிண்ணி அண்ணாவின் பொறுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர்...

மிகுதி தொகுதிகள் தீவக பகுதிகளான மண்டை தீவு முதல் காரைநகர் முதலான கடல் தொகுதிகளூடாகவும், பலாலி படை முகாம் என இரண்டாக பிரிக்கப்பட்டு விடப்பட்டனர்... அதில் போராளிகளிடம் சசிகுமார் மாஸ்ரர் அடிக்கடி சொல்லும் விடயம் " பல் வலி வந்தால் உடல் நலம் கெடும் " நீங்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது செய்ய வேண்டும் அவன் மண்டையை பிய்க்க வேண்டும்... ஒருங்கிணையவோ நிதானிக்கவோ விடக்கூடாது...

அதன் பால் பல் வேறான தாக்குதல்கள் நடத்தப்பட்டன... அப்படி ஒரு தாக்குதலிலேயே கப்ரன் துரை அண்ணை தலைமையிலான போராளிகளால் கொப்பே கடுவ தலைமையிலான வடபிராந்திய கட்டளை தலைமை அழிக்கப்பட்டது...

பின்னர் படைய புலநாய்வு(Military Intelligence ) பிரிவின் ஆரம்ப பொறுப்பாளராக சசிகுமார் மாஸ்ரர் நியமிக்க பட்டார்....

Edited by தயா

M. R. Narayan Swamy

மிகச் சரியான பதில்

யாழ்வாலிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

[தயவுசெய்து மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழத்திற்கும்..தமிழர்களின் வரலாற்றிற்கும் அபகீர்த்தி உண்டுபண்ணக் கூடிய வகையில் அமையக் கூடிய செவிவழி விடயங்கள் சார்ந்து அமையக் கூடிய கேள்விகளை.. போதிய நிரூபிக்கக் கூடிய ஆதாரமற்ற கேள்விகளை தவிர்க்குமாறு.. குறிப்பாக கடத்தல்கள்.. கொலைகள்.. பற்றிய சரியான விசாரணைகளோ.. நீதியான விசாரணைகளோ.. அவற்றிற்கான உண்மைக்காரணங்களோ தெரியக் கூடிய சந்தர்ப்பங்கள் அற்ற நிலையில்.... அல்லது  அப்படியான ஒரு சூழலில் நிகழ்ந்தவற்றிகான சுயதீர்ப்புக்களை  அடிப்படையாக வைத்து...கேள்விகளை அமைப்பதை தவிர்த்துக் கொண்டு ... மக்கள்... நியாயமான வரலாற்று நிகழ்வுகளை அறியக் கூடிய பதிவு ஒன்றிணை மேற்கொள்ள இதுவரை உதவி நிற்றது போல உதவி நில்லுங்கள் உறவுகளே...!!! ]

[மேலும் போராளிகளின்  மாவீரர்களின் வாழ்க்கை வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்பும் போது பதில்களை தரும் போது.. செத்தான்.. மரணமானான் போன்ற பதங்களை தவிர்த்து  வீரமரணம்.. வீரச்சாவு.. சாவு போன்ற விடுதலைப்புலிகள் அமைப்பு சமூகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த பதங்களைப் பாவியுங்கள். தயவுசெய்து.]

தமிழீழ விடுதலைப் புலிகளால் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் மக்களின் நீண்ட நாள் கனவான.. தமிழீழ தேசத்தின்.. நிர்வாகப் பொருண்மிய சமூகக் கட்டமைப்புக்கள் எவை..??! அவை முறையே எப்போது ஆரம்பிக்கப்பட்டன..?!

யாழ் இணையம் இதைத்தானே செய்கின்றது ,பிறகு ஏன் புதிதாக .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் இதைத்தானே செய்கின்றது ,பிறகு ஏன் புதிதாக .

அப்படியெனில் நீங்கள் நேர்மையாக பட்டியலிடுங்கள் பார்க்கலாம்.

சாத்திரி,

மல்லாகத்தைச் சேர்ந்த மயூரன் அவர்கள் கட்டுவனில் இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலின்போது கொல்லப்படவில்லை.

காங்கேசன்துறையில் வளர்மதி ஸ்ரோர்ஸ் பக்கத்திலிருந்து இராணுவத்தின் சினைப்பர் கிட்டத்தட்ட ராஜேந்திரா தனியார் வைத்தியசாலைக்கு முன்வளவில் (சுமார் 400 மீற்றர் தூரம்) நிலைகொண்டிருந்த மயூரன் அவர்களை தாக்கியது.

எமது மாமிவீட்டு வளவினூடாக (மோகன் ஸ்ரோர்ஸ் முன்பாக) காயப்பட்ட மயூரனை போராளிகள் தூக்கிக்கொண்டு ஓடினார்கள் என்று மாமி கூறினார். நான் நினைக்கின்றேன் இச்சம்பவம் 1986 ஆரம்பத்தில் நடந்தது என்று.

அந்தக்காலங்களில் பலாலி/காங்கேசன்துறையிலிருந்து ஆமி வீட்டு வளவுகளூடாய் ரோந்து வரும்போது நாம் எல்லோரும் கூச்சியத்தை பிள்ளையார் கோயில் பக்கமாகச் சென்று, வீமன்காமம் பகுதியூடாய் தெல்லிப்பளையில் தஞ்சம் அடைவதை வழக்கமாகக்கொண்டிருந்தோம்.

இன்று 23 ஆண்டுகளாகியும், 4வருடங்களின் முன் போர் நிறைவடைந்தும் காங்கேசன்துறை பொதுமக்கள் இன்னும்கூட அங்கு சென்று வாழ்வதற்கு இலங்கை அரசினால் அனுமதிக்கப்படவில்லை.

சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள். அந்தப் பகுதியை கட்டுவன் பகுதி என்று நினைத்து தவறாக எழுதி விட்டேன்.

1994 ம் ஆண்டு கார்த்திகை மாதம் சந்திரிக்கா போர் நிறுத்த ஒப்பந்த காலத்தில் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் பிரிவால் (LRRP) தாக்குதலுக்குள்ளாகி வீரச்சாவடைந்த புலிகளின் தளபதியும் (புலநாய்வு பிரிவின்) யார்...??

மல்லி அண்ணை 

மல்லி அண்ணை 

சரியான விடை  கரன்... !  

லெப் கேணல் மல்லி ( அமுதன்) அண்ணை  17 ம் திகதி  கார்த்திகை மாதம்...  1994 ம் ஆண்டு ஆழ   ஊடுருவும் படைப்பிரிவால்  பதுங்கி தாக்கப்பட்டார்...    அவரின் மெய்பாதுகாவலர்  வீரவேங்கை அருளப்பனும் வீரச்சாவடைந்தார்... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றம் பெற்ற பின் அந்த அமைப்பு தமிழீழ மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி அமைதி வழியில்.. சமாதான முறையில் நம்பிக்கை கொண்டு...எதிரிகளோடு பேசிக் கொண்ட சந்தர்ப்பங்கள் எவை.. அவை எப்பெப்போது எங்கெங்கு நிகழ்ந்திருந்தன.. யார் அவற்றிற்கு தலைமை தாங்கினார்/கள்?!

திம்புப் பேச்சு வார்த்தை - சிறீலங்கா ஜே ஆர் அரசுடன் (இந்திய ஆதரவோடு) - பூட்டான் தலைநகர் திம்பு - 1985 - தலைமை  திலகர் மற்றும் அன்ரன் (அன்ரன் பாலசிங்கம் அல்ல) .( முடிவு: மலைய மக்களுக்கு குடியுரிமை. ஈழத்தமிழர் விவகாரத்தில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட முடியவில்லை. பேச்சு சிறீலங்கா அரசின் விடாப்பிடியால் தோல்வி என்று அன்றைய இந்திரா அரசின் இந்தியாவே அறிவித்தது. )

கிட்டு - விஜேயகுமார ரணதுங்க பேச்சு - யாழ்ப்பாணம் - 1986- கேர்ணல் கிட்டு தலைமையில். (முடிவு: தொடர் சந்திப்புக்களை மேற்கொள்வது. இறுதில்  சிங்கள கடும் பேரினத் தேசியவாதிகளின் ஏதேதோ அழுத்தங்கள் காரணமாக அது நடக்கவில்லை.)

பிரபா - ராஜீவ் சந்திப்பும் பேச்சும் - டெல்லி - 1987 - தேசிய தலைவர் வே பிரபாகரன் தலைமையில். (முடிவு: பிரபாகரனை ராஜீவ் காந்தி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்கச் சொல்லி வீட்டுக்காவலில் வைத்தது.)

இந்திய அரசு  (டிக்ஸிட் குழுவுடன்) - புலிகள் பேச்சு - யாழ்ப்பாணம் - 1987 - மாத்தையா தலைமையில் ( முடிவு: திலீபன் உண்ணாவிரத நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக பொய் வாக்குறுதி அளித்து அவரை சாகடித்தமை.)

சிறீலங்கா பிரேமதாச அரசு - புலிகள் பேச்சு - கொழும்பு - 1988/89 - அன்ரன் பாலசிங்கம் - யோகரட்ணம் யோகி  - மாத்தையா தலைமையில். (முடிவு: சிறீலங்கா - புலிகளிடயே புரிந்துணர்வு செயற்பாடுகள் இந்தியப் படைகளை வெளியேற்றும் பொதுநோக்கோடு கொண்டு வரப்பட்டமை. இந்தியப் படைகளின் வெளியேற்றத்தோடு புலிகளை அழிக்க பிரேமதாச அரசு ரகசித்திட்டம் தீட்டவே அதனை விளங்கிக் கொண்ட புலிகள் பேச்சில் இருந்து வெளியேறிக் கொண்டார்கள். )

சிறீலங்கா சந்திரிக்கா அரசு (பாலபட்ட பெண்டி குழுவுடன்) - புலிகள் பேச்சு  - யாழ்ப்பாணம் - 1994 - தமிழ்செல்வன் தலைமையில். (முடிவு: சந்திரிகா அரசிடம் இருந்து உருப்படியான பதில்கள் இன்றி அது இராணுவத் தீர்வில் நாட்டம் கொண்டிருந்த நிலையில்... பேச்சுக்கள் முறிவு.)

சிறீலங்கா ரணில் அரசு - புலிகள் பேச்சு - வன்னி - 2002 - தேசிய தலைவர் தலைமையில் (புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து. முடிவு: 2006 இல் ஒரு தலைப்பட்சமாக அந்த உடன்படிக்கையை சிறீலங்கா மகிந்த அரசு முறித்துக் கொண்டமை.)

2002 முதல் 2004 வரை சிறீலங்கா அரசுடன் புலிகள் தாய்லாந்து.. ஜெனீவா.. ஆஸ்லோ.. ரோக்கியோ போன்ற இடங்களிலும் அன்ரன் பாலசிங்கம் மற்றும் தமிழ்செல்வன் தலைமையில் பேச்சுக்களை நடத்தி உள்ளனர்.

புலிகள் வழங்கிய பரிந்துரைகள்..

1987 இல்  இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத போதும்.. ஒரு ஆரம்ப அடிப்படையாகக் கொண்டு.. இடைக்கால நிர்வாக சபையை பரிந்துரைத்துள்ளனர்.

2004 சுனாமி நிவாரணக் கட்டமைப்பு.

2004 இல் இன்னொரு இடைக்கால நிர்வாக அலகு பற்றிய பரிந்துரைகளை டப்ளின் கூட்டத்தில் சர்வதேச அமைப்புக்களின் ஆலோசனையின் பின் முன்வைத்திருந்தனர்.

மேலும் 2004 இல்.. தமிழீழத்திற்கு மாற்றாக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய வடக்குக் கிழக்கு இணைந்த  தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக் கொண்ட.. ஒரு தேசம் இரண்டு அரசுகள் என்ற சமஷ்டி ஆட்சி அமைப்பையும் புலிகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்தனர்.

2002 இல் தமிழரின் தாகம் தமிழீழம் என்ற உச்சரிப்பும் முழங்க ஆரம்பித்தது.

[இதனை விட கிட்டு லண்டனில் இருந்த போதும் முன்னரும் பின்னரும் சில ரகசியப் பேச்சுக்களும் இடம்பெற்றுள்ளன.]

மேற்படி வினாவிற்கு  யாரும் இதுவரை பதில் தராததால்.. எமது ஞாபகத்தில் இருந்து இவற்றை பதிவு செய்திருக்கிறோம். திருத்தங்கள் இருப்பின் தெரியப்படுத்துங்கள். நன்றி.

Edited by nedukkalapoovan

திம்புவிற்கு பாலசிங்கம் போகவில்லை ,

திலகர் ,அன்டன் மாஸ்டர் இருவரும் தான் போனார்கள் .அந்த நேரம் பாலசிங்கம் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார் .

தமிழீழ படைத்துறைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?

தமிழீழ படைத்துறைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?

1991 ம் ஆண்டு ....  வயதை மறைத்து கூடுதலாக  பொய் சொல்லி  படைத்துறை பள்ளிக்கு  போகாதவர்கள் ஏராளம்...  

கேள்வி... 

புலிகள் முதல் முதல் தயாரித்த உலங்கு வானூர்தி  பறக்கவிடப்பட்ட இடம் எது...??  வானூர்தியை இயக்கிய  அந்த  அதி துணீகரர் யார்....??  

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திம்புவிற்கு பாலசிங்கம் போகவில்லை ,

திலகர் ,அன்டன் மாஸ்டர் இருவரும் தான் போனார்கள் .அந்த நேரம் பாலசிங்கம் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார் .

திருத்தத்தை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அர்சுன் அண்ணா.

1991 ம் ஆண்டு ....  

வயதை மறைத்து கூடுதலாக  பொய் சொல்லி  படைத்துறை பள்ளிக்கு  போகாதவர்கள் ஏராளம்...  

புலிகள் முதல் முதல் தயாரித்த உலங்கு வானூர்தி  பறக்கவிடப்பட்ட இடம் எது...??  வானூர்தியை இயக்கிய  அந்த  அதி துணீகரர் யார்....??  

தவறான பதில்

தயா மீண்டும் முயற்சிக்கவும்

முதலாவது வானூர்தி பறந்த இடம் வற்றாப்பளை

சரியா?

வாழ்க வளமுடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.