Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய பிரதமர் மற்றும் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவித்து இடம்பெற்ற ஒன்றுகூடல்.

Featured Replies

கனடிய அரசிற்கும் குறிப்பாக கனடியப் பிரதமர்; மாண்புமிகு ஸ்டீபன் ஹார்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் அதன் தலைமைகள் கனடிய ஊடகங்கள் தமது சக கனடிய மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும் ஒட்டாவா கனடிய நாடாளுமன்ற முன்றலில் 28.10.2013 மாபெரும் ஒன்றுகூடல் நடைபெற்றது. கனடியத் தமிழ்ச் சமூகம் முன்னெடுத்த இந்த நிகழ்வில் 30 க்கும் அதிகமான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்து உரையாற்றினர். வர முடியாது போன மூன்று பிரதான கட்சித் தலைவர்களும் இதர சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அன்பை எழுத்துமூலம் பரிமாறினார். காலை 11:00 மணி முதல் மாலை 4:15 வரை இந்த ஒன்றுகூடல் நிகழ்வும் உரை நிகழ்வும் நடைபெற்றது.

கனடா அரசு தொடர்ந்தும் வலியுறுத்தி நிற்கும் சுயாதீன சர்வதேச விசாரணையை விரைவில் ஏற்படுத்த வலியுறுத்தியும் நீதியான தமிழர் தீர்வின் அவசியத்தை எடுத்தியம்பியும் கனடியத் தமிழர் அமைப்புக்களின் ஒத்தாசையுடன் கனடியத்தமிழர் சமூகம் நடத்திய இந்த நிகழ்வில் கனடாவின் பிரதான பகுதிகளான ரொரொன்றோ மற்றும் மொன்றியல் பகுதியில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர். உரையாற்றிய அனைவரும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் கனடா முன்னெடுக்கும் நிலைப்பாடு குறித்தும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு தம்மாலான ஆதரவு பற்றியும் பேசினார்கள்.

இந்நிகழ்வானது தமிழினத்திற்கு பெரும் மகிழ்வையும் தலை நிமிர்வையும் தந்துள்ளது. கனடாவை உலகின் முன் மாதிரி நாடாக போற்ற வழி செய்துள்ளது. எமது அடுத்தக் கட்ட பணிகளுக்கு கனடிய அரசு தொடர்ந்தும் எமக்கு உறுதுணையாக இருந்து நீதியை மீட்டு எடுக்க உதவும் என்ற வலுவான நம்பிக்கை பிறந்துள்ளது. இனிவரும் காலங்களிலும் இதுபோல் ஓற்றுமைப்பட்ட இனமாக ஒரணியில் அணிதிரள்வோம்!

sivavathani prabaharan

(facebook)

551283_412224405573181_489361076_n.jpg

1425684_412224838906471_763263930_n.jpg

1383600_412225045573117_1399624078_n.jpg

537220_412225545573067_128032492_n.jpg

1395968_412225588906396_353259723_n.jpg

1383059_412225762239712_312020058_n.jpg

NCCT

(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  உறவுகளே.

  • தொடங்கியவர்

1392591_412229605572661_699925060_n.jpg

644481_412223555573266_1643485148_n.jpg

1377489_412224728906482_370466377_n.jpg

1385237_412224332239855_446536291_n.jpg

1391733_412224518906503_2013615436_n.jpg

936008_412225055573116_1807363444_n.jpg

541433_412225138906441_826812234_n.jpg

76366_412225278906427_1099718309_n.jpg

1424287_412225452239743_882736448_n.jpg

1378137_412225805573041_866590107_n.jpg

66768_412225788906376_449424400_n.jpg

1394053_412225975573024_1690314299_n.jpg

1378596_412225988906356_1119693527_n.jpg

76384_412226032239685_1894555061_n.jpg

575719_412226155573006_1863361835_n.jpg

1012721_412226165573005_24231464_n.jpg

1422366_412226205573001_1895921422_n.jpg

NCCT

(facebook)

  • தொடங்கியவர்

1378668_412226538906301_11225975_n.jpg

557988_412228345572787_372812037_n.jpg

1385520_412228378906117_783027808_n.jpg

935113_412228535572768_741145070_n.jpg

16271_412228582239430_1282308787_n.jpg

1391918_412228905572731_1213468676_n.jpg

1375708_412228805572741_1251122199_n.jpg

1384195_412229055572716_496655320_n.jpg

1380286_412229182239370_458270195_n.jpg

1378143_412229205572701_615288606_n.jpg

1392728_412229255572696_1658694571_n.jpg

625578_412229525572669_1250669794_n.jpg

1393880_412229492239339_1461289289_n.jpg

NCCT

(facebook)

  • தொடங்கியவர்

எங்கேனும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அரசியல் கடந்து இதயத்தால் அன்பு மொழியில் மக்களோடு உணர்வு rரீதியாக பேசி கண்ணீர் விட்டு இருக்கிறார்களா? இவர் எமக்காக 2009 இல் இருந்து ஒவ்வொரு மேடையிலும் "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். என்னை நினைத்து நான் வெட்கப்படுகின்றேன். உங்களை காத்து உதவ முடியாது தோற்றுபோனவள். என்னை மன்னித்துவிடுங்கள்" என அழுவார். உங்கள் கண்ணீர் கூட எமக்கு இதம் தருகின்றது. எம்மோடு இதய பூர்வமாக நீங்கள் இருக்கின்றீர்கள் என்று. நன்றி.

561620_10153339836930012_580969806_n.jpg

"கனடிய பிரதம மந்திரி தான் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்ள மாட்டேன் என கூறினாலும் தனது பிரதிநிதியாக எவரையும் அனுப்பி வைக்கவும் கூடாது. ஒட்டுமொத்தமாக காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். இதுவே புதிய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு" புதிய ஜனனனாயகக் கட்சியின் சார்பில் உரையாற்றிய முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன். அவரோடு வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தந்த புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த புகைப்படத்தில் இருக்கின்றார்கள்.

1378387_10153339864335012_1703884561_n.j

"பொதுநலவாய மாநாட்டை முற்றாக கனடா புறக்கணிக்க வேண்டும்" என்ற புதிய ஜனநாயக கட்சியின் நிலைபாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைந்த அரச ஆளும் கட்சியான கோன்செர்வடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் 3 ஆம் நிலைப் பிரதிநிதியாக கனடிய மண்ணில் இருந்து பொதுநலவாய மாநாட்டுக்கு செல்ல இருப்பவருமான பாராளுமன்ற உறுப்பினர் பேசுகையில் "நான் கனடிய பிரதிநிதியாக அங்கு கலந்து கொள்ள இருப்பதன் காரணம் அங்கு நடக்கும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்புவதற்காகவே" என்று பதில் உரைத்தார்.

1424435_10153339883865012_1951482461_n.j

நீண்ட நேரம் கடும் குளிரில் நின்ற நிலையில் நின்ற மக்கள் நீள் வட்டமாக குரல் ஒலி எழுப்பிய வண்ணம் வலம் வந்தனர் சில நிமிடங்கள்.

1396000_10153339913345012_1929712232_n.j

பிரதான மைய ஊடகங்கள் வரவில்லை என்ற கவலைகள் இப்போது எமக்குள் இல்லை. காரணம் வலிமையான ஊடகமாக எம் மக்கள் எமக்காக இன்று வேறுபாடுகளை களைந்து உழைக்கின்றார்கள். எம்மை விட எம் செய்திகளை வலிமையாக எடுத்துச் செல்ல எவராலும் முடியாது. இன்று அரசியல் வாதிகள் எம்மை நாடி வந்தது போல் இனிவரும் காலங்களில் மைய ஊடகங்களும் எம்மின் நோக்கி முண்டியடித்து வருவார்கள்

1391470_10153339781540012_1874638242_n.j

இந்த நிகழ்விற்கு பல சிறுவர்கள் பாடசாலைக்கு விடுப்பு எடுத்து விட்டு வந்திருந்தார்கள். வரலாற்றுக் கடனை செய்வதற்கு வயது ஒரு தடை இல்லை அல்லவா ?

1150784_10153339885395012_1129110438_n.j

" அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்? அன்புத் தோழனாக எம்மோடு உயிரோடு இருக்கும் வரை உண்மையாகவே தோள் கொடுத்த தோழன் மறைந்த புதிய ஜனநாயகக் கட்சியின் முன்னால் தலைவர் ஜாக் லேடன் அவர்களின் துணைவியார் ஒலிவியாவுடன் உரையாடிய போது எம்மையும் அறியாமல் நெகிழ்வோடு ஜக்கை நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை. இன்று அனைத்து கட்சி தலைவர்களும் கனடிய மண்ணில் எமக்காக குரல் கொடுகின்றார்கள். ஆனால் அன்றோ எவர் ஆதரவு தராவிட்டாலும் ஜாக் எமக்கு தோள் கொடுத்து எம்மோடு இருந்தார். இன்றும் அவர் எம்மோடு நினைவுகளில் இருக்கின்றார். அந்த உணர்வை ஒலிவியாவோடு பகிர்ந்து கொண்டோம்.

1000319_10153339894625012_1555625321_n.j

நிகழ்வு ஆரம்பித்த நண்பகல் 12 மணிக்கே முதலாவது நபராக கலந்து கொண்டார் மூத்த அமைச்சர் பீற்றர் மக்கே அவர்கள். நீதித்துறை அமைச்சரான அவரின் வருகையை தொடர்ந்து முக்கிய அமைச்சர்களான வேலைவாய்ப்பு அமைச்சர் ஜேசன் கெனி அவர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் கிரிஸ் அலெக்ஸ்டாண்டர் அவர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் பால் கோசல் அவர்கள், பல்கலாசார அமைச்சர் ரிம் உப்பல் அவர்கள் எனக் கலந்து கொண்டு கனடிய அரசின் இலங்கை குறித்த கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

கனடியப் பிரதமர் கொமன்வெல்த் நாடுகள் மாநாட்டை இலங்கையில் இடம்பெறுவதை வெளிப்படையாகவே புறக்கணித்ததைத் தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட் அவர்களும் செல்லாது தவிர்த்ததைத் அடுத்து, மாநாட்டுக்குச் செல்லும் துணை அமைச்சர் டிபக் ஒப்ரோய் அவர்களும் கலந்து கொண்டு பேசுகையில், இலங்கைக்கு கனடாவின் கடுமையான செய்தியையே தாமும் எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.

இவர்களுடன் ஆளும் கன்சவேட்டிவ் கட்சியை சேர்ந்த பாராளுமனற் உறுப்பினர்கள் கனடா தழுவி கலந்து கொண்டு உரையாற்றியது மட்டுமன்றி, ஈழத்தமிழர்களின் நிலை குறித்த தமது புரிதலையும் அவர்களுக்கான தமது அன்பையும் இலங்கையில் மனித உரிமைகள் நிலை குறித்த தமது விசனத்தையும் வெளிப்படுத்தினர்.

அந்த வகையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஸ்டீவன் வூட்வெர்த் (Steven Woodworth) - Kitchener Centre, பற்றிக் பிறவுன் (Patrick Brown) - Barrie, மார்க் அட்லர் (Mark Adler )- York Centre, Wladyslaw Lizon - Mississauga East—Cooksville, பிறட் புட் (Brad Butt) - Mississauga—Streetsville, போல் கலென்ரா (Paul Calendra) - Markham Stoffville,ஹரொல்ட் அல்பிரெச்ட் ( Harold Albrecht) - Kitchmer Contstoga, பார்ம் ஹில் (Parm Gill )- Brampton—Springdale, ஸ்ரெல்லா அம்லெர் (Stella Ambler) - Mississauga South, டெவின்டெர் சௌரி (Devinder Shory) - Calgary Northeast, புரூஸ் ஸ்டன்டென் (Bruce Stanton) - Simcoe North, ஜோன் கெர்மிச்செல் (John Carmichael) - Don Valley West, Corneliu Chisu - Pickering—Scarborough East, Costas Menegakis - Richmond Hill, ரோபேர்ட் சோபுக் (Robert Sopuck) - Dauphin—Swan River—Marquette, டேவிட் அன்டசன் (David Anderson) - Cypress Hills—Grasslands ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சியான புதிய சனநாயக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தோமஸ் மக்கிலெயர் அவர்கள் வெறொரு மாநிலத்தில் இருந்த காரணத்தால் தனது வாழ்த்துச் செய்திகளை அனுப்பிய அதேவேளை தனது கட்சிப்பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் கலந்து கொள்வதையும் உறுதிப்படுத்தியிருந்தார்.

அந்த வகையில் தமிழ் மக்கள் மனங்களில் என்றும் பதிந்திருக்கும் முன்னாள் தலைவர் ஐக் லேட்டன் அவர்களின் துணைவியார் ஒலிவியா சோ அவர்கள் கலந்து கொண்டு தமிழ் மக்கள் குறித்த தனது குடும்பத்தின் அன்பை நீண்ட பேச்சொன்றினூடாக வெளிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே சிறப்பாக அவர் ரொரன்ரோவில் இருந்து வருகை தந்ததாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நேரு கணரத்தினம் தெரிவித்த போது மக்கள் பெரும் ஆரவாரம் செய்தனர்.

அதேவேளை பல புதிய சனநாயக்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டு உரையாற்றினர்.

அந்த வரிசையில் ஒரே ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் (Rathika Sitsabesan) - Scarborough௰Rouge River, பேக்கி நாஷ் (Peggy Nash)- Parkdale High Park, போல் டெவர் (Paul Dewar) - Ottawa Centre, மைக் சுலிவன் Mike Sullivan - York South௰Weston, ஐரீன் மதிசென் (Irene Mathyssen) - London௰Fanshawe , ஜின்னி ஜோகின்ரா சிம்ஸ்(Jinny Jogindera Sims) - Newton௰North Delta , Murray Rankin - Victoria , Linda Duncun - Edmonton௰Strathcona , Dan Harris - Scarborough Southwest, Marc - Antre Morin - Laurentides௰Labelle ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டனர்.

மூன்றாவது கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் ஐஸ்ரின் ரூடோ அவர்களும் நகரில் இல்லாத காரணத்தால் தனது செய்தியை அனுப்பி வைத்திருந்தார். அவரது கடசியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

கலந்து கொண்டு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் கிரிஸ்டி டங்கன் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பேரவலத்தை பற்றி பேசும் போது கண்ணீர் விட்டழுதது மட்டுமன்றி செயலற்றிந்த தமது நிலைக்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

லிபரல் கட்சி சார்பில் ஜோன் மக்கொலும் (John McCollum) - Markham௰Unionville, ஜுடி க்ரோ (Judy Sgro) - York West , மார்க் கார்னியூ (Marc Garneau) - Westmount Ville-Marie, கிறிஸ்டி டன்சுன் (Kristy Duncun) - Etobicoke North ஆகியோர் உரையாற்றினர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழ்ச் சிறார்கள் மலர் மற்றும் நன்றி அட்டைகளை வழங்கி வரவேற்றனர். அதேவேளை பல்வேறு பாராளுமன்ற பணிகள் நிமித்தமாக நேரடியாக கலந்து கொள்ளமுடியாக 25 பேருக்கும் மேற்ப்பட்ட அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களின் செய்திகளும் நேரு குணரத்தினத்தால் மக்களுக்கு வாசிக்கப்பட்டது.

அவர்களில் இரு செனட்டர்கள், மற்றும் அமைச்சர்களும் அடங்குவர். பின்னர் எமது செய்தியாளரிடம் பேசிய அவர் மூன்று பிரதான கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கனடாவின் 10 மாநிலங்களில் 8 மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டதாக தெரிவித்தார். சிலர் சொல்வது போல அது வாக்குக்காக அல்ல என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர் என்றார். ஆம் கலந்து கொண்ட பலரின் தொகுதிகளில் தமிழர்களே இல்லை என்பது இங்கு பெரிதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே எட்டு மாநிலங்களில் இருந்து நேரடியாகவும், வாழ்த்து செய்திகளினூடாகவும் 60க்கு மேற்ப்பட்ட உறுப்பினர்கள் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டமை ஒரு பெரும் வரலாறு என்றனர் கலந்து கொண்ட தமிழ் மக்கள்.

அதாவது கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 சதவீதமானோர் கலந்து கொண்டுள்ளனர். "என்னுடைய எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் இன்றைய நிகழ்வு தகர்தெறிந்துவிட்டது. பெரிய நம்பிக்கை ஒன்று இப்போது ஏற்படுகிறது. முதற் தடவையாக முழுமையான திருப்தியுடன் ஒட்டாவா வந்து திரும்பிச் செல்கிறேன்" என நிகழ்வில் கலந்து கொண்ட நபரொருவர் தெரிவித்துள்ளார்.

1395874_10153339773695012_199065321_n.jp

Sivavathani Prabaharan

(facebook)

Edited by துளசி

  •  
கனடிய பழமைவாத கட்சியால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான பிரேரணை தோற்கடிக்கப்பட்டது! Published on March 30, 2011-9:01 pm   ·   No Comments

ctclogo-150x150.jpgகனடிய நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியாக இருந்த பழமைவாத கட்சி ஒத்துழைப்பு வழங்காததால் அந்நாடாளுமன்றத்தில் சிறிலங்கா மேற்கொண்ட போர்க்குற்றம் பற்றி விசாரிப்பதற்கு சர்வதேசவிசாரணைக்குழு அமைக்க வேண்டும் என கொண்டுவரப்பட்ட பிரேரணை தோற்கடிக்கப்பட்டதாக கனேடிய தமிழ் கொங்கிரஷ் தெரிவித்துள்ளது.

கனேடிய தமிழ் கொங்கிரஷ் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மக்களாட்சிக் கட்சியின் பிரிட்டிசு கொலம்பியா பிரதேசப் பாராளுமன்ற உறுப்பினர் பீற்றர் யூலியன் அவர்கள் அண்மையில் அமெரிக்க செனற் சபையில் எதிர்ப்புகள் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போன்றதொரு தீர்மானத்தை நிறைவேற்றக் கனடியப் பாராளுமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். இக் கோரிக்கையின் நோக்கம் சிறிலங்காவில் போரின் போதும் அதன் பின்னரும் இடம்பெற்று வரும் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய சிறிலங்கா அரசும் ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச நாடுகளோடு இணைந்து சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென்பதாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மக்களாட்சிக் கட்சி  இப்பிரேரணை தொடர்பாக லிபரல் கட்சி, புளக் கிபெக்குவா கட்சி, கன்சவேட்டிவ் கட்சி மற்றும் இரு சுயாதீன உறுப்பினர்களையும் அணுகியபோது பாராளுமன்றத்தில் இப்பிரேரணைக்கு அனைவரும் ஆதரவளிப்பதாகவே தெரிவித்தனர்.

தனிநபர் பிரேரணையாக பீற்றர் யூலியன் அவர்கள் இப்பிரேரணையை முன்வைத்தமையால் இப்பிரேரணை நிறைவேறிட அனைத்துக் கட்சிகளதும் ஆதரவு இருந்திருக்க வேண்டும் என்பது இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியது. மார்ச் மாதம் 25ஆம் நாள் வெள்ளிக்கிழமை இப்பிரேரணை வாக்கெடுப்புக்கு வந்தபோது ஆரம்பத்தில் ஆதரவளிப்பதாக தெரிவித்த கன்சவேட்டிவ் கட்சி பாரளுமன்றத்தில் இதனை எதிர்த்தமையால் முறியறிக்கப்பட்டதாக கனடிய தமிழ் கொங்கிரஷ் தெரிவித்துள்ளது.

கனடியத் தமிழரோடு இணைந்து கனடியத் தமிழர் பேரவை பீற்றர் யூலியன், திரு. பற்றிக் பிறவுண், றொப் ஒலிபன்ற் உட்பட புதிய மக்களாட்சிக் கட்சி  , லிபரல் கட்சி, புளக் கிபெக்குவா கட்சி ஆகியவற்றுக்கு இப்பிரேரணையை பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்ல உதவியமைக்காக தமது அந்த அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இருப்பினும் பழமைவாதக் கட்சி இப்பிரேரணைக்கான ஆதரவை விலகிக் கொண்டதால் தோல்வியடைந்ததை இட்டு ஏமாற்றமடைவதாக கனடிய தமிழ் கொங்கிரஷ் தெரிவித்துள்ளது.

அமெரிக்க செனற் சபையில் எதிர்ப்பேதுமின்றி நிறைவேற்றப்பட்ட மனிதாபிமனா அடிப்படையிலான இப்பிரேரணையை கன்சவேட்டிவ்; கட்சித் தலைமை தடுத்து நிறுத்தியமை மிக மிக வருத்தத்திற்குரியது. கனடாவின் மனித உரிமை விழுமியங்களைப் பெரிதும் சார்ந்திருந்த இப்பிரேரணை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கோடும் அதை மீறியமைக்காக அதை மீறியவர்கள் சர்வதேச விசாரணைக்குள்ளாக்கப்பட வேண்டுமென்று தெளிவாக எடுத்துரைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.thinakkathir.com/?p=3580#sthash.VJ4HJo2d.dpuf

கடந்த காலங்களில் கனேடிய அரசு ஈழத்தமிழர் விடயத்தில் எவ்வாறு செயட்ப்பட்டது என்பதற்க்காக மேலுள்ள இணைப்பு இணைக்கப்பட்டது .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நடவடிக்கை.. ஆனால் பதாகை ஒன்றின் இலக்கணப்பிழை சற்று மனவருத்தம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களிடம் ஒரு கேள்வி. முற்றிலும் பாதிக்கப் பட்ட ஈழத் தமிழரின் நேரடி  வாக்குகளை பெற்று வென்ற அரசியல் தலைவர்கள் தற்போது இணக்க அரசியல் பேசும் போது....இது(கனடிய) ஒரு பாரதுரமான விடயமா?????

நாங்கள் கனேடிய கொன்சவ்வெர்ட்டிவ் அரசிற்கு அப்பவே  நன்றி செலுத்திவிட்டம் .

ஏனுங்க தேசிய கொடியை நிழலுக்கும் காணோம் ,

  • கருத்துக்கள உறவுகள்
நான்கு வருடங்களுக்கு முன் ஈழத்தமிழர்களை காப்பாற்று என மக்கள் ஊர்வலங்கள்  போது பேசாமல் இருந்த ஹாப்பர் அரசு இப்போ பொதுநலவாய நாட்டு மாநாட்டில் பங்குபற்றவில்லை என கூறி இருப்பது சிறிலங்கா அரசின் இனப்படுகொலை கண்டு அப்படி செய்கிறதா அல்லது லிபரல் கோட்டையான ஒன்றாறியோவில் அதிகமாக வாழும் ஈழத்தமிழரின் வாக்கு வங்கியை தன்பக்கமாக திருப்புவதற்காகவா??
 
ஒட்டாவாவில் ஈழதமிழர்கள் கொலையை நிறுத்தும் படி நடந்த ஒன்று கூடலில்(2009) ஜாக் லேய்றனை தவிர யாரும் வரவில்லை. இப்போ நன்றி கூறல் என்றவுடன் நன் முந்தி நீ முந்தி என படத்துக்கு நிற்கும் ஹாப்பர் சந்தர்ப்பவாதியா??
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், கண்டிப்புகள் என சிறீலங்கா அரசுக்கெதிராக மேற்கொள்ளப்படும் பல்வேறுபட்ட போராட்ட நிகழ்வுகளுக்கும், உலகநாட்டு அரசுகள் இன்று ஆதரவளிப்பதைக் காணமுடிகிறது. உண்மைகளை உணர்ந்துவிட்டனர் என்று மனதிற்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தரவேண்டிய இந்நிகழ்வுகள். மேலும் மன அழுந்தங்களையே தோற்றுவிக்கிறது. காரணம், தமிழரைப் பயங்கரவாதிகள் எனத் தடைசெய்துள்ள நாடுகளிலும், அங்குள்ள அரசியல்வாதிகள் தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்ற மேடையில் ஏற்றி வைத்துக்கொண்டே, அந்தத் தடையை நீக்குவதற்கு எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல், தமிழர் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகக் காட்டிக்கொள்வதுதான்.

  • தொடங்கியவர்

"பொதுநலவாய மாநாட்டை முற்றாக கனடா புறக்கணிக்க வேண்டும்" என்ற புதிய ஜனநாயக கட்சியின் நிலைபாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைந்த அரச ஆளும் கட்சியான கோன்செர்வடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் 3 ஆம் நிலைப் பிரதிநிதியாக கனடிய மண்ணில் இருந்து பொதுநலவாய மாநாட்டுக்கு செல்ல இருப்பவருமான பாராளுமன்ற உறுப்பினர் பேசுகையில் "நான் கனடிய பிரதிநிதியாக அங்கு கலந்து கொள்ள இருப்பதன் காரணம் அங்கு நடக்கும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்புவதற்காகவே" என்று பதில் உரைத்தார்.

1424435_10153339883865012_1951482461_n.j

இந்த கருத்தின் படி பார்த்தால் பொதுநலவாய மாநாட்டை கனடா புறக்கணிக்கவில்லை எனவே கொள்ளலாம். கனடா சார்பாக ஒருவர் செல்லவிருக்கிறாரே. (3 ஆம் நிலைப்பிரதிநிதியாக இருந்தாலும்)

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீன இயக்கத்தை உறுப்பினராக ஐ.நாவில் தெரிய பல நாடுகள் ஆதரவாக வாக்களித்து தனது உறுப்புறுமையை பெற்றுக்கொண்டது. இதற்கு எதிராக வாக்களித்தவர்களில் கனடாவும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களிடம் ஒரு கேள்வி. முற்றிலும் பாதிக்கப் பட்ட ஈழத் தமிழரின் நேரடி  வாக்குகளை பெற்று வென்ற அரசியல் தலைவர்கள் தற்போது இணக்க அரசியல் பேசும் போது....இது(கனடிய) ஒரு பாரதுரமான விடயமா?????

அங்கு TNA செய்வது பிழையான செயற்பாடுகளாயின் சரியான பாதையை மக்களுக்கு வெளிப்படுத்தி தலைமை ஏற்று வழிநடாத்த எவராவது முன்வரலாம் .அங்குள்ள சூழ்நிலையில் வேறுதேரிவுகள் இருந்தால் சொல்லுங்கள் .

காப்பரின் அரசைப்பொறுத்தவரை தற்போது தமிழருக்கு ஆதரவான நிலைஎடுப்பது சுயநலம் யார் தமிழருக்கு உதவி செய்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் அதற்காக அவர்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடத்தேவையில்லை இன்றைக்கு நன்றி தெரிவிப்பவர்கள் தான் முன்பு கார்ப்பரின் கட்சியை எதிர்த்தவர்கள் .இன்றைக்கு தங்களுடைய சுயநலம் சார்ந்துதான் எல்லாம் நடைபெறுகின்றது .இவர்களது தலைமையை டொரோண்டோ தமிழர்கள் ஏற்கவில்லை என்பதற்கு,இந்த நிகழ்வுக்கு திரண்ட மக்கள்கூட்டத்தை வைத்து தெரிந்துகொள்ளலாம் .  

நான்கு வருடங்களுக்கு முன் ஈழத்தமிழர்களை காப்பாற்று என மக்கள் ஊர்வலங்கள்  போது பேசாமல் இருந்த ஹாப்பர் அரசு இப்போ பொதுநலவாய நாட்டு மாநாட்டில் பங்குபற்றவில்லை என கூறி இருப்பது சிறிலங்கா அரசின் இனப்படுகொலை கண்டு அப்படி செய்கிறதா அல்லது லிபரல் கோட்டையான ஒன்றாறியோவில் அதிகமாக வாழும் ஈழத்தமிழரின் வாக்கு வங்கியை தன்பக்கமாக திருப்புவதற்காகவா??
 
ஒட்டாவாவில் ஈழதமிழர்கள் கொலையை நிறுத்தும் படி நடந்த ஒன்று கூடலில்(2009) ஜாக் லேய்றனை தவிர யாரும் வரவில்லை. இப்போ நன்றி கூறல் என்றவுடன் நன் முந்தி நீ முந்தி என படத்துக்கு நிற்கும் ஹாப்பர் சந்தர்ப்பவாதியா??

நாங்கள் தான் கனேடியர்கள் மாறவேண்டும் என்று பிரசாரம் செய்தோம். இபோது என்ன கவலை? அவர்கள் மாறிவிட்டார்கள் என்பதா?

என்ன சொல்ல வருகிறீர்கள்?"  நீங்கள் மாறியே இருந்திருக்க கூடாது, அப்போதுதான் இலங்கையால் அழிக்கப்படும் தமிழர்களாக நாங்கள் இருந்திருப்போம். தங்கள் பாட்டை கவனிக்கும் கனேடியர்களாக நீங்கள் இருந்திருக்கலாம்" என்பதா? :rolleyes:

வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும்  ஏசும் வையகம் இதுதானடா.

அங்கு TNA செய்வது பிழையான செயற்பாடுகளாயின் சரியான பாதையை மக்களுக்கு வெளிப்படுத்தி தலைமை ஏற்று வழிநடாத்த எவராவது முன்வரலாம் .அங்குள்ள சூழ்நிலையில் வேறுதேரிவுகள் இருந்தால் சொல்லுங்கள் .

காப்பரின் அரசைப்பொறுத்தவரை தற்போது தமிழருக்கு ஆதரவான நிலைஎடுப்பது சுயநலம் யார் தமிழருக்கு உதவி செய்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் அதற்காக அவர்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடத்தேவையில்லை இன்றைக்கு நன்றி தெரிவிப்பவர்கள் தான் முன்பு கார்ப்பரின் கட்சியை எதிர்த்தவர்கள் .இன்றைக்கு தங்களுடைய சுயநலம் சார்ந்துதான் எல்லாம் நடைபெறுகின்றது .இவர்களது தலைமையை டொரோண்டோ தமிழர்கள் ஏற்கவில்லை என்பதற்கு,இந்த நிகழ்வுக்கு திரண்ட மக்கள்கூட்டத்தை வைத்து தெரிந்துகொள்ளலாம் .  

கனேடியத்தமிழர்கள் மூன்று கட்சிக்கும் பிரிந்து போவார்கள். அதை தவிர்க்க, தடுக்க முடியாது. மேற்கு நாடு ஜனநாயகத்துடந்தான் போக வேண்டும். தேவானந்தா கதிர்காமர்களும் புலம் பெயர்ந்து வந்தார்கள். 

இன்றைய கூட்டம் காப்பருக்கு நன்றி தெரிவிப்பது. அவர்தால் எல்ல கனேடிய தமிழருக்கும் பிரதமர் என்ற முறையில் தமிழர் அங்கு கூடுவது தவறால். 

ஜக் லாண்டன் பிரதமராக வந்திருந்தால் இதை விட கூட செய்த்திருப்பாரே என்பது இங்கே ஒரு பிரயோசனமான விவதமாக மாறாது. பொதுநாலவாயத்துக்கு இலனகை திர்ப்பால் போகாமல் விட்ட நாடு கனடா மட்டும்தான். அதன் பிரதமர் காப்பர். உள்ளக அரசியசைலை தேர்தல் நேரம் கவனிக்கலாம். இந்த நேரம் காபாருக்கு தமிழரிடம் இருந்து கிடைக்கும் ஆதவை வைத்துதான் அந்த ஆதரவை தங்கள் பக்கம் அடுத தேர்தலில் திருப்ப லிபறலும், ஜன்நாயக்கட்சியும் முயலப்போகின்றன என்பதை நாம் உணரவேண்டும். ஆட்சியை பிடிக்கத்தக்க லிபரல் தமிழரை கவனிக்க வேண்டுமாயின் அவர்கள் இப்படி இடங்களில் வெளீயே வந்து தலையைக் காட்ட வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.