Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தால் வடக்கில் கிரிக்கெட் இருக்கவில்லை: முத்தையா முரளிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குப் பிரதேசம் யுத்தம் இடம்பெற்றதால் அங்;கு கிரிக்கெட் இருக்கவில்லை என்றும் இப்பொழுது எதிர்காலம் மிகத் தெரிவாகத் தெரிவதாகவும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

சிரேஷ்ட கிரிக்கெட் வீரரான இயன் போத்தம் கலந்து கொள்ளவுள்ள 160 கிலோமீற்றர் தூர எட்டு நாள் பாத யாத்திரை ஒன்று கிளிநொச்சியில் தொடங்கப்பட்டவுள்ளது. பீபீஸ் பிக் சிறீலங்கா வோக் 2013 என்ற இந்தப் பாத யாத்திரை தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று கொழும்பில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரன் கருத்துத் தெரிவித்தார்.

வடக்குப் பிரதேசத்தில் கடந்த 30 வருடங்களாக யுத்ம் இடம்பெற்றது. அதனால் அங்கிருந்து கிரிக்கெட் வீரர்கள் உருவாகவில்லை என்று தெரிவித்த முரளிதரன் தற்பொழுது தமது அமைப்பின் ஊடாக அங்கு கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்காலம் மிகவும் நம்பிக்கை தரும் வித்தில் உள்ளது என்றும் சிறுவர்கள் கிரிக்கட்டை விளையாட ஆர்வமாக உள்ளனர் என்றும் முத்தையா முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98370/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வந்து பார்த்தவராக்கும். யுத்த காலத்தில் தான் வடக்கில் கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்களின் உதயமே நிகழ்ந்தது. ஜொலிஸ்ரார்.. ஜொனியன்ஸ்.. சென்ரல்லைன்ஸ்.. பற்றியன்ஸ்.. என்று இன்னோரென்ன கழகங்கள் விளையாடியதோடு.. ரோட்டடிறிக் கழகத்தின் ஆதரவில் பிரபல சுற்றுக் கிண்ணங்களும் விளையாடப்பட்டன.

யுத்த காலத்தில் இவர்.. சிங்களவங்கட கதையைக் கேட்டுக் கொண்டு.. மூலைக்க கிடைந்திட்டு.. இப்ப வந்திட்டார்.. கிரிக்கெட் வளர்க்கப் போறாராம்.. வடக்கில். போய்.. வியாபாரத்தை பாருங்க முரளிதரன்.. சிங்கள விசுவாச அரசியல்.. கிரிக்கெட் வளர்த்தது காணும்.

நீங்கள் இப்படி உளறிக் கொட்டியே இருக்கிற மதிப்பையும் இழக்கப் போறீங்க. :rolleyes::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி முரளி. மேலும் தொடரவும். இறந்த காலத்தில், புலத்தில் சொகுசாக வாழும் சிலரின் கருத்துக்களை கவனத்தில் எடுக்க வேண்டியத்தில்லை.

கிரிக்கெட்டில் மட்டுமல்ல ஏறக்குறைய இருபது வருடங்கள் உலகின் அனைத்து விடயங்களில் இருந்தும் விலத்திஇருந்துவிட்டோம் ,இந்த யுத்தம் என்பது இவ்வளவு காலமும் நீளாவிட்டால் எமது மக்கள் அங்கு வாழும் வாழ்க்கை எப்படியோ எல்லாம் மாறியிருக்கும் ,

தமிழ் நாடு நான் இருபது வருடத்திற்கு முன் பார்தது அல்ல இப்போ பார்ப்பது .நினைத்துபார்க்க முடியாத மாற்றம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி முரளிதரன். உங்களால் முடிந்ததை தயவு செய்து செய்யுங்கள். புரிந்தவர்கள் வாழ்த்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
நாங்கள் கடந்த 30 வருடங்களாக முசுப்பாத்திக்கு சண்டை பிடித்தனாங்கள்.முரளி வந்து யாழ்ப்பாண கிறிக்கட்டை கட்டி எழுப்ப போகிறார். சனத் ஏற்கனவே கட்டி விட்டார். இனி இவர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

சில   வருடங்களுக்கு முன் இதை முரளி  சொல்லியிருந்தால்

சிலவேளை  நம்பியிருப்பேன்

இவரது முகம் அம்பலமாகி   நாளாச்சு......... :(

கிரிக்கெட்டில் மட்டுமல்ல ஏறக்குறைய இருபது வருடங்கள் உலகின் அனைத்து விடயங்களில் இருந்தும் விலத்திஇருந்துவிட்டோம் ,இந்த யுத்தம் என்பது இவ்வளவு காலமும் நீளாவிட்டால் எமது மக்கள் அங்கு வாழும் வாழ்க்கை எப்படியோ எல்லாம் மாறியிருக்கும் ,

தமிழ் நாடு நான் இருபது வருடத்திற்கு முன் பார்தது அல்ல இப்போ பார்ப்பது .நினைத்துபார்க்க முடியாத மாற்றம் .

அருசுனுக்கு அரசியல் தெரியும், பொருளாதாரம் தெரியும் சட்டம் தெரியும், விஞ்ஞானம், சரித்திரம் கலைகள்...

ஆனால் தெரியாதது ஒன்று "ஏன் நான்புலிகளுடன் சேர்ந்து போராட போனேன்" என்பது. அவர் ஒரு முப்பத்து வருசம் பிந்னால் போய் அந்த கேள்விக்கு பதில் கண்டுபிடித்தார் என்றால் வடக்கு-கிழக்கு 65 வருடம் பின்னால் போய், 1951,1957, 1958.. கோடிவரன் வழக்கு எல்லாவற்றையும் ..... 

செய்தியை எழுதியவர்கள் ஏதும் தவறுவிட்டார்களோ தெரியாது, அப்படி இல்லாதபட்சத்தில் யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் இருக்கவில்லை என்பது தவறான தகவல்.

நான் 1995வரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தேன். அப்போது பிரதான பொழுதுபோக்கு யாழ் இந்து, கொக்குவில் இந்து, யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மைதானம், இதர பாடசாலைகளிற்கு சென்று பாடசாலை அணிகள் மற்றும் விளையாட்டு கழகங்களிற்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிப்பதே. அப்போது பரியோவான், மத்திய கல்லூரிகளிற்கிடையிலான பிக் மட்சுகளே நடைபெற்றன.

மட்டுப்படுத்தப்பட்ட வசதிகள் இருந்தபோதும் நாளும், பொழுதும் கிரிக்கெட் விளையாட்டில் நேரத்தை செலவளிக்க ஆயிரக்கணக்கானோர் செயற்பட்டார்கள். த.வி.பு யோகி அவர்கள்கூட யாழ்.இந்து அணிக்கு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியதை நான் கண்டுள்ளேன்.

தவிர, வன்பந்து மட்டுமன்றி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளும் வருடம் முழுவதும் நடைபெற்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனம் பந்து என்று யாரும் வேறு எதையும்  போட ...அது அடிக்கும் போது ஓசை எழுப்ப மைதானத்தில் இருந்தவர் எல்லாம் எழும்பி ஓட.... தேவையா சாமி இது எல்லாம்

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை எழுதியவர்கள் ஏதும் தவறுவிட்டார்களோ தெரியாது, அப்படி இல்லாதபட்சத்தில் யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் இருக்கவில்லை என்பது தவறான தகவல்.

நான் 1995வரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தேன். அப்போது பிரதான பொழுதுபோக்கு யாழ் இந்து, கொக்குவில் இந்து, யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மைதானம், இதர பாடசாலைகளிற்கு சென்று பாடசாலை அணிகள் மற்றும் விளையாட்டு கழகங்களிற்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிப்பதே. அப்போது பரியோவான், மத்திய கல்லூரிகளிற்கிடையிலான பிக் மட்சுகளே நடைபெற்றன.

மட்டுப்படுத்தப்பட்ட வசதிகள் இருந்தபோதும் நாளும், பொழுதும் கிரிக்கெட் விளையாட்டில் நேரத்தை செலவளிக்க ஆயிரக்கணக்கானோர் செயற்பட்டார்கள். த.வி.பு யோகி அவர்கள்கூட யாழ்.இந்து அணிக்கு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியதை நான் கண்டுள்ளேன்.

தவிர, வன்பந்து மட்டுமன்றி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளும் வருடம் முழுவதும் நடைபெற்றன.

நீங்கள் வேற இதை சீரியசாக எடுத்துகொண்டு ................
அங்கு விளையாடினோம் இங்கு விளையாடினோம் என்கிறீர்கள்.
 
அகதி முகாமில் இருந்தாலும் எல்லோரும் எதையாவது விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள்.
 
முரளி அண்ணா சொல்வது "கிரிகட்" பந்து மேலே விளையாடும்போது பணம் கிழே விளையாட வேண்டும். அதுதான் கிரிகெட். அது கடந்த 30வருடமாக வடக்கில் யாரும் விளையாட வில்லைதான்.
பணமும் விபச்சாரமும் ஒண்டர கலந்து பந்து வீசுவதுதான் கிரிகட்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.