Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையை கண்டறியும் நோக்கில் இலங்கை வரும் அவுஸ்திரேலிய, மலேசிய, நியூசிலாந்து பிரதிநிதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை கண்டறியும் நோக்கில் இலங்கை வரும் அவுஸ்திரேலிய, மலேசிய, நியூசிலாந்து பிரதிநிதிகள்

[Thursday, 2013-11-07 08:31:31]
leeirhiannon-seithy-20131106.jpg

அவுஸ்திரேலியாவின் செனட் சபை உறுப்பினர் லீ றைனன், நியூசிலாந்து மற்றும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு உண்மையை கண்டறியும் நோக்கில் விஜயம் செய்யவுள்ளனர். அவர்கள் எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் ஆரம்பமாவதற்கு முன்னர், இலங்கைக்கு வருகை தந்து, அந்தந்த நாடுகளில் தங்களின் அறிக்கைகளை சமர்ப்பிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் அரசியல் தஞ்சம் கோரிகள் குறித்த விபரங்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில் அவர்கள் முழுமையாக ஆராய்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. தமது விஜயம் தொடர்பில் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள றைனன், தாம், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கனடா புறக்கணித்துள்ளமையானது, அந்த நாடு மேற்கொண்ட சிறந்த தீர்மானம் என்று தெரிவித்துள்ளார்.

  

எனினும் இந்த மாநாட்டை இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும் புறக்கணிப்பாராக இருந்தால், அது கவலையளிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - செய்தியிணையம்

 

ஐயையோ இவங்கள் உணிமையைக் கண்டறிஞ்சுடுவாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தி நல்லா இருக்கு.. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.. ஆனால் இன்னும் இலங்கைக்கு உதவி செய்து மனித உரிமைகளை மேம்படுத்த வேண்டும் என அறிக்கை வழங்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் செனட் சபை உறுப்பினர் லீ றைனன் தொடர்ந்து தமிழர்களுக்காக குரல் கொடுத்துவருபவர்.

பசுமைக்கட்சியினரால் செனட் சபையில் தெரிவித்த கருத்துக்கள் சில, செயல்பாடுகள் (யாழ் இணையத்தில் வந்தவை). யாழ் இணையத்தில் வாராதவை பல.

1)ஈழத்தமிழர்களின் நிலங்களில் சிங்களக்குடியேற்றம், தமிழர்கள் கடத்தப்படுதல், காணாமல் போவது உட்பட ஈழத்தமிழர்களின் முக்கிய பிரச்சனைகள் பற்றிய ஆற்றிய உரை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=106550

http://lee-rhiannon.greensmps.org.au/content/speeches/speech-sri-lanka

2)சிங்கள நாட்டின் துடுப்பாட்டத்திற்கு எதிராக நடைபெறும் கவனயீர்ப்பினை நிறுத்த முடியாமல் தோல்வியுற்ற அவுஸ்திரெலியாவில் இருக்கும் சிங்கள நாட்டுத்தூதரகம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=115235

3)பிறையன் செனவிரட்ன சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113184

http://www.radioaustralia.net.au/international/radio/program/connect-asia/australian-tamil-rights-advocate-decries-deportation-from-singapore/1062012

4)மாவீரர் நாளில் அவுஸ்திரெலியா பாராளுமன்றத்தில் மாவீரர் பற்றி உரையாற்றிய அவுஸ்திரெலியா பசுமைக்கட்சியின் செனட்சபை உறுப்பினர் Lee Rhiannon.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112058

5)இலங்கை உயர்ஸ்தானிகரை நாடு கடத்த வேண்டும் - லீ ரியன்னன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=105074

6)அவுஸ்திரேலிய செனட் சபையில் 2012 மார்ச் 21 இல் தீர்மானமான மனு பற்றிய செய்தி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99650

7)அவுஸ்ரேலியாவில் கிறீன் கட்சியின் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன

http://www.yarl.com/forum3/index.php?showtopic=92059

8)

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து இலங்கை நீக்க வேண்டும் என கோரி, அவுஸ்திரேலிய செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை அவுஸ்திரேலியாவின் கிரீன்ஸ் கட்சி, செனட் உறுப்பினர் லீ ஹனன் சமர்ப்பித்தார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=92060

9)சிறிலங்காவுக்கான அவுஸ்திரெலியாத்தூதுவரும் முன்னாள் சிறிலங்கா கடற்படைத்தளபதியுமான திசரா சமரசிங்கா ஒரு போர்க்குற்றவாளி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=93067

10)நோபல் சமாதானப் பரிசுக்கு சனல் 4 தொலைக்காட்சி பரிந்துரைப்பு!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=97609

11)ஆணைக்குழுவின் அறிக்கை - கெவின் ரூட்டின் அமைதி! சர்வதேச அக்கறையை ஒதுக்கித் தள்ளும்படி அமைந்துள்ளது. அவுஸ்திரேலிய பசுமை கட்சி விமர்சனம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=97837

12)தமிழர்கள் அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தந்தமைக்கு பசுமைக்கட்சியினர் வாழ்த்துக்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=98322

 

 

அவுஸ்திரேலியாவில் இருக்கும் Liberal Party நீண்ட காலமாக பாதுகபப்பை தேடிவரும் அகதிகளுக்கும், எங்களின் தூய்மையான விடுதலைப்போராட்டத்திற்கும் வெவ்வேறு வகைகளில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள்.

எதிர்கட்சியின் துணைத் தலைவர்  Julie Bishop அவர்கள் சிறிலங்காவிற்கு சென்று வந்ததும் அங்கே தமிழர்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்திவரும் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் சிறிலங்காவை பாராட்டினார். ஆனால் எங்கள் மக்களுக்கு சிறிலங்கா அரசு தொடர்ந்தும் கொடுத்து வரும் பெரும் துயரங்களை நாங்கள் யாவரும் அறிவோம்.

பாதுகாப்பை தேடிவரும் தமிழீழ அகதிகளின் வரவை எதிர்ப்பவர்களின் வாக்கை தம் பக்கம் திருப்புவதற்காகவும். அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தமது ஆட்சியை கொண்டுவருவதற்காகவும், தமிழர்கள் படும் துன்பங்களை அறிந்திருந்தும், தமிழ் இனத்தை அழிப்பதற்காகவே செயற்படும் சிறிலங்காவோடு இன்று நெருங்கிய உறவை வைத்திருக்கிறார்கள். இதை தெரிந்தும் நாங்கள் Liberal Party க்கு வாக்களிக்கலாமா?

2008ம் ஆண்டு முதல், Labor Party ஆளும்காட்சியாக இருந்தது வந்துள்ளது. எமது மக்கள் 2009இல் பேர்  அழிவை சந்தித்த போது, பல்லாயிரக்கணக்கில் எமது மக்கள் அழிந்துபோவதை தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமும், பிரதமராக இருந்துவந்த Kevin Rudd அவர்களிடமும் நாங்கள் எமது மக்களின் அழிவை தடுப்பதற்கு  முயற்சிகளை எடுங்கள் என்று பல்வேறு வகையில் கேட்டிருந்தோம் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தோம் அதற்கு எந்த ஒரு பதிலும் தராமல் இருந்தவர்தான் இந்த Kevin Rudd.

சிறிலங்கா நேவியின் முன்னாள் தளபதி, சமரசிங்காவையும் சிறிலங்கா High Commissioner ஏற்றுக்கொண்டதும் Labor Party தான். பாதுகப்பை தேடிவரும் அகதிகளை சிறிலங்காவின் சித்திரவதை கூடங்களுக்கு திருப்பி அனுப்புபவர்களும், Labor Party தான்.

இனஅழிப்பில் இருந்து தப்பி வந்தவர்களை, பொருளாதாரத்திற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்று அசிங்கப்படுத்தினார்கள், இன்று சிறிலங்காவில் ஒரு பிரச்சினையும் இல்லை, CHOGM  2013 அங்கே  நடக்க வேண்டும் நாங்கள் அங்கே அந்த சந்திப்பிற்கு சமூகம் அளிப்போம்  என்று கூறுவதும் Labor Party தான். இவர்களுக்கும் நாங்கள் வாக்களிக்கலாமா?

அவுஸ்திரேலிய மக்களின் வாக்குகளை எதிர்பார்க்காது தூயமனத்துடன் தமிழர் படும் அவலங்களை உணர்ந்து தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பவர்வர்கள் The Greens Party மட்டுடம் தான்.

2009ம் ஆண்டில் உலகமே எங்களை பயங்கரவாதிகள் என்று சொன்ன போதிலும் The Greens Partyயின் தாலைர் Bob Brown னும் Lee Rhiannon அவர்களும் தான் தொடர்ச்சியாக எங்களுக்காக குரல் கொடுத்தார்கள். இன்றைக்கும் எந்தவொரு நினைவு நாளோ, ஆர்பாட்டங்களோ நடந்தாலும் The Greens Party யை சேர்ந்த ஒரு உறப்பினர் அங்கே எங்களுக்கு பக்க பலமாக நிற்பார்கள்.

உலகத்திலே முதல் முறையாக பாராளுமன்றத்தில் மாவீரர் நாள் அன்று எங்களின் மாவீரர்களை நினைவு கூர்ந்தவர்களும் இந்த The Greens Party சேர்ந்தவர்கள் தான்.

தமிழ் இளம் செயற்பாட்டாளர்களாகிய நாங்கள் Liberal/Labor க்கு எமது எதிர்ப்பை தெரிவிப்பதற்காகவும் அவர்கள் தமிழர்களை பகடைக்காயாக பாவித்து விளையாடும் அரசியல் விளையாட்டுக்கு துணைபோகப் போவதில்லை என்பதை காட்டுவதற்காவும், எங்களுடன் பக்கபலமாக இருந்து எமது அவலங்களிலும் அழிவுகளிலும் தூய்மையாக பங்காற்றிவரும் The Greens Partyக்கு எமது ஆதரவை கொடுப்பது என்று முடிவு செய்துள்ளோம்.  அதே போல தமிழ் மக்கள் அணைவரும் The Greens Partyக்கு தமது ஆதரவை வழங்கி அவர்களுக்கே உங்களுடைய வாக்குகளையும் அளிக்கவேண்டும்  என்று வேண்டி நிற்கின்றோம்.

 
நன்றி

தமிழ் இளம் செயற்பாட்டாளர்கள்.

ஐயையோ இவங்கள் உணிமையைக் கண்டறிஞ்சுடுவாங்களோ?

 

2010ல் அவுஸ்திரெலியாவில் நடைபெற்ற செனட் தேர்தலில் சிங்களவர்களும் சிங்கள அரசும் குறிப்பாக லீ ரெய்னன் அவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்று அவுஸ்திரெலியா வாழ் சிங்களவர்களைக் கேட்டு மின்னஞ்சல்கள் அனுப்பி வந்தார்கள். உலகத்திலே முதன் முதலாக பாராளுமன்றத்தில் மாவீரர் நாள் அன்று எமது மாவீரர்களுக்கு நினைவு கூர்ந்தவர் லீ ரெய்னன் அவர்கள்.

அபிவிருத்தி நல்லா இருக்கு.. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.. ஆனால் இன்னும் இலங்கைக்கு உதவி செய்து மனித உரிமைகளை மேம்படுத்த வேண்டும் என அறிக்கை வழங்குவார்கள்.

 

அவுஸ்திரெலியா அரசு கனடா அரசு போல பொதுநலவாய மகாநாட்டினைப் புறக்கணிக்க வேண்டும் என அண்மையில் இவர் கருத்து வெளியிட்டு இருக்கிறார். சிங்கள அரசு இவருக்கு சிறிலங்கா செல்ல விசா வழங்குமால் இழுத்தடிக்க வாய்ப்பு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ இவங்கள் உணிமையைக் கண்டறிஞ்சுடுவாங்களோ?

 

தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவர் லீ ரெய்னன். இதனால் தான் அவரை சிங்களதேசம் திருப்பி அனுப்பியிருக்கிறது.

அபிவிருத்தி நல்லா இருக்கு.. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.. ஆனால் இன்னும் இலங்கைக்கு உதவி செய்து மனித உரிமைகளை மேம்படுத்த வேண்டும் என அறிக்கை வழங்குவார்கள்.

 

நீங்கள் கனடாவில் இருப்பதினால் லீ ரெய்னனைப் பற்றித் தெரியாமல் இருக்கிறீர்கள். ஆனால் அவுஸ்திரெலியா இருக்கும் ஒருவர் இவரைப்பற்றித் தெரியாமல் உங்களின் கருத்துக்கு பச்சை குத்தியிருப்பது கவலையான விடயம். எங்கட சனம் தான் நன்றி கெட்டு சிங்கள தேசத்துக்கு சுற்றுலா சென்று, அங்கு பாலும் தேனும் ஒடுது என்று சொல்வார்கள். ஆனால் லீ ரெய்னன் போன்ற சில அரசியல்வாதிகள் தொடர்ந்து எமக்காக்குரல் கொடுப்பவர்கள்.

அவுஸ்திரேலியன் அரசு அவர்களின் வரவு பற்றி இலங்கைக்கு அறிவித்திருக்கிறது. அவர்களுக்கு இலங்கை தூதுவராலாம்  என்ன வீசா எடுக்க வேண்டும் என்பது பற்றி ஆலோசனை வழங்கியிருக்கிறது.

 

அவுஸ்திரேலிய அரசு யூரெனியம் விற்பத்தற்காக இந்தியாவுக்குத் தலை வணங்கி வந்தது. முன்னர் ஒருதடவை அவுஸ்திரேலிய அரச அதிகாரிகள் "இலங்கைக்கு அருக்கில் இருக்கும் நாடு இலங்கையில் பயங்கரவாத்ததை ஒழித்தவுடன் தமிழருக்கு உரிமைகள் வழங்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறது" என்று சொன்னதாக வாசித்தும் இருக்கிறேன். இனி இந்தியா போகாவில்லை. அவுஸ்திரேலியாவும் தன் பயணத்தை நிற்பாட்டுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

Lee Rhiannon returns to Australia after Sri Lanka interrogation
Greens senator seized with New Zealand MP Jan Logie and passport confiscated after she tweets that Sri Lanka should not host Commonwealth summit
  •  

  •  
  •  
2b84e0b1-f454-4184-b9f5-57675281a632-460Passport confiscated: Lee Rhiannon. Photograph: /AAP

Australian federal MP Lee Rhiannon has returned to Sydney after Sri Lankan authorities detained and interrogated her for hours, her office says.

The Greens senator for NSW was preparing to host a press conference with New Zealand MP Jan Logie on Sunday morning at their Colombo hotel when the pair had their passports seized by immigration officials.

Sunday was the final day of a four-day fact-finding trip to Sri Lanka ahead of the Commonwealth summit (Chogm).

The two MPs said they were investigating alleged human rights abuses and press freedom in the island nation.

"Abuses so serious that #SriLanka must not host #CHOGM," Rhiannon tweeted on Sunday, shortly before the scheduled press conference.

The next tweet came three hours later: "Lee has asked us to pass a message on to her followers: She has had her passport confiscated by Sri Lankan Immigration Officials".

She was later released and allowed to board a flight back to Australia.

The Greens say the department of foreign affairs and trade (DFAT) and the Sri Lankan authorities were both notified ahead of Rhiannon's trip.

A DFAT spokeswoman was unable to confirm this, saying only: "The department is aware that Senator Rhiannon was questioned at her Colombo hotel earlier today by Sri Lankan immigration authorities.

"Senator Rhiannon did not request consular support."

Senator Rhiannon has denied claims by Sri Lankan officials that her planned press conference was in violation of her visa, telling the Sydney Morning Herald she had been advised to obtain the "special projects" class tourist visa.

The incident comes just over a week after two Australian press freedom advocates were also detained by Sri Lankan officials and accused of violating their visa conditions.

International Federation of Journalists Asia-Pacific director Jacqui Park and her deputy Jane Worthington arrived home last Saturday after two harrowing days of interrogation.

The Sri Lankan government took issue with the Australian duo participating in a press freedom event when they were in the country on tourist visas.

http://www.theguardian.com/world/2013/nov/11/lee-rhiannon-sri-lanka

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.