Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண ஆளுநரை மாற்றும் பிரேரணை நிறைவேற்றும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-எஸ்.ஜெகநாதன், குணசேகரன் சுரேன, எஸ்.கே.பிரசாத்

வடமாகாண ஆளுநரை மாற்றுவதற்கான பிரேரணை வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை (11) நடைபெற்றது. 

இதன்போது, வடமாகாண சபை ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை மாற்ற வேண்டும் என்ற பிரேரணையினை வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் சபையில் முன்வைக்க வடமாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் ரவிகரன் அந்தப் பிரேரணையினை வழிமொழிய தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது.
 
அத்துடன், வவுனியா பூவரசங்குளம் ஆரம்பப் பாடசாலையில் தங்கியிருக்கும் விசேட அதிரடிப் படையினரை வெளியேற்றுவதற்கு கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனினால் வழிமொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, யாழ். மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் ஆளணி நிரப்புதல் தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கையினை நிறுத்தும்படி வட மாகாண சபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி பிரேரணை முன்வைத்தார். அதனை விந்தன் கனகரத்தினம் வழிமொழிந்தார்.

அத்துடன், ஆட்சிக்காலம் முடிவுற்று தற்போது நீடிப்புக் காலத்தில் இயங்கி வரும் மாநகர சபை ஆளணியினர் நிரப்புதல் நடவடிக்கையில் ஈடுபட முடியாது எனக்கூறி சபைத் தவிசாளர் கந்தையா சிவஞானமும் இந்த பிரேரணையினை ஆதரித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/89140-2013-11-11-12-42-43.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு கொதி ஏறப்போகுது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு கொதி ஏறப்போகுது.. :D

 

புலிகள்  சண்டையை  முடிவுக்கு கொண்டுவந்தது ஏன் என்று சிங்களவன் தற்பொழுது யோசிக்கத்தொடங்குவான் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கப்படவேண்டிய தீர்மானம்
சந்திரசிறி மாற்றபட்டவுடன் சிங்கள ராணுவத்தையும் அகற்றும்

கோரிக்கையை முன்வைத்து நிறைவேற்றவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீர்மானங்களுக்கு சிங்களம் இடம் கொடுக்குமா É

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீர்மானங்களுக்கு சிங்களம் இடம் கொடுக்குமா É

 

ஐனநாயகம்  சிங்களத்திடம் எடுபடுமா??

எடுபடாவிட்டால்

ஐனநாயகவழியில்  உங்கள் பிரச்சினைகளை  கேளுங்கள்  தருகின்றோம் என்பவர்கள்  பதில் தரணும்

வாழ்த்துக்கள்.

ஐனநாயகம்  சிங்களத்திடம் எடுபடுமா??

 

 

ஒரு நாளும் இல்லை. நாங்கள் இந்த சர்த்தபங்களின் ஊடாக இந்த கூற்றை நிரூபிக்கவேண்டும் . அங்கே பின்னணியில் நடக்கின்ற விடயங்கள் ஜனாயக உரிமைகள் தமிழர்களுக்கும் உரியது என்று சிங்களம் ஒருபோதும் கருதவில்லை என்பதை பறைசாற்றி நிக்கிறது. இந்த மாகாணசபை இருக்கின்ற குறந்தளவு அதிகாரங்களை வைத்து மக்களுக்கு உதவுவதையும் இந்த அரசு விரும்பவிலை என்பது அங்கே நிரூபணமாக்கிவருகிறது. இந்த செய்திகள் காலப்போக்கில் தான் மக்களுக்கு தெரியவரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி ஒரு பிரேரணை நிஜமாகவே நிறைவேற்றப்பட்டதா? அப்படியான தகவல் ஏதும் அங்கிருந்து இல்லையே..

இப்படி ஒரு பிரேரணை நிறைவேற்றபடவில்லை என்று தவிசாளர் சிவஞானம் அறிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு பிரேரணை நிறைவேற்றபடவில்லை என்று தவிசாளர் சிவஞானம் அறிவித்துள்ளார்.

 

யாருக்கு எப்போது அறிவித்துள்ளார்

இப்படி ஒரு பிரேரணை நிஜமாகவே நிறைவேற்றப்பட்டதா? அப்படியான தகவல் ஏதும் அங்கிருந்து இல்லையே..

 

நிறைவேற்றப்பட்ட பிரேரணை அடிப்படையில் அவரை வேண்டாம் என்பதுதான். ஆனால் பெயரை சொல்லி நீக்கும் படி கேட்கும் அதிகாரம் மாகாண சபையில் இல்லையாயின் தனி பட்டவர்கள் அப்படி பிரேரணையை கொண்டுவர முடியாது. தவிசாளர் அனுமதிக்கமாட்டார். அதனால்த்தான் இதுவரையில் விக்கினேஸ்வரன் கோரிக்கையாக மட்டும் வைத்து வருகிறார்.

Motion to change Northern Governor passed
TUESDAY, 12 NOVEMBER 2013 15:14 E-mail Print
A motion calling the President to appoint a civilian as the Governor of the Northern Province had been passed in the Northern Province Council during its second sitting on Monday.

Kesavan Sayanthan brought forward the proposal calling the President to remove the present Governor Maj. Gen. (Rtd.) G.A.Chandrasiri from the post.
The proposal was seconded by Arumugam Ravikaran and the motion was passed.

The NPC Chief Minister C.V. Wigneswaran and the Tamil National Alliance had been calling for a non-military person to the post since September. ( S. Jeganatahan, Kunasegaran Suren and S. K. Prasath)

 

http://www.dailymirror.lk/news/38570-motion-to-change-northern-governor-passed.html

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின் சாராம்சம் இந்த சந்திரசிறி வேண்டாம் ஒரு சூரியசிறியை அனுப்புங்கோ என்று கேட்பதை போல் இருக்கிறது. முந்திய காலங்களில் இராணுவத்தில் இருந்த பின்னணியற்ற சிவில் சேவையாளர் ஒருவரை ஆளுனராக கேட்கிறார்கள் என்று நான் நினைத்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.