Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐங்கரநேசன் மரத்தில காய்ச்ச ஆடு!

Featured Replies

tumblr_mr85b0zzI41qbh26io1_1280%252520%2

பொன் ஐங்கரநேசன்
வேளாண் விஞ்ஞானி
ஆவரங்கால்.

ஒட்டியிருந்த தகரத்தில் கைவைத்து தள்ளிக்கொண்டே படலையை திறந்தேன். முற்றத்தில் மாமி விளக்குமாற்றால் கூட்டிக்கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு செம்பரத்தை மரம் பூராக பல வகைகளில் பூக்கள் பூத்து தொங்கின. கொப்புகள் எல்லாம் டிஷ்ஷு பெப்பர் சுற்றி ஒட்டப்பட்டு இருந்தது. அருகில் நின்ற எலுமிச்சையின் கிளைகளில் ஆங்காங்க பொச்சுமட்டை சுற்றிக்கட்டப்பட்டிருந்த பதியத்தில் தண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. வாழைமரங்களில் ரோசா மல்லிகை என்று குத்தப்பட்டு குறுக்கும் மறுக்கும் நீட்டிக்கொண்டு இருந்தன. ஒன்றில் மஞ்சள் நிறத்தில் பூத்தும் இருந்தது.

 

“அந்த வாழைத்தண்டில குத்தின ரோசா பூத்திருக்கு மாமி”

மாமி நிமிரவில்லை. கூட்டின புழுதி நாசியில் அடித்தது. அவர்  நல்ல மூடில் இல்லை என்று புரிந்தது.

“மாமா வீட்டில இல்லையே?”

”கழுதை கெட்டா குட்டிச்சுவர்”

நானா மாமாவா கழுதை என்ற டவுட்டை கிளியர் பண்ணாமல் மெதுவாக சைக்கிளை நிறுத்திவிட்டு பின்கோடியில் இருந்த மாமாவின் ஆய்வுகூடத்துக்கு போனேன்.

“பொன் ஐங்கரநேசன், வேளாண் ஆய்வுகூடம்” என்று மட்டைப்பேப்பரில் என்று பெயிண்டிங் ஸ்டிக்கால் எழுதிக்கிடந்தது. மூன்றடி அகல தடுப்பு வாசல். பத்தடிக்கு பத்தடி வடலி அடைப்பு.  கூரை என்ற சமாச்சாரத்துக்கு மாமியின் பழைய வெள்ளை சேலைகள் இரண்டு மூடப்பட்டிருந்தது. ஆங்காங்கே வெளிச்சம் வர ஓட்டைகள்.  சரியாக வேயாத அடைப்புக்குள்ளால் எல்லாமே தெரிந்தது. தூக்கி நகர்த்திவிட்டு நுழைந்தால், மூலையில் சின்ன மேசை, கதிரை போட இடம் போதாது. விதம் விதமான அங்கர் பை மரங்கள், மண் வகைகள். ஜாடிகளில் செத்த எலிகள், கரப்பான்கள், மண் புழுக்கள், நிறைய நெருப்புப்பெட்டிகள், பட்டுப்பூச்சிகள் என்று பரவிக்கிடந்தது.

உடைத்து குடித்து முடிக்காமல் ஒரு கோக் டின் இருந்தது. உள் வேலியில் உதயனில் வெளிவந்த, மாமா டக்லஸ் தேவானந்தாவிடம் “பசுமை வேளாண்” விருது வாங்கும் படம் லேமினேட் பண்ணப்பட்டு தொங்கியது. எதிர் மூலையில் மாமா முதுகுகாட்டி குந்தியிருந்தார். வெறும் மேல். வெள்ளை பாண்ட்ஸ். பாண்ட்ஸ் பின் பக்கம் நடுவாலே மாமியில் தையலோடு சண்டைபோட்டு பிரிந்திருந்தது.

மாமா குனிந்து பூதக்கண்ணாடியால் ஒரு செடியின் உச்சியை நுணுக்கமாக அவதானித்துக்கொண்டிருந்தார்.

மாமா…

உஷ்ஷ் ...

சொல்லிக்கொண்டே திரும்பினார். கண்ணிலே மலர்ச்சி தெரிந்தது. பூதக்கண்ணாடியை என் கையில் வைத்தார்.

”தெரியுதா எண்டு பாரு”

”எது மாமா”

”வால்… பத்து கிழமைல வால் தான் முதலில வரும்”

குனிந்து அந்த செடியை கவனித்தேன். ஒற்றை தண்டில் ஆங்காங்கே இலைகள் இருந்தன. இந்த செடியை இதற்கு முன்னே எங்கேயும் கண்டதாக ஞாபகம் இல்லை. ஐந்தடிக்கு வளர்ந்திருந்தது. கிளைகள் இல்லை. உச்சியில் மொட்டு போல ஒன்று மொத்தமாக இருந்தது.

copy-of-veglamb_thumb%25255B1%25255D.jpg

“இது என்ன மரம் மாமா?”

”டார்டாரி லாம்ப் பிளான்ட் … வெஜ்ஜிக்ரோஸ் பாமிலி”

”அப்பிடி எண்டால்?”  

“அந்த மொட்டை கவனி”

”மொட்டுல என்ன மாமா?”

”மொட்டிண்ட நுனி சாதுவா ..”

”விரிஞ்சிருக்கு .. அதுக்கு?”

”அதுக்குள்ளால இந்த பூதக்கண்ணாடியால பாரு.. ஒரு வால் தெரியும்”

”வாலா?”

”ஆட்டு வால்”

திரும்பி மாமாவை பேசாமல் பார்த்தேன்.

“ஓமடா .. ஆட்டிண்ட வால் தெரியும் .. வடிவா பாரு”

மாமா கொஞ்சம் தயங்கினார். போய் ஆய்வுகூட தடுப்பை அகற்றி வெளியே எட்டி அக்கம்பக்கம் பார்த்துவிட்டு மீண்டும் கவனமாக மூடிவைத்துவிட்டு வந்தார். காதுக்குள் கிசுகிசுத்தார்.

”இந்த செடியில இருந்து ஒரு ஆட்டுக்குட்டி காய்க்கப்போகுது!”

“என்ன கொட்..” என்று ஆரம்பித்துவிட்டு படக்கென்று நிறுத்தினேன். மாமாவை கொஞ்சம் பதட்டத்தோடேயே பார்த்தேன். அவரில் எந்த சலனமும் தெரியவில்லை.

“புறநானூறில இது இருக்கு .. தமிழன் என்னெல்லாம் கண்டு பிடிச்சிருக்கிறான் தெரியுமா .. ஆறுமாசமா குத்தி முறிஞ்சு .. மொட்டு வந்திருக்கு.. பார்த்தியா?”

பகீர் என்றது. மாமா ஒரு லூசர் என்று குமரன் அப்பவே சொன்னவன். நான் தான் கேட்கவில்லை. “அந்த ஆளுக்குள்ள ஏதோ இருக்கடா” என்று சொல்லியிருந்தேன். இந்த கதையை குமரனிடம் போய் சொன்னால் கதை கந்தல். மாமாவை மாமா வழியிலேயே போய் மடக்கலாம் என்று நானே ஆரம்பித்தேன்.

“என்ன சொல்லுறிங்க மாமா? இந்த செடில காய்க்கிறத ஆட்டுக்குட்டியள் சாப்பிடுமா?”

”இல்ல தம்பி .. இந்த செடில ஆட்டுக்குட்டியே காய்க்க போகுது”

“முடியல” என்ற வடிவேலு டயலாக் வாய்நுனி வரைக்கும் வந்தாலும் அடக்கிக்கொண்டேன்.

”என்ன மாமா லூசுத்தனமா கதைக்கிறீங்கள்… மரத்தில ஆடு எங்கேயும் காய்க்குமா?”

”நான் லூசன் தாண்டா … உன்ர மாமி கூட இத தான் சொன்னவா”

மாமி யாரை கழுதை என்று சொன்னார் என்ற டவுட் கொஞ்சம் கிளியர் ஆனது. மாமா செம கடுப்பில் இருந்தாற்போல தோன்றியது.

“ஐன்ஸ்டீனை கூட லூசு எண்டு தான் முதலில சொன்னவை.. “

”ஆரு?”

மாமா என் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஜாடியில் இருந்த ஒரு சில மண்புழுக்களை எடுத்து செடிக்கு போட்டார்.  பின்னர் ஒருவகை திரவத்தை எடுத்து ஊற்றினார். மீண்டும் ஒருமுறை அந்த மொட்டை உற்றுப்பார்த்தார்.

“முதலில வால் வரும் .. மூன்றாம் வாரத்தில் பின்னங்கால் தொடங்கி இரண்டு நாளில் தலை வந்திடும் ..”

என்பக்கம் திரும்பாமலேயே சொல்லிக்கொண்டிருந்தார்.

“எங்க கிடந்து இந்த மரத்தை கண்டு பிடிச்சீங்கள்?”

”இது ஒருவித ரைசொம் ப்ரோசஸ். இஞ்சி, உள்ளி, பருத்தி விதைகளையும் எலியின் கல்லீரலையும் பிணைஞ்சு, மூண்டு நாளு ஊறவிட்டு.. ச்சே .. இதுக்கு பேட்டண்ட் எடுக்கோணும் .. அமைச்சரோட கதைக்கோணும்”

”ஆடு காய்ச்சா பாரத்தில தண்டு முறிஞ்சிடாதா மாமா?”

நான் கேள்வி கேட்க மாமாவுக்கு உற்சாகம் தாளவில்லை.

”ஆடு வளர வளர நடுத்தண்டு பாரத்துக்கு வளையும். நல்லா ஆடு முத்தின உடன, அது தரைக்கு வந்திடும். சுத்திவர இருக்கிற புல்லை எல்லாம் மேயும்”

”கழனித்தண்ணியும் வைக்கலாமா?”

அந்த தண்டு முறிஞ்சுது எண்டால் ஆடு செத்துப்போயிடும்… இந்த ஆட்டில இருந்து பால் கறக்க ஏலாது. புழுக்கையும் போடாது .. ”

”அப்ப இந்த ஆட்டால என்ன பிரயோசனம்?”

”ஆக்கள் சாப்பிடலாம் … மரத்தில காய்க்கிறபடியா சுத்த சைவ ஆடு தானே .. ஐயர்மார் எல்லாம் இனிமேல் ஆட்டுக்கறி வெளுத்துக்கட்டலாம்”

இதுக்குமேலே கேட்டால் நானே நம்பிவிடுவேன் போல தோன்றியதால் சொல்லிவிட்டு நைசாக நழுவினேன். வளவு முழுக்க ஆட்டுமர தோட்டம் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க சிரிப்பு வந்தது. மாமி கிணற்றடி கல்லில் உடுப்பு அடிச்சு தோய்த்துக்கொண்டிருந்தார். சொல்லாமல் கிளம்பினேன்.

ஒரு மாசம் ஓடியது. கிரிக்கட்,  தலைவா ரிலீஸ், பரீட்சை என்ற பரபரப்பில் மாமாவின் ஆட்டை நான் மொத்தமாக மறந்துபோனேன். தீபாவளியன்று ஆடு அடிக்கும் கதை வீட்டில் வந்தபோது தான் “அட மறந்துவிட்டோமே” என்று ஞாபகம் வந்தது. உடனேயே சைக்கிளை ஆவரங்காலுக்கு விட்டேன். அதே மாமி, அதே விளக்குமாறு, அதே ஒட்டு செம்பரத்தை, எலுமிச்சை. அதே கழுதை இருக்கும் இடத்தை அவர் சொல்ல நைசாக ஆய்வுகூடத்துக்கு போனேன். மாமா குனிந்து இருந்து எதையோ ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். இம்முறை சாரம் கிழிந்திருந்தது.

“மாமா ..”

”நீயா வா .. இஞ்ச ஒருக்கா பாரு .. இந்த மொட்டில ஒரு செட்டை தெரியுது பாரு”

பூதக்கண்ணாடியை நீட்டினார். விலகி வழி விட்டார்.

“கவனமா .. பாரு .. மொட்டை தொட்டிடாத .. புறா பறந்திட்டு எண்டால் பிடிக்க ஏலாது .. சனியன் .. ஏற்கனவே ஒண்டு ஓடிப்போயிட்டுது”

சொல்லிக்கொண்டே பூதக்கண்ணாடியை கையில் அழுத்தினார். அசையாமல் நின்றேன்.

“அந்த ஆடு பேந்து காய்ச்சதா மாமா?”

கேட்டுக்கொண்டே அவர் கண்ணை பார்த்தேன். மாமா சலனமே இல்லாமல் சொன்னார்.

“ஓ அதுவா .. தீபாவளிக்கு அடிக்கலாம் எண்டு பார்த்தன்.. ஆனா போன கிழமையே முத்தீட்டுது. சாரதா தான் சமைச்சவள். அப்பிடி ஒரு பொரியல் கறி வாழ்க்கைல சாப்பிட்டிருக்க மாட்ட”

சாரதா மாமி கிணற்றடியில் ஊத்தை உடுப்பை கிழிய கிழிய அடிச்சு தோய்க்கும் சத்தம் கேட்கதொடங்கியது.

--- யாவும் கற்பனை!--

 

 

http://www.padalay.com/2013/11/14-11-2013.html

Edited by கோமகன்

நன்றி கோமகன் இணைப்பிற்கு! 

 

வாசிக்கும்போது ஏற்படும் சிரிப்பை அடக்க முடியவில்லை. எழுத்தாளருக்குப் பாராட்டுகள்!

நானும் வாசித்தேன் நன்றாக இருக்கு :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கச் சிரிப்பாத்தான் கிடக்கு , ஆனால் கேலி பண்ணத் தைரியம் இல்லை. இப்ப உலகக் கண்டுபிடிப்புகள் எல்லாம் போற போக்கில இதெல்லாம் நடந்தாலும் நடக்கும்.
எதுக்கும் ஆட்டை கிளுவை மரத்திலும், மாட்டை பிலாமரத்திலும் காய்க்க வைத்தால் மிச்சம் நல்லம்.  :D :D

இணைப்புக்கு நன்றி கோமகன். ஜேகே கடந்த வருடம் யாழில் இதே பெயரில் உறுப்பினராக இணைந்து தன் பதிவுகளை இணைத்துக் கொண்டு இருந்தார். ஹைக்கூ திரி ஒன்றை இறுதியாக இணைத்து இருந்தார் என்று நினைக்கின்றேன். இப்ப யாழ் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை ஆள்.

 

------

இதே கதையின் கீழ் ஆடு மரம் ஒன்றில் வளர்க்கலாம் என்று 19 ஆம் நூற்றாண்டு வரைக்கும் நம்பியிருந்தனராம் என்று கீழே உள்ளதையும் இட்டு இருக்கின்றார்.

 

----

 

மரத்தில் நிஜமாகவே ஆடு காய்க்கும் என்று அண்மைக்காலம் வரை நம்பியிருக்கிறார்கள். ஒற்றை தண்டால் ஆட்டின் வயிறு இணைக்கப்பட்டிருக்கும் என்றும், ஆடு காய்த்து, தனக்கு எட்டக்கூடிய இடத்தில் கிடைக்கும் புல்லை மேய்ந்துவிட்டு, பின்னர் பசி தாளாமல் இறந்துவிடும் என்றும் இட்டுக்கட்டியிருக்கிறார்கள். கண்ணால் கண்டதாக கதைவிட்டிருக்கிறார்கள். தண்டை ஓடித்துவிட்டால் ஆட்டின் கதை கந்தல்.

CottonPlant_thumb%25255B2%25255D.jpg?imgநான்காம் நூற்றாண்டில் அலக்சாண்டர், இப்போது இந்தியா என்று அழைக்கப்படும் பிரதேசத்தை ஆக்கிரமித்தபோது அங்கே மக்கள் பருத்தி உடைகள் உடுத்தியிருந்ததை பார்த்தார்கள். கம்பளி போல இருக்கிறது, ஆனால் மரத்தில் இருந்து எடுக்கிறார்களே என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள். அதே சமயம் சீனத்து புராதன கதைகளில் இப்படி செடியில் இருந்து ஆடு, கோழி முதல் மனிதன் வரை வளருமாம். அதையும் இதையும் இணைத்து இந்தியர்கள் மரத்தில் வளரும் செம்மறி ஆட்டில் இருந்தே கம்பளி எடுக்கிறார்கள் என்று கதை ஐரோப்பாவில் பரவிவிட்டது. இந்த விலங்கை/தாவரத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டு வரைக்கும் ஆராய்ச்சியாளர்கள் தேடியிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன். ஜூதர்கள் மரத்தில் காய்க்கும் மனிதன் இருப்பதாகவும் நம்பியிருக்கிறார்கள்.

ஹென்றி லீ என்பவர் “The Vegetable Lamb of Tartary: A Curious Fable of the Cotton Plant” என்று ஒரு ஆராய்ச்சி நூலே எழுதியிருக்கிறார். அதில் கிடைக்கின்ற தகவல்கள் சுவாரசியமானவை.

he told me that this plant, if plant it should be called, had blood, but not true flesh: that, in place of flesh, it had a substance similar to the flesh of the crab, and that its hoofs were not horny, like those of a lamb, but of hairs brought together into the form of the divided hoof of a living lamb. It was rooted by the navel in the middle of the belly, and devoured the surrounding herbage and grass, and lived as long as that lasted; but when there was no more within its reach the stem withered, and the lamb died

அட! என்ன இது லூசுத்தனமா யோசிச்சிருக்கிறாங்கள்? என்று நினைத்தால் அது தவறு. நம் அறிவியல் இப்படித்தான் வளர்ந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் சரி என்று ஒன்றை நிரூபித்து பின்னர் “ம்ஹூம் அதில்ல இதான் சரி” என்றது. நியூட்டனின் விதிகள் ஓடும் இயக்கத்தில் முரணாக இருந்தது என்று ஐன்ஸ்டீன் கண்டுபிடிக்கும் வரைக்கும் யாருக்கும் தெரியாது. தெரிந்தபோது நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சம் கொஞ்சம் தெளிவானது. நீல்ஸ்போர் குவாண்டத்தின் கற்பனைக்கெட்டாத சாத்தியக்கூறுகளை விவரித்தபோது ஐன்ஸ்டீன் நக்கலாக சிரித்தார். குவாண்டம் சரி என்று இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. நீல்ஸ் போர் அதை இப்படி சொல்வார்.

“நாங்கள் நிஜமென்று நினைக்கும் எல்லாமே நிஜமற்ற பொருட்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது”

இதை புரிய கொஞ்சம் அணுவுக்குள் போய் uncertainity principle ஆராயவேண்டும். இன்னொருநாள் பார்ப்போம். ஐன்ஸ்டீன் இல்லை எல்லாமே certain என்றார். இதுதான் அறிவியல். Science is revision in progress என்பார்கள்.  அந்த தேடல் கூர்ப்பின் அடிப்படை. அதனால் தான் தப்பி பிழைத்திருக்கிறோம். இப்போதைய நிஜங்கள் கூட இன்னொரு இருநூறு ஆண்டுகளில் யாரோ ஒருவனால் உடைக்கப்படும். முதல் உடைபடும் நிஜம் கடவுளாக இருக்கலாம். கடவுளே வந்துகூட அதை உடைக்கலாம்!

நிஜத்தை அறியும் வரை தேடல் தொடரும்… நிஜம்? தேடல் தொடரும்வரை நிஜம் என்பதே கிடைக்காது. இந்த ஆட்டம் ஒன்றே சாத்துவதம்.

 

இது தொடர்பான் விக்கி பீடியா இணைப்பு: http://en.wikipedia.org/wiki/Vegetable_Lamb_of_Tartary

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பொன் ஐங்கரநேசன், வேளாண் விஞ்ஞானி எண்டு பெயரிட்டு தற்போதைய வடமாகாண கால்நடை, விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனை இழுத்திருக்கு? படலைக்கு ஏதும் காய்ச்சலோ? :lol:

ஏன் பொன் ஐங்கரநேசன், வேளாண் விஞ்ஞானி எண்டு பெயரிட்டு தற்போதைய வடமாகாண கால்நடை, விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனை இழுத்திருக்கு? படலைக்கு ஏதும் காய்ச்சலோ? :lol:

 

 

உடைத்து குடித்து முடிக்காமல் ஒரு கோக் டின் இருந்தது

 

 

என்று வேற இருக்கு... அநேகமாக நக்கலாகத்தான் இருக்கும் :icon_mrgreen:

விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் என்று ஓடோடி வந்தேன் கவுட்டு விட்டியளே வாழ்த்துக்கள் கதை நல்லா இருக்கு முடில .

 

  • கருத்துக்கள உறவுகள்

என்று வேற இருக்கு... அநேகமாக நக்கலாகத்தான் இருக்கும் :icon_mrgreen:

 

திரும்பவும் வடிவா வாசிச்சன், பல விடயங்கள் அமைச்சரைப் பற்றித் தான் இருக்குது, உதாரணம் பின் பக்கம் தையல் விட்ட பான்ட், ஆனா ஐங்கரத்தார் பசுமை விருது கொடுத்துத் தான் கேள்விப் பட்டிருக்கிறன், டக்கியிட்ட இருந்து வாங்கினதாக் கேள்விப் படேல்ல. கற்பனைக் குதிரை கட்டு மீறிப் போயிருக்குது! :D

 

  • தொடங்கியவர்

திரும்பவும் வடிவா வாசிச்சன், பல விடயங்கள் அமைச்சரைப் பற்றித் தான் இருக்குது, உதாரணம் பின் பக்கம் தையல் விட்ட பான்ட், ஆனா ஐங்கரத்தார் பசுமை விருது கொடுத்துத் தான் கேள்விப் பட்டிருக்கிறன், டக்கியிட்ட இருந்து வாங்கினதாக் கேள்விப் படேல்ல. கற்பனைக் குதிரை கட்டு மீறிப் போயிருக்குது! :D

 

 

ஐங்கரியாரிட்டை நான் படித்தேன் . நல்ல நகைச்சுவையாளர் . மேலும் இதில் படலை இறுதியில் யாவும் கற்பனையே என்று போட்டிருக்கின்றார் ஆகவே நாங்கள்  இதை பகிடியாகவே எடுக்க வேண்டும்  :D  .

 

  • தொடங்கியவர்

நன்றி கோமகன் இணைப்பிற்கு! 

 

வாசிக்கும்போது ஏற்படும் சிரிப்பை அடக்க முடியவில்லை. எழுத்தாளருக்குப் பாராட்டுகள்!

 

ஜே கே படலை , யாழ் இணயத்தின் ஓர் கள உறவு இபொழுது முன்பு போல வருவதில்லை . கதை எழுதுவதற்கென்று ஒரு தனிப் பாணி வைத்திருக்கின்றார் . விஞ்ஞான கதை எழுதுவதில் வல்லவர் . அவர் எழுதிய கந்தசாமியும் கலக்சியும் நேர காலம் வரும் பொழுது இணைத்து விடுகின்றேன் .

 

ஜே கே படலை , யாழ் இணயத்தின் ஓர் கள உறவு இபொழுது முன்பு போல வருவதில்லை . கதை எழுதுவதற்கென்று ஒரு தனிப் பாணி வைத்திருக்கின்றார் . விஞ்ஞான கதை எழுதுவதில் வல்லவர் . அவர் எழுதிய கந்தசாமியும் கலக்சியும் நேர காலம் வரும் பொழுது இணைத்து விடுகின்றேன் .

 

 

நன்றி!!

  • கருத்துக்கள உறவுகள்

ஐங்கரியாரிட்டை நான் படித்தேன் . நல்ல நகைச்சுவையாளர் . மேலும் இதில் படலை இறுதியில் யாவும் கற்பனையே என்று போட்டிருக்கின்றார் ஆகவே நாங்கள்  இதை பகிடியாகவே எடுக்க வேண்டும்  :D  .

 

 

நீங்க குறிப்பிடுவது வேற ஐங்கரத்தார் போல இருக்கு கோ, நான் ஐங்கரத்தாரிட்டப் படிச்சு, பிறகு அவருடைய யுனிவேர்சல் கொட்டிலில படிப்பிச்சனான்! பகிடி விடுற ஆள் கிடையாது ஐங்கரத்தார்!

  • தொடங்கியவர்

நீங்க குறிப்பிடுவது வேற ஐங்கரத்தார் போல இருக்கு கோ, நான் ஐங்கரத்தாரிட்டப் படிச்சு, பிறகு அவருடைய யுனிவேர்சல் கொட்டிலில படிப்பிச்சனான்! பகிடி விடுற ஆள் கிடையாது ஐங்கரத்தார்!

 

இருவரும் ஒருவரே .இதுக்கு நாங்கள் தனியத் தான் தொடர்புகொள்ள வேணும் :lol::D . எனக்கு அவருடன் தனிப்பட்ட முறையில் பழக்கம் இருக்கு  . மாணவர்களுடன் அவர் கெடுபிடிதான் . அவர் மாணவர்களுடன் கெடுபிடியாக  இருந்ததால் தான் அவர் உருவாக்கிய மாணவர்கள் பல துறைகளிலும் பிரகாசிக்க முடிந்தது .

 

  • கருத்துக்கள உறவுகள்

poem61.jpg

 

நல்ல... பகிடிக் கதை. கோமகன்.
பாடசாலை நண்பன் ஐங்கரநேசனுக்கு... இந்த ஆடு சமர்ப்பண‌ம். :D

 

பிற் குறிப்பு: இந்த ஆட்டின் படத்தை... உங்கள் கணனித் திரையில் இடப் பக்கமும், வலப் பக்கமும்... உங்கள் தலையை அசைத்து பார்க்கும் போது... ஒரு அதிசயம் தெரியும். :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
நான் லூசன் தாண்டா

 

 

நகைச்சுவையாக உள்ளது. உள்குத்தும் உள்ளது போல தான் உள்ளது. ^_^

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவையாக உள்ளது. உள்குத்தும் உள்ளது போல தான் உள்ளது. ^_^

 

உள்குத்து பயங்கரமாய்... இருந்தாலும், அவை எல்லாவற்றையும்... எழுத்து நடை, குழி தோண்டிப் புதைத்துவிட்டது. நுணா.

உதார‌ண‌த்துக்கு....

 

//

“அந்த ஆடு பேந்து காய்ச்சதா மாமா?”

கேட்டுக்கொண்டே அவர் கண்ணை பார்த்தேன். மாமா சலனமே இல்லாமல் சொன்னார்.

“ஓ அதுவா .. தீபாவளிக்கு அடிக்கலாம் எண்டு பார்த்தன்.. ஆனா போன கிழமையே முத்தீட்டுது. சாரதா தான் சமைச்சவள். அப்பிடி ஒரு பொரியல் கறி வாழ்க்கைல சாப்பிட்டிருக்க மாட்ட”

சாரதா மாமி கிணற்றடியில் ஊத்தை உடுப்பை கிழிய கிழிய அடிச்சு தோய்க்கும் சத்தம் கேட்கதொடங்கியது.//

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.