Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் சுயநிர்ணய உரிமைகளை கோருவதில் எவ்வித தவறுமில்லை - இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sampanthan-seithy-2-150.jpg

தமிழ் மக்கள் சிறுபான்மை இனம் அல்ல, அவர்கள் சுயநிர்ணய உரிமைகளை கோருவதில் எந்த தவறையும் தான் காணவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை கிளிவெட்டியில் அண்மையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கோரிக்கைகளை புறந்தள்ளி விட அரசாங்கத்திற்கு முடியாது. ஆயுதம் தாங்கிய போரை இனி எந்த காலத்திலும் நான் எதிர்பார்க்கவில்லை. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் எமது பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்பு ஒருபோதும் இல்லாத வகையில் எமது பிரச்சினைகள் குறித்த கவனத்தை ஏற்படுத்த எம்மால் முடிந்துள்ளது.

  

சம்பூர் முகாம்களில் வாழ்ந்து வரும் மக்கள் பல நூறு ஆண்டுகளாக தமது பாரம்பரிய மண்ணில் வாழ்ந்து வந்தனர். கொட்டியார் முதல் வெருகல் வரையில் தமிழ் பேசும் மக்களே வாழ்ந்து வந்தனர். சம்பூரில் முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அவர்களின் பாரம்பரிய நிலங்களை வழங்குமாறு நாம் நாடாளுமன்றத்தில் பல முறை கோரிக்கை விடுத்தோம் என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97111&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சம்பந்தன் ஐயா..!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சம்பந்தன் ஐயா..!

அவசரப்பட்டு நன்றி சொல்லவேண்டாம்,ரெண்டுநாள் பொறுத்திருங்கோ வேற அறிக்கை வரலாம்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தருக்கு இரத்தப்பொட்டு வைச்சு எமாந்தவர்களில் நானுமொருவன்... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுமணி நேரமே கானும் பச்சோந்தி நிறம்மாற

அவசரப்பட்டு நன்றி சொல்லவேண்டாம்,ரெண்டுநாள் பொறுத்திருங்கோ வேற அறிக்கை வரலாம்

கருணாநிதி ,ஜெயஅம்மா , நரேந்திரமோடி,அன்னை சோனியா எல்லாரும் வரிசையில் நின்று மனதிற்குள் தியாணம் செய்தார்களாம் அந்தவழியால் வந்த சுப்புரமணியசுவாமியே நீண்ட வரிசையைபார்த்து வெலவெலத்து யாரு புதுசாமியா என்று கேட்டதுக்கு இல்லை தகதிமி பிரேமாணந்தாவுக்கு பின் சம்மந்தன்சாமி வந்தருள்ளியுள்ளார் காலில் விழுந்து வணங்கினால் பிரபஞ்சத்தில் எந்த கிரகத்திலும் பச்சோந்தி அரசியல் இலகுவாக செய்யலாம் என்று பதில் வந்தததாம் எப்படியோ நம்மாள் முன்னுக்குவந்தால் சரிதானே நமக்கு  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கு இரத்தப்பொட்டு வைச்சு எமாந்தவர்களில் நானுமொருவன்... :D  :lol:

 

வண்ணை  ஆனந்தனுக்கும் காசியண்ணைக்கும் வைத்தவன்....... :D

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் சுமந்திரனை விக்கியரை.. விட்டு நீங்கி இருக்கிறப்போ நிதானமாப் பேசுறார். கூடி இருக்கிறப்போ உளறித் தள்ளுகிறார். பாவம் அவருக்கு காது கேட்காது என்ற விசயத்தை சுமந்திரன் நல்லாப் பயன்படுத்தி அவரை தவறாக வழிநடத்துகிறாரோ என்ற சந்தேகம் வேற வந்து தொலைகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலவதியான இந்தாளின் கருத்ததை (அறிக்கையை) சில நாட்கள் காத்திருந்துதான் புலகாகிதம் அடையமுடியும். இப்போது இதற்க்கு கருத்து எழுதுவது என்பது மிகவும் அவசரமான முடிவாகும்.  

சம்பந்தர் சுமந்திரனை விக்கியரை.. விட்டு நீங்கி இருக்கிறப்போ நிதானமாப் பேசுறார். கூடி இருக்கிறப்போ உளறித் தள்ளுகிறார். பாவம் அவருக்கு காது கேட்காது என்ற விசயத்தை சுமந்திரன் நல்லாப் பயன்படுத்தி அவரை தவறாக வழிநடத்துகிறாரோ என்ற சந்தேகம் வேற வந்து தொலைகிறது.

______________ கனடாவிற்கு வந்த பொழுது நான் நேரடியாக சந்தித்து பல விடயங்களை கலந்துரையாடியனான் நான் அவ்வாறு எந்தக்குறையையும் சம்பந்தன் ஐயாவில் காணவில்லை .

 

நியானி: சீண்டும் வகையில் அமைந்த வரி நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான காலத்தில்திருகோணமலையில் புலிகளின் கட்டுபாட்டில் உள்ள பகுதியில் கூட்டமைப்பின் காரியாலதிறப்பு விழாவில் ஏன் புலிக்கொடி ஏத்தமாட்டன் என்று அடம்பிடிச்சனீங்கள் என்று கேட்டு பாருங்கோ சம்பந்தருக்கு இரண்டு காதும் கேட்காமல் போயிடும்  :D  :D

நாங்கள் புலிகளை ஆதரித்தாலும் ,புலிகள் சொல்லும் எல்லாவற்றிற்கும் தலை ஆட்டும் ஆட்கள் கிடையாது .மக்கள் நலன் தான் முக்கியம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.