Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முரளிதரன் பொதுமன்னிப்பு கோர வேண்டும்: மனோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mano-Ganesan(38).jpg
'பிள்ளைகளை தேடியலையும் தாய்மார்களை  கொச்சைப்படுத்தி, முத்தையா முரளிதரன் மாற்று வரலாற்றில் இடம்பிடித்து விட்டார். பொறுப்பற்ற விளையாட்டுத்தனமான தனது இந்த கருத்து தொடர்பில் பந்துவீசி விளையாடும் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் பொதுமன்னிப்பு கோரி விளக்கம் அளிக்க வேண்டும்'

'முத்தையா முரளிதரன் தனது அரசாங்கத்தை வானளாவ புகழ்ந்து பேசலாம். இந்த ஆட்சியில் இந்த நாடு  இன்று ஆசியாவின் ஆச்சரியமாக மாறி, உலக ஆச்சரியமாகும் பாதையில் நடை போடுகிறது என்றும் சொல்லலாம். இவை பற்றி நாம் கிஞ்சித்தும் கவலைப்பட போவதில்லை. தங்களது  இருப்புகளை தக்க வைத்துகொள்வதற்காக,  இது போன்று  கருத்து கூறும் நீல இரத்தம் ஓடும் தமிழர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். ஆனால், இருபது – முப்பது தாய்மார்கள்  தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பி போராட்டம் நடத்துவதனால் மனித உரிமை குற்றச்சாட்டுகள் உண்மையாகவிடாது என பெற்ற பிள்ளைகளை இழந்த தவிக்கும் தாய்மார்களை கொச்சைபடுத்தி, முரளிதரன் பேசியுள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

'1995ஆம், 1996ஆம் வருடங்களில் அவுஸ்திரேலிய நடுவர்கள் டெரலும், எமர்சனும், முரளிதரனின் பந்துவீச்சை குற்றம் சாட்டியபோது அது தொடர்பில் சர்வதேச கிரிக்கட் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரிக்கட் உலகம் கோரியது. 

அதையடுத்து சர்வதேச கிரிககெட் சபை ஒரு விற்பன்னர்களின் குழுவை நியமித்து முரளிதரனின் உடம்பில் ஆய்வு உபகரணங்களை பொருத்தி, கையை அளந்து பார்த்து மருத்துவ பரிசீலனை செய்து, பந்துவிச்சை படம் பிடித்து ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியதை முரளிதரனுக்கு நான் ஞாபகப்படுத்துகிறேன். அவர் மீது சுமத்தப்பட்ட இந்த பாரிய குற்றச்சாட்டு தொடர்பில் கிரிக்கெட் பற்றி எந்தவித அறிவும் இல்லாத அரசியல்வாதிகள் கருத்துகூறுவதும், அதைவிட இதுபற்றி விசாரிக்காமலேயே  தீர்ப்பு கூறுவதும்  எந்த அளவுக்கு பொறுத்த மற்றதாக இருந்ததோ, அதைவிட இன்று முரளிதரன், இந்நாட்டில் காணமல்போனவர்களின் மனித உரிமை விவகாரம் தொடர்பில் கருத்து கூறுவது 

முட்டாள்தனமானது.  

இவருக்கு இவரது அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட ஆணைகுழு பற்றியும் தெரியவில்லை,  ஐ.நா மனித  உரிமை ஆணைக்குழு பற்றியும் தெரியவில்லை. 

இந்த கிரிக்கட் வீரரின் இந்த கூற்று, மனித உரிமைகளுக்காக இந்நாட்டில் போராடும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மனித உரிமை போராளிகளையும்,  தமிழகத்திலும், உலகம் முழுக்கவும் மனித உரிமை போராட்டங்களை நடத்தி வரும் உணர்வாளர்களையும் மிக கடுமையாக அவமானப்படுத்தியுள்ளது. 

கடத்தப்பட்டு, கொல்லப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, கப்பம் வாங்கப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்காக போராடும் மனித உரிமை போராளிகளை, தனது பொறுப்பற்ற கருத்தின் மூலம் முட்டாள்களாக முரளிதரன் அடையாளப்படுத்தியுள்ளார். 

பொறுப்பற்ற விளையாட்டுத்தனமான தனது இந்த கருத்து தொடர்பில் பந்துவீசி விளையாடும் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் பொதுமன்னிப்பு கோரி விளக்கம் அளிக்க வேண்டும். 

இருபது – முப்பது தாய்மார்கள் தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பி போராட்டம் நடத்துவதனால் குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிடாது என முரளிதரன் கூறுகிறார். அதாவது விசாரிக்காமலேயே இவர் தீர்ப்பு வழங்குகிறார். இதுபற்றி, உண்மை அல்லது பொய் என தீர்ப்பு வழங்க முரளிதனுக்கு என்ன தகைமை என நான் கேட்க விரும்புகிறேன்.

முரளிதரன் புகழும் இதே இலங்கை அரசாங்கம் நியமித்த 'கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு' காணாமல் போனோரது உறவுகளின் கதறல்களை மறுக்க முடியாமல் இவை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது. 

இதை செய்யும்படிதான் முரளிதரன் கொச்சைபடுத்தியுள்ள கதறியழும் அந்த தாய்மார்களும் கோருகிறார்கள். இதையே டேவிட் கமரூனும் கோருகிறார். இதையே தமிழகமும் கோருகிறது. சர்வதேச மன்னிப்பு சபை உட்பட உலக மனித உரிமை அமைப்புகளும் இதையே கோருகின்றன. எல்லாவற்றிலும் மேலாக ஐ.நா சபையின் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல்வேறு நாடுகள் ஒன்றிணைத்து நிறைவேற்றிய அதிகாரப்பூர்வமான தீர்மானமும் இதையே கோருகிறது. இது எதுவும் இலங்கையிலும், இந்தியாவிலும் பந்துவீசி விளையாடும் முத்தையா முரளிதரனுக்கு தெரியவில்லை.

'வடக்கிற்கு அழைத்து  சென்று பிரதமர் டேவிட் கமரூனை சிலர் தவறாக வழி நடத்தி விட்டதாக' சொல்லியும்,  நாட்டின் ஏனைய பகுதிகளை விட வடக்கிலேயே இன்று அதிக வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதகவும் கூறியும், இதை வட இலங்கையின் பிரச்சினையாக மாத்திரம் காட்டுவதற்கும் முரளிதரன் முயற்சி செய்துள்ளார். பிள்ளைகளை காணவில்லையென  தாய்மார்களும், பெரியவர்களை காணவில்லையென பிள்ளைகளும், கணவர்மார்களை காணவில்லையென  மனைவிமாரும்; தேடியலைந்து போராடுவது வடக்குக்கு மாத்திரம் சொந்தமான பிரச்சினையல்ல. இது இன்று ஒரு தேசிய பிரச்சினை. 

தெற்கில் இது தொடர்பில் போராடுவது தடுக்கப்பட்டுள்ளது. வடக்கிலே இன்று மட்டுப்படுத்தப்பட்ட தமிழர் ஆட்சி நிலவுவதால் அங்கு இதை அடையாளப்படுத்தப்படுத்த களம் ஏற்பட்டுள்ளது.

1977ஆம் ஆண்டு கலவரத்தின் போது தமிழர் என்ற ரீதியில் கண்டியிலே தமது வீடு எரிக்கப்பட்டதாகவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.  இப்படியான கலவரங்களின் பின்னர், தெற்கில் வாழ்ந்த  வசதி படைத்த தமிழர்கள் தமிழகத்துக்கு சென்று அடைக்கலம் புகுந்தனர் அல்லது மேற்கு நாடுகளுக்கு  சென்று குடியேறினர்.  வசதியற்ற ஏழை மலையக தமிழர்கள் வடக்கில் சென்று குடியேறினார்கள். 

இன்று வடக்கிலே தங்கள் பிள்ளைகளை இழந்து, 'அவர்கள் இருக்கிறார்களா, இல்லையா, இருந்தால் அவர்கள் எங்கே  இருக்கிறார்கள்' என கதறியழும் அந்த தாய்மார்களில் சரிபாதியினர் தெற்கில் இருந்து சென்று வடக்கில் குடியேறிய  மலையக தமிழர்கள் என்பதை முரளிதரன் அறிந்து கொள்ளவேண்டும். இவர்களைத்தான் முரளிதரன் கொச்சைபடுத்தியுள்ளார். வீடுகள் எரிக்கப்படுவது என்பது வேறு, பெற்ற பிள்ளைகள் கடத்தப்படுவது என்பது வேறு. இது முரளிதரனுக்கு புரியவில்லை.

கிரிக்கெட் விளையாட்டிலும், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சர்ச்சைக்குரியவராக இருந்த இந்த கிரிகn;கட் வீரருக்கு, மனித உரிமைகள் பற்றிய எந்தவித தெளிவும், விளக்கமும் இல்லை. இந்நிலையில்  எவரையோ திருப்திபடுத்த தனக்கு விளங்காத விடயங்கள் தொடர்பில் இவர் முட்டாள்தனமாக கருத்து கூறியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மார்களை கொச்சைப்படுத்தி முரளிதரன் மாற்று வரலாற்றில் இடம் பிடித்து விட்டார் - மனோ

முத்தையா முரளிதரன் தனது அரசாங்கத்தை  வானளாவ புகழ்ந்து பேசலாம். இந்த ஆட்சியில் இந்த நாடு  இன்று ஆசியாவின் ஆச்சரியமாக மாறி, உலக ஆச்சரியமாகும் பாதையில் நடை போடுகிறது என்றும் சொல்லலாம். இவை பற்றி நாம் கிஞ்சித்தும் கவலைப்பட போவதில்லை.  தங்களது  இருப்புகளை தக்க வைத்துகொள்வதற்காக,  இது 
mano-ganesan_4.jpgபோன்று  கருத்து கூறும் நீல இரத்தம் ஓடும் தமிழர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். ஆனால், 'இருபது – முப்பது தாய்மார்கள்  தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பி போராட்டம் நடத்துவதனால் மனித உரிமை குற்றச்சாட்டுகள் உண்மையாகவிடாது' என பெற்ற பிள்ளைகளை இழந்த தவிக்கும் தாய்மார்களை கொச்சைபடுத்தி, முரளிதரன் பேசியுள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. காணாமல்  போன தங்கள் பிள்ளைகளை தேடியலையும் தாய்மார்களை  கொச்சைப்படுத்தி, முத்தையா முரளிதரன் மாற்று வரலாற்றில் இன்று இடம் பிடித்து விட்டார்  என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், மனித உரிமை மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
 
 
1995ம், 1996ம் வருடங்களில் ஆஸ்திரேலிய நடுவர்கள்  டெரலும், எமர்சனும் , முரளிதரனின் பந்துவீச்சை குற்றம் சாட்டியபோது அது தொடர்பில் சர்வதேச கிரிக்கட் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரிக்கட் உலகம் கோரியது. அதையடுத்து சர்வதேச கிரிக்கட் சபை ஒரு விற்பன்னர்களின் குழுவை நியமித்து முரளிதரனின் உடம்பில் ஆய்வு உபகரணங்களை  பொருத்தி, கையை அளந்து பார்த்து மருத்துவ பரிசீலனை செய்து, பந்துவிச்சை படம் பிடித்து ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியதை முரளிதரனுக்கு நான்  ஞாபகப்படுத்துகிறேன். அவர் மீது சுமத்தப்பட்ட இந்த பாரிய குற்றச்சாட்டு தொடர்பில் கிரிக்கட் பற்றி எந்தவித அறிவும் இல்லாத அரசியல்வாதிகள் கருத்துகூறுவதும், அதைவிட இதுபற்றி விசாரிக்காமலேயே  தீர்ப்பு கூறுவதும்  எந்த அளவுக்கு பொறுத்த மற்றதாக இருந்ததோ, அதைவிட இன்று முரளிதரன், இந்நாட்டில் காணமல்போனவர்களின் மனித உரிமை விவகாரம் தொடர்பில் கருத்து கூறுவது முட்டாள்தனமானது.  இவருக்கு இவரது அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட ஆணைகுழு பற்றியும் தெரியவில்லை; ஐநா மனித  உரிமை ஆணைக்குழு பற்றியும் தெரியவில்லை. 
 
இந்த கிரிக்கட் வீரரின் இந்த கூற்று, மனித உரிமைகளுக்காக இந்நாட்டில் போராடும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மனித உரிமை போராளிகளையும்,  தமிழகத்திலும், உலகம் முழுக்கவும் மனித உரிமை போராட்டங்களை நடத்தி வரும் உணர்வாளர்களையும் மிக கடுமையாக அவமானப்படுத்தியுள்ளது. கடத்தப்பட்டு, கொல்லப்பட்டு, கைது செய்யப்பட்டு, கப்பம் வாங்கப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்காக போராடும் மனித உரிமை போராளிகளை, தனது பொறுப்பற்ற கருத்தின் மூலம் முட்டாள்களாக முரளிதரன் அடையாளப்படுத்தியுள்ளார். பொறுப்பற்ற விளையாட்டுத்தனமான தனது இந்த கருத்து தொடர்பில் பந்துவீசி விளையாடும் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் பொதுமன்னிப்பு கோரி விளக்கம் அளிக்க வேண்டும்.
 
 
இருபது – முப்பது தாய்மார்கள் தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பி போராட்டம் நடத்துவதனால் குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிடாது என முரளிதரன் கூறுகிறார். அதாவது விசாரிக்காமலேயே இவர் தீர்ப்பு வழங்குகிறார். இதுபற்றி, உண்மை அல்லது பொய் என தீர்ப்பு வழங்க முரளிதனுக்கு என்ன தகைமை என நான் கேட்க விரும்புகிறேன்.
 
முரளிதரன் புகழும் இதே இலங்கை அரசாங்கம் நியமித்த  'கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு' காணாமல் போனோரது உறவுகளின் கதறல்களை மறுக்க முடியாமல் இவை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது. இதை செய்யும்படிதான் முரளிதரன் கொச்சைபடுத்தியுள்ள கதறியழும்  அந்த தாய்மார்களும் கோருகிறார்கள். இதையே டேவிட் கமரூனும்  கோருகிறார். இதையே தமிழகமும் கோருகிறது. சர்வதேச மன்னிப்பு சபை உட்பட உலக மனித உரிமை அமைப்புகளும்  இதையே கோருகின்றன. எல்லாவற்றிலும் மேலாக ஐநா சபையின் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல்வேறு நாடுகள் ஒன்றிணைத்து நிறைவேற்றிய அதிகாரப்பூர்வமான தீர்மானமும் இதையே கோருகிறது. இது எதுவும் இலங்கையிலும், இந்தியாவிலும் பந்துவீசி விளையாடும் முத்தையா முரளிதரனுக்கு தெரியவில்லை.
 
 'வடக்கிற்கு அழைத்து  சென்று பிரதமர் டேவிட் கமரூனை சிலர் தவறாக வழி நடத்தி விட்டதாக' சொல்லியும்,  நாட்டின் ஏனைய பகுதிகளை விட வடக்கிலேயே இன்று அதிக வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதகவும் கூறியும், இதை வட இலங்கையின் பிரச்சினையாக மாத்திரம் காட்டுவதற்கும் முரளிதரன் முயற்சி செய்துள்ளார். பிள்ளைகளை காணவில்லையென  தாய்மார்களும், பெரியவர்களை காணவில்லையென பிள்ளைகளும், கணவர்மார்களை காணவில்லையென  சகோதரிகளும் தேடியலைந்து போராடுவது வடக்குக்கு மாத்திரம் சொந்தமான பிரச்சினையல்ல. இது இன்று ஒரு தேசிய பிரச்சினை. தெற்கில் இது தொடர்பில் போராடுவது தடுக்கப்பட்டுள்ளது.  வடக்கிலே இன்று மட்டுப்படுத்தப்பட்ட தமிழர் ஆட்சி நிலவுவதால் அங்கு இதை அடையாளப்படுத்தப்படுத்த களம் ஏற்பட்டுள்ளது.
 
1977ம் ஆண்டு கலவரத்தின் போது தமிழர் என்ற ரீதியில் கண்டியிலே தமது வீடு எரிக்கப்பட்டதாகவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.  இப்படியான கலவரங்களின் பின்னர், தெற்கில் வாழ்ந்த  வசதி படைத்த தமிழர்கள் தமிழகத்துக்கு சென்று அடைக்கலம் புகுந்தனர் அல்லது மேற்கு நாடுகளுக்கு  சென்று குடியேறினர்.  வசதியற்ற ஏழை மலையக தமிழர்கள் வடக்கில் சென்று குடியேறினார்கள். இன்று வடக்கிலே தங்கள் பிள்ளைகளை இழந்து, "அவர்கள் இருக்கிறார்களா, இல்லையா, இருந்தால் அவர்கள் எங்கே  இருக்கிறார்கள்" என கதறியழும் அந்த தாய்மார்களில் சரிபாதியினர் தெற்கில் இருந்து சென்று வடக்கில் குடியேறிய  மலையக தமிழர்கள் என்பதை முரளிதரன் அறிந்து கொள்ளவேண்டும். இவர்களைத்தான் முரளிதரன் கொச்சைபடுத்தியுள்ளார். வீடுகள் எரிக்கப்படுவது என்பது வேறு, பெற்ற பிள்ளைகள் கடத்தப்படுவது என்பது வேறு. இது முரளிதரனுக்கு புரியவில்லை.
 
கிரிக்கட் விளையாட்டிலும், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சர்ச்சைக்குரியவராக இருந்த இந்த கிரிக்கட் வீரருக்கு, மனித உரிமைகள் பற்றிய எந்தவித தெளிவும், விளக்கமும் இல்லை. இந்நிலையில்  எவரையோ திருப்திபடுத்த தனக்கு விளங்காத விடயங்கள் தொடர்பில் இவர் முட்டாள்தனமாக கருத்து கூறியிருக்கிறார்.
 
 
1995ம், 1996ம் வருடங்களில் ஆஸ்திரேலிய நடுவர்கள்  டெரலும், எமர்சனும், முரளிதரனின் பந்துவீச்சை குற்றம் சாட்டியபோது அது தொடர்பில் சர்வதேச கிரிக்கட் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரிக்கட் உலகம் கோரியது. அதையடுத்து சர்வதேச கிரிக்கட் சபை ஒரு விற்பன்னர்களின் குழுவை நியமித்து முரளிதரனின் பந்துவிச்சை பரிசீலனை செய்து தீர்ப்பு வழங்கியதை முரளிதரனுக்கு நான்  ஞாபகப்படுத்துகிறேன். இந்த பாரிய குற்றச்சாட்டு தொடர்பில் கிரிக்கட் பற்றி எந்தவித அறிவும் இல்லாத அரசியல்வாதிகள் கருத்து கூறுவதும், அதைவிட இதுபற்றி விசாரிக்காமலேயே  தீர்ப்பு கூறுவதும் எந்த அளவுக்கு பொறுத்த மற்றதாக இருந்ததோ, அதைவிட இன்று கிரிக்கட் வீரர் முரளிதரன், இந்நாட்டில் காணமல்போனவர்களின் மனித உரிமை விவகாரம் தொடர்பில் கருத்து கூறுவது முட்டாள்தனமானது.  இவருக்கு இவரது அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட ஆணைகுழு பற்றியும் தெரியவில்லை; ஐநா மனித  உரிமை ஆணைக்குழு பற்றியும் தெரியவில்லை. 

 

  • கருத்துக்கள உறவுகள்

45 நிமிட நேர்காணலில் 3 நிமிடம் மட்டுமே போட்டு தன்னை ஏமாத்தி விட்டனராம் என்றும் குமுறுகிறார் முரளி.

 

சிங்களவர்கள் அவரைத் தூக்கிக் கொண்டாட, மனோ கணேசன், உட்பட்ட உலகத் தமிழர்கள் கண்டனம் தெரிவிக்க, தமிழகம் போகமுடியாதே, 'ஆகா, வட போச்சே' நிலைமையில் அரண்டு போய் இருக்கிறார் முரளி.

 

இதைத்தான் சொல்வது நாய்க்கு ஏன் போர்த் தேங்காய் எண்டு!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்கும் உரிமை முரளீதரனுக்கு உண்டு – டேவிட் கமரூன்

 

 

muralitharan%20&%20David%20cameron_CI.jp

நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்கும் உரிமை நட்சத்திர கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரனுக்கு உண்டு என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலங்கையர் என்ற ரீதியில் முரளீதரன் அவ்வாறு நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை தொடர்பில் நடைபெற்ற விவாத்தின் போது சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது பிரதமர் கமரூன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம், சமாதானம் போன்றவற்றில் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக முரளீதரன் தெரிவித்திருந்தார்.

முரளீதரனின் அறக்கட்டளை முக்கியமான தொண்டாற்றி வருவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கை அமர்வுகளில் பங்கேற்று கேள்வி எழுப்பியது சரியானது என்றே முரளீதரன் கருதினார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையர் என்ற ரீதியில் நாட்டின் நன்மதிப்பை பாதுகாத்துக் கொள்ள முரளீதரன் முயற்சித்தார் எனவும், அது அவரது உரிமை எனவும் பிரதமர் கமரூன் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99211/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை இப்போதாவது தனது சொந்த முகத்தைக் காட்டினார் முத்தையா முரளிதரன்  

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்தக் கேள்வியைத் தமிழ்க்கூட்டமைப்புக் கேட்டிருக்க வேண்டும்? அவர்களைத் திட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஆயினும், எப்படியான அரசியல், எப்படி இலாவகமான வார்த்தைப் பிரயோகங்கள் என்பதில் ஒரு தெளிவு என்னமும் இருப்பதாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் கட்சிக்கென்று ஒரு பேச்சாளர் கூட வைத்துக் கொள்ளவில்லை. அப்படிக் கட்சியின் பேச்சாளர் இருப்பின், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினைச்சொல்கின்ற குழப்பம் கூட ஏற்படாது.

எல்லா விடயங்களுக்கும் சிங்களவனைக் கண்டு பயந்தால் எப்படி? புலிகளைப் பற்றிக் கதைக்க வேண்டாம். பொதுமக்களைப் பற்றியாவது கதைக்க வேண்டாமா?

வெறுமன அரசியல் வேண்டாம் நான் ஒரு விளையாட்டுவீரன் என்று சொல்லியிருந்தால் மரியாதையாய்  இருந்திருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்தக் கேள்வியைத் தமிழ்க்கூட்டமைப்புக் கேட்டிருக்க வேண்டும்? அவர்களைத் திட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஆயினும், எப்படியான அரசியல், எப்படி இலாவகமான வார்த்தைப் பிரயோகங்கள் என்பதில் ஒரு தெளிவு என்னமும் இருப்பதாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் கட்சிக்கென்று ஒரு பேச்சாளர் கூட வைத்துக் கொள்ளவில்லை. அப்படிக் கட்சியின் பேச்சாளர் இருப்பின், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினைச்சொல்கின்ற குழப்பம் கூட ஏற்படாது.

எல்லா விடயங்களுக்கும் சிங்களவனைக் கண்டு பயந்தால் எப்படி? புலிகளைப் பற்றிக் கதைக்க வேண்டாம். பொதுமக்களைப் பற்றியாவது கதைக்க வேண்டாமா?

 

கட்சிக்கான உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஸ் பிறேமசந்திரன் என நினைக்கிறேன். 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் அரசியல் கதைக்கச் சொல்லி... எவனாவது கேட்டானா?
நாய்கேன்.... போர்த் தேங்காய்.
மனோ கணேசனின்... விரிவான கண்டனம் வரவேற்கத் தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் சுமந்திரன் போன்றோர் முந்திரிக்கொட்டைகளாக கருத்து தெரிவிப்பது கட்சியின் கட்டுக்கோப்பை கேள்விக்குறி ஆக்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குள்ளேயே முரளியைத் திட்டிக் கொண்டிருக்காமல், இதைப் பற்றி ஒரு தெளிவான கடிதம் ஒன்றை நாங்கள் பிரித்தானியாப் பிரதமருக்கும், இதர ஊடகங்களுக்கும் அனுப்பவது நன்று என நினைக்கின்றேன்.

--------------------------

20, 30 பெற்றோருக்காக என்று முரளி ஒரு வார்த்தை பாவித்தான்.ஆனால் உண்மையில் அப்படி 4, தமிழர்களை இணைத்து வைத்துக் கொண்டு தமிழர்கள் பற்றிக் கதைத்தது முரளி தான். அந்தப் பெற்றோர்கள் பற்றிக் கதைக்க வேண்டாம் என்பது பற்றிச் சொன்ன முரளி எப்படி, தன்னுடன் இருந்த தமிழர்களை வைத்து அதை நியாயம் செய்ய முடியும்

அப்படிச் சிறிலங்கா அரசு உண்மையாக இருந்தால், அதைப் பற்றி விசாரிப்பதில் என்ன தயக்கம்? அந்த மக்களின் பிரச்சனைளைத் தீர்ப்பதில் என்ன குறை சிறிலங்கா அரசு பெற்று விடப் போகின்றது?

அடிப்படையில் முரளி ஏன் இப்படிக் கதைக்கின்றான் என்பதற்கான காரணங்களையும் சொல்ல வேண்டும். அவர் குடும்பம் பெரிய வர்த்தகர்கள். அப்படி அவன் கதைக்கவில்லை எனில் அவனது தொழிலுக்கோ, அல்லது அவரது குடும்பத்தினருக்கோ அழுத்தங்களைச் சிங்கள அரசு பிரயோகிக்கும். தவிர, அவன் கற்றது , வளர்ந்தது என்பது எல்லாம் சிங்கள மக்களோடு.

சிங்கள அரசின் இன அழிப்பு என்பது வெறுமனே உயிர் அழிப்பது மட்டும் கிடையது, தமிழர்களை சிங்களவர்களாக இனம் மாற்றும் செயல்கள் பற்றி விபரிக்க வேண்டும். மலையகத்தில் உள்ள தமிழர்களின் பாடசாலைகளில் சிங்கள ஆசிரியர்கள் நியமித்தல்,

முரளி போன்ற ஒருசிலர் அனைத்துத் தமிழர்களின் பிரதிநிதிஅல்ல. அவர் வீட்டில் துன்பம் நிகழவில்லை என்பதற்காக, துன்பம் நிகழ்ந்தவர்கள் பற்றிக் கவலைப்படாது இருக்க முடியாது. பிரித்தானியாவில் 80 வீத மக்கள் சந்தோமாக இருக்கின்றார்கள் என்பதற்காக, பிரித்தானியா அரசு மிகுதி 20 வீத மக்களைப் பற்றிக் கவலைப்படமாட்டாதா? முரளி சொன்னது அப்பட்டமான சுயநலம்.

உதாரணங்கள் காட்டும்போது, குறித்த நாட்டின் பார்வையில் இருந்து சொல்ல வேண்டும். பிரித்தானியாவின் எதிரிகளை எதிரிகளாகவே சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு பிரித்தானியா மக்கள் சிலரை உள்வாங்கி, அல்கெய்தா நாசகரத் தாக்குதல் செய்ததை, மகிந்த முரளியை வாங்கியதோடு சொல்ல வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்குள்ளேயே முரளியைத் திட்டிக் கொண்டிருக்காமல், இதைப் பற்றி ஒரு தெளிவான கடிதம் ஒன்றை நாங்கள் பிரித்தானியாப் பிரதமருக்கும், இதர ஊடகங்களுக்கும் அனுப்பவது நன்று என நினைக்கின்றேன். -முற்றிலும் சரி. சீக்கிரம் செய்யுங்கள். யாழிலும் பதிவேற்றம் செய்யுங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வெறுமன அரசியல் வேண்டாம் நான் ஒரு விளையாட்டுவீரன் என்று சொல்லியிருந்தால் மரியாதையாய்  இருந்திருக்கலாம் .

 

முரளிதருனுக்கு சொல்லிகொடுக்க உங்களுக்கு தெரிகிறது ............
அடுத்தவனின் கஷ்டம் மட்டும் தெரியவில்லையா??
  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் என்றும்  தன் புகழுக்காகவும் பெருமைக்காகவும்
தமிழர்களின் முகத்தில் கரியைப்பூசுபவர்.

சிங்களம் திட்டமிட்டவகையில்  இவரைப் போன்றவர்களைப் பயன்படுத்திக்  கொள்கின்றது.
கூட்டமைப்பு கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடிக்கின்றது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.