Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Tesco PLC நிறுவனத்துடன் இணைந்து தமது உலகளாவிய பிரசன்னத்தை விஸ்தரிக்கும் MD

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
MdLogo.JPG
MD வர்த்தகநாமத்தின் கீழ் இயற்கை பழச்சாறுகள், ஜாம், சோஸ், கோர்டியல்கள் மற்றும் பிற தயாரிப்புகளை விநியோகித்து வரும் இலங்கையின் முதற்தர விநியோகஸ்தரும், ஏற்றுமதியாளரும் மற்றும் உற்பத்தியாளருமான லங்கா கெனரிஸ் (Lanka Canneries) நிறுவனமானது தமது உலகளாவிய பிரசன்னத்தை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில், பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்கோ சூப்பர் மார்கெட்டுகளில் தமது தயாரிப்புக்களை விற்பனை செய்யும் வகையில் உலகப்; புகழ்பெற்ற சில்லறை வர்த்தக வலையமைப்பைக் கொண்ட டெஸ்கோ பிஎல்சி UK (Tesco PLC UK) நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
 
உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டெஸ்கோ நிறுவனமானது 12 நாடுகளில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களை கொண்டுள்ளதுடன், ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு தமது சேவைகளை வழங்கி வருகின்றது. 1919ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டெஸ்கோ நிறுவனமானது தரமான மற்றும் பல்வேறு வகையான தயாரிப்புக்கள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஷொப்பிங் அனுபவத்தை வழங்கி உலகளவில் முன்னணியில் திகழ்கிறது.
 
டெஸ்கோ சூப்பர் மார்கெட்டுகளில் பிரசித்தி பெற்ற பழக்கலவை, அன்னாசி மற்றும் விளாம்பழச் சுவை கொண்ட MD ஜாம் வகைகளும், MD இன் புகழ்பெற்ற தயாரிப்புகளான extra hot chillie sauce மற்றும் green chillie sauce போன்ற தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படுகின்றன. டெஸ்கோ சூப்பர் மார்கெட்டுகளில் தற்போது MD கட்டச் சம்பல், மாழ்பழ சட்னி மற்றும் விளாம்பழ நெக்டா பழச்சாறுகள் போன்றனவும் விற்பனை செய்யப்படுகின்றன. 
 
மேலும் எதிர்காலத்தில் ஷர்பட் சிரப் மற்றும் நெல்லி கோர்டியல் போன்ற MD கோர்டியல் வகைகளும் தேங்காய் வினாகிரி மற்றும் கித்துல் பாகு போன்ற தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.
 
இந்த அபிவிருத்தி குறித்து லங்கா கெனரிஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.எஃப்.தோஸா கருத்து தெரிவிக்கையில், 'உலகளாவிய சில்லறை வலையமைப்பினை கொண்ட டெஸ்கோ பிஎல்சி போன்ற நிறுவனத்தில் எமது தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உயர்தரத்துடன் நாம் உற்பத்தி செய்யும் தயாரிப்புக்களின் சுவையை தற்போது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பாவனையாளர்களும் அனுபவிக்க முடியும். இது எம்மை இலங்கையின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானங்கள் உற்பத்தியாளராக எம்மை முன்னேற்ற வழிவகுக்கும்' என்றார். 
 
லங்கா கெனரிஸ் நிறுவனத்தின் MD வர்த்தகநாமமானது பழங்கள் மற்றும் காய்கறி பதப்படுத்தல் துறையில் 80 வருட அனுபவத்தை கொண்டுள்ளது. இலங்கை சந்தையில் MD ஜாம், கோர்டியல் மற்றும் சோஸ் வகைகளுக்கு என தனித்துவமான இடத்தை கொண்டுள்ளது. MD தயாரிப்புக்கள் தற்போது USA, UK, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, மாலைதீவு மற்றும் கனடா உள்ளிட்ட 35 நாடுகளுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. MD ஆனது SLS சான்றிதழ், ISO 22,000 மற்றும் HACCP சான்றிதழ்களை பெற்றுள்ளது.
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

Tesco இலங்கையில் sourcing centre திறந்துள்ளது. சிங்கள நிறுவனங்கள், அதன் ஊடாக பொருட்களை அனுப்புகிறார்கள். 

சாதாரண மார்கெற்றிங்கே தெரியாதவர்கள், Tesco வுடன் இனைவதில் என்ன பிரியோசனம்?

பிரிட்டனில் தமிழர்கள் அதிகம். அவர்கள் கடைகளும் அதிகம். அங்கே விற்கும் விலையிலும் பார்க்க அதிக விலையில் Tesco வில் விற்றால் யார் வாங்குவார்கள்?

Asda எனும் இன்னுமோர் பெரும் அங்காடியில் அதிக விலையில் சூரியா மிளகாய்த்தூள், சீனீசம்பல் பார்த்தேன். அடுத்தவாரம் clearance பகுதியில், discount விலையில் பார்த்தேன். வாங்கினேன். அவர்கள், இந்தியர் நிறுவனம் ஊடாக கொடுத்த படியால், அவர்கள் அதிக விலை போட்டு விட்டார்களாம்.

அவ்வளவுதான். இனி சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை.

முயல்வது நன்று, ஆனால் சரியான Strategy ம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

சூரியா மிளகாய்த்தூள் நிரு வின் ஏக போக இறக்குமதி(Monopoly) பொருள். சூரியா தயாரிப்புகள் இங்கு வரமுன்னரே kingsமிளகாய்த்தூள்க்கு எதிராக நிருவின் மிளகாய்த்தூள் போட்டியில் நிற்க முடியாமால் ரெடிமேட் ஆக நிருவால் இந்தியாவில் இருந்து ஏகபோக இறக்குமதி உரிமையை பெற்று ஐரோப்பாவில்  விநியோகம் செய்யபட்டது .

2013 ல் தமிழ்கடைகளை விட tesco வில் niru தயாரிப்புகள் விலை குறைவு இதை தமிழ் பெரிய கடைகள் முற்றாக niru தயாரிப்புகளை நிராகரிக்க தொடங்க niru இறங்கி வந்தது md க்கு முதல் niru தமிழருடையது .தமிழர்கள் அதிகமுள்ள இடங்களில் உள்ள tesco வில் இன்றும் niru ,trs போன்ற தயாரிப்புகளை காணலாம் .நீங்கள் clearanceல்  எடுத்தது அவர்களுடைய உண்மையான விற்பனை விலையாக இருக்கலாம் .

கொசுறு . சூரிய மிளகாய்த்தூள் பெற்ற வெற்றியை தொடர்ந்து சூர்யா கொம்பனி தூள் தவிர்ந்த அவர்களின் மற்றைய தயாரிப்புகளை லண்டனில் அறிமுகபடுத்தி மொக்கை அடி வேண்டுவதும் நடக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா புறக்கணி சொறிலங்கா என்னாச்சு?

ஊருக்குத்தான்.....

Exclusive என்று வரவேண்டும். Monopoly வேறு அர்த்தம் அல்லவா?

நான் வாங்கியது சீனி சம்பல் £1. தமிழ் கடைகளில் £2.69.

சூரியா இந்திய தயாரிப்பு. சப் காண்ட்ராக் கொடுத்து அவர்கள் தடை செய்யப்பட்ட டை கலந்து இங்கே இரண்டு தடவை கண்டைனர் தடுக்கப் பட்டதாக கேள்வி. அதனால் நான் வாங்குவது இல்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா புறக்கணி சொறிலங்கா என்னாச்சு?

ஊருக்குத்தான்.....

புறக்கணி ஸ்ரீ லங்கா, kings வீழ்த்த சூரியா எடுத்த ஆயுதம் என்றும் கேள்வி...:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுடையது monopoly business தான் ஒரு பிராண்டை உருவாக்கி அவர்கள் எண்ணப்படி விலையை நிர்ணயிப்பது,மற்றயவர்கள் யாரும் அந்த பிரண்ட் பெயரோ அல்லது அந்த பெயரில் இறக்குமதி செய்யவோ முடியாது இங்கு கூட சூரிய கம்பனியால் லண்டனில் சூர்யா மிளகாய்த்தூள் விற்க முடியாது .monopoly business இதில் விண்டோவ்ஸ் ம் அடக்கம் .oligopoly market என்ன என்பது நீங்கள் விளக்குவீர்கள் என நம்புறன் .

கிங்க்ஸ் ன் விலை உடன் பார்க்கையில் உணவுசாலைகளுக்கு சூர்யா மிக மலிவான ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணி ஸ்ரீ லங்கா, kings வீழ்த்த சூரியா எடுத்த ஆயுதம் என்றும் கேள்வி...:rolleyes:

இது பிழையான தகவல்ஆக இருக்கலாம் .

king ன் லைன் வேறு .

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,

Monopoly என்பது தனிக்காட்டு ராஜா போன்றது. சூரியா மட்டுமே போட்டியில்லாது மிளகாய்த்தூள் செய்தால் Monopoly. ஆனால், Kings, Leela என சந்தையில் பல இருப்பதால் monopoly கிடையாது. சந்தையில், சில போட்டியாளர்கள், ஒருவர மட்டுமே (சூர்யா?) முன்னிலையில் என்றால் Oligopoly.

இங்கே இருப்பது Oligopoly. ஆனால் யார் முன்னிலை என தெரியவில்லை.

ஆனால் சூரியாவின் மிளகாய்த்தூள், UK விநியோகத்தர், பெருமாள் மட்டுமே ஆயின் exclusive distributor.

மேலும், Windows தனது monopoly நிலையை, ஆப்பிள், Unix போன்ற போட்டியாளர் வரவால் இழந்து விட்டது.

இன்னுமோர் வகையில் பார்ப்போமா? இலண்டணுக்கும், பாரிசுக்கும் ரயில் விடுவதில் ஈரோ ஸரார் Monopoly. விமானசேவையில், Easyjet, BA, Air France, Ryanair இருப்பதால் அங்கே monopoly இல்லை.

ஈரோ ஸரார் monopoly ஆயினும், மக்களுக்கு, விமானம், Ferry என பல choices இருப்பதால், தான் நினைத்த விலை அடிக்க முடியாது.

நீங்கள் சொல்ல வருவதில் எனக்குப் புரிவது என்னவெனில், BMW brand காரில் என்ஜினை அகற்றி, பென்ஸ் brand என்ஜினை போட்டு BMW என விற்க முயல்வது. அது மோசடிக் குற்றம். (Copy right & Brand infringement )

சரி, ஒரு மாதம் இங்கே இலண்டனில் மட்டும் எவ்வளவு 900g மிளகாய்த்தூள் பக்கற் விற்கிறது என ஒரு அனுமானம் சொல்லுங்கள் பார்க்கலாம்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இது பிழையான தகவல்ஆக இருக்கலாம் .

king ன் லைன் வேறு .

தெரியும், வேடிக்கைக்காக சொன்னேன்.!

  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய்த்தூள் அளவா? அண்ணளவாக நான்கு நாப்பதடி கப்பல் சரக்கு கொண்டேனர் சிலவேளைகளில் சமர் லீவு, விண்டர் ,ஆடிமாதம் ஆகிய நேரங்களில் குறையும் .

  • கருத்துக்கள உறவுகள்

தனிய நிரு ,கிங்ஸ் மட்டும் அல்ல காவேரி.nsr(இதுக்கு ஒரு ரசிகர் மன்றமே உள்ளது ஆனால் குறிப்பிட்ட அளவே வரும்  ),கலைமகள் ,வாணி ,சுவை யாழினி இவ்வளவும் மார்கெட்டில் தனி ராஜாங்கம் இதை விட ஹரின் ,லீலா,சக்தி ,சரோன் முட்டி மோதி முடியாமல் போன லிஸ்ட்.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் பிக்கல் பிடுங்கல் எண்டுபோட்டுத்தான் நம்ம ஆக்கள் சிலர் இப்ப மிளகாய்த் தூளில் இருக்கும், மிளகாயை தூக்கிப் போட்டு தனியே தூளை மட்டும் கடத்தி நல்ல சோக்கா வாழீனம் போல :)

  • கருத்துக்கள உறவுகள்

தனிய நிரு ,கிங்ஸ் மட்டும் அல்ல காவேரி.nsr(இதுக்கு ஒரு ரசிகர் மன்றமே உள்ளது ஆனால் குறிப்பிட்ட அளவே வரும்  ),கலைமகள் ,வாணி ,சுவை யாழினி இவ்வளவும் மார்கெட்டில் தனி ராஜாங்கம் இதை விட ஹரின் ,லீலா,சக்தி ,சரோன் முட்டி மோதி முடியாமல் போன லிஸ்ட்.

மிளகாய்த்தூளுக்கு ரசிகர் மன்றமா பெருமாள்? 

  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய்த்தூள் அளவா? அண்ணளவாக நான்கு நாப்பதடி கப்பல் சரக்கு கொண்டேனர் சிலவேளைகளில் சமர் லீவு, விண்டர் ,ஆடிமாதம் ஆகிய நேரங்களில் குறையும் .

அப்படி எண்டால், மாதம், உலகெங்கும் 200,000 பாக்கெற்றுகள் என்று சொல்லலாமா?

சரி நாதமுனி பிராண்டை, எப்படி நம்பர் ஒன் ஆக்கலாம் என்று Tips தாருங்கள்..

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம் ஒரு Tips இந்த மிளகாய்த்தூள் வியாபாரத்தில் உள்ள முதலாளிகள் இருவரும் தற்போது இலங்கையில் இல்லை அவுஸில். இரண்டு கொண்டேனர் uk வந்தால் ஒரு கொண்டேனர் காசு payment அவுஸ்க்கு அடுத்த கொண்டேனர் சொரிலங்கவுக்கு 2010 அளவில் அவர்களின் உற்பத்தி புள்ளியை வடக்கிற்கு மாற்றுமாறு சிலர் கேட்டுக்கொண்டனர் மூன இருவரும் மறுத்து விட்டனர் .ஒரு 900g போத்தில் uk அடக்க விலை 2.10 மேல் போவதுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது .ஆனால் இவர்களின் அடக்கவிலை 4.25 என்றால் இவர்களின் லாபம் எவ்வளவு என காண்க மாதம் ஒரு நாப்பதடி கொண்டேனர் கட்டயாம் தேவை uk மாத்திரம் இங்கு நான் பெயர் சொல்லவில்லை.

இருக்க மீன் ஏற்றுமதியில் சொறிலங்கா ஐரோப்பிய யனியன் இடம் மாட்டுபட்ட வரலாறு தெரியுமா வடிவேலு கொண்டைபோட்டு அடி வாங்கின கதை .

  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய்த்தூளுக்கு ரசிகர் மன்றமா பெருமாள்? 

பல வீட்டு தலைவிகளின்  நம்பிக்கையான பிராண்ட் என்பதை சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம் ஒரு Tips இந்த மிளகாய்த்தூள் வியாபாரத்தில் உள்ள முதலாளிகள் இருவரும் தற்போது இலங்கையில் இல்லை அவுஸில். இரண்டு கொண்டேனர் uk வந்தால் ஒரு கொண்டேனர் காசு payment அவுஸ்க்கு அடுத்த கொண்டேனர் சொரிலங்கவுக்கு 2010 அளவில் அவர்களின் உற்பத்தி புள்ளியை வடக்கிற்கு மாற்றுமாறு சிலர் கேட்டுக்கொண்டனர் மூன இருவரும் மறுத்து விட்டனர் .ஒரு 900g போத்தில் uk அடக்க விலை 2.10 மேல் போவதுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது .ஆனால் இவர்களின் அடக்கவிலை 4.25 என்றால் இவர்களின் லாபம் எவ்வளவு என காண்க மாதம் ஒரு நாப்பதடி கொண்டேனர் கட்டயாம் தேவை uk மாத்திரம் இங்கு நான் பெயர் சொல்லவில்லை.

இருக்க மீன் ஏற்றுமதியில் சொறிலங்கா ஐரோப்பிய யனியன் இடம் மாட்டுபட்ட வரலாறு தெரியுமா வடிவேலு கொண்டைபோட்டு அடி வாங்கின கதை .

சொல்லுங்க, மீன் கதையை?

சரி, அவுசில் என்கிறீர்கள், நிரு கனடாக் காரர். அவரது உறவினர் லண்டணில், சூரியாக்காரர் என்று கேள்விப்பட்டேன். தவறானதா?

அப்ப ஒஸ்லோவில நான் வாங்கிற "றபீனா"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.