Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தினத்தை தமிழர்கள்மறந்துவிட வேண்டும்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மாவீரர் தினத்தினை அனுஷ்டித்தால் வடக்கின் தமிழர்களையும் புலிகளென்றே கருத வேண்டிவரும். மாவீரர் தினம் என்றவொன்றினை மறப்பதே தமிழர்களுக்கு நல்லதென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
 
அரசாங்கம் முட்டாள்தனமாக செயற்படக்கூடாது. தீவிரவாதத்தினை மீண்டும் உருவாக்காத வகையில் செயற்படுவதே நாட்டிற்கு நல்லதெனவும் அவ் இயக்கம் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கருத்துத் தெரிவிக்கையில்,
 
தீவிரவாதிகளுக்கென ஓர் தினத்தினை இலங்கையில் அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முப்பது வருடகால யுத்தத்தினை நிறைவிற்குக் கொண்டுவந்த எமது இராணுவத்தினரை கொச்சைப்படுத்தவே கூடாது. 
நாட்டிற்கு நன்மை செய்தவர்களுக்கு தினம் அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் பிரபாகரன் மற்றும் ஏனைய புறத் தீவிரவாதிகளுக்கு ஒரு தினத்தினை அனுஷ்டிப்பதனால் இலங்கையில் இன்றும் விடுதலைப் புலிகள் வாழ்கின்றனர் என்பதையே வெளிப்படுத்துகின்றது. வடக்கில் உள்ள தமிழர்கள் விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தினை அனுஷ்டித்தால் வடக்கு தமிழர்களையும் புலிகளென்றே கருதவேண்டும். தீவிரவாதிகளுக்கு ஆதரவான நினைவஞ்சலிகளை தீவிரவாதிகள் மட்டுமே அனுஷ்டிப்பர். நாட்டை நேசிக்கும் எவரும் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள்.
 
இந்த நாட்டில் தமிழர்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ வேண்டுமாயின் மாவீரர் தினத்தினை மறந்துவிட வேண்டும். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தவறினை விடக்கூடாது. சர்வதேசத்தின் பேச்சிற்கு பயந்தோ அல்லது சலுகைகளுக்கு அஞ்சியோ இந்த நாட்டினை இழந்துவிடக்கூடாது. இந்த நாட்டில் சிங்கள இனத்தவரே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அவர்களின் நிலையினை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும்.
 
வட மாகாண சபைத் தேர்தலினை நடத்தியமையே அரசாங்கம் செய்த பெரிய தவறு. பிரிவினையினை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தினை வடக்குத் தேர்தலின் மூலம் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலம்பெயர் தமிழர்களுடனும் சர்வதேச சக்திகளுடனும் ஒன்றிணைந்து அரசாங்கத்தினை கவிழ்க்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது. இதற்கு இன்று ஐக்கிய தேசியக் கட்சியும் சில அமைப்புக்களும் துணை போகின்றன. இதனை ஜனாதிபதி புரிந்து கொள்ளவேண்டும்.
 
விடுதலைப் புலிகளின் தீவிரவாத யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்ததோடு நாட்டின் பாதுகாப்பினைக் குறைத்தால் மீண்டுமொரு யுத்தம் எவ்விதத்திலாவது ஆரம்பிக்கும். இதற்கான சந்தர்ப்பத்தினை அரசாங்கம் ஏற்படுத்திவிட்டுவிடக் கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்
gundasa-Amarasekara-seithy-20131024.jpg

மாவீரர் தினத்தினை அனுஷ்டித்தால் வடக்கின் தமிழர்களையும் புலிகளென்றே கருத வேண்டிவரும். மாவீரர் தினம் என்றவொன்றினை மறப்பதே தமிழர்களுக்கு நல்லதென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் முட்டாள்தனமாக செயற்படக்கூடாது. தீவிரவாதத்தினை மீண்டும் உருவாக்காத வகையில் செயற்படுவதே நாட்டிற்கு நல்லதெனவும் அவ் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கருத்துத் தெரிவிக்கையில், தீவிரவாதிகளுக்கென ஓர் தினத்தினை இலங்கையில் அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முப்பது வருடகால யுத்தத்தினை நிறைவிற்குக் கொண்டுவந்த எமது இராணுவத்தினரை கொச்சைப்படுத்தவே கூடாது. நாட்டிற்கு நன்மை செய்தவர்களுக்கு தினம் அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் பிரபாகரன் மற்றும் ஏனைய புறத் தீவிரவாதிகளுக்கு ஒரு தினத்தினை அனுஷ்டிப்பதனால் இலங்கையில் இன்றும் விடுதலைப் புலிகள் வாழ்கின்றனர் என்பதையே வெளிப்படுத்துகின்றது.

  

வடக்கில் உள்ள தமிழர்கள் விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தினை அனுஷ்டித்தால் வடக்கு தமிழர்களையும் புலிகளென்றே கருதவேண்டும். தீவிரவாதிகளுக்கு ஆதரவான நினைவஞ்சலிகளை தீவிரவாதிகள் மட்டுமே அனுஷ்டிப்பர். நாட்டை நேசிக்கும் எவரும் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள். இந்த நாட்டில் தமிழர்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ வேண்டுமாயின் மாவீரர் தினத்தினை மறந்துவிட வேண்டும். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தவறினை விடக்கூடாது. சர்வதேசத்தின் பேச்சிற்கு பயந்தோ அல்லது சலுகைகளுக்கு அஞ்சியோ இந்த நாட்டினை இழந்துவிடக்கூடாது. இந்த நாட்டில் சிங்கள இனத்தவரே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அவர்களின் நிலையினை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும்.

வட மாகாண சபைத் தேர்தலினை நடத்தியமையே அரசாங்கம் செய்த பெரிய தவறு. பிரிவினையினை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தினை வடக்குத் தேர்தலின் மூலம் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலம்பெயர் தமிழர்களுடனும் சர்வதேச சக்திகளுடனும் ஒன்றிணைந்து அரசாங்கத்தினை கவிழ்க்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றனர். இதற்கு இன்று ஐக்கிய தேசியக் கட்சியும் சில அமைப்புக்களும் துணை போகின்றன. இதனை ஜனாதிபதி புரிந்து கொள்ளவேண்டும்.

விடுதலைப் புலிகளின் தீவிரவாத யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்ததோடு நாட்டின் பாதுகாப்பினைக் குறைத்தால் மீண்டுமொரு யுத்தம் எவ்விதத்திலாவது ஆரம்பிக்கும். இதற்கான சந்தர்ப்பத்தினை அரசாங்கம் ஏற்படுத்திவிட்டுவிடக் கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97786&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

உவரையெல்லாம் மனிசரெண்டு கணக்கிலயெடுத்து அவரின்ரை அறிக்கையைப் போய் கருத்திலெடுக்கிறதுக்கு நமக்கு வேறை வேலையில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான இனவாதிகளால் தான் தமிழர் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு செல்ல வேண்டி இருந்தது.

உவரையெல்லாம் மனிசரெண்டு கணக்கிலயெடுத்து அவரின்ரை அறிக்கையைப் போய் கருத்திலெடுக்கிறதுக்கு நமக்கு வேறை வேலையில்லையே?

இது பேச்சு...

உவரையெல்லாம் மனிசரெண்டு கணக்கிலயெடுத்து அவரின்ரை அறிக்கையைப் போய் கருத்திலெடுக்கிறதுக்கு நமக்கு வேறை வேலையில்லையே?

 

இந்த செய்தியை வேலை மினக்கெட்டு படிக்க வந்த எனக்கு இதை விட நீங்கள் செருப்பை கழட்டி அடிச்சிருக்கலாம்...  :(

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் தூக்குத் தண்டனைபெற்ற கைதியைக்கூட நினைவுகூர்ந்து அவனது ஆத்மசாந்திக்காக அஞ்சலி செலுத்த எவ்வித தடையுமில்லை. தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்போதே அவனுக்காகப் பிரார்த்தனை செய்யப்படுகிறது. ஆனால் நாதியற்ற தமிழனுக்கு மட்டும் ஓர் நினைவிடத்தை ஏற்படுத்த யாரும் விடுவதாயில்லை.  முள்ளிவாய்க்காலில் நிராயுதபாணிகளாக நின்று உலகிடமும், ஐநாவிடமும் அபயக்கரம் நீட்டியும் கைவிடப்பட்ட எமது உறவுகள் இறுதியில் அரசின் மல்ட்டி பரல் ஆட்டிலறிகளால் கொத்துக்கொத்தாய்க் கொய்தெடுக்கப்பட்டனர்.  அவர்களுக்காக ஓர் நினைவிடத்தைத் தனிப்பட்ட ரீதியிலாவது அமைத்துவிடத் தமிழகத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்குத் தமிழின விரோதிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர். கட்டப்பட்ட நினைவிடத்தை இடித்துவிடவும் முயல்கின்றனர். உலகில் தர்மம்; வாழ்கிறது என்றால் தமிழனுக்கு மட்டும் ஏன் இறந்த பிறகுகூட அந்தத் தர்மமும் மனிதாபிமானமும் கிடைக்காமலிருக்கிறது.  தன்னோடு போர்புரிந்து இறந்த எல்லாளனுக்குத் துட்டகைமுனு நினைவிடம் அமைத்து அந்த வழியால் போவோர் எவரும் சந்தடி செய்யாமல் தலைகுனிந்து செல்லவேண்டுமென்று கட்டளையிட்டதாக மகாவம்சம் கூறுகிறது.  எடுத்ததெற்கெல்லாம் மகாவம்சத்தையும், புத்த தர்மத்தையும் துட்டகைமுனுவையும் தூக்கிப்பிடிக்கும் பிரிவேனாக்களுக்கும், பலசேனாக்களுக்கும், சிங்கள ராவயக்களுக்கும், மற்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கங்களுக்கும், அரசுக்கும் இந்த நாகரீகமும் பண்பாடும் ஏன் தெரியாமலிருக்கிறது என்பது புரியவில்லை.

இறந்த தனது சொந்தத்தைச் சுற்றத்தை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த வேண்டியது ஒவ்வொரு மனிதனதும் தார்மீகக் கடமை, அது அவனது பிறப்புரிமை.  கொல்லப்பட்டவர்களை நினைந்து கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்த அவர்களது மகனையோ மகளையோ மனைவியையோ தாயையோ தந்தையையோ அனுமதியாது அந்தக் கல்லறைகளையே பிடுங்கியெறிந்து கொடுங்கோலோச்சும் ஒரு மனிதம் செத்துப்போன நாட்டிற்தான் பொதுநலவாயம் தனது உச்சி மகாநாட்டை நடாத்தியது. இந்தியா அதற்குத் துணைபோனது.  ஏக்கப் பெருமூச்சோடு தமிழன் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்  

மாவீரர்களே மரணித்த எம் உறவுகளே!

ஆட்சிப்பலத்தால் ஆயுத மேலாண்மையினால்;
வீழ்ச்சியடைந்து விழிமூடிக் கொண்டீர்கள்
ஏழ் கோடிப் பேர் கொண்ட எம் தமிழர் தேசியம் தன்
வாழ்வில் அறியாத வரலாற்றுத் தோல்விபெற
தாழ்த்தித் தரங்குறைத்துத் தரணியிலே வீழ்த்துதற்கு
உங்கள் உறக்கமன்றோ உரிய வாய்ப்பாயிற்று
மீண்டும் நாமென்றெழுவோம்? விடுதலையை வென்றெடுப்போம்?
பூண்டுவிட்ட கங்கணத்தைப் பழுதியிலே வீசுவதோ!

ஐம் பூதம் சேர்ந்து அமைந்த உடலழியும்
ஆன்மா ஒருபோதும் அழிந்தொழிந்து போவதில்லை
நம்பிக்கை வீண்போகா!  நான்குமறைத் தீர்ப்பென்பார்.
தம்பியரே எங்கள் தலைநிமிர உதவுங்கள்.

நீதிக்காய்ப் போராடி நிலமீதில் வீழ்ந்தோரின்
சாதல் பிறப்பாகும் சந்ததியை நெருப்பாக்கும்
ஆதலினால் எங்கள் ஆன்ம உறவுகளே!
எம்மோடிருந்து எமக்கு வலுவூட்டுங்கள்
உங்களுக்கெம் அஞ்சலிகள். உளம் நெகிழ்ந்து கேட்கின்றோம்;
எங்களுக்கு வேண்டும் எம் ஈழம்
 

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்குத்தெரியாது

பெற்ற  தாய் தகப்பனைவிட மாவீரர்களை  நாம் நேசிக்கின்றோம்

ஏனெனில் அவர்கள் எமக்காக உயிரைக்கொடுத்தார்கள்

இதை நாம் மறவோம்

மறந்தால்

நாம் மனிதரல்லோம்............

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க உங்க ரனவிருவனையும்.. புத்தரையும்.. சிங்களத்தையும்... சிறீலங்காவையும்.. மறவுங்கோ..! அப்புறம் இதைப் பற்றி நாங்க.. யோசிக்கிறம்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.