Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கேட்டது ..பார்த்தது ..படித்தது :அஞ்சரன்

Featured Replies

  • தொடங்கியவர்

ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.

முதல் கைதியின் ஆசை:

நல்ல பெண்,நல்ல சாப்பாடு ,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.

இரண்டாவது கைதியின் ஆசைகள் ;

நல்ல பெண்,நல்ல உணவு, வ்லடிமிர் லெனின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.

மூன்றாவது கைதி :

தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான்.அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.

செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான்,''என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். ''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர், ''என்ன சொல்கிறாய்,நீ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!

''கைதி அமைதியாகச் சொன்னான்,''அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.'

# புத்திசாலி எந்த தருணத்திலும் தன்னை காத்துக் கொள்கிறான்...

  • Replies 199
  • Views 21.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.

அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,

“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”

கணவனும் பார்த்தான்.

ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.

தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,

“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?

இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...

இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”

கணவன் அமைதியாகச் சொன்னான்,

“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”

இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன. 
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.

ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.

ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் 
இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.

அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அஞ்சரன்,நானும் உங்கள் திரியை தவறாது வாசித்து வருகின்றேன்

  • தொடங்கியவர்

தொடருங்கள் அஞ்சரன்,நானும் உங்கள் திரியை தவறாது வாசித்து வருகின்றேன்

நன்றி உறவே  வருகைக்கு கருத்துக்கு .

  • தொடங்கியவர்

புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி
இடையே ஓரு ஓப்பந்தம்.....!

இன்று யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்.. அன்றே கணவனுடைய அம்மா அப்பா வந்தனர் இருவரும் அவர்கள் வருவதை பார்த்தனர்... இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்.. கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை...! ஆனால் ,
அக்ரிமெண்ட் போட்டது நினைவுக்கு வந்தது... அதனால் கதவை திறக்க வில்லை அவன்.. அவர்கள் யாரும் இல்லை என்று நினைத்து போய் விட்டனர்.. கொஞ்ச நேரம் கழித்து மனைவியின் அம்மா அப்பா வந்தனர் கதவை தட்டினார்கள் இருவரும் ஓருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது. என்னால் கதவை திறக்காமல் இருக்கமுடியாது என்று சொல்லி கதவை திறந்தாள் ஆனால் கணவன் ஒன்றும் சொல்ல வில்லை.. வருஷங்கள் உருண்டோடின....!

இரண்டு ஆண் குழந்தை பிறந்தது.. மூன்றாவதாக பெண்_குழந்தை பிறந்தது கணவன் பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் பெரிய அளவில் செலவு செய்து அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான்.. அதற்கு மனைவி இரண்டு ஆண் குழந்தை பிறந்தப்ப இவ்வளவு பெரிய அளவில் கொண்டாட வில்லை ஏன் பெண்_குழந்தை பிறந்தவுடன் இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்க என்று கேட்டாள் ... !

அதற்கு கணவன் ரொம்ப நிதானமாக ஏனெனில் பிற்காலத்தில் எனக்காக கதவை திறக்க ஓரு பெண் பிறந்துவிட்டாள்...!! என்றான் கர்வத்துடன்....!

  • தொடங்கியவர்

கழுகுகள் 70 வயது வரை வாழுமாம் விசயம் அதுவல்ல, 
அதன் 40 வது வருடத்தில் அதன் கூரிய அலகு வளைந்து வலுவிழக்கும்....,!
நகங்கள் வலுவிழக்கும்..! 
அதன் இறகுகள் கட்டித்தன்மையாகும்....!

இப்போது கழுகால் பறக்கவோ உண்ணவோ முடியாது..?

இறப்பு இல்லை புது முயற்சி 
ரெண்டு தான் வாய்ப்பு..

கழுகு இந்த காலகட்டத்தில் 
உயரமான மலைப்பகுதிக்கு செல்லும், 
தன் கூரிய அலகினை பாறையில் தேய்த்து அலகினை உடைக்கும் வலி பொறுத்து .!! 
பின்னர் அலகு மறுபடியும் வளரும் வரை காத்திருக்கும்.. 
அலகு வளர்ந்ததும் அதன் நகங்களை குத்தி எடுக்கும்.. 
பிறகென்ன நகங்கள் வளர்ந்ததும் தன் இறகுகளைப் பிய்த்தெடுக்கும்.. 
மறுபடியும் இறகுகள் வளரும் வரை காத்திருக்கும்..

எவ்வளவு வலிகள்..!! 
எவ்வளவு காத்திருப்பு..!! 
ஆனாலுமென்ன இனி 30 வருடம் சுகமாக வாழுமே..

நாமும் நம் பாரங்களை கிழித்தெறிந்து புதிதாக முயற்சி செய்வோமா..

கருத்து இதுதான் 
அந்த கழுகுக்கு தெரிஞ்சது இந்தஏழு கழுத வயசுக்கு புரியாம போச்சே.

  • தொடங்கியவர்

“பளார் பளார் “என பலத்த அடி பலமுறை விழுந்தது அப்துல் கலாமுக்கு...!

அப்போது அவருக்கு வயது 11..... அடித்தவர் அப்துல் கலாமின் அப்பாதான்..!

அப்பா எதற்காக தன்னை அடிக்கிறார் எனப் புரியாமல் , 
அடி விழுந்த கன்னத்தை தடவியபடி அசையாமல் நின்றார் கலாம்...

அதை அப்துல் கலாமே இப்படிச் சொல்கிறார் :

“எனது தந்தை ராமேஸ்வரத்துக்கு நாட்டாமையாக நியமிக்கப்பட்ட காலத்தில் எனக்கு 11 வயது.... ஒரு நாள் எனது தந்தை தொழுகைக்காக சென்று விட்டார். ஊரிலுள்ள ஒருவர் , ஒரு தாம்பாளத் தட்டில் ஏதோ கொண்டு வந்து அப்பாவிடம் கொடுக்க வேண்டும் என்றார்.

நான் அப்பா தொழுகைக்கு சென்று விட்டார் என்றேன். அம்மாவை அழைத்த போது அம்மாவும் வீட்டில் தொழுகையில் ஈடுபட்டிருந்தமையால், வந்த அந்த மனிதரிடம் நான் .. “அதை இங்கே வைத்து விட்டு செல்லுங்கள்.... நான் அப்பா வந்தவுடன் சொல்கிறேன்” என்றேன். அந்த மனிதரும் அவ்வாறே செய்தார்.

வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் நடந்ததை சொன்னேன். அவ்வளவுதான் ....அப்பா என்னை பளார் பளாரென்று அடித்தார்....
பின்னர் என்னை அருகில் அழைத்து அறிவுரை சொன்னார்...
அதில் அவர் திருக்குரானை மேற்கோள் காட்டி, பதவியில் இருப்பவர்கள் , பரிசுப் பொருளாக யார் எதைக் கொடுத்தாலும் வாங்கக்கூடாது. அது பாவம்..! பதவியில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் பரிசு தருவது , வேறு எதையோ எதிர்பார்த்துத்தான்..என்று எடுத்துச் சொன்னார்..”

# கள்ளமில்லா மகனின் மனதில் பதியும்படி கலாமின் அப்பா சொன்ன அந்த வார்த்தைகள் , அந்தச் சின்ன வயதில் சிறுவன் கலாமின் உள்ளத்தில் சிற்றுளியால் செதுக்கிய கல்வெட்டாக பதிந்து விட்டது..!

சிறுவன் இளைஞன் ஆனான்...இந்தியாவின் ஜனாதிபதியும் ஆனார்..!!

பதவிக் காலம் முடிந்து ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறும்போது , பலரது பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் அப்துல் கலாமின் காதுகளில் வந்து விழுந்தாலும்...
சிறு வயதில் கலாமின் அப்பா சொன்ன சில வார்த்தைகள் மட்டுமே அந்த வேளையில் அவர் காதுகளில் மந்திரமாக ஒலித்திருக்கும்...

அப்படி என்ன சொன்னார் கலாமின் தந்தை..?

“ இறைவன் ஒருவரை ஒரு பதவியில் நியமிக்கின்றார் என்றால் அவருக்கான அனைத்தையும் ஆண்டவன் கொடுத்து விடுகிறார் என்று அர்த்தம்.... அதையும் விட மேலாக மனிதன் வேறு ஏதாவது எடுத்தால் அது தவறான வழியில் வந்த ஆதாயம்...”

ஆம்...அப்பா சொன்னது அப்துல் கலாமின் காதுகளில் திரும்ப திரும்ப ஒலிக்க , தான் வரும்போது கொண்டு வந்த இரண்டே இரண்டு சூட்கேஸ்களுடன் ஜனாதிபதி மாளிகையை விட்டு புறப்பட்டு விட்டார் கலாம்...!!

தனக்கு வழங்கப்பட்ட அத்தனை பரிசுப் பொருட்களையும் அங்கேயே விட்டு விட்டு வந்துவிட்டார்..

# “ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும்,
நல்ல ஒழுக்கத்தையும் விட சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது.”
[ திர்மிதி-1952 ]

  • கருத்துக்கள உறவுகள்

பிழைக்க தெரியாத மனிதர் கலாம்.இப்படி வாழ்ந்து,இறந்து என்னத்தை கண்டார். இன்னும் கொஞ்ச காலத்தில் இவர் யார் என்பதையே இந்தியர்கள் மறந்து விடுவார்கள்

  • தொடங்கியவர்

இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கு..

ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.

ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில் சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்..

ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்....

.உண்மை தான் என்றோம்

இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது...

ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது....

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்.

பிழைக்க தெரியாத மனிதர் கலாம்.இப்படி வாழ்ந்து,இறந்து என்னத்தை கண்டார். இன்னும் கொஞ்ச காலத்தில் இவர் யார் என்பதையே இந்தியர்கள் மறந்து விடுவார்கள்

தனக்கு  போதுமானது  இருக்கும்  போது  எதுக்கு  ஆசை  படனும் .

  • தொடங்கியவர்

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்..

திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு…

என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு…

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். ..

நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது.

கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது..

அப்போது ரெட் சிக்னல்..

அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது…

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது…

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை…

அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார்.

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது.

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது.

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்.

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது.

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்.

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது.

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்.

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்.

கடைக்காரர் ஓடி சென்று நிறுத்துங்க??

ஏன் அடிக்கறீங்க??

அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீட்டு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க..

நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு.

…………………………………………………………………………………………………………………………………
Note : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது...

 
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

‪#‎குருச்சேத்திரப்_போர்‬

பிரம்மாண்டமான போர் வியுகங்கள்

மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்..

40 லட்சம்பேர் பங்குபெற்ற 18 நாட்கள் நடந்த மிகப் பிரமாண்டமான மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

இதை பிரமாண்டமான திரைப்படமாக எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்!

1.கிராஞ்ச வியுகம் (heron formation)
2.மகர வியுகம் (crocodile formation)
3.கூர்ம வியுகம் (tortoise or turtle formation)
4.திரிஷுல வியுகம் (trident formation)
5.சக்ர வியுகம் (wheel or discus formation)
6.கமலா வியுகம் or பத்மா வியுகம் (lotus formation)
7.கருட வியுகம் (eagle formation)
8.ஊர்மி வியுகம் (ocean formation)
9.மண்டல வியுகம் (galaxy formation)
10.வஜ்ர வியுகம் (diamond or thunderbolt formation)
11.சகட வியுகம் (box or cart formation)
12.அசுர வியுகம் (demon formation)
13.தேவ வியுகம்(divine formation)
14.சூச்சி வியுகம்(needle formation)
15.ஸ்ரிங்கடக வியுகம் (horned formation)
16.சந்திரகல வியுகம் (crescent or curved blade formation)
17.மலர் வியுகம் (garland formation)
18.சர்ப வியுகம் (snake formation)

மகாபாரதத்தில், குருசேத்திரப் போரின் போது பாண்டவர் தரப்பில் 7 அக்குரோணி படைகளும், கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணி படைகளுமாக 18 அக்குரோணி படைகள் பங்கெடுத்தது.

ஒரு அக்குரோணி என்பது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது

படைப்பிரிவுகளின் கணக்கு
படைப்பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன: ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவு, ஒரு பட்டி எனப்படும்.

3 பட்டிகள் கொண்டது 1 சேனாமுகம்
3 சேனாமுகங்கள் கொண்டது 1 குல்மா
3 குல்மாக்கள் 1 கனம்
3 கனங்கள் 1 வாகினி
3 வாகினிகள் 1 பிரிதனா
3 பிரிதனாக்கள் 1 சம்மு
3 சம்முக்கள் 1 அனிகினி
10 அனிகினிக்கள் 1 அக்குரோணி

குருசேத்திரப்போர் படை விபரங்கள்
குருசேத்திரப் போரில் கௌரவர்களுக்குச் சார்பாக அஸ்தினாபுரத்துப் படைகளும் அவர்களுக்கு ஆதரவான பிற படைகளுமாகப் 11 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலும், பாஞ்சாலம், விராடம், போன்ற பல்வேறு அரசுகளின் படைகளை உள்ளடக்கிய பாண்டவர்களுக்குச் சார்பான 7 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலுமாகப் போரிட்டன.

கௌரவர் தரப்புப் படைகள்
துரியோதனன் தரப்பில் போரிட்ட படைகள்:
பாகதத்தன் படைகள் - 1 அக்குரோணி
சல்லியனின் மதுராப் படைகள் - 2 அக்குரோணிகள்
பூரிசுவரர்கள் - 1 அக்குரோணி
கிருதவர்மன் (கிருஸ்ணனின் நாராயணிப் படைகள்) - 1 அக்குரோணி
சயத்திரதன் படைகள் - 1 அக்குரோணி
காம்போச அரசன் சுதக்சினனின் படைகள் - 1 அக்குரோணி
விந்தன், அனுவிந்தன் என்போரின் அவாந்திப் படைகள் - 1 அக்குரோணி
ஐந்து கேகய சகோதரர் படைகள் - 1 அக்குரோணி
அஸ்தினாபுரத்துப் படைகள் - 3 அக்குரோணி

பாண்டவர் தரப்புப் படைகள்
விருஷ்னி வம்சத்துச் சாத்யகியின் படைகள் - 1 அக்குரோணி
நீலனின் மகிசுமதிப் படைகள் - 1 அக்குரோணி
சேதிசு அரசர் திருட்டகேதுவின் படைகள் - 1 அக்குரோணி
சராசந்தனின் மகன் சயத்சேனனின் படைகள் - 1 அக்குரோணி
துருபதனின் படைகள் - 1 அக்குரோணி
மத்சய அரசன் விராடனின் படைகள் - 1 அக்குரோணி
தமிழ் நாட்டு அரசர்களின் படைகள் (சோழரும் ,பாண்டியரும்) - 1 அக்குரோணி.

தற்போதைய கணக்குப்படி பாண்டவர்கள் படையில்7 அக்குரோணி
(15,30,900 படைகளும்) கௌரவர் படையில்11 அக்குரோணி
(24,05,700 படைகளும்) இருந்தன.

 
சரவணா ஸ்ரீ இன் புகைப்படம்.
  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.

ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்
ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.

நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.

ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.

மெசேஜ்க்கு வந்த பதில்கள்

நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??

நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??

நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??

நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??

நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??

நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??

நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..

நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??

நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??

நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???

கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..

நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??

3 hours ago, அஞ்சரன் said:

நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??

சுப்பர் அஞ்சரன்.

  • தொடங்கியவர்

அம்மா வீடு
VS
மாமியார்வீடு

1. ? அலாரம் ⏰ இல்லாமலேயே எந்திரிச்சிடுவோம் மாமியார் வீட்ல,

? அடிக்கிற அலாரத்தை ⏰ அடிச்சு நிப்பாட்டிட்டு அடிச்சு போட்ட மாதிரி தூங்குவோம் அம்மா வீட்ல.

2. ? சாப்பிடுறோமோ இல்லையோ கரெக்ட் டயத்துக்கு சமைச்சிடுவோம் ? மாமியார் வீட்ல,

? சமைச்ச சாப்பாடு ? காத்துக்கிட்டுருக்கும் நமக்காக அம்மா வீட்ல.

3. ? மொபைல் ? வச்ச இடமே மறந்து போகும் மாமியார் வீட்ல,

? கையை விட்டு ? மொபைல் கீழே இறங்காது அம்மா வீட்ல.

4. ? ஓடிக்கிட்டிருக்கிற ? டிவி யை வெறுமனே வெறிப்போம் மாமியார் வீட்ல,

? ரிமோட் நம்ம கையில் பாடாய்படும் அம்மா வீட்ல.

5. ? சுடிதார் துப்பட்டா? ரெண்டு தோளை விட்டு நகராது மாமியார் வீட்ல,

? துப்பட்டா சர்ட் ? ஹேங்கர்ல தொங்கிட்டு இருக்கும் அம்மா வீட்ல.

இதெல்லாம் சரிதானே

  • தொடங்கியவர்

ஒரு அதிகாலைப்பொழுது! கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.

"டியர்... யோகா பண்ணப்போறேன்... நீயும் வர்றியா?"

கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி, "ஓ... அப்படின்னா நான் குண்டா இருக்கேன்! உடம்பை குறைன்னு சொல்றீங்க..அப்படி தானே?"

கணவன்: "அதுக்கில்லைம்மா! யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது!"

மனைவி: "அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?"

கணவன்: "இல்லை இல்லை! நீ வரவேணாம். விடு!"

மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!"

கணவன்: "ஐயோ இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"

மனைவி: "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"

கணவன்: "மறுபடி பாரு.. நான் அப்படி சொல்லலை!"

மனைவி: அப்படிதான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"

கணவன்: "தயவு செஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?"

மனைவி: "ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்!"

கணவன்: "Ok! நானும் போகலை. போதுமா?"

மனைவி: "உங்களுக்கு போக அலுப்பு! அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க”

கணவன்: "சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன்! சந்தோஷமா?"

மனைவி: "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்! அதுக்குதானே இவ்வளவும் பேசுனீங்க?"

வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை! டயர்டாகி படுத்துவிட்டான்.

திருமணமான ஆண்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்!

ஏடிஎம் இயந்திரம் தோன்றிய சுவாரஸ்யமான சம்பவம்????????
????ஒவ்வொரு இயந்திரம் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. இப்போது நாம் ஈஸியாக சென்று பணம் எடுத்து வரும் ஏடிஎம் உருவான கதை கூட சுவாரஸ்யமானது தான்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார். பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, ‘டைம் முடிந்து விட்டது’ என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை.

கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார். இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத்தாலும், பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.

அப்போது அவர் கண் முன்னால் பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு மெசின் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சிந்தனையில் உருவானது தான் ஏடிஎம் .

இவர் உருவாக்கிய முதல் ஏடிஎம் இயந்திரம் 1969ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்கவும் மிஷினா என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கமாக குறைத்தார்.

இன்று ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான். இன்று உலகளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன. ஏடிஎம் மிஷின் உருவாக காரணமாக இருந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் 84வது வயதில் கடந்த 2010 மே 19ம் தேதியன்று காலமானார்

  • தொடங்கியவர்

புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில், ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார் ஒரு சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார்.

அவன் செல்லும் முன்பே ஒரு மாட்டு வண்டி அந்த நீர் நிலை வழியாகச் சென்றிருந்தது. சீடன் சென்று பார்த்த போது நீர் கலங்கியிருந்தது. இதை எப்படி புத்தருக்குக் கொடுப்பது என்று அவன் திரும்பி வந்து, புத்தரிடம் விபரத்தைச் சொன்னான்.

சிறிது நேரம் கழித்து புத்தர் அந்த சீடனிடனிடம் மீண்டும் சென்று வரப் பணித்தார். அவன் சென்று பார்த்தான். நீர் சிறிது தெளிந்திருந்தாலும், இன்னும் கலங்கலாகவே இருந்தது. அவன் திரும்பி வந்து புத்தரிடம் சொன்னான். சிறிது நேரம் சென்றதும் புத்தர் மறுபடியும் அவனைப் போய் வரச் சொன்னார்.

இம்முறை சென்று பார்த்தபோது நீர் தெளிவடைந்திருந்தது. சீடன் நீரை எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தான். புத்தர் அந்தச் சீடனைப் பார்த்து,
”அந்த நீர் தெளிவதற்காக நீ என்ன செய்தாய்? அதை அப்படியே விட்டு விட்டாய். நேரம் சென்றதும் நீர் தானே தெளிந்து விட்டது. உன் மனமும் இது போன்றதுதான். குழப்பம் ஏற்படும் போது அதை அப்படியே விடு. சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளியும். நீ அதற்காக எந்தப் பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. அது தானே நடக்கும்.”

ஆம்! மன அமைதியைப் பெற நாம் கடினமாக எதையும் செய்ய வேண்டியதில்லை. மனதை அதன் போக்கிலேயே விட்டுவிடலாம் . எதுவும் கடந்து போகும்.
— புத்தர்.

  • தொடங்கியவர்

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...!

  • தொடங்கியவர்

மனைவி இறந்ததன் பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்..

"உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி".என்று.

அப்போது அந்த மகன் சொன்னான் ."என் அம்மா 
என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால்.ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை"

இதைகேட்ட தகப்பன் கேட்டான்.

"அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?"

அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் .....

"நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று .ஆனால் கொஞ்சநேரம் ஆகும்போது என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,நிலாவைக்காட்டி கதைசொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய‪#‎பாசம்‬ இருக்கும்..

ஆனால்..

"இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் "உனக்கு சோறு தரமாட்டேன் என்று."..இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிறது அம்மா சொன்னவார்தையை நிறைவேற்றிவிட்டால்.".!!!

  • 2 months later...
  • தொடங்கியவர்

ஆண்களின் நலன் கருதி......???
மனைவியை மடக்க சில யோசனைகள்....?

1. மாமியார் விரதம் இருக்கும் போது ” உங்க அம்மா ஏன் அடிக்கடி விரதம் இருந்து உடம்ப வருத்திகராங்க?”னு அக்கரையா கோப படனும்(கொஞ்சம் நடிங்க பாஸ்..)

2. டீவியில நகைகடை விளம்பரம் போகும் போது “அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு ஒன்னு வாங்கனும் “னு அவுத்து விடனும்”

3. நண்பர்கள் போன் பண்ணி டீரிட் க்கு கூப்டாங்கனா
” இல்ல டா ஈவ்னிங் என் வெய்ஃப் கூட கோவிலுக்கு போறேன் என்னால வர முடியாது” ன்னு அவங்க காதுல கேக்கர மாதிரி சத்தமா சொல்லனும்

4. உங்க வீட்டுக்கு போயிட்டு வரனும் மாமா அத்தைய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அப்படினு குழந்தை மாதிரி சோகமா பேசனும்.

5. அடிக்கடி “எப்படி நீ இவ்வளவு அழகா பொறந்தனு ”சொல்லனும்.

6. மனைவி முன்னாடி மச்சினி கிட்ட அவங்க படிப்பு கேரியர் பத்தி பேசனும்.(படிப்ப பத்தி மட்டும் தான் )

7. செல்போன் ல வால்பேப்பரா மனைவி போட்டோ வச்சிகனும்.(வேற வழி இல்ல)

8 . அதிகாலைல எந்திரிச்சு அவங்க முகத்த பார்க்கும் போது மனசா திடமா வச்சிகனும் , பயத்துல ” அய்யோ அம்மா “ன்னு பதறினீங்கனா போச்சு மொத்தமா போச்சு.

9. அவங்க சமைத்த சாப்பாடு சாப்பிடும் போது முகம் மலர்ந்து சாப்பிடனும், மறந்து கூட முகத்த சுளிக்க கூடாது.

10 . கோவமா பூரி கட்டையால அடிச்சாங்கனா முதல் அடியிலே சுருண்டு விழுந்து துடிக்கனும், மீறி ஸ்பர்டன் வீரன் மாதிரி வீரமா நின்னா
பேஸ் ப்ரஷ்ஷா ஆயிடும்..!???

ஆண்களின் நலன் கருதி வெளியிடுப்படுகிறது

  • 1 month later...
  • தொடங்கியவர்

அமெரிக்காவின் ஜனாதிபதிகளாக இருந்த ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஆச்சரியப்படும் வகையில் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன.

லிங்கனின் மகன்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு, எட்வர்டு மூன்று வயதில் இறந்து போனார், ராபர்ட் உயிரோடு வாழ்ந்தார்.

ஜான் எப், கென்னடியின் சகோதர்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு ராபர்ட் கொல்லப்பட்டார், எட்வர்டு உயிரோடு வாழ்ந்தார்.

இரண்டு ஜனாதிபதிகளுமே தங்கள் மனைவியருடன் இருக்கும் போதுதான் கொல்லப்பட்டார்கள். இருவருக்கும் பின் தலையில்தான் குண்டடிபட்டது. இருவருமே வெள்ளிக்கிழமையன்றுதான் சுடப்பட்டார்கள்.

லிங்கனைக் கொன்ற ஜான் வில்கிஸ் பூத், கென்னடியைக் கொன்ற லீ ஹார்வி ஆஸ்வால்ட் இருவருமே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், இருபது முதல் முப்பது வயதிற்குள் இருந்தவர்கள்.

லிங்கன் தியேட்டரில் உட்கார்ந்திருக்கும் போது அவரைச் சுட்ட பூத் பண்டக சாலை (வேர் ஹவுஸ்) யில் பதுங்கியிருக்கையில் பிடிபட்டான். கென்னடியை பண்டக சாலையில் ஒளிந்திருந்து சுட்ட ஆஸ்வால்ட் தியேட்டரில் பதுங்கியிருக்கும்போது பிடிபட்டான்.

லிங்கன் 1860-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். கென்னடி 1960ல் பதவியேற்றார்.

லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி, கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்.

மேரி லிங்கனும், ஜாக்கி கென்னடியும் வெள்ளை மாளிகையில் வாழ்ந்த காலத்தில் தான் தங்கள் மகன்களை மரணத்திற்கு பரிசளித்தார்கள்.

லிங்கனை அடுத்து பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் 1808-ல் பிறந்தவர். கென்னடியை அடுத்துப் பதவியேற்ற லிண்டன் ஜான்சன் 1908-ல் பிறந்தவர். இவர்கள் இருவருமே அமெரிக்க செனட்டில் பதவி வகித்தவர்கள்.

கென்னடி-லிங்கன்- பெயரில் ஏழு எழுத்துக்கள். அவர்களை அடுத்துப் பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் - லிண்டன் ஜான்சன் இருவரின் பெயரில் 13 எழுத்துக்கள் இருக்கும்.

கென்னடி - லிங்கனை கொலை செய்த ஜான் வில்கிஸ் பூத் - லீ ஹார்வி ஆஸ்வால்ட் இருவருக்கும் பெயரில் 15 எழுத்துக்கள். லிங்கன் படம் பார்த்த தியேட்டரின் பெயர் போர்டு.கென்னடி பயணம் செய்த கார் போர்டு கம்பெனியின் லிங்கன் மாடல்.லிங்கன் சாவதற்கு ஒரு வாரம் முன்பு மான்றோ மேரிலாண்ட் என்ற இடத்தில் இருந்தார்.கென்னடி சாவதற்கு ஒரு வாரம் முன்பு மர்லின் மன்றோவுடன் இருந்தார்.இருவரையும் கொன்ற கொலையாளிகள் நீதிமன்ற விசாரணைக்கு முன்பே கொல்லப்பட்டனர்.பூத் 1839லும்,ஆஸ்வால்ட் 1939லும் சரியாக நூறு ஆண்டு இடைவெளியில் கொலையாளிகள் பிறந்ததும் விநோதமே.!

  • 4 months later...
  • தொடங்கியவர்

ஒரு பெண் தன தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவளைக் காண அவளது தோழன் வருகிறான்.

உடனே அந்த பெண் அவனிடம்," நீ பாமுக் எழுதிய,"அப்பா வீட்டில் இருக்கிறார்" என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தியா?" என்று கேட்கிறாள்.

உடனே அவன் அந்த பெண்ணிடம்,"இல்லை நான் ஹும்ம்ஸ் எழுதிய "நான் எங்கே காத்திருப்பது உனக்காக ? என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தேன்" என்கிறான்.

உடனே அந்த பெண்,"என்னிடம் அந்த புத்தகம் இல்லை, எனவே நீ என்னிடம் உள்ள.. கிரிஷ் எழுதிய "மாமரத்துக்கடியில் காத்திரு" என்ற புத்தகத்தை பெற்று கொள்" என்கிறாள்.

உடனே அவன் அந்த பெண்ணிடம், நீ நாளை பள்ளிக்கு வரும் போது... "ஐந்து நிமிடத்தில் உன்னை அழைக்கிறேன்'' என்ற ரிடெய்ல் மேனேஜ்மென்ட் புத்தகத்தை கொண்டு வா என்கிறான்.

உடனே அந்த பெண் அவனிடம், பகத் எழுதிய "நான் உன் நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்ற புத்தகத்தையும் உனக்கு கொண்டு வருகிறேன் என்கிறாள்.

உடனே அந்த பெண்ணின் தந்தை அந்த பெண்ணிடம், "இவன் இவ்வளவு புத்தகத்தையும் படிப்பானா?" என்று கேட்கிறார்.

உடனே அந்த பெண்," ஆமாம் அப்பா, அவன் மிகவும் அறிவும், புத்தியும் மிகுந்தவன்" என்று கூறுகிறாள்.

உடனே பெண்ணின் தந்தை கூறுகிறார்..," நீ அவனுக்கு ராபின் ஷர்மா எழுதிய "வயதானவர்கள் முட்டாள்கள் இல்லை" என்ற புத்தகத்தையும் மறக்காமல் குடு என்கிறார்.

நீதி : அடேய்.. நீ LKG படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா

  • தொடங்கியவர்

லண்டனில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மனைவியுடன் அதிகமாக பேசுவது மனிதனுக்கு இதயத்திற்கு நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவியுடன் பேசுவதால் 80 சதவீதம் பேருக்கு டென்ஷன் குறைகிறது என்றும் 90 சதவீதம் மாரடைப்பு குறைகிறது என்றும், அதனால் ஆயுட்காலம் அதிகரிக்கிறதென்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆய்வில் 'யாருடைய மனைவியுடன்' என்று தெளிவு படுத்தப்படவில்லை.

  • 2 months later...
  • தொடங்கியவர்

*கவர்ந்த வாசகங்கள்*

*பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.

*உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

*நடப்பதைப் பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.

*உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.

*விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

*தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.

*விவாதம் செய்யுங்கள். 
விவகாரம் செய்யாதீர்கள்.

*விளக்கம் பெறுங்கள்.
விரோதம் பெறாதீர்கள்.

*பரிசீலனை செய்யுங்கள்.
பணிந்து போகாதீர்கள்.

*சங்கடமாய் இருந்தாலும்
சத்தியமே பேசுங்கள்.

*செல்வாக்கு இருந்தாலும்
சரியானதைச் செய்யுங்கள்.

*எதிர் தரப்பும் பேசட்டும்.
என்னவென்று கேளுங்கள்.
எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.

*நேரம் வீணாகாமல்
விரைவாக முடியுங்கள்.

*தாமதமாய் முடியுமென்றால்,
வேறு வேலை பாருங்கள்.

*யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17.10.2016 at 11:30 PM, அஞ்சரன் said:

*கவர்ந்த வாசகங்கள்*

*பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.

*உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

*நடப்பதைப் பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.

*உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.

*விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

*தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.

*விவாதம் செய்யுங்கள். 
விவகாரம் செய்யாதீர்கள்.

*விளக்கம் பெறுங்கள்.
விரோதம் பெறாதீர்கள்.

*பரிசீலனை செய்யுங்கள்.
பணிந்து போகாதீர்கள்.

*சங்கடமாய் இருந்தாலும்
சத்தியமே பேசுங்கள்.

*செல்வாக்கு இருந்தாலும்
சரியானதைச் செய்யுங்கள்.

*எதிர் தரப்பும் பேசட்டும்.
என்னவென்று கேளுங்கள்.
எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.

*நேரம் வீணாகாமல்
விரைவாக முடியுங்கள்.

*தாமதமாய் முடியுமென்றால்,
வேறு வேலை பாருங்கள்.

*யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள்.

தம்பி ஏதோ சொல்ல வாறார் போலை கிடக்கு...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2015 at 10:52 PM, அஞ்சரன் said:

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்..

திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு…

என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு…

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். ..

நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது.

கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது..

அப்போது ரெட் சிக்னல்..

அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது…

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது…

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை…

அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார்.

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது.

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது.

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்.

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது.

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்.

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது.

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்.

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்.

கடைக்காரர் ஓடி சென்று நிறுத்துங்க??

ஏன் அடிக்கறீங்க??

அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீட்டு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க..

நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு.

…………………………………………………………………………………………………………………………………
Note : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது...

 
 

15 ம் திகதி அத்தான் ஆபிஸில் நல்லா வாங்கிக் கட்டியிருக்கின்றார், அதன் எதிரொலிதான் இது ... கூல் ....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.