Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகா அரசாங்கத்துடன் இணையவுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sarath-fonseka-seithy-4-150.jpg

முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவை அரசாங்கத்துடன் இணைத்து கொள்வதற்கான முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சம்பந்தமாக கடந்த சில நாட்களாக சில சுற்று பேச்சுவார்த்தைகள் அரசாங்க தலைவர்களுக்கும் பொன்சேகாவுக்கு இடையில் நடைபெற்றுள்ளதாக பேசப்படுகிறது. சரத் பொன்சேகாவை அரசாங்கத்துடன் இணைக்கும் முயற்சி தோல்வியடைந்தால், அவரை அரசியல் ரீதியாக வலுப்படுத்தி ஏனைய எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடும் அளவில் அவரது கட்சியை வளர்த்தெடுப்பது தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.

  

அடுத்த வருடம் பெப்ரவரி மாத இறுதிக்குள் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்ய அரசாங்கம் எண்ணியுள்ளதாக அறியகிடைத்துள்ளது. அத்துடன் மார்ச் மாதத்திற்கு முன்னதாக சரத் பொன்சேகாவின் குடிரிமையை மீண்டும் அவருக்கு வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றிக்கு பின்னர் அரசாங்கத்திற்கும் பொன்சேகாவுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின.

முரண்பாடுகள் முற்றிய நிலையில், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பொன்சேகா, 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டார். ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவே வெற்றிப்பெற்றதாகவும் அரசாங்கத்தின் கம்பியூட்டார் சித்து விளையாட்டுகள் காரணமாக அவரது வெற்றி தோல்வியாக மாற்றப்பட்டதாகவும் அப்பொழுது பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் காலத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த பொன்சேகா, வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை பாதுகாப்புச் செயலாளரே சுட்டுக்கொல்ல உத்தரவிட்டதாக கூறியிருந்தார்.

எனினும் தான் அவ்வாறு கூறவில்லை. தனது கருத்து திரிபுப்படுத்தப்பட்டதாக பொன்சேகா குறிப்பிட்டிருந்தார். என்றபோதிலும் சர்ச்சைக்குரிய வெள்ளைக்கொடி கருத்து தொடர்பில் பொன்சேகா கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இராணுவ நீதிமன்றம் நடத்திய விசாரணைகளில் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டதை அடுத்து அவரது இராணுவ ஜெனரல் பதவி அந்தஸ்து, ஓய்வூதியம், இராணுவப் பட்டங்கள் பதக்கங்கள் உட்பட அனைத்தும் பறிக்கப்பட்டதுடன் வெள்ளைக் கொடி வழக்கில் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. அத்துடன் குடியுரிமையும் பறிக்கப்பட்டது. வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்து வந்த பொன்சேகா, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலையானார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98510&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இணைவதானால் சிறை செல்ல முன்பே இணைந்திருப்பார்.

இப்போது இணைய வேண்டிய தேவை இல்லையே!

  • கருத்துக்கள உறவுகள்

வாசுதேவ நாணயகார இணையும் போது சரத் இணைவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.தமிழர்களை அழிப்பதில் சிங்களவர்களில் உள்ள ஒற்றுமை உலகில் எவரிடமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வாசுதேவ நாணயகார இணையும் போது சரத் இணைவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.தமிழர்களை அழிப்பதில் சிங்களவர்களில் உள்ள ஒற்றுமை உலகில் எவரிடமும் இல்லை.

 

வாசுதேவ அரசியல் பங்காளி.
 
இவர் பகையாளி. இவரது பலி வாங்கும் தன்மை குறித்து ஆய்வு செய்து எழுதி உள்ளனர்.
 
இவருக்கும், கோத்தவுக்கும் விட்ட புலி வெடி தப்பியதால், அவர்கள் இருவரும் வன்னியில் எடுத்த பலி உலகம் அறிந்தது தானே.
 
எனினும், உலகம் கோரும் விசாரணை கழுத்தை இறுக்கப் போவதால், முன்னால் பங்காளிகள், இப்போதைய பகையாளிகள் இணைய விளைகிறார்களோ?
  • கருத்துக்கள உறவுகள்

வாசுதேவா தமிழர்கட்கு உரிமை வேண்டும் என பல காலம் குரல் கொடுத்தவர். பதவிக்காக இனவாத அரசுடன் தனது கொள்கையை விட்டு சேர்ந்தவர். அதே போல பொன்சேகா இனப்படுகொலையை முன்னின்று செய்தவர்.இருவரும் தமிழரை எதிர்க்கும் அரசு எனும் புள்ளியில்  சந்திக்கின்றனர். தேவை எனில் விக்கிரமசூரியவும் காலப்போக்கில் அரசுடன் இணையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசில் இணையாமலே தமிழரை எதிர்க்கமுடியும் என்பதை சுமந்திரன் நிரூபித்துவருவதாக செய்திகள் வருகின்றனவே.....?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 பண்டியில என்ன நல்ல பண்டி கூடாதபாண்டி பண்டி பண்டிதான் அதேபோல சிங்களவனிலும் நல்ல சிங்களவன் கூடாத சிங்களன் சிங்களவன் சிங்களவன்தான். 

  • கருத்துக்கள உறவுகள்

"இப்போது இணைய வேண்டிய தேவை இல்லையே!" இலங்கை அரசுக்கு சர்வதேச விசாரணை நெருக்கடிகள் வருமானால் அதை சமாளிக்க இது ஒரு தந்ரோபாயமாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

sarath-fonseka-in-jail-colombo-telegraph

 

முன்பே... இனைந்திருந்தால், இந்த உடுப்பு போட வேண்டிய தேவை வந்திருக்காது. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.