Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

=====> என்னவள் <=====

விண்வரை வியாபித்த
அன்பில்ஈடு
இணையில்லாதவள்...

வசந்தங்களால்
வசப்படுத்த முடியா
தென்றலவள்...

தூரிகைகளில்
தீட்ட முடியா
தீண்டலவள்...

ஏழுஸ்வரங்களில்
இயற்ற முடியா
இசையானவள்...

தமிழின் இனிமையை
தன்னகத்தே
கொண்டவள்...

தன்வேர்களை
பூமியில்
ஆழமாய்
பதிந்தவள்...

மனச்சிறையின்
எல்லைகளை உடைத்து
சிறகடித்து
பறப்பவள்...

காதலிலும்
காதலுக்குள்ளும்
உள்ளதையெல்லாம்
கற்பிப்பவள்...

சிறு பொழுதுகளில்
நீராய் நிறைந்திருப்பவள்
பெரும் பொழுதுகளில்
நினைவாய் மலர்ந்திருப்பவள்...

விடைபெறாமல்
விடைபெறும்
கேள்விகளையே
தொடுப்பவள்...

பின்னிரவின்
மென்தூக்கத்தில்
மெல்ல என்பெயரை
சொல்பவள்...

தீ சூரியனிலும்
நீர் சமுத்திரத்திலும்
சங்கமிப்பது போல
என்றும் என்
ஆன்மாவில்
சங்கமிக்கும்
என்னவளவள்... ♥♥♥

# 01/07/13

ராஜன் விஷ்வா.

Edited by ராஜன் விஷ்வா

  • Replies 60
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

# 10/12/13

Edited by ராஜன் விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்

யார் இது.. காதலியா அல்லது மனைவியா? :unsure: காதலி என்றால் இன்னும் காலம் கடந்துவிடவில்லை.. :D

யார் இது.. காதலியா அல்லது மனைவியா? :unsure: காதலி என்றால் இன்னும் காலம் கடந்துவிடவில்லை.. :D

மனைவியை இப்படி கவிதையால வடிப்பார்களோ, எல்லாம் காதலி தான்..

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையில்  'வர்ணனை' அழகு!

எங்களுக்கும் ஒருக்கா ஆளைப் பார்க்க வேண்டும் போலவும் இருக்கு! :D

தன் வேர்களைப் பூமியில் ஆழப் புதைத்தவள்!

புலம் பெயரும் நோக்கமில்லாதவள் போல கிடக்கு! :o

தொடர்ந்து எழுதுங்கள், ராஜன் விஷ்வா! 

படிப்பையும் கவனித்துக் கொள்ளுங்கள்! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியை இப்படி கவிதையால வடிப்பார்களோ, எல்லாம் காதலி தான்..

அப்பிடியே கவிதை வடிக்க வெளிக்கிட்டாலும் 'உங்களுக்கு ஏதும் பிரச்சினையே?!' எண்டல்லோ கேட்பினம்..?! :blink::D

  • கருத்துக்கள உறவுகள்

முதலில மயக்கம்.. அப்புறம் கலக்கம்.. அப்புறம் தான் தெளிவு என்றது சிலரின் தலைவிதி. என்ன செய்வது..!!! எல்லாரும் பாட்டன் வயசிலதான் பட்டினத்தார் ஆகினம். பட்டினத்தார் வந்து சொன்ன பின்னும் யார் பாலன் வயசில் பட்டினத்தார் ஆகி இருக்கினம்.???! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

யார் இது.. காதலியா அல்லது மனைவியா? :unsure: காதலி என்றால் இன்னும் காலம் கடந்துவிடவில்லை.. :D

குழந்தை திருமணம் என்டு போட்டுகுடுத்து என்னை உள்ள தள்ளவேணும் அதுதானே ?

மனைவியை இப்படி கவிதையால வடிப்பார்களோ, எல்லாம் காதலி தான்..

கஸரப்பட்டு ஒரு கவிதை எழுதினால் அதை வைத்து இப்படியா பட்டிமன்றம் நடாத்துவது ? நான் பாவம் :(
  • தொடங்கியவர்

Edited by ராஜன் விஷ்வா

  • தொடங்கியவர்

முதலில மயக்கம்.. அப்புறம் கலக்கம்.. அப்புறம் தான் தெளிவு என்றது சிலரின் தலைவிதி. என்ன செய்வது..!!! எல்லாரும் பாட்டன் வயசிலதான் பட்டினத்தார் ஆகினம். பட்டினத்தார் வந்து சொன்ன பின்னும் யார் பாலன் வயசில் பட்டினத்தார் ஆகி இருக்கினம்.???! :lol::icon_idea:

நீங்கள் சொல்லுகிற மாதிரி பாலகனிலே பட்டினத்தார் ஆன ஒருவரை எனக்கு தெரியும், அவர் பட்ட கஷ்டங்களை பார்த்து தான் பாலகனாகவே இருப்பது நன்று என்று இருந்துவிட்டேன், அவரின் பெயர் தான் மறந்து விட்டது.... கதவை திற காற்று வரட்டும் என்ற புத்தகம் கூட எழுதியுள்ளாரே.... :icon_idea:

அவர் பட்டினத்தார் வசனம் பேசி பலான guyயா மாறினவர். சாட்சா அவர் தான்..ரஞ்சிதநித்தியானந்தமானவர்..! நாங்க சொல்லுறது நிஜ பாலக பட்டினத்தார்..??! :lol::)

  • தொடங்கியவர்

நெடுக்ஸ் அண்ணா நாளை காலையில் அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணம்....

Edited by ராஜன் விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவமே.. :(

விண்வரை வியாபித்த அன்பில்ஈடு இணையில்லாதவள்

வசந்தங்களால் வசப்படுத்த முடியா தென்றலவள்

தூரிகையால் தீட்ட முடியா தீண்டலவள்

ஏழுஸ்வரங்களில் இயற்ற முடியா இசையானவள்

தமிழின் இனிமையை தன்னகத்தே கொண்டவள்

தன்வேர்களை பூமியில் ஆழமாய் பதிந்தவள்

மனச்சிறையின் எல்லைகளை உடைத்து சிறகடித்து பறப்பவள்

காதலிலும் காதலுக்குள்ளும் உள்ளதையெல்லாம் கற்பிப்பவள்

சிறு பொழுதுகளில் நீராய் நிறைந்திருப்பவள்

பெரும் பொழுதுகளில் நினைவாய் மலர்ந்திருப்பவள்

விடைபெறாமல் விடைபெறும் கேள்விகளையே தொடுப்பவள்

பின்னிரவின் மென்தூக்கத்தில் என்பெயரை உளறுபவள்

தீ சூரியனிலும் நீர் சமுத்திரத்திலும் சங்கமிப்பது போல

என்றும் என் ஆன்மாவில் சங்கமிக்கும் என்னவள்அவள்....

10/11/2013

உங்கள் கவிதை ஓர் வலியைப் பாடுபொருளாகக் கொண்டு பாடப் பட்டுள்ளது . எனது மனங்கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ராஜன் விஷ்வா :) :) .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விண்வரை வியாபித்த அன்பில்ஈடு இணையில்லாதவள்

வசந்தங்களால் வசப்படுத்த முடியா தென்றலவள்

தூரிகையால் தீட்ட முடியா தீண்டலவள்

ஏழுஸ்வரங்களில் இயற்ற முடியா இசையானவள்

தமிழின் இனிமையை தன்னகத்தே கொண்டவள்

தன்வேர்களை பூமியில் ஆழமாய் பதிந்தவள்

மனச்சிறையின் எல்லைகளை உடைத்து சிறகடித்து பறப்பவள்

காதலிலும் காதலுக்குள்ளும் உள்ளதையெல்லாம் கற்பிப்பவள்

சிறு பொழுதுகளில் நீராய் நிறைந்திருப்பவள்

பெரும் பொழுதுகளில் நினைவாய் மலர்ந்திருப்பவள்

விடைபெறாமல் விடைபெறும் கேள்விகளையே தொடுப்பவள்

பின்னிரவின் மென்தூக்கத்தில் என்பெயரை உளறுபவள்

தீ சூரியனிலும் நீர் சமுத்திரத்திலும் சங்கமிப்பது போல

என்றும் என் ஆன்மாவில் சங்கமிக்கும் என்னவள்அவள்....<<

சரி இப்படி உருகி உருகி கவிதை வடிக்கிறீங்கள் எண்டது அவங்களுக்குத்தெரியுமா?!......பின்னிரவின் மென் தூக்கத்தில் உங்கட பெயரை உளறுவா? எண்டு எப்படி உங்களுக்குத்தெரியும் எண்டதையும் கொஞ்சம் விளக்கமாய்ச்சொல்ல வேணும்:)))

10/11/2013

நெடுக்ஸ் அண்ணா நாளை காலையில் அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணம்....

அட!! கடவுள் உங்களுடன் இருக்கின்றார்! பிறகென்ன!! இதைவிட மகிழ்ச்சி வேறென்ன?:)

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பப் பிடித்திருக்கு.  தொடருங்கள் வாழ்த்துக்கள்!! :D

நெடுக்ஸ் அண்ணா நாளை காலையில் அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணம்....

அப்ப ஏழரைச் சனி கழியுது உங்களுக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா நாளை காலையில் அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணம்....

சாரி சகோதரா. உங்கள் நிலைமை புரியாமல் பதில் அளித்தமைக்கு.

ஒன்றுவிட்டுப் போகுது என்றால்.. அது நன்மைக்கே என்று எண்ணிக் கொண்டு வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை நோக்கி பயணிச்சிடனும். விட்டிட்டுப் போறதைப் பற்றி அதிகம் கவனம் செலுத்தி எங்க வாழ்க்கையை அதுங்களுக்காக அழிச்சுக்கிறது மகா தவறு. அவங்க வாழப் போகும் போது.. தவறே செய்யாத நீங்க எதுக்கு வருந்தனும்.

கடவுள் மீதும்.. காதல் மீதும் நம்பிக்கை வைக்கலாம். ஆனால் அதுவா எங்களை வாழ வைக்குமென்று கதியா கிடந்தம்.. ஏமாற்றமே மிஞ்சும். ஏன்னா கடவுளைச் சொல்லி ஏமாற்ற கள்ளப் பூசாரிங்க இருக்கிறது போல.. காதலைச் சொல்லி ஏமாற்றவும் ஆக்கள் இருக்காங்க. நாங்க வாழுறது 21ம் நூற்றாண்டு. காதல்.. இப்போ அலைபேசியில் அலைபாயும் நேரம்... காலம் இது. :)

http://youtu.be/nJpdD4nZRgw

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

உங்கள் கவிதை ஓர் வலியைப் பாடுபொருளாகக் கொண்டு பாடப் பட்டுள்ளது . எனது மனங்கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ராஜன் விஷ்வா :) :) .

நன்றி கோமகன் அண்ணா.

அட!! கடவுள் உங்களுடன் இருக்கின்றார்! பிறகென்ன!! இதைவிட மகிழ்ச்சி வேறென்ன?:)

வேறு யார் அவள் தங்கை தான்...

நீங்கள் உடனிருப்பது அதை விட மகிழ்ச்சியக்கோ...

ரொம்பப் பிடித்திருக்கு. தொடருங்கள் வாழ்த்துக்கள்!! :D

நன்றிகள்...

ஆமாம் கவிதையை தானே சொன்னீர்?

  • தொடங்கியவர்

அப்ப ஏழரைச் சனி கழியுது உங்களுக்கு!

ஆயுள் சனியாக பிடித்துக் கொள்ளட்டும் என்று பரிகாரத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்... :D
  • தொடங்கியவர்

சாரி சகோதரா. உங்கள் நிலைமை புரியாமல் பதில் அளித்தமைக்கு.

ஒன்றுவிட்டுப் போகுது என்றால்.. அது நன்மைக்கே என்று எண்ணிக் கொண்டு வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை நோக்கி பயணிச்சிடனும். விட்டிட்டுப் போறதைப் பற்றி அதிகம் கவனம் செலுத்தி எங்க வாழ்க்கையை அதுங்களுக்காக அழிச்சுக்கிறது மகா தவறு. அவங்க வாழப் போகும் போது.. தவறே செய்யாத நீங்க எதுக்கு வருந்தனும்.

கடவுள் மீதும்.. காதல் மீதும் நம்பிக்கை வைக்கலாம். ஆனால் அதுவா எங்களை வாழ வைக்குமென்று கதியா கிடந்தம்.. ஏமாற்றமே மிஞ்சும். ஏன்னா கடவுளைச் சொல்லி ஏமாற்ற கள்ளப் பூசாரிங்க இருக்கிறது போல.. காதலைச் சொல்லி ஏமாற்றவும் ஆக்கள் இருக்காங்க. நாங்க வாழுறது 21ம் நூற்றாண்டு. காதல்.. இப்போ அலைபேசியில் அலைபாயும் நேரம்... காலம் இது. :)

http://youtu.be/nJpdD4nZRgw

கனிவான அன்பிற்க்கு நன்றியண்ணே....

உங்களை பற்றி ஒரு சம்பவம்...

கோவித்துக் கொள்ள மாட்டீர் என்றால் சொல்வேன்....

  • கருத்துக்கள உறவுகள்

கனிவான அன்பிற்க்கு நன்றியண்ணே....

உங்களை பற்றி ஒரு சம்பவம்...

கோவித்துக் கொள்ள மாட்டீர் என்றால் சொல்வேன்....

நிச்சயமா எங்களைப் பற்றியதா இருக்காது. ஏன்னா... எங்களைப் பற்றி எங்களுக்கு மட்டும் தான் சரியாத் தெரியும். இருந்தாலும் சொல்லுங்க கேப்பம்..??! (களவிதிக்கு உட்பட்டிருந்தால்.. சொல்லலாம். கோவிக்க எதுவும் ரகசியமா இல்லை எங்களிடம்.) :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா நாளை காலையில் அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணம்....

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமின் என்றாற் போகா- இருந்தேங்கி

நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரந் தாநினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்.

பொருந்தி வராதவைகளை எவ்வளவு பிரயாசைப்பட்டு வருந்தி அழைத்தாலும் வருவதில்லை;

பொருந்தி இருப்பவைகளைப் போ என்றாலும் போவதில்லை.

விரும்பும் இன்பம் வருவதுமில்லை; வேண்டாத துன்பம் போவதுமில்லை.

இதை நினைத்து நினைத்து ஏங்கி நெஞ்சம் புண்ணாகி வாழ்நாள் முழுவதும் சிந்தித்து மாய்வதே மனிதன் தொழிலாகிவிட்டது.

  • தொடங்கியவர்

அறையின் மேற்கூறையை வெறித்தபடி நானும்

அலங்கார ஒப்பனைக்கு ஆயத்தமாகி கொண்டுநீயும்

நேரம் நடுநிசியை தாண்டி கொண்டிருக்கிறது

அலைபேசி சினுங்கியது தெரியும் நீதான்

நித்திரை கொள்ளலே?

இப்பத்தான் எழும்பினேன்

பொய் சொல்லதே

.

.

.

ராஜ்

ம்ம்ம்

என்ன மன்னிச்சுடு

.

.

.

நீ என்ன செய்தாய் மன்னிக்க...

# கேடு கெட்ட இந்த சமூகத்தில் பிறந்ததை தவிர நாம் செய்த பாவமென்னவோ...

அழாதே-டி

நான் போகட்டுமாடா?

ம்ம்ம்

.

.

.

ஏதாவது சொல்லனுமா

.

.

.

பேசுடா

.

.

.

Marriage is the school of love

May god bless you with all the goodness on this holy day...

.

.

.

.

BYE...

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியுற்ற காதல் இனிமையானது.. வாசிப்பவர்களுக்கு மட்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.