Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயா மாஸ்டர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் - அனந்தி சசிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ananthy-seithy-20131002.jpg

தற்பொழுது ஊடகவியலாளராக இருக்கின்ற தயா மாஸ்ரர் போன்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் பலர் அரசாங்கத்தின் சூழ்நிலைக் கைதிகளாக இருக்கின்றனர் எனவும் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் இன்று தெரிவித்தார். சுனாமி கடல்கோள் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமிச் சதுக்கத்தில் இடம்பெற்ற பொழுது அங்கு தயாமாஸ்ரருடன் நீண்டநேரமாக உரையாடிய பின்னர் ஊடகவியலாளருக்கு தமது சந்திப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

இருவரும் நீண்ட நேரம் உரையாடியமை தொடர்பாக ஊடவியலாளர்கள் திருமதி அனந்தியிடம் வினாவிய பொழுது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் என்னுடைய கணவனான எழிலன் இயக்கத்தில் இருந்த காலத்திலிருந்து மிகவும் நெருக்கமான நண்பர்கள். நாம் திருகோணமலையில் இருந்த பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் எமக்கு தொலைத் தொடர்பு கருவிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரவில்லை. அக்காலப்பகுதியில் நான் தாயாமாஸ்ரரிடம் கேட்டுக்கொண்டதற்கமைய அவர் எமக்கு ரெலிபோன் வசதிகளைச் செய்து தந்திருந்தார். அந்த அளவிற்கு தயாமாஸ்ரர் மிகவும் நல்ல மனிதர் .

ஆனால் அவர் தற்பொழுது அரசாங்கத்தின் சூழ்நிலைக் கைதியாகவுள்ளார் . இவரைப் போன்ற பலர் இன்னமும் சூழ்நிலைக் கைதிகளாகவே வாழுகின்றனர் . முன்னாள் போராளிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என்றார் .

http://www.seithy.com/breifNews.php?newsID=100002&category=TamilNews&language=tamil

  • Replies 61
  • Views 4k
  • Created
  • Last Reply

இதை நாங்கள் நம்பவேண்டும் ,பூனைக்குட்டி கொஞ்சம் கொஞ்சமாக வெளி வருது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
s2687.png
தற்பொழுது ஊடகவியலாளராக இருக்கின்ற தயா மாஸ்ரர் போன்ற தமிழீழ விடுதலைப்
புலிகளின் முன்னாள் போராளிகள் பலர் அரசாங்கத்தின் சூழ்நிலைக் கைதிகளாக இருக்கின்றனர் எனவும் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி . அனந்தி சசிதரன் இன்று தெரிவித்தார் .
 
சுனாமி கடல்கோள் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமிச் சதுக்கத்தில் இடம்பெற்ற பொழுது அங்கு தயாமாஸ்ரருடன் நீண்டநேரமாக உரையாடிய பின்னர் ஊடகவியலாளருக்கு தமது சந்திப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
 
இருவரும் நீண்ட நேரம் உரையாடியமை தொடர்பாக ஊடவியலாளர்கள் திருமதி அனந்தியிடம் வினாவிய பொழுது அவர் கருத்துத் தெரிவிக்கையில் ,
நாங்கள் என்னுடைய கணவனான எழிலன் இயக்கத்தில் இருந்த காலத்திலிருந்து மிகவும் நெருக்கமான நண்பர்கள் . நாம் திருகோணமலையில் இருந்த பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் எமக்கு தொலைத் தொடர்பு கருவிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரவில்லை .
 
அக்காலப்பகுதியில் நான் தாயாமாஸ்ரரிடம் கேட்டுக்கொண்டதற்கமைய அவர் எமக்கு ரெலிபோன் வசதிகளைச் செய்து தந்திருந்தார் . அந்த அளவிற்கு தயாமாஸ்ரர் மிகவும் நல்ல மனிதர் .
 
ஆனால் அவர் தற்பொழுது அரசாங்கத்தின் சூழ்நிலைக் கைதியாகவுள்ளார் . இவரைப் போன்ற பலர் இன்னமும் சூழ்நிலைக் கைதிகளாகவே வாழுகின்றனர் . முன்னாள் போராளிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என்றார் .
 
யாழ் நிருபர் .
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2009 மேக்கு பின்னர் யாரையும் நம்பமுடியாமல் இருக்கின்றது 
 
எல்லாமே ஆயுதங்கள் மௌனிப்புடன் போச்சு  :(
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை விட அனந்தி அக்காவை நம்பலாம். அது மட்டும் தெளிவு.  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு வக்காளத்து வாங்குபவர்கள்..அனந்தி அக்கா தயா மாஸ்டர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த போது செய்த உதவியைப் பாராட்டி அவரின் அன்றைய பண்புகளை நினைவுபடுத்தி.. இன்று அவர் சூழ்நிலைக்கைதியாக உள்ளதை சொல்லுகின்றதை பூனைக்குட்டி வெளில வருது என்று காட்ட நினைக்கிறார். ஆனால் சுமந்திரன்.. சிறீலங்கா இனவாத சிங்கள கிரிக்கெட் அணியுடன் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு.. சிங்களப் பேரினவாதத் தொடர்புள்ள ஒருவர். அவரை காப்பாற்ற சிலர் இங்கு களத்தில் மும்மரமாகச் செயற்படுகின்றனர். ஈழத்தில் உள்ளது.. இனப்பிரச்சனை. ஆனால் அங்கு நடப்பது இனப்படுகொலை அல்ல என்றும் காட்ட முனைகிறார்கள். இப்படிப்பட்ட கேடு கெட்ட ஜென்மங்களால் தான் எமது சமூகம் இன்னும் விடுதலை இன்றி அடிமையாக உள்ளது. ஆனால் சிங்களவன்.. எமது போராட்டத்தை ஒட்டுமொத்தமாக பயங்கரவாதமாகவே அதன் ஆரம்பம் தொட்டு முடிவு வரை உச்சரிக்கிறான். அவனிடம் உள்ள அந்த தெளிவு எம்மவரிடம் இல்லாமை வேதனையானது மட்டுமன்றி அது எம்மவரின் முழு முட்டாள் தனத்தையும் இனங்காட்டி நிற்கிறது. ஜே ஆரில் இருந்து மகிந்த வரை தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாகவே உச்சரிக்கின்றனர். காட்டி வருகின்றனர். அது புலிகள் மீதான உச்சரிப்பு மட்டுமல்ல. தமிழ் மக்களின் உரிமையை மீட்கிறோம் என்று சொல்லிக்கொண்டு.. ஆயுதம் தரித்த எல்லோர் மீதுமானது... என்பதை சிலர் அடிக்கடி மறந்து விடுகின்றனர். ஆனால் சுமந்திரன் போன்ற சட்டாம்பிகள்.. எப்போதுமே சிங்களவர்களோடு வாழ்ந்து அவர்களின் வாசலில் வளர்ந்து இன்று அதற்கான விசுவாசத்தை காட்ட முனையும் சில ஆயிரம் தமிழர்களில் ஒருவர். அவர் ஒட்டுமொத்த தமிழினத்தையும் பிரதிபலிக்க தகுதியற்றவர். அவரை விட தயா மாஸ்டர் எவ்வளவோ மேல். 

இந்த செய்தியில் கூறப்பட்டிருப்பது முழுவதும் உண்மையெனின், செய்தியின் தலைப்பு முதலில் பிழை.

தனது கணவர் இயக்கத்திலிருந்த காலத்திலிருந்து தயா மாஸ்டர் தனது நண்பர் என குறிப்பிட்டாலும் தயா மாஸ்டர் தற்போது அரசாங்கத்தின் சூழ்நிலை கைதி எனவும் அனந்தி அக்கா அழுத்தி குறிப்பிட்டுள்ளார். முன்னாள் போராளிகள் பலர் சூழ்நிலை கைதிகளாக இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். இச்செய்தியை அவர் கூறியது வரவேற்கப்பட வேண்டிய விடையம் தான்.

ஒரு சூழ்நிலை கைதி என தெரிந்தும் அவரை சந்திப்பதால் தீமை ஏற்பட வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட போராளிகள் தொடர்பில் கவனம் செலுத்துவதால் இவரையும் சந்தித்தாரா என தெரியவில்லை.

அனந்தி அக்காவின் நோக்கம் நல்லதாக அமையும் பட்சத்தில் எனது வாழ்த்துக்கள்.

யாரை சந்தித்தாலும் பிடிகொடுக்காமல் கதைக்கும் வரை அனந்தி அக்காவுக்கு ஆதரவளிக்கலாம். :rolleyes:

எனினும் இன்றைய காலப்பகுதியில் தயா மாஸ்டரை சந்திப்பதை தவிர்த்திருக்கலாம் என்பதே எனது கருத்து. :rolleyes:

Edited by துளசி

பெருமாள் போற்றும் அரசியல் வாதியல்ல அனந்தி.  அனந்தி மீது சந்தேகம் வரவைப்பது நல்லதல்ல. ஆனால் அனந்தி அ, ஆ தெரியாத அரசியல் வாதியாக இருக்க கூடாது. 

தயாமாஸ்டர் சூழ்நிலைக் கைதியாகவும், அனந்தி வெளியே பேசும் அரசியல் வாதியாகவும் இருந்தால் எப்படி இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தார்கள். 

ஒன்றில்சூழ்நிலை கைதியாக இருந்தாலும் அனந்தியை சந்திக்க  தயாமாஸ்டருக்கு  அரசு Ok கொடுக்கிறது அல்லது தயாமாஸ்ட்டர் ஒற்றன். 

இனி இப்படியானவ்ர்களை அனந்தி சந்தித்தால், J.B.S Jeyaraja வும், K.P.யும் மாதிரி வந்து முடிந்துவிடும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தோசையைப் பிரட்டிப் போடுங்கோ கருகப்போகிது :D

தோசையைப் பிரட்டிப் போடுங்கோ கருகப்போகிது :D

கருகாது என்பது என் நம்பிக்கை, பார்க்கலாம். :)

ஒரு தடவை எனது வீட்டுக்கு எங்களின் பள்ளி நண்பன் ஒருவன் வந்தான். தெரிந்த குடும்பமும். அவன் வீடு சற்று தள்ளி இருப்பத்தால் அவனின் தந்தைதான் அவனை கொண்டுவந்து விட்டு சென்றார். மாலையில் அவர் நண்பனை அழைத்து செல்ல வந்த போது அடுப்படியில் பழைய நாளைய ஸ்திரிபெட்டியை வைத்து அதில் சிரட்டையை கரியாக்க தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள். சாடையாக திறந்திருந்த கதவு நீக்கலுக்குள்ளால் சரியாக பார்க்க முடியாமல் போய்விட்ட தந்தைக்கு அது பால் அப்பம் செய்வதாக பட்டுவிட்டது.  எதோ காரணதுக்காக அந்த பையன் பால் அப்பம் சாப்பிட்டுவதில்லை. 

வீட்டுக்கு மிதிவண்டியில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்த பையனிடம் தந்தை "நீ பால் அப்பம் சாப்பிட்டாயா என்று கேட்டிருக்கிறார்" தந்தையின் மனத்தை அறியாத நண்பன் இன்று எதுமே சாப்பிடவில்லை என்றிருக்கிறான். உண்மையாக வழக்கத்துக்கு மாறாக நண்பன் அன்று எங்கள் வீட்டில் எதுமே சாப்பிடவில்லை. வந்துதே கோபம் தந்தையாருக்கு. வாயை பொத்திக்கொண்டு போய் வீட்டில் பெடியனை சைகிளால் இறக்கி ஒரு தடி எடுத்து விளாசு விளாசு என்று விளாசிவிட்டார். தாய் வந்து கேட்டதற்கு, அவர்கள் வீட்டில் இன்று பால் அப்பம். இவன் சப்பிட்டுவிட்டு வந்து, எனக்கு ஒன்றுமே சாப்பிடவில்லை என்று பொய்சொல்லுகிறான் என்றிருக்கிறர். அப்போது நண்பன் அழுது அழுது நான் அவர்கள் வீட்டில் பால் அப்பம் செய்ததையே காணவில்லை என்றிருக்கிறான்.  எனோஅது  தாயிக்கு உண்மை போல் பட்டிருக்கு. ஆனல் தந்தைக்கு கோபம் இரட்டிபாக " பார், பார் நான் கண்ணால் கண்டதே இல்லை என்றான்" என்றிருக்கிறார்.

தாயிற்கு பெடியன் மேலும் அடிவாங்காமல் காப்பாற்ற  ஒரே ஒருவழிதான் இருந்தது. கொஞ்சம் பொறுங்கோ வாறன் என்றுவிட்டு சேலையை மாற்றிக்கொண்டு வீட்டுக்குவந்து அம்மாவிடம் தன் பெடியன் கூடாத சாப்பாடு எதும் எங்கள் வீட்டில் சாபிட்டானா என்று கேட்டா. முழுக்கதையும் மெல்ல மெல்ல வெளியே வந்தது. நாங்கள் சிறுவர்களாக இருந்தால் ஏன் நண்பன் அடிவாங்கிறான் என்பது புரியவில்லை. ஆனால் வளர்ந்தவர்கள் யாரோ அவர் வந்த நேரம் அடுப்படியில் ஸ்திரிப்பெட்டி தயாரானதை ஞாபகம் வைதிருந்திருக்கிறார்கள். அதனால் அவர் அதை அப்பத்தின் மேல் சட்டி என்று நினைத்ததை விளங்கி கொண்டு இன்னமும் முழுவதாக சூடு ஆறமல் இருந்த ஸ்திரி பெட்டியையும் சிரட்டை கரியையும் காட்டியிருக்கிறார்கள்.  அதை நம்பிய தாய் மகன் பால் அப்பம் சாப்பிடிருக்க சந்த்ர்ப்பம் இல்லை என்று திருப்தியுடன் வீடு திரும்பினார்.

அவர்கள் வீட்டில் ஸ்திரி பெட்டி போட வேண்டியிருந்தால் கரியை கடையில் வாங்கிவிடுவார்கள். எனவே ஸ்திரி பெட்டியில் எப்போதும் நெருப்பு எரிந்தது கிடையாது. நம் வீட்டில் சிரட்டையை அடுப்பில் போட்டு நெருப்பு பற்றவைத்து  எரிந்து கொண்டிருக்கும் போதே எடுத்து ஸ்திரி பெட்டியில் போட்டு. சில நிமிடங்கள் எரியவிட்டு பெட்டியை மூடி தணல் ஆக விடுவார்கள். இதில் அவர் கண்டது எரியும் பொருள் அடுப்பிலிருந்து எடுக்கப்பட்டு அருகே வைப்பட்டு தொடந்து நெருப்பு எரிந்தமையே. இதுசரியாக பால் அப்பம் செய்யும் ஒருவர் அடுப்பிலிருந்து மேல் சட்டியை இறக்கி வைத்த பின்னரும் அதில் நெருப்பு எரிவது போன்ற காட்சி. இப்போது தந்தைக்கு நமது வீடு, மனைவி, பையன் எல்லோருமே சுத்த பொய்யர்கள் ஆகிவிட்டார்கள். :D

அரசியலில் தோசை பிரட்டல் இருப்பது புதுமை அல்ல. நடந்தவற்றை நாம் முழுமையாக கிரகிக்கும் வரை அவர்கள் சொல்வதை ஏற்பது நமது பக்கத்துக்கு தேவையானவர்களை சேர்த்துகொள்ள உதவும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மல்லை சார்.. எனக்கு இரண்டு பாலப்பம் சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டுவிட்டது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

தயாமாஸ்டர்

கேபிபோன்ற முள்ளிவாய்க்காலுக்கு பின் சரணடைந்தவர்கள்? பற்றி  நானும் இப்படித்தான்  நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

தயா வாத்தி சொல்லிக்குடுத்த ஆங்கில இலக்கணம்தான் இன்றுவரைக்கும் கைகுடுக்குது.. அதுக்கென்ன இப்ப?? :D

அரசாங்கத்தின் பின்னிணியுடன் புதிய புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு உதவிகேட்டு த.தே.மக்கள் முன்னனியும் உடந்தையாகவுள்ளதாக புலநாய் செய்திகள் தெரிவிக்கின்றன இல்லாவிட்டால் இவர்களது பழைய 
கிறிமினல் குற்றங்களிற்காக கைது செய்யபடுவார்கள் என புலநாய்கள் வெருட்டியுள்ளனர்.

இவ்வளவு அழிவுகளுக்கு பின் புலிகள் அமைப்பு இப்பொழுது உருவாவது சாத்தியமில்லை. புலிகள் அமைப்பு என்பது தலைவர் வழியில் வந்த அமைப்பு. அரசாங்கத்தின் பின்னணியுடன் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டால் அதற்கு புலிகள் அமைப்பு என்று பெயர் வைப்பதை முதலில் நிறுத்துங்கள். :icon_idea: அத்தோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவான கட்சியும் அல்ல. :rolleyes: இங்கு கொஞ்ச பேர் சந்தடி சாக்கில் தமக்கு பிடிக்காதவர்களை துரோகி போல் காட்ட முற்படுகிறார்கள். :icon_idea:

யார் அந்த புலநாய் என்றும் சொன்னால் நல்லா இருக்கும் அண்ணை. :lol: அதோட அந்த புலநாய்கள் வெருட்டிய செய்தியை உங்களுக்கு கூறிய புலநாய் யார் என்றும் சொல்லுங்கள். :lol:

நாங்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதும் இல்லை. அதற்காக கண்மூடித்தனமாக மற்றவர்கள் பேச்சுக்கு எடுபட்டுப்போவதும் இல்லை. ஒருவர் சரியான பாதையில் செல்வதாக தோன்றும் வரை அவருக்கு ஆதரவு வழங்குவோம். இங்கு இவர்கள் செயற்பாடு எதுவும் பாதை மாறியமை போல் இதுவரை தோன்றவில்லை. :icon_idea:

Edited by துளசி

 இவர்கள் செயற்பாடு எதுவும் பாதை மாறியமை போல் இதுவரை தோன்றவில்லை---துளசி

புரட்சி என்பது மிகவும் இரகசிகமானது வாய் பேச்சாலும் இனைய எழுத்தாலும் உருவாக்கமுடியாது அதற்கு உலக ஒழுங்கில் போய்தான் செயல்வடிவில் தான் செய்து முடிப்பது
சிங்கத்தின் குகைக்குள் இருந்து சும்மாகுரைக்கமுடியாது--இவர்கள் தேசியம் என்ற ஒற்றை சொல்லை உச்நரித்து ஒட்டுமொத்த தமிழனையும் முட்டாளாக்குகிறார்கள்.

அண்மைக்காலமாக இவர்கள் வளர்ச்சி பொறுக்காமல் இவர்கள் மேல் பல்வேறுபட்ட தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நீங்கள் குற்றம் சாட்டினால் அதை ஆதாரத்துடன் முன்வையுங்கள். நீங்கள் ஆதாரமற்று தனியே புலநாய் செய்திகள் தெரிவிக்கிறது என்று கூறினால் அதை நம்ப வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

மனோ கணேசன் அவர்களும் தான் இலங்கையிலிருந்து கொண்டு இலங்கைக்கெதிராக கதைக்கிறார். அப்படியானால் சிங்கத்தின் குகைக்குள் இருந்து சும்மா குரைக்க முடியாது என்ற உங்கள் வார்த்தைப்படி அவரையும் துரோகி என்கிறீர்களா?

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் முத்திரை குத்துவதற்கு என்று சிலர் ரப்பர் ஸ்ராம்ப்புடன் எப்பவும் இருக்கின்றார்கள். ஆனால் இந்த முத்திரை குத்தும் தொழிலை யாரும் மதிப்பதில்லை என்று அவர்களுக்குப் புரியாது. வேப்பிலை அடித்து தலையில் எலுமிச்சைப் பழம் தேய்த்தாலும் இவர்கள் பித்தம் தெளியாது!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எம்மைக் கவனிக்கவில்லை தயா மாஸ்ரரே எமக்கு உதவினார். பெல்டி அடித்தார் திருமதி அனந்தி....

s2751.jpg
எழிலன் திருகோணமலை மாவட்டத்தில் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த
பொழுது எமக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உதவிகளை வழங்கவில்லை . அக்காலப்பகுதியில் நாம் எமக்கு ரெலிபோன் வசதிகளைச் செய்யுமாறு தயாமாஸ்ரரிடம் கோரிய பொழுது அவர் எமக்கு தொலைபேசி தந்தார் என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார் .
 
வடமராட்சி கிழக்கில் தயாமாஸ்ரருடன் நீண்ட நேரம் மெய்மறந்து உரையாடியமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
 
அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் ,
நாங்கள் என்னுடைய கணவனான எழிலன் இயக்கத்தில் இருந்த காலத்திலிருந்து மிகவும் நெருக்கமான நண்பர்கள் . நாம் திருகோணமலையில் இருந்த பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் எமக்கு தொலைத் தொடர்பு கருவிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரவில்லை .
 
அக்காலப்பகுதியில் நான் தாயாமாஸ்ரரிடம் கேட்டுக்கொண்டதற்கமைய அவர் எமக்கு ரெலிபோன் வசதிகளைச் செய்து தந்திருந்தார் . அந்த அளவிற்கு தயாமாஸ்ரர் மிகவும் நல்ல மனிதர் .
 
ஆனால் அவர் தற்பொழுது அரசாங்கத்தின் சூழ்நிலைக் கைதியாகவுள்ளார் . இவரைப் போன்ற பலர் இன்னமும் சூழ்நிலைக் கைதிகளாகவே வாழுகின்றனர் . முன்னாள் போராளிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என்றார் .
 
யாழ் நிருபர் .
 
முன்னர் உள்ள செய்தியையே இங்கு சில மாற்றங்கள் செய்து தமது விருப்பில் தலைப்பிட்டுள்ளார்கள்.

வடமராட்சி கிழக்கில் தயாமாஸ்ரருடன் நீண்ட நேரம் மெய்மறந்து உரையாடியமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

இது செய்தி எழுதப்பட்ட விதத்துக்கு ஒரு சான்று.

முதல் செய்தியிலேயே எழுதப்பட்டுள்ளது அனைத்தும் உண்மையானதா என ஏற்கனவே கேட்டிருந்தேன்.

அனந்தி அக்காவே தான் அங்கு என்ன கதைத்தார் என யாழில் வந்து கூறுவது நல்லது என்பது என் கருத்து.
 
Edited by துளசி

புலிகள் எம்மைக் கவனிக்கவில்லை தயா மாஸ்ரரே எமக்கு உதவினார். பெல்டி அடித்தார் திருமதி அனந்தி....

s2751.jpg
எழிலன் திருகோணமலை மாவட்டத்தில் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த
பொழுது எமக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உதவிகளை வழங்கவில்லை . அக்காலப்பகுதியில் நாம் எமக்கு ரெலிபோன் வசதிகளைச் செய்யுமாறு தயாமாஸ்ரரிடம் கோரிய பொழுது அவர் எமக்கு தொலைபேசி தந்தார் என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார் .
 
வடமராட்சி கிழக்கில் தயாமாஸ்ரருடன் நீண்ட நேரம் மெய்மறந்து உரையாடியமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
 
அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் ,
நாங்கள் என்னுடைய கணவனான எழிலன் இயக்கத்தில் இருந்த காலத்திலிருந்து மிகவும் நெருக்கமான நண்பர்கள் . நாம் திருகோணமலையில் இருந்த பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் எமக்கு தொலைத் தொடர்பு கருவிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரவில்லை .
 
அக்காலப்பகுதியில் நான் தாயாமாஸ்ரரிடம் கேட்டுக்கொண்டதற்கமைய அவர் எமக்கு ரெலிபோன் வசதிகளைச் செய்து தந்திருந்தார் . அந்த அளவிற்கு தயாமாஸ்ரர் மிகவும் நல்ல மனிதர் .
 
ஆனால் அவர் தற்பொழுது அரசாங்கத்தின் சூழ்நிலைக் கைதியாகவுள்ளார் . இவரைப் போன்ற பலர் இன்னமும் சூழ்நிலைக் கைதிகளாகவே வாழுகின்றனர் . முன்னாள் போராளிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என்றார் .
 
யாழ் நிருபர் .
 
இதன் அர்த்தம் என்னங்க செய்தியை பிரசுரித்த மகா ........................
 
தமிழீழ விடுதலைப்புலிகள் இவர்களது சொந்த தேவைக்கு உதவவில்லை என்பதை குரிப்பிடுகிரறார் என்று தான் புரியக்கூடியதாய் இருக்கு ....உங்களுக்கு எப்பிடி புரியுதுங்க /
 
அதற்கு மேலால் இவர்தான் அதை கூறினாரா என்பதும் இணைத்தவர்களாலும் ,செய்தியை வெளியிட்டவர்கல்லாலும் உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் இக்காலகட்டத்தில் அவசியத்திலும் அவசியம் .
 
அல்லது தேசியத்தலைவர் வாழுகிறார் என்ற ஒரு செய்தியை அகற்றியது போல இதையும் நிர்வாகம் அகற்றுமா ....................
 
ஒரே கேள்விக்குறியாய் போகுதப்பா ...............சம கொமடி பா ......... :D
  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட

அரசுடன் சேர்ந்து வேலை  செய்யலாம்

ஒரே பெயருடன் மற்றதெல்லாம் அடிபட்டுப்போகும்

ஒரத்தரும் கேள்வி  கேட்கமாட்டார்கள்............. :(  :(  :(

அனந்தி சொல்லியிருப்பது புலிகளின் தலைமை அதன் கீழ் இருந்த தங்களை கவனிக்காத போது, தலைமையில் ஒருவராக இருக்காத சாதாரண ஒருவரான தயாமாஸ்டர் கவனித்தார் என்பதே. 

தலைமை அலுவலாக இருந்தது. நாங்கள் தயாமாஸ்டரிடம் உதவி வாங்கினோம். எமது உறவு(தொடர்பு) அவர் புலிகளுடன் இருந்த காலம் முதல் இருந்து வருவது என்றதுதான் அவர் சொல்ல வந்தது.

புலிகளின் தலைமை தங்களை கவனிக்காமல் ஒதுக்கிவைத்தாகவும், தயாமாஸ்டர் அந்த நாளிலேயே அரசுடன் இணங்கி புலிகளுக்கு எதிராக செயல்பட்டத்தால் தாங்கள் தயாமாஸ்டரை அணுகி அந்த உதவியை பெற்றுக்கொண்டனர் என்ற பொருளில் பேசவில்லை.

ஏன்தான் தமிழ் ஊடகங்களுக்கு மனசாட்சியான விளக்கம் கொடுப்பது எப்பவுமே வில்லங்கமாக இருக்கிறது என்பதுதான் புரியவில்லை.  <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.