Jump to content

கருவாட்டு குழம்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"கருவாட்டு குழம்பு செய்யும் முறை''

 

 

1505327_768306186532690_1546631492_n.jpg

 

 

தேவையான பொருட்கள் :

நெத்திலி கருவாடு - 25
மொச்சை - 1 கப்
கத்திரிக்காய் - 2
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - சிறிது
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க

செய்முறை : 

நெத்திலி கருவாடை சூடான நீரில் 2 - 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்ததை நன்றாக 4 - 5 முறை நீர் மாற்றி சுத்தம் செய்து எடுக்கவும். மொச்சையை ஊற வைத்து வேக வைத்து எடுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பாதி வதங்கியதும் கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

இதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும்.

தூள் பச்சை வாசம் போனதும் வேக வைத்த மொச்சை, கருவாடு சேர்த்து மூடி கொதிக்க விடவும். கருவாடு நன்றாக வேக வேண்டும்.

கடைசியாக புளி கரைசல், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு எடுக்கவும்.

சுவையான வாசமான மொச்சை கருவாட்டு குழம்பு தயார்.

தயாரிப்பு : வனி

 

FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மொச்சை என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்காக  :D
 
Top-Op-Vall-Beans-250px.jpg
 
இங்குள்ள பல்பொருள் அங்காடியில் மேலே உள்ள பொதி போன்று பெற்றுக்கொள்ள முடியும் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், தமிழரசு!

 

சும்மா இண்டைக்குக் கொஞ்சம் ஆறுதலா வீட்டில இருப்பம் எண்டு யோசிச்சன்! :huh:

 

இஞ்சை பாருமப்பா, உங்கட யாழ் களத்தில இண்டைக்கு ஒரு நல்ல ரெசிப்பி ஒண்டு வந்து கிடக்குது!

 

நானும் பாத்தனான், இந்த ஊரில நெத்தலிக் கருவாட்டுக்கு, நான் இப்ப எங்க போறது?

 

நான் என்ன கேட்டாலும், உங்களுக்கு இது தானே மறுமொழி?

 

சரீ..... சரீ....... கொஞ்சம் பொறுமன்!  கடை திறக்கட்டும்! :icon_idea:

 

 

Link to comment
Share on other sites

 இங்க பருப்பும் உருளைக்கிழங்கும் தான் மதிய சாப்பாடு, ஒரு கை பார்த்திட்டு வந்தா இப்பிடி வாயூற வைக்கிறீங்க... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவாட்டை அவ்வளவு நேரம்  ஊறவைக்க வேண்டுமா ?  ஒரு அரை மனித்தியாளம் போதும் என நினைக்கின்றேன்.

உப்பும் இறக்கும் போது சுவை பார்த்துப் போட்டால் போதும். கருவாட்டில் ஏற்கனவே தேவையான உப்பு இருக்கும் !! :)

பிட்டுக்கு அந்தமாதிரி இருக்கும் !! :D

Link to comment
Share on other sites

கருவாட்டுக்குள்ள முருங்கை காய் கத்தரிக்காய் பொரித்துபோட்டால் அந்தமாதிரி இருக்கும் 
 
இணைப்புக்கு நன்றி  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவாட்டை அவ்வளவு நேரம்  ஊறவைக்க வேண்டுமா ?  ஒரு அரை மனித்தியாளம் போதும் என நினைக்கின்றேன்.

உப்பும் இறக்கும் போது சுவை பார்த்துப் போட்டால் போதும். கருவாட்டில் ஏற்கனவே தேவையான உப்பு இருக்கும் !! :)

பிட்டுக்கு அந்தமாதிரி இருக்கும் !! :D

 

ஏனெண்டு தெரியேல்லை.....வீட்டிலை கருவாட்டுக்குழம்பு சமைச்சால் பக்கத்துவீட்டு வெள்ளைக்காரங்கள் ஏதோ கொல்லக்கொண்டு போறமாதிரி பாக்கிறாங்கள்  :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனெண்டு தெரியேல்லை.....வீட்டிலை கருவாட்டுக்குழம்பு சமைச்சால் பக்கத்துவீட்டு வெள்ளைக்காரங்கள் ஏதோ கொல்லக்கொண்டு போறமாதிரி பாக்கிறாங்கள்  :blink:

 
கருவாட்டுக் குழம்பு செய்து தனிய அடியாமல், கொஞ்சம் அவயளுக்கும்  கொடுத்தீங்கள் எண்டால், அடுத்த நாள், நெத்தலியா, கட்டாக்கருவாடா, றால் கருவாடா வாங்கி வர? எண்டு கேப்பாங்கள்.
 
இங்க லண்டன் தமிழ் கடையளில வெள்ளனவே, 2, 3 பவுனுக்கு. புரியாணி பார்சல் வாங்க நிக்கிற வெள்ளையள், டெலிவரி லேட் எண்டால், டெலிவரி காரருக்கு என்னாச்சோ, ஏதாச்சோ எண்டு பதறுவதைப் பார்க்க வேண்டுமே. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
கருவாட்டுக் குழம்பு செய்து தனிய அடியாமல், கொஞ்சம் அவயளுக்கும்  கொடுத்தீங்கள் எண்டால், அடுத்த நாள், நெத்தலியா, கட்டாக்கருவாடா, றால் கருவாடா வாங்கி வர? எண்டு கேப்பாங்கள்.
 
இங்க லண்டன் தமிழ் கடையளில வெள்ளனவே, 2, 3 பவுனுக்கு. புரியாணி பார்சல் வாங்க நிக்கிற வெள்ளையள், டெலிவரி லேட் எண்டால், டெலிவரி காரருக்கு என்னாச்சோ, ஏதாச்சோ எண்டு பதறுவதைப் பார்க்க வேண்டுமே. 

 

எனக்கும் இது முந்தி வடிவா விளங்கிறதில்லை, நாதம்!

 

முந்தி லண்டனில 'கோலம்' எண்டொரு ரெஸ்ட்வாரன்ட் இருந்தது. பின்னேரமெண்டால் வெள்ளையள் கியூ கட்ட வெளிக்கிட்டிடும்! கையில ஒரு பியர் போத்திலோட நிப்பினம்!

 

நானும் கோலத்தில ஏதும் சும்மா குடுக்கிறாங்களோ எண்டு போய் விசாரிச்சுப் பாத்தன்!

 

டேஸ்டுக்க்குப் 'பப்படம்' வாங்க நிக்கீனமாம்! :lol:   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தேசிய மட்டத்தில் 5 %  யில்லை. தேசிய மட்டத்தில் 29 பேரை தெரிவு செய்வார்கள்.  100%/29 = 3.45%  3.448% மேல் கிடைத்தால் ஒரு இடம் கிடைக்கும். சென்ற தேர்தலில் சைக்கிளுக்கு ஒரு இடம் கிடைத்தது. கொழும்பில் டக்ளஸ் கட்சி போட்டியிடுவதும் தேசிய மட்டத்தில் கிடைக்கலாம் என்பதினால் தான்.  வடக்கு கிழக்கில் தமிழ் வாக்காளர்களினால் ஜேவிபி உட்பட சிங்கள கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் தேசிய மட்டத்தில் சிங்களவர்களுக்கு இடம் கிடைக்க உதவபோகிறது. 
    • முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட டெல்லியை இலங்கை தமிழர் கடற்பரப்பில் கொள்ளை அடிப்பதற்கு தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதிக்கும் படி கொழும்பற்கு  அழுத்தம் கொடுக்கும் படி கமிழ்நாட்டு தமிழர்களின் அரசியல் கட்சிகளினால் தொடர்ச்சியாக வேண்டுகோள் வைக்கபடுகின்றது. ஆனால் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வருகின்ற கொள்ளையர் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
    • ஆமா பையா.நாளை மதியம் முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும். பையா உங்கள் நேரம் இரவு 6 மணியாகலாம்.
    • நீங்க (Bar) பாரைத் தானே சொல்றீங்க.
    • ஓம்…கிறீம்..ஐஸ் கிரிறீம்… உடான்ஸ் சாமியாய நமஹ… மகனே….. நீ வட்டம் கீறியது தப்பல்ல மகனே… அந்த வட்டத்துள் கோஷானை நீ உள்ளடக்கியதுதான் பத்து பிராமணர்களை கொல்லும் தப்புக்கு நிகரானது…. அதனால்தான் முருகர்சாமியின் கோபத்துக்கு ஆளானாய்… எகத்தாளம், ஏகதாளம், ஆதி தாளம்…இவை எல்லாம் உனக்கானவை அல்ல மகனே…. பரம்பொருள் உடான்ஸ்சாமியை மனதில் நினைத்து உச்சாடனம் செய்த வார்த்தைகள் இவை. புரிந்தவன் பிஸ்தா…. புரியாதவன் பாதாம்…. ஓம்…கிரீம்…டோநட்….
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.