Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆம் ஆத்மி கட்சியில் இணைய கூடங்குளம் உதயகுமாரனுக்கு அழைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை: ஆம் ஆத்மி கட்சியில் இணையுமாறு கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரனுக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷன்அழைப்பு விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் இடிந்தகரை கிராமத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்குழுவினர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷன் ஏற்கெனவே போராட்டம் நடைபெறும் இடிந்தகரை கிராமத்துக்கு வந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

அத்துடன், ஆம் ஆத்ம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று டெல்லியின் முதல்வராக பொறுபேற்ற அரவிந்த் கெஜ்ரிவாலும் சில மாதங்களுக்கு முன்பு இடிந்தகரைக்கு வந்து போராட்டக் குழுவினரை சந்தித்ததோடு,கூடங்குளம் காவல் நிலையத்திற்கு சென்று  போராட்ட குழுவினர் மீது போடப்பட்டு உள்ள வழக்குகள் குறித்தும் விசாரித்தார்.

uday%202%281%29.jpg

 

இந்த  நிலையில், வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் இன்று மீண்டும் இடிந்தகரை கிராமத்துக்கு வந்தார்.

போராடும் மக்களுடன் கலந்துரையாடிய அவர்,பின்னர் போராட்ட குழு நிர்வாகிகளான சுப.உதயகுமாரன்,புஷ்பராயன்,முகிலன்,மைபா.சேசுராஜன் ஆகியோருடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.

uday%201.jpg

அப்போது அவர்களை ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகளாக தமிழகத்தில் செயல்பட வலியுறுத்தியதாக தெரிகிறது.அதற்கு போராட்டக் குழுவினர்,"தமிழகத்துக்கு நதிநீர் பிரச்னை,மீனவர் பிரச்னை என பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது.இது தொடர்பாக உங்களது கட்சியின் நிலைப்பாட்டை தெரிந்து கொண்ட பின்னரே அக்கட்சியில் இணைந்து பணியாற்றுவது பற்றி முடிவு செய்ய முடியும்”என தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு பற்றி பிரசாந்த் பூஷன்  செய்தியாளர்களிடம் கூறுகையில், "கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடங்கியதில் இருந்தே போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். போராடும் மக்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காகவே நான் இங்கு வந்ததேன்.நான் மட்டும் அல்லாமல் எங்களது ஆம் ஆத்மி கட்சியும் இது போன்ற நாசகார அணு உலைகளை மூட வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் போட்டியிட திட்டமிட்டு உள்ளது.அதற்காக நேர்மையான நபர்களை தேர்வு செய்து வருகிறோம்.அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் தனக்காக அல்லாமல் இந்த நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராடிவருகிறார்.

அவரையும் அவருடன் இணைந்து போராடும் குழுவினரையும் போன்ற போராளிகள் அரசியலுக்கு வந்தால் அவர்களை ஆம் ஆத்மி கட்சி மிகுந்த மகிழ்ச்சியோடும் திறந்த மனதுடனும் வரவேற்கும்.

 

 

தமிழகத்திலும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நேர்மையான கட்சியை மக்கள் விரும்புகின்றனர். அதனால், ஆம் ஆத்மி கட்சி தமிழகத்திலும் துளிர்க்கும்” என்றார்.

ஆம் ஆத்மி கட்சியில் இணையுமாறு போராட்டக்குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பது தமிழக அரசியல் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-ஆண்டனிராஜ்

 

http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=post&section=post&do=new_post&f=151

1483303_575039162566360_49536447_n.jpg
 
இன்று இடிந்தகரைக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி அரசியல் ஆலோசகர் திரு .பிரசாந்த் புஷன் னிடம் சில கேள்விகளை வைத்தோம் .

ஈழ தமிழர் விவகாரத்தில் உங்கள் கட்சியின் நிலை என்ன ? அதற்கு அவர் எங்கள் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த பிரச்சனையை பேசி விரைவில் ஒரு முடிவு எடுபதாகவும், அது தமிழ் சஹோதரர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என உறுதி கூறினார் .

தேசிய இனமக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆம் ஆத்மி எந்த வழியில் தீர்வு காணும் என கேட்டேன் , அதற்கு அவர் அனைவரும் சுதந்திரமாகவும் , கௌரவமாகவும், அனைத்து உரிமைகளையும் பெற்று ஒற்றுமையுடன் வாழும் வகையில் பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கும் என கூறினார் .

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சியின் கையாகாலாத தனத்தை வன்மையாக கண்டிபதாக கூறினார் .

அணு உலை பிரச்சனையில் அரசின் கொள்கை முடிவு தவறு என்றும் , மக்களின் உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அணு மின் உற்பத்தியை ஆம் ஆத்மி கண்டிபதாகவும்,கூடங்குளம் அணு உலைகள் ஊழல் செய்ய வசதியாக தான் அரசியல் வாதிகளால் உருவாக்க பட்டதாக நம்புகிறேன் என உறுதிபட கூறினார் .

மேலும் திறந்த மனதுடன் ஆம் ஆத்மி கட்சிக்கு அண்ணன் உதயகுமாரையும் , அணு உலை போராளிகளையும் வருமாறு அழைப்பும் விடுத்துள்ளார் .இதன் மூலம்
பாராளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் சூடு பிடிக்கும் , தமிழக அரசியலில் மாற்றங்கள் வரும் என நினைக்கிறேன்.

தமிழகத்தில்தமிழர்களின் இன நலனையும் , தமிழ் மக்களின் பிரச்சனைகளையும் ஆம் ஆத்மி புரிந்து கொண்டு தமிழ் இன நலனுக்கான கொள்கைகளை முன் வைத்து அரசியல் களத்தில் இறங்குமானால் தமிழ் தேசிய மக்கள் சார்பில் நாம் ஆதரிக்கலாம் என நினைக்கிறேன் நண்பர்களே !
 
குணசீலன் வேலன்
(facebook)

கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு ஆம்ஆத்மி கட்சி அழைப்பு

ஆம்ஆத்மி கட்சியில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சேர வேண்டும் என, அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் அழைப்பு விடுத்தார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராடும் போராட்டக் குழுவினர் முகாமிட்டுள்ள இடிந்தகரைக்கு பிரசாந்த் பூஷண் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்தார். அங்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, இடிந்தகரை மக்கள் மத்தியில் பிரசாந்த் பூஷண் பேசியது: நாங்கள் சாமானிய மக்களுக்காகத்தான் ஆம்ஆத்மி கட்சியைத் தொடங்கியுள்ளோம். ஊழலற்ற ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

ஊழலை எதிர்த்து இயக்கம் நடத்திவந்துள்ளோம். நேர்மையான, ஊழலற்ற ஆட்சி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி தொடங்கி இன்றைக்கு தில்லியில் ஆட்சியில் அமர்ந்துள்ளோம். ஊழலை வெறுப்பவர்கள், மாற்று அரசியலை விரும்புவோர் எங்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஊழலை எதிர்த்து மக்கள் உரிமைக்காகப் போராட்டம் நடத்தி வருகின்ற அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் எங்கள் கட்சியில் சேர வேண்டும் என்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பிரசாந்த் பூஷண் கூறுகையில், ஆம்ஆத்மி கட்சி மக்களவைத் தேர்தலில் பல்வேறு இடங்களில் போட்டியிட உள்ளது.

அதற்காக நேர்மையான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய இருக்கிறோம். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றான கட்சியாக ஆம்ஆத்மி வளரும்.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். இதைப் பார்த்து இந்திய அரசு மெüனமாக இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.

உதயகுமார் பேட்டி

 

பிரசாந்த் பூஷணின் அழைப்புகுறித்து உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் கூறியது: ஆம்ஆத்மி கட்சியில் சேருமாறு பிரசாந்த் பூஷண் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், தற்போது எங்களிடம் அப்படி எந்த முடிவும் இல்லை. தேவைப்பட்டால் இது தொடர்பாக நாங்கள் போராட்டக் குழுவினர், சமுதாய மக்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்றனர்

 

(facebook)

December 29, 2013

S. P. Udayakumar

Parish Priest’s Bungalow

Idinthakarai 627 104

Tamil Nadu

Mr. Arvind Kejriwal

Chief Minister of Delhi

New Delhi

(Through Senior Advocate Mr. Prashanth Bhushan)

Dear Arvindji:

Congratulations on your assuming charge as the Chief Minister of Delhi. This is a landmark political event of our times. Your victory has made the entire country feel hopeful about our politics and futures. Your win has kindled a new political energy all over the country. In a country where mostly unfavorable and undesirable elements run around as “leaders” and “ministers,” we are happy to have you and your team as a fresh breath of our political life. We wish you all the very best.

Please consider the following to enhance transparency, accountability and popular participation in your administration:

[1] Please tell the people of Delhi that you are their servant and as such they should call you by name or with the suffix ‘ji’ and definitely not as “Honorable Chief Minister” and other such alienating salutations.

[2] Please don’t let the people make a messiah out of you, touch your feet and seek your blessings etc. As a man of principle, I know, you will let our people respect and cherish their own dignity.

[3] Please talk to the people of Delhi over TV and radio at least for 10 minutes every Sunday and tell them what you had done over the past 7 days and what you plan to do in the next 7 days. That will keep the people abreast of recent developments and they will certainly appreciate being informed of all your activities and actions.

[4] Please meet the press at least once a month and answer their questions openly and honestly. Both the media, one of the pillars of democracy, and the people themselves would appreciate hearing your heart on various issues of public interest.

[5] When you are about to take an important decision on a policy matter or a development project, please write a column in the newspapers and magazines and explain why you take that decision and how the ordinary people of your state would benefit from that decision. And do invite people’s feedback, comments and even criticism. Such an open debate and honest consideration of people’s thoughts and feelings will add to the credibility of your government.

[6] Please have your office staff read all the newspapers and magazines and collect all the “letters to the editor,” op-ed pieces and editorials and send them to the relevant departments and concerned officials for immediate attention and/or follow-up action. This practice has died down in the recent times and must be retrieved.

[7] Please abolish the “Constituency Development Fund” that is being allotted to the MLAs if such a practice exists in the Delhi government. This Fund is another source of corruption and malpractices.

[8] Turning to a more specific problem, please take efforts to ban unauthorized and unwanted men sitting next to the conductor and/or driver in the Delhi public buses as they often happen to be hassles and threats for the passengers and their safe journey.

[9] Though I appreciate your efforts to help the autorickshaw drivers of Delhi, please do a criminal profiling of all the taxi and autorickshaw drivers of Delhi to enhance public safety and help the drivers to cope with job-related stress and ‘road rage’ etc.

[10] And finally, here is something you already know and cherish: “I will give you a Talisman. Whenever you are in doubt, or when the self becomes too much with you, apply the following test: Recall the face of the poorest and the weakest man whom you may have seen and ask yourself if the step you contemplate is going to be of any use to him. Will he gain anything by it? Will it restore him to a control over his own life and destiny? In other words, will it lead to Swaraj? For the hungry and spiritually starving millions? Then you will find your doubts, and your self melting away.”

Wishing you and your team all the very best, I send you my best personal regards and all peaceful wishes.

Cordially,

S. P. Udayakumar.

(facebook)

1503366_10152156824997068_992461848_n.jp

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் கால இந்தியாவை ஆள இருக்கும், ஆம் ஆத்மி கட்சியில் உதயகுமார் இணைவது...
அவருக்கும், அவரது அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டத்துக்கும்... நல்லது என நினைக்கின்றேன்.

ஆம் ஆத்ம கட்சி நம்பிக்கைகளை நிறைய விதைக்கின்றது. காலவோட்டத்தில் அரசியல் சாக்கடைக்குள் வீழாமல் என்றுமே சரியான வழியில் சென்றால் தென்னாசிய அரசியலில் பல மாற்றங்களை உருவாக்க முடியும். பொறுத்து இருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களாகவே... இவரைத் தேடி வரும் போது, இணைவது புத்திசாலித்தனம்.
அதற்குள்... தமிழக திமிங்கில கட்சிகள், முதலில் நுளைந்து விட்டால்,
இவர்.. இணைந்து, பிரயோசனம் இல்லை.

05.01.2014

 

இடிந்தகரையில் அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்களின் தேசியக் கருத்தரங்கம்

தமிழ் தேசிய இயக்கங்கள், இஸ்லாமிய அமைப்புகள் , தமிழர் நலன் கட்சிகள் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் ஒன்று கூடுகை
புதிய கூட்டணிக்கு வித்திடுமா...?

 

 

1487383_578514208885522_340320579_n.jpg

 

1525516_581073751970718_818130689_n.jpg

 

1497568_581073908637369_653790189_n.jpg

 

1558603_581073265304100_245157637_n.jpg

 

1524676_581073348637425_333305720_n.jpg

 

1504942_581073641970729_396090071_n.jpg

 

1557492_581074051970688_322851419_n.jpg

 

1536537_581074058637354_1654291815_n.jpg

 

1536679_581074091970684_1814323198_n.jpg

 

1521938_581074148637345_904423691_n.jpg

 

580606_581074168637343_1022113092_n.jpg

 

1509741_581074195304007_499176221_n.jpg

 

482471_581074265304000_2091195493_n.jpg

 

66796_581074301970663_432951399_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் ஆத்ம கட்சி நம்பிக்கைகளை நிறைய விதைக்கின்றது. காலவோட்டத்தில் அரசியல் சாக்கடைக்குள் வீழாமல் என்றுமே சரியான வழியில் சென்றால் தென்னாசிய அரசியலில் பல மாற்றங்களை உருவாக்க முடியும். பொறுத்து இருந்து பார்ப்போம்.

 

அதை மேற்கு உலகு ஆதரிக்குமா?
இந்தியா இப்போ கிட்டதட்ட அமெரிக்காவின் இன்னொரு மாநிலம். அந்தளவிற்கு தற்போதைய காங்கிரஸ் அரசு இந்தியாவை விற்றுவிட்டது.

wrapper.jpg

Issue Date:12-01-2014

http://www.kalkionline.com/archives/archives_home.php

 

1545646_579859842084292_734035244_n.jpg

 

(facebook)

 

எனக்கென்னமோ உதயகுமார் ஐயா ஆம் ஆத்மியில் இணைந்து போட்டியிடப்போகிறார் போலிருக்கு. இதில் காட்டப்பட்டுள்ள மற்ற நபர்களில் ஒருவர் கலக்டர் சகாயம். மற்றவர் உமாசங்கர் ஐ.ஏ.எஸ். இவர்கள் போட்டியிடுகிறார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

எனினும் உதயகுமார் ஐயா முகநூலில் இதுபற்றி எதுவும் அறிவிக்கவில்லை.

Edited by துளசி

சகாயம் சேருவது நல்லது....உமாசங்கர் IAS இப்போது ஒரு அல்லுலோயா கோஸ்டி...மதமாற்ற ஆட்களைபிடிக்கும் வேலையில் உள்ளான்...

 

ஏன் சீமான் ஆம் ஆத்மியில் சேரகூடாது?? :) (ஆம் ஆத்மி அலையில் வென்று அடுத்த லோக்சபா எலெக்சனில் வென்று பாராளுமன்றம் செல்லலாம்....தனியாக நின்றால் டெபோசிடும் தேறாது)

Edited by naanthaan

சகாயம் சேருவது நல்லது....உமாசங்கர் IAS இப்போது ஒரு அல்லுலோயா கோஸ்டி...மதமாற்ற ஆட்களைபிடிக்கும் வேலையில் உள்ளான்...

 

ஏன் சீமான் ஆம் ஆத்மியில் சேரகூடாது?? :) (ஆம் ஆத்மி அலையில் வென்று அடுத்த லோக்சபா எலெக்சனில் வென்று பாராளுமன்றம் செல்லலாம்....தனியாக நின்றால் டெபோசிடும் தேறாது)

 

ஆம் ஆத்மி இந்தியாவை ஊழல் அற்ற நாடா சுத்தபடுத்த நிக்குது சீமான் அப்படி அல்ல மைக்கில் கத்தி ஈழம் பிடிக்க நிக்கிறார் இரண்டும் ஒன்று இல்லை பாருங்கோ .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

லட்சக்கணக்கான  அரசியல் தலைவர்கள் இந்தியாவிலிருக்க..........

நீங்கள் இருவரும் சீமானை  மட்டும் தேர்ந்தெடுத்தது

அவரது வளர்ச்சியையும்

எதிர்பார்ப்பையுமே தருகிறது

லட்சக்கணக்கான  அரசியல் தலைவர்கள் இந்தியாவிலிருக்க..........

நீங்கள் இருவரும் சீமானை  மட்டும் தேர்ந்தெடுத்தது

அவரது வளர்ச்சியையும்

எதிர்பார்ப்பையுமே தருகிறது

 

அவர்கள் எல்லாம் சீமான் மாதிரி ஈழம் வைத்து அரசியல் செய்யவில்லை பாருங்கோ .

 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் எல்லாம் சீமான் மாதிரி ஈழம் வைத்து அரசியல் செய்யவில்லை பாருங்கோ .

 

 

சரி

இந்த திரிக்கும்

ஈழத்துக்கும் என்ன  சம்பந்தம்??????????????? :(  :(

அப்போ

ஈழத்தை விற்பது யார் இங்கு.................???? :(  :(  :(

சகாயம் சேருவது நல்லது....உமாசங்கர் IAS இப்போது ஒரு அல்லுலோயா கோஸ்டி...மதமாற்ற ஆட்களைபிடிக்கும் வேலையில் உள்ளான்...

 

ஏன் சீமான் ஆம் ஆத்மியில் சேரகூடாது?? :) (ஆம் ஆத்மி அலையில் வென்று அடுத்த லோக்சபா எலெக்சனில் வென்று பாராளுமன்றம் செல்லலாம்....தனியாக நின்றால் டெபோசிடும் தேறாது)

 

உமாசங்கர் IAS ஏற்கனவே மதப்பிரச்சினையில் சிக்குப்பட்டிருந்தாலும் ஊழலற்ற நேர்மையை அவரிடம் காணலாம் என அவரையும் தமிழக மக்கள் விரும்பியிருக்கிறார்கள் என கவிஞர் தாமரை அக்கா ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சீமான் அண்ணா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என முன்பே கூறியவர். வைகோ ஐயா வேறு தேசிய கட்சிகள், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து நின்றால் தாம் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் வைகோ ஐயா பா.ஜ.க வுடன் சேரும் முடிவெடுத்த பின் நாம் தமிழர் கட்சி யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என இன்னும் குறிப்பிடவில்லை. தேர்தலில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என முழுமையாக தெரிந்த பின்னர் முடிவெடுப்பார்கள் என நினைக்கிறேன்.

2016 இல் சீமான் அண்ணா போட்டியிடுவார்.

 

பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமையும் ஆம் ஆத்மி கட்சியும் !

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து செயல்பட அண்ணன் உதயகுமார் சில நிபந்தனைகளை போட்டுள்ளார் என்று தெரிகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் வலுவான தமிழர் நலக் கூட்டணி உருவாகும் என தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் விரும்பினர். அது இன்று வரை எட்டாத கனவாகவே உள்ளது . தேர்தல் வரும் போது அரசியல் கட்சிகளுக்கு இன நலனை காட்டிலும் கட்சியின் நலனே பெரிது என அவர்கள் விரும்பும் கூட்டணிக்கு சென்று விடுகின்றனர். தமிழர் பிரச்சனைகளுக்கு ஒன்றாக கரம் கோர்க்கும் கட்சிகள் தேர்தலில் கரம் கோர்பதில்லை என்பது வேதனையான விடயம்.

இந்த நிலையில் அணுஉலைப் போராட்டத்தை இந்த நொடி வரை தக்கவைத்து போராடிவரும் அண்ணன் உதயகுமாரின் தேர்தல் நிலைப்பாடு மிக முக்கியமானதாகும். காரணம் மாநில அரசும் நடுவண் அரசும் அணு உலைப் போராளிகளுக்கு சொல்லவொண்ணா துன்பத்தை கொடுத்துள்ளன. அத்தனை பொய் வழக்குகள் அவர்கள் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இடிந்தகரை விட்டு வெளியே வர முடியாதபடி வழக்குகள். அணு உலைப் போராட்டத்திற்கு ஆதரவான மாநிலத்தில் உள்ள கட்சிகள் வலிமையாக இல்லை . இந்திய தேசிய கட்சிகளின் ஆதரவும் இடிந்தகரை போராளிகளுக்கு இல்லை. காங்கிரஸ் பாஜக இரண்டும் மக்கள் விரோதமாக அணுஉலையை ஆதரிக்கும் கட்சிகளாக உள்ளன. அப்படியான சூழ்நிலையில் ஆம்ஆத்மி கட்சி அணு உலைப் போராட்டத்தை மதித்து உதயகுமார் அவர்களை கட்சியில் இணைய அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது அணு உலை போராட்டதிற்கு புதிய வெற்றிப் பாதையை உருவாக்கிக் கொடுக்கலாம்.

ஆனால் உதயகுமார் அவர்கள் தெளிவாக சில நிபந்தனைகளை ஆம் ஆத்மி கட்சிக்கு முன்வைத்து உள்ளார் . முதலில் கட்சியின் பெயரை தமிழ்ப் படுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் சிறப்பு. மேலும் அணுஉலைப் பிரச்சனை, ஈழப் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையில் ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் உதயகுமார் . இந்த பிரச்சனைகளில் தமிழக பெரிய கட்சிகள், இந்திய தேசிய கட்சிகளுக்கு எந்த நிலைப்பாடும் இல்லை என்பது தான் உண்மை. அதனால் ஆம் ஆத்மி கட்சி தமிழர்களுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்தால் உதயகுமார் அக்கட்சியில் இணையக் கூடும் என்று தெரிகிறது.

தமிழர் நலக் கூட்டணி கானல் நீராகிப் போன காரணத்தால் இப்படியான கூட்டணி உருவானால் அது காங்கிரஸ் பாஜக திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என்றே தோன்றுகிறது. கூடவே அண்ணன் உதயகுமார் அவர்கள் ஆம் ஆத்மி கட்சியிடம் சில நிபந்தனைகளை வைக்க வேண்டும் எனவும் தமிழர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ஆம் ஆத்மி கட்சி எதிர்காலத்தில் தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாகக்க துணைபுரியவேண்டும். ஹிந்தி மொழியின் ஒற்றை ஆட்சி மொழிக் கொள்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் . அனைத்து தேசிய இன மொழிகளையும் சமமாக இந்திய அரசு பாவிக்க வேண்டும் வளர்க்க வேண்டும். மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டும். மாநில நிலத்தை பாதுகாக்கும் நில உரிமை சட்டம் கொண்டு வரவேண்டும். நதி நீர் பங்கீடு நேர்மையானதாக இருக்க வேண்டும். தேசிய இன மக்களின் கல்வி , பண்பாடு, மொழி முதலிய சகல உரிமைகளும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். உண்மையான வலிமையான மாநில சுயாட்சி மலர உதவிடவேண்டும் .

இதற்கு ஆம் ஆத்மி கட்சியின் பதில் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அண்ணன் உதயகுமார் மற்ற இயக்கங்களுடன், கட்சிகளுடன் இணைந்து தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியுடன் வலுவான மாற்றுக் கூட்டணி ஒன்றை அமைக்கலாம். இதன் மூலமாவது தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழும் நிலை இந்தியாவில் உருவாகட்டும். தமிழர் நல விரும்பிகள் இது குறித்து உங்கள் மேலான கருத்துக்களை முன்வையுங்கள். மற்ற அரசியல் கட்சிகளும் நம் குரலை கேட்கட்டும்.

 

இராச்குமார் பழனிசாமி

(facebook)

Edited by துளசி

இடிந்தகரைக் கடிதம் – 1/2014
போராட்டத்தின் அடுத்தக் கட்டம் அரசியலா?

வணக்கம். தரமற்ற உபகரணங்களுடனும், பல்வேறுக் குளறுபடிகளுடனும் கட்டப்பட்டிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக துவக்கக் காலத்திலிருந்தேப் போராடி வருகிறோம். கடந்த 2011 செப்டெம்பர் முதல், இன்றோடு 878 நாட்களாக, ஓர் உச்சகட்ட போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். மக்களுக்கான வெற்றி ஒன்றைத் தவிர வேறு எந்த குறிக்கோள்களும், எதிர்பார்ப்புக்களும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரான எனக்கோ, அல்லது குழு நண்பர்களுக்கோ இருந்ததில்லை. பதவிகளையோ, பட்டங்களையோ, பணத்தையோ, பரிசுகளையோ எதிர்பார்த்து நாங்கள் இங்கே இடிந்தகரைக்கு வரவில்லை.

சுமார் இரண்டரை ஆண்டுகளாக மனைவியின் அரவணைப்பின்றி, குழந்தைகளின் குதூகலமின்றி, பெற்றோரின் பாசமின்றி, நாங்கள் வசித்திருந்த வீடுகளின் சுகங்களின்றி பரிதவித்துக் கொண்டிருக்கிறோம். தேசத் துரோகிகள், அமெரிக்கக் கைக்கூலிகள், தீவிரவாதிகள், கோடி கோடியாக பணம் பெறுகிறவர்கள் என்றெல்லாம் பல்வேறு அவதூறுகளை, கடுகளவும் உண்மையற்றக் குற்றச்சாட்டுக்களை சுமந்து கொண்டிருக்கிறோம்.

வாழ்வில் இழந்தவற்றை திரும்பப் பெறுவதே கேள்விக்குள்ளாகி இருக்கும் நிலையில், எங்கள் மீது 360க்கும் அதிகமான கொடும் வழக்குகளை பொய்யாக சுமத்தி, எங்களைக் கைது செய்து, சிறையில் அடைக்க செல்வி. ஜெயலலிதா அவர்களின் அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. இந்திய மக்களுக்கு எந்தத் தகவலும் கொடுக்காது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையூட்டுக் கொடுத்து, அமெரிக்கர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் ஒருதலைப்பட்சமான இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை கொல்லைப்புறம் வழியாகக் கொண்டுவந்தார் மன்மோகன் சிங். அதுதான் தனது பத்தாண்டு கால ஆட்சியின் மகத்தான சாதனை என்று சொல்லும் பிரதமர் எங்களை அமெரிக்கக் கைக்கூலி என்று குற்றம் சுமத்துகிறார்.

நானோ, நண்பர்களோ அரசியலில் குதிப்பதற்காக இங்கே வரவில்லை. பிறர் மீது ஆளுமை செலுத்தித்தான் என்னைப் பற்றி நன்றாக உணர முடியும் என்று நினைக்கிறவனல்ல நான். பெண்களை சதைப் பிண்டங்களாக பார்க்கிறவனல்ல. பணத்தைப் பொறுத்தவரை, “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்று நினைக்கிறவன். மண் சொத்தைவிட மனிதச் சொத்தேப் பெரிதானது என்று வாழ்கிறவன். எனவேதான் எனக்கு சாதியும், மதமும், ஊரும், தொழிலும் ஒரு பொருட்டாக இருக்கவேயில்லை. “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” எனும் கதவொட்டிகளை ஒட்டித் திரிந்த குழந்தைப் பருவம் முதல் பொது வாழ்வில் ஈடுபாடு இருந்தாலும், இப்போதிருப்பது போன்று குடும்பத்தையே விட்டுவிட்டு, 24 மணி நேரமும் சந்திப்புக்களும், கூட்டங்களும், நெருக்கடியும், மன அழுத்தமுமாக வாழ விரும்பியதில்லை.

இந்த வாழ்க்கை முறையை சாவது வரை ஏற்றுக் கொள், சம்பளமாக நிறைய அவதூறுகளும், அசிங்கங்களும், அருவருப்புக்களும், அடக்குமுறைகளும் அள்ளித் தருவோம் என்று பலர் வலியுறுத்தும்போது, திகைத்து நிற்கிறேன். பகட்டுக்களும், படாடோபங்களும், அதிரடிகளும், ஆரவாரங்களும் பிடிக்காத நான் இவை மட்டுமே நிரம்பியிருக்கும் அரசியல் களத்தில் எப்படி தாக்குப் பிடிப்பேன் என்று சிந்திக்கிறேன். சிறு தகுதிகளும், திறமைகளும் மட்டுமே கொண்ட என்னை, தேவதூதனாக சிலர் பார்க்கும்போது, பேசும்போது உண்மையிலேயே உள்ளுக்குள் அஞ்சுகிறேன், படபடப்படைகிறேன்.

தமிழகத்தின் “ஆபத்தான ஆறு” கட்சிகளும் எங்கள் மக்களையும், போராட்டத்தையும் புறக்கணித்த நிலையில், “ஆதரவான நூறு” இயக்கங்கள் கைகொடுத்து உதவின. ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளின், அவற்றின் தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அவர்களும் “ஆபத்தான ஆறு” பேரோடு கைகோர்த்துக் கொண்டு, எங்களை கைவிட்டுவிடும் நிலை காணப்படுகிறது. தேர்தலில் போட்டியிடாத சில கட்சிகள் எங்களைத் தொடர்ந்து ஆதரித்தாலும், எங்கள் நிலை பலவீனமாகவே இருக்கிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு, சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற இடது சாரிக் கட்சிகள், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு நாங்கள் கடிதம் எழுதினோம். மக்கள் அதிகமாக, அடர்த்தியாக வாழும் நமது நாட்டுக்கு அணுசக்தி ஏற்றதல்ல; கூடங்குளம் அணுமின் நிலையம் ஊழலும், கோளாறும் மிகுந்தது என்பதால் அதையும் மூடுவதற்கு உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டோம். இன்றுவரை யாரிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை.

இந்த நிலையில் எங்கள் போராட்டத்தின் அடுத்தக் கட்டம் பற்றிய முடிவை நாங்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். “நாற்பதும் வேண்டும்” என்று நாயாக அலையும் தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் மக்களை அழிக்கும் ஆபத்தான திட்டங்களை நிறுத்த முயற்சிக்கவில்லை. தமக்கு பதவி உயர்வும், பணமும், குடும்பத்துக்கு அதிகாரமும் வேண்டி நிற்கும் அரசியல்வாதிகள், தமிழருக்கு வேண்டியதை செய்து கொடுக்க முன்வரவில்லை. இந்நிலையில் அரவிந்த் கேஜ்ரிவாலும், பிரசாந்த் பூஷனும் எங்களுக்கு “காலத்தினாற் செய்த” நன்றிகளை மனதிற் கொண்டு, அணுசக்திக்கு எதிராக நிற்கும் அவர்களின் கரங்களை பலப்படுத்துவதுதான் சிறந்ததாக இருக்கும் என்று சிலர் அறிவுரைக்கிறார்கள். எங்கள் போராட்டத்தை அரசியல் தளத்துக்குக் கொண்டு போவதுதான், ஒரே வழி என்பது அவர்கள் வாதம்.

பெருந்தலைவர் காமராசர் பக்தர்களான தாத்தா, பாட்டி, அம்மா, மற்றும் தி.மு.க. வெறியரான அப்பா மத்தியில் பிறந்தவன் நான். குடியரசு, விடுதலை, உண்மை, திராவிட நாடு, காஞ்சி போன்ற திராவிட அரசியல் இதழ்கள் படித்து வளர்ந்தவன். கம்யூனிஸ்ட் அமைப்புத்தான் அற்புதமானது என்று கனவுகண்டு, 1981 முதல் 1987 வரை எத்தியோப்பியாவில் மெங்கிஸ்து ஹைலமரியம் என்பவரின் சர்வாதிகார ஸ்டாலினிஸ்ட் ஆட்சியைப் பார்த்து, மனம் மாறியவன். கம்யூனிஸ்ட் சாயம் வெளுத்துப் போனதால், நான் ஒரு காந்தீய சோஷலிஸ்ட் என்று என்னை கருதத் துவங்கினேன்.

1990 முதல் 1996 வரை கடினமாகப் படித்து அரசியலில் முனைவர் பட்டம் பெற்றேன். இந்துத்துவா அமைப்புக்கள் எப்படி இந்திய தேசிய வரலாற்றை தங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி எழுதுகிறார்கள் என்பது குறித்துத்தான் நான் ஆய்வு செய்தேன். அப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஹெச்.வி. சேஷாத்ரி அந்த இயக்கத்தின் “ஆர்கனைசர்” பத்திரிகையில் 1987-ஆம் ஆண்டு பெப்ருவரி-மார்ச் மாதங்களில் எழுதிய ஒரு கட்டுரைத் தொடர் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தி கிராமத்தில் அன்னா ஹசாரே நிறுவியிருந்த “இராமராஜ்யம்” பற்றிய கட்டுரைகள் அவை.

அந்த “உன்னத” சமூகத்தின் அடிப்படையே ஊருக்கு நடுவேக் கட்டப்பட்டிருந்த கோவில்தான் என்றார் ஹசாரே. கோவிலுக்கு ஏன் இந்த முக்கியத்துவம் கொடுத்தீர்கள் என்று சேஷாத்ரி கேட்டதற்கு ஹசாரே ஓர் அனுபவத்தைச் சொன்னார். எங்கள் கிராமத்துக்கு வந்த ஓர் ஐ‌.ஏ‌.எஸ். அதிகாரி 90,000 ரூபாயை வைத்து பள்ளிக்கூடத்தில் ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு பதிலாக, இப்படி கோவிலைக் கட்டியிருக்கிறீர்களே என்று கேள்வி கேட்டார். பதில் எதுவும் பேசாத ஹசாரே, அவரை விடுதி அருகேயிருந்த பழத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே மதிற்சுவர் ஏதுமில்லை, பூட்டு இல்லை, காவல்காரர் இல்லை, ஆனாலும் ஒரு பழம்கூடத் திருடப்படவில்லை. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஐ‌.ஏ‌.எஸ். அதிகாரியிடம், இம்மாதிரியான உயர் ஒழுக்கத்தை வெறும் பள்ளிக்கூடங்களால் மட்டுமே சாதிக்க முடியாது, கடவுள் பக்தியால்தான் அடைய முடியும் என்று ஹசாரே சொன்னார்.

பூரண மதுவிலக்கு, தீண்டாமை மறுப்பு, புகைப்பிடிக்காமை போன்ற நல்ல விடயங்களைச் செய்தாலும், ஹசாரே சீர்திருத்தத்தின் ஆபத்தான இரண்டு அம்சங்களை நான் குறிப்பிட்டுக் காட்டியிருந்தேன். “எங்கள் கிராமத்தில் ஜெயின மதத்தவர், புத்த மதத்தவர் போன்றோர் வாழ்ந்தாலும், முஸ்லீம்களோ, கிறித்தவர்களோ கிடையாது” என்று ஹசாரே சேஷாத்ரியிடம் பெருமையாகச் சொன்னார். அதேபோல, கிராமத்தில் விவசாயம், கல்வி வளர்ச்சிக்காக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பல இருந்தாலும், எந்தத் தேர்தலும் நடத்தப்படுவதில்லை. பஞ்சாயத்து தலைவர்கூட போட்டியின்றிதான் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றார் ஹசாரே. இந்த சிறுபான்மை விரோத, எதேச்சாதிகார ஆர்.எஸ்.எஸ். தாக்கத்தைச் சாடியே ஆய்வுக் கட்டுரையில் எழுதியிருந்தேன். இவை போன்ற காரணங்களால், 2011-ம் ஆண்டு பிற்பகுதியில் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டம் துவங்கியபோது, அது என்னைப் பெரிதாகக் கவரவில்லை.

அவரோடிருந்த அரவிந்த் கேஜ்ரிவால் 2012 செப்டெம்பர் மாதம் எங்கள் போராட்டத்தின் முக்கியக் கட்டத்தில் இடிந்தகரைக்கும், கூத்தங்குழிக்கும் வந்து ஆதரவு தெரிவித்தார். தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், நாங்கள் அதில் சேர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். எங்கள் போராட்டம் உச்சத்தில் இருந்ததாலும், பல தமிழக அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருந்ததாலும், நாங்கள் அந்த அழைப்பைப் பெரிதாக எடுக்கவில்லை. இந்தியில் பெயர் வைப்பீர்கள், ஊழல் பற்றி மட்டுமேப் பேசுவீர்கள், தமிழ்த் தேசியம் விரும்பமாட்டீர்கள் என்றெல்லாம் சில பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டினோம்.

புது தில்லி தேர்தலின்போது, எங்கள் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஆதரவை ஆம் ஆத்மிக்குத் தெரிவித்தோம். தேர்தல் வெற்றிக்குப் பின்னர், அட்மிரல் ராமதாசும், யோகேந்திர யாதவும் பேசினார்கள். எங்கள் நிலையை விளக்கிச் சொன்னேன். பின்னர் டிசம்பர் 29, 2013 அன்று பிரசாந்த் பூஷன் இடிந்தகரைக்கு நேரில் வந்து சந்தித்துப் பேசினார். அவரிடமும் எங்கள் நிலையைச் சொன்னோம். பின்னர் சனவரி 6, 2014 அன்று ஆம் ஆத்மி கட்சித் தோழர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, ஐந்து நிபந்தனைகளை தெரிவித்திருக்கிறோம்:

[1] தங்கள் கட்சியின் அணுசக்திக் கொள்கையை முறையாக அறிவிக்க வேண்டும்.

[2] தமிழகத்தில் “சாதாரண மக்கள் கட்சி” என்று பெயரிட்டு AAP எனும் துணைப் பெயரை பயன்படுத்துவோம்.

[3] தமிழ் ஈழம், தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதல், கடற்கரை கபளீகரம், தாதுமணற் கொள்ளை, நதிநீர்ப் பங்கீடு, சமூக நீதி, சிறுபான்மையினர் உரிமை போன்றப் பிரச்சினைகள் எங்களுக்கு முக்கியமானவை. இப்பிரச்சினைகளில் எங்கள் உணர்வுகளும், ஈடுபாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். கட்சியின் தமிழகக் கிளைக்கு சுயாட்சி அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளின் மாநில அலுவலகங்களில் ஒரு நாற்காலியை நகர்த்திப் போடுவதென்றாலும் தில்லியிடம் அனுமதி பெறும் அவலம் சா.ம.க.வில் இருக்கக் கூடாது.

[4] தமிழகப் பொறுப்பாளரான திருமதி. கிறிஸ்டி சாமியோடு பணியாற்ற அணியமாய் இருந்தாலும், எங்கள் போராட்டக்காரர்கள் சா.ம.க. பொறுப்புக்களில் இணைத்துக் கொள்ளப்படவேண்டும் (கட்சிக்குள் இன்னொரு குழுவும் இயங்கிக் கொண்டிருப்பதை இப்போது அறிகிறோம்).

[5] தமிழகத்தில் தேர்தல் யுக்திகள் வகுக்கும்போது, தமிழ்த் தேசியம் பேசும், சிறுபான்மையினர் நலம் நாடும் எங்கள் ஆதரவுக் கட்சிகளையும் ஒரு கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும்.

ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். போராடும் மக்கள் அனுமதி அளித்தால் மட்டுமே அரசியலில் இறங்குவதும், தேர்தலில் குதிப்பதும் என்று மிகத் தெளிவாக, உறுதியாகச் சொல்லியிருக்கிறோம். இடிந்தகரை ஊர் நிர்வாகக் குழு, எங்கள் பகுதி மக்கள், சமுதாயத் தலைவர்கள், ஆதரவுக் குழுக்கள், ஆதரவுக் கட்சிகள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, அனைவரும் உடன்பட்டாலே மேற்கொண்டுத் தொடர்வது என்று முடிவு செய்திருக்கிறோம். ஒரு நல்ல முடிவினை எடுக்க நீங்களும் உதவ வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
சனவரி 9, 2014

 

(facebook)

உதயகுமார் தேர்தலில் நின்று ஜெயித்து வந்தால் நல்லது...ஏழைகளின் குரல் பாராளுமன்றில் ஒலிக்கும்...அவர் உண்மையாகவே உழைத்தால்......அப்போது தான் பழம்பெருச்சாளிகளுக்கும் ஒரு பயம் வரும்...மற்றும் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பவர்களுக்கும் ஒரு உத்வேகம் வரும்.....

 

 

ஆம் ஆத்மி இந்தியாவை முன் வைக்கும் ஒரு கட்சியாக தான் இருக்கும்...அது உதயகுமாருக்கும் அருந்ததி ராயுக்கும் பொருந்துமா தெரியாது...

 

சகாயம் போன்றவர்கள் உதயகுமாருடன் சேர்ந்து உழைத்தால் நல்லது...

Edited by naanthaan

உதயகுமாரன் ஐயாவின் முகநூல் பக்கம் இது. https://www.facebook.com/spudayakumaran

 

யாராவது அங்கு கருத்து வைக்க விரும்பினால் வையுங்கள்.

தமிழகத்தின் “ஆபத்தான ஆறு” கட்சிகளும் எங்கள் மக்களையும், போராட்டத்தையும் புறக்கணித்த நிலையில், “ஆதரவான நூறு” இயக்கங்கள் கைகொடுத்து உதவின. ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளின், அவற்றின் தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அவர்களும் “ஆபத்தான ஆறு” பேரோடு கைகோர்த்துக் கொண்டு, எங்களை கைவிட்டுவிடும் நிலை காணப்படுகிறது. தேர்தலில் போட்டியிடாத சில கட்சிகள் எங்களைத் தொடர்ந்து ஆதரித்தாலும், எங்கள் நிலை பலவீனமாகவே இருக்கிறது.

 

இதில் ஆபத்தான ஆறு கட்சிகள் என குறிப்பிடப்பட்டிருப்பது,

காங்கிரஸ்

பா.ஜ.க

சி.பி.ஐ

சி.பி.எம்

தி.மு.க

அ.தி.மு.க.

அரவிந்த் கேஜ்ரிவால் 2012 செப்டெம்பர் மாதம் எங்கள் போராட்டத்தின் முக்கியக் கட்டத்தில் இடிந்தகரைக்கும், கூத்தங்குழிக்கும் வந்து ஆதரவு தெரிவித்தார்.

 

2012 இல் கெஜ்ரிவால் வந்தபோது..

 

கூடங்குளம் அணு உலை முற்றுகை போராட்டத்தில் 10-09-12 அன்று போலீஸ் தடியடி நடத்திய பிறகு 12-09-12 அன்று ஆம் ஆத்மீ கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்கள் போராடும் மக்களை இடிந்தகரை பந்தலில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு மட்டும் அல்லாமல் அண்ணன் உதயகுமார் மற்றும் போராட்டக்குழுவை சரணடைய தேவை இல்லை என உரக்க கூறியவரும் தற்போது டெல்லியில் காங்கிரஸ் கட்சியை மண்ணை கவ்வ வைத்தவருமான ஆம் ஆத்மீ கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால்.

 

995585_568222523255841_1575416088_n.jpg

 

(Antony Kebiston Fernando)

 

கடும் நெருக்கடி , காவல் துறை முற்றுகையிலும் யாருக்கும் அஞ்சாமல் எந்த அடிப்படை வசதியையும் எதிர்பார்காமல், உணவு அருந்தாமல் நம் மக்களுகாக என்னுடன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த நல்ல உள்ளத்துக்கு சொந்தகாரர் .

 

531970_565278720209071_155364705_n.jpg

 

10-1389335899-arvind-kejiriwal-meet-kuda

 

1471820_565444630192480_1439438443_n.jpg

 

கூடங்குளம் காவல்நிலையத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் தனி ஒரு மனிதனாக நீதி கேட்டு சென்ற போது..

 

1484179_568231056588321_1084072114_n.jpg

 

(குணசீலன் வேலன்)

 

செப்டம்பர் 11, 2012 அன்று இரவு இடிந்தகரைக்கு வந்த தோழர் அரவிந்த் கேஜ்ரிவால் போராட்ட மேடையில் தோழர் மை. பா. நன்மாறனுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது தம்பி அமீர் எடுத்த படம். மறுநாள் காலை கூத்தங்குழி கிராமத்துக்கு வந்து என்னையும், தோழர்கள் ராயன், முகிலன் ஆகியோரையும் சந்தித்து போராட்டம், தமிழக அரசியல், இந்திய அரசியல் பற்றியெல்லாம் எங்களோடு அளவளாவினார். எளிமையான, இனிமையான, நேர்மையான தலைவர். அவர் வளர்க, வாழ்க!

 

1463039_10151716984997202_1114915997_n.j

 

(S.p. Udayakumaran)

 

டெல்லியில் கேஜ்ரிவால் வெற்றிபெற்ற போது முகநூலில் இவற்றை பகிர்ந்திருந்தார்கள். கெஜ்ரிவாலின் இந்த எளிமை தொடருமா அல்லது இப்பொழுது பதவி கிடைத்து விட்டதால் எதிர்காலத்தில் மாறி விடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Edited by துளசி

bye.gif 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் "நாம் தமிழர் கட்சி" க்கு உங்கள் வாக்கை அளியுங்கள். smile.png

 

சிரிச்சு முடில செம காமடி :D :D :D

2016 அப்படி ஒரு கட்சியே இருக்காது பிள்ளை :icon_idea:

சிரிச்சு முடில செம காமடி :D :D :D

2016 அப்படி ஒரு கட்சியே இருக்காது பிள்ளை :icon_idea:

 

ஆம் ஆத்மி கட்சி செய்திகளை பகிர்வதனால் நாம் தமிழர் கட்சிக்கான ஆதரவை கைவிட்டதாக பலர் நினைத்தார்கள். நான் இன்னும் நாம் தமிழர் கட்சிக்கான ஆதரவை கைவிடவில்லை என கூறினேன். தனித்தனியாக சொல்லி சொல்லி களைத்து விட்டேன். அதுதான் signature இல் போட்டு விட்டேன். :D

தமிழகத்தில் உள்ள பல கட்சிகளுக்குள் "நாம் தமிழர் கட்சி" தான் நல்ல நிலையில் உள்ளது. அது இப்படியே தொடரும் வரை என் ஆதரவும் இருக்கும். கட்சி இருக்குதா இல்லையா என 2016 வரை இருந்து பார்ப்போம். :)

 

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.