Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மண்ணில் காண பாலா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனவாத சிறீலங்கா அரசு 1 ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொன்றுள்ளது. இதை மறைக்க சிறீலங்கா அரசு இசை மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இந்திய கலைஞர்களை அழைத்து நடத்த எண்ணுகிறது. அதன் சதியை புரிந்துகொண்டு திரையுலகினரும், இசையுலகினரும் விழாவை புறக்கணித்து வருகின்றனர். 

இந்த நிலையில் பின்னணி பாடகர் காண பாலா அவர்களை அழைத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார்கள். இந்த நிகழ்வில் கலந்து கொள்ளது உடனடியாக தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து இசை நிகழ்ச்சியை பாடகர் காண பாலா ரத்து செய்யவேண்டும்.

kana%20bala.jpg

இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் 

அவரை தொடர்பு கொள்ள 

Ontact @ Gana Bala

M.BALA MURUGAN

No: 3, Kannigapuram 2nd Street,

Kannigapuram,chennai - 600 012.

98400 20125    98411 20125

98846 20125    94443 20125

Mail : bala@ganabala.com

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி சரியான லூசு கூட்டங்கள் இந்த புறக்கணி கூட்டங்கள் அங்க இருக்கிற மக்கள் சந்தோஷமாவே இருக்க கூடாதாம்

துளசி பெட்டிசம் அடிக்க தொடங்கியாச்சா . :icon_mrgreen:

புலம்பெயர் நாடுகளில் எல்லா இசை நிகழ்ச்சிகளும் வைக்கலாம். இலங்கைக்கு புலம்பெயர் தேசத்தவர்கள் சுற்றுலா போகலாம் ஆனால் அங்குள்ளவர்கள் ஒரு இசை நிகழ்ச்சி பார்க்க கூடாதா?

எனக்கு இதெல்லாம் செய்ய தெரியாது. யாராவது petition தயாரித்தாலோ கடிதம் எழுதி தந்தாலோ அதை அனுப்ப தெரியும். :)

புலம்பெயர் நாடுகளில் எல்லா இசை நிகழ்ச்சிகளும் வைக்கலாம். இலங்கைக்கு புலம்பெயர் தேசத்தவர்கள் சுற்றுலா போகலாம் ஆனால் அங்குள்ளவர்கள் ஒரு இசை நிகழ்ச்சி பார்க்க கூடாதா?

புலம்பெயர் நாடுகளிலும் தென்னிந்திய சினிமா பாடகர்கள், இசையமைப்பாளர்களை அழைப்பது தவறு, அவர்கள் இலங்கைக்கு சென்று அங்கு நிகழ்ச்சி வைப்பதும் தவறு, அதே போல் எம்மவர்கள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதும் தவறு என்பது என் கருத்து.

ஆனால் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி வைப்பதைவிட இலங்கையில் இசை நிகழ்ச்சி வைத்தால் பாதிப்பு அதிகம். அதாவது நாடு நல்லா இருக்கு, மக்கள் அனைத்தையும் மறந்து சந்தோசமாக உள்ளார்கள் போன்றதொரு மாய தோற்றத்தை உலகத்துக்கு காட்டும். :rolleyes:

Edited by துளசி

புலம்பெயர் நாடுகளிலும் தென்னிந்திய சினிமா பாடகர்கள், இசையமைப்பாளர்களை அழைப்பது தவறு, அவர்கள் இலங்கைக்கு சென்று அங்கு நிகழ்ச்சி வைப்பதும் தவறு, 

உடன்படுகிறேன் .எம் கலையை நாமே ஆழனும் /,,,,,,,,,,,,,தமிழ்நாட்டு தொப்பிழ் கொடிகளுக்கு தளம் ஒன்று இருக்கு ....எமக்கு நாம் ஒரு தளத்தை உருவாக்கணும் ........... :)

  • கருத்துக்கள உறவுகள்

உடன்படுகிறேன் .எம் கலையை நாமே ஆழனும் /,,,,,,,,,,,,,தமிழ்நாட்டு தொப்பிழ் கொடிகளுக்கு தளம் ஒன்று இருக்கு ....எமக்கு நாம் ஒரு தளத்தை உருவாக்கணும் ........... :)

அதெப்படி த.சூ அண்ணே கலையை நாம ஆளனும்,அரசியல அவங்க வந்துதான் உழனும் என்டு எதிர்பாக்கிறோம்

"புறக்க்கணி சிறிலங்கா" அவ்வளவு வெற்றி அளிக்கவில்லை. ஆனால் பொருளாதாரத்தடை வரலாம். அதன் போது இவற்றில் பலவற்றை கையாள்வது இலகுவாக இருக்கும். ஆனல் பொருளாதாரத்தடையை வர வைக்க வேண்டியதும் புலம் பெயர் மக்களே. அவர்கள் "நாம் இங்கே முழுவறுக்கு மூன்று நேரம் மூக்கு முட்ட சாப்பிடுகிறோமே. நமக்கு இல்லாமல் எப்படி அந்த மக்களுக்கு பொருளாதாரத்தடை என்று கேடபதால் பலன் இல்லை.  சில சமயம் நாம் கேட்காவிட்டாலும் நாடுகள் அதையேதான் செய்யப்போகின்றன.

அங்கே சனம் மகிழ்சிக்காக ஆடல் படல்களுக்கு போவத்தாக எனக்கு நம்ப முடியவில்லை.  சிங்கள்ம் மேடை போட்டு ஆடி படம் எடுத்து போட்டவற்றில் எல்லாம் ஆடியது பாடி கோமளிகள் மட்டுமாகத்தான் இருந்தது. தமிழ் நிகழ்வுகள் இருக்கவில்லை. எப்படி ரோட்டு போடுவது, தமிழரை மேலும் அடக்கி சிங்கள பொருளாரத்தை முன்னேற்றுகிறதோ அப்படி சிங்கள், ஒட்டுக்குழு கூட்டம் மேலும் தமிழ்ரை உருவி எடுக்க செய்யும் சதிதான் இது.

ஆமா தெரியாம கேட்கிறேன் ..............அவங்கள ,அவங்கட அரசியல இன்னும்மா நம்புகிரீங்க ........அவங்க ஆதரவு ஒன்றுதான் பாஸ் நாங்க எதிர்பார்ப்பது .அரசியல் நாம் செய்ய வேண்டியது ..........இது தெரியாமையா வாழ்ரீங்க பாஸ் ..முடியல ........... :D  :D

புலம்பெயர் நாடுகளிலும் தென்னிந்திய சினிமா பாடகர்கள், இசையமைப்பாளர்களை அழைப்பது தவறு, அவர்கள் இலங்கைக்கு சென்று அங்கு நிகழ்ச்சி வைப்பதும் தவறு, அதே போல் எம்மவர்கள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதும் தவறு என்பது என் கருத்து.

ஆனால் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி வைப்பதைவிட இலங்கையில் இசை நிகழ்ச்சி வைத்தால் பாதிப்பு அதிகம். அதாவது நாடு நல்லா இருக்கு, மக்கள் அனைத்தையும் மறந்து சந்தோசமாக உள்ளார்கள் போன்றதொரு மாய தோற்றத்தை உலகத்துக்கு காட்டும். :rolleyes:

இவற்றில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இது தவறு என்றால் தேரும் திருவிழாவும் அதுசார்ந்த ஆடம்பரங்களும் தவறு. நாழுக்குப் பத்தென அரங்கேறும் பரத்ததையாட்டங்களும் (பரதநாட்டியம்) தவறு. வடக்கின் பெரும் போர் என்ற கிரிக்கட் ஆட்டங்களும் தவறு. உலகத்துக்கு ஒன்று மாயத்தோற்றத்தையும் மற்றுத வேறு தோற்றத்தையுமா காட்டுகின்றது? எமக்கு வசதியானவற்றை சரி என்றும் ஏனையவற்றை தவறு என்றும் அர்த்தமற்று பிதற்றுகின்றோம்.

"புறக்க்கணி சிறிலங்கா" அவ்வளவு வெற்றி அளிக்கவில்லை. ஆனால் பொருளாதாரத்தடை வரலாம். அதன் போது இவற்றில் பலவற்றை கையாள்வது இலகுவாக இருக்கும். ஆனல் பொருளாதாரத்தடையை வர வைக்க வேண்டியதும் புலம் பெயர் மக்களே. அவர்கள் "நாம் இங்கே முழுவறுக்கு மூன்று நேரம் மூக்கு முட்ட சாப்பிடுகிறோமே. நமக்கு இல்லாமல் எப்படி அந்த மக்களுக்கு பொருளாதாரத்தடை என்று கேடபதால் பலன் இல்லை.  சில சமயம் நாம் கேட்காவிட்டாலும் நாடுகள் அதையேதான் செய்யப்போகின்றன.

அங்கே சனம் மகிழ்சிக்காக ஆடல் படல்களுக்கு போவத்தாக எனக்கு நம்ப முடியவில்லை.  சிங்கள்ம் மேடை போட்டு ஆடி படம் எடுத்து போட்டவற்றில் எல்லாம் ஆடியது பாடி கோமளிகள் மட்டுமாகத்தான் இருந்தது. தமிழ் நிகழ்வுகள் இருக்கவில்லை. எப்படி ரோட்டு போடுவது, தமிழரை மேலும் அடக்கி சிங்கள பொருளாரத்தை முன்னேற்றுகிறதோ அப்படி சிங்கள், ஒட்டுக்குழு கூட்டம் மேலும் தமிழ்ரை உருவி எடுக்க செய்யும் சதிதான் இது.

அது மல்லை அண்ணா ..............

இவற்றில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இது தவறு என்றால் தேரும் திருவிழாவும் அதுசார்ந்த ஆடம்பரங்களும் தவறு. நாழுக்குப் பத்தென அரங்கேறும் பரத்ததையாட்டங்களும் (பரதநாட்டியம்) தவறு. வடக்கின் பெரும் போர் என்ற கிரிக்கட் ஆட்டங்களும் தவறு. உலகத்துக்கு ஒன்று மாயத்தோற்றத்தையும் மற்றுத வேறு தோற்றத்தையுமா காட்டுகின்றது? எமக்கு வசதியானவற்றை சரி என்றும் ஏனையவற்றை தவறு என்றும் அர்த்தமற்று பிதற்றுகின்றோம்.

தேர்திருவிழாக்களில் சிங்களத்திற்கு பங்கு போக ஆரம்பிக்க தொடங்க, அது தவறு. புத்தர் சிலை கட்டினால், அதில் சிங்களத்துக்கு பங்கு போகாவிட்டாலும் தவறு.

ஆனையும் பானையும் எத்தனை ஒப்பு உவமைக்கு பின்னரும் சமனாவதில்லை.

ஆடம்பரம் தவறு என்று இந்த திரியில் யாரும் விவாதிக்கவில்லை. ஆடம்பரத்தையும் பொழுது போக்கையும் குழம்பி வைத்துக்கொண்டு அரசியல் எழுதுவதும் தவறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளிலும் தென்னிந்திய சினிமா பாடகர்கள், இசையமைப்பாளர்களை அழைப்பது தவறு, அவர்கள் இலங்கைக்கு சென்று அங்கு நிகழ்ச்சி வைப்பதும் தவறு, அதே போல் எம்மவர்கள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதும் தவறு என்பது என் கருத்து.

ஆனால் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி வைப்பதைவிட இலங்கையில் இசை நிகழ்ச்சி வைத்தால் பாதிப்பு அதிகம். அதாவது நாடு நல்லா இருக்கு, மக்கள் அனைத்தையும் மறந்து சந்தோசமாக உள்ளார்கள் போன்றதொரு மாய தோற்றத்தை உலகத்துக்கு காட்டும். :rolleyes:

துளசியின் கருத்துடன் நானும் உடன்படுகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

துளசியின் கருத்து சரியே....
அங்கு... இசை நிகழ்ச்சி வைப்பதற்கு, உள்ளூர் கலைஞர்கள் இல்லையா....
கானா பாலா... என்பவரின், பெயரை... இப்போது தான் கேள்விப் படுகின்றேன்.
நல்ல... பாட்டுக்காரரோ...

Edited by தமிழ் சிறி

:wub: செம்மறிகள் கூட்டம் ஒன்றன் பின் ஒன்றாக ஓடிக்கொண்டிருந்ததாம். அவ்வாறு ஓடுகின்றபோது பாதையில் தடி ஒன்று குறுக்கே கட்டப்பட்டிருந்ததாம். முதலாவது செம்மறி தடிக்கு மேலால் துள்ளி ஓடியதாம். இரண்டாம் செம்மறி முன்றாம் செம்மறி என சில செம்மறிகள் அவ்விடத்தில் துள்ளி ஓடிச்சென்றதாம். ஒரு செம்மறியின் காலில் தட்டுப்பட்டுப்பட்டு தடி கீழே விழுந்து விட்டது. ஆனால் பின்னால் வந்த அத்தனை செம்மறிகளும் அவ்விடத்தில் துள்ளியே ஓடியதாம். <_<

 இவ்வாறே நமது இணையங்களின் செயற்பாடுகளும் உள்ளது. செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பாக எந்த புலன் விசாரணைகளும் கிடையாது. பதில் அவன் போட்டான் நானும் போட்டேன் எனப் பதில வருகின்றது. அதாவது முன்னால் ஓடின செம்மறி துள்ளி ஓடினது நானும் துள்ளி ஓடினேன் என்ற பதில்போல் :unsure:  :icon_idea: 

ஒருவன் தவறு தான் செய்திருந்தாலும் அவனுக்கு அளிக்கப்படும் தண்டனை அவனை திருத்துவதாக தான் இருக்க வேண்டும் என்று சிந்திப்பது தான் யதார்த்தம்

மந்தையிலிருந்து பாதை தவறிய ஆடு!

Edited by மல்லையூரான்

துளசியின் கருத்து சரியே....

அங்கு... இசை நிகழ்ச்சி வைப்பதற்கு, உள்ளூர் கலைஞர்கள் இல்லையா....

கானா பாலா... என்பவரின், பெயரை... இப்போது தான் கேள்விப் படுகின்றேன்.

நல்ல... பாட்டுக்காரரோ...

  • கருத்துக்கள உறவுகள்

:wub: செம்மறிகள் கூட்டம் ஒன்றன் பின் ஒன்றாக ஓடிக்கொண்டிருந்ததாம். அவ்வாறு ஓடுகின்றபோது பாதையில் தடி ஒன்று குறுக்கே கட்டப்பட்டிருந்ததாம்.-----

http://www.youtube.com/watch?v=YJnwGa60HEU

செம்மறி ஆடு மட்டுமல்ல... புத்திசாலி மனிதரும் அப்படித்தான். :)

துளசியின் கருத்து சரியே....

அங்கு... இசை நிகழ்ச்சி வைப்பதற்கு, உள்ளூர் கலைஞர்கள் இல்லையா....

கானா பாலா... என்பவரின், பெயரை... இப்போது தான் கேள்விப் படுகின்றேன்.

நல்ல... பாட்டுக்காரரோ...

தமிழ் சிறி,

இக் கேள்விகளை நாங்கள் புலம்பெயர் தேசங்களில் இதே போன்று நிகழ்ச்சிகள் வைக்கும் போது ஏன் கேட்பதில்லை? இங்கு தம் பிள்ளைகளின் பிறந்த தின நிகழ்வுகளுக்கு கூட தென்னிந்திய கலைஞர்களை வரவழைத்து நிகழ்ச்சி நடத்துகின்றனர். அவ் நிகழ்வுகளில் உள்ளூர் கலைஞர்களும் பங்குகொள்கின்றனர்.  பெருமெடுப்பில் விழாக்கள் நடத்துகின்றனர். ஊரில் சனம் நிம்மதியாக இல்லை என்பதற்காக சந்தோசங்களை ஒறுத்து நாங்கள் இங்கு வாழவில்லை. அதே போன்று தான் அங்கும்.

பொதுநலவாய நாடுகளின் கூட்டம் போன்ற அரசியல் ரீதியான மகாநாடுகளை எதிர்ப்பதும், இதே போன்ற நிகழ்ச்சிகளை அங்கு வைப்பதை எதிர்ப்பதும் ஒன்றல்ல. இலங்கை அரசு தன் சுதந்திர தின நிகழ்வுக்காகவோ அல்லது, இராணுவத்தினரின் வெற்றிகளை கொண்டாடும் விழாக்களுக்கோ  தென்னிந்திய கலைஞர்களை வரவழைக்கும் போது எதிர்த்தால் அதற்கென வலுவான அரசியல் காரணம் இருக்கும். ஆனால் இத்தகைய சின்ன நிகழ்ச்சிகளுக்கெல்லாம் எதிர்க்க வெளிக்கிட்டால் அவற்றிற்கான அரசியல் வலு எதுவும் இருக்கப் போவதில்லை. அத்துடன் இலங்கையில்  இத்தகைய நிகழ்வுகளை நடந்தால் மட்டும் உடனே இலங்கையை நம்பக் கூடிய அளவுக்கு வலுவற்ற நிலையில் சர்வதேசமும்  இல்லை. எனக்கும் உங்களுக்கும் யாழுக்கும் தெரிந்தவற்றினை விட இலங்கை அரசின் மனிதவுரிமை மீறல்கள் பற்றி அதிகளவு சர்வதேசத்துக்கு தெரியும்.

செம்மறிக்கூட்டங்கள் எல்லாம் செம்மறி பற்றி பேச வெளிக்கிட்டுதுங்கோ ..........கர்த்தாவே .............. :D

நிழலி,

புலம் பெயர் தேசங்களில், இப்படியான கொண்டாட்டங்கள், குறைந்து போயுள்ளதற்கே...

துளசி போன்றவர்கள் காட்டிய, எதிர்ப்புத்தான்.

நீங்கள்... கூறுவது மாதிரி, பிள்ளையின் பிறந்த நாளுக்கு.. தென்னிந்திய கலைஞர்களை கூப்பிட்டது பற்றி... செய்திகளில் வாசிக்கவில்லை.

அதிகமாகக் கூறுவது, தவறு.

முதலில்... நாம் பிறந்த நாட்டில், நிம்மதி வரட்டும்.

அதன் பிறகு... தென்னிந்தியக் கலைஞர்களை.. கூப்பிடுவதில்,

நான்... முதல் ஆளாக நிற்பேன். இப்போது... வேண்டாம்.

தூய தியாகிகளின் பெயர்களில் அவர்கள் உடல் மண்ணுக்கும் உயிர் மக்களுக்கும் அர்ப்பணித்து விட்டு சென்றவர்கள் அவர்களது தூய நிகழ்வுகளில் புலத்தில் வியாபாரமும் அவர்களது பெயர்களில் நிதி சேர்ப்பதும் அதை கேட்டால் தாங்கள் அந்தமக்களிற்கு உதவி செய்வதாகவும் பீலாவிடும் பெயர்வழிகள் இந்திய பாடகர்கள் இலங்கை போகவேண்டாம் நாங்கள் அன்னிய செலவானியை இலங்கைக்கு அனுப்பி அரசின் திறைசேரியை நிரப்புவம் இதில் உங்களிற்கு பெரிய முரண்பாடக தெரியவில்லையா. தமிழ் சிறி

ஒருவன் தவறு தான் செய்திருந்தாலும் அவனுக்கு அளிக்கப்படும் தண்டனை அவனை திருத்துவதாக தான் இருக்க வேண்டும் என்று சிந்திப்பது தான் யதார்த்தம்

தாராளமாக கொழும்பில் களியாட்ட நிகழ்ச்சி செய்யலாம் ஆனால் அதில் இலாபத்தில் ஒரு பங்கு போரால் பாதிக்கபட்ட பெண்களுக்கு கொடுக்கவேண்டும்.

புலம்பெயர் தமிழரிடம் மட்டும் பொறுப்பை தள்ளிவிட்டு கொழும்பு ஆழும்வர்க்க தமிழர் தப்பமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தூய தியாகிகளின் பெயர்களில் அவர்கள் உடல் மண்ணுக்கும் உயிர் மக்களுக்கும் அர்ப்பணித்து விட்டு சென்றவர்கள் அவர்களது தூய நிகழ்வுகளில் புலத்தில் வியாபாரமும் அவர்களது பெயர்களில் நிதி சேர்ப்பதும் அதை கேட்டால் தாங்கள் அந்தமக்களிற்கு உதவி செய்வதாகவும் பீலாவிடும் பெயர்வழிகள் இந்திய பாடகர்கள் இலங்கை போகவேண்டாம் நாங்கள் அன்னிய செலவானியை இலங்கைக்கு அனுப்பி அரசின் திறைசேரியை நிரப்புவம் இதில் உங்களிற்கு பெரிய முரண்பாடக தெரியவில்லையா. தமிழ் சிறி

.

ஒருவன் தவறு தான் செய்திருந்தாலும் அவனுக்கு அளிக்கப்படும் தண்டனை அவனை திருத்துவதாக தான் இருக்க வேண்டும் என்று சிந்திப்பது தான் யதார்த்தம்

பீஸ்மர் அவர்களே...

நான்... இதுவரை நேரடியாகவோ, மறை முகமாகவோ...

ஈழப் போராட்ட வடிவங்களில்... பண விடயங்களை.. கையாண்டவன் இல்லை.

இனி மேலும், அதனைச் செய்யப் போவதில்லை.

நீங்கள் எனனை, அநாவசியமாக... காயப் படுத்துகின்றீர்கள்.

நான்... ஒரு, கருத்தாளன் மட்டுமே, எனது மனதில்... பட்டதை என்றும் சொல்வேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.