Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலஸ்ரோல் என்பது என்ன? அறிந்து கொள்வோம்

Featured Replies

cholestero3.jpg

 

கொலஸ்டரோல் என்பது என்ன?

 

 

இது எமது உடலிலுள்ள ஒரு கொழுப்புப் பொருள். இது உடலுக்குத் தேவையான பொருளும் கூட. உதாரணமாக, பால் சார்ந்த ஹோர்மோன்களான ஈஸ்ரோஐன், புரொஜெஸ்டரோன் ஆகியவற்றின் உற்பத்திக்கு அவசியமானது. கலங்களின் பகுதியாகவும் உள்ளது.

 

ஆனால் இரத்தத்தில் வழமைக்கு மேலான இதன் அதிகரிப்பு நோய்களுக்கு காரணமாகிறது. கொலஸ்டரோல் தவிர்ந்த வேறு 

கொழுப்புக்களும் எமது உடலில் உள்ளன. கொலஸ்டரோல், ரைகிளிசரைட் (TG), பொஸ்போ லிப்பிட்ஸ் ஆகிய அனைத்துமே கொழுப்புக்கள் (Lipids) எனப்படுகின்றன. கொழுப்புக்கள் நீரில் கரைய முடியாதவை. எனவே அவற்றை உடலின் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு எடுத்துச் செல்ல குருதியால் முடியாது. இதனால் இவை ஒரு வகைப்புரதத்துடன் இணைவதால் நீரில் கரையக் கூடியதாகின்றன. இவை லைப்போ புரதம் (Lipoproteins) எனப்படுகின்றன. 

 

 

லைப்போபுரதத்தில் இருவகைகள் உள்ளன. அவையாவன, 

 

உயர் அடர்த்தி லைப்போபுரதம் (HDL), 

 

குறை அடர்த்தி லைப்போபுரதம்-(LDL). 

 

எல்லாக் கொழுப்புகளுமே ஆபத்தனவையல்ல. HDL நல்ல கொலஸ்டரோல் எனப்படுகிறது. இது இரத்த நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்புகளைப் பற்றிப் பேசும் போது நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு அனைத்துமே முக்கியமானவைதான். 

 

எனவேதான் இப்பொழுது இரத்தத்தில் மாறுபட்ட கொழுப்பு அளவுகள் (Dyslipidaemia) என்றே பேசுகிறார்கள். இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் பற்றி (Hyperchoesteraemia) பற்றியும் இரத்தத்தில் அதிகரித்த கொழுப்பு (Hyperlipidaemia) அல்லது மட்டும் பேசுவது குறைவு என்றே சொல்லலாம். 

 

இரத்தத்தில் கொழுப்பு அதிகரித்திருப்பதை அறிவது எப்படி ? 

இது அறிகுறிகளற்ற நோய். எனினும் சிலருக்கு உடலில் ஏற்படும் சில குணங்குறிகள் மூலம் வைத்தியர்கள் அவர்களது இரத்தத்தில் 

கொழுப்பு அதிகரித்திருப்பதை உணரக்கூடும். வெளிர் மஞ்சள் நிறமான தடிப்புகள் (Lipid Deposits) சிலரின் தோலில் காணப்படக் கூடும். கண்களின் கீழ், முழங்கை, முழங்கால், தசைநார்கள் (Tendon) போன்ற இடங்களில் இத்தகைய மஞ்சள் நிறமான தோற்தடிப்புகள் காணப்படலாம். சிலருக்கு ஈரல், மண்ணீரல் ஆகியன சற்று பருத்திருக்கக் கூடும். 

 

வேறு சிலருக்கு கருவிழியைச் சுற்றி வெண்ணிற வளையம் (Arcus Senilis) காணப்படலாம். 

 

ஆனால் பெரும்பாலனவர்களுக்கு இத்தகைய அறிகள் எதுவுமே இருப்பதில்லை. எனவே இரத்தப் பரிசோதனை செய்வதின் மூலமே கண்டுபிடிக்கலாம். 14 மணி நேரம் வெறும் வயிற்றில் இருந்து (Fasting)  இப்பரிசோதனையை செய்வது அவசியம். 

இரு வகை பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. 

 

1. Serum Cholesterol, 

 

2. Lipid Profile 

 

இதில் Lipid Profile என்பதே ஒருவருடைய குருதியல் உள்ள வெவ்வேறு கொழுப்புகளின் (HDL, LDL, TG) அளவுகளை தனித்தனியாகக் காட்டும் பரிசோதனையாகும். 

 

செய்யப்பட்ட ஒரு பரிசோதனை தெளிவான முடிவைக் கொடுக்காவிட்டால் 1 முதல் 8 வாரங்களில் மீண்டும் பரிசோதனை செய்து அவற்றின் சராசரியை முடிவாகக் கொள்ளலாம். 

 

 

உங்களுக்கு இரத்தப் பரிசோதனை அவசியமா? 

 

40 வயதிற்கு மேறபட்ட எவரும் இப்பரிசோதனையைச் செய்வது விரும்பத்தக்கது. ஆயினும் கொழுப்பின் அளவு அதிகரித்து இருக்கக் கூடிய வாய்ப்புள்ளவர்களுக்கு இது மிக அவசியமாகும். பின்வருவோர் கட்டாயம் பரிசோதனைக்கு ஆளாவது அவசியம் 

 

உயர் இரத்த அழுத்தம் உள்ளோர் 

 

நீரிழிவு நோயாளிகள் 

 

சிறு நீரக வழுவல் (Renal failure) உள்ளோர் 

 

இருதய நாடி, அல்லது மூளை நாடி (Coranary artery diseases) நோயுள்ளோர் 

 

தமது இரத்த உறவுகளில் இருதய நாடி, அல்லது மூளை நாடி (Coranary artery diseases) நோயுள்ளோர் 

 

கொழுத்த உடல் வாகுடையோர் (BMI >29) 

 

புகைபிடிப்போர் 

 

இரத்தத்தில் கொழுப்பு எந்தளவில் இருக்க வேண்டும்? 

 

விருபத்தக்க அளவு-எல்லைக்கோட்டுஅளவு-நோயுற்ற அளவு 

 

ரைகிளிசரைட் <150 - 150 350 - >350 

உயர் அடர்த்தி 

 

லைப்போபுரதம் HDL >35 <35 

குறை அடர்த்தி 

 

லைப்போ புரதம் 

 

நோயுற்றோரில் LDL <100 >100 

 

குறை அடர்த்தி லைப்போ புரதம் சாதாரணமானவர்களில் 

 

LDL <130 130-159 >160 

 

LDL/HDL விகிதம் <4 >4 

 

கொலஸ்டரோல் 

 

Total Cholesterol 

 

180-200 200-239 >240 

 

LDL 130 க்குக் குறைவாகவும், HDL 40 க்கு அதிகமாகவும், TG 150 க்குக் குறைவாகவும் உள்ளவர்களுக்கு உடனடியாக வைத்தியம் செய்ய வேண்டியதில்லை. ஜந்து வருடங்களின் பின் இரத்தப் பரிசோதனை செய்தால் போதும். 

 

LDL 131 - 160 ஆகவும், HDL 31 - 40 ஆகவும், TG 151 250 ஆகவும் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடுகளையும், வாழ்க்கை முறை 

மாற்றங்களையும் கடைப் பிடிக்க வேண்டும். ஆயினும் இவர்களின் வயது 40 க்கு அதிகமாக இருந்தால் அல்லது அடுத்த முன்று பரிசேதனைகளின் பின்பும் இரத்த கொழுப்புகளில் குறைவு ஏற்படாவிட்டால், அல்லது இருதய நோயை உண்டுபண்ணும் காரணிகளில் இரண்டு இருந்தால் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். 

 

LDL 161 - 190 ஆகவும், HDL 25 - 30 ஆகவும், TG 251 350 ஆகவும் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடுகளையும், வாழ்க்கை முறை 

மாற்றங்களையும் கடைப் பிடிக்க வேண்டும். ஆயினும் இவர்களின் வயது 35 க்கு அதிகமாக இருந்து உணவுக் கட்டுப்பாடுகளும், வாழ்க்கை முறை மாற்றங்களும் பலனைக் கொடுக்காவிட்டால் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். 

 

LDL 190 க்கு அதிகமாகவும், HDL 25 க்கு குறைவாகவும், TG 350 க்கு அதிகமாகவும் உள்ளவர்களுக்கு உடனடியாக மருந்துகள் 

ஆரம்பிப்பதுடன் உணவுக் கட்டுப்பாடுகளையும், வாழ்க்கை முறை மாற்றங்களையும் கடைப் பிடிக்க வேண்டும். 

 

 

இரத்த கொலஸ்டரோல் அதிகரிப்புக்குக் காரணங்கள். 

 

உங்களது இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரித்திருப்பதற்கு அல்லது சாதாரண அளவில் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இரத்த கொலஸ்டரோலில் பல பிரிவுகள் இருப்பதை ஏற்கனவே பார்த்தோம். இவற்றில் முக்கியமானது LDL கொலஸ்டரோலாகும். 

 

LDL கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் அதன் காரணமாக இருதய நோய்கள் வருவதற்குமான காரணிகளை நாம் அறிந்திருப்பது அவசியம். அவற்றை அறிந்திருப்பதன் மூலம் எம்மால் மாற்றக் கூடிய காரணிகளை கட்டுப்படுத்தி, அதன் மூலம் LDL கொலஸ்டரோல் அதிகரிப்பதையும் அதன் காரணமாக இருதய நோய்கள் வருவதற்குமான வாய்ப்புகளை நாம் தவிர்த்துக் கொள்ளலாம். 

 

சில குடும்பங்களில் அக்குடும்ப அங்கத்தவர்கள் பலரும் கொலஸ்டரோல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. இதற்குக் காரணம் அவர்களது பொதுவான உணவுப் பழக்கங்களாக இருக்கக் கூடும். ஆயினும் கொலஸ்டரோல் அதிகரிப்பு என்பது பரம்பரை குணாதிசியமாக இருப்பதை பல ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இதேபோல வேறு சில குடும்பங்களில் இயற்கையாகவே கொலஸ்டரோல் அளவு குறைவாக இருக்கிறது. எனவே உங்கள் குடும்பத்தில் வேறு சிலருக்கு ஏற்கனவே கொலஸ்டரோல் அதிகமாயிருந்தால் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும். உங்கள் குருதிக் கொலஸ்டரோலை அடிக்கடி பரிசோதித்துப் பார்ப்பதுடன் உணவுகளிலும் அவதானமாக இருக்க வேண்டும். 

 

அதீத எடையும் கொலஸ்டரோல் அதிகரிப்புடன் தொடர்புடைய காரணியாகும். அதேபோல இது இருதயநோய்களுக்கும் காரணமாகிறது. 

புகைத்தல் இரத்தத்தில் உள்ள கொலஸ்டரோல் அளவை அதிகரிப்பதுடன், இருதய நோய்கள் நீரிழிவு போன்ற வேறு பல நோய்களுக்கும் காரணமாகிறது. 

 

அதீத மதுப் பாவனையும் இரத்தத்தில் உள்ள கொலஸ்டரோல் அளவை அதிகரிக்கிறது. அதாவது அருந்தும் மதுவில் எதனோலின் (Ethanol) அளவு 30 மி.லி ருக்கு அதிகமாயின் அது இரத்தக் கொலஸ்டரோல் அளவை அதிகரிக்கும். 

 

சமனற்ற உணவும் (Imbalanced food) இரத்தக் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பிற்கு ஒரு முக்கிய காரணமாகும். மாறாக சமச்சீரான உணவு (Balanced food) கொலஸ்டரோல் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். முக்கியமாக அளவிற்கு அதிகமாக உண்பதும், அதிக கலோரிப் பெறுமானம் கொண்ட மாப் பொருட்களையும், கொழுப்புப் பொருட்களையும் உணவில் அதிகளவில் சேர்ப்பதும் கொலஸ்டரோல் அதிகரிப்பிற்குக் காரணமாகின்றன3 

 

உணவில் அதிகளவு கொழுப்புப் பொருட்களை உண்பதும் இரத்தக் கொலஸ்டரோவை அதிகரிக்கிறது. முக்கியமாக trans fatty acids 

அதிகமுள்ள உணவுகளை உண்பது காரணமாகிறது. French fries என்று சொல்லப்படுகிற உருளைக்கிழங்குப் பொரியல் அத்தகையது. 

 

மார்ஐரினும் அது கலந்த உணவுகளும், பேக்கரித் தயாரிப்பு உணவுகளும், பொரித்த உணவுகளும் கொலஸ்டரோலை அதிகரிக்கும். 

 

உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையும் கொலஸ்டரோல் அளவை அதிகரிப்பதற்கான இன்னுமொரு காரணமாகும். 

 

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்களும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரிப்புடன் தொடர்புடைய இன்னுமொரு 

காரணியாகும். அதேபோல இருதயநோய்களுக்கும் காரணமாகிறது. 

 

மனஅமைதியின்மை, உணர்ச்சிப் பாதிப்புகள் ஆகியனவும் இரத்தத்தில் கொலஸ்ட்ரோலை அதிகரிக்கச் செய்கின்றன. 

 

ஆண்கள் பெண்களைவிட கொலஸ்டரோல் பாதிப்பிற்கு ஆளாவது அதிகம். மாதவிடாய் நின்ற பின் பெண்களும் ஆண்களைப் போன்ற பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சமூக பொருளாதார நிலைகளுக்கும் இரத்தக் கொலஸ்டரோல் அளவிற்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். சமூக பொருளாதார நிலையின் உயர் நிலையிலும், அடிமட்டத்திலும் இருப்பவர்கள் கொலஸ்டரோல் பிரச்சினைக்கு ஏனையவர்களைவிட அதிகம். 

 

தனிமை வாழ்க்கைக்கும் கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக இன்னுமொரு அறிக்கை கூறுகிறது. திருமணம் செய்யாதவர்களும், தமது வாழ்க்கைத் துணையை இழந்தவர்களும், விவாகரத்துப் பெற்றவர்களும், திருமணவாழ்வில் சந்தோஷ‘மும் திருப்தியும் பெறாதவர்களும் கொலஸ்டரோல் பாதிப்பிற்கு ஆளாவது அதிகமாக இருக்கிறது.

 

cholesterol.jpg

 

 

கொலஸ்டரோல் பிரச்சனையும்!  அதைக் கட்டுப்படுத்துவதும்!

 

உங்களுக்கு இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகம் என இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு மாத்திரமல்ல இன்னும் பலர் இந்தக் கொலஸ்டரோல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பரிதாபம் என்னவென்றால் மிகப் பெரும்பாலானவர்கள்  தமக்கு இப்பிரச்சனை இருப்பதை அறியாமல் இருப்பதுதான். இதற்குக் காரணம் இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் அதிகரித்த  நிலையானது எந்தவித அறிகுறிகளையோ பாதிப்புகளையோ உடனடியாக வெளிக் காட்டுவதில்லை. வைத்திய ஆலோசனையும் இரத்தப் பரிசோதனையும் மாத்திரம்தான் இப்பிரச்சனை உங்களுக்கு இருப்பதை ஆரம்பத்திலேயே உணர்த்தும். ஆனால் நடுத்தர வயதிலும் முதுமையிலும் வரக்கூடிய சில ஆபத்தான நோய்களுக்கு இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் ஒரு அடிப்படைக் காரணமாகும். 

 

எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? 

 

கொலஸ்டரோலும் ஏனைய கொழுப்புகளும் இரத்த நாடிகளின் சுவர்களில் படிந்து உடல் உறுப்புகளுக்கான இரத்த ஓட்டத்தை குறையச் செய்கின்றன. இதனால், பக்கவாதம், அஞ்சைனா, மாரடைப்பு முதலான இருதய நோய்கள்,சிறுநீரகநோய்கள் 

போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.இத்தகைய ஆபத்தான நோய்கள் உங்களுக்கு வராமல் தடுக்கவே கொலஸ்டரோல் பற்றிய அறிவு எல்லோருக்கும் தேவைப்படுகிறது. அத்துடன் அதனைக் கட்டுப்படுத்துவதும் அவசியமாகிறது. இது வயதானவர்களுக்கான பிரச்சனை என எண்ண வேண்டாம்., நடுத்தர வயதினரையும் பாதிக்கும் விடயமாக இருக்கிறது. அது மட்டுமல்ல குழந்தைப் பருவத்திலேயே இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவது ஆரம்பித்து விடுவதால் எல்லோருமே தெரிந்து கொள்ள வேண்டியதுடன் அதனைத் தடுக்கும் முயற்சியில் இளவயது முதலே ஈடுபட வேண்டிய முக்கியமான விடயமாகவும் உள்ளது. 

 

 

இரத்த கொலஸ்டரோலும் உணவிலுள்ள கொலஸ்டரோலும் 

 

உங்களது இரத்தத்தில் உள்ள கொலஸ்டலோலுக்கும் உங்கள் உணவிலுள்ள கொலஸ்டரோலுக்கும் உள்ள தொடர்பு என்ன? 

 

தங்களது உணவிலுள்ள உள்ள கொலஸ்டரோல்தான் தங்கள் இரத்தத்தில் பிரதிபலிக்கிறது எனப் பலரும் தவறாகக் கருதுகிறார்கள். உண்மையில் இரண்டிற்கும் இடையே தொடர்பு மிகக் குறைவே. உங்கள் உணவில் உள்ள கொலஸ்டரோல் அப்படியே உங்கள் இரத்த கொலஸ்டரோலாக மாறும் என்றில்லை. 

 

ஒருவரது இரத்த கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு அவரது சகலவிதமான உணவு முறைகளும், பரம்பரைக் காரணங்களும், வாழ்க்கை முறைகளும் காரணமாகின்றன. 

 

உண்மையில் உங்கள் உணவில் உள்ள கொலஸ்டரோலுக்கும் உங்கள் இரத்த கொலஸ்டரோலுக்கும் உள்ள தொடர்பு மிகக் குறைவே. இதனால்தான் தமது உணவில் மிகச் சிறிய அளவு கூட கொலஸ்டரோலை உட்கொள்ளாத முழுமையான தாவர உணவார்களுக்கும் கூட இரத்த கொலஸ்டரோல் பிரச்சினையும், இருதய நோய்களும் வரச் செய்கின்றன. 

 

மறுதலையாகப் பார்க்கும்போது தாய்வான், ஐப்பான், பிரான்ஸ், மெக்ஸிகோ, ஸ்பெயின் போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் தமது 

உணவில் அதிகளவு முட்டையையும், வேறு அதிக கொலஸ்டரோல் உணவுகளையும் உட்கொண்டு வந்த போதும் அவர்களுக்கு இருதய நோய்கள் வருவது குறைவாக இருக்கிறது. அதாவது முழுமையான தாவர உணவாளர்களைவிடவும் பாலுணவும் சேர்த்து எடுக்கும் தாவர உணவாளர்களை விடவும் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

 

இப்படிக் கூறுவதின் அர்த்தம் கொலஸ்டரோல் உணவுகளை வேண்டியளவு உண்ணுங்கள், உங்கள் இரத்த கொலஸ்டரோலுக்கு எதுவும் நடக்காது என்பதல்ல. உங்கள் இரத்த கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பதற்கு உணவைத் தவிர வேறு பல காரணங்களுக்கும் இருக்கின்றன, அவற்றையும் கவனித்தல் அவசியம் என்பதேயாகும். 

 

ஒருவரது கொலஸ்டரோல் வகைளில் முக்கியமானது கெட்ட கொலஸ்டரோல் என்று சொல்லப்படும் LDL கொலஸ்டரோலும், 

ரைகிளிசரைட் (Triglyceride) கொலஸ்டரோல் ஆகிய இரண்டுமாகும். இவற்றின் அதிகரிப்பிற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகள் 

75%மும், உணவு சார்ந்த காரணிகள் 25% ஆகும். 

 

கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகளாவன 

 

1 பரம்பரை 15% 

 

2 அதிகரித்த எடை 12% 

 

3 ஹோர்மோன்களும், நொதியங்களும் 8% 

 

4 உயர் இரத்த அழுத்தம் 8% 

 

5 அதிக மது பாவனை 2% 

 

6 மனப்பழுவும், உணர்ச்சி நிலைகள், சமூக பொருளாதார நிலையும் 8% 

 

7 நீரிழிவு 7% 

 

8 உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை 6% 

 

9 புகைத்தலும், சூழல் மாசுக்களும் 6% 

 

10 பால், வயது, மருந்துகள், ஏனைய காரணிகள் 5% 

 

 

இரத்தத்தில் கொழுப்பை கட்டுப்படுத்த  நீங்கள் செய்ய வேண்டியவை! 

 

உங்கள் உணவிலும், வாழ்க்கை முறைகளிலும் சில மாற்றங்களை செய்தால் உங்கள் இரத்தக் கொழுப்பின் அளவைக் குறைக்க முடியும். 

 

1. கொலஸ்டரோல் மிகுந்துள்ள  உணவுகளைக் குறையுங்கள்! 

 

எமது உடலிலுள்ள கொலஸ்டரோல் இரண்டு வழிகளில் கிடைக்கிறது. 

 

1. நாம் உண்ணும் உணவில் உள்ள கொலஸ்டரோல். 

 

2. எமது உடல் உற்பத்தி செய்யும் கொலஸ்டரோல். 

நாம் உண்ணும் உணவில் உள்ள கொலஸ்டரோலாலில் மூன்றில் ஒரு வீதமே (1/3%) மட்டுமே உடலால் உறிஞ்சப்படுகிறது. ஆயினும் உட்கொள்ளும் உணவில் உள்ள மொத்தக் கலோரிப் பெறுமானம், மொத்தக் கொழுப்பு ஆகிய இரண்டுமே கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாயிருக்கின்றன. இதோடு ஒப்பிடும்போது நாம் உண்ணும் உணவில் உள்ள கொலஸ்டரோலால் முக்கியமானது அல்ல எனக் கருதப்படுகிறது. எனினும் அதிக கொலஸ்டரோல் உள்ள உணவுகளான, முட்டை மஞ்சள் கரு, இறைச்சி வகைகள், பாலுணவு, நண்டு, இறால் போன்றவற்றை உங்கள் உணவில் கட்டுப்படுத்துங்கள்.

 

2. உணவில் கொழுப்புப் பொருட்க¨ளின்  அளவைக் குறையுங்கள்! 

 

நாம் உணவில் உட்கொள்ளும் கொழுப்பும், கொழுப்பு அமிலங்களும் எமது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பெரிதும் பாதிக்கின்றன. கொழுப்பு அமிலங்களில் இரண்டு வகை உண்டு. 

நிரம்பாத கொழுப்பு அமிலங்களில் (UnSaturated fatty acids) இரண்டு வகைகள் உண்டு 

 

Mono-UnSaturated fatty acids 

Poly-UnSaturated fatty acids 

 

எமது உணவில் ஓரளவு Poly-UnSaturated fatty acids சேர வேண்டும். அதிலும் முக்கியமாக ஒமெகா-6, ஒமெகா-3 ( Omega 6), Linolenic (Omega 3) ஆகியன சேர வேண்டும். ஏனெனில் இவை எமது உடலால் உற்பத்தி செய்ய முடியாதவை. ஆனால் இவை இரண்டும் எமது உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாசியமானவை. இதனால் இவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் ( Essential fatty acids- EFA ) என அழைக்கப்படுகின்றன. 

 

Poly-UnSaturated fatty acids கொலஸ்டரோலையும் பித்த அமிலங்களையும் மலத்துடன் அதிகளவு வெளியேற்றுகின்றன. இதனால் இரத்த கொலஸ்டரோல் அளவு குறையும். 

 

பெரும்பாலான தாவர இன எண்ணெய்களில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் EFA- உண்டு. ஆனால் இறைச்சி வகைகளில் அதிகம் இல்லை. 

 

மீனிலும் மீன் எண்ணெய்களிலும் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவைக் குறைக்கிறது. அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் -EFA- முக்கியமாக Omega 3 வகை கொழுப்பு அமிலம் ஆழ்நீர் வாழ் மீன் எண்ணெயில் இருக்கிறது. சிறிய மீன்கள் Salaya, Hurulla, Kumbalawa போன்றவற்றில் Omega 3 வகை கொழுப்பு அமிலம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. Kellawalla – Tuna, Thalapath போன்ற செந்நிற மீன்களிலும் Omega 3 வகை கொழுப்பு அமிலம் இருக்கிறது. ஆயினும் Thora, Paraw போன்ற வெள்ளை மீன்களில் Omega 3 வகை கொழுப்பு அமிலம் குறைவாகவே இருக்கிறது. 

 

பிரதான கொழுப்பு அமிலங்கள் இன்னுமொரு வழியிலும் இருதய நோய்களுக்கு எதிராக உதவுகின்றன. இவை புரஸ்டோகிளன்டின் என்ற பொருளை உற்பத்தி செய்து இரத்தம் உறைதலை குறைக்கிறது. 

 

தேங்காய் எண்ணெயில் 88 வீதமும், பாம் எண்ணெயில் 48 வீதமும் நிரம்பிய கொழுப்பு அமிலம் இருப்பதால் அவை கொலஸ்டரோல் அளவை அதிகரிக்கும். 

 

சோளத்தில் 60 வீதமும், சோயாவில் 58 வீதமும், சூரியகாந்தியில் 56 வீதமும், நல்லெண்ணெயில் 51 வீதமும் பிரதான கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் அவற்றை நீங்கள் ஓரளவு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

 

சூரியகாந்தி, சோயா மற்றும் சோள எண்ணெய்களில் முன்பு குறிப்பிட்டது போல நிரம்பாத கொழுப்பு அமிலங்கள் (£Poly-UnSaturated fatty acids) இருப்பதால் அவற்றை அளவோடு உட்கொள்ளும்போது இரத்தத்தில் கெட்ட கொ¨ஸ்டரோல் எனப்படும் LDL குறைவடையும். ஆனால் இவற்றையும் கூட நீங்கள் அதிகமாக உட்கொண்டால் அது உங்களின் இரத்ததில் உள்ள நல்ல கொலஸ்டரோல் ஆன HDL ன் அளவைக் குறைக்கச்செய்துவிடும். எனவே உங்களுக்குச் சிபார்சு செய்யப்பட்ட எண்ணைகளையும் கூட அதிகம் உட்கொள்ளாமல் அளவோடு சேர்ப்பது நல்லது.

 

அத்துடன் உங்களுக்குச் சிபார்சு செய்யபட்ட சூரியகாந்தி, சோயா மற்றும் சோள எண்ணெய்களையும் பொரிப்பபதற்குப் பாவிக்கும்போது ஒருமுறை பாவித்த எண்ணெயை மீண்டும் பொரிப்பதற்குப் பாவிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். மீண்டும் பாவிக்கும்போது கீட்ரோன் (Ketones), அல்டிகைட் (Aldehyde) போன்ற நச்சுப் பொருட்கள் அங்கு உட்பத்தியாகின்றன. இவை உங்களுக்கு ஆரோக்கியக் கேட்டை விளைக்கலாம். ஆயினும் தேங்காய் எண்ணெயில் இப்பிரச்சனை இல்லை என்பதையும் நாம் கவனத்தில் எடுக்கலாம். மீண்டும் மீண்டும் அதே தேங்காயெண்ணயைப் பாவித்தபோதும் அத்தகைய நச்சுப் பொருட்கள் தோன்றுவதில்லை. 

 

3. உணவில் அவதானிக்க வேண்டிய \  ஏனைய விடயங்கள்! 

 

அ. நார்ப் பொருட்கள்- உணவில் உள்ள நார்ப் பொருட்கள் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவைக் குறைக்கின்றன. இது இரண்டு விதத்தில் நடைபெறுகிறது. 

 

1. பித்த அமிலங்களுடன் இணைந்து கெலஸ்டரோலை மலத்துடன் வெளியேற்றுகின்றன. 

 

2. நார்ப்பொருள் உணவில் அதிக இடத்தைப் எடுப்பதால் உட்கொள்ளப்படும் கலரிப் பெறுமானத்தைக் குறைக்கிறது. 

 

எனவே நார்ப்பொருள் அதிகமுள்ள உணவுகளாவன, சுத்திகரிகப்டாத தானியங்கள்- உதாரணம் தவிடுடன் கூடிய அரிசி, மா, ஆட்டாமா, குரக்கன், பயறு இன உணவுகள், காய்கறிவகைகள், பழவகைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள். 

 

ஆ. உணவில் புரதங்கள்- தாவர உணவிலிருந்து பெறப்படும் புரதங்கள் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவைக் குறைக்கின்றன. எனவே இரத்தத்தில் அதிக கொலஸ்டரோல் உள்ளவர்களுக்கு தாவர உணவு நன்மையளிக்கக் கூடும். 

 

இ. உணவிலுள்ள மொத்தக் கலரிப் பெறுமானம்- மாப் பொருட்களும் இனிப்புப் பொருட்களும் உணவில் உள்ள மொத்தக் கலரிப் பெறுமானத்தை அதிகரிக்கின்றன. இவை எமது உடலின் தேவைக்கு அதிகமானால் எடை அதிகரிக்கும். இரத்தத்திலும் கொழுப்பு அதிகரிக்கும். அத்துடன் அதிகமாக இனிப்புப் பொருட்களை உண்பது இருதய நோய்களுக்கு இட்டுச் செல்லும். 

 

இரத்தக்கொழுப்பை குறைப்பதற்கான உணவுமுறைகள் 

தவிர்க்க வேண்டிய உணவுகள்! 

 

1. இறைச்சி வகைகள்: ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி, சொ§ஐசஸ், பேகன், ஈரல், மூளை, சிறுநீரகம், நிணம், கண்ணில் தென்படக்கூடிய இறைச்சியிலுள்ள எல்லாக் கொழுப்புகளும், நண்டு, இரால், கணவாய், 

 

2. எண்ணெய்களும் கொழுப்புகளும்: பட்டர், நெய், தேங்காயெண்ணய், பாம் எண்ணெய், சிறகவரை எண்ணெய், பட்டாணி எண்ணெய், மார்ஐரீன் (Hydrogenated Margarines), 

 

3. இனிப்புகளும், சிற்றுணவுகளும்: பட்டர் மார்ஐரின் முட்டை மஞ்சற் கரு போன்றவை சேர்க்கப்பட்ட கேக், பிஸ்கட், புடிங், பேஸ்டிஸ் ஆகியனவும் சொக்கிளற், ஐஸ்கிறீம் 

 

4. முட்டை: மஞ்சற்கருவுடன் எனில் வாரத்திற்கு இரண்டிற்கு மேற்படாமல் 

 

5. பால் மற்றும் பாற்பொருட்கள்: முழுமையான பால், பாற்பவுடர், டின்பால், கிறீம், சீஸ், 

 

6. பழவகைகள்: அவகாடோ பழம் கூட தவிர்க்கப்பட வேண்டியது அல்ல என அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன. Monounsaturated fat 

அதிகமும் Poly unsaturated fat நடுத்தர அளவுமுள்ள அவகாடோ பழம், கஜு கொட்டை ஆகியவற்றை போதியளவு உட்கொள்ளுங்கள். 

இவை குருதியில் L.D.L கொலஸ்டரோல் அளவைக் குறைக்க உதவும். 

 

7. காய்கறிகளும் கிழங்குவகைகளும்: தவிர்க்கப்பட வேண்டியவை எதுவும் இல்லை. 

 

8. பாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், தேங்காய்ப்பால், அதிகம் சேர்த்துச் சமைக்கப்பட்ட அரிசி உணவுகள் உதாரணமாக பொங்கல், 

பாற்சோறு, நெய்சோறு, புரியாணி, 

 

9. பயறு வகைகள்: சிறகவரை, பட்டாணி 

 

10. எண்ணெயில் பொரித்த, தாளித்த உணவுவகைகள். 

 

Poly Unsaturated தாவர எண்ணெய்களான Corn Oil, Sunflower oil, Canola Oil, and Soya Oil ஆகியவற்றைப் பொரிப்பதற்குப் பாவிப்பது 

நல்லதல்ல. ஏனெனில் இவற்றில் ஏற்கனவே வசயளெ கயவவல யஉனைள உள்ளன. பொரிக்கப் பயன்படுத்தும் போது இந்த வசயளெ கயவவல யஉனைள அளவு மேலும் அதிகரிக்கிறது. Trans Fatty Acids L.D.L கொலஸ்டரோல் அளவை மேலும் அதிகரிக்கின்றன. Trans Fatty Acids என்பன கொலஸ்டரோலை விட மோசமான நச்சுப் பொருட்களாகும். அவை நீரிழிவு, புற்று நோய், இருதய நோய்கள், மற்றும் Multiple sclerosis, Diverticulosis போன்ற நோய்களோடும் தொடர்புடையன. 

 

எனவே பொரிப்பதற்கு பாதுகாப்பான எண்ணெய் கலப்படமில்லாத தேங்காய் எண்ணெய்தான் என்று சொல்லப்படுகிறது. 

 

ஏனெனில் தேங்காய் எண்ணெயில் பொரிக்கும்போது ஆபத்தான trans fatty acids உண்டாவதில்லை. தேங்காய் எண்ணெயில் இருப்பது 

Medium chain fatty acid. Medium chain fatty acid உண்ணும் போது அவை L.D.L கொலஸ்டரோல் அளவை அதிகரிப்பதில்லை. ஏனெனில் 

அவை ஈரலில் சக்தியாக உரு மாற்றம் பெறுகின்றன. 

 

 

முற்றாக தவிர்க்கத் தேவையற்ற உணவுகள்! 

 

1. மாமிச உணவுகள்: கோழியிறைச்சி போன்ற கொழுப்பற்ற இறைச்சிகள், மீன் வகைகள். 

 

2. எண்ணெய்களும் கொழுப்புகளும்: சோயா எண்ணெய், சோள எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய். ஆயினும் எந்த 

எண்ணெய் ஆயினும் குறைந்தளவே சேருங்கள். 

 

3. இனிப்புகளும், சிற்றுணவுகளும்: சீனி, சர்க்கரை, கற்கண்டு, கருப்பட்டி, தேன், ஐ¡ம், ¦ஐலி, போன்ற எல்லா இனிப்புவகைகளையும் 

அளவோடு பாவிக்கவும். அதிகம் உட்கொண்டால் எடை அதிகரிப்பதோடு அதனோடு கூடிய பிரச்சனைகள் யாவும் ஏற்படலாம். 

 

4. முட்டையின் வெள்ளைப் பகுதி வேண்டிய அளவு. 

 

5. பால் மற்றும் பாற்பொருட்கள்: ஆடை நீக்கப்பட்ட பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால்மா. 

 

6. பழவகைகள்: அவகாடோ பழம் உட்பட எவையும் தவிர்க்கப்பட வேண்டியதில்லை. 

 

7. காய்கறிகளும் கிழங்குவகைகளும்: சகல காய்கறிவகைகள், இலை வகைகள், கீரை வகைகள், உருளைக்கிழங்கு, மரவெள்ளி, வத்தாளை 

அடங்கலான சகல கிழங்குகள் உண்ணப்படக் கூடியவை. வெள்ளைப்பூடு, வெங்காயம், தேநீர் போன்றவை இதயநோய்களுக்கு நல்லவை என சில ஆய்வுகள் கூறுகின்றன. 

 

8. தானிய வகைகள்: சோறு, பாண், குரக்கன், நூடில்ஸ், மக்கரோனி, மற்றும் அரிசிமா, கோதுமை மாவில் செய்யப்படும் இடியப்பம், புட்டு, ரொட்டி, தோசை, அப்பம் போன்றவை. இவற்றை தயாரிக்கும்போது மிகக் குறைந்தளவிலேயே தேங்காய்பூ, தேங்காய் எண்ணெய், ஆகியவற்றை சேர்க்கப்படலாம். 

 

9. பயறு வகைகள்: சிறகவரை, பட்டாணி தவிர்ந்த ஏனையவை. 

 

10. எண்ணெயில் பொரித்த தாளித்த உணவுவகைகளைக் குறைக்கவும். அவசியமெனில் முன்பு கூறிய எண்ணெய் வகைகளை குறைந்தளவில் பாவிக்கவும். 

 

11. சமையலுக்கு இரண்டாம் மூன்றாம் தேங்காய்பால் உபயோகிக்கவும். அதற்கு பதிலாக சோயாப்பால் அல்லது கொழுப்பு நீக்கிய பசுப்பால் உபயோகிப்பது நல்லது. 

 

4. கொலஸ்டரோலைக் குறைப்பதற்கான ஏனைய ஆலோசனைகள்! 

 

அ. நீங்கள் புகைப்பராயின் அதை உடனடியாக நிறுத்துங்கள். 

 

ஆ. தினசரி ஏதாவது உடற் பயிற்சி செய்யுங்கள். நடத்தல், ஓடுதல், துள்ளல் நடை, சைக்கிள் ஓட்டம், நீச்சல் பயிற்சி, தோட்ட வேலை 

போன்ற ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள்.தினசரி செய்வது நல்லது. முடியாவிட்டால் வாரத்தில் நான்கு நாட்களுக்காவது செய்யுங்கள். 

 

இ. எடை உங்கள் உயரத்திற்கு அதிகமானால் அதை சரியான அளவிற்கு குறையுங்கள். உங்கள் எடை எவ்வளவு மேலதிகமாக 

இருக்கிறதோ அந்தளவுக்கு உங்கள் இரத்தத்திலும் கொழுப்பு அதிகரிக்கும். 

 

ஈ. மதுபானத்தைத் தவிருங்கள் 

 

உ. தேவைப்பட்டால் வைத்திய ஆலோசனையுடன் மருந்துகளை உட்கொள்ளுங்கள். 

 

 

கொலஸ்டரோலைக் குறைக்கும் மருந்துகள்! 

 

கொலஸ்டரோலைக் குறைப்பதில் மருந்துகளுக்கும் நிச்சயம் ஒரு இடம் இருக்கவே செய்கிறது. 

 

பலவகை மருந்துகள் இருக்கின்றன. அவற்றிக்கான தேவைகளும் பயன்பாடுகளும் மாறுபடும். இவற்றை மிக நீண்ட காலம் உபயோகிக்க வேண்டியிருக்கும். ஆயினும் இப்பொழுது பரவலாகப் பயன்படுத்தப்படுபவை இரண்டு முக்கிய வகை மருந்துகளாகும். 

 

ஓன்று ¦ஐம்பிவ்ரிஸோல் (Gemfibrisol) என்ற மருந்தாகும். 

 

மற்றது ஸ்டரின் (Statin) வகை சார்ந்த மருந்துகளாகும். 

 

¦ஐம்பிவ்ரிஸோல் (Gemfibrisol) 

 

என்ற மருந்து முக்கியமாக ரைகிளிசரைட் மட்டும் அதிகரித்தவர்களுக்கு பயன்படுகிறது. 

 

இம் மருந்துகளுக்கு பக்க விளைவுகள் இல்லையா? அவற்றை நீண்ட காலம் உபயோகிப்பது ஆபத்தல்லையா என நீங்கள் கேட்கக் கூடும். சில பக்கவிளைவுகள் எதிலுமே இருக்கவே செய்யும். இம் மருந்திலும் சில பக்கவிளைவுகள் இருக்கவே செய்கின்றன. 

 

பசியின்மை, வயிற்றுப் பொருமல், வயிற்றேட்டம், வயிற்று வலி போன்ற சாதாரண பக்கவிளைவுகள் சிலரில் ஏற்படலாம். மலச்சிக்கலும் ஏற்படலாம். வேறு சிலரில் தோலில் தடிப்பு, அரிப்பு போன்ற அலர்ஐ¢ அறிகுறிகள் ஏற்படலாம். 

 

இன்னும் சிலரில் தலையிடி, தலைப்பாரம், தலைச்சுற்று, பார்வை மந்தம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். 

 

இவை எதுவுமே நிரந்திரப் பாதிப்புகள் அல்ல. சில நாட்கள் செல்லத் தானாகவே மறைந்துவிடும். அல்லாவிடினும் மருந்தை நிறுத்த மறைந்துவிடும். 

 

மிக அரிதாக ஈரலில் பாதிப்பு ஏற்படலாம். இப்பாதிப்பு ஏற்படுகிறதா என ஆரம்பத்திலேயே அறிந்து கொள்ள இரத்தப் பரசோதனை 

செய்வார்கள். SGPT என்ற பரிசோதனையை செய்து பார்ப்பார்கள். குறிப்பிடத்தக்க பாதிப்பு இருந்தால் மருந்தை நிறுத்தக்கூடும். 

இலலையேல் அவதானத்துடன் மருந்தைத் தொடரக் கூடும். 

 

தசைநார்களில் வலி (Myalgia) மிக அரிதாக ஏற்படும் இன்னும் ஒரு பாதிப்பாகும். ஆயினும் எமது நாட்டைப் பொறுத்தவரையில் இன்னும் அரிதானதாகும். 

 

ஸ்டரின் Statin 

 

ஸ்டரின் என்ற வகை மருந்துகளே இன்று அதிகமாகப் பாவிக்கப்படுகிறன. இதில் பல வேறு மருந்துகள் இருக்கின்றன. அவையாவன. 

 

லோவஸ்டரின் 

 

சிம்வாஸ்டரின் 

 

அஸ்ட்ரோவஸ்டரின் 

 

பரவஸ்டரின் 

 

இம்மருந்துகள் குருதியில் உள்ள கொலஸ்டரோலை நன்கு குறைக்கின்றன. இவை ஒரே இனவகையான மருந்துகளான போதும் அவற்றின் செயற்பாட்டில் சில வித்தியாசங்கள் உள்ளன. ஓவ்வொருவரின் தனிப்பட்ட தேவைகளையும் கருத்தில் கொண்டு மிகப் பொருத்தமான மருந்தை வைத்தியர் உங்களுக்குச் சிபார்சு செய்வார். இவ்வகை மருந்துகளிலும் சில பக்கவிளைவுகள் இருக்கவே செய்கின்றன. பசியின்மை, வயிற்றுப் பொருமல், வயிற்றேட்டம், வயிற்று வலி போன்ற சாதாரண பக்கவிளைவுகள் சிலரில் ஏற்படலாம். 

 

இன்னும் சிலரில் தலையிடி, தலைப்பாரம், தலைச்சுற்று, பார்வை மந்தம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மிகச் சிலரில் ஈரலில் பாதிப்பு ஏற்படலாம். முன்பு குறிப்பிட்டதுபோல SGPT என்ற பரிசோதனையை செய்து பார்ப்பார்கள். மருந்தை ஆரம்பித்த இரண்டு மாத இறுதியில் முதல் தடைவ செய்து பார்ப்பார்கள். பாதிப்பு இல்லாவிடின் மருந்தைத் தொடர்வார்கள். 

 

 

http://www.panippulam.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=836:2010-12-06-15-31-19&amp;catid=96:2011-04-01-03-31-49&amp;Itemid=476

  • கருத்துக்கள உறவுகள்

கொலஸ்ரோல்  எனக்கு நோமல் எனவே என்யோய் லைப் 

  • தொடங்கியவர்

எனக்கு கொலஸ்ரோல் கூட

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கொலஸ்ரோல் கூட

வாயைப் பாத்தாலே தெரியுது  :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு இணைப்பு அலைமகள் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் நீண்ட கட்டுரையாகிவிட்டது. பகிர்வுக்கு நன்றி அலை.

  • கருத்துக்கள உறவுகள்

கொலஸ்ரோல்  எனக்கு நோமல் எனவே என்யோய் லைப் 

5 குறைவா? எனக்கு3.9 தமிழ் gpகளிடம் போகவே பயமாயிருக்கும் வருடத்தில் எப்படியாவது ஒரு நாளாவது மாட்டுபட்டால் காணும் பிரஷர் பம்மை உடனே தூக்கிடுவார்கள் மூச்சை அப்பிடி விடு இப்படிவிடு என்று கடைசியில் எல்லாம் நோமல் என்றவுடன் ஏமாற்றமாய் பார்வை பார்ப்பார் பாருங்க பிச்சைகாரன் தோத்தான்.தப்பி தவறி ஒருவருத்தத்தை அவர் கண்டுபிடித்துவிட்டால் "பிங்கோ" மூலையில் இருக்கும் இந்தியன் மருந்துக்கடையில் இருந்துவரும் கிம்பளங்கள் ,சம்பளங்கள் லண்டனில் வீட்டு மனைகளாய் வேண்டி விட்டிருப்பார்கள் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

பலர் இந்தக் கொலஸ்டரோல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பரிதாபம் என்னவென்றால் மிகப் பெரும்பாலானவர்கள் தமக்கு இப்பிரச்சனை இருப்பதை அறியாமல் இருப்பதுதான். இதற்குக் காரணம் இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் அதிகரித்த நிலையானது எந்தவித அறிகுறிகளையோ பாதிப்புகளையோ உடனடியாக வெளிக் காட்டுவதில்லை. வைத்திய ஆலோசனையும் இரத்தப் பரிசோதனையும் மாத்திரம்தான் இப்பிரச்சனை உங்களுக்கு இருப்பதை ஆரம்பத்திலேயே உணர்த்தும். ஆனால் நடுத்தர வயதிலும் முதுமையிலும் வரக்கூடிய சில ஆபத்தான நோய்களுக்கு இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் ஒரு அடிப்படைக் காரணமாகும்.

 

அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய, முக்கிய பதிவு.

இணைப்பிற்கு நன்றி அலைமகள்.

Edited by தமிழ் சிறி

நான் கனடாவின் இருதய நோய் தொடர்பான ஆராச்சி மையத்தில் தான் அவர்களது மருத்துவ கற்கை மற்றும் ஆராச்சி தொடர்பான மென்பொருள் வடிவமைப்பின் பிரிவில் வேலை செய்கின்றேன். அங்குள்ள மூத்த இருதய நோய் சிகிச்சை நிபுணர் (Cardiologist) கூறிய பின்வரும் விடயம் முக்கியமானது.

 

அலைமகளின் பதிவில் குறிப்பிட்டுள்ளது போன்று நாம் உண்ணும் உணவுக்கும் கொலஸ்ரோலுக்கும் இடையிலான தொடர்பு நாம் நினைக்கும் அளவுக்கு இல்லை. ஆகக் கூடியது 30 வீதம் தான் நாம் உண்ணும் உணவின் பங்களிப்பு உள்ளது. மிச்சம் எல்லாம் இதர காரணிகள் தான். முக்கியமான அம்சமாக பரம்பரை (நோய்) உள்ளது.

 

கொலஸ்ரோலிற்கான முக்கிய மருந்தாக இருக்கக் கூடியதாக இன்றும் இருப்பது உடற்பயிற்சி.

 

என் தென்னிந்திய நண்பன், மரக்கறியும் கோழி இறைச்சியும் தான் அதிகம் உட்கொள்கின்றவன். ஆடு, மாடு, மீன் போன்ற எந்த மாமிச / அசைவ உணவுகளையும் 20 வருடங்களுக்கும் மேலாக உண்பதில்லை. ஒரே ஒரு அசைவம் என்றால் அது கோழி இறைச்சி தான். மது / புகைப்பிடித்தலும் அறவே இல்லை.

 

ஆனாலும் அவனுக்கும் கொலஸ்ரோல்.

உடலில் காபோவைதரேட்டு அதிகரித்தால் அது கொழுப்பாக மாறுவதுண்டு. எனவே அளவாக உணவு உட்கொள்வது சிறந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.