Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூரியன் FM நடராஜா குருபரன் கடத்தப்பட்டுள்ளார்

Featured Replies

சூரியன் எஃப்.எம் வானொலியின் செய்திப்பிரிவு மேலாளர் நடராஜா குருபரன் கடத்தப்பட்டுள்ளார்

சூரியன் எஃப்.எம் வானொலியின் செய்திப் பிரிவு மேலாளரும், முதன்மைச் செய்தியாசிரியருமான நடராஜா குருபரன் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி;ன்றன.

இன்று அதிகாலை கடமைக்காக தனது அலுவலகம் நோக்கி மகிழுந்தில் சென்றிருந்தார். எனினும் அவர் அலுவலகத்திற்கு வராததையடுத்து அங்கிருந்தவர்கள் அவரது செல்லிடப்பேசிக்கு நீண்ட நேரமாகத் தொடர்பு எடுத்தபோதும், தொடர்பு ஏற்கப்படாத நிலையில், குருபரனின் வீட்டிற்கு அழைப்பு எடுத்தனர்.

இதனையடுத்து குருபரின் மனைவியும் அவரின் செல்லிடப்பேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியபோதும் அழைப்பு ஏற்கப்படவில்லை. இந்நிலையில் குருபரின் மகிழுந்து வீட்டிலிருந்து .300 மீட்டர்கள் தொலைவில் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை அவரது மனைவி அவதானித்ததையடுத்து குருபரன் கடத்தப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

இதேவேளை குருபரன் கடத்தப்பட்டுள்ளதைக் கண்டித்து சுதந்திர ஊடக இயக்கம் இன்று நண்பகல் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

சூரியன் எஃப்.எம் வானொலியின் முதன்மைச் செய்தியாளராகவும் செய்திப்பிரிவு மேலாளராகவும் கடமையாற்றி வந்த நடராஜா குருபரன் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் விழுதுகள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர்.

கடந்த சனிக்கிழமை ஒலிபரப்பான விழுதுகள் நிகழச்சியில் கொழும்பில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் மற்றும் கடத்தல்கள் பற்றி பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனிதவுரிமை செயற்பாட்டாளர்களின் நேர்காணல்களை பெற்று வழங்கியிருந்த நிலையில் இன்று கடத்தப்பட்டுள்ளார்;.

சூரியன் எஃப்.எம் வானொலி உள்ளிட்ட ஐந்து பிரபல வானொலிச் சேவைகளை நடததிவிரும் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தினரை மாவிலாறு மீதான படையெடுப்பின்போது தனது அலுவலகத்திற்கு அழைத்த சிறீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளிற்கோ அல்லது அவர்களின் அறிக்கைகளிற்கோ வானொலி நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாதென எச்சரிக்கை செய்து அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://sankathi.org/news/index.php?option=...id=250&Itemid=1

  • கருத்துக்கள உறவுகள்

இதுபற்றி ய மேலதிக விபரங்கள் ஏதாவது தெரியுமா

பொலிசார் இரண்டு குழுவினரை விசாரணைகளுக்காக ஏற்படுத்தியுள்ளார்களாம். இது கண்துடைப்பு. தெற்கில் இத்தனை பாதுகாப்பிற்கு மத்தியிலும் கடத்தப்பட்டிருப்பதும் புதிதல்ல. இது எத்தனையாவது தமிழ் ஊடகவியளாளர். உண்மைகளுக்கு திரை போட்டு வாழ பயங்கரவாத அரசு இவர்களை அழிப்பதின் மூலம் செய்யப்பார்க்கின்றது. இனி ஒரு ஐந்தாறுநாட்களுக்கு அனைவரும் குரல் கொடுப்பார்கள். அதன் பின் இன்னும் ஒரு தமிழ் ஊடகவியளாளர் கடத்தியபின் ஊளையிடத் தொடங்குவார்கள். இது தான் இன்றைய நிலை. இரண்டு மாதத்திற்கு முன் கொலை செய்யப்பட்ட சிங்கள ஊடகவியளாளரின் கொலையே கண்டுபிடிக்கவில்லை. இதுவும் பத்தோடு பதினோன்று தானா?

ஈழத்திலிருந்து

ஐhனா

குருபரன் கடத்தல் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் அக்கறை..! கொழுப்பு ஆர்ப்பாட்டம் ஏற்படுத்திய முக்கியத்துவம்..!

கட்டுநாயகா தாக்குதல் உட்பட அசம்பாவித இடங்களுக்கு அச்சுறுத்தல்களின் மத்தியிலும் துணிகரமாகச் சென்று செய்தி சேர்ந்துத் தந்த திறமையான செய்தியாளர் குருபரன் என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன் எவ் எம் என்பது எப்பவும் தமிழ் மக்களுக்காக மட்டுமன்றி தமிழ் பேசும் மக்கள் அனைவருக்காகவும் குரல் கொடுக்கும் வானொலி..! இது ஏபிசி ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் ஒரு அங்கமாகும்..!

_42027120_nadarajah-guruparan_body.jpg

Tamil reporter seized in Colombo

A Tamil radio journalist has been kidnapped near the Sri Lankan capital, Colombo, police say.

Nadaraja Guruparan, who worked for the radio station Surayan FM, was last seen leaving his house early on Tuesday.

His vehicle was later found abandoned and police say they are concerned for his safety. It is not clear who kidnapped him.

Friends of Mr Guruparan say that he complained of receiving threats from several paramilitary groups.

bbc.com

திருகோணமலை நடக்கும் இராணுவ நடவடிக்கைகள் வெளியிலை தெரியாமல் இருப்பதற்காக திருகோணமலைக்கான கைத்தொலைபேசிகளின் சிக்னல்கள் யாவும் தடைசெய்யப்பட்டன ஆனால் சனம் சூரியன் எவ்.எம்மை கேட்டு எல்லாவற்றையும் அறிந்து கொண்டார்கள்..........இதை தடுக்க என்னவழி யோசித்த பாதுகாப்பு அமைச்சுக்கு எங்கடை எலும்பு தின்னிகளை வைத்து ஒரு நாடகம் நடத்தியிருக்கு...........ஆனா நிலமை சிக்கலாப்போச்சுது இதனால் சம்புர் ஓபரேசன் முடிஞ்சாப்பிறகு சிலவேளை ஆளை விடலாம் அல்லது........??????? கடவுளுக்குத்தான் வெளிச்சம்

  • கருத்துக்கள உறவுகள்

கடத்திய எந்த ஊடகவியளாளரை விட்டு வைத்திருக்கிறார்கள் அவர்கள்.

செய்தியாளர் நடராஜா குருபரனைக் காணவில்லை

கொழும்பு சூரியன் வானொலியின் செய்தி முகாமையாளர் நடராஜா குருபரன் கடத்தப்பட்டதாக கொழும்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20060829124737nadarajah-guruparan.jpg

செய்தியாளர் நடராஜா குருபரன்

இன்று அதிகாலை தனது வாகனத்தில் அலுவலகத்துக்கு புறப்பட்டுச் சென்ற அவரை, அதன் பின்னர் காணவில்லை என்று அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளதாக தெரிகிறது. அவர் அலுவலகத்துக்கும் வந்து சேரவில்லை.

அதேவேளை அவரது வாகனம் கல்கிசைப் பகுதியில் அநாதரவாக நின்று கொண்டிருந்ததாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

இதேவேளை காணமல் போன குருபரனைக் கடத்தியவர்கள், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவரை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி பத்திரிகைத்துறை அமைப்புகள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தின.

20060829124914ilam-poorani.jpg

குருபரனின் மனைவி இளம்பூரணி

அவரது விடுதலை கோரி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

அவரை விடுவிப்பதற்கான புலன் விசாரணைகளை இலங்கை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரப்பட்டது.

குருபரன் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்றும், செய்தியாளரான அவரைக் கடத்தியவர்கள் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவரது மனைவியான இளம்பூரணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- BBC tamil

மேலதிக தகவல்:-

nada.jpg

இலங்கை பத்திரிகையாளர்கள்

குருபரனின் கடத்தலை எதிர்த்து கொழும்பில் போராட்டம்

நடந்தது .............

Surayan FM, for which Nadaraja Guparan works, frequently reported on human rights violations in fighting between rebels and the army.

The abduction has been widely criticised

The BBC's Dumeetha Luthra in Colombo says the station is considered largely unbiased.

But friends of Mr Guruparan say that he complained of receiving threats from several paramilitary groups.

Colleagues say he disappeared as he drove from his home to the office.

They say that his empty car was found with its engine still running. His mobile phone was found on the driver's seat.

Reporters Without Borders said the abduction had alarming implications for press freedom in Sri Lanka

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/5296118.stm

எண்று சில உண்மைகளை தமிழ்சேவை மெண்று விளுங்குவது தெரிகின்றது.... ஒட்டுக்குழுக்களின் மீது சந்தேகம் வருவதையோ இல்லை அவர்களின் மீது பழி வருவதையோ தமிழ் சேவையினர் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரியுது...!

தமிழோசையை பிபிசி...ஆங்கிலப் பிரிவே மதிக்கிறதில்லை..நீங்கள் ஏன் அநாவசியமா அதை கணக்கில எடுக்கிறியள்..! :idea: :?: :roll:

கொழும்பில் கடத்தப்பட்ட பிரபல தனியார் வானொலியான சூரியன் எஃப்.எம்.மின் பிரதம செய்தியாசிரியர் நடராஜா குருபரன் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு விடுவிக்கப்பட்டதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.eelampage.com/?cn=28523

விடுவிக்கப்பட்டார் சூரியன் எஃப்.எம். பிரதம செய்தியாசிரியர் நடராஜா குருபரன்

[புதன்கிழமை, 30 ஓகஸ்ட் 2006, 04:49 ஈழம்] [கொழும்பு நிருபர்]

கொழும்பில் கடத்தப்பட்ட பிரபல தனியார் வானொலியான சூரியன் எஃப்.எம்.மின் பிரதம செய்தியாசிரியர் நடராஜா குருபரன் இன்று புதன்கிழமை அதிகாலை விடுவிக்கப்பட்டுள்ளார்.

இத்தகவலை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகள் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று கடுமையாக விசாரணை செய்தனர் என்றும் எச்சரிக்கப்பட்ட பின்னர் களுபோவிலவில் இன்று அதிகாலை 3 மணியளவில் அக்குழுவினர் தன்னை சுமூகமாக விடுவித்ததாகவும் குருபரன் கூறியதாக இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினர் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

தெகிவளை பிந்தலை வீதியில் உள்ள வீட்டிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் தனது வாகனத்தில் குருபரன் பணிக்குச் சென்றார். ஆனால் அவர் அலுவலகத்துச் சென்றடையவில்லை என்பதால் அவரது செல்லிடப்பேசியில் காலை 6.30 மணியளவில் அலுவலகத்தினர் தொடர்பு கொண்டுள்ளனர்.

செல்லிடப்பேசியில் பதில் கிடைக்காத நிலையில் அவரது வீட்டுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குருபரன் அலுவலகம் சென்றதாக தெரிவித்த அவரது மனைவியும் குருபரனின் செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் பதில் கிடைக்கவில்லை.

வீட்டிலிருந்து சற்று தொலைவில் குருபரனின் வாகனம் இருந்ததையும் வாகனத்தில் செல்லிடப்பேசி இருந்ததையும் அவரது மனைவி அவதானித்துள்ளார். இதையடுத்து அவர் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் நடராஜா குருபரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ். இணுவில் மேற்கைச் சேர்ந்த குருபரன் (வயது 39) முன்னர் சரிநிகர் பத்திரிகையில் பணிபுரிந்து வந்தார். அதன் பின்னர் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் நடத்தப்பட்டு வரும் சூரியன் எஃப்.எம். வானொலியில் இணைந்தார்.

செய்தி ஆசிரியராகவும் அதன் பின்னர் செய்திப் பிரிவு மேலாளராகவும் உயர்ந்த குருபரன், அனைவராலும் "சூரியன் குரு" என்று அழைக்கப்பட்டவர்.

கடந்த சனிக்கிழமை ஒலிபரப்பான குருபரன் தொகுத்து வழங்கும் "விழுதுகள்" நிகழ்ச்சியானது கொழும்பில் நிகழும் மனித உரிமை மீறல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் பற்றியதாக இருந்தது.

காணாமல் போனோரின் பெற்றோர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரது நேர்காணலை அவர் ஒலிபரப்பினார்.

மாமனிதர் சிவராம் தராக்கியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருந்தவர் குருபரன். தொடக்க காலத்தில் புளொட் அமைப்பில் இணைந்து செயற்பட்டு வந்தார். சிவராமைப் போல் அதிலிருந்து விலகி சுயாதீனமான ஊடகவியலாளராக பணியாற்றினார்.

குருபரன் கடத்தப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்து கொழும்பு கோட்டை முன்பாக பல்வேறு ஊடகவியலாளர்கள் அமைப்புகள் நேற்று பிற்பகல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு, எல்லைகளற்ற ஊடகவியலாளர் கூட்டமைப்பு, சுதந்திர ஊடக இயக்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் ஊடகவியலாளர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

செய்தி: புதினம்

குரு அண்ணாவை விட்ட செய்தியை கேட்டதும் சந்தோசமாக இருக்கு. :P :P :P

ஆபத்துக்கள் எதுவுமின்றி குருபரன் விடுவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச ஸ்தாபனங்களும்..சிங்கள தமிழ் முஸ்லீம் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும்..இவரின் கடத்தல் தொடர்பில் இனவேறுபாடுகளுக்கு அப்பால்..பத்திரிகையாளர்கள் என்ற வகையில் ஓரணியில் நின்று தங்கள் பலத்தை மிக விரைந்து காண்பித்ததுவே விடுதலைக்கு முக்கிய காரணமாய் இருக்கலாம். சர்வதேச ஊடகங்களும்..இச்சம்பவம் தொடர்வில் கருசணையோடு செயற்பட்டிருந்தன...! அனைவரின் கூட்டுமுயற்சிக்கும் பாராட்டுக்கள்..! சூரியன் என்றும் போல பிரகாசிக்க வேண்டும்..! கருமுகில்களுக்காய் ஒதுங்கக் கூடாது...! :idea:

Abducted Tamil journalist released

[TamilNet, August 30, 2006 03:28 GMT]

Nadarajah Kuruparan, News Manager of Sooriyan FM Radio broadcast from Colombo, who was reported missing since Tuesday morning, was released in the early hours of of Wednesday. "I have returned home safely" said Kuruparan to his listners over the radio, with out elaborating further details about the abduction.

Kuruparan was abducted while he was on his way to work Tuesday morning.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை கேட்டதும் சந்தோசமாக இருக்கு

திருகோணமலை நடக்கும் இராணுவ நடவடிக்கைகள் வெளியிலை தெரியாமல் இருப்பதற்காக திருகோணமலைக்கான கைத்தொலைபேசிகளின் சிக்னல்கள் யாவும் தடைசெய்யப்பட்டன ஆனால் சனம் சூரியன் எவ்.எம்மை கேட்டு எல்லாவற்றையும் அறிந்து கொண்டார்கள்..........இதை தடுக்க என்னவழி யோசித்த பாதுகாப்பு அமைச்சுக்கு எங்கடை எலும்பு தின்னிகளை வைத்து ஒரு நாடகம் நடத்தியிருக்கு...........ஆனா நிலமை சிக்கலாப்போச்சுது இதனால் சம்புர் ஓபரேசன் முடிஞ்சாப்பிறகு சிலவேளை ஆளை விடலாம் அல்லது........??????? கடவுளுக்குத்தான் வெளிச்சம்

சாம்பூர் ஒப்பிரேசன் எங்க முடிகிறது அவங்களுக்குதான் ஒப்பிரேசனாம் அதனாலதான் விட்டுட்டங்க போல :D:D

தமிழோசையை பிபிசி...ஆங்கிலப் பிரிவே மதிக்கிறதில்லை..நீங்கள் ஏன் அநாவசியமா அதை கணக்கில எடுக்கிறியள்..! :idea: :?: :roll:

உண்மையாக்வோ பிபிஸி சொல்லி தான் என்னகும் புரியுது :P :D :idea:

குருபரன் விடுதலை

குருபரன் விடுதலை

பிள்ளை இப்ப தான் கண் முழிச்சதோ?

புதன் 30-08-2006 05:40 மணி தமிழீழம் ஜமயூரன்ஸ

கடத்தப்பட்ட குருபரன் வெள்ளை வான் ஆயுததாரிகளால் விடுதலை.

சூரியன் எவ்.எம் வானொலியின் பிரதம செய்தியாசிரியர் நடராஜா குருபரன் இன்று அதிகாலை 3 மணியளவில் வெள்ளை வான் ஆயுததாரிகளால் விடுவிக்கப் பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை கடத்தப்பட்ட இவர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வெள்ளை வான் ஆயுதாரிகளால் கடத்தப்பட்டு விசாரணையின் பின் கடுமையான எச்சரிக்கையுடன் இன்று களுபோவிலப் பகுதியில் பவிடுவிக்கப்பட்டுள்ளார்.

நன்றி பதிவு

குரு விடுவிக்கப்பட்டமையிட்டு மிக்க மகிழ்ச்சி. அது போல் அவரின் விடுதலைக்காக போராடியவர்களுக்கும் பாராட்டுக்கள். குரு தன் பணியில் தொடர்ந்தும் முன்போல் பாடுபட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருபரன் விடுவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி! தன்னை கடத்தியவர்களை அவர் இனம்காட்ட வேண்டும். அவர்களால் செய்யப்பட்ட விசாரணைகளிலிருந்து கடத்தியவர்கள் யார் என்பதை (கேட்டகப்பட்ட கேள்விகளிலிருந்து)புரிந்திர

  • கருத்துக்கள உறவுகள்

குருபரனின் விடுதலை மகிழ்ச்சியளிக்கின்றது. இருந்தாலும், ஊடகவியளர்கள், முக்கியமாக தமிழ் ஊடகவியளர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவது வேதனையான நிகழ்வு தான்!

நிமலராஜன், அற்புதன், சுகிர்தன், சிவராம், நடேசன் என்று பல ஊடகவியளார்கள் கொல்லப்பட்டு விட்டனர். அதிலும், பெரும்பாலனவர்கள், சமாதான காலப்பகுதியில் தான் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இதைவிட, இப்போது கடத்தப்பட்ட குருபரன், தேவராஜா, உதயன், சுடரொளி ஊடக வலையமைப்பில் உள்ளவர்கள் முதற்கொண்டு, பல ஊடகவியலாளர்கள் கொலையச்சுறுத்தலில் இருக்கின்றனர்.

அரசியலுக்கு வந்து விட்டோம் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள், பேனா முனையை, முடக்க, ஆயுதங்களைப் பாவிப்பதில் தான் இருக்கின்றார்கள்.

டக்ளஸ் தேவனந்தாவில் கொல்லப்பட்ட, நடேச ஜயரையும் ஊடகவியலாளர் என்று தான் குறிப்பிடுகின்றார்கள். அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அரசாங்கத்தின் ஊடகத்துறைக்கு பொறுப்பாக இருந்தால் அவ்வாறு ஏற்றுக் கெர்ளளமுடியுமா எனத் தெரியவில்லை. அப்படியாயின், கேணல் கிட்டு கூட, ஒரு ஊடகவிலாளர் தான். அவர், இதிலும் மேலாக புலத்தில் பல, பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி மகிழ்ச்சி

குருபரன் விடுவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி! தன்னை கடத்தியவர்களை அவர் இனம்காட்ட வேண்டும். அவர்களால் செய்யப்பட்ட விசாரணைகளிலிருந்து கடத்தியவர்கள் யார் என்பதை (கேட்டகப்பட்ட கேள்விகளிலிருந்து)புரிந்திர
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
குருபரன் விடுவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி! தன்னை கடத்தியவர்களை அவர் இனம்காட்ட வேண்டும். அவர்களால் செய்யப்பட்ட விசாரணைகளிலிருந்து கடத்தியவர்கள் யார் என்பதை (கேட்டகப்பட்ட கேள்விகளிலிருந்து)புரிந்திர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.