Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனுக்கும் எனக்கும் இடையில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதில்லை – 'தி இந்து'வுக்கு இரா.சம்பந்தன் செவ்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தர் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயல்ப்படுபவர் அவர் ஒரு காலமும் தமிழர் தலைவர் ஆக முடியாது.....

  • Replies 51
  • Views 2.4k
  • Created
  • Last Reply

திசைமாற்றுவது அல்ல. ஒருவருக்கு ஒரே இடத்தில் இரு ஐடி எதற்கு..??! யாழ் நிர்வாகம் எந்த அடிப்படையில் இதனை வழங்கி இருக்குன்னு தெரியல்ல. இப்படியே ஆளாளும் பயன்படுத்தினா.. யாழ் வேடிக்கை வினோத இடமாகிடும். :):icon_idea:

அதை யாழ்வாலிதான் வந்து சொல்ல வேண்டும்.

அவர் காவாலி என்ற பெயர் பிற்காலம் தனது நிலையுடன் ஒத்துவராததால் யாழ்வாலி என்று மாற்றினார். பின்னர் காவாலி என்றபெயரை சிலர் திடுவதை தவிர்க்க அதை மீண்டும் பதிவு செய்துகொண்டார். 

அது அவர் பிரச்சனை அதை சம்பந்தருடன் ஒப்பிடுவது தவறு. 

பேட்டி கிந்துவால் சம்பந்தரை விழுத்த நடத்தப்பட்டது. 30 நாடுகள் புலிகளை தடை செய்து வைத்திருக்கிறார்கள். இந்த முப்பதும் மட்டும்தான் தமிழ் மக்களின் மீது அக்கறையாக ஏதும் செய்யும் நாடுகள். தடுக்காத கியூபா, ரூசியா, சீனா, ஈரான், கென்யா,பாகிஸ்த்தான் வங்காளம் போன்றவை எமக்கு எதிரானவை.

புலிகளை தடுத்திருக்கும் 30 நாடுகளுடந்தான் சம்பந்தர் தமிழர் பிரச்சனையைக் கதைது ஐ.நாவில் பிரேரணையை நிறைவேற்றுவிக்க வேண்டும். சும்மா கொடுக்கை கட்டிக்கொண்டு போய் நானும் புலிதான் ஆனால் நீ பிரேரணையை நிறைவேற்று என்று அவர்களிடம் கேட்க முடியாது. எனவே நீங்கள் எந்த மனத்தால் வீட்டில் இருந்துகொண்டு சிலர் புலிகளின் தலைவர் பட்ட கஸ்டத்தை புரிய வில்லை என்று குறை சொல்லுகிறீற்களோ அதே மனத்தால் சம்பந்தர் படும் கஸ்டத்தை புரிய இறங்கி வரவேண்டும்.

எந்த சந்தர்பத்திலும் மனம் விரும்பி திருகோணமலை இராஜவரோதயத்தில் பிள்ளை சம்பந்தன் சிங்ககொட்டியை ஆட்டிக்காட்ட வில்லை. இந்த முப்பது நாடுகளும் பார்க்க அவர் அதை செய்தது, இதை தமிழர்  செய்து முடித்துவிட்டால் 65 வருடகாம் அரசியல் அமைப்பை மாற்றி இனவழிப்பை செய்யும் சிங்களம் மனம் மாறும் என்று நினைக்காதீர்கள் என்று காட்டவே. 

கிந்து பேட்டி கண்டதின் நோக்கம் சம்பந்தர் புலிகளின் கையாள், அது தவறினால் தமிழ் இனத்தின் துரோகி என்று நிரூபிக்கவே. தமிழினத்தின் துரோகி என்று நிரூபித்தால் அப்போது இன்னொரு தேர்தலில் அவரால் மேலே வரமுடியாது. இதனால் அவரை தேவானந்தாவை, பொன்சேக்காவை, ரணிலைப்  போன்று மேற்குநாடுகள் ஒதுக்கும். இது காங்கிரசுக்கு ஐ.நாவில் பிரேரணையை தோற்கடிக்க உதவும். அவரை புலி என நிரூபித்தால் தடுத்த 30 நாடுகளும் உடனேயே அவரை கவிட வேண்டும். இதுவும் கிந்து காங்கிரசுக்கு செய்யும் சேவையாகத்தான் முடியும். இதில் சம்பந்தர் பிரபாகரனும் நானும் ஒரே நோக்கம் உள்ளவர்களே, ஆனால் எனது பாதை வேறு அவரின் பாதை வேறு என்று கவனமாக பதில் அளித்திருப்பது அவரின் அனுபவத்தின் எடுத்துக்காட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு 

பிரபாகரனை  விமர்சிக்கின்றோம்  என்று அவரை    எள்ளி  நகையாடுகின்றோம். :(  :(  :(

இந்துக்கெல்லாம்

பேட்டி கொடுக்க  சம்மதிக்காமல் இருக்கலாம்......... :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களை மக்கள் தெளிவாகக் கண்டும் கேட்டும் உணர்ந்தும் விடுதலை நேக்கிய பயணத்தில் அதை எண்ணியே வாய்மூடிப் பேசாது இருக்கின்றனர். மக்கள் மவுனங்கள் கலைகின்றபோது சில திரைகள் விரிந்து உண்மை தெரியவரும். இதற்கு தீபச்செல்வன், தமிழ்க்கவி, நிலாந்தன் (பெயர் குறிப்பிட்டமைக்கு மன்னிக்கவும்) போன்றோர் சாட்சியாக இருப்பர். விடுதலை அரசியல் பேசிய பலர் இன்று சிங்கள புலனாய்வுப் படையில் கேணல் தரத்தில்......

இறுதியாக விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்களின் தற்போதைய ஒரே தெரிவு கூட்டமைப்புத்தான். சும்மா வெளியில் இருந்து எவரும் கனைக்கலாம். ஆகப் போவது ஒன்றும் இல்லை. ஆற்றாமை தான் எஞ்சும்விடுதலைக்காக உண்மையாகவே வித்தாகிப் போனவர்களை கொச்சைப்படுத்த விருப்பமில்லையாதலால் இத்துடன் விடைபெறுகின்றேன்.

முள்ளிவாய்க்காலில்.. மாறியவர்களில் கொஞ்சப் பேர் காட்டிக்கொடுப்பாளர்கள் ஆனார்கள். கொஞ்சப் பேர் தான் தப்பினால் காணும் என்றானார்கள். கொஞ்சப் பேர் போராட்டமாவது மண்ணாங்கட்டியாவது.. பிள்ளை பிடிச்சது என்று சொல்லியாவது தப்புவம் என்றானார்கள்.. இன்னும் கொஞ்சப் பேர் முள்ளிவாய்க்காலில் இருந்தோம் என்று சொல்லியே பெயரீட்டி வாழ்ந்தார்கள்.. ஏன் அகதி அந்தஸ்துக்கும் அதையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையான போராளிகள் ஒன்றில் சிறையில்.. அல்லது சமாதியில்... அல்லது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தனிமையில்.

ஆக.. முள்ளிவாய்க்கால் உங்களுக்கு புதிசாகத் தெரியலாம். நாங்கள் இதனை 1987 இல்.. இந்தியப் படைகள் காலத்திலேயே சந்திச்சிட்டம். எப்படி எப்படி எம்மவர்களின் நாக்குகளும்.. செயல்களும் புரளும் என்பதை. அந்த வகையில்.. இது அல்ல பிரச்சனை.

இன அழிப்பாளர்களும்.. மனித உரிமை மீறல் செய்தவர்களும்.. புலிகளைக் காட்டி அன்றில் இருந்து இன்று வரை தப்பிக்க வகை செய்வதை விட எம்மவர்கள் செய்த அரசியல் என்பது எதுவுமில்லை. அதே பாதையில் தான்.. நீங்கள் குறிப்பிட்ட தீபச் செல்வன்களும்.. நிலாந்தன்களும்.. சம்பந்தர்களும்.

இப்படி எத்தனையோ பேரை கண்டிட்டம் ஐயா. போங்க போங்க. :):icon_idea:

அதை யாழ்வாலிதான் வந்து சொல்ல வேண்டும்.

அவர் காவாலி என்ற பெயர் பிற்காலம் தனது நிலையுடன் ஒத்துவராததால் யாழ்வாலி என்று மாற்றினார். பின்னர் காவாலி என்றபெயரை சிலர் திடுவதை தவிர்க்க அதை மீண்டும் பதிவு செய்துகொண்டார். 

அது அவர் பிரச்சனை அதை சம்பந்தருடன் ஒப்பிடுவது தவறு. 

பேட்டி கிந்துவால் சம்பந்தரை விழுத்த நடத்தப்பட்டது. 30 நாடுகள் புலிகளை தடை செய்து வைத்திருக்கிறார்கள். இந்த முப்பதும் மட்டும்தான் தமிழ் மக்களின் மீது அக்கறையாக ஏதும் செய்யும் நாடுகள். தடுக்காத கியூபா, ரூசியா, சீனா, ஈரான், கென்யா,பாகிஸ்த்தான் வங்காளம் போன்றவை எமக்கு எதிரானவை.

புலிகளை தடுத்திருக்கும் 30 நாடுகளுடந்தான் சம்பந்தர் தமிழர் பிரச்சனையைக் கதைது ஐ.நாவில் பிரேரணையை நிறைவேற்றுவிக்க வேண்டும். சும்மா கொடுக்கை கட்டிக்கொண்டு போய் நானும் புலிதான் ஆனால் நீ பிரேரணையை நிறைவேற்று என்று அவர்களிடம் கேட்க முடியாது. எனவே நீங்கள் எந்த மனத்தால் வீட்டில் இருந்துகொண்டு சிலர் புலிகளின் தலைவர் பட்ட கஸ்டத்தை புரிய வில்லை என்று குறை சொல்லுகிறீற்களோ அதே மனத்தால் சம்பந்தர் படும் கஸ்டத்தை புரிய இறங்கி வரவேண்டும்.

எந்த சந்தர்பத்திலும் மனம் விரும்பி திருகோணமலை இராஜவரோதயத்தில் பிள்ளை சம்பந்தன் சிங்ககொட்டியை ஆட்டிக்காட்ட வில்லை. இந்த முப்பது நாடுகளும் பார்க்க அவர் அதை செய்தது, இதை தமிழர்  செய்து முடித்துவிட்டால் 65 வருடகாம் அரசியல் அமைப்பை மாற்றி இனவழிப்பை செய்யும் சிங்களம் மனம் மாறும் என்று நினைக்காதீர்கள் என்று காட்டவே. 

கிந்து பேட்டி கண்டதின் நோக்கம் சம்பந்தர் புலிகளின் கையாள், அது தவறினால் தமிழ் இனத்தின் துரோகி என்று நிரூபிக்கவே. தமிழினத்தின் துரோகி என்று நிரூபித்தால் அப்போது இன்னொரு தேர்தலில் அவரால் மேலே வரமுடியாது. இதனால் அவரை தேவானந்தாவை, பொன்சேக்காவை, ரணிலைப்  போன்று மேற்குநாடுகள் ஒதுக்கும். இது காங்கிரசுக்கு ஐ.நாவில் பிரேரணையை தோற்கடிக்க உதவும். அவரை புலி என நிரூபித்தால் தடுத்த 30 நாடுகளும் உடனேயே அவரை கவிட வேண்டும். இதுவும் கிந்து காங்கிரசுக்கு செய்யும் சேவையாகத்தான் முடியும். இதில் சம்பந்தர் பிரபாகரனும் நானும் ஒரே நோக்கம் உள்ளவர்களே, ஆனால் எனது பாதை வேறு அவரின் பாதை வேறு என்று கவனமாக பதில் அளித்திருப்பது அவரின் அனுபவத்தின் எடுத்துக்காட்டு.

சம்பந்தன்.. என்ன ஐநா பிரேரணையை கொண்டு வந்தவர்..???! சம்பந்தன் இது வரைக்கும்.. சிறீலங்கா சிங்கள அரசுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. யாரோ அசைக்க.. மக்களை சமாளிக்க முடியாது என்ற..  இயலாமையால்.. தலையாட்டிக் கிட்டு இருக்கிறார். அதற்கு பரிகாரமாக அடிக்கடி மகிந்தரை தனிமையில் சந்திச்சு தன்னிலை விளக்கமும் கொடுக்கிறார். இப்போ ஹிந்து வரை சந்திச்சு.. ஹிந்தியாவிற்கும் விளக்கம் அளிக்கிறார். இதுதான் அவர் கடந்த காலங்களிலும்.. செய்து வந்த அரசியல். அவர் மாறேல்ல.. மாறவும் மாட்டார். ஆனால்.. நீங்கள் சிலர் தான் அவரை தமிழ் மக்களின் முன் வலிந்து.. மாற்றிக்காட்ட முயல்கிறீர்கள். :icon_idea::)

Edited by nedukkalapoovan

சம்பந்தனிடம் பகிரங்கமாக கேட்கிறோம்.. புலிகள் மனித உரிமைகளை மதிக்கவில்லை என்று இந்துவுக்கு சொன்ன அதே சம்பந்தன்.. இந்தியப் படைகள் ஈழத்திலும்.. தற்போது காஷ்மீரிலும்.. புலிகளை விட மோசமாக மனித உரிமை மீறல்களை செய்து வருவதை.. இந்துவுக்கு இனங்காட்ட தயாரா..???! முடியாதில்ல. ஏன்னா.. அவர் புலிகளைப் பற்றி விமர்சிக்க சுதந்திரத்தை எதிர்பார்க்கிற அதேவேளை புலிகளை விமர்சிப்பதன் மூலம்.. அவர்களுக்கு எதிரான.. ஆதிக்க சக்திகளின் காலை நக்கவும் நினைக்கிறார். இப்படி சொந்த இனத்தை அழிச்சு செய்யுற அரசியலை விட நாண்டுக்கிட்டு சாகலாம். :icon_idea:

என்ன நினைக்கிறீர்களோ தெரியவில்லை. ஏன் இப்படி தொடர்பில்லாதவ்ற்றை இழுத்து இணைப்பான் என்பது புரியவில்லை. 

கஸ்மீரப்பிரச்சணை பற்றி பேட்டியில் கேள்வி வந்தது மாதிரி தெரியவில்லை. எதற்காக சம்பந்தர் நமது பிரச்சணையைப்பற்றி கேட்கும் போது இந்தியாவை சீண்டும் கஸ்மீரப்பிரச்சணையை பற்றி பேச வேண்டும். இந்தியவை தன் பாட்டுக்கு போகவிட்டு சம்பந்தர் மாதிரி ஐ.நா பிரேரணையை நிறைவேற்ற முயற்சிப்பதில் என்ன தவறூ?

சும்மா சோமப்லாக இருக்கதே என்று கூறி, சீண்டி,இந்தியாவை கஸ்ட்டப்பட்டு மார்ச்சில் நடக்க இருக்கும் பிரேரணையை குழப்ப வைக்க வேண்டுமாயின் தேவை இல்லாத இடத்தில் தேவை இல்லாத பாணியில் கஸ்மீரப் பிர்ச்சணையை பற்றிக்கத்தைப்பதுதான் உகந்தது. இது இவ்வளவு நாளும் தமிழக மாணவர் தீக்குளித்தும் உண்ணாவிரதம் இருந்தும் அடக்கெடுத்த காங்கிரசை வாலை முறிக்கு முள்ளூதசியால் அடித்து அவிட்டுவிடும் முயற்சி. காஸ்மீருக்கு இந்தியா சுதந்திரம் கொடுக்காவிட்டால் சிங்கள்ம் தமிழருக்கு சுதந்திரம் கொடுக்க வந்தால் வேண்டாம் என்றா சொல்ல போகிறீர்கள்? 

சம்பந்தன்.. என்ன ஐநா பிரேரணையை கொண்டு வந்தவர்..???! சம்பந்தன் இது வரைக்கும்.. சிறீலங்கா சிங்கள அரசுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. யாரோ அசைக்க.. மக்களை சமாளிக்க முடியாது என்ற..  இயலாமையால்.. தலையாட்டிக் கிட்டு இருக்கிறார். அதற்கு பரிகாரமாக அடிக்கடி மகிந்தரை தனிமையில் சந்திச்சு தன்னிலை விளக்கமும் கொடுக்கிறார். இப்போ ஹிந்து வரை சந்திச்சு.. ஹிந்தியாவிற்கும் விளக்கம் அளிக்கிறார். இதுதான் அவர் கடந்த காலங்களிலும்.. செய்து வந்த அரசியல். அவர் மாறேல்ல.. மாறவும் மாட்டார். ஆனால்.. நீங்கள் சிலர் தான் அவரை தமிழ் மக்களின் முன் வலிந்து.. மாற்றிக்காட்ட முயல்கிறீர்கள். :icon_idea::)

சம்பந்தருக்கு பிரேரணை கொண்டுவர இடம் இருக்கு என்றா இதுவரை நினைத்திருந்தீர்கள். அதனாலா எந்த பிரேரணையை கொண்டுவந்தார் என்கிறீர்கள்?

பிரேரணையை கொண்டுவந்து நிறைவேற்றும் நாடுகளில் எது புலிகளை தடை செய்யவில்லை? ஏன் எழுதியதை திரும்ப திரும்ப எழுத வேண்டியிருக்கு. ஜெனிவாவுக்கு சம்பந்தர் போகவில்லை என்று எழுதியவர்களில் நீங்கள் ஒருவர் இல்லையா? அப்போது அவர் எப்படி நான் புலிதான் ஆனால் நீ பிரேரணையை நிறை வேற்று என்று அங்கு போய் கதைக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நினைக்கிறீர்களோ தெரியவில்லை. ஏன் இப்படி தொடர்பில்லாதவ்ற்றை இழுத்து இணைப்பான் என்பது புரியவில்லை. 

கஸ்மீரப்பிரச்சணை பற்றி பேட்டியில் கேள்வி வந்தது மாதிரி தெரியவில்லை. எதற்காக சம்பந்தர் நமது பிரச்சணையைப்பற்றி கேட்கும் போது இந்தியாவை சீண்டும் கஸ்மீரப்பிரச்சணையை பற்றி பேச வேண்டும். இந்தியவை தன் பாட்டுக்கு போகவிட்டு சம்பந்தர் மாதிரி ஐ.நா பிரேரணையை நிறைவேற்ற முயற்சிப்பதில் என்ன தவறூ?

சும்மா சோமப்லாக இருக்கதே என்று கூறி, சீண்டி,இந்தியாவை கஸ்ட்டப்பட்டு மார்ச்சில் நடக்க இருக்கும் பிரேரணையை குழப்ப வைக்க வேண்டுமாயின் தேவை இல்லாத இடத்தில் தேவை இல்லாத பாணியில் கஸ்மீரப் பிர்ச்சணையை பற்றிக்கத்தைப்பதுதான் உகந்தது. இது இவ்வளவு நாளும் தமிழக மாணவர் தீக்குளித்தும் உண்ணாவிரதம் இருந்தும் அடக்கெடுத்த காங்கிரசை வாலை முறிக்கு முள்ளூதசியால் அடித்து அவிட்டுவிடும் முயற்சி. காஸ்மீருக்கு இந்தியா சுதந்திரம் கொடுக்காவிட்டால் சிங்கள்ம் தமிழருக்கு சுதந்திரம் கொடுக்க வந்தால் வேண்டாம் என்றா சொல்ல போகிறீர்கள்? 

ஆமாங்க சார் தொடர்பில்லை. சம்பந்தன் ஹிந்துவுக்கு சொல்லலாம்.. புலிகள் மனித உரிமை மீறல்கள் குறித்து சிந்திக்கல்லைன்னு. அதே ஹிந்து வக்காளத்து வாங்கும்.. இந்தியப் படைகள் ஈழத்திலும்.. காஷ்மீரிலும் செய்யுற மனித உரிமை மீறல்களை மறைச்சிடனும்.. என்றீங்க.

புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலைப்படுற சம்பந்தன்.. அதன் பின்னணிகள் குறித்து கதைக்காதது.. உங்களுக்கு திருப்தி.  ஆனால் நமக்கு.. சம்பந்தனை சவுக்கால சாத்தனும் போல தோனுது. ஏன்னா.. உண்மையைப் பேசனும். அரசியல்வாதின்னு சொல்லிக்கிறதுக்காக மக்களை காட்டிக்கொடுக்கக் கூடாது. மக்கள் அழிவுகளை மறைக்கக் கூடாது. அழிச்சவனை மன்னிச்சிட்டு.. அழிவைத் தடுக்கப் போராடியவனை குற்றவாளி ஆக்கக் கூடாது. முடியல்லைன்னா.. அரசியலை விட்டு போயிடுங்க. :icon_idea:

இந்தியா... வேண்டும் என்றால்.. கொண்டு வரும் பிரேரணைகளை எதிர்க்கலாம். ஏலவே உப்புச்சப்பில்லாமல் வாறதை.. மேலும் மேலும்.. உப்புச்சப்பில்லாமல் ஆக்குவதைக் காட்டிலும்.

பிரேரணைகளைக் கொண்டு வருபவர்கள் தொடர்பிலும்.. அவர்கள் திணிக்க நினைப்பவை தொடர்பிலும்.. உந்தப் பிரேரணைகளால்.. எமக்கு பெரிய இலாபம் கிடைக்கப் போது என்று படம் காட்டப்படுவதிலும் நம்பிக்கை இல்லை..! ஏகாதபக்திய கூட்டாளிகள்.. தங்களுக்கு வசதியா குந்திக்க.. எங்களின் கண்ணீரில் கப்பல் விடுகிறார்கள். சம்பந்தன் அவர்களுக்கு படகு வலிக்கிறார். இதுதான் இப்ப நடக்குது... 2009  மே க்குப் பின். :icon_idea:

Edited by nedukkalapoovan

இங்கு 

பிரபாகரனை  விமர்சிக்கின்றோம்  என்று அவரை    எள்ளி  நகையாடுகின்றோம். :(  :(  :(

இந்துக்கெல்லாம்

பேட்டி கொடுக்க  சம்மதிக்காமல் இருக்கலாம்......... :(  :(

அரசியலில் ஒதுங்குவது ஒரு ராஜதந்திரம் இல்லை. அது பிராந்ஸ் போன்ற மேற்குநாடுகளின் வழமை அல்ல. எதிரிக்கு சார்ப்பான ஊடகத்துக் பேட்டி கொடுக்க மறுப்பது ஜனநாய பாரம் பரியம் அல்ல. அது சந்தேகத்தை ஊட்டும்.

எந்த இடத்திலும் சம்பந்தர் பிரபாரனை எள்ளி நகையாடவில்லை. அது அவரின் பேச்சை வாசிக்காமல் கூறும் கருத்து. அப்படி எள்ளிநகையாடினால் அந்த வரியை இங்கே பதியும் போது அதையும் விவாதிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கு பிரேரணை கொண்டுவர இடம் இருக்கு என்றா இதுவரை நினைத்திருந்தீர்கள். அதனாலா எந்த பிரேரணையை கொண்டுவந்தார் என்கிறீர்கள்?

பிரேரணையை கொண்டுவந்து நிறைவேற்றும் நாடுகளில் எது புலிகளை தடை செய்யவில்லை? ஏன் எழுதியதை திரும்ப திரும்ப எழுத வேண்டியிருக்கு. ஜெனிவாவுக்கு சம்பந்தர் போகவில்லை என்று எழுதியவர்களில் நீங்கள் ஒருவர் இல்லையா? அப்போது அவர் எப்படி நான் புலிதான் ஆனால் நீ பிரேரணையை நிறை வேற்று என்று அங்கு போய் கதைக்க முடியும்?

புலிகள் தடையைப் பற்றி சம்பந்தனோ.. நீங்களோ கதைக்கப்படாது. ஏன்னா அந்தத் தடைகள் வந்த போது சம்பந்தன் சந்திரிக்காவோடு நீலனின் பொதியில் முக்கியமான ஆளாக இருந்தவர். தடைகளை மெளனமாக இருந்து வரவேற்றவர். வரலாற்றை புரட்டிப்பாருங்க.. சம்பந்தன்.. இருந்த இடம் தெரியும். புலிகள் தடைகளுக்கு அஞ்சி போராடிக் கொண்டிருக்கவில்லை. தடைகளை சவால்களா ஏற்று 11 வருடங்கள் போராடினவர்கள். இந்தியத் தடைகளுக்குப் பின் 17 வருடங்கள் போராடினவர்கள்.

தடை அவரவர் தங்களின் ஏகாதபத்திய நலனுக்காகக் கொண்டு வந்தது.. என்பதை அவர்கள் இன்று.. நடந்து கொள்ளும் முறையில் இருந்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

நாங்கள் சொல்ல வருவது.. சம்பந்தனால் எதுவும் இதுவரை தமிழர்களுக்கு சாதகமாக நடக்கேல்ல...என்பதை தான். அப்படி நடப்பதாகக் காட்டுவதையே தவறு எங்கிறோம். அப்படி காட்ட முனையும்..உங்கள் போன்றோரின்.. கருத்தையும்.. அந்த இடத்தில் எதிர்க்கிறோம். மீண்டும் இவர்களை நம்பி ஏமாற தமிழ் மக்கள் ஒன்றும் தொடர் ஏமாளிகளோ.. கோமாளிகளோ அல்ல. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வேண்டுமானால் சொல்லிப்பார்க்கட்டும் அதற்க்கு பின்னர் இவரை அரசியலில் வைத்திருக்கின்றார்களா என்று பார்ப்போம் 
 
குறிப்பாக சொன்னால் சம்மந்தருக்கு தலைவர் போட்ட பிச்சையே இந்த அரசியல் வாழ்க்கை 
  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் ஒதுங்குவது ஒரு ராஜதந்திரம் இல்லை. அது பிராந்ஸ் போன்ற மேற்குநாடுகளின் வழமை அல்ல. எதிரிக்கு சார்ப்பான ஊடகத்துக் பேட்டி கொடுக்க மறுப்பது ஜனநாய பாரம் பரியம் அல்ல. அது சந்தேகத்தை ஊட்டும்.

எந்த இடத்திலும் சம்பந்தர் பிரபாரனை எள்ளி நகையாடவில்லை. அது அவரின் பேச்சை வாசிக்காமல் கூறும் கருத்து. அப்படி எள்ளிநகையாடினால் அந்த வரியை இங்கே பதியும் போது அதையும் விவாதிக்கலாம்.

சம்பந்தர் மீது நான் விமர்சனங்களை  வைப்பதில்லை

அதற்கு எனக்கு தகுதியில்லை  என  நினைப்பவன் யான்

ஆனால்

எவரும் பிரபாகரன் மேல் விமர்சனம் வைக்கும்  போது

அது என்னை  சினம் கொள்ளவைக்கிறது

ஒருவேளை  நான்

சம்பந்தர் மேல் வைத்திருக்கும் மதிப்பை

இது குறைப்பதாலேயோ என்னமோ....? :(

வேண்டுமானால் சொல்லிப்பார்க்கட்டும் அதற்க்கு பின்னர் இவரை அரசியலில் வைத்திருக்கின்றார்களா என்று பார்ப்போம் 
 
குறிப்பாக சொன்னால் சம்மந்தருக்கு தலைவர் போட்ட பிச்சையே இந்த அரசியல் வாழ்க்கை 

அதேன்றால் உண்மைதான் .சம்பந்தர்  தமிழ்செல்வனின் தம்பி .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்செல்வன்.. 10 வருட அரசியல் வாழ்வில்... ரோக்கியோ முதல் ஒஸ்லோ வரை தமிழர்களை கொண்டு சென்றிருக்கிறார். தமிழர் பிரச்சனைகளை சர்வதேச மயப்படுத்தி இருக்கிறார். அதே சம்பந்தன்.. 50 வருட கால அரசியலில்.. அதே அலரிமாளிகைக்குள்ளும்.. புதுடெல்லிக்குள்ளும் தான்.. பதுங்கிப் பதுங்கி... பயந்து பயந்து.. சுப்பற்ற கோடிக்க.. சுத்திறார். (உப்படிச் சுத்தி இருந்தால்.. தமிழ்செல்வன்.. சம்பந்தனை வென்று இன்று சிறீலங்காவில்.. அமைச்சராக இருந்திருப்பார்.) தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டு. அந்த வகையில்.. தமிழ்செல்வனின் தம்பி.. அல்ல.. குட்டித் தம்பி.. தான் சம்பந்தர். :D:lol:

Edited by nedukkalapoovan

ஆமாங்க சார் தொடர்பில்லை. சம்பந்தன் ஹிந்துவுக்கு சொல்லலாம்.. புலிகள் மனித உரிமை மீறல்கள் குறித்து சிந்திக்கல்லைன்னு. அதே ஹிந்து வக்காளத்து வாங்கும்.. இந்தியப் படைகள் ஈழத்திலும்.. காஷ்மீரிலும் செய்யுற மனித உரிமை மீறல்களை மறைச்சிடனும்.. என்றீங்க.

புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலைப்படுற சம்பந்தன்.. அதன் பின்னணிகள் குறித்து கதைக்காதது.. உங்களுக்கு திருப்தி.  ஆனால் நமக்கு.. சம்பந்தனை சவுக்கால சாத்தனும் போல தோனுது. ஏன்னா.. உண்மையைப் பேசனும். அரசியல்வாதின்னு சொல்லிக்கிறதுக்காக மக்களை காட்டிக்கொடுக்கக் கூடாது. மக்கள் அழிவுகளை மறைக்கக் கூடாது. அழிச்சவனை மன்னிச்சிட்டு.. அழிவைத் தடுக்கப் போராடியவனை குற்றவாளி ஆக்கக் கூடாது. முடியல்லைன்னா.. அரசியலை விட்டு போயிடுங்க. :icon_idea:

அழிவைத் தடுக்கப் போராடியவனை குற்றவாளி ஆக்கக் கூடாது. முடியல்லைன்னா.. அரசியலை விட்டு போயிடுங்க... நீங்கள் அவரபடுகிறீர்கள். மக்களால் வந்தவரை வா போ என்பது அவசரகுடுக்கைத்தனம்.

அழிவை தடுக்க போராடுவது போரில் வேறுகருத்தை தரும். போரை ஆரம்பித்து அழிவை ஏற்படுத்திக்கொண்டிருந்த போது நாசி யேர்மனியை தாங்கள் எதிர்த்தை அப்படி சொல்வார்கள். இதில் நேச நாடுகளும் ரூசியாவும் பல கொலைகளை செய்தார்கள். அதை நியாப்படுத்த இந்த விளக்கம் போதுமானது.

ஜனநாயக தேர்தல்களை வைத்து தொழில் பறிப்பு, மொழி சமைய உரிமை மறுத்தமைக்கு எதிராக ஆய்தம் கூக்கியதை நீங்கள் அப்படி சொல்லும் போது அதை மேற்கு நாடுகள் ஏற்றுக் கொள்ள போவதில்லை. அவர்கள் ஏற்காத போது அவர்கள் முன்னால் கொடுக்கு கட்ட முயல்வதை நிறுத வேண்டும். சம்பந்தர் தன்னால் மேற்கு நாடுகளிடம் புலிகளை விட்டு விட்டு தமிழ் மக்கள் பிரச்சனையை முன்னெடுங்கள் என்று முடியாவிட்டால் அவர் அங்கு போவதில் பிரயோசமில்லை.

இந்தியா ஆரம்பித்துவைத ஆயுத போராட்டம் மேற்குநாடுகளுக்கு ஏற்புடையதல்ல என்பதால் ஆயுத போராட்டத்தை அவர்கள் ஏற்க இன்னொரு நல்ல விளக்கம் தேவை. 

நீங்கள் ஏர்கலாம் தள்ளிவிடாம், போகுற்றம் பிலிகள் மீது இருந்தாலும் போர்குற்ற விசாரனையை கோடுவரசொல்வதுதான் புலம் பெயர் மக்களின் கோரிக்கை. இதுவரயில் நான் யாரும், புலிகள் தாவறுவிட்டவில்லை ஆனால் நீங்கள் போர்குற்ற விசாரணையை கோடுவந்துதான் ஆக வேண்டும் என்று கேடகவில்லை. இதௌ சம்பந்தர் ஒத்துக்கொள்ள்வதில் தவறு இல்லை.

கிந்துவின் கேள்வியின் நோக்கம் சம்பந்தர் புலி, அல்லது தமிழ் துரோகி என்று நிரூபிப்பது. இதற்குதான் புலிகளுடன் நீங்கள் எதில் ஒத்து போகமுடியவில்லை என்ற கேள்வி வந்தது. இதில் ஒன்றும் இல்லை என்ரதப்திலை கிந்து எதிர்பார்ததது. இதனால் சம்பந்தர் பசுத்தோல் போர்த்த புலியே என்று நிரூபண்மாகும்.

அவரின் பதில் புலிகள் தவ்று விட்டிருக்கிறாகள். கோடுகள் கச்சேரிகள் இல்லாத காலங்களில் விராணை செய்த்து தண்டணைகள் வழங்கியிருக்கிறாகள். இது மனித உரிமை மீறல். அவர் அதை ஒத்துக்கொண்டிருக்கிறார். அவர் அதை ஒத்துகொள்வதை வைத்து மேற்குநாடுகள் விசாரணையை கொண்டுவந்தால் விசாரணையில் என்ன நிரூபணம் காட்ட வேண்டும் என்பது பலரின் கையில் ஆவண்மாக இருக்கிறது. சம்பந்தர் இருபத்திலும் மனித உரிமை மீறல் இருக்கு, ஆனல் விசாரணையை காலம் தாழ்த்துவது உங்கள் பக்கத்தவறு என்று மேற்குநாடுகளுக்கு செய்தி அனுபுவதில் எந்த தவறும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குநாடுகள்.. எமக்காக எதனையும் செய்யப் போவதில்லை. மேற்குநாடுகள் செய்யும் அரசியலுக்குள் நாங்களே தான்..எதனையும் பெற்றுக் கொண்டாலே அன்றி. அந்த வகையில் சம்பந்தன்.. ஹிந்து மூலம் ஹிந்தியாவை திருப்திப்படுத்துவதை விடுத்து.. மேற்குநாடுகள் எம்மை வைத்து செய்யும் நகர்வுகளுக்குள் அங்கு வாழும் மக்களின் மனச்சாட்சியை தொட்டுச் செல்வதில் தான் எங்களுக்கு சாதகம்.. உள்ளது. அதுதான்.. மேற்குநாடுகளின்.. அணுகுமுறையில் எங்களுக்கான சாதகத்தை கொண்டு  வர முடியும். மாறாக.. தமிழ் மக்களின் அழிவுகளை.. அழித்தவர்களை மறைத்து.. அவர்களுக்கு அரிதாரம் பூசுவதனால் ஆகாது.

சர்வதேச நகர்வுகளில்...சனல் 4 ஏற்படுத்திய தாக்கத்தில் 1% கூட சம்பந்தனின் சாணக்கியம் ஏற்படுத்தல்ல.. என்பது எம்மை சம்பந்தனின் அணுகுமுறைகள் எவ்வளவு ஆபத்தான திசை நோக்கி நகர்த்திச் செல்கின்றன என்பதை உணரச் செய்கிறது.

Edited by nedukkalapoovan

புலிகள் தடையைப் பற்றி சம்பந்தனோ.. நீங்களோ கதைக்கப்படாது. ஏன்னா அந்தத் தடைகள் வந்த போது சம்பந்தன் சந்திரிக்காவோடு நீலனின் பொதியில் முக்கியமான ஆளாக இருந்தவர். தடைகளை மெளனமாக இருந்து வரவேற்றவர். வரலாற்றை புரட்டிப்பாருங்க.. சம்பந்தன்.. இருந்த இடம் தெரியும். புலிகள் தடைகளுக்கு அஞ்சி போராடிக் கொண்டிருக்கவில்லை. தடைகளை சவால்களா ஏற்று 11 வருடங்கள் போராடினவர்கள். இந்தியத் தடைகளுக்குப் பின் 17 வருடங்கள் போராடினவர்கள்.

தடை அவரவர் தங்களின் ஏகாதபத்திய நலனுக்காகக் கொண்டு வந்தது.. என்பதை அவர்கள் இன்று.. நடந்து கொள்ளும் முறையில் இருந்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

நாங்கள் சொல்ல வருவது.. சம்பந்தனால் எதுவும் இதுவரை தமிழர்களுக்கு சாதகமாக நடக்கேல்ல...என்பதை தான். அப்படி நடப்பதாகக் காட்டுவதையே தவறு எங்கிறோம். அப்படி காட்ட முனையும்..உங்கள் போன்றோரின்.. கருத்தையும்.. அந்த இடத்தில் எதிர்க்கிறோம். மீண்டும் இவர்களை நம்பி ஏமாற தமிழ் மக்கள் ஒன்றும் தொடர் ஏமாளிகளோ.. கோமாளிகளோ அல்ல. :icon_idea:

வரலாற்றை புரட்டி பாருங்க அந்த தடைகள் வந்த போது சம்பந்தர் புலியாக கணிக்கப்பட்டு அமெரிக்க செல்ல வீசா மறுக்கப்பட்டர். அவர் தடையை நீக்கவில்லை என்பது கதை வேறு. நீலன் உஆருடன் இருந்தார் எனப்து இன்னொரு கதை. ஜன்யநாயகத்தில் ஆனந்த சங்கரியை கூட்டமைப்பில் சேர்த்தவர் சம்பந்தர். ஆயுத போராளிகள் இயகத்தில் கொள்கை மாறியவர்களை விட்டு வைப்பது கிடையாது.

நீலன் வரைந்த அரசியல் அமைப்பு தவ்ர்களை கோண்டிருந்ததா இல்லை என்றை வாதாட நமக்கு இங்கே தரவுகள் இல்லை. சந்திர்ககா வந்த் ஆரம்பத்தில் சிங்கள மக்கள் அவருக்கு ஸ்மாதனத்துக்கு வாக்களித்தார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.  அது நமது பிரச்சனை அல்ல. தீர்வு திரும்பாத தீர்வாக இருக்க வேண்டும் என்பது தலைவரின் நிலைப்பாடு. நீலன் இதை கணகெடுத்துதான் அரசியல் அமைப்பை வரைந்தாரா தெரியாது. ஆனால் எந்த தீர்வும் திரும்பாமல் இருக்க வேண்டுமாயின் சுயநிரணய உரிமை அதில் இருக்க வேண்டும். ஆனால் நீலனின் மரணத்தில் புலிகளின் தொடர்ப்பு, கிளின்ரன் குடும்பத்தை சந்திரிக்கவுடன் இணைத்துவிட்டது. அதன் முன்னர் அவர்கள் நீலனின் பக்கம். எனவே நீலனை பாவித்து அவர்களை தமிழர்பக்கம் திருப்பாமை எல்லோருடைய தவறும். (சம்பந்தர்,புலிகள்)

சம்பந்தர் சந்திரிக்காவோடு சேர்ந்து அன்றும் அமெரிக்கப் பயணங்களை மேற்கொண்டிருந்தவர் தான். இன்றும் புலிகள் மீது தடை இருக்க அங்கு போய் வருகிறார் தான். நீங்கள் சம்பந்தனை.. புலியாக்க வேண்டாம். அவரே அதைச் சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை.

சந்திரிக்காவின் பொதியில் நீலனின் பங்களிப்புப் பற்றி.. தெரியல்ல.. ஆனால்.. நீலனின் சாவில்.. புலிகளின் தொடர்பு பற்றி தெளிவாக இருக்கிறீங்க. ஆனால் நீலனின் சாவின் பின்னால் உள்ள அரசியல் தெரியல்ல..????!

நீங்கள் எல்லாம்.. மக்களுக்கு நோகாத வகையில்.. புலிகளைக் குற்றவாளியாக்கும் வேலையை மட்டுமே செய்கிறீர்கள். தமிழ் மக்களின் நலனை நோக்கி வேலை செய்வதாகத் தெரியவில்லை. இதனை தான் தமிழ்நெட்டும் கண்டிக்கிறது. நாங்களும் கண்டிக்கிறோம். :icon_idea:

தமிழ்செல்வன்.. 10 வருட அரசியல் வாழ்வில்... ரோக்கியோ முதல் ஒஸ்லோ வரை தமிழர்களை கொண்டு சென்றிருக்கிறார். தமிழர் பிரச்சனைகளை சர்வதேச மயப்படுத்தி இருக்கிறார். அதே சம்பந்தன்.. 50 வருட கால அரசியலில்.. அதே அலரிமாளிகைக்குள்ளும்.. புதுடெல்லிக்குள்ளும் தான்.. பதுங்கிப் பதுங்கி... பயந்து பயந்து.. சுப்பற்ற கோடிக்க.. சுத்திறார். (உப்படிச் சுத்தி இருந்தால்.. தமிழ்செல்வன்.. சம்பந்தனை வென்று இன்று சிறீலங்காவில்.. அமைச்சராக இருந்திருப்பார்.) தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டு. அந்த வகையில்.. தமிழ்செல்வனின் தம்பி.. அல்ல.. குட்டித் தம்பி.. தான் சம்பந்தர். :D:lol:

தமிழ்செல்வன் செய்த அரசியல் புலிகளை சர்வதேசம் எங்கும் பயங்கரவாதிகள் ஆக்கியது .அது கடைசியில் அவரையும் புலிகளையும் காவுகொண்டது .எவருமே ஏன் என்று கேள்வியே கேட்கவில்லை .

இந்த அவப்பெயர்களை எல்லாம் சரி செய்யவவே சம்பந்தருக்கு அரைவாசி நேரம் போகுது .

இது எந்த ஆராய்ந்தலும்.. புரிதலும் அற்ற புலி இகழ்ச்சியில் கொட்டப்பட்ட கருத்து.

புலிகள் மீதான இந்தியத் தடை.. 1991 இலும். அமெரிக்கத் தடை 1996 இலும். இங்கிலாந்துத் தடை.. 1998 இலும் அமுலுக்கு வந்தவை. இதில் எந்தெந்த காலங்களில் தமிழ்செல்வன்.. அரசியல்துறையில் இருந்தார் என்றாவது.. சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியுமோ தெரியல்ல. இதில.... கருத்து. சும்மா யாழில எதனையும் எழுதலாம் என்பதற்காக எல்லாம் கருத்தெழுதக் கூடாது.

மேலும்.. புலிகளின் சர்வதேச கொள்கை வகுப்பை புலிகள் அமைப்பு.. நாட்டுக்கு வெளியில் தான் வைச்சிருந்தார்கள். அதனை அன்ரன் அண்ணா.. 2006 வரை முக்கிய பங்கெடுத்துச் செய்தார். :icon_idea:

மேற்குநாடுகள்.. எமக்காக எதனையும் செய்யப் போவதில்லை. மேற்குநாடுகள் செய்யும் அரசியலுக்குள் நாங்களே தான்..எதனையும் பெற்றுக் கொண்டாலே அன்றி. அந்த வகையில் சம்பந்தன்.. ஹிந்து மூலம் ஹிந்தியாவை திருப்திப்படுத்துவதை விடுத்து.. மேற்குநாடுகள் எம்மை வைத்து செய்யும் நகர்வுகளுக்குள் அங்கு வாழும் மக்களின் மனச்சாட்சியை தொட்டுச் செல்வதில் தான் எங்களுக்கு சாதகம்.. உள்ளது. அதுதான்.. மேற்குநாடுகளின்.. அணுகுமுறையில் எங்களுக்கான சாதகத்தை கொண்டு  வர முடியும். மாறாக.. தமிழ் மக்களின் அழிவுகளை.. அழித்தவர்களை மறைத்து.. அவர்களுக்கு அரிதாரம் பூசுவதனால் ஆகாது.

சர்வதேச நகர்வுகளில்...சனல் 4 ஏற்படுத்திய தாக்கத்தில் 1% கூட சம்பந்தனின் சாணக்கியம் ஏற்படுத்தல்ல.. என்பது எம்மை சம்பந்தனின் அணுகுமுறைகள் எவ்வளவு ஆபத்தான திசை நோக்கி நகர்த்திச் செல்கின்றன என்பதை உணரச் செய்கிறது.

நீங்கள் செய்யபோவதாக மார்தட்டுவது வெற்றுப் பேச்சு. நீங்கள் செய்ய ஒன்றும் இல்லை. புலிகளை தடை செய்த 30 நாடுகளும் புலிகள் மீதும், அரசு மீதும் விசாரணையை கொண்டுவர ஊக்குவிக்க வேண்டும். விராரணையில் என்ன் நடந்தது என்றதை சரியாக சொல்ல வேண்டு. சம்பந்தர் அமெரிக்காவிடம் கேட்டது மாதிரியே அதிலிருந்து தமிழருக்கு சர்வதேசம் உள்ளடங்கிய தீர்வு தர பண்ண வேண்டும். இதில் நீங்கள் செய்யபோவத்தாக மார்தட்ட ஒன்றும் இல்லை. இப்போது மேற்குநாடுகள் செய்யத்தயாராக இருக்கின்றன. சம்ப்ந்தரை பிடிக்காததால் அவருக்கு எதிராக போக வேண்டும் என்று போய் குழப்பாமல் இருப்பது தமிழரின் கடமை.

சம்பந்தர் கிந்து மூலம் இந்தியாவை திருத்திப்படுத்த முயன்றால் தான் அங்கு ஒரு பேட்டிக்கு இடம் கேட்கலாம். இந்தியா இடையில் நுளைந்து குழப்பாமல் தடுக்க முயன்று தாஜா செய்ய வேண்டுமானால் கிந்து கேட்கும் பேட்டிக்கு போய் இராஜதந்திரமாக கதைக்கலாம். 

சிலவற்றை குழந்தை பிள்ளை தனமாக திரும்ப திரும்ப கிழறி பேய்கூத்தாடக்கூடாது. சனெல் - 4 எந்த இடத்திலும் புலிகள் தவறுவிட வில்லை அரசு மட்டும்தான் தவறு செய்தது என்று கூறவில்லை. அரசு சனெல்- 4 சொன்ன குற்றங்களை எதிர்த்து  அதை அழிக்க முயன்று தன்னைத்தான் கெடுத்தது என்றதும் உண்மை. மேலும் சனெல் - 4 நிலைப்படும் புலிகள் போர் குற்றத்தில் ஈடுபட்டர்கள் என்பது. எனவே சனெல்-4  அதை சொல்லும் போது அவர்களின் 1% இல்லாத கூட்டமைப்பு அதை சொல்வதில் தப்பு போல படுகிறதா?

தேவை இல்லாத இடத்தில் தேவை இல்லாத விதமாக சனெல்-4யை  இழுத்து அது  செய்தை கெடுக்காமல் இருப்பது நல்லது. அந்த ஆவணகள் விசார்ணைக்கு மிக முக்கியம்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு புலிகளே பதில் அளித்திருக்கிறார்கள். நீதியான சர்வதேச விசாரணை ஒன்று வந்தால் அதனை சந்திக்க தாம் தயார் என்று. எனவே புலிகளை காட்டிக்கொடுத்துத்தான் சிங்களவனை தண்டிக்கனும் என்ற தேவை தமிழர்களுக்கு இல்லை. சம்பந்தனின் இந்த அணுகுமுறை தமிழர்களையே பாதிக்கவும் செய்யும். இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக எல்லாம்.. புலிகள் மீது குற்றம்சாட்ட முடியாது. புலிகள் அமைப்பு தனக்கென்று கொண்டிருந்த மனித உரிமைக் கடப்பாடுகளை எல்லாம் அவை தட்டிக்கழிப்பதும்.. அவற்றை சம்பந்தன் சர்வசாதாரணமாக உதாசீனம் செய்து நடந்து கொள்வதும்.. ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய இராஜதந்திரம் அல்ல. இது நரித்தனம்.

சிங்களவனை காப்பாற்ற.. இன அழிப்பை உச்சரிக்க தயங்கிற சம்பந்தன்.. புலிகள் தொடர்பில் மட்டும்.. எந்த தயக்கங்களும் இன்றி.. பொய்களையும்.. சான்றுகள் அற்ற விடயங்களையும் ஹிந்துவுக்கு எப்படி சமர்ப்பிக்க முடிகிறது. அதற்கான அனுமதியை அவர் எங்கிருந்து பெற்றுக் கொண்டார்.

இந்த விடயத்தில் சனல் 4 இதுவரை வெளியிட்ட காணொளிகளில்.. புலிகளின் போராட்ட வடிவத்தை கண்டித்திருந்ததே ஒழிய.. புலிகள்.. பெரும் மனித இன அழிவை ஏற்படுத்தியதாகச் சொல்லவில்லை. போர்க்குற்றம் செய்ததாகக் காட்டவும் இல்லை. ஆனால்.. சிறீலங்கா அரச படைகளைப் பொறுத்த வரை.. அது பெரும் மனித உரிமை மீறல்களையும்.. போர்க்குற்றங்களையும் செய்துள்ளதாக இனங்காட்டி உள்ளதோடு.. அதன் பின்னணியில் இருந்தவர்களையும் இனங்காட்டி உள்ளது. மேலும்.. புலிகள் அமைப்பில்.. களத்தில் இருந்து.. பதில் சொல்ல யாருமே இல்லாத கட்டத்தில்.. புலிகள் அமைப்பையும் சிறீலங்காவுக்கு நிகராக விசாரிக்கனும் என்று சொல்லும் உங்களின் கருத்தின் நோக்கம்.. மேற்குலகு கூட முன் வைக்காத ஒன்றாகும். இது நீங்கள்... புலிகளை குற்றவாளியாக்கி.. சம்பந்தனை இராஜதந்திரி ஆக்கும் குறுநோக்கத்தோடு செயற்படுவதையே இனங்காட்டுகிறது. இதனை தமிழ் மக்கள் நிச்சயம் வரவேற்கமாட்டார்கள். ஹிந்துவும் இந்தியாவும் வரவேற்கலாம். ஆனால் ஹிந்தியாவால் அல்ல.. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு முடிவு வரப்போறது. தமிழ் மக்களின் முயற்சியால் மட்டுமே அது சாத்தியம். அதனை சம்பந்தன் சீர்குலைக்காமல் எதையாவது சொல்லிட்டு போகலாம். புலிகள் தொடர்பில் கேட்க ஆளில்லை என்பதற்காக சம்பந்தன் எதனையும் பேசலாம் என்றில்லை. :icon_idea:

Edited by nedukkalapoovan

சம்பந்தர் சந்திரிக்காவோடு சேர்ந்து அன்றும் அமெரிக்கப் பயணங்களை மேற்கொண்டிருந்தவர் தான். இன்றும் புலிகள் மீது தடை இருக்க அங்கு போய் வருகிறார் தான். நீங்கள் சம்பந்தனை.. புலியாக்க வேண்டாம். அவரே அதைச் சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை.

திரும்ப படியுங்கள் நான் அதை சொல்ல வில்லை. நீங்கள் சம்ப்ந்தர்  தமிழ் மக்களின் எதிரி என்கிறிகள் அதுதான் உண்மை அல்ல. 

சந்திரிக்காவின் பொதியில் நீலனின் பங்களிப்புப் பற்றி.. தெரியல்ல.. ஆனால்.. நீலனின் சாவில்.. புலிகளின் தொடர்பு பற்றி தெளிவாக இருக்கிறீங்க. ஆனால் நீலனின் சாவின் பின்னால் உள்ள அரசியல் தெரியல்ல..????!

திரும்ப படியுங்கள் அதை நான் சொல்லவில்லை. புலிகளை தொடர்பு படுத்தி வந்த செய்திகளில்தான் மேர்குநாடுகள் தங்கள் முடிவை எடுக்கின்றன. அதை தடுக்கும் சக்தி தமிழரிடம் இல்லை. எனவேதான் நினையமாக விசாரணையை வரப்பண்ண வேண்டும்

நீங்கள் எல்லாம்.. மக்களுக்கு நோகாத வகையில்.. புலிகளைக் குற்றவாளியாக்கும் வேலையை மட்டுமே செய்கிறீர்கள். தமிழ் மக்களின் நலனை நோக்கி வேலை செய்வதாகத் தெரியவில்லை. இதனை தான் தமிழ்நெட்டும் கண்டிக்கிறது. நாங்களும் கண்டிக்கிறோம். :icon_idea:

நீங்ககள் நினைப்பதை நான் செய்யவில்லை. இங்கே(யாழுக்கு) வந்ததில் இருந்து எனது ஒரே குறிக்கோள் போர்குற்ற விசாரணையை வர வைக்க வேண்டும் என்பதே. நீலன் கொலையில் புலிகளுக்கு தொடர்பில்லை என்றதை துணிந்து மறுக்க ஒரு வழியில்லாத நிலையில் நான் புலிகளின் தொர்பை தெரிந்து வைத்திருக்கிறேன் என்று பொருள் இல்லாத வெட்டிபேச்சாக தொடர்ந்து திரித்திதுக்கொண்டிருக்க காலம் போய்விடும். விசாரணை வந்தால் புலிகள் ஒன்று செய்ததற்கு அரசு ஆயிரம் செய்தது என்றை நிறுவுவது கஸ்டமில்லை. சட்டபடியான அரசு அப்படி செய்த்திருக்க கூடாது என்றதை அப்போது எல்லோரும் ஏற்றுகொள்வார்கள். சமப்ந்தர் மீது இருக்கும் போட்டியால் அவரை தூர வைக்க நினைத்து விசாரணையை கெடுக்கக் கூடாது. 

எனவே புலிகளை காட்டிக்கொடுத்துத்தான் சிங்களவனை தண்டிக்கனும் என்ற தேவை தமிழர்களுக்கு இல்லை.

சிங்களவனை காப்பாற்ற.. இன அழிப்பை உச்சரிக்க தயங்கிற சம்பந்தன்.. புலிகள் தொடர்பில் மட்டும்.. எந்த தயக்கங்களும் இன்றி.. பொய்களையும்.

இதை சம்பந்தர் எங்கும் செய்யவில்லை.

இந்த விடயத்தில் சனல் 4 இதுவரை வெளியிட்ட காணொளிகளில்.. புலிகளின் போராட்ட வடிவத்தை கண்டித்திருந்ததே ஒழிய.. புலிகள்.. பெரும் மனித இன அழிவை ஏற்படுத்தியதாகச் சொல்லவில்லை

போராட்டவடிவம் தவறாகும் போது போர்க்குற்றம். அதுதான் அவர்ர்களின் கருத்து. சம்பந்தரும் அதை சொல்லவில்லை. அவர் புலிகள் சிங்கள இன அழிப்பை செய்தார்கள் என்று சொல்ல வில்லை. போர்க்குற்றத்தில் ஈடிபட்டர்கள் என்று சொல்லவில்லை. மனித உரிமைகலை மீறினார்கள் என்று சொல்கிறார்கள். நான்தான் சொல்கிறேன் NGOக்கள் புலிகள் போங்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்ற குறை வைத்தாலும் விசாரணை வேண்டும் என்று. சம்பந்தர் அவர்கள் போர் குற்றத்தில் ஈடுபடடார்கள் என்று சொல்லவில்லை.

நீங்கள் தொடர்ந்து இட்டுக்கட்டு விவாதம் வைக்கிறீர்கள். 

களத்தில் இருந்து.. பதில் சொல்ல யாருமே இல்லாத கட்டத்தில்.. புலிகள் அமைப்பையும் சிறீலங்காவுக்கு நிகராக விசாரிக்கனும் என்று சொல்லும் உங்களின் கருத்தின் நோக்கம்.. மேற்குலகு கூட முன் வைக்காத ஒன்றாகும். இது நீங்கள்.

விசாரணை வந்தால் வேறும் மார்தட்டல் மட்டும் நடக்க போகிற்தாக நான் சொல்ல வரவில்லை. நிறை விடையங்கள் வெளிவரப்பொகீரது. அதனால் மட்டும்தான் எனக்கு விசாரணை பற்றி பயமில்லை. சம்பந்தருக்கு விசாரணை பற்றி பயமில்லை. எந்த பிரபல புலம் பெயர் தமிழ் மக்கள் அமைப்பும் உங்களை மாத்ரி விசாரணையை கண்டு அஞ்சவில்லை. மாறக இரவு பகலா கேட்டுக்கொண்டிருக்கின்றன. 

துணிச்சலாக நியாயத்தை வாதாட முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்கள் எல்லோருக்கும் இருக்கு.

விடுதலைப் புலிகளை காழ்ப்புணர்ச்சியுடன் ஏசும் புலியெர்ப்புவாதிகளாலும் விடுதலைப் புலிகளுக்கு துதிபாடும் அதி தீவிர புலி விசுவாசிகளாலும் என்றுமே நியாயமான விமர்சனங்களையோ ஆக்கபூர்வமான கருத்துக்களையும் வைக்க முடியாது. அந்தவகையில் நெடுக்கு நீங்கள் அதிதீவிர விசுவாசத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். அது உங்கள். மதியை மயக்கியுள்ளது. நியாயத்துடன் சிந்தியுங்கள்.எல்லா மனிதர்களிடமும் பலமும் பலவீனமும் உள்ளதைப்போல் எல்லா தலைவர்களிடமும் உண்டு. அது திரு பிரபாகரனுக்கும் பொருந்தும் திரு சம்பந்தனுக்கும் பொருந்தும். இழைக்கப்பட்ட தவறுகள் திருத்தப்படவேண்டியவை. அதற்காக விமர்சனங்களை வைக்கலாம். ஆனால் அவர்களை தூற்றக்கூடாது. விமர்சனங்களுக்கு அப்பால் திரு சம்பந்தன் இன்று மக்கள் மதிப்பு வைத்திருக்கும் ஒரு தலைவர் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்து உருவாக்க நினைத்ததை வெற்றிகரமாக சாதுரியமாக சம்பந்தர் முறியடிக்க இங்கு யாழ் களத்தில் நெடுக்கு நீங்கள் உங்களையும் அறியாமல் செய்துவிட்டீர்கள்.

நான் முன்னரே குறிப்பிட்டதைப் போல புலிகளிலும் பலமும் பலவீனமும் இருந்தது . அதுவே அவர்களின் வெற்றிகளுக்கும் இறுதிப்போர் தோல்விக்கும் காரணமாக இருந்தது. ஆகவே எல்லாப்பக்கமும் தவறுகள் இருக்க ஏன் ஒருவரை ஒருவர் தூற்றி வீண் முரண்பாடுகளை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

Edited by tulpen

இது புலிகள் பிள்ளை பிடிச்சார்கள்.. புலிகள் மக்களைச் சுட்டார்கள்.. என்பது போன்ற குற்றச்சாட்டு அல்ல. எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய நிலைப்பாட்டிற்கு சரியான காரண காரியங்கள் உள்ளன. புலிகளை விமர்ச்சிக்கிறோம் என்ற போர்வையில் எதிரி கட்டவிழ்த்த கதைகளையும்.. அந்நிய சக்திகள் புலிகள் மீது திணித்தவற்றையும் நம்பிக்கொண்டு நாம் புலிகளை விமர்ச்சிக்க முடியாது.

புலிகள் மீதான சம்பந்தனின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு ஒன்றே இதற்கு போதுமானது.

வன்னிப் போரின் போதும் சரி அதற்கும் முதலும் சரி புலிகள் மக்களின் பாதுகாப்பில் பெரும் அக்கறை கொண்டிருந்ததோடு.. ஐநாவின்.. சர்வதேச செஞ்சிலுவையின் போர் பிராந்திய இருப்பை வரவேற்றதோடு இன்றி.. அவர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். ஆனால் சிங்களப் படைகளோ.. அவற்றிற்கு ஆதரவாக செயற்பட்ட நாடுகளோ.. போரை முன்னெடுப்பதில் காட்டிய ஆர்வத்தை.. மக்களை பாதுகாப்பதில் காட்டவில்லை. ஏன் கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தன் கூட.. இன்று மகிந்தருடன் அடிக்கடி ரகசிய சந்திப்புக்களை செய்பவர் அன்று.. மக்களுக்காக ஒரு சந்திப்பை நிகழ்த்தவோ.. ஐநா இருப்பை வலியுறுத்தவோ இல்லை.

அடிப்படையில்.. மக்களின் நலன் காக்கத் தவறியவர்கள் எல்லாம்.. இன்று.. மனித உரிமை காவலர்களாகவும்.. புலிகள் மனித உரிமைகளை மீறினர் என்றும் உச்சரிக்கும் நரித்தனத்துக்கு எல்லாம் விமர்சனம் என்று பெயர் வைக்கவும்... புலிகள் மீது சரமாரி கண்டனங்களை வீசி.. சிங்களவனையும் அந்நிய சக்திகளையும் சாந்தப்படுத்தி அதன் மூலம்.. நெருக்குவாரமற்ற.. ஒரு இப்படி அப்படி தீர்வை தமிழ் மக்கள் தலையில் கட்டிவிடுவதும் அல்ல. இராஜதந்திரம்.

நீங்கள் என்ன ஆதார அடிப்படைகளை வைச்சுக் கொண்டு புலிகளை விமர்ச்சிக்கிறீர்கள் என்றே தெரியவில்லை. இதில்.. நீங்கள் எப்படி எங்களை நோக்கி அதிதீவிர விசுவாசிகள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறீர்கள் என்றும் புரியவில்லை. நாங்கள் கள யதார்த்தத்தை பற்றிப் பேசுகிறோம். மாறாக.. புலிகளிலும் பிழை சுட்டிக்காட்டனும்.. சிங்களவனிலும் பிழை இருக்கு என்று காட்டன்னு அல்ல.

விடுதலைப்புலிகள் அமைப்பை பொறுத்த வரை அவர்கள் மனித உரிமைகள் மீதும் சரி.. பிற இன... சமூக  மக்களின் நலனிலும் சரி.. இயன்ற வரை நிறைய விட்டுக்கொடுப்புகளோடு.. பொறுமைகளோடு செயற்பட்டுள்ளார். அதனை அண்மையில்.. சரத் பொன்சேகா.. தேசிய தலைவர் பற்றி விடுத்த செய்தியில் கூட பிரதிபலித்திருப்பதைக் காணலாம்.

இன்று.. எந்தச் சிங்களவனும்.. தங்கள் படைகள் செய்தது.. குற்றம் என்றோ.. இன அழிப்பு என்றோ சொல்வதாகத் தெரியவில்லை. சரத் தொடங்கி.. ரணில் வரை சிங்களப் படைகளை பாதுகாக்கவும்.. மகிந்த குடும்பத்தை பழிவாங்கவுமே முயல்கின்றனர். ஆனால்.. தமிழ் அரசியல்வாதிகளான சம்பந்தன் உட்பட்ட சிலர்.. புலிகள் மீது குற்றம் சுமத்துவதில் கொண்டிருக்கும் ஆர்வத்தை.. சிங்களப் படைகள் மீதும்.. அதனை வழிநடத்தியவர்கள் மீது செய்வதில்லை. அதேபோல் தான்.. தமிழ் மாற்றுக்கருத்து ஆட்களும். அவர்களுக்கும்.. புலி போன தவறான வழித்தடம் மட்டுமே தெரிகிறது. தாமோ.. எதிரியோ..சர்வதேசமோ.. போனது தெரியவில்லை.

நாம் எல்லாவற்றையும் திறந்து சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று கொண்டு சில தரப்புக்களை திருப்திப்படுத்தும் நோக்கில்..புலிகளை விமர்ச்சிப்பதே யதார்த்தம் என்றோ.. உண்மை என்றோ நம்ம முடியாது. அல்லது நம்ப வைக்க முடியாது. அது சந்தர்ப்பவாத அரசியல் ஆகும். ஏன் நரித்தன அரசியலாகும். இது ஓர் நாள் எமக்கே பாதகமாகி எதிரியை காப்பாற்றுமே அன்றி எம்மை அழித்த எம்மை அடிமைப்படுத்திய எதிரியை துரோகிகளை தண்டிக்காது.

அந்த வகையில் உங்கள் குற்றச்சாட்டு.. அநாமதேயமானது மட்டுமன்றி அடிப்படை ஆதாரங்களை உள்வாங்க மறுக்கும்.. முரட்டுத்தனமானதாக உள்ளது. இதே அரசியலை தான் சம்பந்தனும் சிலரை திருப்திப்படுத்தி குறைந்த பட்ச சலுகைகளைப் பெற்றுக் கொள்ள பாவிக்கிறார். அது தமிழ் மக்களை இன்னும் இன்னும் பாதக திசையில் நகர்த்திச் செல்லுமே அன்றி சாதகங்களை குறைவாகவே அறுவடை செய்யும். :icon_idea:

நன்றி. இதற்கு மேல் இத்தலைப்பில் சொல்ல எதுவும் இல்லை. எல்லாம் தமிழர்களின் விதிப்படி நடக்கும் என்று சொல்வதை விட எம்மவர்களிடம் அறிவுபூர்வமாக யதார்த்த பூர்வமாக கருத்துப் பரிமாறி அவர்களை மக்கள் நலன் நோக்கி செயற்பட கொண்டு வருவது அவ்வளவு சுலபம் அல்ல. அப்படிச் சுலபம் என்றால்... எம் துப்பாக்கிகளே எம்மவர்களை நோக்கி நீள வேண்டிய தேவை கூட வந்திருக்காது. :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.