Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா தீர்மானம் குறித்து இந்தியா இன்னமும் முடிவெடுக்கவில்லையாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

INDIA_EMPLEM.jpg

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் குறித்து இந்தியா இன்னமும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்ததாக கொழும்பு கசெற் செய்தி வெளியிட்டுள்ளது. 

அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிராக, சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்க இந்தியா மறுத்து விட்டதாக இன்று இந்திய ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி ஊகமே என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. 

அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானத்தில் அனைத்துலக போர்க்குற்ற விசாரணை, கோரப்படாது என்பதை உறுதிப்படுத்த, உதவுமாறு மன்மோகன்சிங் அரசாங்கத்திடம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் உதவி கோரியதாகவும், அதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நிராகரித்து விட்டதாகவும் எக்கொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20140201109883

தொடங்கிட்டாங்கைய்யா...தொடங்கிட்டாங்க......

ஈழத்தமிழர்கள் கெளரவமான சுதந்திரத்துடன் வாழ்வது உள்ளுக்குள் அறவே பிடிக்காத விடயம். அதேவேள தமிழர்களுக்கு நன்மை செய்வதாக ஈழத்தமிழரையும் தமிழ் நாட்டு தமிழரையும் நம்பவைக்க வேண்டிய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. தான் கடுமையாக சிங்கள அரசிடம் நடக்கப்போக, எங்கே சிங்களவர்கள் தாமாகவே தமிழருக்கு கொடுக்கவேண்டிய உரிமைகளை கொடுத்து விடுவார்களோ, என்ற பயம். பிரச்சனை ஐரோப்பிய அமெரிக்க நாடுகளால் கையாளப்படும் போது, வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள உரிமைகள் இலங்கை மக்களுக்கு கிடைத்து விடுமோ என்ற பயத்துடன், பிரச்சனை தீரும்போது சிங்களவரும் தமிழரும் சேர்ந்து நாட்டை முன்னேற்றி விடுவார்களோ என்ற பொறாமை. இதைவிட இதில் எந்த விடயத்தையும் வெளிப்படையாக சொல்ல முடியாத கள்ளத்தனம். அதனால் இந்தியாவிற்கு இது விடயத்தில் முடிவெடுப்பது மிவும் கஷ்டமான விடயம்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக விசாரணையை திரைமறைவில் எதிர்ப்பார்கள் என்றே நினைக்கிறேன்.. இயலாத கட்டத்தில், "பிராந்திய" அனுசரணையுடன் கூடிய உள்நாட்டு விசாரணைக்கு தாளம் போடுவார்கள்.

ஊழலை தவிர எதைத்தான் உருப்படியா செய்தது இந்த காங்கிரசஸ் அரசாங்கம்?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் கெளரவமான சுதந்திரத்துடன் வாழ்வது உள்ளுக்குள் அறவே பிடிக்காத விடயம். அதேவேள தமிழர்களுக்கு நன்மை செய்வதாக ஈழத்தமிழரையும் தமிழ் நாட்டு தமிழரையும் நம்பவைக்க வேண்டிய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. தான் கடுமையாக சிங்கள அரசிடம் நடக்கப்போக, எங்கே சிங்களவர்கள் தாமாகவே தமிழருக்கு கொடுக்கவேண்டிய உரிமைகளை கொடுத்து விடுவார்களோ, என்ற பயம். பிரச்சனை ஐரோப்பிய அமெரிக்க நாடுகளால் கையாளப்படும் போது, வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள உரிமைகள் இலங்கை மக்களுக்கு கிடைத்து விடுமோ என்ற பயத்துடன், பிரச்சனை தீரும்போது சிங்களவரும் தமிழரும் சேர்ந்து நாட்டை முன்னேற்றி விடுவார்களோ என்ற பொறாமை. இதைவிட இதில் எந்த விடயத்தையும் வெளிப்படையாக சொல்ல முடியாத கள்ளத்தனம். அதனால் இந்தியாவிற்கு இது விடயத்தில் முடிவெடுப்பது மிவும் கஷ்டமான விடயம்.

இதுதான் உண்மை.

பச்சை முடிந்து போச்சுது, நாளை போடுறேன்.

ஊழலை தவிர எதைத்தான் உருப்படியா செய்தது இந்த காங்கிரசஸ் அரசாங்கம்?

கொலை. டுவிட்டறாலையே கொலை செய்யுமளவு அட்வான்ஸ்ட்.

பிரேரணையின் உள்ளீடுகளின் அடிப்படையிலேயே ஆதரவளிப்பதா? இல்லையா? என தீர்மானிக்கப்படும் - இந்தியா

shalman%20kursid%20and%20peris.jpg

இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையின் உள்ளீடுகளின் அடிப்படையிலேயே அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்துக் கொண்ட போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது குறித்த பிரேரணையை அனுமதிக்க வேண்டாம் என்று இலங்கை தரப்பில் கோரப்பட்டிருந்தது. எனினும் இது குறித்து இந்தியா இன்னும் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும், அதில் சேர்க்கப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையிலேயே அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தியா தீர்மானிக்கும் என்று சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார்.

கடந்த தடவையை போலவே இந்த முறையும் தமிழக அழுத்தத்தின் அடிப்படையில் இந்த பிரேரணைக்கு இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவளித்தாலும் கூட, இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் அதில் திருத்தங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.pathivu.com/news/29356/57//d,article_full.aspx

இரண்டு கிழட்டு நரிகளும் கடினபட்டு சிரிப்பதை பார்த்தால் சந்திப்பு நல்லா நடந்ததா தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை பார்த்தாலே தமிழர்களுக்கு புரிந்திருக்கும் என்ன நடக்கப்போகுது என்று இதென்ன இன்றைக்கு நெற்ற நடக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

பிரேரணையின் உள்ளீடுகளின் அடிப்படையிலேயே ஆதரவளிப்பதா? இல்லையா? என தீர்மானிக்கப்படும் - இந்தியா

பிரச்சினை

தமிழருக்கும் சிங்களவருக்கும்...

யாரோ தயாரித்த உள்ளீட்டை

இவர்கள் சரி  பார்க்கணுமாம்...

அதை ஒன்று சொல்லுது

மற்றது கேட்குது.....

நாட்டை நல்லாக்கணும் என்ற நாட்டுப்பற்று இருந்தா

நீங்களே  வையுங்கோவன் உள்ளீட்டை  தமிழரிடம்.....

உங்கட

விக்கி ஐயாதானே தமிழர் தலைவர் இப்போ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.