Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2014 ICC World Twenty20 துடுப்பாட்ட போட்டி………செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்

Featured Replies

‘இறுதியுத்தம்’ : இலங்கை-இந்தியா மோதல்

பங்களாதேஷில் இடம்பெற்று வரும் இருபது-20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலக கோப்பை
16 அணிகள் பங்கேற்ற 5ஆவது  இருபது-20 உலகக் கிண்ணத் தொடர் இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உலக மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் ஆசிய நாடுகளான இலங்கையும், இந்தியாவும் மிர்பூர் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கின்றன.


உணர்ச்சி பிடியில் இலங்கை

எப்படியாவது இம்முறை உலக கிண்ணத்தை சொந்தமாக்கி விட வேண்டும் என்பதில் இலங்கை வீரர்கள் கங்கணம் கட்டி நிற்கிறார்கள். அணியின் சிரேஷ்ட வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார இருவரும் இந்த ஆட்டத்துடன் சர்வதேச இருபது-20 கிரிக்கெட்டில் இருந்து விடைபெற இருப்பதால், உணர்ச்சிப்பூர்வமாக காணப்படுகிறார்கள். அவர்களுக்கு வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக இலங்கை அணி பல்வேறு விதமான வியூகங்களை தீட்டி வருகின்றது.

சில ஆண்டுகளாக இலங்கை அணிக்கு, உலக கிண்ண இறுதிசுற்று என்றாலே ‘ஏழாம் பொருத்தம்’ தான். 2007, 2011ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கிண்ணம் இறுதி ஆட்டத்திலும், 2009, 2012ஆம் ஆண்டு இருபது-20  உலக கிண்ண இறுதி ஆட்டத்திலும் இலங்கை அணி தோல்வியடைந்திருந்தது. இதனை கவனத்தில் கொண்ட இலங்கை கிரிக்கெட் சபை வீரர்களை மேலும் உத்வேகப்படுத்தும் வகையில் கிண்ணத்தை வென்றால் ரூ.6 கோடி போனஸ் தருவதாக அறிவித்திருக்கிறது.

மாலிங்க அணித் தலைவர்

அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் ஒதுங்கிக் கொண்டதால், இன்றைய போட்டியிலும் மாலிங்க இலங்கை அணியை வழிநடத்த இருக்கிறார். இலங்கை அணி பந்து வீச்சு, துடுப்பாட்டம் இரண்டிலும் வலுவாக திகழ்ந்தாலும் கடந்த சில ஆட்டங்களில் அணியின் பந்து வீச்சாளர்கள் தான் அமர்க்களப்படுத்தியுள்ளனர். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான சூப்பர்–10 சுற்று லீக்கில் சுழற்பந்து வீச்சாளர் ஹேரத் 3 ஓட்ட்ங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். துடுப்பாட்டத்தில் மெத்யூஸ் தவிர மற்றவர்களின் ஆட்டம் சீரற்றதாக உள்ளது. இருப்பினும் ஒருங்கிணைந்து விளையாடுவதால் எதிரணியை எளிதில் அடக்கி விடுகிறார்கள்.


அதிக நம்பிக்கையில் இந்தியா

தென்னாபிரிக்கா, நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் தொடர் தோல்வி, ஆசிய கிண்ணத் தொடரில் சறுக்கல் என்று தொடர்ச்சியான தோல்விகளால் நம்பிக்கையற்று துவண்டு போய் கிடந்த இந்திய அணி இருபது-20   உலக கிண்ணத்தில் திடீரென விசுவரூபம் எடுத்துள்ளது.  சூப்பர்–10 சுற்றில் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள் அணிகளை பந்தாடிய இந்திய அணி அரைஇறுதியில் தென்னாபிரிக்காவை விரட்டியடித்தது.

இறுதிப்போட்டிக்குள் காலடி பதித்திருப்பதால் இப்போது எல்லோர் கவனமும் இந்திய அணி மீது திரும்பி யிருக்கிறது. முந்தைய ஆட்டங்களில் பேராதிக்கம் செலுத்திய இந்திய அணி, ஆசிய சாம்பியன் இலங்கையை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில் இவ்விரு அணிகளும் ஒரே மாதிரியான பலம், பலவீனங்களை கொண்ட அணிகள். அது மாத்திரமின்றி இங்குள்ள சூழலும் இரு அணிகளுக்குமே அத்துப்பிடி. எனவே போட்டி நாளில் சிறு தவறுக்கும் இடமின்றி விளையாடும் அணியின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.

கோலி

விராட் கோலி 3 அரைசதம் உள்பட 242 ஓட்டங்களை குவித்து தொடரில் முன்னிலை வகிக்கிறார். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பதுடன், ஓவருக்கு சராசரியாக 4.91 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து தனது சிக்கனத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சாதனையை நோக்கி டோனி

2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கிண்ணத்தை கைப்பற்றிய இந்திய அணி இந்த முறையும் வாகை சூடினால், 20 ஓவர் உலக கிண்ணத்தை இரண்டு முறை வென்ற முதல் அணி என்ற சிறப்பை பெறும்.

டோனியின் தலைமையில் இந்திய அணி 2007ஆம் ஆண்டு இருபது-20  உலக கிண்ணத்தையும், 2011ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கிண்ணத்தையும் வென்றிருக்கிறது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டால், மூன்று உலக கிண்ணத்தை வென்று தந்த ஒரே அணித் தலைவர் என்ற வரலாற்றில் இடம்பெறுவார். இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவின் ரிக்கிபொண்டிங், மேற்கிந்திய தீவுகள் அணியின் டீசின் கிளைவ் லோயிட் ஆகியோர் அணித் தலைவர்களாக செயல்பட்டு ஒரு நாள் போட்டி உலக கிண்ணத்தை தலா 2 முறை வென்றதே அதிகபட்சமாக உள்ளது.

இதுவரை...

இலங்கையும், இந்தியாவும் இருபது- 20 கிரிக்கெட்டில் 5 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 3இல் இந்தியாவும், 2இல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. இதே போல் ஒட்டுமொத்தத்தில் (ஒரு நாள் போட்டியையும் சேர்த்து) 19 இறுதி ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் 9இல் இந்தியாவும், 8இல் இலங்கையும் சாம்பியன் ஆகியுள்ளன. எஞ்சிய இரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

கிண்ணத்தை வெல்வோம் -டோனி

இலங்கை அணி அண்மை காலங்களில் 4 உலக கிண்ணத்தை இறுதி ஆட்டங்களில் (50 ஓவர் உலக கிண்ணத்தையும் சேர்த்து) தோற்று இருப்பதால் அது இந்திய அணிக்கு மனதளவில் கொஞ்சம் சாதகமான அம்சம்தானே? என்று கேட்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் புள்ளி விவரங்கள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. சாதனைகளை பற்றி நினைக்காமல் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்படுவதே முக்கியம். இந்த தொடர் முழுவதும் நாங்கள் எப்படி ஆடினோமோ அதையே இறுதி ஆட்டத்திலும் பிரதிபலிக்க விரும்புகிறோம். அதில் தான் எங்களது கவனம் உள்ளது. கிண்ணத்தை வெல்ல எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன்.

சில ஆண்டுகளாக அணித் தலைவராக இருந்து நான் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். சர்ச்சைகள் என்பது இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய அங்கமாகி விட்டது. இந்திய கிரிக்கெட்டில் நடக்கும் நல்ல விஷயம் அல்லது கெட்ட விஷயம் (ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினை) எதுவாயினும் அதில் எனது பெயர் இல்லாமல் இருக்காது. என்னை பொறுத்தவரை நெருக்கடியை மைதானத்திலேயே விட்டு விட வேண்டும் என்று விரும்புகிறேன். அது தான் நல்லது என டோனி தெரிவித்துள்ளார்.


பந்து வீச்சில் கவனம் செலுத்துவோம்: மாலிங்க

இந்திய வீரர் விராட் கோலி மிகச்சிறந்த வீரர் என்பதை அறிவோம். சிறந்த வீரராக இருந்தாலும் கூட அவரை வீழ்த்துவதற்கு ஒரே ஒரு நல்ல பந்து போதும். அப்படிப்பட்ட பந்தை வீசுவதற்குரிய திறமையான பந்து வீச்சாளர் எங்கள் அணியில் இருக்கிறார்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தியது பெரிய விடயமல்ல. ஏனெனில் அது வெறும் பயிற்சி ஆட்டம். ஆனால் சர்வதேச போட்டி என்பது மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அவற்றில் இருந்து வித்தியாசமானவை. அதிலும் இது இறுதிப்போட்டி. அதிக பதற்றம் இருக்கும். இந்த நாளில் யார் நேர்த்தியாக ஆடுகிறார்களோ? அவர்களிடம் வெற்றி வசப்படும்.

மஹேல ஜயவர்தனவுக்கும், சங்கக்காரவுக்கும் இது இறுதி இருபது-20  போட்டி என்பதால் எங்களுக்கு இன்றைய தினம் சிறப்பு வாய்ந்த நாள். அவர்களுக்கு நாங்கள் ஏதாவது சிறப்பு (வெற்றிப்பரிசு) செய்தாக வேண்டும்.

ஆசிய கோப்பையை நாங்கள் இங்கு வென்றோம். எங்களது திறமையை நிரூபித்து காட்டுவதற்கு மீண்டும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. முழு திறமையை வெளிப்படுத்த தயாராக உள்ளோம் என  மாலிங்க கூறினார்.

மொத்தத்தில் இது உலக கிண்ணத்தில் ‘இறுதியுத்தம்’ என்பதால் இரண்டு தரப்பு வீரர்களுமே நீயா–நானா? என்று கடுமையாக மல்லுகட்டுவார்கள். எனவே சுவாரஸ்யமான ‘விருந்தை’ ருசிக்க ரசிகர்களாகிய நாம் தயாராவோம். சர்வதேச இருபது-20 ஓவர் கிரிக்கெட்டில் இது 400–வது ஆட்டம் என்பது இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


பரிசு

சாம்பியன் கிண்ணத்தை தனதாக்கும் அணிக்கு ரூ.6 கோடியே 70 இலட்சமும், 2ஆவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.3 கோடியே 35 இலட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

மழை வாய்ப்பு?

போட்டி நடக்கும் மிர்பூரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்ய 30 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஒரு வேளை மழையால் ஆட்டத்தை நடத்த முடியாமல் போனால் மறுநாள் நடைபெறும்.


போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இலங்கை: குசேல் பெரேரா, டில்ஷான், மஹேல ஜயவர்தன, சங்கக்கார, திரிமனே, மெத்யூஸ், மாலிங்க (அணித் தலைவர்), ஹேரத், குலசேகர, சேனாநாயக, பிரசன்ன அல்லது திசர பெரேரா அல்லது அஜந்த மெண்டிஸ்.

இந்தியா: ரோகித் ஷர்மா, ரஹானே, விராட் கோலி, யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, டோனி (அணித் தலைவர்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அமித் மிஸ்ரா, புவனேஷ்வர்குமார், மொகித் ஷர்மா அல்லது முகமது ஷமி.


மாலை 6.30 மணிக்கு தொடக்கம்

மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை எமது இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு மூலம் காணலாம்.  http://virakesari.lk/articles/sports

http://www.virakesari.lk/articles/2014/04/06/%E2%80%98%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

 

  • Replies 212
  • Views 10.9k
  • Created
  • Last Reply

10155936_378721512268786_501872070111600

 

இன்னைக்கு மேட்ச் , மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிகை !!

கோஹ்லியை ‘விரட்டும்’ வீராங்கனை
ஏப்ரல் 05, 2014.

 

மிர்புர்: இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை டேனியலி ஹயாத், விராத் கோஹ்லியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி, 25. ‘சேஸ்’ மன்னனான இவர், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை அரையிறுதியில், 44 பந்தில் 72 ரன்கள் எடுத்து, அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றார்.

இவரது ஆட்டத்தை பார்த்து மயங்கி விட்டார், இங்கிலாந்து பெண்கள் அணி ‘ஆல்– ரவுண்டர்’ டேனியலி ஹயாத், 22.

இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் விளையாடவுள்ள இவர், ‘விராத் கோஹ்லி என்னை திருமணம் செய்யுங்கள்,’ என, ‘டுவிட்டர்’  இணையதளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த பலர், ‘விராத் கோஹ்லியை ஏற்கனவே பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ‘புக்’ செய்துள்ளார்,’ என, தெரிவித்துள்ளனர்.

 

http://sports.dinamalar.com/2014/04/1396713654/kohliindiacricket.html

  • கருத்துக்கள உறவுகள்

Ind vs sl

84-2-13

  • கருத்துக்கள உறவுகள்

95-2-15

111-2-16

  • கருத்துக்கள உறவுகள்

130-4-20

  • கருத்துக்கள உறவுகள்
octopus_predictions.jpg
  • கருத்துக்கள உறவுகள்

8-1

இலங்கை சாம்பியன்
0
Submitted by ceditor on Sun, 04/06/2014 - 22:02
இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை சாம்பியனானது.

பங்களாதேஷில் ஐந்தாவது இருபது-20 உலக கிண்ணத் தொடர் நடைபெற்றது. இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் இலங்கை இந்தியா அணியை எதிர்கொண்டது.

கடும் மழை காரணமாக, போட்டி 40 நிமிடம் தாமதமாக ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  இலங்கை அணித் தலைவர் மாலிங்க களத்தடுப்பை தேர்வு செய்தார்.

இதனையடுத்து இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. இலங்கை அணியில் சீக்குககே பிரசன்னவுக்கு பதில், திசர பெரேரா வாய்ப்பு பெற்றார்.

இந்திய அணிக்கு ரகானே (3) அதிர்ச்சி தந்தார், ரோகித் (29) ஓரளவு கைகொடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி அரை சதம் கடந்தார். யுவராஜ் (11) சொதப்பினார். கோலி 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்திய அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 130 ஓட்டங்களை பெற்றது. டோனி (4) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

15.1 ஓவர்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை பெற்றிருந்து. இதனால் இந்திய அணி 20 ஓவர்களுக்கு 150 ஓட்டங்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் இறுதி ஐந்து ஓவர்களை சிறப்பாக வீசி 30 ஓட்டங்களை மாத்திரமே விட்டுகொடுத்தனர்.

குலசேகர மெத்தியூஸ் மற்றும் ஹேரத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றியபோதும் மாலிங்க, சேனாநாயக ஆகியோர் குறைவான ஓட்டங்களை விட்டுகொடுத்து சிறப்பான பந்து வீச்சு பிரதியை பதிவு செய்தனர்.

இதனையடுத்து 131 ஓட்டங்களை என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத்தை பெற்று கொடுக்க டில்சான் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோர் களம் கண்டனர்.

குசேல் ஜனித் பெரேரா நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 5 ஓட்டங்களுடன் அதிர்ச்சியளித்து அரங்கு திரும்பினார். இதனையடுத்து அதிரடியை தொடர்ந்த டில்சான் அஸ்வின் பந்து வீச்சில் விராட் கோலியிடம் பிடிகொடுத்து 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.


பின்னர் களத்தில் இருந்த மஹேல ஜயவர்தனவுடன் குமார் சங்கக்கார கைகோர்த்தார். அதிரடியாக ஆடிய  மஹேல ஜயவர்தன  சர்வசே இருபது20 உலக கிண்ணத் தொடர்களில் விரைவாக ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையுடன் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

http://www.virakesari.lk/articles/2014/04/06/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்று சொன்னேன் கள்ள இந்தியனுக்கு அடிக்க கூடிய ரலன் சிறிலங்கனிட்டை இருக்கு என்று....எதிரியை விட துரோகியே மிகவும் ஆவத்தானவன்...இந்தியனுக்கு அடிச்சதை இட்டு மகிழ்ச்சி............

பாகிஸ்தான் ரசிகருக்கு இறுதிப்போட்டிக்கு டிக்கெட் ஏற்பாடு செய்துகொடுத்த டோனி..
0
Submitted by ceditor on Sun, 04/06/2014 - 17:35
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் எம்.எஸ். டோனி பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவருக்கு இன்று நடைபெறும் இருபது-20 உலக கிண்ண இறுதி போட்டியை காண்பதற்கான டிக்கெட் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
டோனி களத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரை குறித்த சர்ச்சைகள் நடமாடுவதையே அதிகம் விரும்புவார்.  இதனை எடுத்து காட்டும் விதமாக அவரது சமீபத்திய நடவடிக்கை அமைந்துள்ளது.  பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் முகமது பஷீர்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வரும் பஷீர் தனது நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கிரிக்கெட் போட்டியை காண வந்தார்.  பாகிஸ்தான் அணி போட்டியில் தோற்று வெளியேறியது.  எனினும், இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விளையாட உள்ள இந்திய அணியின் ஆட்டத்தை காண அதிக ஆவலுடன் பஷீர் இருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், நேற்று இந்திய அணியின் பயிற்சிகளை பார்த்தேன்.  ஆனால், போட்டியினை காண்பதற்கான டிக்கெட்டுகள் என்னிடம் இல்லை.  டோனிக்கு என்னை நன்றாக அடையாளம் தெரியும்.  பிர்மிங்காம் நகரில் நடந்த இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுவதற்கு முன்பாகவே அவர் என்னை பார்த்துள்ளார்.

அவரிடம், இறுதி போட்டியை காண்பதற்கான டிக்கெட் என்னிடம் இல்லை என்று தெரிவித்தேன்.  டோனி பயிற்சியாளர் ரமேஷை அழைத்து எனக்கு டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கூறினார்.  ரமேஷ் எனக்கு போட்டியை காண்பதற்கான அனுதிசீட்டு ஒன்றை வழங்கினார். 

டோனி என்னிடம் விரிவாக பேசினார்.  அவர் என்னை பற்றி கேட்டறிந்தார்.  நான் சிகாகோ நகரில் வசித்து வருவதை அவரிடம் கூறினேன்.  அங்கு நீண்ட நேரம் நின்று இருந்ததால், எனக்கு பழங்களை தரும்படி டோனி கூறினார்.

நான் ஒரு தீவிர பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்.  ஆனால் இன்று நான் டோனியின் ரசிகர்.  எனக்கு இந்தியாவுடன் மற்றொரு தொடர்பும் உள்ளது.  நான் ஐதராபாத்தின் மருமகன்.  எனது மனைவி அப்பகுதியை சேர்ந்தவள்தான் என்று பெருமையுடன் கூறினார்.

 

http://www.virakesari.lk/articles/2014/04/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF

கைவிட்டார் யுவராஜ்.. 21 பந்துகளை சாப்பிட்டு 11 ரன்கள் மட்டுமே!

 

 

 

 மிர்பூர்: ஐந்து போட்டிகளில் ஆடி ஒரே ஒரு போட்டியில் மட்டும் அரை சதம் எடுத்து விட்டு மற்ற போட்டிகளில் சொதப்பலாகி ஆடி தனது பேட்டிங் பார்ம் அரை வேக்காட்டுத்தனமானது என்பதை நிரூபித்து விட்டார் யுவராஜ் சிங். ஆஸ்திரேலியாவுடன் நடந்த போட்டியில் மட்டும் சிறப்பாக ஆடினார் யுவராஜ். ஆனால் அடுத்து வந்த தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியிலும் சரி, அதற்கு முந்தைய போட்டிகளிலும் சரி அவர் ஜொலிக்கவில்லை. கைவிட்டார் யுவராஜ்.. 21 பந்துகளை சாப்பிட்டு 11 ரன்கள் மட்டுமே! இன்று நடந்த இறுதிப் போட்டியிலும் யுவராஜ் சிங் செமத்தியாக தடுமாறினார். பந்தை எதிர்கொள்வதிலிருந்து அடிப்பது வரை எல்லாவற்றிலுமே அவர் பெரிதாக தடுமாறினார். 21 பந்துகளைச் சந்தித்த அவர் வெறும் 11 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார். டெஸ்ட் போட்டியில் ஆடுவதைப் போல அவர் ஆடியதும், தடுமாறியதும் ரசிகர்களை ஏமாற்றி விட்டது. உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

Read more at: http://tamil.oneindia.in/news/sports/yuvi-fails-again-197421.html

சங்கா அபாரம்: இந்தியாவை வீழ்த்தி இலங்கை சாம்பியன் (Highlights)

இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சங்கக்காரவின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இலங்கை சாம்பியனானது.

பங்களாதேஷில் ஐந்தாவது இருபது-20 உலக கிண்ணத் தொடர் நடைபெற்றது. இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் இலங்கை இந்தியா அணியை எதிர்கொண்டது.

கடும் மழை காரணமாக, போட்டி 40 நிமிடம் தாமதமாக ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  இலங்கை அணித் தலைவர் மாலிங்க களத்தடுப்பை தேர்வு செய்தார்.

WT20-Final--India-vs-Sri-Lanka_zps0acfd5

இதனையடுத்து இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. இலங்கை அணியில் சீக்குககே பிரசன்னவுக்கு பதில், திசர பெரேரா வாய்ப்பு பெற்றார்.

இந்திய அணிக்கு ரகானே (3) அதிர்ச்சி தந்தார், ரோகித் (29) ஓரளவு கைகொடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி அரை சதம் கடந்தார். யுவராஜ் (11) சொதப்பினார். கோலி 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்திய அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 130 ஓட்டங்களை பெற்றது. டோனி (4) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
Sri-lanka_zps767ae2a1.jpg
15.1 ஓவர்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை பெற்றிருந்து. இதனால் இந்திய அணி 20 ஓவர்களுக்கு 150 ஓட்டங்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் இறுதி ஐந்து ஓவர்களை சிறப்பாக வீசி 30 ஓட்டங்களை மாத்திரமே விட்டுகொடுத்தனர்.

குலசேகர மெத்தியூஸ் மற்றும் ஹேரத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றியபோதும் மாலிங்க, சேனாநாயக ஆகியோர் குறைவான ஓட்டங்களை விட்டுகொடுத்து சிறப்பான பந்து வீச்சு பிரதியை பதிவு செய்தனர்.

இதனையடுத்து 131 ஓட்டங்களை என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத்தை பெற்று கொடுக்க டில்சான் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோர் களம் கண்டனர்.

குசேல் ஜனித் பெரேரா நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 5 ஓட்டங்களுடன் அதிர்ச்சியளித்து அரங்கு திரும்பினார். இதனையடுத்து அதிரடியை தொடர்ந்த டில்சான் அஸ்வின் பந்து வீச்சில் விராட் கோலியிடம் பிடிகொடுத்து 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் களத்தில் இருந்த மஹேல ஜயவர்தனவுடன் குமார் சங்கக்கார கைகோர்த்தார். அதிரடியாக ஆடிய  மஹேல ஜயவர்தன  சர்வசே இருபது20 உலக கிண்ணத் தொடர்களில் விரைவாக ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையுடன் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களம் கண்ட திரிமான 7 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார். இதன்பின்னர் களத்தில் இருந்த குமார் சங்கக்கார அதிரடியாக துடுப்பெடுத்தாடி 52 ஓட்டங்களை கடந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். மறுமுனையில் திசரே பெரேராவும் அதிரடியாக 21 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் இலங்கை 17.5 ஓவர்களில் 132 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டதோடு தொடர் ஆட்டநாயகனாக விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார்.

 

http://www.virakesari.lk/articles/2014/04/06/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-highlights

  • கருத்துக்கள உறவுகள்

1996 இல் யாழ்ப்பாணத்தை சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் வென்ற கையோடு.. சிறீலங்கா உலகக் கோப்பையை வென்றதும்.. சிங்களவர்கள் கண்டது வெறும்.. பெருமிதம் மட்டுமல்ல.. கொழும்பில் தமிழர்களை வெகு இழக்காரமாக நோக்கிய பல சம்பவங்கள் நடந்தன. அப்புறம் அர்ஜூன ரணதுங்க தலைமையில்.. சிறீலங்கா அணி.. யாழ்ப்பாணத்தில் சிங்களப் படைகளுக்கு கெளரவமளிக்கும் வகையில்.. ஒரு சிறப்பு ஆட்டத்தை யாழ் மத்திய கல்லூரி அரங்கில் நடத்தியது. அதில் முரளியும் பங்குபற்றி இருந்தார்.

 

அன்று சிறீலங்கா சிங்கள அணியில் இருந்த.. அர்ஜூன இன்று.. மூத்த இனவாத அரசியல்வாதி. சனத் ஜெயசூரிய.. மகிந்தவின் செல்லப்பிள்ளை அரசியல்வாதி. முத்தையா முரளிதரன் மகிந்தவின் கூலி.

 

சிறீலங்காவின் கிரிக்கெட்டையே ரசிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு.. அதற்கு வாழ்த்துச் சொல்வதும்.. அதன் இனப்படுகொலைக்கு அங்கீகாரம் வழங்குவதும் ஒன்றே. இந்தியன் துரோகி என்றால்... சிறீலங்கன் ஜென்ம விரோதி. இரண்டுமே கிரிக்கெட்டில் இருக்கக் கூடாது. கிரிக்கெட்டை ஊழல்.. மச் பிக்ஸிங் என்று.. பாழாக்கிற நாடுகள்.. பாகிஸ்தான்.. இந்தியா.. சிறீலங்கா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதில என்னென்ன பிக்ஸிங்.. என்னென்ன விலைக்கு நடந்திச்சோ. யார் அறிவார். :icon_idea::rolleyes:

 

சிறீலங்காவின் வெற்றி டி20 கிரிக்கெட் சகாப்தத்தின் அவலம். :rolleyes:

இலங்கை அணி வெற்றி கிண்ணத்துடன் இன்று நாடு திரும்பும்
1
Submitted by ceditor on Mon, 04/07/2014 - 09:33
உலக கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இன்று மாலை தாயகம் திரும்பவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இன்று மாலை 4 மணியளவில் நீர் கொழும்பு தொடக்கம் கொழும்பு வரையான வீதியில் திறந்த பஸ் வண்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.

 

http://www.virakesari.lk/articles/2014/04/07/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

கோஹ்லி திருமணம் எப்போது
ஏப்ரல் 06, 2014.
Comments 

kohli, india, cricket

மும்பை: இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி, 25. இவரது அசத்தல் ஆட்டத்தில் மயங்கிய இங்கிலாந்து பெண்கள் அணி ‘ஆல்– ரவுண்டர்’டேனியலி ஹயாத் தனது ‘டுவிட்டர்’ இணையதளத்தில்,‘‘‘கோஹ்லி என்னை திருமணம் செய்யுங்கள்,’ என, கோரிக்கை விடுத்தார். இதற்கு கோஹ்லி எந்தப்பதிலும் தெரிவிக்கவில்லை.

இவரது தாயார்  சரோஜ் கூறுகையில்,‘‘கோஹ்லிக்கு திருமணம் செய்து வைக்க இது சரியான வயது கிடையாது. இன்னும் 5 ஆண்டுகளுக்கு இது பற்றி சிந்திக்க மாட்டோம். தற்போதுதான், கிரிக்கெட் வாழ்வை துவக்கியுள்ளார். இவரின் கவனம் முழுவதும் போட்டியில் மட்டுமே இருக்க வேண்டும். வெளிநாட்டு பெண்ணை, கோஹ்லிக்கு திருமணம் செய்து வைப்பீர்களா எனக் கேட்கின்றனர். என்னைப் பொறுத்தவரை, இவை எல்லாம் கற்பனையான செய்திகள். இதற்கு என்ன மாதிரியான பதிலை எழுத முடியுமோ, அப்படி எழுதிக் கொள்ளுங்கள்,’’ என்றார்.

http://sports.dinamalar.com/2014/04/1396801131/kohliindiacricket.html

யுவராஜ் சிங் வீட்டின் மீது தாக்குதல்: ஹர்பஜன் கண்டனம்
0
Submitted by ceditor on Mon, 04/07/2014 - 13:30
6 பந்தில் 6 சிக்சர் அடித்து முத்திரை பதித்த அதிரடி துடுப்பாட் வீரர் யுவராஜ்சிங் நேற்று தனது மோசமான துடுப்பாட்டத்தால் இந்திய அணியின் 2ஆவது இருபது-20  உலக கிண்ணத்தை கைவாய்ப்பை தவறவிட்ப்பட்டது என அதிருப்தியடைந்த சில இந்திய ரசிகர்கள் சண்டிகாரில் உள்ள யுவராஜ்சிங் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடந்த முதலாவது இருபது-20  உலக கிண்ணத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 6 பந்தில் 6 சிக்சர் அடித்தார். ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில் யுவராஜ் இந்த அதிரடியை வெளிப்படுத்தினார். இந்தியா உலக கிண்ணத்தை வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.

நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான இருபது-20  உலக கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் யுவராஜ்சிங்கின் மோசமான ஆட்டம் தோல்விக்கு முக்கிய பங்கு வகித்தது.

இருபது-20  போட்டியில் இறுதி சில ஓவர்களை எந்த ஒரு வீரரும் அதிரடியாக அடித்து ஆடுவர். ஆனால் யுவராஜ் சிங்கோ பந்துகளை தேவையில்லாமல் வீணாக்கி ஓட்டங்களை குவிக்க தவறிவிட்டார். அவர் 21 பந்துகளை சந்தித்து 11 ஓட்டங்களை தான் எடுத்தார். இது அவரது மோசமான ஆட்டமாகும்.

இதேபோன்று அணியின் தலைவர் டோனியும் அதிரடியாக ஆட முடியாமல் திணறினார். அவர் 7 பந்தில் 4 ஓட்டங்களை எடுத்தார். இறுதி 4 ஓவரில் இந்திய அணியால் 19 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அதிரடியாக விளையாடிய விராட் கோலிக்கு எதிர்முனையில் நின்று பந்துகளை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. இறுதி 24 பந்துகளில் அவர் 8 பந்துகளை மாத்திரமே எதிர்கொண்டார்.

யுவராஜ்சிங்கின் மோசமான ஆட்டத்தால் நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால் சில ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து சண்டிகாரில் உள்ள யுவராஜ்சிங் வீட்டில் கற்களை வீசியுள்ளனர்.

இதற்கு ஹர்பஜன்சிங் கண்டனம் தெரிவித்து உள்ளார். டூவிட்டரில் அவர் கூறும்போது, யுவராஜ்சிங் வீட்டில் கல்வீசிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தோல்விக்கு அவரை மட்டும் குற்றம்சாட்டுவது சரியல்ல. 2 உலக கிண்ணத்தை அவர் பெற்று கொடுத்துள்ளார். அவர் ஒரு அபூர்வமான மேட்ச் வின்னர் என்று கூறியுள்ளார்.

http://www.virakesari.lk/articles/2014/04/07/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கிள் எடுக்கத் தெரியாத சிங்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா தோற்ற அதிர்ச்சியில் இலங்கையில் ஒருவர் மரணம்
 
t20_CI.jpg

 

உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா தோற்ற அதிர்ச்சியில் இலங்கையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையின் கம்பஹா பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் நடத்தப்பட்ட உலகக் கிண்ண டுவன்ரி20 போட்டித் தொடரில் நேற்யை தினம் இந்திய அணியை இலங்கை அணி தோற்கடித்திருந்தது.

இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும் என வர்த்தகர் பந்தயம் கட்டியுள்ளார்.

எனினும், இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையிடம் தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து, குறித்த வர்த்தகர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

குறித்த வர்த்தகர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தமது கணவருக்கு இதற்கு முன்னர் எவ்விதமான உடல் உபாதைகளும் இருக்கவில்லை என உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105340/language/ta-IN/article.aspx

 

T- 20 சம்பியன்களுக்கு இன்று காலிமுகத்திடலில் மகத்தான வரவேற்பு
0
Submitted by ceditor on Tue, 04/08/2014 - 10:21
பங்களாதேஷில் இடம்பெற்ற இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான இலங்கை அணி வீரர்களுக்கு இன்று மகத்தான வரவேற்பளிக்கப்படவுள்ளது.


18 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் கிண்ணத்தை மீளப் பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர்.

விமான நிலையத்தில் வரவேற்கப்பட்ட பின்னர் திறந்த பஸ் வண்டியொன்றில் ஏற்றப்பட்டு நீர்கொழும்பு பழைய வீதியின் ஊடாக மேள, தாளங்களுடன் கோலாகலமாக காலிமுகத்திடலுக்கு அழைத்து வரப்படுவார்கள்.

அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கிரிக்கெட் வீரர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

சம்பியன் கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை 14 கோடி ரூபாவை பரிசாக வழங்கியிருக்கிறது. அத்துடன், மேலதிகமாக இலங்கை கிரிக்கெட் சபை வீரர்களின் சாதனையைப் பாராட்டி மேலும் 20 கோடி ரூபாவை பரிசாக வழங்கவுள்ளது.

இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் தடவையாக பெருந்தொகை பணம் கிரிக்கெட் அணிக்கு அன்பளிப்பாக கொடுக்கப்படவுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தவுடன் இலங்கை அணி வீரர்களை கௌரவமாக வரவேற்கப்படுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோருக்காக இலங்கை கிரிக்கெட் சபை இன்னுமொரு விசேட கௌரவிப்பு நிகழ்வினையும் ஒழுங்கு செய்யவுள்ளது.
20 ஓவர் போட்டியில் உலகில் முதல் தடவையாக 1000 ஓட்டங்களை பெற்ற சாதனையை மஹேல ஜயவர்தன பெற்றுள்ளார்.

இறுதிப் போட்டியில் குமார் சங்கக்கார அரைச் சதம் அடித்து சாதனை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

லசித் மலிங்க இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்ட இரண்டாவது போட்டியிலேயே அவரது தலைமையிலான அணி உலக சம்பியனாகியது பாராட்டுக்குரிய விடயமாகும்.

 

http://www.virakesari.lk/articles/2014/04/08/t-20-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

T - 20 சம்பியன்கள் தாயகம் திரும்பினர்
 

 

Tue, 04/08/2014 - 15:52
பங்களாதேஷில் இடம்பெற்ற இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான இலங்கை அணி வீரர்கள் சற்று முன்னர் தாயகம் திரும்பியுள்ளனர்.
விமான நிலையத்தில் வரவேற்கப்பட்ட பின்னர் திறந்த பஸ் வண்டியொன்றில் ஏற்றப்பட்டு நீர்கொழும்பு பழைய வீதியின் ஊடாக மேள, தாளங்களுடன் கோலாகலமாக காலிமுகத்திடலுக்கு அழைத்து வரப்படுவார்கள்.

t-20_0_zpse5f48582.jpg

அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கிரிக்கெட் வீரர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/articles/2014/04/08/t-20-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D

 

உலக இருபது20 சம்பியன்களுக்கு வரவேற்பு
2014-04-08 19:29:09

 

பங்களாதேஷில் நடைபெற்ற ஐ.சி.சி. உலக இருபது20 கிரிக்கெட் தொடரில் சம்பியனான இலங்கை அணியினர் நேற்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்பினர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை அணியினர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன்  கொழும்பு சுதந்திர சதுக்கம் வரை திறந்த பஸ்ஸில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இலட்சக்கணக்கான மக்கள் வீதியின் இருமருங்கிலும் திரண்டிருந்து இலங்கை அணியினரை வரவேற்றனர்.

5096_IMG_0264_zps66e07453.jpg

 

5096_IMG_0316_zps3695ec39.jpg

 

t-20_0_zpse5f48582.jpg

 

5096IMG_0322_zps3d938e08.jpg

 

5096IMG_0308_zpsc064b8bc.jpg

5096IMG_0152_zpsa7bb43ed.jpg

 

5096IMG_0327_zps493959d6.jpg
- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=5096#sthash.s9E9WXwx.dpuf

இம்முறை நாம் சாதித்தோம்' : குமார் சங்கக்கார
2014-04-08 12:00:41

'இந்த விளையாட்டு எங்களுக்கோ அல்லது தனிப்பட்ட ஒரு வீரருக்கோ சொந்தமானது என நான் கருதவில்லை. எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடி முயற்சியை முன்னெடுப்பதே எமது கடமை. அதன் மூலம் நேர்மறையான விளைவுகளுடன் சிறப்புற செய்தோம் என்ற நம்பிக்கையுடன் செல்வதாகும்' என இந்தியாவுக்கு எதிரான உலக இருபது 20 இறுதிய ஆட்டத்தில் நட்சத்திரமாக மின்னிய குமார் சங்கக்கார தெரிவித்தார்.

5087Sanga-_zps7c7f8009.jpg

'இந்த விளையாட்டானது வாய்ப்புகளைக் கொடுக்கும். அவற்றைப் பற்றிப்பிடித்துக்கொள்ளவேண்டும். இதற்கு முன்னர் நான்கு சந்தர்ப்பங்கள் நழுவிப் போயின. இன்று கிடைத்த சந்தர்ப்பத்தை நாங்கள் பற்றிப்பிடித்துக்கொண்டோம். அதற்கு ஆற்றல், சிறிய அதிர்ஷ்டம், திட்டமிடல், நிறைவேற்றுதல் என்பன அவசியம். அத்துடன் உரிய இடம், உரிய நேரம், உரிய போட்டி என்பனவும் அமையவேண்டும்' எனவும் அவர் கூறினார்.


பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் பிரியாவிடை பெறும்போது கிரிக்கெட் போட்டி முடிவுகள் அவர்களுக்கு சாதமாக அமைவது மிகவும் அபூர்வம். ஆனால் ஞாயிறன்று இரவு இலங்கையின் இரண்டு உன்னதம்வாய்ந்த கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்காரவுக்கும் மஹேல ஜயவர்தனவுக்கும் இருபது 20 உலச சம்பியன் பட்டத்துடன் பிரியாவிடை வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

தனது துடுப்பாட்ட ஆற்றலையிட்டும் இலங்கையின் மகத்தான வெற்றியையிட்டும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக குமார் சங்க்கார காணப்பட்டார்.


'இது மிக மிக மகத்தானது. அதனை என்னால் விளக்க முடியவில்லை. உலக சம்பியன் பட்டம் ஒன்றை வென்ற அணியில் நான் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.. இதற்கு முன்னர் நான்கு தடவைகள் நான்கு தடவைகள் நாங்கள் ஏமாற்றம் அடைந்தோம். இம்முறை சாதித்துவிட்டோம். இப்போது எமது உள்ளுணர்வை துல்லியமாக விபரிக்க முடியாது. இதன் மூலம் தாழ்மையை உணர்கின்றோம்' என மிர்பூர் விளையாட்ரங்க ஊடக மாநாட்டு மண்டபத்தில் செய்தியாளர்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டு சங்கங்கார குறிப்பிட்டார்.

'எமது அணி எங்களுக்காக (மஹேல, குமார்) வெற்றிபெறுதற்காக எடுத்த முயற்சி மகத்தானது. ஆனால் 20 மில்லியன் மக்கள் வெற்றிக்காக காத்திருந்தனர். அது மஹேலவுக்காகவும் எனக்காகவும் அல்ல. முழு அணிக்கும் எம்மோடு இருக்கும், எமக்கு ஆதரவளிக்கும் சகலருக்கமான வெற்றி. இது எமது கடைசிப் போட்டி என்பதால் எல்லோரும் எங்களைக் கூர்ந்து கவனிக்கின்றனர். ஆனால் இறுதியில்; ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்' என்றார் சங்கக்கார.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=5087#sthash.p4IdiKTM.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.