Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலத்தால் அழியா கனவுக் கலைஞர்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதா காலட்சேபம், பாவைக் கூத்து, வில்லுப் பாட்டு என உழன்ற தமிழர்களுக்கு 1950க்குபின் பிறந்த அனைவருக்கும் நாடக, திரைப்பட கதாநாயகர்களே முதலில் தங்கள் கனவுகளின் பிரதியாக பரிணமித்தார்களெனலாம். அவ்வாறு அன்றும்,இன்றும் தமிழ்ப் படங்களில் நம் மனம் கவர்ந்த அனைத்து கலைஞர்களை சற்றே நினைவு கூறும் விதமாக, அவர்களைப் பற்றி தெரிந்த விடயங்களை இங்கே பகிரலாம் என எண்ணுகிறேன்.

 

யாழ் உறவுகளும், ஈழக் கலைஞர்கள் பற்றியும் பதிந்தால் சுவாரசியமாக இருக்கும்.
 

டிஸ்கி :  யாழில் கிழடுகள்(???) அட்டகாசம் அதிகமாபோச்சுது என எண்ணும் இக்கால இளசுகள் இத்திரியை தவிர்ப்பது நலம். :)

 

 

 

முதலில் என் மனம் கவர்ந்த கலைஞர்...

 

 

photo-6458.jpg?_r=1376465505

எஸ்.வி.ரங்காராவ் B.Sc.

 

தன் வாழ்நாளில் முதுமையை பார்த்தறியாத ஒருவர் திரைப் படங்களில் இருபத்தைந்து வருடங்கள் (1950,1960,1970 களின் முன்பகுதியில்) நிறைய வயதான,முதிய கதாபாத்திரங்கள் செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி.ரங்காராவ் அறுபது வயதை தன் வாழ்நாளில் கண்டதில்லை. 1974ல் அவர் மறைந்தபோது அவரின் வயது 56 தான்.

தெலுங்கு,தமிழ் படங்களில் நடித்தவர். தெலுங்கு மக்கள் இவருக்கு 'விஸ்வநாத சக்ரவர்த்தி ' என பட்டம் அளித்தார்கள். அந்தப் பட்டம், தமிழ் பட டைட்டிலில் யாரும் பார்த்திருக்க முடியாது.

அந்தக்காலத்தில் பட்டதாரி நடிகர் எஸ்.வி.ரங்காராவ் B.Sc.

நாடகமேடையில், ஆங்கில நாடகங்களில் நடித்த Shakespearean Actor!

நாடகங்களில் நடித்திருந்தாலும், திரைப்படங்களில் புராண கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட நாடக செயற்கைத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்து அளப்பரிய சாதனை செய்தவர்.

ஒரு தெலுங்கு நடிகர், தமிழ் படங்களில் செய்த சாதனை அசாதாரணமானது.

Scene Stealerஆஜானுபாகுவான ரங்காராவ் ஒரு காட்சியில் இருந்தால், இவர் தான் Scene Stealer! எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்.

தேவதாஸ், மிஸ்ஸியம்மாவில் ஆரம்பித்து, 'நானும் ஒரு பெண் 'மாமனார் - மருமகள் உறவு. விஜயகுமாரியின் மாமனாராகவும்,'கற்பகம் ' ஜெமினி கணேஷின் மாமனாராகவும் நடித்து மெருகூட்டினார்.

'அப்பா' ரோல் திரைப்படங்களில் ரொம்ப மலிவானது. அதை மிகவும் உயர்த்திக் காட்டியவர் எஸ்.வி.ரங்காராவ்.

 

Padikkatha+Methai_Engiruntho+Vanthan_tam

 

படிக்காத மேதையில் வளர்ப்பு மகன் சிவாஜிக்கும், தந்தை ரங்காராவிற்குமிடையே நடக்கும் உணர்ச்சிமிகு கோபங்களும், முறுக்கல்களும் இன்றும் தமிழ் ரசிகர்கள் மறக்க முடியாதவை.

 

சபாஷ் மீனாவில் “கரெக்ட்” அப்பாத்துரை”யாக, வாழையடி வாழையில் முத்துராமனின் தகப்பனாராக,’கண் கண்ட தெய்வம் ‘ படத்தில் சுப்பையாவின் ‘அண்ணன் ‘ கதாபாத்திரத்தில் விவசாயியாக!

 

அவர் செய்த புராண பாத்திரங்கள் தான் எத்தனை எத்தனை?.

 

mayabazar_024.jpg

 

வில்லனாக 'நம் நாடு ' படத்தில் 'பக்த பிரகலாதா'வில், 'மாயா பஜாரில் ' கடோத்கஜனாக "கல்யாண சமையல் சாதம் !"

 

2007020901390104.jpg     2003081501500302.jpg

 

e3384acc7-1.jpg   mqdefault.jpg

 

எங்க வீட்டு பிள்ளை,படங்களில் சரோஜாதேவியின் தந்தையாக, சர்வர் சுந்தரம்  படத்தில் இயக்குநராக அவருடைய இயல்பான நகைச்சுவையை வாரி வழங்கியிருந்தார்.

தெலுங்கில் இவர் இயக்கிய இரண்டு படங்கள் நந்தி விருது பெற்றிருக்கின்றன. இயக்குனரும் கூட!

இந்தோனேசியாவில் ஒரு திரைப்படவிழாவில் இவர் 'நர்த்தன சாலா' என்ற படத்தில் கீசகனாக நடித்ததற்காக ஒரு விருது வாங்கியிருக்கிறார்.

மற்றபடி இந்திய அரசாங்க கெளரவம் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை.

உலகத்தின் மிகச்சிறந்த அபூர்வ நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்காராவ்.

இன்று அவர் இறந்து நாற்பது ஆண்டுகள் ஆனபின்னும் அவர் நடிப்பு சாசுவத்தன்மையுடன் தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் மிக உயர்ந்து நிற்கிறது.

இன்று டி.வி சேனல்களில் எவ்வளவோ நடிகர்களை பலரும் மிமிக்ரி செய்வதைப் பார்க்கமுடியும். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒருவர் கூட இதுவரை மிகப் பெரிய நடிகர் எஸ்.வி.ரங்காராவை இமிடேட் செய்ததே கிடையாது. ரங்காராவின் தனித்துவத்திற்கு இது கூட உதாரணம். அவ்வளவு நுட்பமானது அவரது நடிப்பின் பரிமாணங்கள்!

 

முதியவராக நடித்தார். ஆனாலும் இவரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து Brand செய்துவிட முடியாது.

 

 

Thanks:http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_19.html

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/tDU7NB440bs

எங்கிருந்தோ வந்தான்.. இடைச்சாதி நான் என்றான்...

 

 

 

http://youtu.be/gaXGGYusLfM

முத்துக்கு முத்தாக...சொத்துக்கு சொத்தாக...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/pUKwyUlNorg

கல்யாண சமையல் சாதம்.. காய்கறிகளும் பிரமாதம்..

அந்த கெளரவ பிரசாதம் இதுவே எனக்கு போதும்...

 

 

http://youtu.be/4rTxgA0SH_U

"நானும் ஒரு பெண்" படத்தில் உணர்ச்சிமிகு காட்சி

 

 

http://youtu.be/oTn8QQXfv3E

"கற்பகம்" படத்தில் ஜெமினிகணேசனுடன் கோவிக்கும் சுவாரசியமான காட்சி

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இவரைப் பிடிக்கும்.நன்றி அண்ணா பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ரங்கராவ் அவர்களை ஒரு நடிகராக நான் பார்த்ததில்லை!. எனது அப்பா, சித்தப்பா, பெரியப்பா, மாமா இவர்களைப் பார்க்கும்போது ஏற்படும் சொந்த பந்த உணர்வே திரு. ரங்கராவ் அவர்களைப் பார்க்கும்போதும் ஏற்படும்!. அது இன்றுவரை மாறவில்லை. :rolleyes:

அந்தநாள் ஞாபகம் வந்ததே! ராசவன்னியர் தந்தாரே!! நன்றிகள்!!!. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி, சுமே & பாஞ்ச்.

 

http://youtu.be/cxOnE6gf1u4

"சர்வர் சுந்தரம்" படத்தில் நாகேசுடன் இயக்குராக, நகைச்சுவைக் காட்சி

 

 

http://youtu.be/cOQuAeTNy-E

"வாழையடி வாழை" படத்தில்

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.வி.ரங்காராவ், 1918ம் வருடம் ஆந்திர மாநிலம் கிருஸ்ணா மாவட்டத்திலுள்ள சிற்றூரில் கோட்டீஸ்வர ராவ், சமரலக்ஷிமி தம்பதியருக்கு பிறந்தார். பட்டப்படிபை சென்னையில் முடித்தவுடன் சினிமா வாய்ப்புத்தேடி சேலம் சென்றார். வாய்ப்புகள் சரிவர அமையாததால் வடமாநிலம் ஜாம்செட்பூரிலுள்ள டாட்டா நிறுவனத்தில் கணக்காளராக சேர்ந்தார். 1947ல் மணவாழ்க்கையில் அடியெடுத்து வைத்தவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆணும் பிறந்தனர்.இடைவிடா முயற்சிகளுக்குப் பின்
முதன் முதலில் "பல்லூற்றி பிள்ளா" என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்தார்.

பின்னர் நடித்த "பாதாள பைரவி" படமே அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் ஏறுமுகமாக பல திரைப்படங்களில் வெற்றிகரமாக நடித்து திரையுலகில் தனக்கென அழியா இடம் பெற்றார். 

 

1974ல் தனது 56வது வயதில் மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

 

39.jpg

 

எஸ்.வி. ரங்காராவ் குடும்பம்

 

 

41.jpg

 

லால் பகதூர் சாஸ்திரியிடம் விருது வாங்கும்போது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கலைஞர் யார்? :unsure:

 

 

220px-TS_Baliah.jpg

 

 

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியருகே "சுண்டங்கோட்டை" என்ற சிற்றூரில் 1914ல் பிறந்து தமிழ் திரையுலகில் அழியா இடம்பெற்றவர்.



 

  • கருத்துக்கள உறவுகள்

 

http://youtu.be/gaXGGYusLfM

முத்துக்கு முத்தாக...சொத்துக்கு சொத்தாக...

 

 

 

எனது குடும்ப  பாடலிது

எனது தகப்பனார் ஒரு பாடகராகையால் அடிக்கடி என்னை   மடியில் வைத்து பாடும் பாடலிது

அண்ணர் என்னை  படிப்பிக்க

நான் வளர்ந்து கொண்டிருந்ததாலும்

கடைக்குட்டி தம்பி  என்பதாலும்

அண்ணன் தம்பி பாசம் அற்புதமாக  பொருந்தும் பாடல்

தகப்பனார் படிக்கும் போது அவர் கண்கள் கசிவதைக்கண்டிருக்கின்றேன்

 

அந்த பாடலில் உள்ளது போலவே

ராசா போல் எம் அண்ணரைப்பார்த்தோம்

பார்க்கின்றோம்

 

பழையவற்றைக்கிளறி

அப்பரை  நினைத்து கண் கலங்க  வைத்துவிட்டீர்கள்

 

அந்தவகையில் எம்மோடு ஒட்டிப்போன உறவு இந்த நடிகர்

தொடருங்கள்.....

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது குடும்ப  பாடலிது

எனது தகப்பனார் ஒரு பாடகராகையால் அடிக்கடி என்னை   மடியில் வைத்து பாடும் பாடலிது

அண்ணர் என்னை  படிப்பிக்க

நான் வளர்ந்து கொண்டிருந்ததாலும்

கடைக்குட்டி தம்பி  என்பதாலும்

அண்ணன் தம்பி பாசம் அற்புதமாக  பொருந்தும் பாடல்

தகப்பனார் படிக்கும் போது அவர் கண்கள் கசிவதைக்கண்டிருக்கின்றேன்

 

அந்த பாடலில் உள்ளது போலவே

ராசா போல் எம் அண்ணரைப்பார்த்தோம்

பார்க்கின்றோம்

 

பழையவற்றைக்கிளறி

அப்பரை  நினைத்து கண் கலங்க  வைத்துவிட்டீர்கள்

 

அந்தவகையில் எம்மோடு ஒட்டிப்போன உறவு இந்த நடிகர்

 

நவீன கால வாழக்கையில் பல்வேறு ஈர்ப்புகளினால் மனங்கள் திசைமாறி, கூட்டுக் குடும்பம் என்ற கட்டுக்கோப்பே சிதைந்த நிலையில், 'இப்படியும் வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்' என இம்மாதிரி திரைப்படங்களை பார்த்துதான் இக்கால இளசுகள் அறிந்துகொள்ள முடியும்.

 

இன்றும் கிராமங்களில் அவை தொடருமானால், அக்குடும்ப உறுப்பினர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்.

 

எந்தளவிற்கு வரவேற்பு இருக்குமென தயக்கத்துடனேயே இத்திரியை ஆரம்பித்தேன்.

 

கருத்திற்கு நன்றி விசு!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

220px-T_S._Balaiah.jpg

 

டி. எஸ்.பாலையா அல்லது தமிழ் திரையுலகில் பாலண்ணன் என்றழைக்கப்படும் இவர், தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர்.

 

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். 1936ம் ஆண்டு வெளியான "சதிலீலாவதி" இவரது முதல் படமாகும். துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் நடித்து முத்திரை பதித்தவர், பிற்காலங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

 

16404.jpg

 

1937-ல் வெளிவந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த 'அம்பிகாபதி' படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே பாகவதருக்கும், பாலையாவிற்கும் இடையே ஒரு கத்திச் சண்டைக் காட்சியும் உண்டு. இவருடைய கதாபாத்திரம் தான் சிவாஜிகணேசன் நடித்து வெளியான 'அம்பிகாபதி'யில் தங்கவேலு நகைச்சுவையாக நடித்திருப்பார் என்பது கூடுதல் தகவல்.
 
பி.யு.சின்னப்பா அவர்களின் 'மனோன்மணி' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். மேலும் எம்.ஜி.ஆர் முதலில் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி" என்ற படத்திலும் வில்லனாக நடித்தார். இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கும் பாலையாவிற்கும் கத்திசண்டைக் காட்சியும் இருக்கிறது.
 
 
2zdu0ic.jpg   2pq84lf.jpg
                  
"நீதிபதி" படத்தில்               
 
  s13wcx.jpg   9sz1xk.jpg
         
            "பாமா விஜயம்" படத்தில்                       "தில்லானா மோகனாம்பாள்" படத்தில்
 
 
  10o16za.jpg   317acnl.jpg
 
"காதலிக்க நேரமில்லை" படத்தில்
 
 
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான 'சித்ரா' மற்றும் 'வெறும் பேச்சல்ல' (இப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடித்தவர் பத்மினி)போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி திரைப்படத்தில் கே.ஆர்.ராமசாமியின் நண்பனாக வந்து "கத்தியை தீட்டாதே! உன் புத்தியைத் தீட்டு!" என்று வசனம் பேசுவது பாலையா தான். மேலும் அண்ணாவின் "ஓர் இரவு" படத்திலும் வில்லனாக நடித்தார்.
 
எம்.ஜி.ஆர் நடித்து தேவரின் தயாரிப்பில் வெளிவந்த 'தாய்க்கு பின் தாரம்' படத்தைத் தொடர்ந்து புதுமைப்பித்தன், பாக்தாத் திருடன், படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தார். பி.எஸ்.வீரப்பா, நம்பியார் போல அலட்டிக்கொள்ளாமல் நடிப்பார். மதுரைவீரன் படத்தில் நகைச்சுவை கலந்த வில்லன் வேடத்தில் நடித்தார்.
 
அதில் வரும் "படார் என குதித்தேன்! படபட என நீந்தினேன்! என்னை நெருங்கியது ஒரு சுழல், உபூ என ஊதினேன்! தூக்கினேன் பொம்மியை, சேர்த்தேன் கரையில்!!" என்று பாலையா பேசும் வீரவசனத்தை பார்த்தவர் மறக்கமாட்டார்கள். சிவாஜிகணேசனுடன் பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பாலும்பழமும், தூக்குத் தூக்கி்,காத்தவராயன் போன்ற பல படங்களில் நடித்தார். "தில்லானா மோகனம்பாள்" படத்தில் தவில் வித்துவானாக வெகுசிறப்பாக நடித்திருப்பார்.
 
இதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இவற்றில் பெரும்பாலானவை நகைச்சுவை கலந்தவை. ஸ்ரீதர் தயாரித்த முழு நீள நகைச்சுவை படமான "காதலிக்க நேரமில்லை" பாலையாவின் சிறந்த நகைச்சுவை நடிப்புக்கு எடுத்துக்காட்டு. இப்படத்தில், ஒரு திகில் கதையை நாகேஷ் கூற, அப்போது பாலையா காட்டும் முகபாவம் எவரும் மறக்க முடியாத ஒன்று.
 
2dr9o2o.jpg
 

"திருவிளையாடல்" படத்தில் வடநாட்டு ஹேமநாத பாகவதராக கம்பீரமாக வந்து, "ஒரு நாள் போதுமா...!" என்று பாட ஆரம்பித்து,

 

"காணடா...என் பாட்டு தேனடா...இசைதெய்வம் நானடா..." என்று முடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

 

பாலச்சந்தர் கைவண்ணத்தில் இவர் நடித்த "பாமா விஜயம்" இன்றும் விரும்பி ரசிக்கக் கூடிய குடும்பப் படம்

 
பாகவதர், சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன் ஆகிய சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்த பாலையா, 40 ஆண்டுகளில் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார்.

 

Thanks: http://kuttipisasu.blogspot.in/2007/12/blog-post_27.html

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான

குணசித்திர

நகைச்சுவை  நடிகர்

இவரது இந்த நடிப்பை மறக்கமுடியுமா???

சிவாசிக்கே தண்ணி  காட்டும் நடிப்பு................

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/kbNvYE54KPA

வரவு எட்டணா...செலவு பத்தணா...

 

 

http://youtu.be/ppnzHXqT5Sg

ஒரு நாள் போதுமா...இன்றொரு நாள் போதுமா?

 

 

http://youtu.be/wqE6Vw1Snrw

"ம்ம்...முன்னு கும்மிருட்டு... " 'காதலிக்க நேரமில்லை' நகைச்சுவை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

s-17-3.jpg

 

குடும்பம்

:

டி.எஸ்.பாலையாவின் குடும்பம் மிகவும் பெரியது. இவருக்கு 3 மனைவிகள்.

 

முதல் மனைவி பெயர் பத்மாவதி. இவருக்கு சாய்பாபா, அரவிந்தன், சோனையா, ரகுராம், கணேஷ் ஆகிய 5 மகன்கள். துர்க்கா, தேவி என்ற 2 மகள்கள்.

 

2-வது மனைவி பெயர் லீலா (இவர் டி.எஸ்.பாலையா மரணம் அடைவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.) அம்புஜம், பொன்னி, சிவகாமி, ரமா என்ற 4 மகள்கள். நாகராஜன், முனிபாலன் என்ற 2 மகன்கள்.

 

3-வது மனைவி பெயர் நவநீதம். இவர் நடிகை சந்திரகாந்தாவின் அக்காள். இவருக்கு மனோகரி என்ற மகள்.

 

61 வயதில் மரணம்:

 

சென்னை தி.நகரில் வசித்து வந்த டி.எஸ்.பாலையாவுக்கு, 61 வயது நிரம்பியபோது உடல்நிலை பாதிக்கப்பட்டது. நெஞ்சுவலி, மாரடைப்பு போன்றவற்றால் அவதிப்பட்டார். 20-12-1972 அன்று டி.எஸ்.பாலையாவுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை வீடு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். என்றபோதிலும் மறுநாள் (21-ந்தேதி) அதிகாலை அவர் மரணம் அடைந்தார்.

 

மகனும் நடிகர்:

 

அவருக்கு பிறகு அவரது மகன் ஜுனியர் பாலையா என்ற பெயரில் சினிமா படங்களில் நடித்து வருகிறார். இவரது குரலும் பாலையா குரலாக எதிரொலிக்கிறது.

 

Thanks: Malaimalar.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

 

Thiruvilayadal - T. S. Balaiah withdraws his challenge

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

24cp_oruiravu_jpg_273763f.jpg

 

"ஓர் இரவு" படத்தில் கே.ஆர்.ராமசாமி, நாகேஸ்வர ராவுடன் டி.எஸ்.பாலையா

 

 

154dls3.jpg

 

"என்னதான் முடிவு?" படத்தில் கே.கண்ணனுடன் டி.எஸ்.பாலையா

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கலைஞரான இவர் யாரென தெரிகிறதா? பெரும்பாலும் சிவாஜி கணேசன் படங்களில் வருபவர்..

 

கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் 29.11.1913ம் ஆண்டு பிறந்து, டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் குழுவில் இணைந்து தன் கலைப்பயணத்தை ஆரம்பித்தவர்..

 

dpv0io.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கலைஞரான இவர் யாரென தெரிகிறதா? பெரும்பாலும் சிவாஜி கணேசன் படங்களில் வருபவர்..

 

கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் 29.11.1913ம் ஆண்டு பிறந்து, டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் குழுவில் இணைந்து தன் கலைப்பயணத்தை ஆரம்பித்தவர்..

 

dpv0io.jpg

டி,கே.பகவதி என்று நினைக்கிறேன்!

 

சரி தானா, வன்னியன் சார்? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டி,கே.பகவதி என்று நினைக்கிறேன்!

 

சரி தானா, வன்னியன் சார்? :D

தங்கள் முயற்சிக்கு நன்றி புங்கை. ஆனால் விடை தான் தவறு. :)

 

இக்கலைஞர் பெயர் எஸ்.வி.சகஸ்ரநாமம்.

 

தமிழ் நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகரும் ஆவார். தமிழ் நாடகக் கலைக்காக அரும்பணி ஆற்றியவர். தமது சிறப்பானப் பணிக்காக இந்திய அரசின் 'சங்கீத நாடக அகாதமி' விருது பெற்றவர். 200 க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

 

இவற்றில், மேனகா, பராசக்தி, குலதெய்வம், ஆனந்த ஜோதி, நல்ல தம்பி, போலீஸ்காரன் மகள், படித்தால் மட்டும் போதுமா, சிங்காரி, மர்மயோகி, பூம்பாவை, மணமகள், கண்கள், உரிமைக்குரல், நாலுவேலி நிலம், அல்லி பெற்ற பிள்ளை என்பன குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்

 

 

images.jpgSahasranamam.jpg

 

 

விரிவான குறிப்பை, தொகுத்து சற்று நேரம் கழித்து வழங்குகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இயல் இசை நாடகம் என அத்தனையும் போதிப்பதாக திரையுலகம் விளங்கி நிற்கிறது. அதனால் எழும் பாதிப்புகளையும் பலர் உணர்த்த முயலும்போதும், புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்கள் பல, தங்கள் குழந்தைகள் தமிழ்ப் படங்கள் பார்த்தே தமிழ் பேசக் கற்றுக்கொண்டதாகவும் பண்பாடுகளைத் தெரிந்துகொண்டதாகவும் பெருமைப்படுவதையும் காண முடிகிறது. பெரும் கடல் போலவே திரையுலகம் உலகைச் சூழ்ந்துள்ளது. அதில் கண்ணுக்குப் புலப்படும் திமிங்கிலங்கள், சுறாக்கள், மீன்களைக் கண்டு வியக்கும் வேளையில். ஆழ்கடலில் இருக்கும் முத்துக்களையும் சுழியோடி எடுத்துவந்து அதன் அழகிலும் ஒளியிலும் மூழ்கடித்து மகிழவைக்கும் ராசவன்னியருக்கு ஒரு பாராட்டு. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பாலைய்யாவின் இள வயதுப் படம் ஒன்றும் நான் பார்க்கவில்லை. இவர் நகைச்சுவைப் படங்களில் மாத்திரமே நடித்திருக்கிறார் என்று எண்ணியிருந்தேன்.

 

நாகேஷ் அவர்களின் நகைச் சுவையும் எப்போதும் பார்த்து இரசிக்கக் கூடியது. தொடருங்கள் அண்ணா .

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று இயல் இசை நாடகம் என அத்தனையும் போதிப்பதாக திரையுலகம் விளங்கி நிற்கிறது. அதனால் எழும் பாதிப்புகளையும் பலர் உணர்த்த முயலும்போதும், புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்கள் பல, தங்கள் குழந்தைகள் தமிழ்ப் படங்கள் பார்த்தே தமிழ் பேசக் கற்றுக்கொண்டதாகவும் பண்பாடுகளைத் தெரிந்துகொண்டதாகவும் பெருமைப்படுவதையும் காண முடிகிறது. பெரும் கடல் போலவே திரையுலகம் உலகைச் சூழ்ந்துள்ளது. அதில் கண்ணுக்குப் புலப்படும் திமிங்கிலங்கள், சுறாக்கள், மீன்களைக் கண்டு வியக்கும் வேளையில். ஆழ்கடலில் இருக்கும் முத்துக்களையும் சுழியோடி எடுத்துவந்து அதன் அழகிலும் ஒளியிலும் மூழ்கடித்து மகிழவைக்கும் ராசவன்னியருக்கு ஒரு பாராட்டு. :icon_idea:

 

பாலைய்யாவின் இள வயதுப் படம் ஒன்றும் நான் பார்க்கவில்லை. இவர் நகைச்சுவைப் படங்களில் மாத்திரமே நடித்திருக்கிறார் என்று எண்ணியிருந்தேன்.

 

நாகேஷ் அவர்களின் நகைச் சுவையும் எப்போதும் பார்த்து இரசிக்கக் கூடியது. தொடருங்கள் அண்ணா .

 

கருத்திற்கும், ஊக்கத்திற்கும் நன்றி பாஞ்ச் மற்றும் சுமே.

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

SVS1.jpg

எஸ்.வி.சகஸ்ரநாமம்.

 

கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் 29.11.1913ஆம் ஆண்டு இரண்டு தமையர்களோடும் இரண்டு தமக்கைகளோடும் ஒரு இளைய தங்கையோடும் குடும்பத்தில் ஐந்தாவதாய் பிறந்தவர் சகஸ்ரநாமம்.

டி.கே.எஸ். சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்ட, ‘மதுரை ஸ்ரீ பால ஷண்முகானந்தா சபா’வில், ‘அபிமன்யூ சுந்தரி’ நாடகத்தில், டி.கே. ஷண்முகம் அற்புதமாக நடிப்பதையும் கைத்தட்டல் பெறுவதையும் கண்டு, தானும் அது போன்று நாடகத்தில் நடிக்க வேண்டுமென, தீராத மோகம் கொண்டார் சகஸ்ரநாமம்.

பொள்ளாச்சியில் பெரியப்பாவின் வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த பதிமூன்றே வயதான அவர் தன் ஆங்கிலப் புத்தகங்களை எடைக்குப் போட்டுவிட்டு கோவைக்கு வந்திருக்கிற டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடகக்குழுவில் சேர முடி வெடுத்து ரயிலேறினார்.

நாடகக்குழுவின் மேலாளர் காமேஸ்வர அய்யர், “போ, போய் உன் பெற்றோரை கூட்டிவா, அல்லது உன் அப்பாவிடம் இருந்து கடிதம் வாங்கிவா” என்கிறார்; நாடகத்தின் மீதிருந்த அதீத ஆசையால் அப்பாவைப் போலவே கடிதம் எழுதி வந்து கொடுக்கிறார் சகஸ்ரநாமம். அனுப்புநர் முகவரியில் இருந்த முகவரியைப் பார்த்து, அவர் அப்பாவுக்கு அஞ்சல் அட்டைப் போடப்பட்ட, அவர் அங்கு வந்து சேர, அவரைக்கண்டு பயந்து, அருகில் உள்ள படிக்கட்டு உள்ள ஒரு கிணற்றில் இறங்கி ஒளிந்து கொண்டார் சகஸ்ரநாமம்.

அந்தக் காலத்தில் நாடகத்தில் நடிப்பது மிகவும் சிரமமான காரியம். ஒரு நாடகக்குழுவில் இருக்கிற ஒருவனுக்குக் குறைந்தது மூன்று கலைகளாவது தெரிந்திருக்க வேண்டும். உயர்வு தாழ்வு பாராது, எல்லா வேலைகளையும் முகம் சுளிக்காது செய்ய வேண்டும். சர்க்கஸ் டெண்ட் ஊருக்கு ஊர் மாறுவதுபோல, எல்லாவற்றையும் மூட்டை மூட்டையாய்க் கட்டிக்கொண்டு ஊருக்கு ஊர் பாணர்கள் போலப் பயணப்பட வேண்டும். இவற்றையெல்லாம் மீறி நிரந்தர வருமானமோ சமூக மதிப்போ கிடைக்காது. இந்த விஷயங்களை எல்லாம் உணர்ந்திருந்த அவரது தந்தை கடைசியில் “என்ன படிப்பா, நடிப்பா?” எனக் கேட்க, “நடிப்பே” என்று சகஸ்ரநாமம் சொல்ல, “உன் தலையெழுத்துப்படியே நடக்கட்டும்” என ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டுப் போனார்.

 டி.கே. சங்கரன், டி.கே. முத்துசாமி, டி.கே. ஷண்முகம், டி.கே. பகவதி என்கிற நால்வரும் இவரைக் குகனோடு ஐவரானோம் என்பதுபோல் அணைத்துக் கொண்டனர். நாடகக்கலையின் பல்வேறு நுணுக்கங்களை அவர் அங்கேதான் கற்றார். வீரபத்திரன் என்கிற பழைய நாடக நடிகரிடம் அடிவாங்கிப் பாடல் கற்றார். தன் நாடகப் பயிற்சியின் குருநாதர் என்று அவர் குறிப்பிடுவது, நடிகர் எம்.கே. ராதாவின் அப்பாவான எம். கந்தசாமி முதலியாரைத்தான். அவரிடம் பயின்ற மூன்றே மாதங்களில் ‘அபிமன்யூ சுந்தரி’யில் சூரிய பகவானாக வேஷங்கட்டினார். நடிப்பதில் மட்டுமன்றி சில கலைகளில் விற்பன்னராகவும் சில கலைகளில் பரிச்சயமுள்ளவராகவும் இருந்தார் எஸ்.வி. எஸ்.

சங்கீத மேதை டி.ஏ. சம்மந்த மூர்த்தி ஆச்சாரியாரிடம் ஆர்மோனியம் இசை கற்றார்.. இலக்கிய வாசிப்பு அவருக்கு இயல்பில் கூடி வந்தது. மேடை அமைப்பில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். அதனால்தான், பின்னாளில் சென்னையில் கட்டப்பட்ட ‘ராஜா சர் அண்ணாமலை செட்டியார் மன்றம்’, ‘ராணி சீதை ஹால்’, ‘கலைவாணர் அரங்கம்’, ‘சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கம்’ ஆகியவை அவரது ஆலோசனையோடும் கட்டப்பட்டன.. ஆடை அணிகலன் உருவாக்கத்தில் பரிச்சயம் கொண்டவராக இருந்தார். வி.கே. ஆசாரி என்பவரிடம் பளுதூக்கும் பயிற்சி பெற்று, போட்டிகளில் பங்கெடுத்தார். கொல்லத்தில் குஸ்தி படித்தார்.. வாலிபால் போட்டியில் பங்கெடுத்தார்.. பேட்மின்டன் தெரியும். கோவை அப்பாவு பிள்ளையிடம் கார் மெக்கானிக் வேலை கற்றார்.. கோவை சங்கமேஸ்வரன் செட்டியார் கம்பெனியில் சோப் சப்ளையராக வேலை பார்த்தார்.. சேலம் பஸ் கம்பெனி ஒன்றில் சிலகாலம் கண்டக்டராக வேலை பார்த்தார்.. கார் ஓட்டப் பயின்று, முறையாக லைசென்ஸ் எடுத்தார்.. அவரது சித்தப்பாவிடமே டிரைவர் வேலை பார்த்தார்.. சின்ன அண்ணனின் மாமனாரோடுச் சேர்ந்து, காப்பிக்கொட்டை மற்றும் பலசரக்கு வியாபாரம் செய்தார்.. பட்டியல் இன்னும் நீள்கிறது.

 

நாடகத்தால் கலையால் வாழ்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் நாடகத்திற்காகவே வாழ்ந்த சிலருள் சகஸ்ரநாமமும் ஒருவர்.

 

பாரதியின் பாடல்களில் பெரும் ஈர்ப்பு கொண்ட அவர் பாரதியின் வரியை இப்படி மாற்றிச் சொல்லிக் கொண்டார். “எனக்குத் தொழில் நாடகம். நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்.” இதைச் சொல்லிவிட்டு அடுத்து சொல்கிறார்: “நானும் மூல நட்சத்திரம். அவரும் மூல நட்சத்திரம். அவரும் கார்த்திகை மாசம் பொறந்தார். நானும் கார்த்திகை மாசம் பொறந்தேன். அவரும் என்னைப் போலத் தாயை இழந்தவர்”.

அதே பாரதியைப் போல் படைப்புக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்தவர் எஸ்.வி.எஸ். என்பதற்குச் சில உதாரணங்களைச் சொல்ல முடியும்.

1959ல் ‘நாலு வேலி நிலம்’ படம் எடுத்து நஷ்டம் அடைந்தார் எஸ்.வி.எஸ். சக நடிகர்களின் மேல் பிரியத்தோடு, அவர்களது எல்லா வசனங்களையும் மனப்பாடமாகப் பிராம்ட் செய்து உதவும் சகஸ்ரநாமம், சமயங்களில் தன் வசனத்தை தான் மறந்து நிற்கும் சோகம் போல, வியாபாரச் சூட்சுமம் தெரியாமல் படம் எடுத்து, அதனால் ஏற்பட்ட கடனுக்காக தன் வீட்டை அடமானம் வைத்தார். சில கடன்களை அடைத்தார். முழுவதும் அடைக்க முடியவில்லை. கடைசியில் கடனுக்காக வீட்டை ஏலம் விட தண்டோராப் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவரோ மாடியில் நாடக ஒத்திகையில் ஈடுபட்டுள்ளார். தண்டோராக்காரன் தாண்டவராயன் தெரு வீட்டில் நோட்டீஸ் ஒட்டி விட்டுப் போனான்.. பின்பு சிலோனில் இருந்து கொஞ்சம் பணம் வருகிறது. பணம் வந்ததும் கோமல் சாமிநாதனையும் நடிகர் சாமிக்கண்ணுவையும் அழைத்துக்கொண்டு, காரைக்குடி கண்டவராயன்பட்டிக்குச் சென்றார். அங்கு தனக்கு பணம் தந்த செட்டியாரிடம் வட்டி உள்பட முழுப்பணத்தையும் திரும்பக் கொடுத்தார்.. செட்டியார் நெகிழ்ந்து “சினிமாவில் நான் யார் யாருக்கோ பணம் தந்தேன். பல பேர் ஏமாத்தியிருக்காங்க. ஆனால் இந்த நிலையிலும் நீங்கள் இப்படி நடந்து கொள்வது என்ன சொல்றதுன்னு தெரியல” என்று சொன்னார்.

 

அடுத்து பண்டரிபாய்க்கும், மைனாவதிக்கும் உள்ள பாக்கிக்காக அவர்களது வீட்டுக்குச் சென்றார். அவர்கள் “நீங்க எங்களுக்கு எவ்வளவோ செஞ்சுருக்கிங்க. வேண்டாம்” என்று மறுத்தனர். “மறுப்பது உங்க பெருந்தன்மையம்மா. ஆனா, ‘நாலு வேலி நிலம்’ கதையே சாகும் போதும் யாருக்கும் கடன் வைக்கக் கூடாதுங்கிறதுதானே. பணத்தை நீங்க வாங்கிக்கத்தான் வேணும்” எனக் கட்டாயப்படுத்தித் தந்துவிட்டு வந்தார்.

 

SVS3.jpg        SVS6.jpg

 

அவர் குழுவில் நடித்த நடிகர் நடிகைகள் பட்டியல் வெகு நீண்டது. சிவாஜி, முத்துராமன், குலதெய்வம் ராஜகோபால், வி. கோபாலகிருஷ்ணன், கள்ளப்பார்ட் நட்ராஜன், ஏ.கே. வீராச்சாமி, ஏ.வீரப்பன், கம்பர் ஜெயராமன், பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இயக்குநர் கே. விஜயன், சத்யராஜ், பி.ஆர். துரை, மாஸ்டர் பிரபாகர், எஸ்.என்.லட்சுமி, எம்.என். ராஜம், பண்டரிபாய், மைனாவதி, தேவிகா, ஜி.சகுந்தலா, காந்திமதி என்று பட்டியல் நீள்கிறது.

என்.எஸ்.கே யைப்பற்றி லக்ஷ்மிகாந்தன் அவதூறாக எழுதியபோது, அவரது 'இந்துநேசன்' அலுவலகத்துக்கேச் சென்று, அச்சு இயந்திரங்களை சுத்தியலால் அடித்து உடைத்தார் எஸ்.வி.எஸ். இந்தச் சம்பவத்துக்குப் பின், அவரை சந்தித்த எம்.ஆர். ராதா “வாய்யா, பிராமண ரௌடி” என்று செல்லமாக அழைத்தாராம். என்.எஸ்.கே. சிறையில் இருந்தபோது, வழக்குச் செலவுகளுக்குப் பணம் திரட்ட அவரது நாடகக்குழுவை எடுத்து நடத்தி, அவர் சிறையில் இருந்து திரும்பியதும் அதனை அவரிடமே ஒப்படைத்தார் எஸ்.வி.எஸ்.

தனது 18ம் வயதில் 13 வயதான மாமன் மகள் ஜெயலக்ஷ்மியை மணந்து கௌரி, லலிதா, சாந்தி என்ற மூன்று பெண் குழந்தைகளையும் குமார் என்ற மகனையும் பெற்றவர் சகஸ்ரநாமம்.

 

தன் கடைசி நாடகமான ‘நந்தா விளக்கு’க்கு, வாரத்தின் துவக்கத்தில் எல்லோருக்கும் தொலைபேசியில் பேசி, ஞாயிற்றுக் கிழமை ஒத்திகைக்கு வரச்சொல்லிவிட்டு வெள்ளிக் கிழமையே அவர் மறைந்தார். அதுதான் அவர் நமக்குக் காட்டிய கடைசிக் காட்சி.

 

சகஸ்ரநாமம், 20.03.1988 அன்று காலமானார்.

 

 

நன்றி: http://www.kalachuvadu.com/issue-161/page35.asp.

 

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

parasakthi00063.png

 

 

parashakthi49.jpg

 

 

11.jpg

"பராசக்தி" படத்தில்

 

 

 

http://youtu.be/ysACWW-dJ98

"கண் திறந்தது" படத்தில்

 

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.வி.சகஸ்ரநாமம்.

 

இவரும்  கிட்டத்தட்ட  ரங்கராவ் போல

ஆனால் கொஞ்சம் முரட்டு முகம் இருக்கும்..

அற்புதமான நடிகர்

தொடருங்கள்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.