Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை செல்வதற்கு கடவுள் வழிவிடுவார் என்கிறார் பாப்பரசர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை செல்வதற்கு கடவுள் வழிவிடுவார் என்கிறார் பாப்பரசர்! 

[sunday, 2014-02-09 08:56:55]
pope-francis-090214-150.jpg

தாம் இலங்கைக்கு செல்வதற்கு கடவுள் வழியேற்படுத்துவார் என்று பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். இத்தாலியில் உள்ள இலங்கையர்களை நேற்று சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கைக்கு வருமாறு தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை தாம் வரவேற்பதாகவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் தலைமையிலான குழுவே பாப்பரசரை சந்தித்தது. அங்கு மேலும் கருத்து வெளியிட்ட பாப்பரசர், இந்து சமுத்திரத்தின் முத்து என்று கூறப்படும் இலங்கையில் கடந்த காலங்களில் பாரிய பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டன. இதன் காரணமாக இந்து சமுத்திரத்தின் முத்துவில் இருந்து கண்ணீர் சொரியப்பட்டது.

  

துரதிஸ்டவசமாக உள்நாட்டு போர் காரணமாக பலர் பாதிக்கப்பட்டதுடன் பாரிய சேதங்களும் ஏற்பட்டன. இந்தநிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இலகுவான காரியமல்ல. எதிரிகளை ஒன்றிணைப்பதற்கு நேற்றைய காயங்களின் வடுக்களும் ஒத்துழைப்புமே துணை புரியும்.நம்பிக்கை மூலமே சமாதானத்தையும் அபிவிருத்தியையும் அடைய முடியும் என்றும் பாப்பரசர் குறிப்பிட்டார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103253&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் சமயத் தலைவர்களால் இருக்கும் கொஞ்ச கடவுள் நம்பிக்கையும் அற்றுப்போகிறது. கடவுளின் உந்துதலின்படி இலங்கை வரும் பாப்பரசர் இலங்கையில் நடந்தது பாரிய இனச்சுத்திகரிப்பு எனக் கடவுளின் அருளால் கூறுவாரா? இல்லை இனச்சுத்திகரிப்பை மேற்கொண்ட கரங்களைத் தழுவி ஆசீர்வாதம் தருவாரா? :o

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப சுத்தி  இந்த பதவிக்கு வந்திருப்பாரோ..... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை தேர்ந்தெடுப்பதில்  நேர்மையே கிடையாது .பிறகு என்ன கடவுளின் தூதர் மண்ணாங்கட்டி  தூ 

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை கடவுள் என்ற மாயையால் கட்டி.. தங்களை புனிதர்களாக்கி... அநியாயங்களை பயிரிட்டு அதில் உண்டு வாழ்ந்து இறக்கும் அற்ப பிறவிகள் இவர்கள். இவர்களுக்கும் கடவுளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இவர்கள் சராசரி மனித உணர்வு கூட அற்றவர்கள். ஏன் உண்மையான மனிதர்களா என்ற கேள்வி தான் எழுகிறது. :icon_idea:

 

Edited by nedukkalapoovan

இலங்கை கண்ணீரால் நிறைந்துள்ளது; விரைவில் சமாதானம் நிலவ வேண்டும்: புனித பாப்பரசர்
francisகடந்த காலங்களில் நிகழ்ந்த இழப்புக்களினால் இலங்கை கண்ணீரால் நிறைந்துள்ளதாக புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு கொழும்பு கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பின் கருத்து வெளியிடும் போதே புனித பாப்பரசர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வரை எதிரிகளாக கருதப்பட்டவர்களுடன் எதிர்காலத்தைக் கட்டிக்காப்பது என்பது கடினமானது. அதனைக் குணப்படுத்திக்கொள்ள வேண்டுமாயின், சமாதானம் ஒன்றே வழியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, இலங்கையில் சமாதானம் நிலவி மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று புனித பாப்பரசர் இதன்போது பிரார்த்தனை செய்துகொண்டார். அத்துடன், இலங்கையர்களுக்கு நலமானதொரு எதிர்காலம் உருவாக வேண்டும் என்று அவர் ஆசிர்வாதமளித்துள்ளார்.

கத்தோலிக்க தலைமையகமான வத்திக்கான் புனித பீட்டர் பெசிலிகாவில் இடம்பெற்ற விசேட ஆராதனையொன்றில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருந்த போதே கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் பாப்பரசருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Post Published: 09 February 2014

 

http://www.puthinamnews.com/?p=44372

அந்தாள் என்ன சொன்னார் என்று கரிச்சு கொட்டுகிறீர்களோ தெரியாது...

 

அவர் சொன்னது இப்பொது போவதற்கு கடவுள் சித்தம் இல்லை என்று...

அவர் தான் செய்யும் எல்லாவற்றைக்கும் இறைவனையே பாரமாக்குகிறார்....

 

இங்கு அவரை கரிச்சு கொட்டுபவர்கள்..."தலைவரை" பற்றி கூறினார் என்று யாரும் வதந்தி பரப்பியிருந்தாலே...இவரை கடவுளின் அவதாரமாக்கியிருப்பார்கள் :)

பாப்பரசருக்கு சிறி லங்கா பக்கேஜ் குடுத்து, கிரீஸ் பூசி வழிந்து சிறி லங்கா கொண்டு வந்து களியாட்டம் போட்டு ஏசுவே வந்த சமாதான பூமி என்று பொய் பரப்புரை செய்யலாம் என்றால் கரிச்சு கொட்டி சிறி லங்கன் திட்டத்தை குழப்ப கூடாது.

குழந்தைக்கு பிஸ்கிட் குடுத்து சுட்டு கொன்ற நல்லவர்கள் பாரத்தை கடவுள் மீது திணிக்க முற்படும் போது கரிச்சு கொட்டக்கூடாது.

மிருதுவான ஜெனோசைட் மனது பாதித்துவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.