Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிவிற்கு வருவோம் ...........உண்மையை பேசி

Featured Replies

ராசவன்னியன் அவர்களின் கருத்தே என்னுடையதும்.. திண்ணையில் இருந்து நிரந்தரத்தடை என்பது அதிகமானது. ஒரேயடியாக வெட்டிவிடாமல், கையளவு தூரத்தில் வைத்திருப்பதே சிற‌ந்தது.

 Something wrong somewhere!! Shares!!  :lol:  :o

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

இனத்துக்காக இழந்தவை இழந்தவைதானே.. அவற்றை இன்னொரு இழப்புடன் ஒப்பிட்டு எடை போட முடியாது.

ஆரம்பத்தில் அவரும் அரச சேவையாளர்.. தமிழினத்திற்கே பங்கம் விளைக்கக் கூடிய சட்டமூலத்தை மொழிபெயர்க்க மறுத்து தனது உத்தியோகத்தை துறந்தவர் என நினைக்கிறேன்.

அதன் பிறகு அவர் எப்படி வாழ்ந்தார்.. எவர் உதவி செய்தார் என ஆராய முற்பட்டால் அங்கே கண்ணீருக்கான விடயங்களே நிறைய இருக்கும் என்பதே எனது சாதாரணமான ஊகம். 

அவரது இளைய சகோதரர் திரு. கா. சிவநாதன் (முன்னாள் ஜேர்மனி கலை பண்பாட்டுப் பொறுப்பாளர்) ஜேர்மனியில்தான் இருந்தார். அமிர்தநதி சுதர்சன் எனும் பெயரிலும் அவர் ஆக்கங்கள் எழுதியதுண்டு. 'இவ்வாறான அலுவல்களால் ஒழுங்காக ஒரு வேலையை செய்ய முடியவில்லை.. எனது அண்ணனின் பிள்ளைகளுக்கு ஒரு சொக்கிலேற்றுதானும் அனுப்ப முடியவில்லை..' என்று கவலைப்பட்டதுண்டு.

காசி ஆனந்தனின் விடுதலைப் பாடல்களை தேனிசை செல்லப்பா.. ரீஎல் மகாராசன்.. புஷ்பவனம் குப்புசாமி போன்றவர்கள் அடிக்கடி மேடைகளிலும் ஊடகங்களிலும் பாடியதோடு அவர்கள் பணம் சம்பாதித்ததையும் மறுக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு பாடல்களை எழுத்திக் கொடுத்துவிட்டு.. ஒரு சில தமிழ் ஆதரவாளர்களின் உதவியுடன் தமிழ்நாட்டில் பல்வேறு இன்னல்கள் மத்தியில் வாழ்வை அந்த கவிஞர் கொண்டு நடத்தியதை மறுக்க முடியாது.

ஒருமுறை தேசியத் தலைவரிடம் இருந்து அவரை வன்னிக்கு வருமாறு அழைப்பு வந்தது. அந்த நேரத்தில்தான் அவரது புதல்விகள் மேற்படிப்புப் படித்துக் கொண்டு இருந்தார்கள். 'இவ்வளவு காலமும் குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்தேன்.. தற்போது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக அவர்களூடன் இருந்தேயாக வேண்டிய நிலை.. அவர்களுடைய படிப்பிற்கான உதவிகளுக்காக.. தலைவரது அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என்று அப்போது அவரை சந்திப்போரிடம் கூறுவாராம்.

அவரது உறவினர் நான் வசிக்கும் நகரத்திலும் வாழ்வதால்.. அப்போது அறிந்த விடயங்களை தற்போது பகிர்ந்துள்ளேன்.

காசி அண்ணனின் மனைவியின் நெருங்கிய தோழி எனக்கும்  நன்கு பழக்கமானவர். லண்டனில் இருக்கிறார். நானும் அவரும் வாரம் ஒருமுறை சந்திக்கவேண்டிய தேவை இருந்தது. அப்போது காசி அண்ணன் குடும்பத்துக் கதைகள் எல்லாம் சொல்வார். அவற்றை எல்லாம் நன் இங்கு பகிர முடியாது. அவற்றைக் கேட்டு எனக்கு அவரின்மேல் இருந்த மதிப்புப் போய்விட்டது. எனக்கு சிவநாதன் அண்ணையையும் நன்கு தெரியும். சிலருக்குக் காலம் நன்றாக வலை செய்கிறது பலர் எத்தனையோ செய்தும் மூன்றாமாளுக்குக் கூட அவர்கள் செய்தது தெரியாது வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். மற்றவர் ஒருவரைப் புகழ்ந்துவிட்டால் நாமும் அவரைப் புகழ்ந்து தூக்கி தலையில் வைத்துள்ளோம் என்று காட்டுவது இங்கு இயல்பு அவ்வளவே. மற்றப்படி அவரின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

 Something wrong somewhere!! Cheers!!  :lol:  :o

இசை  எப்பொழுதும்

தூரச்சிந்திப்பவர் :D

ராசவன்னியன் இப்படி பின்னர் எழதுவார் என  அறிந்து முதலே  எழுதிவிட்டார்

இப்போ

ராசவன்னியனின்   எழுத்துக்கு பின்னால்  இதைப்போட்டுவிட்டால் போச்சு.. :lol:  :D  :D

நாலு பேர் சொன்னதை தெரிந்து வைத்துக்கொண்டு

காசியண்ணையின் வரலாற்றை  எழுதாதீர்கள் சுமே

அசிங்கமாக  இருக்கு.......... :(  :(  :(

நீங்களும் அந்த நாலு பேர் சொல்வதைக் கேட்டு தெரிந்துகொண்டவர் தான் அண்ணா

எதையும் ஆராயாமல் உறுதிபட கூற முடியாது.. இதே சிவநாதன் அவர்கள் ஒரு முறை ஜேர்மன் மாவீரர் மேடைக்கு அருகில் செல்லவே திடீரென சில டமிழ்சுகளால் தடுக்கப்பட்டார்.. அதனால் மாவீரர் வணக்கத்துக்காக மேடைக்கு அருகே சப்பாத்துகளை கழற்றிவிட்டவர்.. அந்த நிகழ்வு முடியும்வரை கார்த்திகை குளிரில் வெறுங்காலுடனேயே நின்றுகொண்டிருந்தார்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் அந்த நாலு பேர் சொல்வதைக் கேட்டு தெரிந்துகொண்டவர் தான் அண்ணா

அப்படியானால்

நாளை  உங்களது மக்கள் இருவர்  நல்லநிலைக்கு வந்துவிட்டால்

உங்களை  நான் இதே வகைக்குள் அடக்கலாமா??? :(

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால்

நாளை  உங்களது மக்கள் இருவர்  நல்லநிலைக்கு வந்துவிட்டால்

உங்களை  நான் இதே வகைக்குள் அடக்கலாமா??? :(

அது உங்கள் அறிவைப்ப் பொறுத்தது :D

  • கருத்துக்கள உறவுகள்

அது உங்கள் அறிவைப்ப் பொறுத்தது :D

அதைத்தான் உங்களுக்கும்  யாம்   சொல்லி  நிற்கின்றோம்....

அருவருப்பாக  இருக்கிறது என்று............. :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளும் he said; she said என்பதை வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது.. கேட்ட தகவல்களை தகவல்களாக மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை வைத்து ஒரு முடிவுக்கு வருவது குற்றம் சாட்டப்பட்டவரை உடனேயே குற்றவாளி என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

காசி அண்ணையின் மனைவியின் நண்பி (??) பாரதூரமான தகவல்களை சொன்னதாக சுமோ அக்கா சொல்லியிருக்கிரா.. அவர் "நண்பி"யாக இருந்தால் அதை காசி அண்ணை குடும்பத்தினரிடம்தான் சொல்லியிருப்பார். சுமோ அக்காவிடம் சொன்னதில் இருந்து அவர் காசி அண்ணையின் திருமதிக்கு உண்மையான "நண்பி" அல்லர் என்பது தெளிவாகிறது. ஆகவே திருமதியின் நண்பியே சொன்னார் என்கிற சுமோ அக்காவின் வாதமும் அடிபட்டுப்போகிறது.

இந்த மாதிரி பிரச்சாரங்களை நம்பும்போதுதான் அழிவுகள் உண்டாகின்றன. ஊடகக்காரர் செய்வது இவற்றைத்தான். இவற்றை ஒரு தகவலாக மட்டும் வைத்துக்கொண்டு எமது அறிவுக்கேற்ப சிந்தித்து கருத்துருவாக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

  • தொடங்கியவர்

காசி அண்ணனின் மனைவியின் நெருங்கிய தோழி எனக்கும்  நன்கு பழக்கமானவர். லண்டனில் இருக்கிறார். நானும் அவரும் வாரம் ஒருமுறை சந்திக்கவேண்டிய தேவை இருந்தது. அப்போது காசி அண்ணன் குடும்பத்துக் கதைகள் எல்லாம் சொல்வார். அவற்றை எல்லாம் நன் இங்கு பகிர முடியாது. அவற்றைக் கேட்டு எனக்கு அவரின்மேல் இருந்த மதிப்புப் போய்விட்டது. எனக்கு சிவநாதன் அண்ணையையும் நன்கு தெரியும். சிலருக்குக் காலம் நன்றாக வலை செய்கிறது பலர் எத்தனையோ செய்தும் மூன்றாமாளுக்குக் கூட அவர்கள் செய்தது தெரியாது வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். மற்றவர் ஒருவரைப் புகழ்ந்துவிட்டால் நாமும் அவரைப் புகழ்ந்து தூக்கி தலையில் வைத்துள்ளோம் என்று காட்டுவது இங்கு இயல்பு அவ்வளவே. மற்றப்படி அவரின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு ஆரோக்கியமான விவாதமாக இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது சுமே அக்கா .........உங்களுக்கு தெரிந்தவர்களினால்  அவரைப்பற்றி கூறப்பட்ட கதைகளுக்கு அப்பால் அவர் தமிழீழ போராட்டத்திலும் ,தமிழர்கள் மத்தியிலும் பெரும் தாக்கம் செலுத்தினார் ,அதை நேராக தங்கள் கண்முன் ஒவ்வொரு தமிழனும் கண்டுள்ளான் ..............அவரைப்பற்றி உங்களுக்கு சொன்னவர்கள் தப்பாக சொல்லியிருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ..........................??? 
 
அவர் தப்பானவர் என்றால் எப்போதோ காணாமல் போய் இருப்பார் ....................முதலில் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளாததற்கு உரிய காரணத்தை கூறினால்தான்[ ஆதாரத்துடன் ] மற்றவர்களுக்கும் தெரியும் ...............நீங்கள் சரியா  ,அல்லது காசி ஐயா சரியா என்று ..........? :D

எமக்காக குரல் கொடுப்பவர்கள யாரையும் நாம் மதிக்கவேண்டும் ஆதரிக்கவேண்டும் .

தமது அரசியலுக்கு எம்மை பாவிக்க நினைப்பவர்களை படம் காட்டுபவர்களை இனம் காணப்படவேண்டும் .

இந்த இரண்டிற்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை அறிய கொஞ்ச அரசியல் அறிவு தேவை .

படம் காட்டுபவர்களுக்கு தெரியும் பலருக்கு உந்த அரசியல் அறிவு இல்லை என்று அதனால் தான் கருணாநிதியும் எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஆனார்கள் ,விஜயகாந்தும் சீமானும் அரசியலில் குதித்தார்கள் .

மத்திய அரசு சீமான் இந்த துள்ளு துள்ளவும் விட்டு வைத்திருப்பதற்கு காரணம் இப்படியான நாலு பேர்கள் அவர்கள் அரசியலுக்கும் தேவை .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளும் he said; she said என்பதை வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது.. கேட்ட தகவல்களை தகவல்களாக மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை வைத்து ஒரு முடிவுக்கு வருவது குற்றம் சாட்டப்பட்டவரை உடனேயே குற்றவாளி என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

காசி அண்ணையின் மனைவியின் நண்பி (??) பாரதூரமான தகவல்களை சொன்னதாக சுமோ அக்கா சொல்லியிருக்கிரா.. அவர் "நண்பி"யாக இருந்தால் அதை காசி அண்ணை குடும்பத்தினரிடம்தான் சொல்லியிருப்பார். சுமோ அக்காவிடம் சொன்னதில் இருந்து அவர் காசி அண்ணையின் திருமதிக்கு உண்மையான "நண்பி" அல்லர் என்பது தெளிவாகிறது. ஆகவே திருமதியின் நண்பியே சொன்னார் என்கிற சுமோ அக்காவின் வாதமும் அடிபட்டுப்போகிறது.

இந்த மாதிரி பிரச்சாரங்களை நம்பும்போதுதான் அழிவுகள் உண்டாகின்றன. ஊடகக்காரர் செய்வது இவற்றைத்தான். இவற்றை ஒரு தகவலாக மட்டும் வைத்துக்கொண்டு எமது அறிவுக்கேற்ப சிந்தித்து கருத்துருவாக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

அப்பு

கனக்க  போகத்தேவையில்லை

காசியண்ணா  போன்ற  தேசியப்பற்றாளருக்கு

அவரது குடும்பமே அனுசரணையாக  இராது

அதிலும் மனைவிமார்..............??? :(  :(

இது தான் பொதுவான தாயகப்பற்றாளளின் நிலை

இதில் அவரது மனைவியின் நண்பி  எப்படி............?? :(

விசுகர்.. நீங்கள் காசி ஆனந்தனைப்பற்றிக் கதைக்கிறீங்களா.. காசி நாதனைப்பற்றிக் கதைக்கிறீங்களா?!

சரியான அவதானிப்பும் கணிப்பீடும்!  :)

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது, ஈழ விடயங்களைப் பேசி தமிழக அரசியல்வாதிகள் இலாபம் சம்பாதிக்கிறார்கள் என்பது. ஈழப் பிரச்சினையைப் பேசுவதால் தமிழக மக்களின் ஆதரவு கிடைக்குமாக இருந்தால் தமிழக மக்கள் ஈழத்தமிழரின்பால் அக்கறை கொண்டவர்கள் என்றுதானே அர்த்தம்? அவ்வாறு இருக்கும்போது ஈழப்போர் சமயத்தில் அவர்கள் உதவவில்லையே என்கிற கூற்று தவறானதாகிவிடுகிரது. ஏனெனில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் செயற்படவே செய்வார்கள்.

ஈழப்போர் சமயத்தில் தமிழகம் ஒருவித அடக்குமுறைக்கு உட்பட்டிருந்தது என்பது உண்மை. ஊடகம் மற்றும் காவல்துறை அடக்குமுறைகள். இவற்றை மீறி மக்களைப் போராட்டத்திற்குள் கொண்டுவர கால இடைவெளி போதுமானதாக இருக்கவில்லை.

இதை உணர்ந்து ஈழத்துயரை மேடை போட்டு சொல்ல முயன்றவர்தான் சீமான். அப்படிச் சொல்வது அந்தக்காலகட்டத்தில் தற்கொலைக்குச் சமமானது. இருந்தும் அதையே செய்தார். அப்போது அவருக்கு கோடி கோடியாக யாரும் கொட்டிக் கொடுக்கவில்லை. உண்டியல் ஏந்தித்தான் மேடைச் செலவுகளையே பார்த்துக் கொண்டார்கள்.

நிலைமை இவ்வாறு இருக்க ஈழத்தை வைத்து அரசியல் இலாபம் பெறுகிறார்கள் என்பது ஏற்புடையது அல்ல.

மக்களுக்கு தகவல்களைக் கொண்டுபோய் சேர்ப்பதே அவர்களது எண்ணமாக இருந்தது. இன்று ஈழம் என்று பேசினால்தான் சில வாக்கு வங்கிகளை அடையக்கூடிய தன்மைகள் அங்கு உள்ளன. இந்த மாற்றத்திற்கு அன்று அரசியல் தற்கொலை முயற்சியில் இறங்கி வித்திட்டவர்கள்தான் சீமான் போன்ரவர்கள். அவர்களால் ஈழத்தமிழர்களுக்கு ஆதாயமே தவிர, நட்டம் எதுவும் இல்லை.

  • தொடங்கியவர்

ஈழப்போர் சமயத்தில் தமிழகம் ஒருவித அடக்குமுறைக்கு உட்பட்டிருந்தது என்பது உண்மை. ஊடகம் மற்றும் காவல்துறை அடக்குமுறைகள். இவற்றை மீறி மக்களைப் போராட்டத்திற்குள் கொண்டுவர கால இடைவெளி போதுமானதாக இருக்கவில்லை.

இதை உணர்ந்து ஈழத்துயரை மேடை போட்டு சொல்ல முயன்றவர்தான் சீமான். அப்படிச் சொல்வது அந்தக்காலகட்டத்தில் தற்கொலைக்குச் சமமானது. இருந்தும் அதையே செய்தார். அப்போது அவருக்கு கோடி கோடியாக யாரும் கொட்டிக் கொடுக்கவில்லை. உண்டியல் ஏந்தித்தான் மேடைச் செலவுகளையே பார்த்துக் கொண்டார்கள்.

நிலைமை இவ்வாறு இருக்க ஈழத்தை வைத்து அரசியல் இலாபம் பெறுகிறார்கள் என்பது ஏற்புடையது அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் பார்த்து முடித்தேன்.. இந்த மாதம் நடைபெற்ற கூட்டம் இது. இதில் ஈழத்தைப் பற்றி சில நிமிடங்கள் மட்டுமே பேசியுள்ளார்.. மீதியெல்லாம் தமிழகத்தின் பிரச்சினைகள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களைப் பொறுத்தவரை அண்ணன் சீமான் முன்னொடுக்கும் தற்கால அரசியல் பற்றி எந்தக் குழப்பமும் இல்லை. அதனால்.. இத்தலைப்பில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்கிறோம்.

ராஜவன்னியன் அண்ணா சொன்னது போல.. தமிழகக் கூடாரத்தில் உள்ள அனைவரையும் எமக்கானவர்கள் ஆக்குவதில் தான் எங்களின் வெற்றி தங்கியுள்ளது. அவர் பெரிசு.. இவர் சின்னன்.. இவர் பிழை.. அவர் சரி.. என்ற வியாக்கியானங்களால் எமக்கு ஒன்றுமே அமையப் போறதில்லை. அதேவேளை தவறான வழியில் செல்பவர்கள் நோக்கி சரியான விமர்சனங்களை வைப்பதை வரவேற்க வேண்டும். ஏனெனில் அவர்கள் சிந்திக்கவும் திசை மாறாமல் இருக்கவும் அவை உதவக் கூடும். எமது விமர்சனங்கள் எம் சார்ந்தோருக்கு.. சோர்வை.. சலிப்பை.. விலகலை ஏற்படுத்துவதாக இருப்பின்.. அது எதிரி எம்மிடம் எதிர்பார்க்கும்.. அவனுக்கான உற்சாகபானமாக மட்டுமே இருக்க முடியும். :icon_idea:

  • தொடங்கியவர்

அதேவேளை தவறான வழியில் செல்பவர்கள் நோக்கி சரியான விமர்சனங்களை வைப்பதை வரவேற்க வேண்டும். ஏனெனில் அவர்கள் சிந்திக்கவும் திசை மாறாமல் இருக்கவும் அவை உதவக் கூடும். எமது விமர்சனங்கள் எம் சார்ந்தோருக்கு.. சோர்வை.. சலிப்பை.. விலகலை ஏற்படுத்துவதாக இருப்பின்.. அது எதிரி எம்மிடம் எதிர்பார்க்கும்.. அவனுக்கான உற்சாகபானமாக மட்டுமே இருக்க முடியும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சிகரமான பேச்சுக்களாலும் வசனங்களாலும் உசுப்பேத்துவதுதான் அரசியல் என்றால் அதனைச் சீமானும் காசியானந்தரும் நிறையவே செய்துள்ளார்கள். சொல்லுக்கு முன்னர் செயல் என்று இருந்தவர்கள் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் செயலுக்கு முன்னர் சொல் என்று சொல்லிக்கொண்டு செயலை மறந்தால் நம்பகத்தன்மை இல்லாமல்தான் போகும்.

சீமான் முதலில் தமிழகத்தில் பெரிய சக்தியாக வந்து தமிழக ஆட்சியைத் தீர்மானிக்கும் ஒருவராக வரட்டும். அதன் பின்னர் மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளை மாற்றக்கூடிய வலிமையைப் பெறட்டும். அதற்குப் பின்னர்தான் ஈழத் தமிழர்களுக்கு அவரால் எதையும் செய்யமுடியும் என்பதில் நம்பிக்கை வரும்.

ஏனென்றால் இத்தகைய வலிமைகளைப் பெற்றிருந்தும் தமிழர்கள் அழியும்போது வாளாவிருந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் இவருடைய முன்னோடிகள். பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் கொள்கை, கோட்பாடுகளை காற்றில் பறக்கவிடுவதும் பொதுமக்களை விவேகமில்லாதவர்கள் என்று எண்ணுவதும்தான் அரசியலின் மூலதனம்.

அன்பின் கிருபன் அண்ணா உணர்ச்சிவசமான பேச்சால் அதனுடன் கூடிய ஒரு செயல்பாட்டால் ஒரு பெரிய விடயத்தை சாதித்துள்ளார்கள் ................இது அரசியல் சுயநலம் என்பதற்கு அப்பால் ஒவ்வொரு தமிழனாலும் .நன்றி உணர்வுடன் பார்க்கபட்டுள்ள விடயம் .............ஆகவே  அவற்றை நாம் புறக்கணிப்பது பொருத்தமற்றது என்ற ஒரு விடயம் தெரிகிறது .இது சம்பந்தமாய் மேலும் உங்கள் கருத்தை அறிய ஆவலை இருக்கிறேன் நன்றிகள்  :)

ராஜீவ் காந்தி கொலைச் சந்தேக நபர்களின் விடுதலையைக் கொண்டாடுவது அவர்கள் சிறைக்கதவுகளைத் தாண்டி வரும்போதுதான் பூரணமாக இருக்கும். அவர்கள் வெளியில் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று நம்புகின்றேன். ஆனாலும் இந்த வழக்கில் அவர்களை விடுதலை செய்ய உச்ச நீதி மன்றம் தீர்மானித்தது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அல்ல, மாறாக வழக்கைக் கையாண்டதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகத்தான். எனினும் இவர்களின் விடுதலை இந்தியப் பொதுத் தேர்தலில் கட்சிகளின் கூட்டு எப்படி அமைகின்றது என்பதைப் பொறுத்தே இருக்கும் என்றே தோன்றுகின்றது.

எனவே உணர்ச்சிகரமான அரசியல் உசுப்பேத்தல்களுக்கும் இவர்களின் விடுதலைக்கும் பெரிய சம்பந்தமில்லலை. அரசியல் நெளிவு சுழிவுகளும், பேரம் பேசல்களும், அதன் லாப நட்டங்களும், அதிகாரங்களை நோக்கியதான கூட்டணிகளும், சாமானியர்களுக்குப் புரியாத சட்ட நுணுக்கங்களும்தான் பெரிய விடயத்தைச் சாதிக்க உதவும். இதைத்தான் அறிவுசார் அரசியல் என்பது. திறமையான அரசியல்வாதிகள் அதிகமான நேரத்தையும் உழைப்பையும் அறிவுசார் அரசியலுக்கு ஒதுக்கி அரசியல் முடிவுகளை சாதாரண மக்களுக்குப் இலகுவாப் புரியும் மொழியில், அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை உறுதிப்படுத்தும் அல்லது மாற்றும் வகையில் கவர்ச்சிகரமாக உரையாற்றக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இப்போது இருப்பவர்களில் யார் இந்தத் திறமைகளைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நீங்களே இலகுவாகத் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் இப்படி யாரும் இருகிறார்களா?

இதற்கு கருணாநிதி மட்டும் தான் பொருத்தமானவர்...ஆனால் அந்த ஆள் அடுத்த ஆயிரம் தலிமுறைக்கும் சொத்து சேர்ப்பதில் தான் குறியாக உள்ளார்....அவருக்கு  ஈழ பிரச்னை ஒரு உதிர்ந்து போன முடி :)

கருணாநிதிக்கும் ஸிம்பாப்வே ரொபேர்ட் முகாபேக்கும் அதிக வித்தியாசம் வயதிலும் இல்லை. அரசியலிலும் இல்லை!

ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலியிடப்பட்டபோதும் தமிழர்களின் பெரும்பலமாக விளங்கிய புலிகள் அழிக்கப்பட்டபோதும் தடுக்காமலும், தமிழகத்தில் பொங்கிய உணர்வுகளைத் தணித்ததும்தான் கருணாநிதியின் மிகப்பெரிய சாதனைகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.