Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களுக்கு இரவு சொந்தமில்லையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு இரவு சொந்தமில்லையா...?

 

 

xladies_1770755h.jpg.pagespeed.ic.A1htWf

 

 

தவிக்கும் இரவு இது.

 

23 வயதேயான ஓர் இளம்பெண், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொன்று தூக்கியெறியப்பட்டிருக்கிறார். ஒன்பது நாட்கள் ஒரு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் எல்லைக்குள் சென்னையின் தகவல் பெருஞ்சாலையான பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து (OMR சாலை ) 200 அடிக்கு அருகில் ஒரு புதரில் பிணமாகக் கிடந்து, கடந்த ஞாயிறன்று செய்தியாகி, காவல் துறை துப்புத்துலக்கியதால் தமிழகத்தின் நிர்பயாவாக மாறிய இரவு இது.

பெரும்பாலும், ஊருக்கு வெளியே பிரமாண்டமான கட்டிடங்களில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப வளாகங்களின் பாதுகாப்புகுறித்தும் அவற்றில் பணிபுரியும் பெண்களின் நிலைகுறித்தும் இரு தினங்களாக விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. ஏராளமான தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பங்கெடுத்த ஒரு போராட்டமும் நிகழ்ந்துள்ளது.

அச்சமூட்டும் இச்சம்பவத்தை ஒட்டி, பெண்களின் பாதுகாப்பு, அவர்கள் இரவு நேரத்தில் பணிபுரிவது சரியா தவறா, சீக்கிரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனப் பல அறிவுரைகளும் குவிகின்றன.

இரவு ஆண்களுக்கானதா?:

உமா மகேஸ்வரியின் வன்முறை மரணம் அதிர்ந்து கொண்டிருக்கும் மனதில், இன்னுமொரு எண்ணம் தலையெடுக்கிறது.

 

இரவுகள் ஆண்களுக்கானதா?

பெண்களுக்கு இரவு என்பது வெறும் படுக்கையறைதானா?

 

சமுதாயத்தில் சரிபாதிப் பெண்கள் கேட்பது, சமநீதி என்பது பெண்கள் இயக்கத்தின் பல பத்தாண்டுக் கோரிக்கை. பாலியல் வன்முறைகளுக்கு எதிராக, பாகுபாடுகளுக்கு எதிராக நியாயம் கேட்கும் பெண்களுக்கு, காலத்தின் மீதும் வாழும் வெளிமீதும் எந்த அதிகாரமும் இல்லையா? விண்ணில் பாதி மண்ணில் பாதி என்ற முழக்கங்களில் இனி பகலையும் இரவையும்கூடச் சேர்க்க வேண்டுமா?

இரவைக் கைக்கொள்ளும் பயணம்:

எப்படியேனும் இந்த இரவைக் கைக்கொள்ள வேண்டும் என இன்று எழுந்த தவிப்பால், இரவு 11 மணிக்கு OMR சாலை துவங்கும் மத்திய கைலாஷிலிருந்து கிளம்பினேன். அந்தப் பேருந்து நிலையத்தில் ஒரு வயதான தம்பதியைத் தவிர, மற்றவர் எல்லாம் ஆண்கள். என்ன காரணத்தாலோ 'டைடல் பார்க்' வளாகம் வரை தெரு விளக்குகள் எதுவும் எரியவில்லை.

 

பறக்கும் ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. இந்திரா நகர் ரயில் நிலையத்தின் வாசலில் ஒரு ரயில்வே காவலர் அமர்ந்திருந்தார். ரயில் நிலைய விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. ரயில் நிலையங்களுக்கு இடையிலான சாலை இருண்டு கிடந்தது. அங்கு தனியாக நடந்து செல்ல வேண்டியிருந்தால் அச்சமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. திருவான்மியூர் ரயில் நிலைய வாசலிலும் ஆண்கள்தான் இருந்தனர். இன்னமும் நள்ளிரவுகூட ஆகவில்லை என்பது நினைவுக்கு வந்தது. சிக்னலில் கூட இருந்த வாகனங்களில் ஆண்கள் இருந்தனர்.

சாலை வெறிச்சோடிப் போகத் தொடங்கியிருந்தது. காவல் துறையின் ரோந்து வாகனம் ஒன்று கடந்து சென்றது. மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப வளாகமான 'அசெண்டாஸ்' பல்லாயிரம் விளக்குகளால் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அதன் வாசலுக்கு வெளிப் பக்கம் வெறிச்சோடிக்கிடந்தது. எதிர்ப்புறம் இருந்த ஒரு ரோட்டுக் கடையில் பத்து இருபது ஆண்கள் உணவருந்திக்கொண்டிருந்தார்கள். பேருந்து நிறுத்தத் திலும் ஒரு சிறு கூட்டம் இருந்தது. அருகில் சென்றபோது, அதில் இரு பெண்கள் நின்றிருப்பது தெரிந்தது.

மீண்டும் OMR சாலையில் நுழைந்து ஆள்நடமாட்டம் குறையத் தொடங்கிய பகுதிகளில் பயணித்தபோது, ஓர் இளம் பெண் ஸ்கூட்டரில் எதிரில் சென்றார். இடையே 'எஸ்.ஆர்.பி. டூல்ஸ்' அருகே கட்டிடத் தொழிலாளர்கள்போல் காட்சியளித்த வேற்று மாநிலத்தவர் பத்துப் பேரைக் காவலர்கள் விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

 

அச்சுறுத்தும் பேரழகோடு இரவு கவிந்துகிடந்தது. ஆண்கள், பெரும்பாலும் இளைஞர்கள் தேநீர்க் கடைகளில், உணவகங்களில், சாலையோரங்களில் எனத் தென்பட்டுக்கொண்டே இருந்தார்கள். பெண்களைத் தேடித்தான் காண வேண்டியிருந்தது. அப்போது பின்னாலிருந்து சீரான வேகத்தில் ஒரு ஸ்கூட்டர் எங்களைத் தாண்டிச் சென்றது. கருப்புக் கோட்டு அணிந்த ஓர் இளம்பெண் அந்த வண்டியை ஓட்டிச் சென்றார். காற்றைக் கிழித்துச் சென்ற அவரின் வேகமும் அதில் தெரிந்த தன்னம்பிக்கையும் இரவுக் காற்றில் வீசி நின்றது.

பாதுகாக்க வேண்டிய பொருளா?:

இன்னும் சற்று தூரம் அந்தத் தகவல் நெடுஞ்சாலையில் சென்றபோது, பல வாடகை கார்களில் பெண்களும் ஆண்களும் வீடு திரும்பிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒரு சில கார்களில் சீருடை அணிந்த பாதுகாவலர்கள் இருப்பதையும் பார்க்க முடிந்தது.

பாதுகாப்புகள் ஆசுவாசப்படுத்துகின்றனதான். ஆனால், பாதுகாக்கப்பட வேண்டிய பொருளாகப் பெண்கள் ஏன் இருக்க வேண்டும்? என்ற கேள்வியும் எழுந்தது.

 

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும், சிறு வயதில் பாடப் புத்தகத்தில் படித்த காந்தியின் சுதந்திரம் பற்றிய கூற்று நனவாவதற்கு?

 

இப்போதெல்லாம் யாரும் காந்தி சொன்னதுபோல்கூடச் சொல்வதில்லை. "பாதுகாப்பாக இரு. வேலைக்குப் போ, ஆனால் சீக்கிரம் வந்துவிடு. என்ன உடை அணிகிறாய் என்பதில் கவனமாயிரு, யாரிடம் பேசுகிறாய் என்பதில் கவனமாயிரு" என்பதே ஆண்களதும் பெண்களதும் அறிவுரைகளாக இருக்கின்றன. அவை தவிர்க்க முடியாதவையும்கூட. ஆனால், நாட்டின் விடுதலைபற்றிக் கண்ட கனவுகளைக்கூட பெண்கள் தங்கள் தனிமனித சுதந்திரத்துக்கான கனவுகளாகக் கைக்கொள்ள முடிவதில்லை.

மிளிரும் நம்பிக்கைகள்!

நீண்ட தூரம் சென்றபின் எதிரே ஒரு பெண், வண்டியில் வந்துகொண்டிருப்பது தெரிந்தது. ஆனால், இது ஸ்கூட்டர் இல்லை. அவர் ஒரு மங்கிய சேலை அணிந்து, ஒரு மூன்று சக்கர மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். எங்கள் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்த பிளாஸ்டிக் கவர்களை எடுத்து வண்டியில் போட்டார். 55 வயதாகும் துர்கா, கண்ணகி நகரில் வசிப்பவராம். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு இரவும் 11 மணியிலிருந்து விடியற்காலை 4 மணிவரை அவர் இந்த வண்டியில் சென்று பிளாஸ்டிக் பொறுக்கிவருவதாகச் சொன்னார். இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்று சொன்னார். உமா மகேஸ்வரி மரணம்குறித்து அவர் கேள்விப்பட்டிருக்கவில்லை.

ஒரு மணி நேரப் பயணத்தை முடித்து வீடு திரும்பும் முன் அடையாறு பேருந்து நிலையம் அருகில் சாலையோரத் தேநீர் வண்டியில் தேநீர் அருந்த நின்றபோது, இன்னமும் இரண்டு பேரைச் சந்திக்க முடிந்தது. மஞ்சுளா, திலகா இருவரும் சாலைகளைத் துப்புரவு செய்துகொண்டிருந்தார்கள். நீல நிறச் சீருடைப் புடவையில் அவர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். மஞ்சுளாவின் வீடு கொருக்குப்பேட்டையில். திலகாவின் வீடு கண்ணகி நகரில். இரவு 8 மணிக்கு வேலைக்கு வரும் அவர்கள், அதிகாலை 4 மணிக்குப் பணி முடித்து வீடு திரும்புகின்றனர். இரண்டு ஆண்டுகளாக இந்தப் பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுவருவதாகச் சொன்னார்கள்.

இரவை அணிந்து மிளிரும் நட்சத்திரங்களைப் போல அவர்களின் மேலாடை மேல் இருந்த பிரதிபலிக்கும் பட்டைகள் மிளிர்ந்தன. இந்த இரவின் தவிப்பில் ஒரு துளியையாவது கரைக்க முடிந்தது அவர்களின் நிமிர்ந்த நன்னடையிலும் நேர் கொண்ட பார்வையிலும் தெறித்த சிரிப்பிலும்.

 

- 'தமிழ் இந்து'வில் வந்த கட்டுரை.

 

 

டிஸ்கி: :)

 

'தமிழ் இந்து'வில் வெளியிட்டுள்ள இக்கட்டுரையாளர் ஒன்றை கவனிக்க மறந்துவிட்டார். பெண்களை இன்றுவரை போகப்பொருளாவும், மெல்லிய பாலினமாகவுமே பார்க்கப்படுகின்றனர். பாலியல் வக்கிர படங்கள், மது, இரவு, தனிமை  இந்த வக்கிர எண்ணங்களுக்கு வலு சேர்க்கின்றன. வாய்ப்புக் கிடைத்தால் இவ்வுலகில் அத்தனை ஆண்களும் துச்சாதனன்கள்தான். அவர்களை கட்டுப்படுத்த, அணைபோட தடுப்புகள், மிகக் கடுமையான சட்டங்கள் வராத வரை இவை தொடரத்தான் போகிறது. பெண்களைத் தீண்டினால் கை வெட்டப்படும், நோண்டினால் *** எறியப்படுமென சட்டம் வரவேண்டும்.  இந்த மாதிரி விடயங்களில், மத்தியகிழக்கு நாடுகளின் தண்டனைச் சட்டம் மிக மிக பாராட்டக்கூடியது.

நேற்று தந்தி தொலைக்காட்சியில் இரு பெண்கள் (ஒருவர் தகவல் தொழில்நுட்பத்துறையில் மனிதவள மேலாளர், மற்றொருவர் வழக்கறிஞர்) பேசுவதை கேட்கையில், பெண்களே தாங்கள் சம உரிமையுடன் வாழுவதற்கு கடுமையாக குரல் கொடுக்காதபொழுது ஆண்கள் எப்படி இவர்களை மதித்து நடப்பர் என்றே தோன்றியது. சல்லிசாக ஏறி மிதிக்கத்தான் செய்வர்.

 

அவர்கள்,  ஆண்மையை பின் எப்படிக் காட்டுவதாம்? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு சிந்தனையைத் தூண்டும் 'இணைப்புக்கு' நன்றிகள் வன்னியன்!

 

எங்கேயோ பெரிய 'தவறு' இருக்கின்றது என்று மட்டும் தெரிகின்றது! அது எப்போது நிகழ்ந்தது என்று கூறமுடியாமல் உள்ளது!

 

பின்வரும் பமானது இன்றைய இந்தியாவில் பெண்களின் நிலையைச் சுருக்கமாகச் சொல்லுகின்றது என எண்ணுகின்றேன்!

 

1908239_737471606287513_1950411475_n.jpg

 

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்வர்க்கத்தின் உடலில் எழும் உணர்ச்சிகள் வடிவதற்குப் புறத்தடை அல்லது அகத்தடை அற்ற வடிகாலை அமைத்துக் கொடுக்க உலகத்தால் முடிந்தால்!.... பெண்களுக்குக் காரிருளும் சொந்தமாகும்!!.

பண்டைய தமிழர் நாகரீகத்தில் இந்த வழக்கு இருந்ததாகச் சரித்திரங்கள் தெரிவிக்கின்றன. ஆரியர்களுக்குத் தமிழர்கள் அடிமையான பிற்பாடு அது அழிக்கப்பட்டது மட்டுமின்றி, அந்த வழக்கு மிகுந்த அருவருப்புக்கு உள்ளான ஒன்றாகவும் இன்று மாற்றப்பட்டும் விட்டது.

சட்டத்தால் இதனை அடக்க முடியாது!. திருடனாகப்பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதும், இதற்குப் பொருந்தாது!. இயற்கையானது, ஆண்கள் மூலம் பெண்களுக்குக் கொடுக்கும் ஒரு பெரும் அவலம். நவீன அறிவியல் உலகில் பாதுகாப்பு பலமாகவே இருக்கிறது என்ற அலட்சியம் இவ்விடயத்தில் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களும் மனிதப் பண்பு இல்லாத ஆண்களும் இருக்கும் வரை இது உலகம் உள்ளவரை தொடரத்தான் போகிறது

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் கைத்துப்பாக்கியுடன் பயிற்சியும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் போன்ற  கருணையுள்ளம் கொண்ட

தமக்காக முடிவுகளை  எடுக்காதவர்கள்

தலைவர்களாக கிடைக்கும்வரை  இது தொடரும்........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.