Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவே எமது முதல் எதிரி! – என்கிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
இந்தியாவே எமது முதல் எதிரி! – என்கிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம். 
[saturday, 2014-03-01 19:00:47]
vasantha-bandara-010314-150.jpg

இந்தியாவுடனான உறவை உடனடியாக முறித்துக் கொண்டு சீனாவுடனான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்-கத்தின் பொது செயலாளர் வசந்தபண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது-

  

இதுவரை நாம் பரிந்துரைத்த எல்லாவற்றையும் அரசாங்கம் கேட்காமையாலேயே இன்று எமக்கு ஜெனிவா வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இனியாவது நாம் கூறுவதை அரசாங்கம் செவிமடுத்து கேட்க வேண்டும்.நாம் சீனாவுடனும், ரஷ்யாவுடனும் எப்போதும் எம் உறவை பலப்படுத்த வேண்டும். ஏனெனில் சர்வதேசத்தில் அவர்களே எமக்கு ஆதரவாக உள்ளனர். எம்மிடம் உண்மையான உறவு கொண்டது சீனாவும், ரஷ்யாவுமே. மாறாக இந்தியா அல்ல. இந்தியா ஒரு பச்சோந்தி கடந்த காலத்தை உற்றுநோக்கினால் எப்போதுமே இந்தியா எமக்கு நன்மை பயத்ததில்லை.

எமக்கு நன்மைதரும் எந்த செயலையும், இந்தியா இதுவரை செய்யவில்லை. எனவே, இந்தியாவை எம் நாட்டில் கால்பதிக்க ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. இந்தியாவிலிருந்து வாகனங்கள் இறக்குமதி செய்வதை இடைநிறுத்திவிட்டு, சீனாவிடம் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவுடன் உறவு கொள்ளக்கூடாது. அத்தோடு எமது பொருளாதார செயற்பாடுகளை மேற்கு நாடுகள் ஏற்படுத்திக்கொள்வதைத் தவிர்த்து, சீனாவுடனும் ரஷ்யாவுடனுமான பொருளாதார உறவை மேம்படுத்த வேண்டும். இதுவே எமக்கு நன்மை பயக்கும்.

ஜெனிவாவில் எமக்கெதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையை நினைத்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது எமக்கு தேவையற்றதொன்று, அதற்கு நாம் அடிபணியக்கூடாது.எமது நாட்டு அரசாங்கத்திற்கும் எம்மை ஆட்சி செய்யும் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவிற்கும் மட்டுமே நாம் அடிபணிய வேண்டும். மாறாக அமெரிக்காவிற்கும் ஜெனிவாவிற்கும் நாம் அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை நவநீதம்பிள்ளை, அமெரிக்கா, மேற்கத்தைய நாடுகள் என்பனவற்றுடன் நம் நாட்டில் உள்ள சில தீயசக்திகள் இணைந்து அரசுக்கு ஏற்படுத்திய சதி. இதற்கு நாம் அச்சப்படத் தேவையில்லை.

இலங்கையில் மனித உரிமைமீறல்கள் இடம்பெற்றதாக கூறுகிறார்கள், விசாரணை வேண்டும் என்று கூறுகிறார்கள். இது எமது நாடு, இங்குள்ள பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக்கொள்ளுவோம், எமக்கு ஏனையோர் அறிவுரை கூறவோ, விசாரணை நடத்தவோ நாம் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. உலக நாடுகளுக்கு வேலைசெய்ய வேண்டிய அவசியம் எமக்கில்லை. எம் நாடு நன்றாகதான் உள்ளது. இன்று அச்சம் இன்றி, பயங்கரவாதம் இன்றி எல்லா மக்களும் சந்தோஷ-மாக வாழ்கின்றனர். இதனை குழப்பும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. கியூ-பாவை அடக்க நினைத்தது போல எம்மை அடக்க நினைக்கிறது. அதற்கு நாம் இடமளிக்கக்கூடாது.

ரஷ்யாவுடனும் சீனாவுடனும் நாம் நல்லுறவு கொண்டுள்ளதை அமெரிக்காவினால் ஏற்கமுடியவில்லை. அந்த பொறாமையின் உச்சக்கட்டமே எமக்கு எதிராக ஜெனிவாவில் பிரேரணை கொண்டுவர நினைப்பது உண்மையில் ஜெனிவா மாநாட்டிற்கு அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா செல்லலாம். தேநீர் அருந்தலாம். ஆனால் அங்கு கூறும் கதைகளை கேட்க வேண்டிய அவசியம் எமக்கில்லை. நாம் சுதந்திர நாடு. எம் மீது தலையீடு செய் வதற்கு எவருக்குமே அதிகாரம் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=104689&category=TamilNews&language=tamil

இந்தியாவிற்கு இது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கை, தனது உற்ற நண்பன் என்கிறது இந்தியா.

இதில்... யார் சொல்வது உண்மை. :D

இப்பிடியும் ஒருகாலம் இருந்ததெண்டு இந்திய வருங்கால இந்திய அதிகாரிகள் சிந்திக்க இது உதவும்.

இப்படிதான் ஜே.வி.பி யும்  சொல்லி கடைசியா இந்தியனிடம் அடி வேண்டி தானே அடங்கினவை.

இந்தியாவிற்கு இது தெரியுமா?

தெரிந்தாலும் அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் நாங்கள் என்னும் சிறிலங்காவின் உற்ற நண்பன் என்றுதானே சொல்லப்போகிறார்கள்  

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சிறீலங்கா இந்தியனுடைய நண்பனல்ல! இந்தியாவிற்கும் அதில் விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் தமிழனை ஆதரித்தால்! அவன் முன்னேறி இந்தியாவிற்கே தலைமைதாங்கி விடுவானோ என்ற கலக்கமே இந்தியனைச், சிறீலங்கா தனது நண்பனென்று வலிந்து சொல்ல வைக்கிறது. :o

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா  என்றுமே  சிறீலங்காவை  எதிரியாக  நினைப்பதில்லை

நினைக்காது

காரணம் ஈழத்தமிழர்  மற்றும் தமிழகம்

எதிரிக்கு எதரி  நண்பன் என்பதே இந்தியாவின் இன்றைய  நிலை

ஆனால்

இந்த விடாப்பிடியான  நயவஞ்ச  கொள்கையால்

இன்று தமிழகத்தை  அது இழக்குமளவுக்கு வந்து நிற்கிறது

இது தொடரும் பட்சத்தில்

ஒரு குட்டித்தீவுக்காக

தனது உடலிருந்து பெரும் பாகத்தை  இழப்பது போல்

தமிழகத்தை  அது இழக்கும்

வினை  விதைத்தவன் அதை அறுக்கத்தானே  வேண்டும்

தமிழரின் சாபங்களும்

தியாகங்களும் மௌனங்களும்  ஒருநாளும் வீண் போகாது

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தான் ஒரே எதிரி என்றும் சொல்லுங்கோ அண்ணே  :lol:  

கூட்டமைப்பு அறிக்கை மாதிரி போச்சண்ணே உங்கட அறிக்கைகளும். யாருமே கணக்கெடுக்கிறாங்கள் இல்லை அண்ணே  :lol: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.