Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டுபிடிக்கப்படாத மலேசிய விமானம் - நடந்தது, நடப்பது என்ன? முழு விபரங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்டுபிடிக்கப்படாத மலேசிய விமானம் - நடந்தது, நடப்பது என்ன? முழு விபரங்கள்!
Posted Date : 16:12 (12/03/2014)Last updated : 16:24 (12/03/2014)

 

கடந்த சனிக்கிழமை (8ஆம் தேதி) அதிகாலை 12.40 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 777-200 விமானம் MH370 கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்குக்கு புறப்பட்டது. ஆனால், 1.30 மணி அளவில் தெற்கு சீன கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எவ்வித அபாய சமிக்ஞைகளையும் அனுப்பாமல் ரேடார்களில் இருந்து மாயமானது. விமானிகள் எந்தவித அபாய சமிக்ஞைகளையும் அனுப்பவில்லை.

ரேடாரில் இருந்து மாயமாவதற்கு சில நொடிகளுக்கு முன் விமானம் தனது பாதையில் இருந்து கோலாலம்பூருக்குத் திரும்பியிருக்கிறது. ஆனால், விமானிகள் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு எந்தவிதத் தகவல்களையும் தெரிவிக்கவில்லை. இது ஏன் என்பது இன்னும் மர்மமாக உள்ளது. கடைசியாக மலேசிய விமானம் MH370 சிவில் ரேடாரில் இருந்து மாயமான போது இருந்த இடம் இதுதான் - 065515 வடக்கு (நில நிரைக்கோடு) and 1033443 கிழக்கு ( நில நேர்க்கோடு ).

 

நடப்பது என்ன?

 

விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா? நடுவானிலேயே வெடித்துச் சிதறியதா? கடலில் விழுந்ததா? தொழில்நுட்பக் கோளாறா?

இந்தக் கேள்விகளுக்கு இதுவரை விடை கண்டுபிடிக்கப்படவில்லை. தீவிரமாக கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலமாகத் தேடப்பட்டாலும் விமானத்தின் எந்த ஒரு சிறு பாகம் கூட இப்போது வரை கடலிலோ, தரையிலோ கண்டெடுக்கப்படவில்லை.

 

விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு சில நொடிகளுக்கு முன்னர் பாதையில் இருந்து மாறி சென்றிருப்பதால் தேடும் இடத்தின் பரப்பளவு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கும், மலேசியாவுக்கும் நடுவில் உள்ள மலாக்கா ஜலசந்தியின் வடக்குப் பகுதியில் தேடப்படுகிறது. இந்த இடம் விமானம் கடைசியாகப் பறந்த இடத்தைவிட மேற்கில் உள்ளது. ஏன் சம்பந்தம் இல்லாமல் இங்கு தேடுகிறீர்கள்? என்று மலேசிய சிவில் ஏவியேஷன் துறைத் தலைவர் அசாரூதீன் அப்துல் ரகுமானிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "சில விஷயங்களை மட்டுமே உங்களிடம் சொல்ல முடியும். சில விஷயங்களை என்னால் உங்களிடம் சொல்ல இயலாது" என்றார்.

 

 

அப்டேட்: மலேசியாவைச் சேர்ந்த பெரிதா ஹரியன் நாளிதழுக்கு விமானப் படைத்தளபதி ராட்சலி தவுத் அளித்த பேட்டியில், மிலிட்டரியின் ரேடாரில் நள்ளிரவு 2.40 மணிக்கு MH370 விமானம் மலாக்கா ஜலசந்தியின் வடபகுதியில் இருக்கும் புலாவ் பெராக் தீவின் அருகே கடைசியாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். சிவிலியன் ரேடாரில் இறுதியாக பதிவான இடத்துக்கும் மிலிட்டரி ரேடாரில் பதிவான இந்த இடத்துக்கும் கிட்டத்தட்ட 300 கி.மீ. வித்தியாசம் . மலேசியாவின் கோட்டா பாரு பகுதியைத் தாண்டியதும் வழிமாறிய விமானம், அதன்பின் தாழ்வாகப் பறந்து மலாக்கா ஜலசந்தியை நோக்கித் திரும்பியது தற்போது உறுதியாகியுள்ளது. ஆனால்,இந்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை என மலேசிய அதிகாரிகள் இன்று மறுத்துள்ளனர்.

 

இந்நிலையில், மலேசிய விமானத்தை தேடும் பணி அந்தமான் வரை விரிவு படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக இந்தியா உதவ வேண்டும் எனவும் மலேசிய அதிகாரிகள் இந்தியாவை கேட்டுக்கொண்டுள்ளது.

 

மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானத்தில் இருந்த பயணிகள் பற்றிய தகவல்:

1. சீனா/தாய்வான் - 152 + 1 குழந்தை
2. மலேசியா - 38
3. இந்தோனேசியா - 7
4. ஆஸ்திரேலியா - 6
5. இந்தியா - 5
6. அமெரிக்கா - 3 + 1 குழந்தை
7. ஃப்ரான்ஸ் - 4
8. கனடா - 2
9. நியூசிலாந்து - 2
10. உக்ரைன் - 2
11. இத்தாலி - 1
12. நெதர்லாந்து - 1
13. ஆஸ்திரியா - 1
14. ரஷ்யா - 1

 

தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கும் நாடுகள்:

 

 

இப்போதைய நிலவரப்படி 10 நாடுகள் தெற்கு சீன கடல் பகுதியில் (South China Sea) விமானத்தைத் தேடி வருகின்றன. மலேசியா இந்தத் தேடுதல் பணியை முன்னின்று நடத்துகிறது. சீனா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், சிங்கப்பூர், ஃபிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மலேசியாவுடன் இணைந்து தேடுகின்றன.

மலேசியா - 14 கடற்படைக் கப்பல்கள் + 13 கோஸ்ட் கார்டு படகுகள் + 16 விமானங்கள்
வியட்நாம் - 8 கப்பல்கள் + 7 விமானங்கள்
சிங்கப்பூர் - 2 போர்க்கப்பல்கள் + 1 நீர்மூழ்கி உதவிக் கப்பல் + 1 சிகோர்ஸ்கி கடற்படை ஹெலிகாப்டர் + 1 C-130 விமானம்
ஆஸ்திரேலியா - 2 P-3C விமானங்கள் + 2 விமானப்படை கண்காணிப்பு விமானங்கள்
தாய்லாந்து - சூப்பர் லினக்ஸ் கடற்படைக் கப்பல் + 1 ரோந்துக் கப்பல்
ஃபிலிப்பைன்ஸ் - 1 ஃபோக்கர் F-27 விமானம் + 1 ஐலாண்டர் விமானம் + 2 ரோந்துக் கப்பல்கள்
இந்தோனேசியா - 4 அதிவிரைவு ரோந்துக் கப்பல்கள் + 1 கடல்பகுதி ரோந்து விமானம்
சீனா - 9 போர்க்கப்பல் + 1 பீரங்கிக் கப்பல் + 1 லேண்டிங் கிராஃப்ட் கப்பல் + 1 டெஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல் + 1 கமாண்டோ கேரியர் வகை கப்பல் + 50 கடற்படை வீரர்கள்
அமெரிக்கா -  தெற்கு சீன கடல் பகுதியில் ஏற்கனவே பயிற்சியில் இருந்த 2 டெஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல்கள் + 2 MH60 சீஹாக் ஹெலிகாப்டர்கள்

மேலும், அமெரிக்காவில் இருந்து NTSB (National Transportation Security Board) வல்லுனர்களும், போயிங் விமான நிறுவனத்தின் வல்லுனர்களும், FAA (Federal Aviation Administration) நிபுணர்களும் கோலாலம்பூருக்கு விரைந்திருக்கின்றனர். சீனா தன்னிடம் இருக்கும் 10 ஹை-ரெசல்யூஷன் சேட்டிலைட்டுகளை இந்த தேடுதல் பணிக்காக திருப்பிவிட்டிருக்கிறது,

 

தேடுதல் பணி - எண்ணெய் படலமும், கடல் கேபிளும்!

 

தேடுதல் பணியின்போது கடலில் எண்ணெய்ப் படலங்கள் மிதந்துகொண்டிருந்ததைப் பார்த்த தேடுதல் குழுவினர், அதை ஆராய்ச்சி செய்ததில் அது விமானத்தின் எரிபொருள் அல்ல என்று தெரிவித்துள்ளனர். வியட்நாம் விமானப் படையினர் தேடும்போது விமானத்தின் கதவு போன்ற ஒரு பாகம் கடலில் மிதப்பதைப் பார்த்திருந்திருக்கின்றனர், ஆனால், அது கடலில் செல்லும் கேபிளின் கேப் என்று தெரியவந்துள்ளதாக மலேசிய சிவில் ஏவியேஷன் துறையின் இயக்குனர் அசாரூதீன் அப்துல் ரகுமான் கூறியுள்ளார். எனவே, இப்போதைய நிலவரப்படி விமானத்தின் ஒரு பாகம்கூட கிடைக்கவில்லை என்பதே உண்மை.

மாயமான விமானத்தின் பைலட்டுக்கு ஆதரவு குவிகிறது!

மாயமான மலேசிய விமானத்தின் கேப்டன் பைலட்டின் பெயர் ஜஹாரி அஹமத் ஷாஹ். 33 வருடங்களாக பைலட்டாக இருக்கும் இவருக்கு 53 வயது ஆகிறது. மொத்தம் 18,365 மணி நேரங்கள் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். விமானம் ஓட்டுவதை தொழிலாகப் பார்க்காமல் விருப்பத்தின் பெயரால் செய்தவராம். தற்போது தான் இயக்கிய போயிங் 777 விமானத்தின் மீது பெரும் ஆர்வம் கொண்ட இவர், வீட்டில் அதே விமானத்தின் சிமுலேட்டரை அமைத்து, அதில் பயிற்சி பெற்று வந்தார் என்கின்றனர் அவருடன் வேலை பார்த்தவர்கள்.

சிமுலேட்டர் பயிற்சி பெறும் மற்ற விமானிகளுக்கு பரீட்சை வைக்க, மலேசிய சிவில் ஏவியேஷன் துறையினால் ஜஹாரி அஹமத் ஷாஹ் அங்கீகரிக்கப்பட்டவர்  என மலேசியன் ஏர்லைன்ஸில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். 

33 வருடங்களாக மலேசியன் ஏர்லைன்ஸில் பணியாற்றும் இவர் ஃபோக்கர் F50, ஏர்பஸ் A300 மற்றும் போயிங் 737 போன்ற பலதரப்பட்ட விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்.

மலேசிய விமானம் மாயமானதற்கு விமானிகளின் தவறு காரணமாக இருக்கவே வாய்ப்பில்லை என்று விமானிகளிடம் தொடர்பில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.

 

 

தீவிரவாதிகளின் சதியா?

தீவிரவாதிகள் இந்த விமானத்தைக் கடத்தியிருக்கவோ அல்லது மூழ்கடித்திருக்கவோ கூடும் என்ற கோணத்திலும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். இதில் ஒரு பாஸ்போர்ட் இத்தாலியையும், இன்னொரு பாஸ்போர்ட் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்களுடையது ஆகும். இந்த பாஸ்போர்ட்டுகளில் பயணித்தவர்களுடைய விமான டிக்கெட், வியாழக்கிழமை தாய்லாந்தில் வாங்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு டிக்கெட் பீஜிங் வழியாக ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்ஃபர்ட்-க்கும், இன்னொரு டிக்கெட் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பாஸ்போர்ட்டுகளுடைய உண்மையான உரிமையாளர்கள் விமானத்தில் பயணிக்கவில்லை. இத்தாலியைச் சேர்ந்தவருடைய பாஸ்போர்ட் 2012ஆம் ஆண்டிலும், ஆஸ்திரியாவைச் சேர்ந்தவருடைய பாஸ்போர்ட் 2013ஆம் ஆண்டிலும் தாய்லாந்தில் திருடப்பட்டுள்ளது. இந்த இருபாஸ்போர்ட்டுகளுமே இன்டர்போலின் டேட்டாபேஸில் இருக்கிறது. எப்படி போலி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஒரு பன்னாட்டு விமானத்தில் ஏறமுடிந்தது என இன்டர்போல் கேள்வி எழுப்பியுள்ளது.

திருடப்பட்டுள்ள பாஸ்போர்ட்டில் பயணித்த ஒருவர் ஈரானைச் சேர்ந்த Pouria Nour Mohammad Mehrdad என்ற 19 வயது வாலிபர். இவருடைய தாயார் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் மகனுக்காக காத்திருந்திருக்கிறார். அவரிடம் விசாரித்ததை வைத்து இந்த ஈரானியர் எந்த தீவிரவாதக் குழுவையும் சேர்ந்தவர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், புகலிடம் தேடித்தான் அவர் ஃப்ராங்க்ஃபர்ட்டுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் பயணித்தார் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு போலி பாஸ்போர்ட்டின் உண்மையான உரிமையாளர் Christian Kozel என்ற ஆஸ்திரியர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார். எனவே போலி பாஸ்போர்ட்டில் பயணித்த இருவரும் புகலிடம் தேடியே ஐரோப்பாவுக்கு பயணித்தது உறுதியாகியுள்ளது.

மேலும், தீவிரவாதச் செயலுக்கான எந்தவிதமான தடயங்களும், ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை!

 

 

போயிங் 777-200 - உலகின் மிக பாதுகாப்பான விமானங்களுள் ஒன்றா?!

காணாமல் போன MH370 போயிங் 777-200 விமானத்தில் கடைசியாக ஃபிப்ரவரி 23ஆம் தேதி வழக்கமான பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது விமானத்தில் எந்தவித கோளாறும் காணப்படவில்லை என்று மலேசியன் ஏர்லைன்ஸ் க்ரூப்பின் சி.இ.ஓ அஹமத் ஜௌஹரி யாயா தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு மலேசியன் ஏர்லைன்ஸ் இந்த விமானத்தை வாங்கியுள்ளதாகவும், இதுவரை 53,465.21 மணி நேரங்கள் பறந்திருக்கிறதாகவும் அவர் கூறியுள்ளார்.

போயிங் 777-200 விமானம் சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பான விமானம் என தகவல்கள் கூறுகின்றன. கடைசியாக 2013ஆம் வருடம் சான் ஃப்ரான்சிஸ்கோவில் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஓடுதளத்தின் அருகே விபத்துக்குள்ளாகி 3 பேர் இறந்தது மட்டுமே இதுவரை போயிங் 777 ரக விமானத்தில் ஏற்பட்ட பெரிய விபத்து ஆகும்!

 

 

தாழ்வாகப் பறந்த விமானத்தைப் பார்த்தாகச் சொல்லும் இருவர்!

 

இந்நிலையில், மலேசியாவைச் சேர்ந்த இருவர் வழக்கத்தைவிட வேறு ஒரு வழியில், வானத்தில் தாழ்வாகப் பறந்த விமானம் ஒன்றைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர். 

மலேசியாவின் கெடெரே (Ketereh) பகுதில் வசிக்கும் அலிஃப் ஃபாதி அப்துல் ஹதி என்ற ஒருவர் நள்ளிரவு 1.45 மணி அளவில்  தன் வீட்டில் இருந்து விமானங்கள் மேலே எழும்பும்போதும், தரையிறங்கும்போதும் ஒளிரவிட்டு இருக்கும் பளீரென்ற வெளிச்சம் ஒன்றைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக உயரம் குறைந்து வந்ததாகவும், வழக்கத்தைவிட மாறுவழியில் 'பச்சோக்' என்ற கடலை ஒட்டிய பகுதியை நோக்கி அந்த வெளிச்சம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது எதுவும் தோன்றவில்லை எனவும், மாயமான விமானத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடன், போலீசிடம் இதைப் பற்றிக் கூற முடிவெடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.

 

இவர் இருக்கும் பகுதியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கும் குயாலா பேசுட் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆசித் இப்ராகிம் என்ற 55 வயது மீனவர் ஒருவரும் இரவு 1.30 மணி அளவில் ஒரு தாழ்வாகப் பறந்த விமானத்தைப் பார்த்தாராம்.  வழக்கமாக விமான விளக்குகளின் வெளிச்சம் தொலைவில் உள்ள நட்சத்திரத்தைப் போலத்தான் இருக்கும். ஆனால், தான் பார்த்த வெளிச்சம் பளீரென்று இருந்ததாகவும், மேகங்களுக்குக் கீழ் தாழ்வாகப் பறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் சொல்வது MH370 விமானத்தைத்தானா என்பது விரைவில் தெரிந்துவிடும்!

 

 

நன்றி விகடன்.

  • கருத்துக்கள உறவுகள்
மேர்வின்  டி  சில்வா, கொழும்பு பக்கம் தள்ளிக் கொண்டு போட்டார் போல கிடக்குது.
 
இப்ப எல்லாம் கிலோ கணக்கில இல்லை, தொன் கணக்கில இலங்கை போதைப் போரில் இறக்குமதி செய்யுது.
  • கருத்துக்கள உறவுகள்
உபாலி விஜேவர்தனவின் விமானம் காணாமல் போன இடத்திலேயே மலேஷிய விமானமும் காணாமல் போயுள்ளது?
13 மார்ச் 2014
 
இலங்கையின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான உபாலி விஜேவர்தன பயணம் செய்த விமானம் காணாமல் போன பகுதிலேயே மலேஷிய விமானமும் காணாமல் போயுள்ளது. மலேஷிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் அண்மையில் காணாமல் போயிருந்தது. இந்த விமானத்தில் மொத்தமாக 239 பயணம் செய்திருந்தனர். இந்த விமானம் காணாமல் போன அதே பிரதேசத்தில் பிரபல வர்த்தகர் உபாலி விஜேவர்தன பயணம் செய்த விமானமும் காணாமல் போயிருந்தது. 
 
1983ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி உபாலி விஜேவர்தன பயணம் செய்த விமானம் காணாமல் போயிருந்தது. இந்த விமானத்தில் உபாலி விஜேவர்தனவுடன் மேலும் ஐந்து பேர் பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் முதனிலை செல்வந்தரான உபாலி விஜேவர்தன லியார்ஜெட் ரக விமானத்தில் பயணம் செய்திருந்தார். இரவு 8.41 மணிக்கு கொழும்பிலிருந்து இந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.
 
இந்த விமானத்தில் உபாலி விஜேவர்தனவுடன், அவரது மலேஷிய சட்டத்தரணி எஸ்.எம். ரட்னம், உபாலி குழும பணிப்பாளர் ஆனந்த பெலி மொஹாந்திரம், விமானி நோயல் ஆனந்தப்பா, சக விமான சிட்னி சொய்சா, விமான சிற்பந்தி எஸ்.சேனாநாயக்க ஆகியோர் பயணம் செய்திருந்தனர்.
விமானம் புறப்பட்டு 11 நிமிடங்களில் விமானத்தை 27000 அடி உயரத்திற்கு உயர்த்த கட்டுப்பாட்டு நிலையத்திடம் விமானி ஆனந்தப்பா அனுமதி கோரி, அனுமதியைப் பெற்றுக்கொண்டார். விமானம் மணிக்கு 744 கிலோ மீற்றர் வேகத்தில் இந்து சமுத்திர கடற்பரப்பில் பறப்பதனை மலேஷிய ராடார் பதிவு செய்திருந்தது. இரவு 9.02 அளவில் விமானம் மணிக்கு 1352 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்ததுடன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
 
இதேவேளை, இந்தோனேஷியாவின் சிறிய மீனவக் கிரமமான டான்ஜீவாங் பெரின்ஜினைச் சேர்ந்த மீனவர்கள், கடலி;ல் ஏதோ வெடித்து சிதறுவதனை அவதானித்தனர். பாரிய சத்தமொன்றுடன் ஏதோவொரு பொருள் கடலில் வெடித்துச் சிதறுவதனை கண்டதாகத் தெரிவித்தனர். மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குறித்த மீனவர்கள் பாரிய வெளிச்சம் தென்பட்ட இடத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் இருந்தனர். அதிகாலையில் குறித்த இடத்தை நோக்கிப் பயணம் செய்தனர்.
 
வெடிப்பு இடம்பெற்ற இடத்திலிருந்து விமான சிறகு ஒன்றை போன்றே பொருள் ஒன்றையும், கதவு ஒன்றையும் ஒரு பக்கட் பானையும் மீனவர்கள் கண்டு எடுத்தனர். விமானக் கதவுகளில் இரத்தம் படிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மலாக்க நீரிணைப் பகுதியில் கடுமையான கடல் கொந்தளிப்பு காணப்பட்டதாகவும், 100 மைல் தொலைவில் விமானமொன்றின் டயர் மீட்கபபட்டதாகவும் நான்கு நாட்களின் பின்னர் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
 
எனினும் மீனவர்கள் குறிப்பிடுவதனைப் போன்று குறித்த பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பு இருக்கவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதனால் விமானத்திற்கு என்ன நேர்ந்தது உண்மையில் விபத்துக்குள்ளானதா, அவ்வாறு விபத்துக்குள்ளாகியிருந்தால் எந்த இடத்தில் விபத்து இடம்பெற்றிருக்கும் போன்ற நூற்றுக் கணக்கான கேள்விகளுக்கு இதுவரையில் எவராலும் விடை வழங்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.
 
உபாலி விஜேவர்தன பயணம் செய்த விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்பதனை அறிந்து கொள்வதற்காக ஏழு நாடுகள் ஆறு மாத காலம் விரிவான விசாரணைகளை நடத்தியிருந்தன. விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட ஏழு நாடுகளின் புனலாய்வு அதிகாரிகளும் இராணுவ வளங்களும் விசாரணைகளுக்காக பயன்படுத்தப்பட்டன.
 
அமெரிக்க உளவு விமானம், இலங்கை விமானங்கள், இந்திய, அவுஸ்திரேலிய ரஸ்ய கப்பல்கள் மற்றும் விமானங்கள், மலேஷிய பெற்றோல் படகுகள் உள்ளிட்டவை பயன்படுத்தி விமானம் தேடப்பட்டது. எனினும், விமானம் பற்றிய எவ்வித உறுதியான தகவல்களும் கிடைக்கவில்லை.
 
இரத்தம் படிந்த பைபர் கிளாஸ் மற்றும் உபாலி விஜேவர்தனவின் மோதிரம் என சந்தேகிக்கப்படும் மோதிரம் ஆகிய இரண்டு பொருட்கள் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டன. இதேவேளை, உபாலி விஜேவர்தன உயிரிழந்து விட்டதாக அறிவிக்க இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் முன்வரவில்லை. உறுதியான ஆதரங்கள் இன்றி உபாலி இறந்து விட்டதாக அறிவிக்க முடியாது என தெரிவித்தனர். விமானம் ஏதேனும் தீவுகளில் விழுந்திருக்கலாம் சில வேளைகளில் இன்னமும் உயிருடன் இருக்கலாம் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
 
ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன மிக முக்கியமான அரசாங்கப் பதவியொன்றில் உபாலி விஜேவர்தனவை அமர்த்தினார். ஜனாதிபதி ஜயவர்தனவின் மைத்துனரே உபாலி என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தப் பதவி வழங்கப்பட்டமைக்கு பிரதமர் ரணசிங்க பிரேமதாச எதிர்ப்பை வெளியிட்டார். உபாலியை கொல்லப் போவதாக பாராளுமன்றில் சூளுரைத்திருந்தார்.
 
எனவே, உபாலியின் விமானம் தலைமறைவானதற்கும் பின்னாள் ஜனாதிபதியான பிரேமதாசவிற்கும் தொடர்பு இருக்கலாம் என அந்தக் காலத்தில் வதந்திகள் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. செல்வந்த குடும்பத்தில் பிறந்த உபாலி விஜேவர்தன 26 வயதிலேயே கோடீஸ்வரராக உருவெடுத்தார்.
 
கன்டோஸ் என்ற சிறிய கொக்லட் உற்பத்தி நிறுவனமொன்றின் மூலம் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்த உபாலி விஜேவர்தன, பெருந்தோட்டத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் துரித கதியில் தடம் பதித்து வெற்றி வாகை சூடினார். இலங்கையில் மட்டுமன்றி பிராந்திய வலய நாடுகளிலும் தனது வர்த்தக நடவடிக்கைகளை உபாலி விஸ்தரித்திருந்தார்.
 
இதனால் அவருக்கு வர்த்தக ரீதியான எதிரிகள் இருந்திருக்கக் கூடும் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்பட்டன. எனினும், விமானம் விபத்துக்குள்ளானதா அந்த விமானத்தில் அவருடன் பயணித்தவர்களுக்கு என்னவாயிற்று, போன்ற தகவல்கள் இன்று வரையில் மர்மமாகவே காணப்படுகின்றது. 
 
இதேவேளை, அண்மையில் காணாமல் போன மலேஷிய விமானத்தின் பகுதிகள் என சந்தேகிக்கப்படும் சில பாகங்களை சீன செய்மதியொன்று கண்டு பிடித்துள்ளது. தென் சீன கடற்பரப்பில் குறித்த பொருட்கள் மிதப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சீன செய்மதிகள் குறித்த பகுதியில் புகை காணப்பட்டதனையும் விமான பாகங்கள் மிதப்பதனையும் படம்பிடித்துள்ளதாகவும், இது குறித்த விமானத்தின் பாகங்களா என்பதனை உறுதிபடக் கூற முடியாது எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Live: Search for missing Malaysia Airlines moves to west of peninsula as records show it flew another 350 miles after disappearing
  •  

 

 

 

 

 

 

 

http://www.mirror.co.uk/news/world-news/missing-malaysia-airlines-flight-live-3219331

மலேசிய விமானம் மாயம் - அமெரிக்க மாணவரின் அதிர வைக்கும் தியரி

டம்ளர் என்ற வலைத்திரட்டியில் ஆண்ட்ரூ என்கிற அமெரிக்க மாணவர் எழுதியுள்ள கட்டுரை பரபரப்பாகியிருக்கிறது. ஆண்ட்ரூவின் அப்பா ஒரு புரொபஷனல் பைலட். அதனால் சிறுவயதிலிருந்தே விமானம் பற்றி ஆர்வம். அதனால் மலேசிய விமானம் மாயமானதும் அது தொடர்பாக நிறைய வாசித்து அம்மாணவர் எழுதியுள்ள கட்டுரை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் அக்கட்டுரையில் உள்ள நம்பகத்தன்மை.

சில விமானங்களில் சில கோளாறுகள் ரெகுலர். அது போல போயிங் 777 விமானங்களின் முதுகில் துருப்பிடிக்கக்கூடிய கோளாறுகள் ரெகுலர்.

போயிங் 777 விமானங்களின் முதுகுப்பகுதியில் சாட்டிலைட்டை தொடர்பு கொள்ள உதவும் SATCOM Adapterகள் உள்ளன. அவை பொருத்தப்பட்டுள்ள இடங்கள் அடிக்கடி துருவேறி பிளந்து கொள்ள வாய்ப்பு உண்டாம்.

"cracking in the fuselage skin underneath the satellite communication (satcom) antenna adapter"

விமானத்தின் முதுகுப்பகுதியில் பிளவு ஏற்பட்டால் என்ன ஆகும்? விமானத்திற்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கொண்டே போய், மயக்கம் ஏற்பட்டு, இறுதியில் சுவாசமே நின்று போகும்.

கிட்டத்தட்ட 120 விமானங்களில் இந்தக் கோளாறுகள் இருப்பதாக செப்டம்பர் 26, 2013ம் தேதி வெளியான FAA அறிக்கை கூறியுள்ளது.
இதற்கு முன்னர் ஒரு போயிங் 777 வகை விமானத்தில் 40.6 செ.மீ அளவுக்கு ஒரு பிளவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக FAA ரிப்போர்ட் ஒன்று கூறுகிறது.

மலேசிய விமானம் MH370க்கும் இதே கதி ஏற்பட்டிருக்கலாம். திடீரென பிளவு ஏற்பட்டதும் முதலில் சாட்டிலைட் தொடர்புகள் அனைத்தும் முழுவதுமாக துண்டிக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் ஆக்ஸிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்திருக்கும். அதைப்பற்றி உணர்வதற்குள் பைலட்டுகளும், பயணிகளும் தாங்களே அறியாமல் ஆழ்ந்த உறக்கத்துக்கும், மயக்கத்துக்கும் உள்ளாகியிருப்பார்கள்.

ஆனாலும் ஆட்டோ பைலட் நிலையில் இருந்த விமானம் தொடர்ந்து அதே உயரத்தில் பறந்திருக்கலாம். பின்னர் விமானத்துக்குள் அழுத்தம் குறைவு மற்றும் எரிபொருள் காலியானது காரணமாக கிழக்கு சைனா அல்லது பசிபிக் கடலில் விழுந்திருக்கலாம்.

PPRUNE - Professional Pilots Rumour Network என்ற ஆன்லைன் குழுத்தளம் ஒன்று உள்ளது. அங்கிருந்துதான் இந்த சிந்தனைக்கான இழையைப் பிடித்ததாக ஆண்ட்ரூ கூறியுள்ளார்.

- Selva Kumar ISR

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி

உடைந்து விழுந்த விமானத்திலிருந்து  ஒரு உடம்பு  அல்லது பொருள் கூடவா  மிதக்கவில்லை.... :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதோ நடக்கிறது ...காலம்  தாழ்த்து கிறார்களா? பொது ஜனத்தின் வேதனையை வாங்கி கட்டி கொள்ள போகிறார்கள். :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ பெரிய சுத்துமாத்து ஒன்று நடந்துள்ளது போல் தெரிகின்றது. ஒருசில ஐரோப்பிய ஊடகங்கள் இந்த செய்தியை பெரிதுபடுத்தாமலே விட்டுவிட்டார்கள்.

Nigerian 'prophet' TB Joshua forewarns about a tragedy involving a jet plane in an 'Asian country.'

This YouTube video showing his sermon in July last year has gone viral following the disappearance of the Air Malaysia plane.


http://www.youtube.com/watch?v=Q1-NsRWv25k#t=188

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஏதாவது விசேசமான இனிப்புப் பண்டங்களை அம்மா சாதாரன பையில் போட்டு எமது பாடப் புத்தகங்களுக்கு அருகில் போட்டுட்டு பேசாமல் தன் பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருப்பா. நாங்கள் அடுக்களைக்குள் சட்டியல் ,உறி பறன் என்டு எல்லாத்தையும் போட்டு உறிட்டித் தேடிக்கொண்டிருப்பம்.

 

இங்கும் அதுதான் நடக்குது போல் கிடக்கு. என்ன அது வீட்டுக்க நாங்கள் நாலஞ்சுபேர் , இஞ்ச நாலு பத்து நாடுகள்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.