Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்

ஈழத் தமிழருக்குள்ளும் முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு என்று பிரிவுகள் இருந்தன. இப்போதும் அவர்களிம் வழித்தோன்றல்கள் இருக்கவே செய்கின்றார்கள்..

ஏற்கனவே டியுூப் லைட் என்று சொல்லியிருக்கிறேன்.

இந்த முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு ஆதிக்குப் புரியும்படியாக மண்டையில் ஏறுகிற மாதிர தெளிவுபடுத்துவீர்களா கிருபன்ஸ்?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெயருக்கேற்றால்போல்தான் இருக்கின்றீர்கள். தமிழ் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சியைப் பற்றி இருக்கும் புத்தகங்களை முதலில் படிக்கவேண்டும்.

ஈழத்து எழுத்தாளர்களான டானியல், எஸ்.பொ, தளையசிங்கம் போன்றோரின் எழுத்துக்களைப் படிக்க முயன்றால் எல்லாம் தானாக விளங்கும்.

ஆதி உதில கனக்கப் புத்தகங்கள் கிடக்கு வாசியுங்கோ,

http://www.noolaham.net/library/books_subject.htm

முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன?

எனக்கு இந்த முற்போக்கு என்ற அடைமொழியே பிடிக்க வில்லை. அது ஒரு திருகப்பட்ட அர்த்தத்தைத்தான் கொடுக்கிறது. மனிதனின் பிரச்சினைகளை மிக அக்கறையோடு அணுகும் கலை நிறைந்த இலக்கியங்கள் எல்லாம் முற்போக்கு இலக்கியங்கள்தான். இலக்கியத்தை முற்போக்கு இலக்கியம் பிற்போக்கும் இலக்கியம் என்று பிரிக்க முடியுமானால் முற்போக்கு இலக்கியத்தையும் அதி முற்போக்கு இலக்கியம் அதி அதி முற்போக்கு இலக்கியம் என்று உலகத்தில் எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்களோ அத்தனை பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டே போகலாமே! எனவே இலக்கியம் என்றாலே முற்போக்கு இலக்கியம்தான் என்பது கருத்து. இலக்கியம் என்றால் முற்போக்கு இலக்கியம், முற்போக்கு இலக்கியம் என்றால் இலக்கியம் - அது தான் நான் நினைப்பது. தரமற்றவற்றை இலக்கியத்துக்கு உயர்த்திப் பின்பு அவற்றை வேறுபடுத்த முயலும்போதுதான் முற்போக்கு இலக்கியம் என்ற பெயர் எழவேண்டிய நிலை ஏற்படுகிறது. இது தரமற்ற இன்றைய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் தரமற்ற தன்மையை மறைப்பதற்காக, தாங்களாகவே ஒதுக்கப்பட்டுக் கீழே விழுந்துவிடும் வேறு தரமற்ற படைப்புகள் உயர்ந்தவை என்று காட்ட முயலும் ஒரு நிலை. உருவத்துக்க முக்கியம் கொடுக்காமல் (கொடுக்க முடியாததால்), உள்ளடக்கத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கம் சில எழுத்தாளர்களும் இந்தப் பணிக்கு மிகவும் உதவுகிறார்கள். அதனால்தான் 'முற்போக்கு இலக்கியம்' என்ற இந்தத் தலைப்பும் குறையை மறைக்க முயலும் ஒரு வகை விளம்பரம் என்று ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டேன்.

அப்படியென்றால் முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வி, இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியாக மாறிவிடுகிறது. இலக்கியம் என்றால் என்ன? அதைப்பற்றி ஆயிரக்கணக்கானோர் எழுதிவிட்டனர். இனியும் எழுதுவது வாசகர்களின் அறிவை அவமதிக்கும் அனாவசியமாகும். அத்துடன் rigid ஆன constitution எதிலும் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். இலக்கியத்துக்கு உருவமும் வேண்டும், உள்ளடக்கமும் வேண்டும். இலக்கியத்தின் இரு கால்கள் அவை. ஆனால், அந்த உருவமும் உள்ளடக்கமும் ஒவ்வொரு தனிப்பட்ட எழுத்தாளனின் சக்திக்கேற்ப விரியக் கூடியவை. புதுமைப்பித்தன் தம் சிறுகதைகளின் உள்ளடக்கத்துக்கு மட்டும் ஓர் உச்சத்தைக் கொடுக்கவில்லை. அவருடைய எழுத்தின் சத்தியாலும் நடையின் கவர்ச்சியாலும், கலைமிகுந்த கவர்ச்சியாலும், உருவத்துக்குமே ஓர் புது உச்சத்தைக் கொடுத்திருக்கிறார் என்பதுதான் என் எண்ணம். ஆனால், உருவமும் உள்ளடக்கமும் அவனவனின் சக்திக்கும் திறமைக்கும் என்றாலும் ஒவ்வொரு எழுத்தாளனும் எதிர்நோக்க வேண்டிய சில பொதுப்பிரச்சினைகளும் உண்மைகளும் இருக்கின்றன. அவை அவனது சூழலாலும் கால கட்டத்தாலும் அதே சமயம் மனித வர்க்கத்துக்கே சொந்தமான, எல்லாக் காலகட்டத்துக்குமே செல்லுபடியான, பொது மனிதத் தன்மையாலும் நிர்ணயிக்கப்பட்டு எழுகின்றன. அந்தப் பொதுப் பிரச்சினைகளை தன் சக்திக்கும் அறிவுக்கும் ஏற்ப ஓர் எழுத்தாளன் அணுகும்போது அவனுடைய தனித்தன்மையைக் காட்டும் உருவமும் உள்ளடக்கமும் கொண்ட இலக்கியங்கள் வெளிவருகின்றன. நான் ஓர் எழுத்தாளன். என் தனித்தன்மையை விளக்கம் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் கொண்ட இலக்கியத்தைத் தெரிய வேண்டுமானால், இலக்கியத்துக்கு நான் கொடுக்கும் வரைவு இலக்கணத்தைப் புரிய வேண்டுமானால், இனி நான் வெளியிடும் படைப்புகளைத்தான் படிக்க வேண்டும். ஆனால், என்னை இன்று எதிர்நோக்கும் பொதுப் பிரச்சினைகளும் உண்மைகளும் இருக்கின்றன. அவற்றைத்தான் மற்ற எழுத்தாளர்களும் எதிர்நோக்குகிறார்கள். எதிர்நோக்கும்போது அவரவர் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்பத்தான் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். அவற்றை என் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ப நான் எப்படிப் புரிந்துகொள்கின்றேன் என்பதைக் காட்டுவதுதான் இக்கட்டுரை. அதன் மூலம் வரைவு இலக்கணம் கொடுப்பதை விட இலக்கியத்தைப்பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை அதிகமாகத் தெளிவு படுத்தலாம் என்று நான் நினைக்கிறேன்.

என்னை எதிர்நோக்கும் பொதுப் பிரச்சினைகளும் உண்மைகளும் பல ரகமானவை.

எல்லாவற்றுக்கும் முதலில் இதை எழுதப் போகும் எனக்கு ஓர் தடை ஏற்படுகிறது. நான் இப்போ சொல்லப்போவது இலங்கையை மையமாக வைத்தா அல்லது உலகத்தையே மையமாக வைத்தா?

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதால் ஏற்படும் ஒரு தவிர்க்க முடியாத நிலை அது. உலகத்தை மறந்து இலங்கையை நினைக்க முடிவதில்லை. இலங்கையை மறந்து உலகத்தை நினைக்க முடிவதில்லை. அளவை மீறாத தேசியத்தை அடிப்படையாக வைத்து வளர்ந்துகொண்டிருக்கும் ஒர் சர்வ தேசியப் போக்கு இக்கால அரசியல் நிலை. அது சரிவந்துவிட்டால் பழைய குறுகிய மனப்போக்கு, கொள்கைகள், சட்டதிட்டங்கள் என்பவை உடைபட்டுப் போகும். தளர்ச்சியும் , அதனால் ஏற்படும் பரந்த முற்போக்கும் சுதந்திரமும் கிடைக்கும். அது பிழைத்துவிட்டால் பழைய தேசிய எல்லைகளுக்குள் உட்பட்ட அடிமைத்தனத்துக்குப் பதிலாக சர்வதேசிய அளவில் விரியும் அடிமைத்தனமோ அல்லது அழிவோ நம்மை மூழ்கடித்துவிடும். இந்தியாவின் வடக்கு எல்லையில் இப்போது நான் இதை எழுதும் நேரத்தில் (ஒக்டோபர் மாதம் முப்பத்தியொன்று) முன்னதின் (அடிமைத் தனத்தின்) ஆபத்து பயமுறுத்திக் கொண்டு முன்னேறுகிறது. இங்கே உள்ள கொம்யூனிஸ்ட் கட்சி அதைப் பற்றி அவ்வளவு ஒன்றும் சொல்லாமல் இருப்பது ஐந்தாம் படைப் பயத்தை அதிகரிக்கச் செய்கிறது. (பின்பு ஒர் அறிக்கை விடப்பட்டிருக்கிறது. இந்திய-žன எல்லைப் போர் ஒர் சிறிய விசயம் என்றும், அதை விட்டுவிட்டுக் கியூபாப் பிரச்சினையைப்பற்றிக் கவலைப்பட வேண்டும் என்றும் உபதேசம் செய்யும் பாணியில். žனப் பொதுவுடமை அரசாங்கம் இந்தியா மீதும் நேரு மீதும் வசை மாரி பொழிந்தும், ஏகாதிபத்தியவாதிகள் என்று பிரசாரம் செய்தும் கியூபா சார்பில் பெரும் பிரம்மாண்டமான ஊர்வலங்கள் நடத்தியும் உள்நாட்டு மக்களை ஏமாற்றுவது இங்கே கவனிக்கத்தக்கது. இந்தப் பொதுவுடமை வாதிகளிடம் ஒரு தவறாத consistency இருக்கிறது. ரஷ்யாவில் குலாக்குகளை மறைத்துக்கொண்டு ஜெர்மன் யூதர்களைப்பற்றிப் பேசினர் ஒரு காலத்தில். பின்னர் ஹங்கேரியை மறைத்துக்கொண்டு ஜெர்மன் யூதர்களைப்பற்றிய பேசினர் ஒரு காலத்தில். பின்னர் ஹங்கேரியை மறைத்துக் கொண்டு சுயஸைப்பற்றிக் கத்தினார்கள். இப்போது žனாவை மறைத்துக்கொண்டு கியூபாவைக் காட்ட முயல்கின்றனர். இப்படித் திரித்துக் கூறும் ஒரு கட்சியின் கீழிருந்து இலக்கியம் எழுதும் நிலையை ஒருக்கால் நினைத்துப் பாருங்கள். žனாவில் ஒரு எழுத்தாளன் இப்போ எப்படித் தன்னை ஒரு சரியான உலகநிலையில் நிறுத்திச் சிந்திக்க முடியும்? சோஷலிஸ யதார்த்தம் என்பதும், ஒரு பக்கத்தை மறைத்துக்கொண்டு ஒரு பக்கத்தைக் காட்டும் வித்தைதான். அத்துடன் இந்தோ-žன யூத்தம் வேறு ஒரு உண்மையையும் காட்டுகிறது. இந்தியா, பொருளாதார வளர்ச்சியோடு ஆன்மீக வளர்ச்சிக்கும் ஓர் உதாரணமாக நிற்கிறது. žனா, வெளும் லோகாயத வளர்ச்சியை மட்டும்தான் குறிக்கிறது. லோகாய வளர்ச்சி மனிதனை எந்த வகையிலும் வளர்க்காமல் பழைய கொலோனியவாதியாகவேட்டியிருக்

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்

சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

http://www.infitt.org/pmadurai/mp117.html

  • தொடங்கியவர்

ஆதிவாசிக்கு வாசிப்பு வேலை அதிகமாகிவிட்டது.

நன்றி நார்த்ஸ்!

  • தொடங்கியவர்

இந்த இடம் கிருபன்ஸ் சொன்னமாதிரி தலையெல்லாம் விறைப்பதற்குரிய இடம்தான்......... வாசிச்ச வாசிப்பில் ஆதிக்கு மண்டை விறைத்து மயக்கம் வருது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடம் கிருபன்ஸ் சொன்னமாதிரி தலையெல்லாம் விறைப்பதற்குரிய இடம்தான்......... வாசிச்ச வாசிப்பில் ஆதிக்கு மண்டை விறைத்து மயக்கம் வருது.

:D:D :P

  • தொடங்கியவர்

என்ன சிரிப்பு?....

வாசிச்ச வாசிப்பில்........ எதை என்று சொன்னேனா?

  • 16 years later...
  • கருத்துக்கள உறவுகள்

2௦15 ல் பதியப்பட்ட கருத்துக்கு பதில் இப்ப யாழில் எழுதமுடியாது இந்த திரி 2௦௦6ல் தொடங்கியது எப்படி ?

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

2௦15 ல் பதியப்பட்ட கருத்துக்கு பதில் இப்ப யாழில் எழுதமுடியாது இந்த திரி 2௦௦6ல் தொடங்கியது எப்படி ?

சில திரிகளை மோகன் அண்ணை திறந்து விட்டுள்ளார் போல இருக்கிறது. கருத்துப் பதிய என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மனிதன் பொது வெளிக்கு வந்து விட்டால் எந்தவொரு விமர்சனங்களையும் எதிர் கொள்ளும்/தாங்கும் சக்தியை கொண்டிருக்க வேண்டும்.தனியே நல்லதையே கேட்கும் சக்தி எதையும் வளர விடாது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.