Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீதி விளக்கடியில்....வெளிச்சது.. உலகம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1925055_10151968801312944_67575993530303

 

லண்டன் வீதியிலே

மின் விளக்குகளில்

அவள் அழகு வதனம்

பள பளக்கிறது..

காதுத் தூக்கங்கள்

மின்னி மிளிர்கின்றன..

நட்ட நடு நிசியில்

தவிப்புடன் அவள்..

முகமெங்கும்

ஏக்க ரேகைகள்..

நகப்பூச்சுக்களால் அழகு பெற்ற கைவிரல்கள்

தொடுகை அலைபேசியை நோண்டியபடி..

எதற்கோ அவசரப்படுகிறாள்

பாவம் என்று இரங்குகிறது

இந்தப் பாவி மனம்..!

 

அடுத்த சில வினாடிகளில்..

பறந்து வருகிறது

ஒரு பி எம் டபிள்யு..

சாலை ஓரம்

அவள் பாதத்தின் அருகே

அமைதியாகி நிற்கிறது..

நாலு வார்த்தையில்

பேரம் முடிகிறது..

எட்டிப் பாய்த்தே

காரில் ஏறிப் பறக்கிறாள்..

பாவம் என்று ஏங்கிய மனம்

இப்போ கொஞ்சம் பதறுகிறது...

 

அடுத்த சில வினாடிகளில்..

சைரன் ஒலிக்க

ஓடுகின்றன பொலிஸ்கார்கள்..

விரட்டிச் சென்று

விராண்டிப் பிடிக்கும் பருந்தாட்டம்

குறுக்கே நிற்க..

மறுக்கிறது பி எம் டபிள்யு

வெட்டி ஓட நினைக்க..

சூழ்ந்து விட்ட சைரன்களால்

வீதியே அலறுகிறது...

 

உள்ளிருந்து அவள்

அலங்கோலமாய் இழுக்கப்படுகிறாள்

ச்சா இறக்கப்படுகிறாள்..

கைகளில் விலங்கு மாட்டி

ஏற்றப்படுகிறாள்..

எதற்கு இந்தத் தண்டனை

வீதியோரம் அலங்கரித்து

அந்தரித்து நின்றதற்கா..

அப்பாவியாய் மனம்

கேள்வி கேட்க..

வீதித் திரையில் ஓடுகிறது

ஒரு விளம்பரம்..

We have fitted CCTV

to prevent Prostitution in this area

POLICE.

அடி பாவிங்களா

நீங்க அவள்களாடி..

கூடவே

எட்டி உதையத் தோணுது..

இருந்தாலும்

நமக்கேன் ஊர் வம்பு

கால்கள் வேலை

முடித்து நடக்கின்றன

மனதில் ஓர் நிம்மதி..!

 

அடுத்த சில வினாடிகளில்..

வீட்டில்

கணணித் திரையில் நான்..

"சிங்களச் சிப்பாய்களின்

பாலியல் தேவையில்

தமிழ் பெண் சிப்பாய்கள்"...

"கருத்தரித்து பின்

கருக்கலைப்பு"...

"பெட்டி பெட்டியாய்

அழகு சாதனங்கள்

தமிழ் பெண்களுக்கு அன்பளிப்பு"..

கூடவே

"கருத்தடை சாதனங்களும் பொருத்த

கட்டாயம்"..!

அடுக்கடுக்காய்

செய்திகள் படிக்கிறேன்.!

 

என்ன உலகமடா இது..

இங்கே

இறுக்கம்

அங்கே

இழக்கம்...!

மாறிப்போன

மனித இனத்தின்

மனக் கோலங்கள் கண்டு

வெறுக்கிறது மனம்..

கருத்தொன்று போட்டால்

அதையும் காலையில்

காணம்..

நல்லா இருக்கு

உலக ஓட்டமும்

ஜனநாயக கருத்துச் சுதந்திரமும்..

எதையோ மூடி மறைக்க முயலும்

பச்சோந்தி மனிதர்கள் நடுவே

நாம் வெளிப்படையாக..

வெறுப்பை ஓரங்கட்டி

இயலாமையோடு ஓடுகிறது

வாழ்க்கை..!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதாவிட்டாலும் கவிதையில் இயலாமை தெரிகிறது நெடுக்ஸ். இதுதான் இன்றைய இயல்பு.

  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கம் மட்டும் தான், மிஞ்சுகிறது நெடுக்கர்!

 

லண்டன் பெண்............

 

தெரிவு அவளுடையது.....தெரிந்தெடுத்த இடம் மட்டுமே தவறு.......வேறு தவறுகள் ஏதுமில்லை!

 

ஈழத்துப் பெண்............

 

தெரிவும் அவளுடையதல்ல......தெரிந்தெடுத்த இடமும் அவளுடையதல்ல... வேறு என்ன தவறு?

 

ஒரு தமிழிச்சியாகப் பிறந்தது மட்டுமே அவளது தவறு..! :o

கருத்தொன்று போட்டால்

அதையும் காலையில்

காணம்..

நல்லா இருக்கு

உலக ஓட்டமும்

ஜனநாயக கருத்துச் சுதந்திரமும்..

எதையோ மூடி மறைக்க முயலும்

பச்சோந்தி மனிதர்கள் நடுவே

நாம் வெளிப்படையாக..

வெறுப்பை ஓரங்கட்டி

இயலாமையோடு ஓடுகிறது

வாழ்க்கை..!

இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ்ப்பெண்களை இழிவாகக் குறித்து பதியப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டன. கருத்துக்கள் கண்ணியமான முறையிலேயே வைக்கப்படல் வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவத்தில் சேர வேண்டாம் என்பது பல்வேறு தரப்புக்களால் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையிலும்.... சிறீலங்கா இராணுவம் எவ்வளவு மோசமானது என்பதை அனுபவரீதியாக வரலாற்று ரீதியாக.. தெரிந்திருந்தும்.. அதில் இணையப் போபவர்களை.."இணைக்கப்பட்டோர்" வரிசையில் சேர்க்க முடியுமோ தெரியவில்லை. மேலும்.. கண்ணியமற்ற எந்த வார்த்தைப் பிரயோகமும் அங்கு பிரயோகிக்கப்பட்டிக்கவில்லை..! அவர்களின் நடத்தைக்கு சூழ்நிலைக்கு அவர்களே காரணம் என்றே சொல்லப்பட்டிருக்குது..! அதில் என்ன கண்ணியக்குறைவு.. என்பது புரியவில்லை. இவர்களிடம் என்னவிதமான கண்ணியத்தை காட்டனும் என்று எதிர்பார்க்கிறார்கள்..?????????????????! :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மினப் பெண்களைப் பல வழிகளில் இம்சித்தவர்கள், இப்போது இராணுவத்தில் கட்டாயமாக இணைத்து இம்சைப்படுத்துவதை எண்ணி இதயம் வலிக்கிறது...நம்மால் கருத்துக்களையும் கவலைகளையும் மட்டுமே முன்வைக்க முடிகிறது...வேறெதுவும்  செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் இன்னும் துக்கமாக எனது நெஞ்சுக்குள் நிறைந்து வழிகிறது...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் தந்த எல்லா உறவுகளுக்கும் நன்றி. நியானி உட்பட.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உலகமடா இது..

இங்கே

இறுக்கம்

அங்கே

இழக்கம்...!

மாறிப்போன

மனித இனத்தின்

மனக் கோலங்கள் கண்டு

வெறுக்கிறது மனம்..

கருத்தொன்று போட்டால்

அதையும் காலையில்

காணம்..

நல்லா இருக்கு

உலக ஓட்டமும்

ஜனநாயக கருத்துச் சுதந்திரமும்..

எதையோ மூடி மறைக்க முயலும்

பச்சோந்தி மனிதர்கள் நடுவே

நாம் வெளிப்படையாக..

வெறுப்பை ஓரங்கட்டி

இயலாமையோடு ஓடுகிறது

வாழ்க்கை..!

 

உங்கள் ஆதங்கமும் கோபமும்  தேவையானதே

தேவைக்கேற்ற  கவிதைவரிகள்

திருந்துமா உலகு

திரளுமா தமிழினம்????

நன்றி  தம்பி  கவிதைக்கும் நேரத்திற்கும் கோபத்துக்கும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.