Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்போராளிகளின் வாழ்வை விலைபேசும் றாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்போராளி பற்றி பொய்யான செய்தியை பரப்பியிருக்கும் ஒரு ஊடக வன்முறையாளனான றாமின் குறித்த கட்டுரைக்கான எதிர்வினை இது. இவ் எதிர்வினையை யாழ் இணையம் நீக்காது என நம்புகிறேன். எங்களுக்காக வாழ்ந்த பல பெண்போராளிகளின் வாழ்வை அழித்து வரும் றாம் ஒரு மூத்த தளபதியை புலனாய்வாளர்களுடன் தொடர்புபடுத்தி மோசமாக எழுதி மிகவும் கேவலப்படுத்தியுள்ளார். சக பெண்ணை ஒரு போராளியை ஒருவன் கேவலப்படுத்தியதற்கு பலர் எதிர்ப்புக்குரலைக் காட்ட பயந்துள்ளார்கள். என்னால் அப்படி பார்த்து ஒளிந்திருக்க முடியவில்லை.  அதனால் இவ் எதிர்வினையை எழுதியுள்ளேன்.

 

இன்னும் பல பெண் போராளிகளின் வாழ்வை விலைபேசும் றாமை மக்கள் முன் அடையாளம் காட்டவே இவ்வெதிர்வினையை எழுதியுள்ளேன் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

பெண்போராளிகளின் வாழ்வை விலைபேசும் றாம் என்ற காமுகன்.
 
TTN+Ram1.jpg

22.03.2014 அன்று ttnnews என்ற இணையத்தினை நடாத்தும் விசுவலிங்கம் சிறீறங்கராம் என்ற றாம் அவர்கள் முன்னாள் போராளியான அஸ்வினி பற்றி தனது இணையத்தளமான ttnnews இல் மிகவும் கீழ்த்தரமாகவும் பொய்யான செய்தியொன்றை எழுதியிருந்தார். அச்செய்திக்கு தானே பல பெயர்களில் கருத்தும் எழுதி அஸ்வினி அவர்களை மிகவும் மோசமாக சித்தரித்துள்ளார்.

பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவின் மகளீர் பிரிவின் தளபதியாக இருந்த அஸ்வினி அவர்கள் காமக்கதை பேசி புலம்பெயர்ந்தவர்களிடம் பணம் பறிப்பதாகவும் இறுதி யுத்தத்தில் அஸ்வினி அவர்கள் இலங்கை புலனாய்வுப்பிரிவினிருடன் உல்லாசமாக இருந்து பலரை காட்டிக் கொடுத்ததாகவும் எழுதி தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் றாம்.

தனது வாழ்க்கையை எங்கள் இனத்தின் விடுதலைக்காகவே தந்து இன்று வாழும் வழியையும் இழந்து நிற்கும் இந்தப் போராளியின் தற்போதைய வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது றாம் என்ற வக்கிரம் பிடித்த காமுகனின் செய்தி. அஸ்வினியினதும் அவரது குடும்பத்தினது வாழ்வும் அவரது பாதுகாப்பிற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் என்ன செய்யப்போகிறோம் ? 

ஒரு சக பெண்ணை தோழியை எங்களுக்காக போராடி எல்லாம் இழந்து யாராவது புலம்பெயர்ந்தவர்கள் உதவுவார்கள் என்று நம்பி கையேந்திய அஸ்வினி மீதான ஊடக வன்முறைக்கு எதிராக பேசாமல் மௌனமாக என்னால் இருக்க முடியவில்லை. அஸ்வினிக்காக குரல் கொடுக்கும் என்மீது கூட நாளை இந்த ஊடக வியாபாரியால் ஏதாவது புனைகதையொன்றைத் தயாரிக்க முடியும்.

அநீதிகளை எதிர்த்தோ அல்லது சக பெண்போராளி மீதான பாலியல் அச்சுறுத்தலை எதிர்த்தோ ஒரு பெண் நின்றால் அவளுக்கு இந்த றாம் போன்ற தமிழ் ஆணாதிக்கம் கொடுக்கும் பட்டம் விபச்சாரிகள்.

சக பெண் போராளிகளை வெளிநாடு அழைப்பதாகவும் , திருமணம் செய்வதாகவும் பொய் கூறி ஏமாற்றிய றாமை எதிர்த்து தன் சக தோழிகளுக்கு நியாயம் கேட்டதற்காக இன்று அஸ்வினி என்ற முன்னாள் போராளி றாம் என்ற காமுகனின் பொய்யான பழிக்கு ஆழாகியிருக்கிறாள்.

அக்கிரமத்தைக் கேள்வி கேட்கும் ஒவ்வொரு பெண்ணையும் றாமின் ஆணாதிக்க வக்கிரம் பலியெடுத்துக் கொண்டே போகப்போகிறது. தயை கூர்ந்து தமிழ்ப் பெண்கள் அனைவரும் இந்த றாமின் அடாவடித்தனத்துக்கும் பெண்போராளிகள் மீதான இத்தகைய ஊடக வக்கிரத்திற்கும் உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள்.

போரில் எல்லாவற்றையும் இழந்த பல போராளிகள் இந்தியா, இந்தோனேசியா , மலேசியா என அலைந்து கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு நல்வாழ்வொன்று வருமென்று நம்பும் இவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் உதவி கேட்கிறார்கள். உதவுகிறோம் எனும் பெயரால் அவர்களது சுயமரியாதையை கௌரவத்தை விலைபேசும் புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலரால் எத்தனையோ பெண்களின் வாழ்வு அனாதரவாகிக்கிடக்கிறது.

ஒருகாலம் வன்னிக்குச் செல்லவும் போராளிகளைக் சந்திக்கவும் இவர்களது தோழ தோழியர்கள் என்று சொல்லியும் பெருமைப்பட்டு படங்கள் எடுத்துக் கொண்டு புலம் வந்தவர்கள் தங்களுக்கு ஏதோவொரு வழியைக் காட்டுவார்கள் என்று நம்பியே உதவிகள் கேட்கிறார்கள். உதவி ஒவ்வொரு மனிதருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் தேவைப்பட்டிருக்கிறது.

ஆனால் உதவுகிறோம் என்பதற்காகவே தங்கள் இச்சைகளுக்கு அவர்களைப் பலியாக்குவதும் , உடன்படாதவர்களை விபச்சாரிகள் , இலங்கையரச புலனாய்வாளர்களின் ஆசைநாயகிகள் என எழுதி அவர்களது வாழ்வின் நிம்மதியைப் பறிக்கின்ற றாம் போன்றவர்களின் அடாவடிகளைப் பார்த்தும் இன்னும் மௌனமாயே இருக்கப் போகிறதா ?

மேலும் பல போராளிப் பெண்களின் புகைப்படங்களை வைத்து அவர்களுக்கு உதவுவுதாகக் கூறி பலருக்கு பல பெண்களை விற்ற றாமின் உண்மை முகத்தை பல முன்னாள் போராளிகளும் இன்னும் நம்பிக் கொண்டேயிருக்கிறார்கள். இவரது உதவிகளுக்குப் பின்னால் பல மர்மங்களும் பலரது முகங்களும் மறைந்து கிடக்கிறது. அவர்களையும் விரைவில் வெளிப்படுத்துவோம்.

ஓவ்வொரு போராளியும் வாழ்க்கையின் இளமைக் காலத்தை போராட்ட களத்தில் கொடுத்து வெளியுலக வாழ்வினை அனுபவிக்காதவர்கள். இவர்கள் மக்களையும் மண்ணையும் மட்டுமே நேசித்தவர்கள். றாம் போன்ற வக்கிரமானவர்கள் எல்லாம் இதே தமிழ் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கூட அறியாதவர்கள்.

உதவுகிறோம் என அழைத்தவுடன் தங்கள்  வறுமையையும் தங்கள் நிலமையையெல்லாம் கூறிவிடுகிறார்கள். வறுமையும் யாரும் ஆறுதலுக்கு இல்லாத நிலமையிலும் இருக்கும் போராளிகள். அவர்கள் மீது அன்பு காட்டுவது போல பேசி சில ஆயிரம் ரூபாய்களை உதவிவிட்டு தன்னுடைய பாலியல் வியாதிக்கு வடிகால் தேடும் றாம் போன்றவர்களால் தொடர்ந்து பல பெண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

றாமின் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை வரையும் சென்ற பெண்போராளிகளும் இன்னும் தங்களால் வெளியில் சொல்லியழ முடியாத துயரத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வருடாவருடம் பலமுறை சுற்றுலா சென்று வரும் போதெல்லாம் பல பெண்களின் வாழ்வை பலியெடுத்துக் கொண்டு வருகிற மிருகம்.

தாயகத்தில் வாழும் பல பெண்போராளிகளின் குடும்பங்களை சிறைக்கு அனுப்புவேன் என தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் றாமின் அச்சுறுத்தலுக்குத் தினமும் பயந்தபடி வாழும் போராளிகளின் கண்ணீருக்கும் துரயத்துக்கும் முடிவு என்ன ?

றாம் என்பவர் யார் !

இவர் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவர். விசுவலிங்கம் சிறீறங்கராம் என்பது இயற்பெயர். 90களில் புலிகள் அமைப்பில் இணைந்து 95இல் காவலரணிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் தப்பியோடியவர்.  பின்னர் இந்தியா சென்று பிரித்தானியாவை வந்தடைந்தவர்.

மச்சாள் முறையான றாதிகாவைத் திருமணம் செய்து 2பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையோடும் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி ராதிகா இந்தக் காமுகனின் எல்லா அடாவடிகளையும் தாங்கிக் கொண்டு வாழும் கண்ணகி கால மனைவி. தன்போன்ற பெண்களை பாலியல் வக்கிரம் புரியும் விடயங்களை அறிந்தும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தத் தெரியாத அப்பாவிப் பெண்ணாக இருக்கிறார்.

2009வரை றாம் யாரென்று யாருக்கும் தெரியாது. 2009யுத்த முடிவின் பின்னர் தான் தலைவர் பிரபாகரனின் மைத்துனன் எனவும் மூத்த பெண்போராளி ஒருவரின் தம்பியெனவும் கூறிக் கொண்டு ஆட்கடத்தல் வேலையை ஆரம்பித்திருந்தார்.

2009நாட்டில் இருக்க முடியாத நிலமையில் இருந்த போராளிகள் பலரை வெளிநாடு அழைக்கும் ஆட்கடத்தல் முகவராக வெளிப்படையாக இயங்கத் தொடங்கிய போதே பல போராளிகள் இவரிடம் உதவி கேட்கும் நிலையேற்பட்டது.

தாயகத்தில் இருந்த பல போராளிகளுக்கு அங்கே வாழ முடியாத நிலமை ஏற்பட்டுள்ளதாகக் கூறி பல போராளிகளை மலேசியா , இந்தியா , இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அழைத்து பாதுகாப்பு வழங்குவதாக உதவிகளைக் கோரியிருந்தார். இவனது கதைகளை நம்பி புலத்திலிருந்து பலர் உதவிகளையும் வழங்கியிருந்தார்கள்.

சில லட்சங்களுடன் தங்கள் வாழ்க்கையை அவுஸ்ரேலியா ,கனடா , ஐரோப்பிய நாடுகளில் சென்று வாழ வழி கிடைக்கும் என நம்பிய பலர் தங்கள் பணத்தையும் இழந்து இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். இருந்த உடமைகளையும் விற்று றாமை நம்பி வெளிநாடு பார்க்க வெளிக்கிட்ட பலர் தற்போது எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்கள்.

வெளிநாடு அழைக்கிறேன் என்றும் தனது மனைவி இறந்துவிட்டாரெனவும் கூறி பல போராளிப் பெண்களை ஆசிய நாடுகளில் அழைத்து அவர்களை பாலியல் வதை செய்திருக்கிறான். இவனால்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பை யாராலும் வழங்க முடியவில்லை. வந்த நாடுகளில் சட்ட ரீதியற்று வாழ்வதால் சட்டம் உள்ளே தள்ளிவிடுமென்ற பயத்தில் றாமின் அநியாயத்துக்கெல்லாம் பல பெண்கள் பலியாகியுள்ளார்கள்.

இன்னும் தொடரும்.....!

http://mullaimann.blogspot.de/2014/03/blog-post_23.html

 

  • Replies 54
  • Views 8.4k
  • Created
  • Last Reply

பெண்கள் பற்றி பொய்யான செய்தி பரப்பும் இந்த இணையத்திற்கு மக்கள் நடவடிக்கை எடுப்பார்கள்

 தெரியப்படுத்தியதிற்குங்க நன்றீங்க சாந்தி அக்கா. எங்க அக்காமாருக்கு ஏனுங்க இப்படிச் செய்யீறாங்க?  பெரிய கொடுமைங்க...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரு.றாம் அவர்கள் இன்று தொலைபேசியெடுத்து தமிழில் உள்ள அனைத்து கெட்டவார்த்தைகளாலும் திட்டியதோடு என்னைப்பற்றியும் தனது இணையத்தில் எழுதப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இலங்கையில் உள்ள எனது உறவினர்களை கடத்துவேன் எனவும் சவால்விட்டுள்ளார். ஒரு போராளி பற்றி மிகவும் கேவலமாக எழுதிவிட்டு இன்னும் சவால்விடுகிற இவரது வீட்டு வாசலில் பெண்கள் குழுவொன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் யாழ்கள உறவுகளும் முடிந்தவர்கள் கலந்து கொள்ளுங்கள்.

திரு.றாம் அவர்கள் இன்று தொலைபேசியெடுத்து தமிழில் உள்ள அனைத்து கெட்டவார்த்தைகளாலும் திட்டியதோடு என்னைப்பற்றியும் தனது இணையத்தில் எழுதப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இலங்கையில் உள்ள எனது உறவினர்களை கடத்துவேன் எனவும் சவால்விட்டுள்ளார். ஒரு போராளி பற்றி மிகவும் கேவலமாக எழுதிவிட்டு இன்னும் சவால்விடுகிற இவரது வீட்டு வாசலில் பெண்கள் குழுவொன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் யாழ்கள உறவுகளும் முடிந்தவர்கள் கலந்து கொள்ளுங்கள்.

 

இப்படியானவர்களின் மிரட்டல்களைப் பதிவு செய்துவையுங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

றாமை இப்பதானா உங்களுக்கு தெரியும்.எங்களுக்கு எப்பவோ தெரீயும். இவருடைய இணையத்தின் பிரதம செய்தியாசிரியர் டக்கண்ணரின் தினமுரசு  பத்திரிகையின் ஆசிரியர்தான்.நிதர்சன் என்ற பெயரில்  வெளிநாட்டு தமிழர்களுக்கு அல்வா குடுப்பவர்.  அது மட்டுமல்ல வவுனியாவில் பல பெண்போராளிகளையும் இளம்பெண்களையும் மகிந்த மகனின் அடியாட்களுக்கு விற்கும் கீதாஞ்சலியின் நெருங்கிய நண்பர் ஒருவரும் தான் ரீரீஎன் இணையத்தின் தற்போதைய ஆசிரியர்கள். கீதாஞ்சலியின் நடிப்பு இரகசியம் வெளிவந்தது யாவரும் அறிவீர்கள் தானே. ஆகையால் ரீரீஎன் றாம் எங்கே நிற்கிறார் என்பதை முதல்வன் சொல்லி அறிய வேண்டியதில்லை.

 

கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் திடுக்கிடும் உண்மைச்சம்பவம் ஒலிப்பதிவு ஆதாரத்துடன். 

http://nerudal.com/nerudal.59523.html

http://nerudal.com/nerudal.59234.html

http://nerudal.com/nerudal.59161.html

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்காக போராடி போராளி மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அப்போராளி மீது அவப்பெயரை ஏற்படுத்திய றாம் தனது இணையத்தில் இன்று வெளியிட்டுள்ள செய்தி. வளமையான தனது பொய்யை இச்செய்தியிலும் எழுதி தன்னை நல்லவனாக காட்டியிருக்கிறார். வாசகர்களே நீங்களும் இச்செய்தியை படிக்க வேண்டும்.

 

றாம் தனது இணையத்தில் எமக்கு எதிராக இன்று வெளியிட்டுள்ள செய்தி :-

 

முக்கிய செய்திகள்
வெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2014 11:17

017.jpgவணக்கம் அன்பு உறவுகளே...

 
இறுதிப் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் சிங்களத்திற்கும் சிங்கள அடிவருடிகளுக்கும் ஜெனிவா கூட்டத்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள சந்தர்ப்பத்தில் போர்க்குற்றங்கள் மற்றும் இன அழிப்பு ஆதாரங்கள் எம் இணைய தளம் மூலம் பிரசுரமானதை அனைவரும் அறிவீர்கள்.
 
எம் இணையத்தளமானது சர்வதேச ஊடகங்கள் மற்றும் இணையத் தளங்கள் ஊடக போர்க்குற்ற ஆதாரங்களை அம்பலப்படுத்தியிருந்தோம். இவ் ஆதாரங்கள் அனைத்தும் இலங்கை அரசுக்கு நெருக்கடியை கொடுக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.ஆகையால் எமக்கு 2 1/2 வருடகாலமாக தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக மிரட்டல்கள் வந்தவண்ணமுள்ளன.அதனை முன்பும் அறியத் தந்திருந்தோம்.
 
தற்போது எம்மை பழி சுமத்தி துரோகிகளாக இனங்காட்ட பல்வேறு விதமான பொய்யான குற்றச்சாட்டுக்களோடு படங்கள் வெளிவந்துள்ளன. நேற்றைய தினம் எம் நிர்வாகியின் இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சில இராணுவப் புலனாய்வு இணையங்கள் மூலமாக எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இவர்கள் தான் ஜெர்மனியில் வழமையாக நடைபெற்றுக்கொண்டிருந்த மாவீரர் நாள் நிகழ்வுகளை குழப்பியவர்கள் எனவும் இணையங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். அது மட்டுமல்லாது ஜேர்மனிய நாட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களை காட்டிக் கொடுத்து அவர்கள் சிறைவாசம் அனுபவிக்க காரணமானவர்களும் இவர்களே..மற்றும் போரால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுவதாகக் கூறி மக்களிடமும் நிறுவனங்களிடமும் தமது வங்கிக் கணக்கில் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டவர்கள். இவ் மோசடியை உரிய தரவுகளை செலுத்த தவறியவர்கள் என குறிப்பிட்ட நிறுவனங்களே குற்றம் சாட்டியிருந்தன. மற்றும் இவர்களைப் பற்றி பல குற்றச்சாட்டுக்கள் பல்வேறு இணையத்தளங்களில் வெளியானதை அனைவரும் அறிவீர்கள்.
 
இவ் இணையத்தளமானது பல்வேறு விதமான குற்றச்செயல்கள் மோசடி செய்வர்களை இனங்காட்டிக்கொண்டுள்ளது. எம் போராட்ட வாழ்வில் அன்று தொட்டு இன்று வரை சதிகளும் காட்டிக்கொடுப்பும் துரோகங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
 
எம்மை இனங்காட்டிக் கொடுக்கும் எவராயிருந்தாலும் அது எம் இனத்திற்கும் ஊடகத்திற்கும் விடுக்கும் அச்சுறுத்தலாகும். மேலும்......
 
எம் நிர்வாகி மீது போடப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களால் எம்மையோ எமது இணையத்தையோ யாராலும் முடக்க விட முடியாது. நாம் எவரையும் தட்டி சுற்றி இப் பணியை தொடரவில்லை.எமது நோக்கம் அடக்கு முறைகளை உலகுக்கு தெரியப்படுத்துவதும்இபோரினால் சிதைக்கப்பட்ட எம் உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதேயாகும்.
 
மற்றவர்களைப் போல் உறவுகளுக்கு உதவுவதாகக் கூறி வங்கியில் பணம் பெற்று எம் உறவுகளின் இரத்தக் கண்ணீரில் குடும்பம் நடத்தும் ஈனப் பிறப்புக்கள் நாமல்ல.எமது போராட்டமானது எத்தனையோ தியாகங்களின் மத்தியிலும்இதுரோகங்களின் மத்தியிலும்இவீறு நடை போட்டு சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது.
 
போரால் பாதிக்கப்பட்ட எண்ணிலடங்கா போராளிகளினதும்இமக்களினதும் வாழ்க்கை சிதைக்கப்பட்டு சொல்லெணா துயரங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டுள்ளார்கள். நாம் கடந்த காலங்களில் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக பல நிறுவனங்களிடம் எம் இணையத்தளம் எவ்வளவோ வேண்டுகோள்களை விடுத்திருந்தது. அவர்கள் தங்களுக்கு விரும்பியவர்களுக்கு மேலும் மேலும் உதவிகளை செய்து வந்தார்கள். இவற்றை நாம் கட்டுரைகள் செய்திகளாக பிரசுரித்தமையே எம்மை மிரட்டும் அளவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது.
 
இலங்கை அரசுக்கு காட்டிக் கொடுக்கும் வகையில் தமிழ் இணையத்தளங்கள் சில ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுக்களை வெளியிடுகின்றன.எம்மை காட்டிக் கொடுப்பவர்கள் சிங்களத்திற்கு சோரம் போவபர்களாயும் இன துரோகிகளாகவுமே இருப்பார்கள்.
 
எம் செய்திப் பிரிவில் பணியாற்றுபவர்கள் பட்டதாரிகள் மட்டுமல்லாது ஊடக தர்மத்திற்கும் தலை வணங்கியே எம் பணியை தொடர்கின்றோம். முன்னாள் போராளிகளாக இருப்பினும் தவறு செய்தால் அதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். முன்னாள் போராளிகள் என்பதற்காக செய்யும் தவறுகளை மறைத்து எம்மால் எம் இனத்திற்கு துரோகம் இழைக்க முடியாது. இம் முன்னாள் போராளிகள் சிலர் தான் அரசுக்கு விலை போய் எம் இனமே அழியக் காரணமானவர்கள் என்பதை நாம் மறக்கவும் இல்லை மறுக்கவும் முடியாது.
 
எத்தகைய அச்சுறுத்தல்கள் முன் வைக்கப்பட்டாலும் யாருக்கும் அஞ்சாது நெஞ்சு நிமிர்த்தி அடக்கு முறைகளையும்இதுரோகங்களையும் எம் இணையத்தளம் தொடர்ந்தும் வெளிக்கொண்டுவரும். எம் பணி செவ்வனவே தொடரும்..........
 
நாம் எவற்றுக்கும் அஞ்சுபவர்கள் அல்ல.
 
ttnnews செய்திப் பிரிவு.

 

 

http://ttnnews.com/flashnews/8740-me

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இச்செய்தி  முல்லைமண் இணையத்தில் இணைக்கப்பட்ட  பின்னர்  யாழ் களத்திலும்  தான் வெளியிடப்பட்டது. மற்றும் முகநூலிலும் வெளியிடப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது பற்றி ஒரு கருத்து மட்டுமே எழுதப்பட்டது. ஆனால் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் என செய்தியை வெளியிட்டுள்ளார். முகநூலின் உரிமையாளர் Mark Elliot Zuckerberg எப்ப இலங்கையரச புலனாய்வாளரானார் ? 
 
  • கருத்துக்கள உறவுகள்

மச்சானுக்கு கிலி பிடிச்சிட்டுது.இனி வாய்க்கு வந்தபடி உழறப்போறார்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

இங்கு  TTNபற்றி  பேசப்படுகிறது

அது தமிழ்மக்கள் சொத்தல்லவா?

புது நிர்வாகமா என அறியத்தரவும்

எனக்கு TTNஇல் தொடர்பு உண்டு

பங்களிப்புண்டு

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

இங்கு TTNபற்றி பேசப்படுகிறது

அது தமிழ்மக்கள் சொத்தல்லவா?

புது நிர்வாகமா என அறியத்தரவும்

எனக்கு TTNஇல் தொடர்பு உண்டு

பங்களிப்புண்டு

அண்ண இது லண்டனில் இருந்து செயற்படும் இணையம் .இதுக்கும் ttn தொலைகாட்சி சேவைக்கும் தொடர்பில்லை
  • கருத்துக்கள உறவுகள்

அண்ண இது லண்டனில் இருந்து செயற்படும் இணையம் .இதுக்கும் ttn தொலைகாட்சி சேவைக்கும் தொடர்பில்லை

நன்றி நந்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அஸ்வினியக்கா பற்றி றாம் எழுதிய பொய்யான எழுத்துக்கான மறுப்பறிக்கையை நீக்குமாறு பல மூத்தவர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சில அம்மாக்கள். அவர் ஆண் நீங்கள் அவனுடன் மோதுவது பெண்களை அவர் மேலும் அவமானப்படுத்த ஏதுவாகிவிடும் எனவும் தங்கள் ஆலோசனையை தந்துள்ளார்கள்.
 
ஒரு போராளி எங்களுக்காக போராடிய ஒரு பெண் தனது காலம் முழுவதையும் எங்களுக்காக தந்தவர். அவர் பற்றி கீழ்த்தரமாகவும் பாலியல் தொழில் புரிபவர் போலவும் சித்தரித்துள்ள ஒரு ஆணை ஐயோ அவன் ஆண் ஆண்களென்றால் இப்படித்தான் கோபம் வந்தால் எதையும் சிந்திக்கமாட்டான் என சொல்லும் அம்மாக்களால் அஸ்வியினியக்கா மீது சுமத்தப்பட்ட பழியை போக்க முடியவில்லை. 
 
எங்களிடம் உதவி கேட்டு நாங்கள் காசைக் கொடுத்தால் அந்தப் பெண்போராளிகள் இந்த ஆண்களுக்கு நிரந்தர சீதனம் போலவே பலரது விளக்கம் இருக்கிறது. இதையே சிலர் சமாதானம் பேச வந்ததிலிருந்து புரிய முடிகிறது. 
 
றாமுடன் விரும்பி அல்லது இருவர் இணைந்த எந்த விடயத்திலும் எங்களுக்கு அக்கறையில்லை. சந்தர்ப்ப கைதிகளாக மாட்டுப்பட்டுள்ள பெண்களின் வாழ்வை தொடர்ந்து தனது இணையத்தளம் மூலம் அவர்களது வாழ்வை தெருவில் வைத்து விபச்சாரிகள் என்ற பட்டத்தை கொடுக்க வேண்டாம் என்பதனையெ றாமிடம் தாழ்மையுடன் கேட்கிறோம்.
 
றாம் அவர்கள் தான் எழுதிய பொய்யை ஒப்புக்கொண்டு அஸ்வினியக்கா பற்றிய செய்தியை நீக்கினால் எனது மறுப்பையும் காரணத்தை சொல்லி நீக்கிவிடுகிறேன். 
 
அஸ்வினி மீது உனக்கென்ன அவ்வளவு அக்கறை எனக்கேட்டவர்களுக்கு :-
 
அஸ்வினியிக்கா வயதில் மூத்த அக்கா மட்டுமன்றி அம்மாவுக்கு நிகரான போராளி. எனத அம்மாவுக்கு நிகராகவே அஸ்வினியக்காவை நேசிக்கிறேன். போராட்டத்தில் அக்கா இழந்தவற்றை றாம் போன்றவர்களால் அறியவோ புரியவோ முடியாது. ஆனால் எனக்காகவும் எனது இனத்துக்காகவும் தனது வாழ்வைத் தந்து இன்றும் தனது வாழ்வோடு போராடும் என் போராளி அம்மா பலரை உருவாக்கிய போராளித்தாயை ஒருவர் பொய்யாக அதுவும் பாலியல் தொழிலாளி போன்று எழுதியிருப்பதனை எப்படி மன்னிக்க ? 
 
இக்களத்தில் கூட பல பெண்கள் இருக்கிறார்கள் றாமின் அடாவடிகளை சில பெண்களும் அறிந்து பல மாதங்கள் முதலும் என்னுடனும் கதைத்துள்ளார்கள். ஆனால் எவரும் இவ்விடயத்தில் வாய் திறக்காமல் இருக்கிறார்கள். காரணம் தாங்கள் எதிர்த்து கருத்து எழுதினால் தங்களைப் பற்றியும் பொய்யாக எழுதிவிடுவார் என்ற பயம். 
 
ஒரு அஸ்வினியென்ற பெண்ணுக்காக அல்ல ஒட்டுமொத்த பெண்போராளிகளின் வாழ்வை சிதைக்கும் வகையிலான இந்தவகையான எழுத்துக்களுக்கு எங்களது ஆண்களும் பதில் கூற வேண்டிய கடப்பாட்டில் உள்ளார்கள்.
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டரை எனக்குப் பிடித்துப் போக ஒரு காரணம் அவர் ராம் போன்ற ஆட்களைக் கையாண்ட "வித்தியாசமான" அணுகு முறை தான். இதற்கு மேல் எழுதினால் வன்முறையைத் தூண்டுறான் எண்டு எனக்குக் கத்தரிக் கோல் விழக் கூடும்! :)

அக்கா உங்க துணிச்சலுக்குப் பாராட்டுங்க. உங்க மாதிரிப் பெண்ணுங்க நிறையத் தேவைங்க எங்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இவனது மிரட்டலுக்கு பணிந்து போனீர்களென்றால் இவனால் தொடர்ந்து பெண்கள் சீரழியப்போகிறார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அஸ்வினியக்கா பற்றி றாம் எழுதிய பொய்யுக்கு சக போராளி பூங்கா எழுதிய எதிர்வினை :-
(பூங்கா மின்மடலில் அனுப்பிய எதிர்வினை)
 
எமது போராட்ட வரலாற்றில் ஈழவிடுதலைக்காக தம்மை இழந்த போராளிகள் மட்டுமல்ல அனைத்தையும் இழந்த மக்களுமே இழந்தது அதிகம். இப்படியாக ஒரு தேசத்துக்காய் ஒரு தேசியத்தின் நிழலில் வாழ்ந்த நாம் சிதறுண்டு சின்னாபின்னமாக்கப்பட்டு கிடப்பது எதற்காக ?
 
ஊனத்துடன் உயிர் வாழும் வரை உயிர் வாழும் சடலங்களாய் இருந்து கொண்டு அந்த உயிர்த்துடிப்பின் நடுவில் எம் போன்றவர்களை எப்படி வாழ வைக்கலாம் என்று எண்ணாமல் அந்த எண்ணத்தைக் களைந்தெடுத்து மிகக்கோழைத்தனமாய் வாழும் பலரால் தான் நாம் இன்று அனாதரவாக இருக்கிறோம். எம் மக்களையும் இழந்து கொண்டேயிருக்கிறோம்.
 
தம்பி றாம் , 
 
நீங்கள் சீரளிக்கும் போராளிகள் உங்களிடம் சூழ்நிலைக்கைதிகளாகி இருப்பதனை அவர்கள் மௌனிகளாக்கப்பட்டு தொடர்ந்து சீரளிக்கப்படுவதைத் தட்டிக் கேட்டால் உங்கள் போன்றவர்கள் கொடுக்கும் பட்டம் விபச்சாரி அல்லது காமுகி இதுவா உங்கள் ஊடக தர்மம்?
 
நானும் அஸ்வினியக்கா கூட ஒன்றாகவே புனர்வாழ்வு முகாமில் இருந்தோம். எனது முன் அறையில் தான் தனது குழந்தையுடன் இருந்தார். யாரையும் அவர் காட்டிக் கொடுக்கவும் இல்லை யாரையும் பழிவாங்கவும் இல்லை. இப்படிச் செய்திருந்தால் கட்டாயம் அஸ்வினியக்காவை சக போராளிகளே காட்டிக் கொடுத்திருப்பார்கள்.
 
அஜித்குமார என்று நீங்கள் எழுதிய சிங்களவர். ஒரு இராணுவப்பெண் சிப்பாய்.  அவரது பெயர் அஜித்குமாரி. அஜித்குமாரியை  நீங்கள் ஒரு ஆண் புலனாய்வாளர் என்றும் அவருடன் அஸ்வினியக்கா தவறான உறவை வைத்து பலரை காட்டிக் கொடுத்தார் என்று பொய்யாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு பெண்ணின் பெயரை நீங்கள் ஒரு ஆணின் பெயராக மாற்றி உங்களது வக்கிரத்தை தீர்த்திருக்கிறீர்கள். 
 
அங்கு நின்ற பெண் இராணுவத்தினருள் அஜித்குமாரிக்கு மட்டுமே தமிழ் பேசத் தெரியும் என்ற காரணத்தால் என்ன விடயமென்றாலும் அஜித்குமாரியே எங்களுடனான தொடர்பாடல்களை பேணும் பெண் இராணுவச் சிப்பாய். எங்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு மொழிபெயர்ப்பும் அஜித்குமாரிதான் செய்வார். துமிழ் தெரிந்த பெண் சிப்பாயான அஜித்குமாரியுடன் எங்கள் போராளிகள் யாரும் தேவையற்றுக் கதைப்பதோ அல்லது தனியே கதைப்பதோ இல்லை. 
 
தடுப்பு முகாமில் நாங்கள் இருந்த ஒன்றரை வருட காலத்திலும் அஸ்வினியக்கா ஒரு நாளும் தனிய அஜித்குமாரி என்ற பெண் இராணுவச் சிப்பாயுடன் பேசியதை நான் காணவும் இல்லை யாரும் சொல்லி கேள்விப்பட்டதும் இல்லை. 
 
தன் கணவரைப் பிரிந்த நிலமையில் தன் குழந்தையுடன் புனர்வாழ்வு முகாமில் இருந்து எல்லாத் துயரங்களையும் அனுபவித்தவர். தண்ணீர் பிரச்சனை உட்பட குழந்தைக்கான உணவு இல்லாமை இப்படியான பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து விடுதலையான பின்பும் தமிழ்நாட்டுக்கு வந்து தனது ஏழுவயதுக் குழந்தையுடன் மிக மிக கொடுமையான துன்பங்களை அனுபவிக்கிறார். 
 
நான் மட்டுமல்ல பல பெண் போராளிகள் பல தடவை அஸ்வியினியக்காவின் வீட்டுக்கு போயிருந்தோம். ஒருமுறை மதிய உணவையும் அங்குதான் சாப்பிட்டேன். மிக கொடுமையான வாழ்வு அவரது நிலமை. ஒரு அறை மட்டுமே அதில் தான் சமைப்பது சாப்பிடுவது உறங்குவது எல்லாமே. இருக்க ஒரு கதிரை கூட இல்லை. இப்படியான நிலமையில் பல துன்பங்களைத் தாங்கி வாழும் இவர் போன்ற போராளிகளை கண் விழித்துப் பாருங்கள். கண்மூடிக் கற்பனைக்கதை எழுதாதீர்கள். 
 
றாம் அவர்களே!
 
நீங்கள் உங்கள் சொந்த நாட்டைவிட்டு அகதியாய் இன்னொரு நாட்டில் இருக்கிறீர்கள். உங்களுக்கு அனைத்து வசதிகளும் நல்ல வாழ்க்கையும் கிடைத்திருக்கிறது. அந்த வாழ்க்கையை பொழுது போக்கோடு கழிக்க உங்களுக்கு ஒரு ஊடகம் இருக்கிறது. கையில் ஊடகம் இருக்கிறது என்பதனை வைத்து எங்கள் போன்ற போராளிகளை எங்கள் சக போராளிகளை நீங்கள் கொச்சைப்படுத்துவது எதற்காக ?
 
உங்கள் சகோதரியை நீங்களே அவமானப்படுத்தி கொச்சைப்படுத்தி எழுதி , பேசி ஏன் எங்களை தொடர்ந்தும் சாகடிக்கிறீர்கள் ? எங்களை அழிக்கும் எதிரிக்கும் உங்களுக்கும் எவ் வித்தியாசமும் இல்லையென்பதே எனது கருத்து. 
 
பெண்ணடிமையை விலக்கி எழுச்சி கொண்ட தேசமாய் பெண்போராளிகளை மிகவும் கௌரவத்தோடும் ஒழுக்க நெறிகளோடும் வளர்த்த எங்கள் தேசத்தலைவனை ஒரு கணம் கூட நினைக்காமல் இவ்வளவு கீழ்த்தரமாக மிக மிக இழிவாக பொது ஊடகத்தில் போடுகிறீர்களே ? உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு இதுதான் தீர்வா ? 
 
இப்படியான உம் போன்றவர்களினால் எம் தேசத்தின் தேசியத்தையும் ஒட்டுமொத்த ஈழவரலாற்றையும் அதன் எதிர்காலத்தையும் கொச்சைப்படுத்துகிறீர்களே இதை உங்கள் அவமானமாகப் பார்க்கவில்லையே ? 
சுவரில் அடிபட்ட பந்து போல உங்கள் செயற்பாடுகள் கீழ்த்தரமான எழுத்துக்கள் உங்களையே திரும்பி வந்தடையுமே தவிர நீங்கள் வேறெதையும் சாதிக்கப்போவதில்லை.
 
ஈழ விடுதலைக்காய் தோழோடு தோழ் நின்று போராடி வீழ்ந்த எம் தேசவிளக்குகள் இவளுக்காய் பேச குளிக்குள் குமுறுகிறார்கள். அவமானப்படுத்தும் உங்களையும் நினைத்து குளிக்குள்ளும் வெட்கித் தலைகுனிகிறார்கள். நீங்கள் எங்கள் எதிரியே என்பதனை மனப்பூர்வமாக நம்புகிறார்கள்.
 
தேச விடுதலைக்காய் இனப்பற்றோடு தேசியத்தை நேசித்து ஒரு நிமிடமேனும் நீங்கள் பணியாற்றியிருந்தால் அதன் மகிமையும் தாற்பரியமும் உலகிற்கும் எம் உறவுகளுக்கும் உறங்கும் எங்கள் தெய்வங்களுக்கும் ஒளியாயிருந்திருக்கும். 
 
ஈழ விழிப்போடு இருப்பவர்களுக்கு ஒளியேற்றுங்கள். புலியென்று சொல்லிச் சொல்லி புலம்பெயர்ந்து மீண்டும் மீண்டும் வலியைச் சந்திக்கும் வழியைத் தேடுகிறீர்களே ? 
 
இப்படியான உங்கள் கொடுமையான செயற்பாடுகளால் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த எங்கள் இனமும் தேசமுமே. 
 
ஈழத்தை என்றும் இரத்தத்தில் தோய்க்காதீர்கள்.
அண்ணனின் கன்னத்தில் ஆணியை அறையாதீர்கள்.
கல்லறைகளை தூக்கிலிடாதீர்கள். 
 
அன்புடன் பூங்கா
 

Edited by shanthy

நன்றீங்க  சாந்தி அக்கா.

வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாக கொண்ட ராம் 88ல் உதயபீடம் பயிற்சி முகாமின் முதலாவது பிரிவில் பயிற்சி முடித்தவர்.90ல் தொண்டமானாறு பொயின்றில் நின்றபோது தனது காலிலேயே சுட்டுக்கொண்டார்.பின் அங்கிருந்து தப்பியோடி இலண்டன் வந்து சேர்ந்தார் .இவரது சகோதர்ர்களில் ஒருவர் கனடாவிலும் ,மற்றவர் லண்டன் சவுத்தோலிலும் உள்ளனர்.

மிகுதி விபரம் பின்னர் தருகின்றேன்

வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாக கொண்ட ராம் 88ல் உதயபீடம் பயிற்சி முகாமின் முதலாவது பிரிவில் பயிற்சி முடித்தவர்.90ல் தொண்டமானாறு பொயின்றில் நின்றபோது தனது காலிலேயே சுட்டுக்கொண்டார்.பின் அங்கிருந்து தப்பியோடி இலண்டன் வந்து சேர்ந்தார் .இவரது சகோதர்ர்களில் ஒருவர் கனடாவிலும் ,மற்றவர் லண்டன் சவுத்தோலிலும் உள்ளனர்.

மிகுதி விபரம் பின்னர் தருகின்றேன்

 

 

நன்றீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாக கொண்ட ராம் 88ல் உதயபீடம் பயிற்சி முகாமின் முதலாவது பிரிவில் பயிற்சி முடித்தவர்.90ல் தொண்டமானாறு பொயின்றில் நின்றபோது தனது காலிலேயே சுட்டுக்கொண்டார்.பின் அங்கிருந்து தப்பியோடி இலண்டன் வந்து சேர்ந்தார் .இவரது சகோதர்ர்களில் ஒருவர் கனடாவிலும் ,மற்றவர் லண்டன் சவுத்தோலிலும் உள்ளனர்.

மிகுதி விபரம் பின்னர் தருகின்றேன்

 

இவரை சரியாக தெரியவில்லை ....
1989இல்  இரண்டு போராளிகள் இந்திய இராணுவத்தால் கைதுசெய்யபட்டு  காங்கேசன்துறையில் இருந்தார்கள்.
நீங்கள் மேல் சொன்ன பயிற்சி  முகாமில் பயிற்சி  பெற்றவர்கள்.
அவர்கள் இந்திய தயாரிப்பான ப்ருண் (brun) ல் எம் ஜி வைத்திருந்தார்கள் 
இந்திய இராணுவம் திடீரென புகுந்து அதன் சுடு குழலை களடிவிட்டதாக அவர்கள் சொன்னதாகவும்.
அதை பல போராளிகள் அப்போது நம்பி இருக்கவில்லை .....
அவர்களை காங்கேசன்துறை முகாமில் .....
ஒரு உறவினரை பார்க்க போனபோது சந்தித்தேன்.
 
அவர்களில் ஒருவரா இவர் ? 
  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136384&p=997293

TTN News நிர்வாகி ராம்.

உங்களின் பயமும் வேதனையும் எங்களுக்கும் புரிகிறது. ஆனால் நீங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் உங்கள் இணையத்தில் ஒரு முன்னாள் போராளியை பற்றி ஊடக தர்மத்தை மீறி போட முடியும் என்றால் எல்லா ஆதாரமும் உள்ள நிலையில் இந்த இணையத்தில் செய்தி போடுவதில் என்ன தவறு இருக்கிறது.
 
http://ttnnews.com/flashnews/8652-2014-03-22-11-47-59

அதையும் விட, இந்த செய்தியானது உங்கள் செய்திக்கான எதிர் வினை. எனவே உங்கள் செய்திக்கு மறுப்பு தெரிவித்து உங்கள் இணையத்தில் நீக்கப்படுமாயின், இந்த இணையத்திலும் நீக்க படுவதற்கான சாத்திய கூறுகளை ஆராயலாம் என்று நான் நம்புகிறேன்.

எனக்கு இந்த சந்தர்ப்பத்தில், நல்லூர் பின் வீதியில் இருந்த அறிவொளி தனியார் வகுப்பில் ஒரு ஆசிரியர் கூறியது ஞாபகம் வந்து தொலைக்கிறது.

உன்னைத் திருத்தி கொள் உலகம் தானாக திருந்திவிடும்.


அதையே அண்மைய நிமிர்ந்து நில் படத்திலும், இயக்குனர் சமுத்திரக்கனி சொல்லி இருக்கிறார்.

சிற்பமும் நீயே சிற்பியும் நீயே.

உன்னை நீயே செதுக்கு.

உலகம் தானாக செதுக்குப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்வினி பற்றி உங்களால் வெளியிடப்பட்ட செய்திக்கு உங்களின் விளக்கத்தை,ஆதாரங்களை இங்கு எதிர்பாக்கின்றோம்.அதன் பின் ஊடகதர்மத்தை சரியான விதத்தில் உங்களுக்கு படிப்பிக்கின்றோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஊடகத்தின் தர்மத்தையும் இனத்தின் தர்மத்தையும் காப்பாற்றும் றாம் அவர்களே,உங்கள் எழுத்துக்களை ஏற்றுக் கொள்கின்றேன்,ஆனால் உங்கள் செயல் அப்படி இல்லையே.
என்ன தைரியத்தில் ஆதாரம் இருந்தால் ஏற்றுக் கொள்ளுவதாக சொல்லுவீர்கள்.எப்படியான ஆதாரங்களை தருவது?எல்லா வடிவிலான ஆதாரங்களும் உள்ளது.நீங்களும் தமிழர் என்பதால் அதை இதில் பதிவேற்றி, நீங்கள் செய்த தவறை நான் செய்ய விரும்பவில்லை. அனைவரும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் 2009 தமிழீழ விடுதைப் போராட்டம் மவுனிக்கப்பட்டுள்ளதே தவிர அழிக்கப்படவில்லை. அழிக்கவும் முடியாது.
ஒரு போராளியை பற்றி பதிவிட உங்களுக்கு யார் அனுமதித்தார்.றாம் இதற்கு நீங்கள் பதில் சொல்லவேண்டிய நேரம் விரைவில் வரும்.மீண்டும் மீண்டும் தவறு செய்து உங்கள் தவறுகளைக் கூட்டிச் செல்லாமல் சம்மந்தப்பட்டவரிடம் உங்களது உண்மையான ஊடக நியாயத்தின் படி மன்னிப்பு கேட்டுவிடுங்கள். றாம் அதிகமாக இந்தியாவுக்குப் பேசி ஆதாரம் திரட்ட முயற்சிக்காமல்,பண்பான நல்ல இனத்தின் மைந்தனாக வாழ இனியாவது கற்றுக்கொள்ளுங்கள்.
 

Edited by ஈழப்பார்வை

இப்பதான் இதை பார்த்தேன் .இவ்வளவும் நடந்திருக்கு ........அதுக்க வேற நியாயம் கேட்டு வளண்டியறாய் வேற வந்துள்ளார் .ம்ம் இது யாழ்களம் உறுப்பினர்களே இவருக்கு பதில் அழிப்பது நியாயம் என்னில் உறுப்பினர்களே கருத்துக்களை சொந்தமாக இணைக்கிறோம் ,நிர்வாகத்திற்கு தலையிடி கொடுக்காமல் நாமே அவருக்கு பதில் அளிப்பதுதான் தர்மம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.