Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்காமல் இருந்தது நன்மையானதே

Featured Replies

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் தமிழீழத்தமிழர்களின் விடுதலை உந்து சக்தியாக இருக்கும் என்று ஒரு சாராரும் அது ஒரு அயோக்கிய தீர்மானம் என்று இன்னொரு சாராரும் வாதாடுவதை பார்க்கிறோம்.
என்னைப் பொறுத்தவரை கொடும்புயலில் சிக்கி சின்னா பின்னமாகிப் போன படகில் இருந்து கொந்தளிக்கும் ஆள்கடலில் தூக்கி வீப்பட்ட ஒருவனுக்கு மிதவை ஒன்று கிடைத்தை போன்றது தான் இந்த தீர்மானம்.திசை தெரியாத ஆபத்துக்கள் நிறைந்த கடலிலில் அந்த மிதவையை பிடித்துக்கொண்டு தற்காலிகாக அவன் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம்.ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு அவன் கரை சேர்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல.
அமெரிக்கா தலைமையிலான மேற்குலக தீர்மானம் தமிழீழ மக்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வாக அமையாவிட்டாலும் அது சிங்கள ஆட்சியாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது என்ற அளவில் அதை நாங்கள் வரவேற்கலாம்.அந்த நெருக்கடியை இன்னும் இன்னும் வலுப்பெறச் செய்து எதிரியின் இருப்பை கேள்விக்குள்ளாக்குவதில் தான் எங்களது வெற்றி தங்கியிருக்கிறது.
எங்களதுnபாது எதிரிக்கு ஏற்படிக்கூடிய எந்த ஒரு நெருக்கடியையும் நாங்கள் ஊக்குவிக்க வேண்டுமே தவிர அதை முற்று முழுதாக நிராகரிக்கக் கூடாது.அப்படி நிராகரிப்பது என்பது எதிரி இன்னும் தப்பித்துக்கொண்டு பலம் பெற்றுக்கொண்டு நமது மக்களையும் நமது தாயகத்தையும் அழிப்பதற்கே வழிவகுக்கும்.
அடுத்து இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இருந்தது ஒரு வகையில் நல்லதென்றே எனக்குத் தோன்றுகிறது.இதில் இரண்டு நன்மைகள் நமக்கு ஏற்பட்டிருக்கின்றன.
நாங்கள் என்னதான் தொண்டை கிழிய கத்தினாலும் இந்தியா எங்களுக்கு விடுதலையை பெற்றுத் தரும் என்று என்று தமிழ் அதிகார வர்க்கம் மக்களை நம்பச் சொன்னது.இன்றைக்கு இந்தியா தனது கோமணத்தோடு அந்த அதிகார வர்க்கத்தின் கோமணத்தையும் சேர்த்து அவிழ்ந்து தனது அம்மணத்தை அதாவது தனது சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
அடுத்து இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருந்தால் அது பௌத்த சிங்கள பேரனவாதத்தை காப்பற்றுவதற்காக இந்த தீர்மானத்திலுள்ள அற்ப சொற்ப நெருக்கடியையும் இல்லாமல் செய்து திர்மானத்தையே நீர்த்துப்போகச் செய்திருக்கும்.
அந்த வகையில் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்காமல் இருந்தது எமக்கு நன்மையானதே.
அடுத்து இந்த தீர்மாத்தையும் அதன் அடுத்த கட்ட நகர்வுகளையும் எமக்கு சாதகமாக்குவதும் அவற்றை அடிப்படையாக வைத்து எமது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கூடிய பலமான சர்வதேச ஆதரவுத் தளத்தை திரட்டுவதும் எங்களுடைய கைகளிலேயே இருக்கிறது.
 
இந்தியா தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்துள்ளது. அதில் மாற்றுக் கருத்தில்லை.
 
அதேநேரம் ஈழப் பிரச்சனை சர்வதேசம் செல்வது என்பது புதிய பிரச்சனைகளையும் கொண்டுவரலாம். சுருங்கச் சொன்னால் பல எலிகள் புத்தெடுக்காது என்பார்கள். சர்வதேசம் என்பது அப்படியானதோர் நிலை.
 
அதே நேரம் இந்தியாவின் இந்தத்தீர்மானம் இலங்கை மீது கூடுதல் செல்வாக்குச் செலுத்தும் நிலைக்கு இந்தியாவைக் கொண்டு வந்துள்ளது என்றும் சொல்லலாம். இந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தியா தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
 
இந்தியாவிற்கு இந்தத்தீர்மானத்தினால் ஏற்பட்ட இழப்பு எப்படி என்றால் உதாரணமாக அமெரிக்கா ஏதாவது இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முற்பட்டால் அது இந்தியாவை இனிக் கலந்தாலோசிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தியா அந்தக்குழுவில் இருந்து விலகியது போல் ஓர் தோற்றம் ஏற்பட்டுள்ளது.
 
ஒரு வகையில் பார்த்தால் இந்தியாவின் தீர்மானம் எமக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் இலங்கைக்கு நிலமையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது எனலாம். எப்படி என்றால் இந்தியாவை நன்பனாக வைத்துக் கொண்டு அதேநேரம் தமிழ்மக்களுக்கு இனரீதியான ஒதுக்கும் போக்கை இலங்கை மிக இலகுவாக கொண்டு போக முடியாது. இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இதை இலகுவாகச் செய்யலாம். போர்க்காலத்தில் இந்தியா எதிராகத்தானே இருந்தது என்று நீங்கள் கேட்கலாம். அப்போது இருந்த நிலமை வேறு. புலிகள் இப்போது இந்தப் படத்தில் இல்லை.
 
எப்படிப் பார்த்தாலும் நாம் ஒரு முன்னேற்றகரமான நிலமையில் உள்ளோம். 

அதை யதீந்திராவும் நிலாந்தனும் வந்து சொன்னால்தான் இங்கு பலர் நம்புவார்கள்  :D  :D  :D  :lol:  :lol:  :lol: 

Edited by seeman

ஆ.. கா... கா.. கா..

இந்தியா பகைச்சால் என்ன விட்டால் என்ன இலங்கை தமிழருக்கு எதையும் செய்யாது.

இலங்கை செய்தாலென்ன விட்டால் என்ன இந்தியா பெருசா அலட்டிக்கொள்ளாது.

இலங்கை விடயத்தில் அமேரிக்கா முடிவெடுத்து செயற்பட அப்படி ஒரு பெரிய விடயம் இங்கிருப்பதாக தெரியவில்லை. அண்மைய உலக அரசியலில் மனிதவுரிமை என்றொரு ஆயுதம் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவுகாலமும் மனிதவுரிமை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத அமரிக்கா இப்போது அந்த விடயத்தை கையில் எடுத்திருப்பது தமது எதிர்கால அரசியல் மற்றும் அதிகார எல்லையை இராணுவ மேலாதிக்கத்துக்கு அப்பால்பட்டும் பிரயோகிப்பதுக்கே.

இலங்கையை கண்ணும் காணாமல் விட்டால் பினர் ஒருகாலத்தில் இதுவொரு பேசும் உதாரணமாக கட்டப்படும் அதுக்காவே இங்கு பல விடயங்கள் நடக்கின்றன.

இதுக்கும் நாங்கள் எங்கள் நலனை எப்படி முன்னுக்கு நகர்த்துவது?

  • கருத்துக்கள உறவுகள்

-------

இந்தியாவிற்கு இந்தத்தீர்மானத்தினால் ஏற்பட்ட இழப்பு எப்படி என்றால் உதாரணமாக அமெரிக்கா ஏதாவது இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முற்பட்டால் அது இந்தியாவை இனிக் கலந்தாலோசிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தியா அந்தக்குழுவில் இருந்து விலகியது போல் ஓர் தோற்றம் ஏற்பட்டுள்ளது.
------

இந்தியா ஆதரிக்காமல் விட்டது நன்மைக்கே... என்று நினைக்கின்றேன்.

அத்துடன் இலங்கையின்... நட்பு நாடான யப்பானும், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது கவனத்தில் கொள்ளவேண்டியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.