Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செக்ஸில் திருப்தி என்றால் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து நிராகரித்தல். முன்னர் எஸ்.எச்.நிஃமத் நவமணி பத்திரிகையில் ஆசிரிய பீடத்தில் இருந்த போது கேள்வி பதில் பகுதியை செய்து கொண்டிருந்தார். ஒரு வாசகர் கேள்வி ஒன்றை “பெண்ணை நிருப்த்திப்படுத்த ஆண் என்ன செய்ய வேண்டும்.?” இப்படி கேட்டிருந்தார். அது செக்ஸ் தொடர்பான கேள்வி. அதற்கு எஸ்.எச். நிஃமத் சொன்ன பதில் ”ஒரு விரல் போதும்” இப்பொழுது நான் நிஃமத்தை கண்டால் இதனைத்தான் ஞாபகப்படுத்துவேன்.

இது சாதாரணமான ஒரு விடயமல்ல முழு செக்ஸ் சூத்திரமே அடங்கி இருக்கின்றது. ஆண்கள் தங்கள் மனைவிமாரை திருப்த்திப்படுத்த முடியாமல் போய்விடுவோமா என்று அச்சத்தில் பயத்தில் இல்லாத பொல்லாத மருந்துகள் எல்லாவற்றையும் பெரும் விலைகொடுத்து வாங்கி சாப்பிடுவதை நான் கண்டிருக்கின்றேன். இன்று நேற்றல்ல இது காலகாலமாக ஆணுக்கிருக்கின்ற பெரும் கவலை வேதனை. படுக்கையில் ஒரு பெண் தன்னை நிராகரித்து விடுவாளோ அப்படி நிராகரிக்க கூடாது என்ற ஒரு பயம் தொடர்ந்தும் ஒவ்வொரு ஆண்களிடத்திலும் இருந்து கொண்டே இருக்கின்றது.

அதனால் தங்களை பெண்களிடம் நிரூபித்து காட்ட பெரும் பாடுபடுகின்றான் ஆண். ஆனால் இந்த பாடெல்லாம் தேவையில்லாத ஒன்று ஒரு ஆண் ஒரு பெண்ணை திருப்த்திப்படுத்த இவ்வளவு சிரமப்பட்டு அச்சப்படத்தேவையில்லை.

மனித மன அச்சத்தை மனதில் கொண்டு ஆண்களுக்கான பாலியல் தொடர்பான மருந்துகள் ஆண்குறியை நீளமாக்கும் கருவிகள் என்று சந்தையில் மில்லியன் கணக்கான டொலர்களில் பொருட்கள் வியாபாரத்திற்காக குவிந்து கிடக்கின்றன. உலகம் முழுவதும் நிலமை இதுதான். இதெல்லாம் ஆணின் அச்சத்தின் காரணமாக கொளித்த வியாபாரம் என்றால் அது நூறுவீதம் உண்மை.

ஆணுக்கு நீளமான ஆண்குறி இருந்தால் தான் ஒரு பெண்ணை திருப்த்திபடுத்த முடியும் என்று பெரும்பொய்யை பல வியாபார நிறுவனங்கள் பரப்பி ஆண்களின் பலவீனத்தை தங்களுடைய வியாபாரத்தால் பெருக்கி வருகின்றனர்.

அண்மையில் ஒரு விளம்பரத்தை பார்த்தேன். மாத்திரை இல்லை ஊசி இல்லை அறுவை சிகிச்சை இல்லை என்று ஆரம்பிக்கின்றது அந்த விளம்பரம் திருப்த்தியின்மை முன்கூட்டியே விந்து வெளியேறுதல் தன்னம்பிக்கை குறைவு என்று தொடர்ந்து ஆணுறுப்பை வளரச்செய்யும் பெரிதாக்கும் என்று அந்த விளம்பரம் செல்கின்றது. அது ஒருவகையான பிளாஸ்டிக் பொருள் ஆணுறுப்பில் பொருத்தி வைக்க வேண்டும். அதனால் ஆணுறுப்பு வளருமாம்.

பொய் சுத்த பொய் ஆணுறுப்பு ஒன்றும் வளருவதற்கு தலைமுடியோ அல்லது நகம் போன்றதோ அல்ல அது குழந்தையில் இருந்து வளர்ந்து பெரியவரானதும் தனது வளர்திறனை முடித்துக்கொள்ளும். ஒரு கையைப்போல காலைப்போல அல்லது ஒருகாதைப்போல ஆணுறுப்பின் வளர்ச்சி அவ்வளவுதான்.

சிலரின் உடம்பு வாசியைப்பொறுத்து அதன் அளவு பெரிதாக அல்லது சிறிதாக இருக்கும். ஓவ்வொரு உடலுக்கும் எது பொருந்துமோ அதுதான் அளவு. இது உடலுக்கு தெரியும் மனதுக்கும் தெரியும். ஆனால் வியாபாரிகள் தான் அதை பெரிதாக்குகின்றோம் என்று அடம்பிடிக்கின்றார்களே ஒளிய அது அளவோடுதான் இருக்கின்றது.

ஒரு ஆண் தன்மீதான நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் புதிதாக திருமணம் முடிக்கும் ஆண்கள் தான் முதலிரவில் மனைவியை திருப்த்திப்படுத்திவிட முடியாதோ என்று அச்சப்பட்டு அச்சப்பட்டே மனம் உடைந்து போவதை காண்கின்றோம். முதலிரவில் அங்கு அச்சப்பட்டு அவசரப்பட எதுவுமில்லை. அன்று நீங்கள் உங்களை நீங்கள் பேசி ஆசுவாசப்படுத்தவே முடிந்துவிடும். முதலிரவு என்பது புரிந்து கொள்வதற்கான இரவே தவிர அச்சப்பட்டு வேதனைப்படுவதற்கான இரவு அல்ல என்பதை புதுமாப்பிளைமார் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சும்மா பயந்து கொண்டிருப்பது அல்லது போலியாக டாக்டர்கள் சொல்வதை அல்லது விளம்பரங்கள் சொல்வதை நம்புவது. முழு முட்டாள்தனம். ஆண் பெண் உறவு தொடர்பாக எமது முன்னோர்கள் மிகவும் முக்கியமாக ஆராய்ந்து ஜோடி சேர்ப்பதற்கு முயன்றிருக்கின்றனர். அதில் செக்ஸ் சம்பந்தப்பட்ட விடயங்களும் பொருத்தம் பார்க்கப்பட்டு திருமணங்கள் நிட்சயிக்கப்பட்டன.

திருமணப் பொருத்தத்தில் யோனிப்பொருத்தம் என்ற ஒரு விடயம் இருக்கின்றது. பலருக்கு தெரியும். இது செக்ஸ் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி முன்னோர்கள் வைத்திருக்கும் ஒரு முறை. தாம்பத்திய உறவின் சுகம் திருப்த்திநிலை ஆகியவற்றை தீர்மானிக்கும் அளவுகோல் இது. ஆண்பெண் யோனி நிலைகளை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறையாக இருக்கின்றது இது . நட்சத்திரங்கள் 13 மிருகங்களின் பெயரைக்கொண்டு பிரிக்கப்பட்டு உள்ளது.

உத்தராட நட்சத்திரம் மட்டும் கீரி என்றும் சில நூல்கள் மலட்டு பசு என்றும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு . ஆண்பெண் பகை மிருகம் மட்டுமே பொருத்தமில்லை என்று சொல்வார்கள். பகை மிருகங்கள் சேராமல் பார்த்துக்கொள்வார்கள் பெரியவர்கள்.

இதில்

1. அச்சுவினி – ஆண் குதிரை

2. சதயம் – பெண் குதிரை

3. பரணி – ஆண் யானை

4. ரேவதி – பெண் யானை

5. கார்த்திகை – பெண் ஆடு

6. பூசம் – ஆண் ஆடு

7. ரோகினி – ஆண் பாம்பு

8. மிருகசீரிடம் – பெண் பாம்பு

9. திருவாதிரை – பெண் நாய்

10. மூலம் – ஆண் நாய்

11. புனர்பூசம் – பெண் பூனை

12. ஆயிலயம் – ஆண் பூனை

13. மகம் – ஆண் எலி

14. பூரம் – பெண்எலி

15. உத்தரம் – ஆண் மாடு

16. உத்தரட்டாதி – பெண்மாடு(பசு)

17. அத்தம ; – பெண் எருமை

18. சுவாதி – ஆண் எருமை

19. விசாகம் – ஆண் புலி

20. சித்திரை – பெண் புலி

21. அனுஷம் – பெண் மான்

22. கேட்டை – ஆண் மான்

23. பூராடம் – ஆண் குரங்கு

24. திருகோணம் – பெண் குரங்கு

25. உத்தராடம் – ஆண் கீரி

26. அவிட்டம் – பெண் சிங்கம்

27. பூரட்டாதி – ஆண் சிங்கம்

ஒவ்வொரு விடயத்தையும் இங்கு நோக்க வேண்டும்.

குதிரை-எருமை

யானை-சிங்கம்

ஆடு-குரங்கு

பாம்பு-எலி

பசு-புலி

ப10னை-எலி

கீரி-பாம்பு

மான்-நாய்

இவை சேரக்கூடாது யோனிவழி பிரிக்கப்பட்ட பகை மிருகங்கள்.

பகை மிருகங்களை சேரக்கூடாது என்கிறார்கள். அத்துடன் இருவரும் ஒரு யோனியாகிலும், ஆண்களுக்கு ஆண்யோனியும் பெண்களுக்கு பெண்யோனியாயினும், இருவருக்கும் பெண் யோனியாயினும் உத்தமம் என்றும் இருவருக்கும் ஆண் யோனியாகில் மத்திம பலன் என்றும் பெண்ணுக்கு ஆண் யோனியும் ஆணுக்கு பெண்யோனியும் பொருத்தம் வராது என்றும் ஜோதிட சாத்திரம் சொல்கிறது.

ஒரு ஆணையும் பெண்ணையும் சேர்கும் போது அவர்கள் மிக நீண்ட பாலியல் சுகம் அடைய வேண்டிய என்ற சிந்தனை தொன்றுதொட்டே எமது சமூக அமைப்புக்களில் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக இருந்து வந்திருக்கின்றது.

சரி செக்ஸ் திருப்தி என்பது வெறுமனே உடலுறவில் மட்டும் அல்லது ஆணுறுப்பின் நீள அகலத்தில் மட்டுமே முடிவு செய்யப்படுவதில்ல. அது மனதோடும் உடலோடும் சம்பந்தப்பட்ட விடயமாகும்.

செக்ஸில் உச்ச பட்ச இன்பம் தொடர்பாக இப்பொழுது சிந்திக்கின்ற சமூகம் முந்திய காலத்தில் சிந்தித்திருக்குமா? என்பது கேள்விதான். தொழில்நுட்ப வளர்ச்சி திரைப்படங்களில் செக்ஸ் உணர்வுகளை துல்லியமான நடிப்பின்மூலம் மூலம் வெளிப்படுத்திக்காட்டுதல் எப்படியான நிலைகள் எப்படியெல்லாம் ஒரு ஆணும் பெண்ணும் படுக்கையில் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றெல்லாம் தொலைக்காட்சியும் திரைப்படமும் வெளிப்படுத்தி காட்டி வருகின்றன.

முதல் என்றால் ஆங்கிலப்படத்தை பார்ப்பதற்கு எங்களுக்கு யாருமே அனுமதி தரமாட்டார்கள். முத்தக்காட்சி வந்துவிடும் என்ற பயம் எமது பெரியவர்களுக்கு. இப்பொழுது தொலைக்காட்சி சின்னப்பிள்ளைக்கும் வீட்டில் வைத்து சொல்லிக்கொடுத்து விடுகின்றது. ஹிந்தி திரைப்படங்களில் குறைந்தது 30 முத்தக்காட்சிகளை வைத்து விடுகின்றார்கள்.குடும்பத்துடன் தியேட்டருக்கு போனால் எப்படி முத்தக்காட்சியை ஓடவிட்டு பார்ப்பது. வீட்டில் என்றால் றிமோட்டும் கையுமாக பெற்றோர்கள் இருப்பார்கள். ஆனால் பிள்ளைகள் இன்ரநெற்றில் எல்லாவற்றையும் பார்த்து தெரிந்துவிடும்.

இப்பொழுது பெண்களுக்கும் செக்ஸ் தொடர்பான முழு இன்பத்தையும் முழுமையாக உய்த்து உணரவேண்டும் என்ற அவாவும். ஆசையும் வந்து விட்டது. அது உலக தொழில்நுட்ப மற்றும் மானுட அறிவின் வளர்ச்சிதான்.

பெண்களை முழுமையாக திருப்த்திப்படுத்த என்று ஒரு ஆண் கவலையோ கஷ்டமோ படத்தேவையில்லை. பெண்ணின் ஜனன உறுப்பில் உணர்வுகளின் எல்லா முடிச்சுக்களும் ஆரம்பத்தில் உள்ள பத்து சென்டிமீட்டர் அளவில்தான் குவிந்து கிடக்கின்றன. எனவே அதனை உணர்ந்து ஒரு ஆண் தன்னை ஈடுபடுத்துவானாகில் பெண் பூரண சுகத்தை அடைந்து விடுவாள்.

உண்மையில் 10 சென்டி மீட்டர் உடைய ஆணுறுப்பே போதும் ஒரு மனித உடலுறவுக்கு இதனை ஒரு பெரிய விடயமாக மனதைபோட்டு குழப்பிக்கொள்ளத்தேவையில்லை ஆண்கள். மன மகிழ்ச்சியான வாழ்வு என்பது இருவரும் புரிந்துகொண்டு ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான். செக்ஸ் உறவு தொடர்பான அதீத கவலை- நான் மனைவியை திருப்த்திப்படுத்தும் ஆம்பிளைதானா என்ற விடயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கணவன் மனைவியாக சந்தோசமாக வாழுங்கள். உலகத்தில் இப்படி எத்தனைபேர் சிரித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உங்களால் முடியும். நவமணி நிஃமத் சொன்னது சரிதானே.

இளைய அப்துல்லா

http://www.tamilspy.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அச்சுவினியும் பூரமும் சேர்ந்தால்  எப்பிடியிருக்கும்?  happy0193_zps0ec55089.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நட்சத்திரப் பொருத்தப்படி எங்களுக்குள் இந்தப் பொருத்தம் இல்லை.  ஆனால், நடைமுறையில் நல்ல பொருத்தம் இருக்கிறதே  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

திருப்தி இல்லையென்றால் உள்ளங்கை ரேகை பற்றி யோசிக்காமல்,முயற்சியில் இறங்கவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸில் திருப்தி என்றால் - உச்சக்கட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸில் திருப்தி என்றால்..... மழலைச் செல்வங்களுக்கு, அப்பா ஆகுதல்.

  • கருத்துக்கள உறவுகள்
செக்சில் திருப்தி என்றால்..... சந்தான விருத்தி அம்போ என்று ஆகிவிடும்..  :o
 

அச்சுவினியும் பூரமும் சேர்ந்தால்  எப்பிடியிருக்கும்?  happy0193_zps0ec55089.gif

 

குசா தாத்தா தாங்கள் அச்சுவினி பரிமளம் அன்ரா பூரமா?  :D  :D  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்
தமிழில் என்றுமே அழியாத ஒரு பழமொழி உள்ளது. ஆனால் அதன் சொற்கள் கடுமையானவை. ஆகவே அதனை மென்மைப்படுத்தியுள்ளேன்.
 
'ஊத்தை போகக் குளித்தவனும் இல்லை. ஆசை தீர அனுபவித்தவனும் இல்லை.'
 
 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் என்றுமே அழியாத ஒரு பழமொழி உள்ளது. ஆனால் அதன் சொற்கள் கடுமையானவை. ஆகவே அதனை மென்மைப்படுத்தியுள்ளேன்.

'ஊத்தை போகக் குளித்தவனும் இல்லை. ஆசை தீர அனுபவித்தவனும் இல்லை.'

இதற்கு தமிழர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கணித சமன்பாடு ஒன்று வலுசேர்க்கிறது.

விருப்பம் = 1

மனநிறைவு = 0

இச்சை = விருப்பம் / மனநிறைவு :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம்  இடக்கு மடக்கான விடயம்

செக்சில் மனநிறைவு அல்லது கூடுதல் அனுபவிப்பு வேண்டுமெனில்

கற்பனையும்

அதிக ஆசையும் தேவை

ஆனால் இவை  இரண்டும் வந்துவிட்டால்

திருப்தி  என்பது எட்டமுடியாததாகிவிடும்..... :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

இதற்கு மேல் எழுதலாம்

ஆனால் எனது நேரத்தை வீணடித்தவிடுவார்கள்  கத்திரிக்கோலாளர்கள்.... :(

  • கருத்துக்கள உறவுகள்

உமி தூக்கும் பலம் உள்ளவரை இந்த ஆசை போகாது என்று படித்த ஞாபகம்........ :wub::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.