Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களுக்கான ராஜீவின் தியாகத்தை மறக்க வேண்டாம்: சோனியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images(1102).jpg
'இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கின்றனர். காங்கிரசை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர் ராஜிவ் இந்த மக்களுக்காக ரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்' என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 

தேர்தல் பிரசாரத்துக்காக கன்னியாகுமரி பிரதேசத்துக்குச் சென்றுள்ள சோனியா தொடர்ந்தும் பேசியுள்ளதாவது,

இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என அரசியல் கட்சியினர் குற்றம்சுமத்துகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. 

அருமை தலைவர் ராஜீவ் காந்தி, இலங்கைத் தமிழ் மக்களுக்காக இரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்' என கேள்வி எழுப்பினார். 

காங்கிரஸ் கட்சி குறித்து யாரும் பொய் பிரசாரம் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து உதவி செய்யும். 

இங்கு வாழும் தமிழர்களுக்கு வீதிகள், பள்ளிக்கூடங்கள், மறுவாழ்வு மையம் அமைத்து கொடுத்துள்ளோம். அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரசை குறை கூற வேண்டாம். 

இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். மீனவர்கள் படும் துன்பம் எனக்கு தெரியும். எனது அரசு மீனவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் இரு தரப்பு மீனவர்களை சந்தித்து பேச்சு நடத்த காங்கிரஸ்தான் முழு ஏற்பாடு செய்தது. அ.தி.மு.க,. அரசு காலதாமதம் செய்தது என்பதை பகிரங்கமாக சொல்லி கொள்கிறேன்' என்று சோனியா காந்தி மேலும் கூறினார். (தினமலர்) 

 
 

செய்த வினை ஒன்றையும் 24 வருடங்கள் போயும் நாங்கள் மறக்கவில்லை.

நீங்களும் புருசனை தேர்தல் நேரம் மட்டும் ஞாபக படுத்துவதை நிறுத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்தியாகம் என்றால் தெரிந்தே செய்வது.. முத்துக்குமரன் செய்தான்; செங்கொடி செய்தாள். எண்ணுக்கணக்கற்ற போராளிகள் செய்தார்கள். உங்க ஆத்துக்காரரும் அப்பிடியா?  :o

 

முதல்ல உங்களைப் பிடிச்சு உள்ளே போடணும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

'இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கின்றனர். காங்கிரசை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர் ராஜிவ் இந்த மக்களுக்காக ரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்' என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 

 

அவர் ரத்தம் சிந்தியது... ஒரு புறம் இருக்கட்டும்.

அவர்... ஏன் இரத்தம் சிந்த வேண்டி வந்தது, என்று சற்று நினைத்துப் பார்த்தீர்களா?

மேடையும், மைக்கும்... கிடைத்தவுடன் எதையும் பேசி விட்டுப் போகலாம் என்று,

சோனியா நினைத்தால்... அது  அவரின் அரசியல் அறிவீனத்தையே... காட்டுகின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா அரசியல்வாதி கிடையாது. கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி. இந்திரா வீட்டு மருமகள் ஆனது உட்பட..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா அரசியல்வாதி கிடையாது. கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி. இந்திரா வீட்டு மருமகள் ஆனது உட்பட..! :icon_idea:

 

அவர் அரசியல்வாதி இல்லையென்றால்....

காங்கிரஸ் கட்சியின் தலைவராக தெரிவு செய்துள்ள.... நூறு கோடி இந்திய மக்கள் முட்டாள்களா. :rolleyes:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நேரு குடும்ப விசுவாசத்தில் குளிர் காய்பவர்களை எல்லாம் அரசியல்வாதி என்றால்..???!

 

ரஜனி காந்துக்கு சினிமாவில் உள்ள செல்வாக்கை அரசியலாக்கி பார்ப்பவர்களைப் போன்றதே இது. நேரு குடும்ப செல்வாக்கை.. தனக்கான முதலீடாக்கியவர் சோனியா.

 

அவருக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். அவரை இயக்கிக் கொண்டிருப்பவர்களும்.. நேரு குடும்ப விசுவாசிகளே..! அரசியல் விற்பன்னர்கள் அல்ல. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி மறக்கிறது .............. செய்த அநியாயங்களை  :(

  • கருத்துக்கள உறவுகள்

10155257_625306837551714_618646300172008

அவர் அரசியல்வாதி இல்லையென்றால்....

காங்கிரஸ் கட்சியின் தலைவராக தெரிவு செய்துள்ள.... நூறு கோடி இந்திய மக்கள் முட்டாள்களா. :rolleyes:

நூறு கோடி மக்கள் இவரை தெரிந்தெடுக்கவில்லை.

ராஜீவை பிடித்து தலைவியாக வந்து குந்திவிட்டார்.

நேரு குடும்பத்தின் பல நூறு பில்லியன் டொலர்களை அனுபவிப்பவர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கு இந்தியக் காங்கிரஸ் செய்த தியாகங்கள்.

 

1. 1987 இல் சமாதானப் படை அனுப்புகிறோம் என்று 125,000 நரவேட்டை நாய்களை அனுப்பி 10,000 தமிழ் மக்களைக் கொன்று குவித்தது.

 

2. 6 வயதுச் சிறுமி முதல் 60 வயது மூதாட்டிவரை கூட்டாகப் பாலியல் வதை செய்து பிறப்புறுப்பில் கைக்குண்டு வைத்து வெடிக்கவைத்துக் கொன்றது.

 

3. கூலிப்பட்டாளங்களைக் கூட்டி வந்து தம்முடன் சேர்ந்து இனக்கொலை ஒன்றை அரங்கேற்றியது.

 

4.  2008 - 2009 இல் சிவசங்கர மேனன், நாராயணன், அந்தோனி என்கிற மலையாள நாய்களையும், பிரணாப் முகர்ஜி எனப்படும் பார்ப்..னையும், இன்னும் வெளியுறவு அதிகாரிகளையும் கொண்ட இலங்கை - இந்திய ராணுவக் கூட்டை நிறுவி இனவழிப்பிற்கான முஸ்த்தீபை இட்டது.

 

5.  2008 - 2009 இல் இராணூவ, புலநாய்வு , ஆயுத உதவிகளை வழங்கியது மட்டுமல்லாமல், சீனா பாக்கிஸ்த்தான், ரஷ்ஷியா போன்ற நாடுகளிலிருந்து இலங்கை ஆயுதங்களைத் தங்குதடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியையும், நீண்டகால வட்டியில்லாக் கடனாக பாரிய தொகையையும் இலங்கைக்கு வழங்கியது.

 

6.  2009 இறுதி யுத்தக் காலத்தில் சிங்களப் படைகளுக்கு போர்க்களத்தில் ஆல்லோசனை உதவிகள், உத்திகளை வழங்கியது. இதில் இராணுவ ஆள் உதவியும் அடங்கும்.

 

7. 2009 ஆகஸ்ட்டில் இறுதி யுத்தத்தை நடத்தலாம் என்று அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா எடுத்த முடிவை தடுத்து நிறுத்தி,  மே 18 இற்குள் இறுதி யுத்தம் முடிக்கப்பட்டு புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்கிற செய்தி தனது செவிக்கு வரவேண்டும் என்கிற செய்ததியுடன் மேனன், நாராயணன் வகையறாக்களை உடனடியாக அனுப்பி வைத்தது.

 

8. தனது வழிநடத்துதலில் நடக்கும் இனவழிப்பு யுத்தம் எந்த வெளிநாட்டின் அழுத்தத்தினாலும் முடிவிற்கு வந்துவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் சர்வதேச நாடுகளின் கண்களிலிருந்து இனவழிப்பை மறைத்தது. புலித் தலைவர்களையும், பொதுமக்களையும் பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்கக் கடற்படை எடுத்த முடிவினைத் தடுத்து நிறுத்தி, முற்றான இனவழிப்பை உறுதிப்படுத்திக்கொண்டது.

 

9. தான் விரும்பியவாறே இந்தியத் பொதுத் தேர்தல் முடிவுகள் வரமுன்னர் இனப்படுகொலைய அரங்கேற்றி முடித்தது.

 

10. இனவழிப்புப் போர் முடிந்த 2009 இலிருந்து இன்றுவரை சிங்களப் பயங்கரவாதம் செய்த, செய்துவருகின்ற இனவழிப்பை சர்வதேசத்தில் மறைத்து வருவதும், சர்வதேசத்தில் இலங்கைக்கெதிராக எடுக்கப்படும் நடவடிக்ககளையும் தடுத்து வருவது.

 

 

இதைவிட ஒருவரால் பெரிய தியாகம் எதனையும் செய்து விட முடியுமா சொல்லுங்கள் ???

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் உங்கள் பட்டியல் அபாரம். ராஜீவின் கூலி பட்டாளம் செய்த கொடுமைகள் உலகம் அறியும் ஆனால் ஜனநாயகம் என்னும் முக மூடிக்குள் இருப்பதால், உலக நாடுகளால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.