Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாலிப வயதுக் குறும்பு. பாகம் 7

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"மச்சான் சிவாசிகணேசன் நடித்த சவாலே சமாளி.... திறமான படமாம், நாளைக்கு ராணித் தியேட்டரிலை முதல் காட்சி 10மணிக்கு, கட்டாயம் போய்ப் பார்க்கவேண்டும்." பாலா சொன்னான். ஆனால் பசை வேண்டுமே ? மூன்று ரூபாதான் இருக்கு. ஆறு பேரும் போவதென்றால் !நுளைவுச்சீட்டு... இன்னமும் 90சதம் வேணும். தேங்காய்க்கடையில் 180 தேங்காய் உரித்தால் 90 சதம் கிடைக்கும். ஆளுக்கொரு அலவாங்கு நாட்டி தேங்காய்கள் உரிக்கப்பட்டன. எண்ணியபோது முந்நூறை நெருங்கி வந்துவிட்டது. தேங்காய்களுக்கு முற்கூட்டியே பணம்கொடுத்து சொல்லிவைத்தவன் நாளை விடிய வரப்போகிறான். வழக்கமாக உரிப்பவனைக் காணவில்லையே...? என்ற கவலையில் இருந்த முதலாளிக்குப் பரம சந்தோசம்!!.  இரண்டுரூபா நோட்டு ஒன்றை எடுத்து எங்களை ஆசிர்வதிப்பதுபோல நீட்டினார்.  
 
10 மணிக்காட்சி, " 9 மணிக்கே அங்கு நிற்கவேண்டும் அப்போதுதான் சீட்டுக் கிடைக்கும்". அண்ணர் கூறினார்; "புதுப்படம் ! இன்று இரவே கடைசிப் பேரூந்திலை வந்து கேற்றுவாசலிலை படுத்துக் கிடப்பாங்கள். நாங்கள் எட்டு மணிக்கு என்றாலும் அங்கை இருக்கவேணும்."  ஆச்சி கூறினனான். 'சவாலே சமாளி' படம்பார்ப்பது உறுதியானது. விடிய 5 மணிக்கே எழுந்து ஆயிரம் புகையிலைக் கன்றுகளுக்கும் தண்ணீர் ஊற்றி முடித்து நான் தயாராகிவிட்டேன். நண்பர்களும் புளியம்பழம், பனம்பழம் பொறுக்குவதிலிருந்து, பசுவில் பால்கறந்து அதற்குத் தவிடு, புண்ணாக்குக் கலந்துவைத்து அவரவர்கள் வீட்டுக்கு வேண்டிய காரியங்களை விரைவாகவே முடித்துத் தயாராகி நின்றனர்.  மூன்று துவிச்சக்கர வண்டிகளில் ஆறு பேர், காக்கிச் சட்டைகளின் கண்களில் மண்ணைத்தூவிக், குச்சு ஒழுங்கை குறுக்கு ஒழுங்கைகள் ஊடாக  துவிச்சக்கர வண்டிகள் பறந்தன. 
 
ஒழுங்கைக்குள் காக்கிச்சட்டை போடாது காவல்புரியும் வயிரவரின் வாகனங்கள் தரும் தொல்லை சிலசமயம் எல்லைமீறுவதுண்டு. குதிக்காலைத் துண்டெடுத்து விடுவதுபோல் பாய்ந்து துரத்துவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு நாங்கள் ஒரு தொழில் நுட்பம் வைத்திருந்தோம். அவையள் துரத்தும் இடங்கள் எங்களுக்குத் தெரியும். அந்த இடங்கள் வரும்போது ஒரு வண்டி சற்றுப் பின்னால் வரும். அவனிடம் நீளமான, தடித்த பூவரசம் தடியும் இருக்கும். முன்னால் செல்பவர்களை வீராவேசத்துடன் துரத்தும் வீரபத்திரரின் வாகனத்தை பின்னால் வரும் நண்பன் விளாசும்போது அவர் எழுப்பும் வாள் வாள் சத்தம் ஊரைப் பிளக்கும். "யாரடா நாய்க்கு அடித்தது?"  நாய்ச் சொந்தக்காரரின் அதட்டல் எங்களுக்குக் கேட்பதற்கிடையில், நாங்கள் நாலைந்து முடக்குகள் தாண்டியிருப்போம். இரண்டாவது சினிமாக் காட்சிக்கு செல்லும் நேரம் மிகவும் சுவையானது. அந்த நேரங்களில்தான் சில வீடுகளில் இரவுச் சமையல் நடக்கும். இறால் பொரியலின் மணம் மூக்கைத் துளைக்கும். நின்று அந்த மணத்தை உறுஞ்சும் போது கிடைக்கும் ஆனந்தம்! ஆகா...! அனுபவித்தவர்களுக்கே புரியும் !!.  
 
8 மணி, ராணித்தியேட்டர் வாசலுக்கு வந்துவிட்டோம். என்ன ஆச்சரியம் ! ஒரு காக்கை குருவியைக்கூட தியேட்டர் வாசலிலை காணவில்லை !!. எங்கள் ஆச்சரியத்துக்கு தியேட்டர் வாசலில் நின்ற காப்பாளர் விடைதந்தார். 'சவாலே சமாளி' படச்சுருள் நல்லூர் முருகனிடம் ஆசிபெறப் பூசைக்குப் போய்விட்டது. பூசை முடியப் படச்சுருள் பெட்டி ஊர்வலமாக எடுத்து வரப்படும். ஊர்வலத்தில் பங்குபற்றி வருபவர்களுக்குத்தான் நுளைவுச்சீட்டு முதலில் வழங்கப்படும். இடமிருந்தால் மட்டுமே மற்றவர்களுக்கும் வழங்கப்படும். மணி ஒன்பது ஊர்வலம் வரும் ஆரவாரச் சத்தம் தூரக் கேட்டது. எங்கள் ஆறுதலைகளும், அவசரமாகச் சிந்தனை செய்து முடிவெடுத்தன. தியேட்டருக்கு அருகே இருந்த மருந்துக்கடைப் பொன்னையர் எங்கள் ஊர். துவிச்சக்கர வண்டிகள் அவரது கடை ஓடைக்குள் பாதுகாப்பாகத் தஞ்சம் புகுந்தன. கடையின் பின்னறை, சுவாமியறை. அனைத்துச் சுவாமிகளும் ஆசீர்வதித்தன. எங்கள் நெற்றிகளில் பட்டை பட்டையாக வீபூதி. சந்தணம், குங்குமப் பொட்டுகள். காதுகளில் பூ. என அலங்காரம் அமர்க்களப் படுத்தியது. 
 
ஊர்வல வரிசையில் நுளைய முற்பட்டபோது வரிசையில் வந்த முருக பக்தர்கள் வேலைத் தூக்கினார்கள். தியேட்டரின் தொண்டர் படையில் ஒன்று தடியுடன் ஓடிவந்தது. வந்தது எங்கள் நெற்றிகளில் பட்டையைக் கண்டதும் தயங்கியது. "எங்கே போனீர்கள் ?" பேரூந்துநிலைய மலசல கூடத்தை எங்கள் கைகள் காட்டின. "ஏன் தியேட்டருக்குள் இருக்கும் கூடத்திற்குள் போயிருக்கலாம்தானே?"  "அடக்கமுடியவில்லை."  அதுவும் எங்கள் பதில்தான்!!. அவனுக்குத் அவனது சொந்த அனுபவங்கள் சில ஞாபகத்திற்கு வந்திருக்கலாம். "சரி சரி போங்கோ." எங்கள் நுளைவைத் தடுக்க, வெகுண்டு எழுந்தவர்களையும் அவன் சாந்தப்படுத்தினான்.   
 
ஊர்வல வரிசைக்குள் நுளைந்து இடிபட்டுச் சீட்டு எடுத்தபின்பும், கலரியில் பின்வாங்கில் இடம்பிடிக்க ஓட்டம் வேண்டியிருந்தது. எங்களில் முன்னே ஓடி வெற்றிபெற்ற நால்வருக்கு இடம்கிடைத்துக் குந்திவிட்டனர். நானும் ஆச்சியும் நின்றோம். நண்பர்களைப் பிரிந்திருக்க மனமில்லை. முன் வாங்குக்குச் சென்று அணில் ஏறவிட்ட நாய்போல் அண்ணாந்து படம்பார்க்கவும் விருப்பமில்லை. நிற்பவர்களின் தொகையும் பெருகவே.... "இரு! மறைக்காதே! அங்காலேபோ!" பின்னால் இருந்து கூக்குரல் சத்தம் காதைப் பிளந்தது. காட்சியே தொடங்கவில்லை ! வெற்று வெள்ளித்திரையைப் பார்க்க வேண்டுமாம் !!. அண்ணாவும் பாலாவும் அருகருகே வாங்கில் இருந்தார்கள். மற்றைய இருவரும் சிறிது தள்ளி தனித்தனியாக இருந்தார்கள். அண்ணன் அருகிலேயே நானும் ஆச்சியும் நின்றோம். 
 
அண்ணரும், பாலாவும் எங்கள் இருவரையும் பார்க்க, நாங்கள் இருவரும் அவர்களைப் பரிதாபமாகப் பார்க்க, அண்ணர் சுற்றுமுற்றும் பார்த்தார். இருக்க இடமே இல்லை. திடீரென பாலாவின் முகத்தில் பளீர் என்று ஓர் அறை.... அவனுக்கு மின்னல் மின்னியிருக்க வேண்டும்.... அடித்தது அண்ணர்தான். பொறிகலங்கியவன் பொங்கி எழுந்தான் "ஏன்டா அடித்தாய்." அண்ணரின் சட்டையைப் பற்றினான். அண்ணரும் எழுந்துவிட்டார். கூச்சல்... குழப்பம்..... இருந்த அனைவரும், ஆரவாரப்பட்டுச் சண்டையைப் பார்ப்பதற்கு  எழுந்துவிட்டனர். அடிக்கக் கை ஓங்கிய பாலாவின் தோளைப்பற்றிய அண்ணரின் கைகள், எங்களையும் பற்றி "இருங்கோடா, இருங்கோடா" என்று பற்களைக் கடித்துச் சொல்லி அழுத்தினார். ஆறுபேரும் வாங்கில் அருகருகே ஒன்றாகவே அமர்ந்துவிட்டோம். பாவம், இருந்தவர்களில் சிலருக்குத் திரும்பவும் அங்கு இருக்க இடம் கிடைக்கவில்லை. படம் ஆரம்பமானது. சண்டை பார்ப்பதற்கு எழுந்த குற்றத்திற்காகவும், பாதுகாவலர் கட்டளையை மீறமுடியாமலும், எழுந்தவர்கள் முன்வாங்கில் எங்கோ இருந்துதான் படம் பார்த்திருப்பார்கள். அண்ணரைப் பார்த்தான் பாலா, அவன் கன்னம் வீங்கவில்லை! பதிலாக அவரை ஆச்சரியத்தோடு பார்த்த கண்கள் பெரிதாகி வீங்கின!!. 
 
  • கருத்துக்கள உறவுகள்

எமனைப் பச்சடிபோட்ட கள்ளர் என்றால் இவையள்தான்..  :o  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

------

விடிய 5 மணிக்கே எழுந்து ஆயிரம் புகையிலைக் கன்றுகளுக்கும் தண்ணீர் ஊற்றி முடித்து நான் தயாராகிவிட்டேன். நண்பர்களும் புளியம்பழம், பனம்பழம் பொறுக்குவதிலிருந்து, பசுவில் பால்கறந்து அதற்குத் தவிடு, புண்ணாக்குக் கலந்துவைத்து அவரவர்கள் வீட்டுக்கு வேண்டிய காரியங்களை விரைவாகவே முடித்துத் தயாராகி நின்றனர்.  
-------

பாஞ்ச் உங்களது வாலிப வயதுக் குறும்பு -7ஐ  வாசிக்க நன்றாக இருந்தது.

ஊரில்... எவ்வளவு குறும்பு செய்தாலும், அன்றாடக் கடைமைகள் பாதிக்காமல்... செய்வதை ஞாபகப் படுத்தியது. :)

  • கருத்துக்கள உறவுகள்

6x 65 = Rs3.90

கணக்குச் சரியாத் தான் இருக்கு!

நாங்கள் கலரி என்று அழைப்பதைக் கௌரவக் குறைவாகக் கருதியதால், 'காந்தி கிளாஸ்' என்று எங்களுக்குள் பேசிக்கொள்வதுண்டு!

காந்தி என்றால், சிக்கனம் என்ற பொருளில் வரும்!

இந்த நாயளுக்கு, இலகுவான வழி ஒன்று உள்ளது! செகண்ட் ஷோவுக்குத் தான் இதைப் பாவிக்கலாம்!

அதை இங்கே சொன்னால், இத்தால் சகலருமறிக ... திரியில் எனது பெயர் வரும்...! :o 

வழக்கம் போல அனுபவம் அந்த மாதிரி.....! :icon_idea:  

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் படம் வந்தாலும் முதல் நாள் செக்கன்ட் ஷோ , அல்லது தேர்ட் ஷோ தவறாமல் பார்த்து விடுவோம்...! மறக்க முடியுமா  படம் முதல் யாழ்ப்பாணத்தில் ஓடவில்லை, மானிப்பாயில்தான் ஓடியது.அதையும் விடவில்லை சயிக்கிளில் சென்று பார்த்தோம்...! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
பூசை முடியப் படச்சுருள் பெட்டி ஊர்வலமாக எடுத்து வரப்படும். ஊர்வலத்தில் பங்குபற்றி வருபவர்களுக்குத்தான் நுளைவுச்சீட்டு முதலில் வழங்கப்படும்
சினிமா டிக்கட்டிலும் முருகன் உங்களை கை விடவில்லை ......நல்லூர்கந்தனுக்கு அரோகரா
  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகள் சுகமானவை

வாசித்தபோது

எமது சிறு பிள்ளை  விளையாட்டுக்குள் மனக்கண் முன் ஓடுகின்றன

தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
என்கதைக்குப் பச்சசைக்கொடி காட்டிய புத்தன், ரதி,  வசி, சுவி, தமிழ் சிறி, அலைமகள், புங்கையயூரன், இசைக்கலைஞன், நிலாமதி, விசுகு அனைவருக்கும் நன்றிகள்!!  :rolleyes:  :rolleyes:
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமனைப் பச்சடிபோட்ட கள்ளர் என்றால் இவையள்தான்..  

எமனுக்குத் தர்மதேவன்  என்றும் பெயருண்டு. தர்மதேவனையே பச்சடி போடும் திறனுள்ளோரைக் கள்ளர் என அழைக்கக்கூடாது. வள்ளர் எனப் பெருமைப்படுத்த வேண்டும்.  :D

பாஞ்ச் உங்களது வாலிப வயதுக் குறும்பு -7ஐ  வாசிக்க நன்றாக இருந்தது.

ஊரில்... எவ்வளவு குறும்பு செய்தாலும், அன்றாடக் கடைமைகள் பாதிக்காமல்... செய்வதை ஞாபகப் படுத்தியது. 

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே இது எங்கள் தாரக மந்திரம்.  :)
 
6x 65 = Rs3.90

கணக்குச் சரியாத் தான் இருக்கு!

நாங்கள் கலரி என்று அழைப்பதைக் கௌரவக் குறைவாகக் கருதியதால், 'காந்தி கிளாஸ்' என்று எங்களுக்குள் பேசிக்கொள்வதுண்டு!

காந்தி என்றால், சிக்கனம் என்ற பொருளில் வரும்!

இந்த நாயளுக்கு, இலகுவான வழி ஒன்று உள்ளது! செகண்ட் ஷோவுக்குத் தான் இதைப் பாவிக்கலாம்!

அதை இங்கே சொன்னால், இத்தால் சகலருமறிக ... திரியில் எனது பெயர் வரும்...!

வழக்கம் போல அனுபவம் அந்த மாதிரி.....! 000

புங்கையூரன் எனக்குமட்டும் அதைச் சொல்லுங்கள். உங்கள் பெயர் திரியில் தெரியாது திரிந்துவிடச் செய்கிறேன்.  :lol:
 
எந்தப் படம் வந்தாலும் முதல் நாள் செக்கன்ட் ஷோ , அல்லது தேர்ட் ஷோ தவறாமல் பார்த்து விடுவோம்...! மறக்க முடியுமா  படம் முதல் யாழ்ப்பாணத்தில் ஓடவில்லை, மானிப்பாயில்தான் ஓடியது.அதையும் விடவில்லை சயிக்கிளில் சென்று பார்த்தோம்...! 

'மறக்க முடியுமா' படம் முதலில் இணுவில் காலிங்டன் தியேட்டரில் ஓடியதாகத்தான் நான் எண்ணியிருந்தேன். மானிப்பாயிலும் ஓடியதை இப்போதுதான் அறிந்தேன். காலிங்டன் தியேட்டர் கட்டியதற்கு அன்றுதான் அதன் மனேச்சர் வைரவப்பிள்ளை அவர்கள் 'கவுசு புல்' என்ற பலகையைப் பெருமையுடன் மாட்டினார். :D
 
சினிமா டிக்கட்டிலும் முருகன் உங்களை கை விடவில்லை ......நல்லூர்கந்தனுக்கு அரோகரா

மருந்ததுக் கடையில் நல்லூர்க்கந்தனின் படம்தான் பெரிதாக இருந்தது. :wub:
 
நினைவுகள் சுகமானவை

வாசித்தபோது

எமது சிறு பிள்ளை  விளையாட்டுக்குள் மனக்கண் முன் ஓடுகின்றன

தொடருங்கள்

நினைவுகள் சுகமானவை. அதனை மீட்டும்போது வளர்ந்திருக்கும் வயதுதான், ஆளை வளைய விடாது முறித்தெடுக்கிறது. :o   
 
  • கருத்துக்கள உறவுகள்

இணுவில் தியேட்டர் கன காலமாய் இருக்கு.  ஆனால் நான் ஒரு படமும் அங்கு பார்க்க வில்லை.

மானிப்பாயில் தியேட்டர் கட்டி முதலாவது படமாய் இருக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். " மறக்க முடியுமா" மிகவும் சோகமான படம்...!

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

.....

ஒழுங்கைக்குள் காக்கிச்சட்டை போடாது காவல்புரியும் வயிரவரின் வாகனங்கள் தரும் தொல்லை சிலசமயம் எல்லைமீறுவதுண்டு. குதிக்காலைத் துண்டெடுத்து விடுவதுபோல் பாய்ந்து துரத்துவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு நாங்கள் ஒரு தொழில் நுட்பம் வைத்திருந்தோம். அவையள் துரத்தும் இடங்கள் எங்களுக்குத் தெரியும். அந்த இடங்கள் வரும்போது ஒரு வண்டி சற்றுப் பின்னால் வரும். அவனிடம் நீளமான, தடித்த பூவரசம் தடியும் இருக்கும். முன்னால் செல்பவர்களை வீராவேசத்துடன் துரத்தும் வீரபத்திரரின் வாகனத்தை பின்னால் வரும் நண்பன் விளாசும்போது அவர் எழுப்பும் வாள் வாள் சத்தம் ஊரைப் பிளக்கும். "யாரடா நாய்க்கு அடித்தது?"  நாய்ச் சொந்தக்காரரின் அதட்டல் எங்களுக்குக் கேட்பதற்கிடையில், நாங்கள் நாலைந்து முடக்குகள் தாண்டியிருப்போம். இரண்டாவது சினிமாக் காட்சிக்கு செல்லும் நேரம் மிகவும் சுவையானது. அந்த நேரங்களில்தான் சில வீடுகளில் இரவுச் சமையல் நடக்கும். இறால் பொரியலின் மணம் மூக்கைத் துளைக்கும். நின்று அந்த மணத்தை உறுஞ்சும் போது கிடைக்கும் ஆனந்தம்! ஆகா...! அனுபவித்தவர்களுக்கே புரியும் !!.  
 
...
 
ஊர்வல வரிசைக்குள் நுளைந்து இடிபட்டுச் சீட்டு எடுத்தபின்பும், கலரியில் பின்வாங்கில் இடம்பிடிக்க ஓட்டம் வேண்டியிருந்தது. எங்களில் முன்னே ஓடி வெற்றிபெற்ற நால்வருக்கு இடம்கிடைத்துக் குந்திவிட்டனர். நானும் ஆச்சியும் நின்றோம். நண்பர்களைப் பிரிந்திருக்க மனமில்லை. முன் வாங்குக்குச் சென்று அணில் ஏறவிட்ட நாய்போல் அண்ணாந்து படம்பார்க்கவும் விருப்பமில்லை.
 
அண்ணரும், பாலாவும் எங்கள் இருவரையும் பார்க்க, நாங்கள் இருவரும் அவர்களைப் பரிதாபமாகப் பார்க்க, அண்ணர் சுற்றுமுற்றும் பார்த்தார். இருக்க இடமே இல்லை. திடீரென பாலாவின் முகத்தில் பளீர் என்று ஓர் அறை.... அவனுக்கு மின்னல் மின்னியிருக்க வேண்டும்.... அடித்தது அண்ணர்தான். பொறிகலங்கியவன் பொங்கி எழுந்தான் "ஏன்டா அடித்தாய்." அண்ணரின் சட்டையைப் பற்றினான். அண்ணரும் எழுந்துவிட்டார். கூச்சல்... குழப்பம்..... இருந்த அனைவரும், ஆரவாரப்பட்டுச் சண்டையைப் பார்ப்பதற்கு  எழுந்துவிட்டனர். அடிக்கக் கை ஓங்கிய பாலாவின் தோளைப்பற்றிய அண்ணரின் கைகள், எங்களையும் பற்றி "இருங்கோடா, இருங்கோடா" என்று பற்களைக் கடித்துச் சொல்லி அழுத்தினார். ஆறுபேரும் வாங்கில் அருகருகே ஒன்றாகவே அமர்ந்துவிட்டோம். பாவம், இருந்தவர்களில் சிலருக்குத் திரும்பவும் அங்கு இருக்க இடம் கிடைக்கவில்லை. படம் ஆரம்பமானது. சண்டை பார்ப்பதற்கு எழுந்த குற்றத்திற்காகவும், பாதுகாவலர் கட்டளையை மீறமுடியாமலும், எழுந்தவர்கள் முன்வாங்கில் எங்கோ இருந்துதான் படம் பார்த்திருப்பார்கள். அண்ணரைப் பார்த்தான் பாலா, அவன் கன்னம் வீங்கவில்லை! பதிலாக அவரை ஆச்சரியத்தோடு பார்த்த கண்கள் பெரிதாகி வீங்கின!!. 

நல்லா அனுபவித்து, இரைமீட்டி எழுதியுள்ளீர்கள் பாஞ்ச்.. :lol:  மறுபடியும் படித்து ரசித்தேன்!

NT_131101162125000000.jpg

இதை வாசிக்கையில், என் கிராமத்தில் 'டெண்ட் கொட்டா'யில் சிறு வயதில் "என் மகன்" படம் பார்த்த ஞாபகம் வந்தது. உள்ளே இருட்டாக இருக்க வேண்டுமென்பதற்காக பெரிய சாக்கு துணிகளால் பக்கவாட்டு வெளிகளையெல்லாம் அடைத்து வைத்திருப்பார்கள்..வசதியான பெருசுகள் பின்னாலிருக்கும் பெஞ்சுகள் பகுதியிலிருந்து படம் பார்ப்பர். வெண்திரைக்கு முன்புறமாக ஆற்று மணல்தான் கொட்டியிருப்பார்கள்..முன்னல் இருப்பவர்களின் தலை மறைக்கக் கூடாதென பின்னாலிருப்ப்வர்கள் மணலை குவித்து வைத்து அதன்மேல் உட்கார்ந்துதான் படம் பார்க்கவேணும்..

அன்று பாரிவேட்டை திருநாள்..

வீட்டில் அவித்து வைத்திருந்த சர்க்கரை கிழங்கு(Sweet potato) , மொச்சைப் பயறு, பாசிப் பயறு சுண்டலகளை ஒருகை பார்த்துவிட்டு, பகல் காட்சிக்கு தரை டிக்கட் 20 பைசா வாங்கி உள்ளே சென்று நானும், நண்பனும் மணல் குவித்து உட்கார்ந்தோம்..

படம் தொடங்கி, "நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்..?" என சிவாஜி எங்களைப் பார்த்து பாட, கூட்டம் முழுவதும் சந்தோச ரகளையில் ஓங்கி கத்த.. உள்ளே ஒரே பட படவென சிறு வெடிகள் எழ, நாற்றம் தாங்காமல் வெளியே வந்துவிட்டோம்..! :(

அன்றிலிருந்து பாரிவேட்டை நாள் என்றால், படமே பார்க்க செல்வதில்லை என சபதமெடுத்தோம். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.