Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ லவ் யூ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ லவ் யூ

ஐ லவ் யூ . இந்த ஆங்கில வாக்கியம் அறிமுகமான பின்புதான் 20-ம் நூற்றாண்டு தமிழர்கள் தங்கள் காதலை ‘வாயால்’ நேரிடையாக சொல்ல ஆரம்பித்திருப்பார்கள் என்றே தரவுகள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னால் எல்லாம் ஜாடை மாடை , கண்களால் சிக்னல் கொடுப்பது என ஓட்டிக்கொண்டிருந்து, எப்போதேனும் மறைவிடத்தில் வாய்ப்பு கிடைத்தால் கட்டியணைத்து முத்தமிடுவது அல்லது மேட்டரையே முடித்து விடுவது என ஓடிக்கொண்டு இருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மேட்டர் முடிவதற்கு முன் இருவரும் ஒரு வார்த்தை பேசியிருக்க மாட்டார்கள்.

ஐ லவ் யூ அறிமுகமானதும் உற்சாகமான நம் ஆட்கள், கொள்ளுத்தாத்தா எள்ளுத்தாத்தா முதற்கொண்டு தன் பரம்பரையில் எல்லோரும் சொல்ல முடியாமல் விட்ட காதலை எல்லாம்

சேர்த்து வைத்து சொல்ல ஆரம்பித்தனர். அதிலும் ஜெனடிக் பிராப்ளம் இருக்கும்தானே ? இதயம் முரளி போல விதிவிலக்காக சிலரும் ஐ லவ் யூவை வெளியே சொல்லாமல் செரித்தபடியே மரித்தும் போயினர்.

இந்தக் கட்டுரைக்காக திருமணமாகாத நான்கு பெண்களிடம், இதுவரை எத்தனை பேர் உங்களிடம் ஐ லவ் யூ சொல்லி இருப்பார்கள் என்று கேட்டேன். நான்கு பேர் சொன்ன பதிலும் ஒத்துப்போனது.150 முதல் 200 நபர்கள் வரை ஐ லவ் யூ சொல்லியிருக்கின்றனர். எந்த வயதில் உங்களிடம் ஐ லவ் யூ சொல்ல ஆரம்பிக்கின்றனர் என்ற கேள்விக்கு வந்த பதில்தான் செம காமடி. ஆறாவது படிக்கும் போதில் இருந்து என்று சிலரும், 8 வது படிக்கும் போதிலிருந்து சொல்ல ஆரம்பித்தனர் என்று சிலரும் கூறினர்.

இந்த லவ் யூ சொல்லும் கோஷ்டிகளில் இருப்பவர் அதே வயதொத்த ஆணா என்றால் இல்லை. ஆறாவது படிக்கும் பெண்ணுக்கு 10 வது படிக்கும் பையனோ 12 வது படிக்கும் பையனோ லவ் யூ சொல்கிறான். இதைக்கூட ஒரு வேடிக்கையாக எடுத்துக்கொள்ளலாம்.பெரிதாக (!) எதுவும் நடந்து விடாது. 25 வயது ஆண்களும் 8 வது படிக்கும் பெண்ணிடம் லவ் யூ

சொல்கின்றனர்.இதுதான் பேடித்தனம்.இங்குதான் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. இவர்கள் திட்டம் போட்டு செயல்படுபவர்கள்.பெற்றோர்கள் இந்த ஏரியாவில்தான் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.சமூக ஆர்வலர் ரோலை கழட்டி விட்டு இன்றைய 21-ம் நூற்றாண்டு 2014-ம் ஆண்டு காதலை ஊடுருவிப்பார்ப்போம்.

ஆறாம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே 200 பேர் மூலம் லவ் யூ சொல்லக்கேட்ட பெண்ணுக்கு லவ் யூ என்ற வார்த்தைக்கு அர்த்தம் மறந்து போய் சுரணையே கெட்டுப் போயிருக்குமே என்று கேட்டேன். அப்படியெல்லாம் இல்லை, உண்மையிலேயே மனதுக்கு பிடித்தவன் காதலுடன் லவ் யூ

சொல்லும்போது அந்த “லவ் யூ “ இழந்த சுரணையை மீட்டெடுத்து , வெட்கத்தை சற்று நேரம் உட்சொருகி , ரத்தத்தில் “ஜிவ்” பவுடரை கலந்து , உடலின் பாகங்கள் உடலை விட்டு பிய்த்துக் கொண்டு செல்வதைப்போன்ற உணர்வையும் கொடுக்கத்தான் செய்கிறது என்றார்கள். இந்தக் காரணத்தாலேயே இன்னும் தன் மதிப்பை தன்னகத்தே கொண்டு வெற்றிகரமாக உலகை ஆண்டுகொண்டிருக்கிறது “லவ் யூ”.

பள்ளிக்காலத்திலிருந்து ஒரு பையன் பத்துப்-பதினைந்து பெண்களிடம் ஐ லவ் யூ

சொல்லி நூல் விட்டுப் பார்த்து கல்லூரிக்கு வந்து செகண்ட் இன்னிங்க்ஸ் தொடங்குகிறான்.இந்த காலத்தில் வேறு வழியில்லாமல் லேசாக முதிர்ச்சி பெற்று , திருமணம் செய்து கொள்ள ஏற்றவளா என்ற பார்வையில் பெண்களை காதலிக்க ஒரு பக்கம் தேடிக் கொண்டு, சுற்றுவதற்கும் செக்ஸுக்கும் வேறு சில பெண்களை இன்னொரு பக்கம் தேட ஆரம்பிக்கிறான்.இரண்டிலும் தோல்வி கிட்டிய ஆண்மகன் பெண்களை வெறுக்க ஆரம்பித்து அவளை அசிங்கப்படுத்தும் வேலையில் இறங்குகிறான்.இந்த காலகட்டத்தில் பெண்களின் நிலைமை பரிதாபத்திற்குரியதாகி விடுகிறது. கண் முன்னே ஆயிரத்தெட்டு காதல் விண்ணப்பங்கள் , எதை ஏற்றுக்கொள்வது எதை நிராகரிப்பது என தெரியாமல் குழம்பி , எதையாவது ஏற்றுக்கொள்ளாவிட்டால் வேறு யாரிடமாவது ஓடிப்போய்விடுவார்கள் என பயந்து எவனிடமாவது தற்காலிகமாக மாட்டுகிறார்கள். பல பெண்களுக்கு செக்ஸுவல் ஹாரஸ்மெண்ட் என்ற கசப்பான அனுபவம் ஏற்பட்டு விடுகிறது.

கல்லூரிக்காலம் முடிந்து அலுவலகத்திலும் சமூக வலைத்தலங்களிலும் காதல் வேட்டை தொடர்கிறது. ஆண்கள் முந்தைய காலம் போல எல்லாம் எஃபர்ட் எடுத்து இப்போதெல்லாம் காதலிப்பதில்லை என்று ஒரு பெண் என்னிடம் அலுத்துக்கொண்டார். அதாவது , ஒரு பெண்ணை தினமும் ராணுவ ஒழுங்கோடு பின் தொடர்வது , குறிப்பிட்ட நேரத்தில் தினமும் ஏதேனும் ஒரு இடத்தில் அட்டண்டென்ஸ் போடுவது , மிக சிரமப்பட்டு அவளின் முகவரியை கண்டு பிடிப்பது , அவளின் தோழியை கஷ்டப்பட்டு அறிமுகப்படுத்திக்கொண்டு அவளின் மூலம் காதலியை அணுகுவது. ஏதேனும் ஒரு சாக்கை ஏற்படுத்திக்கொண்டு அதிரடியாய் காதலியின் வீட்டிற்குள் நுழைவது , இரவில் திருட்டுத் தனமாய் சென்று பிறந்த நாள் வாழ்த்து

சொல்வது. மொத்தத்தில் இப்போது பசங்க சோம்பேறி ஆயிட்டாங்க, காதலிப்பதற்காக ஒரு அட்வென்ச்சரும் செய்வது இல்லை, என்று திட்டினார்.

முன்பெல்லாம் காதலனை பெண்கள் தேர்ந்தெடுத்தார்கள்.இப்போதெல்லாம் தேட வேண்டிய அவல நிலை உள்ளது. இதை முன்வைத்தே ஒரு பெண் மேல் பத்தியில் சொன்னதைப்போல அலுத்துக்கொண்டார்.ஒரு பெண் காதலை ஒத்துக் கொள்ளும் வரையில் அந்தப்பெண்ணுக்கு தெரிந்த ஆணின் கேரக்டர் வேறு, காதலை ஒத்துக்-கொண்ட அடுத்த கணம் அவனிடம் இருந்து வெளிப்படும் அந்தப் புத்தம் புது கேரக்டரைப் பார்த்து மிரண்டு போகிறாள் பெண்.அந்தக்கணமே அவனை வெறுக்கத் தொடங்கி விடுகிறாள். ஆக பிரயத்தனப்பட்டு உருவான காதல் ஒரு நிமிடத்தில் செத்து விடுகிறது. காதல் என்ற கண்றாவி உறவுக்குள் வந்த அடுத்தக் கணம் காதலன் பம்பு செட்டு குழாயில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதைப்போல அவளுக்கு ரூல்ஸ் போட ஆரம்பிக்கிறான். பழங்காலத்தை விட தற்போது ஏன் காதலன்கள் தங்கள் காதலியை சந்தேகப்பட்டு வறுத்து எடுக்கிறார்கள்? பழங்காலத்தில் ஆண்களுக்கு திருமணத்திற்கு முந்தைய பாலியல் சுகம் கிடைப்பது கொஞ்சம் அரிதாக இருந்தது. தற்போது ஒரு ஆண் தன் அதிகாரபூர்வமான (!) காதலியை அடைவதற்கு முன் ஏழெட்டுப் பெண்களின் அண்மையையும் அவர்களின் புனிதமான காதலையும் உணர்ந்து விட்டு வருவதால் , இவளும் அப்படி ஏழெட்டு ஆண்களின் உன்னதமான காதலை அனுபவித்து விட்டு வந்திருப்பாளோ? என்ற சந்தேகம் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் தானுமே இந்த அதிகாரபூர்வமான காதலியைத்தாண்டி இன்னும் யாரேனும் கிடைப்பார்களா என நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைகிறோமே ! அப்படித்தானே இவளும் அலைவாள் என்ற படைப்பூக்க சந்தேக மன எழுச்சியே காரணமாக இருக்க முடியும்.

அவன் அவளுக்கு ரூல்ஸ் போட ஆரம்பிக்கிறான்.

1) ஃபேஸ்புக்கில் அளவா புழங்கு.

2) அவனுக்கெல்லாம் லைக் போடாதே .

3) இவனுக்கு ஏன் கமெண்ட் போட்ட ?

4) அவனுக்கு ஏன் போன் நம்பர் குடுத்த ?

5) அந்த ஃபிரன்ட்சையெல்லாம் கட் பண்ணு.

6) அவங்க வீட்டுக்கு போகாதே.

7) சிரிக்காதே !

8) லோ நெக் , ஸ்லீவ் லெஸ் போடாதே

9) அவங்க கூட டிரிங்க்ஸ் பண்ணாதே

10) அந்த பர்த்டே பார்ட்டிக்கு அவசியம் போகணுமா ?

இன்னும் கற்பனைக்கே எட்டாத கட்டளைகளை பட்டியலிட்டால் லட்சத்தை தொடும்.

மொபைல் போன் மூலம் , இணையத்தின் மூலம் அவளை எப்போதும் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான்.

ஹலோ

சொல்லுடா

எங்க இருக்க ? (இந்த எங்கே இருக்க என்ற கேள்வியை கேட்காத காதலனே கிடையாது.)

வீட்லதான்.

வீட்லயா ? எதோ பஸ் போற சவுண்ட் கேட்குது ?

வீட்லதான் இருக்கேன்.

வீட்ல சிக்னல் இவ்ளோ தெளிவா கேட்காதே?

வராண்டாவில் இருக்கேன்.

சரி , உன் தம்பி கிட்ட போனை குடு , ஒண்ணு கேக்கணும்.

இந்த நாய் ஏன் தம்பி கிட்ட போனை குடுக்கச் சொல்லுது என அவளுக்குத் தெரியாதா ?

அவளும் வீட்டில் இல்லை என்பது வேறு விஷயம் .

இந்த அளவு நம்பகத்தன்மையோடும் , புரிந்துணர்வோடும்தான் இனறைய காதல் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதன் விளைவுதான் நல்ல லாபத்தோடு ஓடிக்கொண்டிருக்கும் ஆன்லைன் மேட்ரிமோனி சைட்கள். தற்போது காதலிக்காதவர்கள் யாரும் இல்லையென்ற நிலையில் ஏனய்யா இத்தனை மேட்ரி மோனி சைட்கள்?

காதலனே கணவன் அவதாரம் எடுத்து டார்ச்சர் செய்வதால், அந்த இமேஜினரி காதலன் இடத்தை பூர்த்தி செய்ய இவளுக்கு இன்னொரு ஜாலியான ஆண் தேவைப்படுகிறான். இவர்கள் ஒரு டீலுக்கு வருகிறார்கள். ஒருவரை ஒருவர் டார்ச்சர் செய்யக்கூடாது. இதுதான் முக்கியமான டீல், இதைத்தவிர ஜோடிகளுக்கு ஏற்றார்போல பலவிதமான டீல்கள் உண்டு.

ஆணைப்போல ஒரு பெண்ணுக்கும் செக்ஸ் உணர்வு 18 வயதில் ஆரம்பித்து விடுகிறது. பல்வேறு சமுதாய சூழல்களால் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டு இருக்கும் நிலையில் , அவள் மனதளவில் செக்ஸ் உறவுக்கு எந்த குற்றவுணர்வும் இல்லாமல் தயாரானால் கூட அவள் திருமணம் செய்து கொள்ளப்போகும் காதலனுடன் அந்த உறவை தவிர்ப்பாள்.

ஏனென்றால்?

திருமணம் முடிந்ததும், ஏதேனும் சண்டையின்போது கல்யாணத்துக்கும் முன்னாலேயே எங்கூட படுத்தவதானே நீ ? என்று அவன் கேட்டுவிடுவான் என்ற பயம்தான்...இல்லை இல்லை அவளின் உறுதியான நம்பிக்கைதான் காரணம். காதல் வாழ்க!

- See more at: http://andhimazhai.com/news/view/araathu.html#sthash.6DEBOJWn.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெட்டைக்கு 200 பேர் வரையில் ஜ லவ் யூ சொல்லுவாங்களா? எனக்கு ஒருத்தன் கூட சொல்லேல்ல :lol:...அவ்வளவு அசிங்கமாவா இருக்கிறேன்:icon_mrgreen::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெட்டைக்கு 200 பேர் வரையில் ஜ லவ் யூ சொல்லுவாங்களா? எனக்கு ஒருத்தன் கூட சொல்லேல்ல :lol:...அவ்வளவு அசிங்கமாவா இருக்கிறேன்:icon_mrgreen::lol:

நேர பாத்தா சொல்லலாம்.நான் ஒரு நாளைக்கு ரெண்டு தரமாவது கண்ணாடி பாக்கிறதால எனக்கு இந்த சந்தேகம் வாரேல்ல
  • கருத்துக்கள உறவுகள்

இருநூறு பேர் என்பது மிகைப் படுத்தல் தான்

  • கருத்துக்கள உறவுகள்

இருநூறு பேர் என்பது மிகைப் படுத்தல் தான்

அது அழகிகளுக்கு சொல்லியிருப்பினம்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெட்டைக்கு 200 பேர் வரையில் ஜ லவ் யூ சொல்லுவாங்களா? எனக்கு ஒருத்தன் கூட சொல்லேல்ல :lol:...அவ்வளவு அசிங்கமாவா இருக்கிறேன் :icon_mrgreen::lol:

லண்டனில் இருக்கும் ஏதாவது கே (gay) பார் பக்கம் போய் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெட்டைக்கு 200 பேர் வரையில் ஜ லவ் யூ சொல்லுவாங்களா? எனக்கு ஒருத்தன் கூட சொல்லேல்ல :lol:...அவ்வளவு அசிங்கமாவா இருக்கிறேன் :icon_mrgreen::lol:

 

 

ஏன் சகோதரி இவ்வளவு கவலை? 
 
மனதை தளரவிடாததீர்கள், எங்கள் ரதிக்கு ஒரு மன்மதன் உண்டு
 
இதோ உங்களுக்காக இந்தப்பாடல்
 
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
என் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
ஓஹோ ஓஹோ ஓஹோ
அது நீயன்றோ அது நீயன்றோ
 
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
என் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
ஓஹோ ஓஹோ ஓஹோ
 
அது நீயன்றோ அது நீயன்றோ
அது நீயன்றோ அது நீயன்றோ
 
 
என் கை வளை ஓசையில் கலந்திருப்பான்
செங்கனி இதழ் ஓரத்தில் விழுந்திருப்பான்
என்னை எட்டிப் பிடிப்பான் மெல்லக் கட்டி அணைப்பான்
எட்டிப் பிடிப்பான் மெல்லக் கட்டி அணைப்பான்
சுவை கொட்டிக் குவிப்பான் எந்தன் குறை தீர
ஓஹோ ஓஹோ ஓஹோ
அது நீயன்றோ அது நீயன்றோ
அது நீயன்றோ அது நீயன்றோ
 
:D  :lol:  :D  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெட்டைக்கு 200 பேர் வரையில் ஜ லவ் யூ சொல்லுவாங்களா? எனக்கு ஒருத்தன் கூட சொல்லேல்ல :lol:...அவ்வளவு அசிங்கமாவா இருக்கிறேன் :icon_mrgreen::lol:

 

இது  பொய்

இங்கு ஒருவர் கடலை போட்டதை  நாங்கள் கண்டோமே... :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இருக்கும் ஏதாவது கே (gay) பார் பக்கம் போய் பாருங்கள்.

இது நீங்கள் போற கிளப்பாச்சே என்னை எதுக்கு உங்களோட சேர்க்கிறீங்கள்:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ட்ரைட் ஆகலாமா என்று யோசிக்கிறேன்..... அதுக்குதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்சமாக இருக்கின்றவர்கள் எல்லாருக்கும் ஐ லவ் யூ என்று சொல்லமுடியுமா?

ஆண்கள் முந்தைய காலம் போல எல்லாம் எஃபர்ட் எடுத்து இப்போதெல்லாம் காதலிப்பதில்லை என்பதைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.