Jump to content

நிலா நிலா ஓடி வா!


Recommended Posts

பதியப்பட்டது

கவுண்டிங் இன்னும் அரைமணி நேரத்தில் முடிந்து விடும்.... க்ரிஷ், காதர், ஹனி மூவரும் டென்ஷனாக இருந்தார்கள்.... அவர்கள் இருந்தது ஒரு விண்கலம்... விண்வெளி உடையில் இருந்தார்கள்.... க்ரிஷ் அந்தக் கலத்தின் கமாண்டர்.... கலத்தின் பெயர் ராம்-பாபர்.... காதர் ராம்-பாபரைச் செலுத்தப் போகிறவன்... ஹனி கமாண்டரின் வலதுகை.... இந்தியாவின் நிலவுப் பயணத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூவர் இவர்கள் தான்....

ராக்கெட் ஒன்று பூமியின் புவியீர்ப்பு எல்லை வரை இவர்கள் கலத்தை இழுத்துச் செல்லும்.... அதன் பின்னர் காதர் தான் கலத்தைச் செலுத்த வேண்டும்... மூன்று பேரின் உயிரும் அவன் கையில் இருக்கிறது.... சுமார் 5 ஆண்டுக்கால அசுரப் பயிற்சி அவன் கண்களில் தெரிந்தது....

க்ரிஷ்-ன் சிறுவயது கனவு நிறைவேறப் போகிறது.... அம்மா சோறூட்டும் போது "நிலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடிவா" எனப் பாடுவாள்.... குழந்தையான க்ரிஷோ "அம்மா, நிலா எப்படிம்மா ஓடி வரும்.... அதுக்குதான் கால் இல்லையே... நாம தான் நிலாவுக்கு போகணும்" என்பான்.... நிலா கனவிலேயே வளர்ந்தவன் இந்த கமாண்டர் க்ரிஷ்....

இஸ்ரோவின் தலைவர் கயூம் இந்த மூவரையும் கடந்த 5 ஆண்டுகளாகத் தயார்படுத்தி வந்திருந்தார்.... சந்திரனுக்கு போனவுடன் எப்படி நடக்க வேண்டும் என்பதில் தொடங்கி ரேடியோ ட்ரான்ஸ்மிட்டரை உபயோகப்படுத்துவது.... ஆபத்து ஏதாவது ஏற்பட்டால் செய்ய வேண்டிய நடைமுறைகள்.... ஆக்ஸிஜன் சிலிண்டரில் பழுது ஏற்பட்டால் எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள், மாத்திரை வடிவிலான உணவை எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் என திட்டமிட்டு அனைத்தையும் சொல்லித் தந்திருந்தார்.... புவியீர்ப்பு குறைக்கப்பட்ட அறை ஒன்றை அமைத்து அதில் க்ரிஷ்ஷையும், ஹனியையும் பலமுறை விண்வெளி உடையில் நடக்க வைத்து பயிற்சியளித்தார்....

பெருத்த ஓசையுடன் ராக்கெட் லாஞ்ச் ஆனது... கலத்தில் இருந்த மூவரும் பலத்த அதிர்வை உணர்ந்தார்கள்... நொடிகள் கரைய.... நெஞ்சம் இடமிருந்து வலமாய் அடித்துக் கொண்டது.... எதிர்பார்த்த கோணத்தில், சரியான வேகத்தில் ராக்கெட் சீறிப் பாய்ந்தது....

ஒருவருக்கொருவர் ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர் மூலமாக பேசிக்கொள்ள முடிகிறதா என சோதனை செய்தார்கள்.... சரியாக இருந்தது.... பூமியில் இருந்த தகவல் தொடர்பு நிலையத்துடன் தொடர்புகொள்ள முடிகிறதா என்று முயற்சி செய்துப் பார்த்தார்கள்.... எல்லாம் ஓக்கே.... ராக்கெட்டில் இருந்து கலம் பத்திரமாகப் பிரிய வேண்டுமே என்ற ஒரே கவலை மட்டுமே அவர்களுக்குள் இருந்தது....

ஹனி லேசாக க்ரிஷ்ஷைப் பார்த்து புன்னகைத்தாள்.... க்ரிஷ் 28 வயது இளைஞன்.... கமல்ஹாசனைப் போல அழகாக இருந்தான்.... ஹனி 26 வயது.... பாப் கட்டிங் வெட்டி இருந்தாள்.... விண்வெளிக்குப் போகும்போது கூட லிப்ஸ்டிக் தேவையா இவளுக்கு? காதர் கொஞ்சம் டென்ஷனாகவே இருந்தான்.... கலத்தின் கண்ட்ரோல்கள் சரியாக வேலை செய்கிறதா என்று நோண்டிப் பார்த்துக் கொண்டே இருந்தான்.... அப்படியும் அவன் முகத்தில் திருப்தி தெரியவில்லை....

கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும்.... திரும்பி வரவேண்டும்.... மூவரின் உயிர் மட்டுமல்ல.... தேசத்தின் மானமும் காதரின் கைகளில் இருந்தது..... இதோ ராக்கெட் புவியீர்ப்பு எல்லையைத் தொட்டு விட்டது.... காதர் ராக்கெட்டுக்கும், கலத்துக்குமான தொடர்பினைத் துண்டிக்கும் லீவரை இயக்கினான்.... கலம் பெருத்த அதிர்வுடன் வெற்றிகரமாகப் பிரிந்தது..... எல்லாமே கச்சிதம்.... பூமியில் இருக்கும் விண்வெளித் தொடர்பு நிலையத்தில் ஆனந்தக் கூச்சல் ரேடியோவில் கேட்டது....

கலம் நினைத்த மாதிரியே பயணிக்கத் தொடங்கியது.... மெல்ல இருட்டு அவர்கள் கலத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.... பூமியைப் பார்த்தார்கள்.... ஆரஞ்சுப் பழம் போன்ற தோற்றம்.... இவ்வளவு பெரியதா நம் பூமி எனும் ஆச்சரியம் அவர்கள் கண்களில்..... கலம் விலகிச் செல்ல செல்ல மிக மெதுவாக சிறியதாகிக் கொண்டே வந்தது....

க்ரிஷ் ஹனியிடம் சந்திரனுக்கு அருகில் கலம் சென்றதும்... துணைக்கலம் ஒன்றில் இருவரும் லேண்ட் ஆகி செய்யவேண்டிய ஆராய்ச்சிகளைப் பற்றி விவரித்தான்.... சந்திரனில் இறங்கிய முதல் இந்தியர்கள் என்று நம் பெயரை வரலாறு பதிவு செய்யும் என்றான்.... காதர் கலத்தைச் செலுத்துவதிலேயே கவனம் செலுத்தினான்....

எங்கும் இருட்டு.... நட்சத்திரங்களும், சூரியனும் மட்டுமே துணை என்ற நிலையில் சுமார் ஒரு வாரம் கழிந்தது.... காதர் எச்சரித்தான்.... நிலவுக்கு வந்து விட்டோம்.... நிலவின் மிகக் குறைவான புவியீர்ப்பு கலத்தைச் செலுத்துவதற்குத் தடையாக இருக்கிறது என்றான்....

க்ரிஷ்ஷும், ஹனியும் தயார் ஆனார்கள்.... இன்னும் 5 நிமிடங்களில் துணைக்கலனைச் செலுத்த வேண்டும்.... காதர் கொஞ்சம் டென்ஷனாகவே இருந்தான்... துணைக்கலன் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டுமே என மனதுக்குள் பிரார்த்தித்தான்.... துணைக்கலனுக்குள் ஹனியும், க்ரிஷ்ஷும் நுழைந்தனர்.... ஹனி அதைச் செலுத்த தயாராகி விட்டாள்.....

கண்ணுக்குத் தெரிந்த தூரம் வெறும் மணல் பரப்பே.... அமெரிக்காவின் தேசிய கொடிக்கு சில மீட்டர் தூரத்தில் நம் மூவர்ணக் கொடியையும் க்ரிஷ் கம்பீரமாக பறக்க விட்டான்... மனதுக்குள் "ஜெய் ஹிந்த்" என முழங்கினான்.... மணல் மற்றும் சிறு பாறைகளை சேகரிக்கும் பணியில் ஹனி மும்முரமாக இருந்தாள்.... இயல்பான அசைவுகளை அசைக்கவே ரொம்பவும் சிரமப் படவேண்டி இருந்தது.... புவியீர்ப்புக் குறைக்கப்பட்ட அறையில் பயிற்சி எடுத்தும் கூட நிலவில் இயங்குவது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.....

நிலவை ராமர்-பாபரில் சுற்றிக் கொண்டிருந்த காதர் அவ்வப்போது ரேடியோ டிரான்ஸ்மீட்டரில் தொடர்புகொண்டு பிரச்சினை ஏதுமில்லையே என விசாரித்துக் கொண்டிருந்தான்.... இயல்பிலேயே கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி அவன்....

எவரெஸ்ட்டு சிகரத்துக்கும் உயரமான சிகரங்கள் நிலவில் இருந்தது.... அதை விட ஆழமான பள்ளத்தாக்குகளும் இருந்தது.... பகல் வேலைகளில் வெப்பம் மிக அதிகமாகவும், இரவு வேளைகளில் குளிர் கிடுகிடுக்கச் செய்யும் வகையிலும் இருந்தது.... ஒரு இரவு ஒரு பகல் மாற பூமியின் கணக்கில் 27 நாட்கள் ஆகிறது இங்கே...

ஓரிரு நாட்களில் ஆராய்ச்சிக்குத் தேவையானவற்றை இருவரும் சேகரித்தார்கள்.... சேகரித்தவரை திருப்தியடைந்த க்ரிஷ் துணைக்கலத்துக்கு கிளம்ப ஹனிக்கு ஆணையிட்டான்.... இருவரும் துணைக்கலம் மூலமாக தாய்க் கலத்துக்கு கிளம்பினார்கள்.... டிரான்ஸ்மீட்டர் மூலமாக காதரைத் தொடர்பு கொண்டார்கள்....

ராமர்-பாபர் கலத்துடன் வெற்றிகரமாக இணைந்துக் கொண்டது துணைக் கலம்.... வெற்றிகரமாக நிலவைத் தொட்ட இருவரையும் கைகுலுக்கு வரவேற்று தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டான் காதர்....

மெதுவாக அந்தக் கலம் நிலவை விட்டு சீரான வேகத்தில் விலகத் தொடங்கியது.... கண்ட்ரோல் கேபினில் திடீரென்று எச்சரிக்கை அபாயம்.... காதர் மானிட்டரைப் பார்த்தான்.... முகத்தில் லேசான கலவரம்....

"என்ன காதர்?"

"ஏதோ UFO (Undefined Flying Object) நம்மளை நோக்கி வர்றது மாதிரி தெரியுது கமாண்டர்"

கலத்தின் ரேடியோ டிரான்ஸ்மீட்டர்களை வேறு ஒன்றின் காந்த அலைகள் ஆக்கிரமிக்கத் தொடங்கியது போலத் தெரிந்தது... க்ர்ர்ர்ர்ர்......ரென இரைச்சல்.... ஹனி காதைப் பொத்திக் கொண்டாள்....

இரைச்சல் மெதுவாக குறைய தெளிவான ஆங்கிலத்தில் குரல் ஒலிக்கத் தொடங்கியது....

"பூமியிலிருந்து வருகிறீர்களா?"

ஆச்சரியமடைந்த க்ரிஷ் "ஆம். நாங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.... இது எங்கள் நாட்டின் முதல் நிலவுப் பயணம்"

"தயவுசெய்து பூமிவரை லிப்ட் தரமுடியுமா? :-) என் பெயர் ஜேம்ஸ் வில்லர்... 1969ல் அப்போலோ விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் தலைமையில் வந்த குழுவினரில் நானும் ஒருவன்... சந்திரனின் மறுப்பக்கத்தை ஆராய தனித் துணைக்கலத்தில் சென்றேன்... பாதை மாறிச் சென்றதால் தாய்க்கலத்தை அடைய முடியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.... அதுசரி இது என்ன வருடம்?"

க்ரிஷ் பதிலளித்தான் "2069"

Posted

ஆகா லக்கி இது என்ன தொடர் கதையா?? நீங்களா எழுதியது??

Posted

ஆகா லக்கி இது என்ன தொடர் கதையா?? நீங்களா எழுதியது??

தொடர்கதையா? அட ஆண்டவா... சிறுகதை... முடிஞ்சிடுச்சி.... :)

நான் தான் கிறுக்கினேன்...

Posted

அது சரி 100 வருசம் வானத்தில சுத்தின அமெரிக்கா காறனுகே லிப்ரா...! செத்த எலும்பு கூட்டுக்கு எண்டிருந்தால் நால்லா இருந்திருகும்...!

நல்லது உங்கள் எதிர்கால கனவு நிறைவேற வாழ்த்துக்கள்...! இன்னும் அறுபது வருடத்துக்கு முன்னரே இந்தியாவின் இந்தியர் சந்திரனுக்கு போகும் வல்லமை இருக்கிறது என நம்புகிறேன்...!

கதையாக பார்த்தால் சூப்பர் லக்கி...!

Posted

லிப்ட் கேட்டவர் எப்படிப்பா இவ்வளவு காலம் உயிர் வாழ்ந்தார்?

இரகசியமா ஆதிவாசிக்க மட்டும் சொல்லுங்க லக்கி!

Posted

லிப்ட் கேட்டவர் எப்படிப்பா இவ்வளவு காலம் உயிர் வாழ்ந்தார்?

இரகசியமா ஆதிவாசிக்க மட்டும் சொல்லுங்க லக்கி!

விண்வெளியில் காலமாறுபாடு இல்லை... எனவே வயது கூடுவதில்லை என்பதாக ஒரு கூற்று உண்டு.....

Posted

. பாவம் அந்த மனிதர் சாப்பாடு இல்லமால் எப்படி இவ்வளவு காலமும் உயிர் வாழ்ந்தார்?

உங்களின் கற்பனைக் கதை அருமை. பாராட்டுக்கள்.

Posted

. பாவம் அந்த மனிதர் சாப்பாடு இல்லமால் எப்படி இவ்வளவு காலமும் உயிர் வாழ்ந்தார்?

விண்வெளிக்குச் செல்வோருக்கு உணவு காப்ஸ்யூல் வடிவில் இருக்கும்.... அவர் நிறைய காப்ஸ்யூல்களை கைவசம் வைத்திருந்திருக்கலாம்.... :lol::lol:

Posted

தொடர்கதையா? அட ஆண்டவா... சிறுகதை... முடிஞ்சிடுச்சி.... :lol:

நான் தான் கிறுக்கினேன்...

ஓ நான் தொடர் கதையா எழுதப் போறியள் என்று நினைத்துவிட்டேன். கதை நன்று.

Posted

விண்வெளியில் காலமாறுபாடு இல்லை... எனவே வயது கூடுவதில்லை என்பதாக ஒரு கூற்று உண்டு.....

சூரிய ஒளியின் வேகத்தில் சென்றால் மட்டுமே எமது வயது கூடாது. மற்றும்படி வயதுகூடும்.

  • 4 months later...
Posted

லக்கி உங்கள் கற்பனை நல்லாய்த்தான் இருக்குது

என்னனையப்பு பழசையெல்லாம் கிண்டிக்கொண்டு இருக்கிறீங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னனையப்பு பழசையெல்லாம் கிண்டிக்கொண்டு இருக்கிறீங்கள்

யாழில் நல்ல படைப்பாளிகள் இருக்கிறார்கள். சாத்திரி, கானா பிரபா, லக்கிலுக்கு, சின்னக்குடி, தூயா, ரமா, சினேகிதி, மனிவாசகன், ரசிகை, புத்தன் எனப் பலர் இருக்கிறார்கள். எல்லாருடைய படைப்புகளையும் உடனே வாசிக்க நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கும் போது வாசிக்காத பழைய பதிவுகளை வாசிக்கிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.