Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வது பிராந்திய வலயத்தின் நலனை பாதிக்கும் - ஐ.தே.க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வது பிராந்திய வலயத்தின் நலனை பாதிக்கும் - ஐ.தே.க

 

 

thalatha%20athukorala_CI.jpg

இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையானது பிராந்திய வலயத்தின் நலனை பாதிக்கக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் நாட்டின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

2013ம் ஆண்டு லோக் சபா அமர்வுகளின் போது இலங்கையிடமிருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்டனி ஒப்புக்கொண்டிருந்தார். இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வது பல்வேறு காரணிகளினால் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தானிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்து அதனை இந்தியாவிற்கு விற்பனை செய்கின்றோம் என அவா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் உசிதமானதாக அமையாது என அவர் தெரிவித்துள்ளார். வெளியுறவுக் கொள்கை தொடர்பில் தெளிவான நிலைப்பாடு ஒன்றை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயுதங்கள் எவ்வாறு விற்பனை செய்யப்பட்டன? யார் அந்தப் பணத்தை எடுத்தது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு உரிய பதிலளிக்கப்பட வேண்டியது அவசியமானது என தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106770/language/ta-IN/-----.aspx#.U3BDFlxn4lo.facebook

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன கோதாரியாக கிடக்குது...வல்லரசுக்கே வாய்ப்பானா ?

இப்படி இன்னுமொரு திரியும் இருக்குது...எல்லாத்தையும் ஒன்றாக "சிரிப்போம் சிறப்போம்" இல் சேர்க்க தோதானது...........

 

இதென்ன கோதாரியாக கிடக்குது...வல்லரசுக்கே வாய்ப்பானா ?

மிதக்கும் ஆயுத பசார் கொத்தி வைத்திருக்கிறார்.

எந்த பொருளும் வாங்கலாம்.

சோமாலிய கடல் கொள்ளையர் வாடிக்கையாளர்கள்.

இதை எழுத போன லசந்தாவை சுட்டு, பின் கோடாலியால் கொத்தி கொன்றார் கொத்தி.

  • கருத்துக்கள உறவுகள்

வில்லங்கமான ஆயுதங்களை போருக்கு உதவியாக கொடுத்திருப்பார்கள். இப்போது அதை நைசாக வாங்கிக் கொள்கிறார்கள்.

 

போர் முடிந்த கையோடு வவுனியா மற்றும் வேறு ஒரு இடத்தில் சிங்களப் படையின் ஆயுதக் கிடங்கு தீப்பற்றி வெடித்து எரிந்த செய்தி நினைவில் இருக்கலாம். அப்போதும் வில்லங்கமான ஆயுதங்களை அழித்தார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியின் நம்பகத்தன்மை ஒருபுறமிருக்க, சராசரியாக இந்தியர்களைவிட இலங்கையர்கள் சிறந்த வாழ்க்கைத் தரமுடையவர்கள். இந்தப் பின்னணியில் இலங்கை நிச்சயம் வெகுவிரைவில் தனது சொந்தத் தயாரிப்புக்களை இந்தியாவுக்கும் பிறநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யுமென நம்பலாம். முன்னைய சேவியத் யூனியனிடமிருந்து பெற்றுக்கொண்ட தொழிநுட்பத்தின் அடிப்படையிலேயெ இந்தியாவின் ஆயுதத் தயாரிப்புக்கள் இருந்தன. சோவியத் உடைவுக்குப் பின்னர் இந்தியா புஸ்வாணம் ஆகிவிட்டது! :D :D

இந்தச் செய்தியின் நம்பகத்தன்மை ஒருபுறமிருக்க, சராசரியாக இந்தியர்களைவிட இலங்கையர்கள் சிறந்த வாழ்க்கைத் தரமுடையவர்கள். இந்தப் பின்னணியில் இலங்கை நிச்சயம் வெகுவிரைவில் தனது சொந்தத் தயாரிப்புக்களை இந்தியாவுக்கும் பிறநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யுமென நம்பலாம். முன்னைய சேவியத் யூனியனிடமிருந்து பெற்றுக்கொண்ட தொழிநுட்பத்தின் அடிப்படையிலேயெ இந்தியாவின் ஆயுதத் தயாரிப்புக்கள் இருந்தன. சோவியத் உடைவுக்குப் பின்னர் இந்தியா புஸ்வாணம் ஆகிவிட்டது! :D :D

 

வாலி நீங்கள் விளங்கி தான் சொல்லுகிறீர்களா? சோவியத் உடைப்புக்கு பின் தான் இந்தியா தனது ஆயுதங்களையே வடிவமைக்க தொடங்கியுள்ளது....அவைகள் அமெரிக்க/இஸ்ரேலிய/ஐரோப்பிய அளவுக்கு இல்லை... ஆனால் அவர்கள் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறுகிறார்கள்...

 

சீனா தான் ரஷ்யாவிடம் இருந்து தொழிழ்னுட்பத்தை வாங்கி, திருடி (அவர்களது போர் விமான வடிவமைப்பு முழுக்க ரஷ்யாவிடம் திருடியது..) தனது போல் காட்டுகிறது..... சீன விண்வெளி ஆராய்ச்சி கூட எல்லாம் ரஷ்ய தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டதே (நிறைய ரஷ்ய விஞ்ஞானிகளை சோவியத் உடைந்த பொழுது சீனா உள்வாங்கியது)....

 

bharat-rakshak என்று ஒரு தளம் உள்ளது..அதில் தங்களது ஆயுத/பாதுகாப்பு விடயங்களை பகிர்கிறார்கள் (தங்களது வெற்றி தோல்விகளை அதில் ஆராய்ந்து கொண்டு...) அதில் நிறைய விடயங்களை அறியலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

சேவியத் உடைவுக்குப் பின்னர் இந்தியா தான் உற்பத்தி செய்யத் தொடங்கியது உண்மை. ஆனால் அவை தரமானவையாக இருக்கின்றனவா??

 

மிகமிகக் குறுகிய வளங்களுடன் புலிகள் குறிப்பிடத் தக்க தரமான ஆயுதங்களை வடிவமைத்தார்கள். அவை பன்னாட்டு ஆயுதக் கொள்வனவில் இருந்த இலங்கை அரசுக்கு சவாலாக இருந்தன. புலிகளின் இருப்பு தொடர்ந்திருக்குமாயின் உலகிற்கு பல புதிய தொழிநுட்பங்களை எதிர்காலத்தில் வழங்கி இருப்பார்கள்.

 

இங்கு வல்லரசுக் கனவுடன் இயங்கும் இந்தியா அய்ரோப்பாவின் சிறிய நாடுகளிடமிருந்தும் சிம்பாப்வே போன்ற நாடுகளிடமிருந்தும் வாங்குவது கேலிக்குரியது!


புலிகளின் திறமைக்குமுன் சுய தம்பட்டம் அடிக்கும் இந்தியா வெறும் புஸ்வாணம்தான்!! :D :D

என்னவோ விற்று காசாக்கினால் சரிதான். செய்த ஆயுதங்கள் எல்லாம் நாறிப் போகாமல் இருந்தால் சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.