Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் may 18 தினத்தன்று மக்களின் ஒற்றுமையை குலைக்க வந்த சிலர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

BTF ஆட்கள் இதனை உன்னிப்பாக கேட்க வேண்டும். இது களத்தில் இருந்து வரும் குரல்...

Gajendrakumar calls for foolproof position, closer ties with Tamil Nadu.
  • Replies 56
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியத் தமிழர் பேரவை அரசியல் வேலைத் திட்டங்களைச் செய்வதற்காக 2006 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. அப்பகூட தலைவர் தமது கட்டுப்பாட்டின் கீழ் அதை வைத்திருக்கவில்லை. இப்போதிருக்கும் அதன் வளர்ச்சியும் மற்றைய நாட்டுகளுடனான உறவும் ஒரு நாளில் வந்துவிடவுமில்லை. முதலில் ஒவ்வொரு MP மாருக்கு அவர்களின் கடிதங்கள்,துண்டுப் பிரசுரங்கள் என  வீடுவீடாக வினயோகித்து, அவர்கள் கூப்பிடும் இடங்களுக்குச் சென்று, நிதி திரட்டுவதற்கான இரவு விருந்துகளுக்கு நாமே பணம் செலுத்தி எண்ணிக்கைக்காக மற்றவர்களைக் கூட்டிக் கொண்டு சென்று அதன் பின்தான் அவர்கள் நாம் கூறுவதை செவிமடுக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் தான் சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டு பாராளுமன்றம் தொடங்கி ஐநா வரை எமது பிரச்சனையைக் கொண்டு செல்ல முடிந்தது. ஐநாவுக்கு முன்னாள் நின்று ஆர்பாட்டம் செய்ததால் அவர்கள் பயந்து போய் எமது பிரச்னையை ஐநாவில் கதைக்கின்றனர் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு.

அதுவும் அமேரிக்கா ஒரு தீர்மானம் கொண்டுவரப் போகிறதெனில் மற்றைய நாடுகளுக்கு ஓடி அதரவு கேட்டு எம்பக்க நியாயத்தைக் கூறி மாதக்கணக்காக பல நாடுகளில் நின்று செய்கிற வேலைத்திட்டம். இதை உண்மையில் எழுதுவது கூடத் தவறுதான். ஏனெனில் இலங்கை அரசாங்கம் பிரித்தானியத் தன்மிழர் பேரவை செய்யும் வேலைத்திட்டங்களுக்கு எத்தனையோ இடஞ்சல்களைக் கொடுத்தபடிதான் இப்போதும் இருக்கிறது. இந்த வேலைத் த்ட்டங்களுக்கு எப்போதும் TCC எந்த உதவியும் செய்ததுமில்லை.

புலிக்கொடியை வைத்துக்கொண்டுதானே எல்லா நாடுகளும் ஈழத்தில் பேசின என்று கூறினீர்கள். அங்கே எண்பது வீதமான நிலத்தை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். தனி ஆட்சியையும் வைத்திருந்தனர். தமது நலன் சார்ந்து புலிகளுடன் பேசவேண்டிய தேவையும் புலிகளை அடக்க வேண்டிய தேவையும் உலக நாடுகளுக்கு இருந்தன. அதனால் அவர்கள் புலிக்கொடி பற்றி அக்கறை கொள்ளவில்லை அந்தத் தேவை அவர்களுக்கு இருக்கவும் இல்லை. ஆனால் இன்று எமது நிலை அப்படி அல்ல எல்லா வழிகளிலும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு எதுமர்ரவர்களாக நாம் நிற்கிறோம். எமக்காக இறங்கி வரவேண்டிய தேவையோ எமது பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டிய தேவையோ ஒருவருக்குமே இல்லை.

எமது தற்போதைய தேவை அங்கு தொடந்து துன்பப்படும் மக்களின் துன்பத்தை நிறுத்துவதுதான். புலிக்கொடி இன்றி நாம் இல்லை என்று நாம் கூறினால் அவன் எதுவும் பேசாது தன வேலை பார்ப்பான். அவனுக்கு எந்த நட்டமும் இல்லை. நாம் கொடிகளுடன் போனால் எம்மைத் தட்டிக்கழிக்க அவர்கள் கூறும் குற்றச்சாட்டு நீ  புலிக் கொடிடி வைத்திருக்கிறாய். புலிகளுடன் கதைக்க ஒன்றும் இல்லை என்பதே.

நாம் புலிக்கொடியை நாட்டில் ஏற்ற தூர நோக்கில் யோசிக்க வேண்டுமே தவிர யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளாது விதண்டாவாதம் கதைத்து எந்தப் பயனும் இல்லை.

சரி புலிக்கொடியை வைத்துக்கொண்டு TCC கடந்த ஐந்து வருடங்களாக என்ன வேலையை அந்த மக்களுக்காக முன்நெடுத்தனர் என்று யாராவது கூற முடியுமா ?????

எந்தவிதமான அரசியல் முன்னகர்வு ஏற்பட்டிருக்கிறது என்று கூற முடியுமா ????? எதுவுமே இல்லை என்பது தான் உண்மை. தேசியம் தேசியம் என்று கதைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதற்காக எம்மாலான எதையாவது செய்யாது இதில் வந்து கருத்துக்களை மட்டும் எழுதிப் பயனில்லை.

மே 18 அன்று வந்து நிகழ்வில் குழப்பம் விளைவித்தவர்கள் அதன் பின் என்ன செய்கின்றனர் ????அவர்களில் முக்கால்வாசிப் பேரை எனக்குத் தெரியும். எந்தவித தேசியம் சார்ந்த வேலையும் அவர்கள் செய்வதில்லை. இனியும் செய்யப்போவதில்லை என்பதும் தான் உண்மை.

கொடியின்றி விடுதலை இல்லை என்று கூறுவோர் நீங்களாவது ஏதாவது செய்கிறீர்களா ??????

உங்களது கருத்து

மற்றும் நிலையுடன் ஒத்துப்போகின்றேன் சுமே

இதை  ஒரு அறிக்கையாக நீங்களோ

நீங்கள் குறிப்பிடும் அமைப்போ  விடமுடியுமா?

விட்டுவிட்டு  தங்கள் பணிகளைத்தொடரலாமே.....

ஆனால் இந்த மாறி  மாறி  வாலையும் முகத்தையும் காட்டுவதால்

ஒன்றில் தமிழரை ஏமாற்றுவதாக  

அல்லது

வெள்ளைகளை  ஏமாற்றுவதாக  

நீங்களும் உங்களைச்சார்ந்த அமைப்பினரும்  நினைத்துக்கொள்வது மட்டுமே நடக்கும்

மற்றும்படி உண்மை

எல்லோருக்கும் தெரியும்....

மற்றும்படி  உங்கள் அமைப்பு செய்வதாக நீங்கள் சொல்பவை  அனைத்தையும்விட

ஆயிரம் மடங்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செய்யுது. அது எனக்குத்தெரியும்.

நான் எல்லோரையும் ஆதரிக்கும்  ஒருவன்

யார் குற்றியும் அரிசியானால் சரி  என்பதே எனது நிலை

அவர்களது பெயரை இழுத்து நீங்கள் எழுதியதற்காக மட்டுமே இதை  இங்கு குறிப்பிடுகின்றேன்

இது போன்று அமைப்புக்களை பெயர் குறிப்பிட்டு 

நான் பெரிது

நீ  சிறிது என தரம் தாழ்த்துவதை  நாம் முதலில் நிறுத்தணும்

நன்றி.

பிரித்தானியர் தமிழர் பேரவை
 
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனாலும் அன்று அங்கு அல்லல்பட்ட மக்கள் இன்னமும் தாயகத்தில் சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களது குரலாக புலம்பெயர் மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த மே 18 இல் லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
 
பிரித்தானிய தமிழர் பேரவையை தாம் தடைசெய்வதன் மூலம் பேரவை ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் தமிழ் மக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்ற இலங்கை அரசின் எண்ணத்தை லண்டன் வாழ் தமிழர்கள் புறந்தள்ளி பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டார்கள்.
 
இதன் மூலம், பிரித்தானிய தமிழர்கள் தாயக மக்களின் விடுதலைக்காக போராட அன்று போல இன்றும் முன்னிற்பார்கள் என்ற தெளிவான செய்தியை ராஜபக்ச அரசுக்கும் உலகிற்கும் விடுத்திருகின்றார்கள்.
 
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரான புலம்பெயர் போராட்டம் என்னும் அத்தியாயத்தை ஆரம்பித்ததில் பிரித்தானிய தமிழர் பேரவை முக்கிய பங்கினை வகித்திருந்தது.
 
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு அமைச்சுஇ பல்வேறு கட்சிகள், ஐ.நா மனித உரிமைகள் கழகம் போன்றவையுள்ளிட்ட பல்வேறு தளங்களைப் பாவித்து புதுப் பரிமாணத்தில் போராட்டத்தினை வேகமெடுக்க வைத்தோம்.
 
வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் என்ற விழுமியங்களுடன் மக்கள் பங்குபற்றும் சனநாயக அடிப்படையில் தன்னைப் புதுப்பித்தது. ஆயினும், பேரவை ஆரம்பித்த காலம் முதல் அது தாங்கிவரும் வலிகள் ஏராளமானது.
 
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வில் பல அசம்பாவிதங்கள் நடந்ததாகவும் இன்னும் ஓரிரு வருடங்களில் பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்படும் எனவும் தனி நபர்களும் ஒரு சில தமிழ் ஊடகங்களும் விஷமப் பிரச்சாரம் செய்கின்றன.
 
பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வில் நடந்த சில சம்பவங்களைப் பதிவு செய்வது பேரவையின் கடமை.
 
நிகழ்வின் ஆரம்பத்தில் பிரித்தானியாவிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒரு சில பொறுப்பாளர்களின் வழிநடாத்தலில் ஒருசில இளைஞர்கள் நிகழ்வில் அத்து மீறி நுழைந்தனர்.
 
தாம் தேசியக் கொடியினை ஏற்றப்போவதாக கூறி கோஷமிட்டதுடன் பிரித்தானிய தமிழர் பேரவையினர் தேசியத்துக்கு எதிரானவர்கள் என குற்றம் சாட்டினர்.
 
 தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பிளவுகளையும் ஏற்படுத்திய இச் சம்பவம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கீகாரமின்றி செய்யப்பட்டதாகவே நாம் கருதுகின்றோம். அவ்வாறாயின் இதனைத் தூண்டிய பொறுப்பாளர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
 
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும், குறிப்பாக ஒடுக்குமுறைக்கெதிராக போராடும் இனங்களுக்கு தமது தேசியக் கொடி உன்னதமானது. நாமும் அதற்கு மாறானவர்கள் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே.
 
வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் விழுந்து விடாமலும் அவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துவிடாமலும் எமது பக்க நியாயத்தையும் உண்மையினையும் எடுத்துக்கூறி அவர்களின் ஆதரவினையும் அனுதாபத்தினையும் பெற்றுக்கொள்வதற்கு, நாம் வாழும் நாடுகளின் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களையும் மதித்து அவற்றுக்கு அமைவாக செயற்படுவது மிகவும் அவசியமானது.
 
கடந்த ஐந்து ஆண்டுகளில் அவ்வாறு செயற்பட்டதன் விளைவாக, பிரித்தானிய தமிழர் பேரவை போருக்குப் பின்னரான தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் காத்திரமான பங்களிப்பினை செய்ய முடிந்திருக்கிறது.
 
தேசியக் கொடி தொடர்பில் காவல் துறை நிலமைகளுகேட்ப வெவ்வேறு விதமாகக் கையாள்கின்றது. நாம் எதிர்காலத்தில் ஆட்சிப்பீடங்கள் மீது அழுத்தங்களை அதிகரிக்கும்போது சட்டத்தினை எம் மீது ஏவி விடவும் தமிழர் பேரவையை தடை செய்யவும் இன்றைய சூழ்நிலையில் இடமுண்டு.
 
தமிழ்மக்களின் தேசிய கொடியினை ஏற்றக் கூடாது என்ற பிரித்தானிய பொலிசாரின் அறிவுறுத்தல்கள் எமக்குத் தரப்பட்டுள்ளதால் பிரித்தானியாவின் சட்டங்களுக்கு அமைவாகவே முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றது.
 
இதனை, தமிழ் மக்களின் தேசிய கொடிக்கு எதிரானது என்றும் தமிழ் மக்களின் அடையாளத்தினை இதன் மூலம் பிரித்தானிய தமிழர் பேரவை அழிக்க முற்படுகிறது என்றும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் தெரிந்து நின்று செற்படும் சிலரும் தெரியாமல் நின்று செயற்படும் சிலரும் விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
 
உண்மையில், எந்த ஒரு அமைப்பினை விடவும் பிரித்தானிய தமிழர் பேரவையே தமிழ் மக்களின் தேசிய கொடிக்கு ஒரு அங்கீகாரத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு உண்மையான கரிசனையுடனும் பற்றுறுதியுடனும் செயற்பட்டிருக்கிறது.
 
எமது தேசிய கொடிக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கும் பல வேலைகளை அரசியல் ரீதியாகவும் வெகுஜன செயற்பாடுகள் மூலமாகவும் நாம் மேற் கொண்டிருக்கிறோம்.
 
உதாரணமாக, பிரித்தானிய பொலிசாருக்கு இது விடயத்தில் கடந்த பல மாதங்களாக பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களின் தேசிய கொடியினை அங்கீகரிக்குமாறு கோரி அழுத்தங்களை கொடுத்து வருகிறது.
 
இந்தக் கொடியினை ஏன் பிரித்தானிய பொலிசார் அங்கீகரிக்க வேண்டும் என்று வரலாற்று ரீதியான பல உண்மைகளை கோடிட்டு ஆய்வுக் குறிப்புக்களை பிரித்தானிய தமிழர் பேரவை பொலிஸாருக்கு அனுப்பியிருக்கிறது.
 
இது தொடர்பில் பிரித்தானியாவில் ஒரு சுயாதீனமான சர்வஜன வாக்கெடுப்பை தமிழ் மக்கள் மத்தியில் நடாத்தி தேசியகொடி மீதான ஒட்டு மொத்த தமிழ் மக்களின் விருப்பத்தினை வெளிப்படுத்துவதற்கும் தயாராக இருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை பொலிஸாருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருக்கிறது.
 
தேசிய கொடி விடயத்தில் பிரித்தானிய பொலிசாருடன் நடைபெற்ற மின்னஞ்சல், கடித பரிமாற்றங்கள் மற்றும் தயாரித்து வழங்கப்பட்ட ஆவணங்களையும் மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை தயாராக இருக்கிறது.
 
இந்த பரிமாற்றங்களை ஊடகங்களில் வெளியிடுவற்கான அனுமதியினை பிரித்தானிய தமிழர் பேரவை பொலிஸாரிடம் கோரி இருக்கிறது. பொலிஸாரிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் அவை பொது மக்களுடன் பகிரப்படும்.
 
பிரித்தானிய தமிழர் பேரவை ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை அதனை புலிகளின் முன்னரங்க அமைப்பு என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக பரப்புரை செய்து வருகின்றது.
 
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை பயங்கரவாதப் போராட்டமாக ஏனைய நாடுகளை நம்ப வைப்பதில் வெற்றி கொண்ட ஸ்ரீலங்கா அரசின் பரப்புரை இன்றுவரை பல நாடுகளின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதன் மூலம் தமிழ் மக்களை தொடர்ச்சியாக இன அழிப்புக்கு உட்படுத்துவதனை நியாயப்படுத்தி வருகின்றது. ஆனால் நாங்கள் பொது மக்கள் கொல்லப்பட்டதை பொது மக்களாக நியாயம் கேட்கும் போது சர்வதேச சமூகம் தட்டிக் கழிக்க முடியாத நிலையில் உள்ளது என்பது எமது அனுபவபூர்வமான உண்மை.
 
2009க்கு முன்னர் நிலப்பரப்பை தமது பூரண கட்டுப்பாட்டில் தக்க வைக்கக் கூடிய பலத்துடன் விடுதலைப் புலிகள் ஒரு நடைமுறை அரசாக செயல்பட்ட போது அப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்காகவும் தம் பூகோள நலன் கருதியும் சர்வதேச சக்திகள் தலையிட்டு இரு தரப்பினரோடும் பேச வேண்டிய தேவை இருந்தது.
 
மே 2009க்குப் பின்னர் வலுச் சமநிலை எமக்குப் பாதகமாக மாறியது. அதன் பின் சிங்கள தேசத்திற்கோ சர்வதேசத்திற்கோ தமிழர் தரப்புடன் பேசியே ஆக வேண்டும் என்பது அவசியமாகப்படவில்லை.
 
எம் மக்கள், யாராலும் பாதுகாக்கப்படாத நிலையில் எம் மக்களுக்கு நடந்தஇநடக்கின்ற கொடுமைகளை எடுத்துச் சொல்லி உலக நாடுகளின் கவனத்தினை ஈர்த்து அவர்களைப் பாதுகாக்கக் கூடிய தற்காலிக மற்றும் நிரந்தர நடைமுறைகளை செயல்படுத்த வைக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.
 
படிப்படியாக உலகின் பார்வையில் மாற்றமும் வருகின்றது. இன்றைய நிலையில் எமது உறவுகளை காக்கவேண்டுமாயின் எமக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு அவசியமாகின்றது. 
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே நாம் மிகவும் கவனமாக எமது செயல்பாடுகளை அமைத்து வருகின்றோம்.
 
சர்வதேசத்தோடு நாம் அந்நியப்பட்டு நிற்பதா அல்லது சர்வதேசத்திற்கு தமிழின அழிப்பினைச் செய்யும் சிறிலங்காவினை தோலுரித்துக் காட்டி அதனை அன்னியப்படுத்துவதா என்ற தெரிவினை நாம் தீர்மானகரமாக மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்ற விதத்தில் எம் மூலோபாயங்களையும் செயல்பாடுகளையும் நெறிப்படுத்த வேண்டும்.
 
இன அழிப்புக்குள்ளான தேசம் என்று பல நாடுகளையும் ஏற்றுக் கொள்ள வைப்போமாயின் ஒரு நாட்டிற்குள்ளேயே சேர்ந்து வாழுங்கள் என்ற அணுகுமுறை மாற்றப்பட்டு எமது அபிலாசைகள் என்ன என்பதனை கருத்தில் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
 
எமது போராட்டத்துக்கான அங்கீகாரமே இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு முக்கியமானது. பிரித்தானிய தமிழர் பேரவையின் மேடையில் பிரித்தானிய பிரதமர் ஏறி எமது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும். அத்தோடு ஐக்கிய நாடுகள் சபை எமது சுயநிர்ணய உரிமையை ஏற்க வைக்க வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம். அதற்காக நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.
 
பிரித்தானிய மக்களின் மனத்தினை வெல்வது மிக முக்கியமானது. அதற்கான தளத்தினை உருவாக்குவது தமிழர் பேரவையின் முக்கிய வேலைத்திட்டமாக இருக்கின்றது.
 
கோஷங்களுக்குள் மட்டும் எமது போராட்டம் நின்று விடுதல் ஆகாது. தமிழர்களின் அழியாச் சொத்தான அறிவை ஆயுதமாக பயன்படுத்தி எதிரியை நாம் புறமுதுகிட செய்ய வேண்டும். தமிழ் மக்களுக்குள் மட்டும் இப்போராட்டத்தின் நியாயப்பாடு முடங்கி நிற்கக் கூடாது. நடைமுறையில் செய்து காட்டி முன்னேற வேண்டும் என்பதே எம் அணுகுமுறை.
 
இந்தப் பாதை தவறென்று யாராவது கருதுவீர்களாயின் விடுதலைக்காக இதனை விட மேலான மூலோபாயத்துடன் வேறொரு வடிவத்தில் செயல்பட்டு விரைவில் உலக அங்கீகாரத்தை எடுத்துத் தருவோம் என்று எமக்கு புதியதோர் பாதையினைக் காட்டுவீர்களானால் அதனை ஆராய்ந்து ஏற்றுக் கொண்டு உங்கள் பாதையில் இணையவும் நாம் தயாராகவுள்ளோம். விடுதலைக்கான உங்கள் பாதையினை மக்களுக்கும் எமக்கும் அறியத் தாருங்கள்.
 
தமிழீழத்தில் நடைபெற்ற அநீதிகளுக்கு ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை மூலம் நீதி வழங்க வேண்டும். அதற்காக சர்வதேச அரங்கில் பிரித்தானியா எமக்காக குரல் கொடுக்க வேண்டுமென பேரவை கடந்த ஐந்து வருடங்களாக பாடுபட்டு வருகின்றது. அதன் பலனாக இன்று பிரித்தானியா சர்வதேச சுயாதீன விசாரணைக்கு சாதகமாக வெளிப்படையாக குரல் கொடுக்கின்றது.
 
பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்பு போற்றுதற்குரியது. சர்வதேச அரசியல் நுணுக்கங்களை கற்றறிந்து, அதன் போக்கினை அறிந்து எமது போராட்டத்தின் நியாயங்களை சர்வதேச அரங்குகளுக்கு கொண்டு செல்வதில் பிரித்தானிய தமிழர் பேரவையின் இளையோர் ஆற்றும் பணி நம்பிக்கை ஒளியைத் தருகின்றது.
 
இவ்வாறு மேன்மேலும் இளைஞர்களை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை வென்றெடுப்பதற்காக அரசியல் இராஜதந்திர பணிகளை முன்னெடுப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்.
 
மாறாக போற்றுதற்குரிய பணிகளை ஆற்றக்கூடிய இளையோரில் ஒரு சிலரை தவறாக வழிநடாத்தி அமைப்புக்கள் மீதான போட்டி மனப்பான்மையினயும் காழ்ப்புணர்வுகளையும் தூண்டி அவர்களின் ஆற்றலையும் திறமைகளையும் தவறாக பயன்படுத்த வேண்டாம் எனவும் எமது இனத்துக்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டாமெனவும் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டோர்களுக்கு தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.
 
அதேவேளை தமிழர் பேரவையை இன்னும் சிலகாலத்துக்குள் நிர்மூலமாக்கிவிடுவோம் எனவும் எமக்கு அச்சுறுத்தப்பட்டுள்ளது.
 
பிரித்தானிய தமிழர் பேரவையை எவ்வாறாயினும் ஒழித்துக்கட்டி விடவேண்டுமென அது தொடங்கிய காலம் தொடக்கம் இலங்கை அரசு பகீரதப்பிரயத்தனம் செய்து வருகின்றது.
 
இலங்கை அரசினதும் மற்றும் பலரினதும் தொடர்ச்சியான கபட நாடகங்களுக்கு மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து வருகின்றது. வளர்ந்து வருகின்றது.
 
நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி பதிவு செய்துவிட்டோம். நாம் இழந்த சுதந்திரத்தை மீட்கும் பணிகள் ஆயிரமாயிரமாகக் கிடக்கின்றன. அன்றாடம் எமது உறவுகள் கொல்லப்பட்ட வண்ணம் உள்ளனர்.
 
இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமக்குள் குரோதத்தை வளர்ப்பதும் இளைய சமூகத்தை கூறுபடுத்தி தவறாக வழிநடாத்துவதும் ஒற்றுமையைத் தகர்ப்பதுவும் விடுதலை வேண்டி நிற்பவர்கள் செய்யும் பணியல்ல.
 
தமிழர் பேரவை தேசியத்தின் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் எந்த இடர்வரினும் அதனை எதிர் கொள்ளும் பக்குவமும் மனோதிடமும் பிரித்தானிய தமிழர் பேரவைக்கும் எம் மக்களுக்கும் உண்டு.
 
முள்ளிவாய்க்கால் நினைவென்பது மனித இனத்துக்கு எதிரான ஓர் மாபெரும் அவலத்துக்கான நீதி கேட்கும் நாள். இதற்கு வேறு விதமாக அர்த்தம் ஏதும் கற்பிக்க முடியாது.
 
இந்நிகழ்வை தமிழினம் மட்டும் தனித்து நின்று முன்னெடுக்காமல் எமக்காக குரல் கொடுப்போர் மற்றும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் எனப் பலரும் சேர்ந்து ஒன்றாக அணி திரள்வதே இன்றைய காலத்தின் தேவையாகும்.
 
பிரித்தானியர் தமிழர் பேரவை
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் கொடி பிடிக்கிறத்திற்கு சண்டை.இன்னொரு திரியில் ஒரு உறவு தலைவரைக் காப்பாற்ற மு.வாய்க்காலில் ஆக்கிரோசமாய் புலிகள் சண்டை போட்டதாக எழுதியிருந்தார்.கடைசியில் என்னடா என்டால் புலிகளே[ஆதரவாளர்களே] தலைவரை காப்பாற்றவும்,கொடி பிடிக்கிறத்திற்கும் தான் இந்தப் போராட்டத்தை தொடங்கின மாதிரி இவ்வளவு வருட போராட்டத்தை கேவலப்படுத்தி விட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

முடிஞ்சா யாராவது பதில் சொல்லிப்பாருங்க

முடிஞ்சா யாராவது பதில் சொல்லிப்பாருங்க

முடியல பாஸ்  :D

தேசிய கோடி என்ன கோவணமா அடிக்கட்டி கழட்டி வைக்க? Btf கொடிக்காக எம்முடன் சண்டை போடுவதை விட்டு கவுன்சிலுடன் சண்டை போடட்டும் தமிழரின் கொடியை ஏற்றி வைக்க எமக்கு உரிமை இல்லையா எண்டு

  • கருத்துக்கள உறவுகள்

BTF அறிக்கை ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்கிறது.

சர்வதேச ஆதரவு.

சர்வதேச ஆதரவை.. புலிக்கொடி ஏந்தி செத்த மக்களின் பெயரால் கோராமல்.. தான் எடுத்து வைக்கும் நியாயத்தின் மூலம்.. ஏன் BTF இவ்வளவு காலமும் கோராமல் இருந்தது. முள்ளிவாய்க்காலில் மக்களும் போராளிகளும் அழியும் வரை காத்திருந்தார்களா..?! சர்வதேச ஆதரவு வரும் என்று.

சர்வதேசம்.. முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு  முன்னர் வழங்கிய.. உறுதி மொழிக்கு என்னானது. புலிக்கொடியோடு உண்ணாவிரதம் இருந்த போது.. அவரை கூப்பிட்டு பேசியவர்கள்.. அளித்த உறுதி மொழிக்கு என்னானது..????!

இப்ப மட்டும்... புலிக் கொடி இல்லாமல்.. சர்வதேசம்.. எதை செய்யப் போகுது..??!

அமெரிக்க ஐநா வரைபில்.. தமிழர்கள் என்ற பதமே பாவிக்கப்படவில்லை. மனித உரிமை மீறல்கள்.. குறித்துத்தான் பேசப்பட்டுள்ளது. இந்த நிலையில்.. BTF தமிழர்களுக்கு கொடியையும் தாரை வார்த்திட்டு என்னத்தப் புடுங்கப் போகுது..???!

சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்க நிற்கமாட்டம் என்று சொல்லிக் கொண்டு சர்வதேச ஆதரவை தேடிறம் என்ற போர்வையில் அதன் நிகழ்ச்சி நிரலுக்குள் தானே நுழைய முற்படுகிறீர்கள்.

இதே சர்வதேசம்.. இயற்றிய.. இணைத்தலைமை நாடுகள் என்ற அமைப்புக்கு என்னானது..??!

அதற்கான விளக்கங்களை BTF இதுவரை கோரி இருக்கிறதா..??! இணைத்தலைமை நாடுகள் என்ற அமைப்பு விடுதலைப்புலிகளை அழிக்க உருவாக்கப்பட்ட அமைப்பா.. அல்லது இலங்கையில்  இனங்களுக்கிடையே உள்ள பிரச்சனையை தீர்க்க உருவாக்கப்பட்ட அமைப்பா..???!

அந்த அமைப்பை உருவாக்கியவர்கள்.. அதனை 2009 மே க்குப் பின் கலைத்தார்களா.. இல்ல கைவிட்டார்களா..??! ஏதாவது ஒரு அறிவைப்பை செய்திருக்கிறார்களா..??!

இப்படியாப்பட்ட சர்வதேசத்தை BTF என்ன அடிப்படையில் நம்புகிறது..????????????????????????????????! புலிக் கொடியை கைவிடுகிறது...??!

மகேஸ்வரன் புலிக்கொடியோடு போராடித்தானே சர்வதேச கவனத்தை ஈட்டினார்..????! சர்வதேசம் உறுதி மொழிகளை அளித்து.. பின் எல்லோரையும் ஏமாற்றியது..???!

மீண்டும் அப்படி ஒரு அனுபவத்தை.. BTF ம் பெற்ற பின் தான்... சர்வதேசத்தின் நயவஞ்சகத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டுமா..??!

தமிழர்களின் பலம்.. பிரிட்டனிலோ.. கனடாவிலோ மட்டும் இல்லை. அது இந்துமா சமுத்திரத்தில்.. தமிழ்நாடு உள்ளிட்ட தமிழர் தாயக நிலம் கடல் ஆட்சி உரிமை சார்ந்தே உள்ளது. அதனை பலப்படுத்தாமல்.. சர்வதேசத்திடம் தமிழர்கள் பிச்சை கூட எடுக்க முடியாது. இதுதான் இன்றைய யதார்த்தம். கொடியை கைவிடுவதாலோ.. பிரபாகரனை தூற்றுவதாலோ.. சர்வதேசத்தின் கருசணையை பெற்றுவிடலாம் என்பது வெறும் பித்தலாட்டம். சுயலாப நோக்கக் கருத்துக்கள் மட்டுமே ஆகும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது பிரித்தானியத் தமிழர் பேரவையின் அறிக்கை

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனாலும் அன்று அங்கு அல்லல்பட்ட மக்கள் இன்னமும் தாயகத்தில் சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களது குரலாக புலம்பெயர் மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த மே 18 இல் லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
பிரித்தானிய தமிழர் பேரவையை தாம் தடைசெய்வதன் மூலம் பேரவை ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் தமிழ் மக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்ற இலங்கை அரசின் எண்ணத்தை லண்டன் வாழ் தமிழர்கள் புறந்தள்ளி பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டார்கள்.
இதன் மூலம், பிரித்தானிய தமிழர்கள் தாயக மக்களின் விடுதலைக்காக போராட அன்று போல இன்றும் முன்னிற்பார்கள் என்ற தெளிவான செய்தியை ராஜபக்ச அரசுக்கும் உலகிற்கும் விடுத்திருகின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரான புலம்பெயர் போராட்டம் என்னும் அத்தியாயத்தை ஆரம்பித்ததில் பிரித்தானிய தமிழர் பேரவை முக்கிய பங்கினை வகித்திருந்தது.
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு அமைச்சுஇ பல்வேறு கட்சிகள், ஐ.நா மனித உரிமைகள் கழகம் போன்றவையுள்ளிட்ட பல்வேறு தளங்களைப் பாவித்து புதுப் பரிமாணத்தில் போராட்டத்தினை வேகமெடுக்க வைத்தோம்.
வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் என்ற விழுமியங்களுடன் மக்கள் பங்குபற்றும் சனநாயக அடிப்படையில் தன்னைப் புதுப்பித்தது. ஆயினும், பேரவை ஆரம்பித்த காலம் முதல் அது தாங்கிவரும் வலிகள் ஏராளமானது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வில் பல அசம்பாவிதங்கள் நடந்ததாகவும் இன்னும் ஓரிரு வருடங்களில் பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்படும் எனவும் தனி நபர்களும் ஒரு சில தமிழ் ஊடகங்களும் விஷமப் பிரச்சாரம் செய்கின்றன.
பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வில் நடந்த சில சம்பவங்களைப் பதிவு செய்வது பேரவையின் கடமை.
நிகழ்வின் ஆரம்பத்தில் பிரித்தானியாவிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒரு சில பொறுப்பாளர்களின் வழிநடாத்தலில் ஒருசில இளைஞர்கள் நிகழ்வில் அத்து மீறி நுழைந்தனர்.
தாம் தேசியக் கொடியினை ஏற்றப்போவதாக கூறி கோஷமிட்டதுடன் பிரித்தானிய தமிழர் பேரவையினர் தேசியத்துக்கு எதிரானவர்கள் என குற்றம் சாட்டினர்.
 தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பிளவுகளையும் ஏற்படுத்திய இச் சம்பவம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கீகாரமின்றி செய்யப்பட்டதாகவே நாம் கருதுகின்றோம். அவ்வாறாயின் இதனைத் தூண்டிய பொறுப்பாளர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும், குறிப்பாக ஒடுக்குமுறைக்கெதிராக போராடும் இனங்களுக்கு தமது தேசியக் கொடி உன்னதமானது. நாமும் அதற்கு மாறானவர்கள் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே.
வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் விழுந்து விடாமலும் அவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துவிடாமலும் எமது பக்க நியாயத்தையும் உண்மையினையும் எடுத்துக்கூறி அவர்களின் ஆதரவினையும் அனுதாபத்தினையும் பெற்றுக்கொள்வதற்கு, நாம் வாழும் நாடுகளின் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களையும் மதித்து அவற்றுக்கு அமைவாக செயற்படுவது மிகவும் அவசியமானது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அவ்வாறு செயற்பட்டதன் விளைவாக, பிரித்தானிய தமிழர் பேரவை போருக்குப் பின்னரான தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் காத்திரமான பங்களிப்பினை செய்ய முடிந்திருக்கிறது.
தேசியக் கொடி தொடர்பில் காவல் துறை நிலமைகளுகேட்ப வெவ்வேறு விதமாகக் கையாள்கின்றது. நாம் எதிர்காலத்தில் ஆட்சிப்பீடங்கள் மீது அழுத்தங்களை அதிகரிக்கும்போது சட்டத்தினை எம் மீது ஏவி விடவும் தமிழர் பேரவையை தடை செய்யவும் இன்றைய சூழ்நிலையில் இடமுண்டு.
தமிழ்மக்களின் தேசிய கொடியினை ஏற்றக் கூடாது என்ற பிரித்தானிய பொலிசாரின் அறிவுறுத்தல்கள் எமக்குத் தரப்பட்டுள்ளதால் பிரித்தானியாவின் சட்டங்களுக்கு அமைவாகவே முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றது.
இதனை, தமிழ் மக்களின் தேசிய கொடிக்கு எதிரானது என்றும் தமிழ் மக்களின் அடையாளத்தினை இதன் மூலம் பிரித்தானிய தமிழர் பேரவை அழிக்க முற்படுகிறது என்றும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் தெரிந்து நின்று செற்படும் சிலரும் தெரியாமல் நின்று செயற்படும் சிலரும் விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
உண்மையில், எந்த ஒரு அமைப்பினை விடவும் பிரித்தானிய தமிழர் பேரவையே தமிழ் மக்களின் தேசிய கொடிக்கு ஒரு அங்கீகாரத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு உண்மையான கரிசனையுடனும் பற்றுறுதியுடனும் செயற்பட்டிருக்கிறது.
எமது தேசிய கொடிக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கும் பல வேலைகளை அரசியல் ரீதியாகவும் வெகுஜன செயற்பாடுகள் மூலமாகவும் நாம் மேற் கொண்டிருக்கிறோம்.
உதாரணமாக, பிரித்தானிய பொலிசாருக்கு இது விடயத்தில் கடந்த பல மாதங்களாக பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களின் தேசிய கொடியினை அங்கீகரிக்குமாறு கோரி அழுத்தங்களை கொடுத்து வருகிறது.
இந்தக் கொடியினை ஏன் பிரித்தானிய பொலிசார் அங்கீகரிக்க வேண்டும் என்று வரலாற்று ரீதியான பல உண்மைகளை கோடிட்டு ஆய்வுக் குறிப்புக்களை பிரித்தானிய தமிழர் பேரவை பொலிஸாருக்கு அனுப்பியிருக்கிறது.
இது தொடர்பில் பிரித்தானியாவில் ஒரு சுயாதீனமான சர்வஜன வாக்கெடுப்பை தமிழ் மக்கள் மத்தியில் நடாத்தி தேசியகொடி மீதான ஒட்டு மொத்த தமிழ் மக்களின் விருப்பத்தினை வெளிப்படுத்துவதற்கும் தயாராக இருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை பொலிஸாருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருக்கிறது.
தேசிய கொடி விடயத்தில் பிரித்தானிய பொலிசாருடன் நடைபெற்ற மின்னஞ்சல், கடித பரிமாற்றங்கள் மற்றும் தயாரித்து வழங்கப்பட்ட ஆவணங்களையும் மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை தயாராக இருக்கிறது.
இந்த பரிமாற்றங்களை ஊடகங்களில் வெளியிடுவற்கான அனுமதியினை பிரித்தானிய தமிழர் பேரவை பொலிஸாரிடம் கோரி இருக்கிறது. பொலிஸாரிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் அவை பொது மக்களுடன் பகிரப்படும்.
பிரித்தானிய தமிழர் பேரவை ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை அதனை புலிகளின் முன்னரங்க அமைப்பு என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக பரப்புரை செய்து வருகின்றது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை பயங்கரவாதப் போராட்டமாக ஏனைய நாடுகளை நம்ப வைப்பதில் வெற்றி கொண்ட ஸ்ரீலங்கா அரசின் பரப்புரை இன்றுவரை பல நாடுகளின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் தமிழ் மக்களை தொடர்ச்சியாக இன அழிப்புக்கு உட்படுத்துவதனை நியாயப்படுத்தி வருகின்றது. ஆனால் நாங்கள் பொது மக்கள் கொல்லப்பட்டதை பொது மக்களாக நியாயம் கேட்கும் போது சர்வதேச சமூகம் தட்டிக் கழிக்க முடியாத நிலையில் உள்ளது என்பது எமது அனுபவபூர்வமான உண்மை.
2009க்கு முன்னர் நிலப்பரப்பை தமது பூரண கட்டுப்பாட்டில் தக்க வைக்கக் கூடிய பலத்துடன் விடுதலைப் புலிகள் ஒரு நடைமுறை அரசாக செயல்பட்ட போது அப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்காகவும் தம் பூகோள நலன் கருதியும் சர்வதேச சக்திகள் தலையிட்டு இரு தரப்பினரோடும் பேச வேண்டிய தேவை இருந்தது.
மே 2009க்குப் பின்னர் வலுச் சமநிலை எமக்குப் பாதகமாக மாறியது. அதன் பின் சிங்கள தேசத்திற்கோ சர்வதேசத்திற்கோ தமிழர் தரப்புடன் பேசியே ஆக வேண்டும் என்பது அவசியமாகப்படவில்லை.
எம் மக்கள், யாராலும் பாதுகாக்கப்படாத நிலையில் எம் மக்களுக்கு நடந்தஇநடக்கின்ற கொடுமைகளை எடுத்துச் சொல்லி உலக நாடுகளின் கவனத்தினை ஈர்த்து அவர்களைப் பாதுகாக்கக் கூடிய தற்காலிக மற்றும் நிரந்தர நடைமுறைகளை செயல்படுத்த வைக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.
படிப்படியாக உலகின் பார்வையில் மாற்றமும் வருகின்றது. இன்றைய நிலையில் எமது உறவுகளை காக்கவேண்டுமாயின் எமக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு அவசியமாகின்றது. 
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே நாம் மிகவும் கவனமாக எமது செயல்பாடுகளை அமைத்து வருகின்றோம்.
சர்வதேசத்தோடு நாம் அந்நியப்பட்டு நிற்பதா அல்லது சர்வதேசத்திற்கு தமிழின அழிப்பினைச் செய்யும் சிறிலங்காவினை தோலுரித்துக் காட்டி அதனை அன்னியப்படுத்துவதா என்ற தெரிவினை நாம் தீர்மானகரமாக மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்ற விதத்தில் எம் மூலோபாயங்களையும் செயல்பாடுகளையும் நெறிப்படுத்த வேண்டும்.
இன அழிப்புக்குள்ளான தேசம் என்று பல நாடுகளையும் ஏற்றுக் கொள்ள வைப்போமாயின் ஒரு நாட்டிற்குள்ளேயே சேர்ந்து வாழுங்கள் என்ற அணுகுமுறை மாற்றப்பட்டு எமது அபிலாசைகள் என்ன என்பதனை கருத்தில் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
எமது போராட்டத்துக்கான அங்கீகாரமே இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு முக்கியமானது. பிரித்தானிய தமிழர் பேரவையின் மேடையில் பிரித்தானிய பிரதமர் ஏறி எமது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும். அத்தோடு ஐக்கிய நாடுகள் சபை எமது சுயநிர்ணய உரிமையை ஏற்க வைக்க வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம். அதற்காக நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.
பிரித்தானிய மக்களின் மனத்தினை வெல்வது மிக முக்கியமானது. அதற்கான தளத்தினை உருவாக்குவது தமிழர் பேரவையின் முக்கிய வேலைத்திட்டமாக இருக்கின்றது.
கோஷங்களுக்குள் மட்டும் எமது போராட்டம் நின்று விடுதல் ஆகாது. தமிழர்களின் அழியாச் சொத்தான அறிவை ஆயுதமாக பயன்படுத்தி எதிரியை நாம் புறமுதுகிட செய்ய வேண்டும். தமிழ் மக்களுக்குள் மட்டும் இப்போராட்டத்தின் நியாயப்பாடு முடங்கி நிற்கக் கூடாது. நடைமுறையில் செய்து காட்டி முன்னேற வேண்டும் என்பதே எம் அணுகுமுறை.
இந்தப் பாதை தவறென்று யாராவது கருதுவீர்களாயின் விடுதலைக்காக இதனை விட மேலான மூலோபாயத்துடன் வேறொரு வடிவத்தில் செயல்பட்டு விரைவில் உலக அங்கீகாரத்தை எடுத்துத் தருவோம் என்று எமக்கு புதியதோர் பாதையினைக் காட்டுவீர்களானால் அதனை ஆராய்ந்து ஏற்றுக் கொண்டு உங்கள் பாதையில் இணையவும் நாம் தயாராகவுள்ளோம். விடுதலைக்கான உங்கள் பாதையினை மக்களுக்கும் எமக்கும் அறியத் தாருங்கள்.
தமிழீழத்தில் நடைபெற்ற அநீதிகளுக்கு ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை மூலம் நீதி வழங்க வேண்டும். அதற்காக சர்வதேச அரங்கில் பிரித்தானியா எமக்காக குரல் கொடுக்க வேண்டுமென பேரவை கடந்த ஐந்து வருடங்களாக பாடுபட்டு வருகின்றது. அதன் பலனாக இன்று பிரித்தானியா சர்வதேச சுயாதீன விசாரணைக்கு சாதகமாக வெளிப்படையாக குரல் கொடுக்கின்றது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்பு போற்றுதற்குரியது. சர்வதேச அரசியல் நுணுக்கங்களை கற்றறிந்து, அதன் போக்கினை அறிந்து எமது போராட்டத்தின் நியாயங்களை சர்வதேச அரங்குகளுக்கு கொண்டு செல்வதில் பிரித்தானிய தமிழர் பேரவையின் இளையோர் ஆற்றும் பணி நம்பிக்கை ஒளியைத் தருகின்றது.
இவ்வாறு மேன்மேலும் இளைஞர்களை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை வென்றெடுப்பதற்காக அரசியல் இராஜதந்திர பணிகளை முன்னெடுப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்.
மாறாக போற்றுதற்குரிய பணிகளை ஆற்றக்கூடிய இளையோரில் ஒரு சிலரை தவறாக வழிநடாத்தி அமைப்புக்கள் மீதான போட்டி மனப்பான்மையினயும் காழ்ப்புணர்வுகளையும் தூண்டி அவர்களின் ஆற்றலையும் திறமைகளையும் தவறாக பயன்படுத்த வேண்டாம் எனவும் எமது இனத்துக்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டாமெனவும் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டோர்களுக்கு தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.
அதேவேளை தமிழர் பேரவையை இன்னும் சிலகாலத்துக்குள் நிர்மூலமாக்கிவிடுவோம் எனவும் எமக்கு அச்சுறுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவையை எவ்வாறாயினும் ஒழித்துக்கட்டி விடவேண்டுமென அது தொடங்கிய காலம் தொடக்கம் இலங்கை அரசு பகீரதப்பிரயத்தனம் செய்து வருகின்றது.
இலங்கை அரசினதும் மற்றும் பலரினதும் தொடர்ச்சியான கபட நாடகங்களுக்கு மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து வருகின்றது. வளர்ந்து வருகின்றது.
நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி பதிவு செய்துவிட்டோம். நாம் இழந்த சுதந்திரத்தை மீட்கும் பணிகள் ஆயிரமாயிரமாகக் கிடக்கின்றன. அன்றாடம் எமது உறவுகள் கொல்லப்பட்ட வண்ணம் உள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமக்குள் குரோதத்தை வளர்ப்பதும் இளைய சமூகத்தை கூறுபடுத்தி தவறாக வழிநடாத்துவதும் ஒற்றுமையைத் தகர்ப்பதுவும் விடுதலை வேண்டி நிற்பவர்கள் செய்யும் பணியல்ல.
தமிழர் பேரவை தேசியத்தின் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் எந்த இடர்வரினும் அதனை எதிர் கொள்ளும் பக்குவமும் மனோதிடமும் பிரித்தானிய தமிழர் பேரவைக்கும் எம் மக்களுக்கும் உண்டு.
முள்ளிவாய்க்கால் நினைவென்பது மனித இனத்துக்கு எதிரான ஓர் மாபெரும் அவலத்துக்கான நீதி கேட்கும் நாள். இதற்கு வேறு விதமாக அர்த்தம் ஏதும் கற்பிக்க முடியாது.
இந்நிகழ்வை தமிழினம் மட்டும் தனித்து நின்று முன்னெடுக்காமல் எமக்காக குரல் கொடுப்போர் மற்றும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் எனப் பலரும் சேர்ந்து ஒன்றாக அணி திரள்வதே இன்றைய காலத்தின் தேவையாகும்.
 
பிரித்தானியர் தமிழர் பேரவை

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய கோடி என்ன கோவணமா அடிக்கட்டி கழட்டி வைக்க? Btf கொடிக்காக எம்முடன் சண்டை போடுவதை விட்டு கவுன்சிலுடன் சண்டை போடட்டும் தமிழரின் கொடியை ஏற்றி வைக்க எமக்கு உரிமை இல்லையா எண்டு

BTF யாருடனும் எப்போதும் சண்டை போட்டது கிடையாது. யாருக்கும் எதிராகக் குற்றச்சாட்டும் வைத்தது கிடையாது. நீங்களாகவே அத்துமீறி வந்து சண்டை போட்டால் அதனால் பிரித்தானித் தமிழர் பேரவைக்கு நட்டம் எதுவும் இல்லை யாழ் அன்பு.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது கருத்து

மற்றும் நிலையுடன் ஒத்துப்போகின்றேன் சுமே

இதை  ஒரு அறிக்கையாக நீங்களோ

நீங்கள் குறிப்பிடும் அமைப்போ  விடமுடியுமா?

விட்டுவிட்டு  தங்கள் பணிகளைத்தொடரலாமே.....

ஆனால் இந்த மாறி  மாறி  வாலையும் முகத்தையும் காட்டுவதால்

ஒன்றில் தமிழரை ஏமாற்றுவதாக  

அல்லது

வெள்ளைகளை  ஏமாற்றுவதாக  

நீங்களும் உங்களைச்சார்ந்த அமைப்பினரும்  நினைத்துக்கொள்வது மட்டுமே நடக்கும்

மற்றும்படி உண்மை

எல்லோருக்கும் தெரியும்....

மற்றும்படி  உங்கள் அமைப்பு செய்வதாக நீங்கள் சொல்பவை  அனைத்தையும்விட

ஆயிரம் மடங்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செய்யுது. அது எனக்குத்தெரியும்.

நான் எல்லோரையும் ஆதரிக்கும்  ஒருவன்

யார் குற்றியும் அரிசியானால் சரி  என்பதே எனது நிலை

அவர்களது பெயரை இழுத்து நீங்கள் எழுதியதற்காக மட்டுமே இதை  இங்கு குறிப்பிடுகின்றேன்

இது போன்று அமைப்புக்களை பெயர் குறிப்பிட்டு 

நான் பெரிது

நீ  சிறிது என தரம் தாழ்த்துவதை  நாம் முதலில் நிறுத்தணும்

நன்றி.

அண்ணா நான் பிரித்தானியத் தமிழர் பேரவையில் கடந்த ஆறு ஆண்டுகளாக வேலை செய்யும் அதே வேலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடனும் வேலை செய்தோம். நான் மட்டுமல்ல என்னைப் போல் இன்னும் பலர் இரண்டுக்கும் பாலமாக இன்னும் இருந்துகொண்டு இருக்கிறோம். எமது நோக்கம் எல்லாம் ஒற்றுமையாக எல்லோரும் வேலை செய்து ஒரு தீர்வு காண வேண்டும் என்பது தானே ஒழிய நான் பெரிது நீ பெரிது என்று நாம் யாரும் நினைத்ததில்லை. ஆனால் ஒருவன் வயலில் கஷ்டப்பட்டு வேலைசெய்து அறுவடை முடிந்தபின் நான் தான் விளைவித்தேன் என்று இன்னொருவர் உரிமை கொண்டாட விட முடியாது அண்ணா. அத்துடன் நீங்கள் கூறும் ஆயிரம் மடங்கு வேலைகள் பற்றியும் எனக்குத் தெரியும் அண்ணா.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

மொசப்பத்தேமியா நீங்கள் முதலில் ஒரேகொள்கையில் நில்லுங்கோ. ரீசீசியுடன் நின்ற போது மற்றவர்களை தூற்றினீர்கள். இப்போ ரீசீசியை பிழைசொல்கிறீர்கள். கொள்ளையில்லாமல் அங்குமிங்கும் பெருமைப்படுவது விடுதலைக்கான வழியல்ல.

நன்றி சகோதரி  பதிலுக்கு...

நான் கொஞ்சம் அடக்கி  வாசித்திருக்கின்றேன் எனது பதிலில் என்று நினைக்கின்றேன்

பொது வாழ்க்கையில் உள்ளவர்கள்

தாயகத்தின் இன்றையநிலையில் ரொம்ப  அடக்கி  வாசிக்கணும்

எவரையும் தூக்கிபிடிப்பதோ

மடக்கிபிடிப்பதோ  உகந்ததல்ல.

அதற்காகவே கேள்வி  கேட்டேன்

தங்களது 

மற்றும் பிரித்தானிய  பேரவையின் அறிக்கைகள் 

சொதப்பலாகவும் 

எந்த முடிவுக்கும் வராத இருதலைக்கொள்ளி  நிலையில் உள்ளன.

கொடி சார்ந்து

பிடிப்பார்களா? பிடிக்கமாட்டார்களா?  புரியவில்லை.

எனவே இழுபாடு தொடரும் போலத்தான்  உள்ளது.

ஒரு முடிவை  மக்களுக்கு தெளிவாக அறிவித்துவிட்டு பயணிப்பது

இழுபாடுகளையும்

இரு முகங்களையும் களையலாம்.

நன்றி

தேசியக்கொடி  என்பது

எவருக்கும் சொந்தமல்ல

அதேநேரம் எவரும் அதை பிடி என்று வற்புறுத்தமுடியாது

அதேபோல்

அதைப்பிடிப்பவரை

பிடிக்காதே என்று கூறும் தகுதியும் எவருக்கும் இல்லை

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மொசப்பத்தேமியா நீங்கள் முதலில் ஒரேகொள்கையில் நில்லுங்கோ. ரீசீசியுடன் நின்ற போது மற்றவர்களை தூற்றினீர்கள். இப்போ ரீசீசியை பிழைசொல்கிறீர்கள். கொள்ளையில்லாமல் அங்குமிங்கும் பெருமைப்படுவது விடுதலைக்கான வழியல்ல.

எப்பவும் எனது கொள்கை ஒண்டுதான். நான் கடந்த பத்து ஆண்டுகளாக TCC இக்கும் 2007ம் ஆண்டிலிருந்து BTF இன் முழுநேரப் பணியாளராகவும் வேலை செய்தேன். TCC அப்போது கூட என்னை விட்டுவைக்கவில்லை. தமக்காகவும் என்னைப் பயன்படுத்திக் கொண்டனர். அதையிட்டு நானோ  BTF ஓ எந்த ஆட்சேபனையும் தெரிவிககவில்லை. ஏனெனில் இரண்டினதும் நகர்வு தேசியம் நோக்கியதாகவே இருக்கிறது. அட்பற்றாக்குறையால் இரண்டுக்கும் வேலை செய்யவேண்டிய நிர்பந்தம். நான் TCC என்றால் என்ன எதுவேன்றாலென்ன இதில் வந்து உங்கள் முன் எழுதிவிட்டுப் போவதில்லை. எந்தப் பெரிய கொம்பன் என்றாலும் அவர்கள் தவறை அவர்களுக்குச் சுட்டிக்காட்டும் துணிவு என்னிடம் உண்டு. நான் என் பெயர் நிவேதா என்று பலருக்கும் தெரிந்த பின்தான் எழுதுகிறேன். முகமூடி போட்டபடி அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

TCC, BTF, TYO இந்த மூன்று அமைப்புகளும் வாயை சாப்பிட மட்டும் தான் திறப்பினம் போல இருக்கு. 

ஒரு சின்ன பிரச்சனைய நடுரோட்டுக்கு கொண்டுவந்து வெறிநாயள் கடிபடுற மாதிரி ஆக்கிட்டினம். 

இப்ப அறிக்கையள் விட முன்னம் இந்த மூன்று அமைப்பும் ஒரு மேசையில இருந்து இதுபற்றி பேசியிருந்தா இந்த நிலமை வந்திருக்குமோ? பேசின விடயத்தை எழுத்து மூலமா இந்த அமைப்புகள் வச்சிருந்தா என்னத்துக்கு இங்க வந்து புடுங்குப்படுவான்? இப்ப எல்லாரின்ர மானமும் காத்தில பறக்குது. இது தேவையோ? 

சரி இந்த அமைப்புகள் சேர்ந்து பேசுறது சரிவராத விசயம் என்டு வச்சுக்கொள்ளுவம். BTF துரோகி என்டு வச்சுக்கொள்ளுங்கோ. துரோகியள் நடத்திற நினைவுநாளில TCC  மற்றும் TYO அமைப்புகளுக்கு என்ன வேலை? சிங்களவங்கள் நடத்திற இப்படியான நிகழ்சியளுக்கும் போய் கொடி ஏத்துவீங்களோ? 

BTF கொடி பிடிக்க வேண்டாம் என்டு சொன்னதா தெரியேலை. கொடி ஏத்தி நிகழ்ச்சி செய்ய முடியாது என்டதை ஒத்துக்கொள்ளுது. அதற்கான காரணத்தையும் தந்திருக்கினம். அது சரியா பிழையா என்டதை விடுவம். இதெல்லாம் முதலே தெரியும் தானே. பிறகு என்ன வெங்காயத்துக்கு அங்க போய் அந்த இடத்தில பிரச்சனை பண்ண வேணும்? அதுவும் ஒரு நினைவுநாளில! 

புலிக்கொடிக்கு தடையில்லை என்டா அதை ஆரதத்தோட முன் வச்சு முதலே கதைச்சிருக்க வேணும். வாயால ஆரதம் இருக்கெண்டு சொன்னா மட்டும் போதாது. 
 
இந்த புலிக்கொடி மேட்டர் வெள்ளைக்காரன் எங்களை முட்டாளாக்க கொண்டுவந்தது. அடிமை புத்தியில நாங்களும் 2009ஆம் ஆண்டுக்கு பிறகு வெள்ளைக்காரன் சொன்னா சரியா தான் இருக்கும் என்டு அதை கடைப்பிடிக்க தொடங்கீட்டம். அதில நானும் ஒராள் தான். ஆனா போக போக தெரிஞ்சது அது எங்கட பலவீனம் என்டு. வெள்ளைக்காரனோட முட்டிமோத பயந்து நாங்கள் பம்பிக்கொண்டிருந்ததால வந்த வினை இது. புலிக்கொடியை பயங்கரவாதமாக்கின பிறகு எங்களோட சேர்ந்து வேலை செய்யிற வெளிநாட்டு அமைப்புகள் தங்களுக்கும் பயங்கரவாத முத்திரை குத்தப்படும் என்ட பயத்தால அவங்கள சுயநலத்துக்காக புலிக்கொடியை தவிர்க்க சொன்னாங்கள். இதுக்குள்ள எங்கட "மாட்டுக்கருத்தாளர்களும்" சோந்து அவங்களுக்கு பீதியை கிளப்பிவிட்டினம் (இது இங்க நேரில நான் பார்த்தது. அப்படி ஒரு மாற்றுக்கருத்தாளரின்ர நண்பர் ஒருத்தர் யாழ்கள உறுப்பினர் மக்கழே! :D )

அவங்களுக்கு புலியும் பிரச்சனை இல்லை கொடியும் பிரச்சனையில்லை. அவங்கட பெயர் கெட்டுப்போகாமல் இருந்தா சரி. 

இங்க வெள்ளைக்கார அமைப்போட சேர்ந்து ஒழுங்கு பண்ணின ஒரு நிகழ்ச்சியை சொல்லுறன் கேளுங்கோ. 

இந்த நிகழ்ச்சி வெள்ளைக்கார அமைப்பின்ர பெயரில செஞ்சது. அவையள் முன்வச்ச விடயம் புலிக்கொடி கொண்டுவர அனுமதியில்லை என்டு. அப்ப நான் கேட்டது. புளேட் கொடி கொண்டுவந்தா என்ன செய்யப்போறீங்கள் என்டு. பிறகு புலிக்கொடி என்டு போடாமல் அரசியல் கொடிகள் என்டு போட்டினம். அப்ப நான் கேட்டது நீங்கள் எப்படி கொண்டுவர வேண்டாம் என்டு ஒரு பொதுநிகழ்ச்சியில மக்களிட்ட சொல்லுவீங்கள்? பிறகு அரசியல் கொடிகள் கொண்டுவருவதை தவிர்த்தால் நல்லம் என்டு மாத்திச்சினம். இதில அந்த அமைப்பை சொல்லியும் பிழையில்லை. அவங்களுக்கும் அவங்கட பெயரும் முக்கியம். எங்களுக்கு எங்கட வேலையும் முக்கியம். இறுதியா அவங்கள் துண்டுப்பிரசுரத்தில போட்டது அவங்களுக்கும் பிரச்சனை இல்லை. எங்கட பக்கத்தாலையும் பிரச்சனையில்லை. அப்படியிருந்தும் அங்க நூற்றுக்கணக்கா புலிக்கொடியள் வந்தது. அதை பற்றி அந்த அமைப்பும் ஒன்டும் அலட்டிக்கொள்ளேலை. இது நடக்கும் என்டு அவை எதிர்பார்த்தது தான். இன்டைக்கும் அந்த அமைப்பு தமிழ் ஆக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டு தான் இருக்கு. 
 
இநத புலிக்கொடி விடயம் அரசியல் ரீதியா தீர்க்க முதல் சட்டரீதியா திர்க்கவேணும். அதுக்கு எந்த அமைப்பும் முன் வந்த மாதிரி தெரியேலை. எந்த வெள்ளைக்கார எம்.பி.யும் இந்த தடையை எடுக்க முடியாது. சட்டத்தால மட்டுமே முடியும். ஆனா அதை செய்யாமல் எம்.பி. சொல்லீட்டார்  அப்படி பண்ணுங்கோ எம்.பி. சொல்லீட்டார் இப்படி பண்ணுங்கோ என்டு வெளிக்கிட்டா இப்படி தான் நடுரோட்டில ஆளையாள் அடிச்சுக்கொண்டு நிக்க வேண்டி  வரும்.

நித்திரையிலயும் கொஞ்ச நாளா இந்த தாலிக்கொடி அருணாக்கொடி புலிக்கொடி தேசியக்கொடி பற்றி தான் கனவா இருக்கு. அவ்வளாத்துக்கு இங்க திருப்பி திருப்பி ஒரு விசயத்தை கதைச்சிட்டம்.

Edited by ஊர்க்காவலன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் BTF இல் இருந்து கொடியேற்ற முடியாத நிலைமை வெள்ளைக்காரர்களால் ஏற்படுத்தப்பட்டால்.. மக்கழே.. ஒரு நிமிடம் மனக்கண்ணில் தேசியக்கொடியை நினைத்துக்கொள்ளுங்கள்.. கவுன்சில்காரர் கொடி ஏற்ற வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். பாடலை மட்டும் ஒலிக்க விடுகிறோம்.. என்று அறிவிப்பு செய்திருப்பேன், ஆங்கிலத்தில்..  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

'அன்பான தமிழ் உறவுகளே

தனிப்பட்ட யாரையாவது குறை கூறின் அது அவரவர் பிரச்சனையென விட்டுவிடலாம். அவரவர் தமது தர்மத்திற்கேற்ப முடிவையுமெடுக்கலாம். ஆனால் ஒரு அமைப்பைச் சார்ந்தோரெனத் தேர்ந்து குறை கூறின் பதிலளிக்கவேண்டிய நிலையும் பொறுப்பும் அந்த அமைப்பிற்குளது. அந்தவொரு காரணத்தினாலேயே இதனை எழுதுகின்றோம். ஆனால், பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC) ஈழத் தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றையே தம்மூச்சாகக் கொண்டுள்ள மக்கள் அணி. தமிழீழத் தேசியக்கொடி எமது தேசியச் சின்னங்களில் உன்னத இடத்தை வகிக்கும் ஒன்று. எமது மாவீரர்களின் தியாகத்தினாலே உரமேற்றப்பட்டு வருவது. தேசியத்தலைவரினாலே பூசிக்கப்படுவது. 2009 இலே உலக நாடுகளின் நாடாளுமன்றங்களின் முன்னாலே 73 நாட்கள் வரையிலே கவனயீர்ப்பு நிகழ்த்திய வேளையிலே – குறிப்பாகப் பிரித்தானியா போன்ற நாடுகளிலே - இக்கொடியைக் காவற்றுறையினர் எதிர்த்தனர். எமது உறவுகள் அதனைக் கைகளிலே ஏந்துவதற்காகப் பொலிசாரினாலே தாக்கப்பட்டனர். சிறை பிடிக்கப்பட்டனர். வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டனர். ஆனால், பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினையும் தமிழீழத் தேசியக் கொடியினையும் வேறுபடுத்துவதெவ்வாறெனவறிந்த காவற்றுறை எமது தேசியக் கொடிக்கு அனுமதி அளித்தது. நாம் மண்டபங்களினுள்ளேயும் அம்பலத்திலேயும் எமது தேசியம் சார்ந்த நிகழ்ச்சிகளிலே தேசியக் கொடி ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். காவற்றுறையினர் சூழ்ந்துநிற்கப் பிரித்தானிய முன்னணி அரசியற்கட்சி நாடாளுமன்றவுறுப்பினர்களும் எம்மோடிணைந்து மரியாதை செய்ய எமது தேசியக் கொடி உரிய முறையிலே ஏற்றப்படுவதை யாவருமறிவீர். எமது இளைஞரும் யுவதியரும் பல்கலைக்கழகங்களினுள்ளேயும் அவ்வாறே ஏற்றினர்.

முள்ளிவாய்க்காலிலே ஆயிரமாயிரமாய் எமது மக்களும் மாவீரர்களும் தம்மை இக்கொடியின் விடுதலைக்காகவே ஈந்தனர். அவ்வாறான முள்ளிவாய்க்கால் நிகழ்வின் நினைவெழுச்சியின் போது அக்கொடி ஏற்றப்படுவதை எதிர்பார்க்கும் எந்த ஒருவரையும் பிழையானவரென்று யாருங் கருத முடியாது.

இம்முறை நிகழ்ச்சியிலேயும் எமது தேசியக்கொடி ஏற்றப்படமாட்டாது என்ற முடிவிலே பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) உள்ளதாக நாம் அறிந்தோம். எமது ஒருங்கிணைப்பாளர் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டபோதும் அவ்வாறே கூறப்பட்டு அவர்கள் அறிக்கையிலுள்ளவாறே நியாயங்களும் எடுத்துரைக்கப்பட்டன.

பி. த. பேரவையின் மூவருக்கும் எமக்கும் இடையிலே 21.04.2014 அன்று முள்ளிவாய்க்கால் மே 18 நிகழ்ச்சி பற்றிய கூட்டம் நடைபெற்றது. அதிலேயும் தேசியக் கொடியின் முக்கியத்துவம் பற்றிக் காரசாரமான வாதம் நடைபெற்றது. எமக்கு அனுமதி தரும் அதே பொலிசார் அவர்களுக்கு அனுமதி மறுப்பது விந்தையாகவுள்ளது என்பதையும் அவ்வாறான தன்மையை நாம் ஒன்றாகச் சென்று அவர்களிடம் நியாயம் கேட்கவேண்டுமென்றும் அவர்களுக்கு எம்மாலே எடுத்துக் கூறப்பட்டது. தொடங்கிய நிலையிலேயே கூட்டம் முடிவடைந்தது. தாம் பி. த. பேரவையின் செயற்குழுவிலே இதுபற்றிக் கதைப்பதாகக் கூறிச் சென்றனர். பின்னர் எவ்வித மாற்றமுமில்லாத முடிவையே அறிவித்தனர்.

பொதுமக்கள் மனநிலையை நன்கறிந்த த. ஒ. குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி. த. பேரவையின் பொறுப்பாளர்களுடன் தொலைபேசிமூலமாக இதுபற்றி மீண்டும் பேசியுள்ளார். இறுதியாக மே 16 வெள்ளியன்றும் பி. த. பே. யின் பொறுப்பாளரோடு நிலைமைகளை விரிவாகக் கதைத்துள்ளார். 17ம் திகதி சனியன்று நண்பகல் வரையிலும் இதுபற்றிய ஏற்ற முடிவை எதிர்பார்த்திருந்தோம். எந்நிலையிலும் அவர்கள் தம்முடிவிலே உறுதியாகவிருந்தனர்.

பி. த. பேரவையினரின் ஊடக நிகழ்ச்சிகளின் மூலமாக யாவற்றையுமறிந்த இளைஞர்கள் மிகவும் கவலையடைந்தனர். உண்மை நிலையை அறிய எம்மை நாடினர். யாவும் பி. த. பே. இன் முடிவேயென்பதை அறிந்த அவர்களிலே சிலர் தாமும் அவர்களோடு பேசிப் பார்த்தனர். தம்மை ஏற்ற விடுமாறும் பாதகமான விளைவுகளுக்குத் தாமே பொறுப்பாகுவாரெனவும் கேட்டனர் எனக் கேள்வியுறுகின்றோம். எதுவும் பலனளிக்கவில்லை. ஈற்றிலே விரக்தியுற்ற பொதுமக்கள் தாமே முன்வந்து கொடியேற்ற எண்ணினர்.

மே 18 ஞாயிறன்று இலண்டன் ரவல்கர் சதுக்கத்திலே மக்கள் கூடினர். எமது எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வழமையாக வருவது போலவே பொதுமக்கள் பலரும் - அதிலும் குறிப்பாக இளைஞர்கள் - கைகளிலே கொடியேந்தியே வந்தனர். கொடியை ஏற்ற வேண்டுமெனக் குரலெழுப்பி வேண்டினர். அப்போது எமது நிர்வாகப் பொறுப்பாளரும் வேறு சிலரும் பி. த. பே. பொறுப்பாளருக்கு நிலைமையை விளங்கவைத்து ஒத்துப் போகும்படி அறிவுரையும் கூறினர். ஆனால் அவர்கள் மறுத்தனர்.

கூடியிருந்த பொதுமக்கள் 45 நிமிடங்கள் வரையிலே மிகமுயன்றனர். ஒருபுறம் கொடியேற்றுவதற்குரிய ஒழுங்குகளையும் செய்தனர். கொடியை ஏற்ற முறையிலே ஏற்ற வேண்டுமென்பது அவர்களின் ஆதங்கம். ஏற்றவேண்டிய முறையை நன்கு அறிந்தவர்கள் த. ஒ. குழுவினரென்பதை அம்மக்களறிவர். அதனாலே உதவி கோரினர். அவர்களின் நியாயமான ஆதங்கத்தை உணர்ந்தவரும் கொடியேற்றும் முறையை அறிந்தவருமான சிலர் அவர்களுக்குச் சரியான முறையைக் காட்டினர். கொடி பொதுமக்களாலே ஏற்றப்பட்டு நிகழ்ச்சியின் நிறைவுவரை பறந்தது.

இதுவே நிகழ்ந்தவை. உள்ளத்திலே நிறைந்தவை இரண்டு – ஒன்று பி. த. பே. இன் நிலை – அடுத்தது இளைஞரின் தேசியம் சார்ந்த செயற்பாடு.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் தேசியம் சார்ந்த எந்த நிகழ்ச்சிiயும் ஊக்குவிப்பர் என்பதையும் தேசியக் கொடி ஏற்றுவதற்கான பூரண ஒத்துழைப்பை எந்நேரத்திலும் எவருக்கும் வழங்குவதைத் தமது தார்மீகக் கடமைகளிலே ஒன்றாகக் கொண்டவரென்பதையும் இத்தால் உறுதி செய்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.'

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும் நண்பர்களே, புலிக்கொடி எமது அதாவது தமிழர்களின் தமிழீழத்தின் தேசியக் கொடி. அதை இயன்றளவு தமிழீழ தேசியக்கொடி என்றே அழைக்கலாம் அல்லவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்வன திருந்தச்செய் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு இப்பிரச்சனை வேறெதுவுமில்லை ஒரு பலமான அமைப்பிற்கும் இன்னொரு பலம்குன்றிய அமைப்பிற்குமான போட்டி பொறாமை காழ்ப்புணர்ச்சி என்பவற்றின் வடிவமாகவே பார்க்க வேண்டியுள்ளது. BTF அமைப்பு நிச்சயமாக நிறைய வேலைத்திட்டங்கள் செய்கிறார்கள். அதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்காக மற்றவர்கள் கருத்து கூறும்போது இதை நீங்களே செய்திருக்கலாமே என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமான வாதம் நிச்சயம் BTF ல் உள்ள அறிஞர் பெருமக்கள் கூட அவ்வாறு வாதிட மாட்டார்கள். அப்படி ஒவ்வொரு குழுவும் தனித்தனியே இந்நிகழ்வை ஏற்பாடு செய்தால் எப்படியிருக்கும். அவ்வாறான நிகழ்வுகளை கடந்த காலங்களில் நடைபெற்ற மாவீரர் தினங்களில் கண்டோம்.அதைவிட கேவலம் வேறொன்றும் இருக்க முடியாது. எமக்குள்ளே ஒற்றுமையும் ஒருமித்த கருத்தும் இல்லையென்றால் எமது கருத்து அதாவது நாம் சொல்லவருகின்ற செய்தி உரிய இடத்தைச் சென்றடையாது. அதாவது அச்செய்திக்குரியவலுவிருக்காது.

நாம் எமது தேசியம் சம்பந்தமான நிகழ்வுகளில் எல்லாம் தமிழீழதேசிய கொடி ஏற்றி கொடி வணக்கத்துடன் நிகழ்வுகளை நடாத்துவதற்கு எம்மாலான முயற்சியை நிச்சயம் எடுக்க வேண்டும் என்பது தாழ்மையான வேண்டுகோள்.

BTF அமைப்பு அதற்கான முயற்சியை ஏற்கனவே எடுத்து விட்டார்கள் என்று இக்குளறுபடிகளுக்குப் பிறகு அவர்களால் செய்தி இணையத்தளங்களுக்கு வழங்கிய அறிக்கையூடாக அறிந்தேன். இதை அவர்கள் அன்றயதினம் கொடியேற்றச்சொல்லி கூக்குரலிட்டவர்களுக்கும், அந்நிகழ்வில் பங்குபெற வந்த அனைவருக்கும் அந்நேரத்தில் பக்குவமாக எடுத்துக்கூறியிருந்தால் இந்தளவுக்கு குளறுபடி நடந்திருக்காது என நினைக்கிறேன்.

இன்னுமொரு விடயத்தை நாம் தௌிவாக அடையாளம் காணவேண்டியிருப்பது ஊடகத்தை. தயவுசெய்து எமது தேசியம் சார்ந்த நிகழ்வுகளில் ஏற்படும் சிறுசிறு விடையங்களை அதாவது இவ்வாறான களறுபடிகளை முதலில் வௌியிட்டு பிழைப்பு நடாத்தும் ஈனப்புத்தியை நாம் எல்லோரும் அடையாளம் கண்டோம். மிகவும் வருத்தத்திர்குரியது. எதிரி எப்போ எமக்குள் பிளவு வரும் என்று பார்த்துக்கொண்டிருக்கிறான். நாம் சந்தர்ப்பம் கொடுக்க கூடாது.

மன்னிக்கவும் நண்பர்களே, புலிக்கொடி எமது அதாவது தமிழர்களின் தமிழீழத்தின் தேசியக் கொடி. அதை இயன்றளவு தமிழீழ தேசியக்கொடி என்றே அழைக்கலாம் அல்லவா

  • கருத்துக்கள உறவுகள்
10294500_716708138386309_451080859966995

பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) லண்டனில் புலிக்கொடி பாவிப்பதற்கு தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மே 18 என்றால் நினைவுக்குவருவது முள்ளிவாய்க்கால் இராணுவ அட்டூழியம், ரசாயின ஆயுதங்களால் கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் பொது மக்களின் கருகிய உடல்க் குவியல்கள், போராளிகள் மற்றும் பொதுமக்கள் இராணுவத்திடம் சரணடைந்த பின் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள், இசைப்பிரியா உட்பட பல பெண்களின் பாலியல் வல்லுறவுடன் நடத்தப்பட்ட சித்திரவதைப் படுகொலைகள் குழந்தைகளை காவுகொடுத்த தாய்மாரின் ஓலங்கள். பாலச்சந்திரனின் பலி.

படுகொலை காட்சிகள், மக்களின் விபரிக்க முடியாத அன்றைய அவலம். இன்னும் ஆயிரமாயிரம் பிரச்சினைகள் உள்ளே மண்டிக்கிடந்தாலும் சர்வதேசமோ ஐநா அவையோ நடைபெற்ற அனர்த்தத்தின் நியாய அனியாயங்களை வெளிப்படையாக விசாரித்து தீர்ப்பளிக்கவோ விவரணப்படுத்தவோ விரும்பவில்லை.

அது ஏன் என்ற கேள்வி தொடர்ந்து தமிழர்தரப்பில் எழுப்பப்பட்டே வருகிறது. அந்த கேள்வியிலிருந்து பிறப்பெடுத்தவைதான் விடுதலைப்போராட்டத்துக்கான ஈழத்தமிழர் ஆதரவுச் சங்கங்கள்.

சர்வதேசத்தின் சக்திவாய்ந்த ஒரு துரோக அரசியற் சதிவலை ஒன்று மறைந்து இருந்து செயற்பட்டு இடையூறு விளைவிப்பதே சர்வதேச உதாசினத்துக்கான உட் காரணம் என்பது அனைவருக்கும் புரிந்திருந்தாலும், புரியாததுபோல பாவனை செய்து, நீண்டகாலம் இழுபறியாக இருந்துவரும் சிக்கல் நிறைந்த ஒரு இனத்தின் விடுதலைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திடமான கொள்கை வேலைத்திட்டத்திலிருந்து மாறுபட்டு பரபரப்புக்கான வழிவகைச் செயற்பாடுகளில் தமிழ் அமைப்புக்கள் விழாவெடுத்து அவ்வப்போது ஏதேதோ செய்துவருகின்றன.

அந்த வகையில் விடுதலை போராட்டத்தை நேர்வுபடுத்துகின்றோம் என்று பல வழிகளில் மக்கள் மன்றத்தில் போராடிய (BTF) பிரித்தானிய பேரவை என்ற அமைப்பு கடந்த மே 18 2014 அன்று லண்டனில் புலிக்கொடி பாவிப்பதற்குதடை விதித்து மக்களுடன் முரண் பட்டிருக்கிறது.,

1985ல் தமிழ்நாடு இந்தியாவில் திமுக தலைவர் கருணாநிதியால் மதுரையில் அங்குரார்ப்பணம் செய்து தொடக்கப்பட்ட TESO, என்ற அமைப்பும் ஆரம்பத்தில் தமிழீழத்துக்கான விடுதலை ஆதரவு அமைப்பு, என்று தொடங்கி 2011 தேர்தலின்போது “இலங்கை தமிழர்களுக்கான மருந்து தடவும் அமைப்பு” என்று மாற்றியமைத்தார் என்பது ஞாபகத்துக்கு வருகிறது..

இயல்பான யதார்த்தத்துடன் சொல்லப்போனால் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும். விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், மாவிரர்களையும் புறந்தள்ளிவிட்டு செய்யப்படும் ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைக்கான சமரசமான செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை. ஏனென்றால் அவைதான் நாங்கள் நீண்ட நெடுங் காலங்களாக பட்டறிந்த அனுபவமாக எம் முன் குவியலாக கிடக்கிறது.

ஒருவேளை ஒரு தீர்வை நோக்கி செயற்பாடுகள் நகர்த்தப்பட்டாலும் அது ஈழத்தின் வரலாற்று அடி நாதத்தை தழுவிய நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்ப்பாக இல்லாமல் ஒரு தற்காலிக பொம்மைத்தனமான தீர்வாகவே இருக்கும். ஏனென்றால் நடைமுறைகளும் செயற்பாடுகளும் நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் அப்படியான அபத்தமான செய்திகளையே தினம் தினம் சொல்லுகின்றன.

விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருந்துவிட்டுப்போகட்டும். அதற்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று எவரும் தடைசெய்யவில்லை, தடை செய்யவும் முடியாது.

ஆயுதம் தரிப்பது, வன்முறைகளை கையாளுவது முரண்பட்டதாக சர்வதேசம் கூறக்கூடும். அந்த நடைமுறை மவுனிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப்புலிகள் இயக்கமே அறிவித்து ஆண்டுகள் ஐந்து முடிவடைந்துவிட்டன.

அவை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரத்துக்குட்பட்ட அரசியல், அதுவேறு இது வேறு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுபெற வேண்டும்.

இன்றைக்கு அப்பேற்ப்பட்ட செயற்பாடுகளை முனைப்பு பெறவேண்டுமென்று எவரும் முனைப்புக்கொள்ளவுமில்லை.

மாறாக சனநாயக மரபுகளுக்கு உட்பட்டு தமிழ் ஈழத்துக்கான நீதியான நியாயமான ஒரு தீர்வை சர்வதேசத்தின்முன் வேண்டிநிற்பதற்கான போராட்டங்களே தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேசத்தின் பலபாகங்களிலும் ஜெனீவா முன்றலிலும் தேசியத்தலைவரின் உருவப்படங்களும் புலிக்கொடிகளும் பேரணிகளின்போதும் பொதுக்கூட்டங்களின்போதும் பயன்படுத்தப்பட்டே வருகிறது.

2009ன் பின் ஈழமண்ணின் மீட்சிக்கும், ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைக்காகவும் குரல் கொடுப்பதற்காக என்று சத்தியம்செய்து கூறிக்கொண்டு பலநூறு அமைப்புக்கள் புற்றீசல்போல் புறப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன, ஆனால் அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொள்கை சாராததாக இருந்தால் எவரும் திரும்பிப்பார்க்கத் தயாராக இல்லை என்பதே யதார்த்தம்,

லண்டனில்(மே 18) முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடைபெற்றபோது BTF பிரித்தானிய தமிழர் பேரவை அமைப்பினர் புலிக் கொடி ஏற்ற முடியாது என்றும், அது பிரித்தானிய அரசியல்வாதிகள் மத்தியில் அதிருப்த்தியை ஏற்படுத்தும் என்று கூறி புலிக்கொடி ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அந்த நடைமுறை பெருத்த அதிர்ச்சியையும் பிரித்தானிய பேரவையின்மீது பெருத்த நம்பிக்கையீனத்தையும் ஒருபுறம் அச்சப்படும்படியான சந்தேகங்களையும் கிளப்பிவிட்டிருக்கிறது.

பண்டைய காலத்திலிருந்தே தமிழினத்தின் அடையாளம் புலிக்கொடி என கொண்டாடப்பட்டு வருகிறது,

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பாவனையில் வைத்திருந்த புலிக்கொடிக்கும் சனநாயக போராட்டங்களின்போது பயன்படுத்தப்படும் புலிக்கொடியின் “இலச்சினை”க்கும் நிறைய வேறுபாடு உண்டு என்பதை அமைப்பில் அங்கம் வகிக்கும் கற்றுணர்ந்தவர்கள் முதலில் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஒரு இனத்தின் கலாச்சாரம் அவ்வினத்தின் கொள்கை சார்ந்த அக நிறம், பண்பு, வெவ்வெறு அடையாளங்கள் இருட்டடிப்பு செய்ய முற்பட்டால் அவ்வினத்தை அழிப்பதற்கான வேலைத்திட்டமாகவே அதை கருத முடியும்.

இன்று நீண்டு நெடிந்த ஒரு போராட்டத்தின் ஒரு திருப்பத்தில் ஈழத்தமிழ் இனம் பயணித்துக்கொண்டிருக்கிறது. ஈழத்தமிழ் இனத்தின் விடுதலையை வென்றெடுத்துவிட வேண்டுமென்ற இராசதந்திரம் அவசியமான ஒறுதான், அதற்காக மூலவேரை கறையான் அரிக்க விட்டுவிட்டு இலைக்கு மருந்துபோடுதல் விவேகமற்றதாகவே பார்க்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் புலிக்கொடி பாவிப்பதற்க்கு சட்டப்படி அங்கீகாரம் நீதி மன்றத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.

ஒருசில அரசியல்வாதிகளை திருப்த்திப்படுத்துவதற்காகவும் வேறு காரணங்களுக்காகவும் BTF பிரித்தானிய தமிழர் பேரவை ஈழத்தமிழர்களின் உயிரோட்டமான புலிக்கொடிக்கு தடைவித்தித்ததானது கடும் கண்டனத்துக்குரியது என்பதை பணிவுடன் இந்தப் பதிவு தெரிவித்துக்கொள்ளுகின்றது.

இந்த விடயத்தை இத்துடன் விட்டுவிட முடியாது, இப்படியான குளறுபடியான செயற்பாடுகள் தொடரும்பட்ஷத்தில் புலம்பெயர் தேசங்களில் முனைப்பு பெற்று நிற்கும் அரசியல் எழுச்சி மந்தப்படுத்தப்படும் அபாயம் தடுக்கமுடியாமல் போய்விடும். மக்கள் சோர்வடைந்து முடங்கிவிடும் அபாயத்தில் இப்பேர்ப்பட்ட செயற்பாடுகளே முன்னிலை வகிக்கின்றன.

விடுதலைக்கான போராட்டத்தில் மக்களின் பங்களிப்பு குறைந்தபின் அமைப்புக்கள் ஒன்றும் செய்துவிடமுடியாது. அப்பேர்ப்பட்ட சீரழிவை தோற்றுவிக்கும் அபாயம் இருப்பதால் பிரித்தானிய பேரவை புலிக்கொடி பாவிக்க வேண்டாம் என்று தடுத்ததற்கான நியாயமான விளக்கத்தை தாமதமின்றி பகிரங்கமாக வெளியிடவேண்டும். அல்லது மக்களின் மன எழுச்சியை மதித்து விலகி வழிவிடுதல் கூட நாகரீகமானதாக கருதப்படுகிறது.

இனிவரும்காலங்களில் இப்படி தாந்தோன்றித்தனமான மக்களின் மனவெழுச்சியை உடைக்கும் செயற்பாடுகளை சிந்தித்து மக்களின் கலந்துரையாடல்களின் பின் நடைமுறைக்கு கொண்டுவருவதே உகந்ததாகும்.

தேசியத்தலைவரையும், விடுதலைப்புலிகளையும், விடுதலை போராட்டத்தையும், மாவிரர்களையும், மடிந்த மக்களின் சவக்குவியலையும், காட்டி அமைப்புக்களை உருவாக்கிவிட்டு அமைப்பு நடத்துவதற்கான தற்காலிக அங்கீகாரம் அவ்வவ் நாடுகளில் கிடைத்தபின் முன் சொல்லப்பட்ட அனைத்தையும் இருட்டடிப்பு செய்து மக்கள் மனவோட்டத்துக்கு எதிராக அரசியல் செய்வதென்றால் அந்த அரசியலுக்கும் ராஜபக்‌ஷவின் அரசியலுக்கும் வேறுபாடு இருக்க முடியாது.

ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.

முகநூல் பகிர்வு...

  • கருத்துக்கள உறவுகள்

பிடிஎப்[bTF] எங்கே புலிக் கொடி பாவிக்க தடை விதித்தது?...அவர்கள் கொடி ஏத்த மாட்டோம் என்று சொன்னார்களே தவிர நிகழ்வுக்குப் போனவர்கள் கொடி பிடிக்க அவர்கள் எந்த தடையும் விதிக்கவில்லையே??????????????...இன்னும் கொஞ்ச நாளில் முழு ஈழமும் சிங்களவன் கைக்குள் போய் விடும்.அப்போதும் கொடிக்காக சண்டை பிடித்துக் கொண்டு இருப்போம்:(

  • கருத்துக்கள உறவுகள்

கொடியேற்றுவது பற்றிய வாதம் நடந்தபோது நானும் அங்குதான் நின்றிருந்தேன். மே 18 தமிழர்களின் இனப்படுகொலையை நினைவுகொள்ளும் தினம். ஆனால் அங்கும் தமது குழு அரசியலை முன்னெடுக்கவே புலிக்கொடியை ஏற்றுவதை ஒரு பிரச்சினையாக்கினார்கள்.

 நல்ல வெயிலாக இருந்தும் வந்த தமிழர்களின் தொகை குறைவாகத்தான் இருந்தது. எனக்குத் தெரிந்தவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே வந்திருந்தனர். அதிகம் தேசியம் பேசும் நண்பர்களைக் காணக்கிடைக்கவில்லை!

அனைத்துக்கட்சி பிரித்தானிய அரசியல்வாதிகள் இந்த வாரம் நடைபெற்ற உள்ளூர், ஐரோப்பிய தேர்தல்களில் தமிழர்களின் வாக்கைப் பெறவேண்டும் என்பதற்காக வழமைபோன்று வந்து சிற்றுரைகளை வழங்கினார்கள். அடுத்த வருடம் நடைபெறவுள்ள பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தல் மே 18க்கு முன்னரே வருவதால் பிரித்தானிய அரசியல்வாதிகள் வருவதற்கான தேவை இருக்காது. புலிக்கொடி ஏற்றுவதைச் சாட்டாக வைத்து அழைப்பை நிராகரிக்கவும் கூடும்.

போய் வந்ததற்கு தலைவரின் படமுள்ள ரீ-சேர்ட் ஒன்று இலவசமாகக் கிடைத்தது. அடுத்த வருடம் போகும் எண்ணமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புலிச்சினம் பொறிக்கப்பட்ட கொடி:TCC மற்றும் BTF இடையே தொடரும் மோதல்

தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டம் இலங்கை அரச பாசிஸ்டுக்களால் முற்றாகத் துடைத்தெறியப்பட்ட பின்னர், உளவாளிகளும் வியாபாரிகளும், கொள்ளைக்காரர்களும் அதனை முழுமையாகக் கையகப்படுத்திக்கொண்டார்கள். இந்தப் பிழைப்புவாதிகள் மக்களின் அவலங்களை விலைப் பொருளாக்கிச் சுருட்டிய பணத்தில் தமக்கெனத் தனியார் படைப்பிரிவுகளைக்கூட உருவாக்கிக் கொண்டனர். தேசியம் என்ற பெயரில் மாபியாக் குழுக்கள் போன்று புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டுவரும் இக்கும்பல்களின் பின்புலத்தில், ஈழப் போராட்டத்தைச் சிறுகச்சிறுக அழித்து இனப்படுகொலை வரை நடத்திச்சென்ற இலங்கை இந்திய ஐரோப்பிய உளவு நிறுவனங்கள் தங்கு தடையின்றிச் செயற்படுகின்றன.

மக்களின் அவலங்களைப்பற்றிப் பேசுவதும், பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதும் இலங்கையில் எவ்வளவு ஆபத்தான பணி என்பது வெளிப்படையான உண்மை. புலம்பெயர் நாடுகளிலும் மக்களை ஏமாற்றிப் பணம்பறித்த மாபியாக் கும்பல்களிடமிருந்து அதே வகையான ஆபத்து காத்திருக்கிறது என்பதை நிராகரிக்க முடியாது.

இலங்கையின் எல்லைக்குள்ளேயே காணப்படாத வங்கதேசக் காடுகளில் மட்டுமே வாழும் புலிச்சின்னத்திற்காக கோட்ப்படுகளற்ற கும்பல்கள் மோதிக்கொள்வது அவமானகரமானது.

வங்க தேச புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை முன்வைத்து எழுந்த சச்சரவு இன்று அறிக்கப் போராக மட்டுமே வெளிப்படுகிறது எனினும் இதன் பின்புலத்தில் பெரும் திருட்டு வர்த்தகக் கும்பல்களின் தலையீடுகள்ன் காணப்படுகின்றன.

பிரித்தானியத் தமிழர் பேரவை(BTF) நடத்திய முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் வங்க தேசப் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடி தொடர்பாக எழுந்த சர்ச்சையின் பின்னர் தமிழர் ஒருங்கிணைபுக் குழு (TCC) வெளியிட்டுள்ள அறிக்கை:

‘அன்பான தமிழ் உறவுகளே.

தனிப்பட்ட யாரையாவது குறை கூறின் அது அவரவர் பிரச்சனையென விட்டுவிடலாம். அவரவர் தமது தர்மத்திற்கேற்ப முடிவையுமெடுக்கலாம். ஆனால் ஒரு அமைப்பைச் சார்ந்தோரெனத் தேர்ந்து குறை கூறின் பதிலளிக்கவேண்டிய நிலையும் பொறுப்பும் அந்த அமைப்பிற்குளது. அந்தவொரு காரணத்தினாலேயே இதனை எழுதுகின்றோம். ஆனால், பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC) ஈழத் தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றையே தம்மூச்சாகக் கொண்டுள்ள மக்கள் அணி. தமிழீழத் தேசியக்கொடி எமது தேசியச் சின்னங்களில் உன்னத இடத்தை வகிக்கும் ஒன்று. எமது மாவீரர்களின் தியாகத்தினாலே உரமேற்றப்பட்டு வருவது. தேசியத்தலைவரினாலே பூசிக்கப்படுவது. 2009 இலே உலக நாடுகளின் நாடாளுமன்றங்களின் முன்னாலே 73 நாட்கள் வரையிலே கவனயீர்ப்பு நிகழ்த்திய வேளையிலே – குறிப்பாகப் பிரித்தானியா போன்ற நாடுகளிலே – இக்கொடியைக் காவற்றுறையினர் எதிர்த்தனர். எமது உறவுகள் அதனைக் கைகளிலே ஏந்துவதற்காகப் பொலிசாரினாலே தாக்கப்பட்டனர். சிறை பிடிக்கப்பட்டனர். வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டனர். ஆனால், பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினையும் தமிழீழத் தேசியக் கொடியினையும் வேறுபடுத்துவதெவ்வாறெனவறிந்த காவற்றுறை எமது தேசியக் கொடிக்கு அனுமதி அளித்தது. நாம் மண்டபங்களினுள்ளேயும் அம்பலத்திலேயும் எமது தேசியம் சார்ந்த நிகழ்ச்சிகளிலே தேசியக் கொடி ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். காவற்றுறையினர் சூழ்ந்துநிற்கப் பிரித்தானிய முன்னணி அரசியற்கட்சி நாடாளுமன்றவுறுப்பினர்களும் எம்மோடிணைந்து மரியாதை செய்ய எமது தேசியக் கொடி உரிய முறையிலே ஏற்றப்படுவதை யாவருமறிவீர். எமது இளைஞரும் யுவதியரும் பல்கலைக்கழகங்களினுள்ளேயும் அவ்வாறே ஏற்றினர்.

முள்ளிவாய்க்காலிலே ஆயிரமாயிரமாய் எமது மக்களும் மாவீரர்களும் தம்மை இக்கொடியின் விடுதலைக்காகவே ஈந்தனர். அவ்வாறான முள்ளிவாய்க்கால் நிகழ்வின் நினைவெழுச்சியின் போது அக்கொடி ஏற்றப்படுவதை எதிர்பார்க்கும் எந்த ஒருவரையும் பிழையானவரென்று யாருங் கருத முடியாது.

இம்முறை நிகழ்ச்சியிலேயும் எமது தேசியக்கொடி ஏற்றப்படமாட்டாது என்ற முடிவிலே பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) உள்ளதாக நாம் அறிந்தோம். எமது ஒருங்கிணைப்பாளர் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டபோதும் அவ்வாறே கூறப்பட்டு அவர்கள் அறிக்கையிலுள்ளவாறே நியாயங்களும் எடுத்துரைக்கப்பட்டன.

பி. த. பேரவையின் மூவருக்கும் எமக்கும் இடையிலே 21.04.2014 அன்று முள்ளிவாய்க்கால் மே 18 நிகழ்ச்சி பற்றிய கூட்டம் நடைபெற்றது. அதிலேயும் தேசியக் கொடியின் முக்கியத்துவம் பற்றிக் காரசாரமான வாதம் நடைபெற்றது. எமக்கு அனுமதி தரும் அதே பொலிசார் அவர்களுக்கு அனுமதி மறுப்பது விந்தையாகவுள்ளது என்பதையும் அவ்வாறான தன்மையை நாம் ஒன்றாகச் சென்று அவர்களிடம் நியாயம் கேட்கவேண்டுமென்றும் அவர்களுக்கு எம்மாலே எடுத்துக் கூறப்பட்டது. தொடங்கிய நிலையிலேயே கூட்டம் முடிவடைந்தது. தாம் பி. த. பேரவையின் செயற்குழுவிலே இதுபற்றிக் கதைப்பதாகக் கூறிச் சென்றனர். பின்னர் எவ்வித மாற்றமுமில்லாத முடிவையே அறிவித்தனர்.

பொதுமக்கள் மனநிலையை நன்கறிந்த த. ஒ. குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி. த. பேரவையின் பொறுப்பாளர்களுடன் தொலைபேசிமூலமாக இதுபற்றி மீண்டும் பேசியுள்ளார். இறுதியாக மே 16 வெள்ளியன்றும் பி. த. பே. யின் பொறுப்பாளரோடு நிலைமைகளை விரிவாகக் கதைத்துள்ளார். 17ம் திகதி சனியன்று நண்பகல் வரையிலும் இதுபற்றிய ஏற்ற முடிவை எதிர்பார்த்திருந்தோம். எந்நிலையிலும் அவர்கள் தம்முடிவிலே உறுதியாகவிருந்தனர்.

பி. த. பேரவையினரின் ஊடக நிகழ்ச்சிகளின் மூலமாக யாவற்றையுமறிந்த இளைஞர்கள் மிகவும் கவலையடைந்தனர். உண்மை நிலையை அறிய எம்மை நாடினர். யாவும் பி. த. பே. இன் முடிவேயென்பதை அறிந்த அவர்களிலே சிலர் தாமும் அவர்களோடு பேசிப் பார்த்தனர். தம்மை ஏற்ற விடுமாறும் பாதகமான விளைவுகளுக்குத் தாமே பொறுப்பாகுவாரெனவும் கேட்டனர் எனக் கேள்வியுறுகின்றோம். எதுவும் பலனளிக்கவில்லை. ஈற்றிலே விரக்தியுற்ற பொதுமக்கள் தாமே முன்வந்து கொடியேற்ற எண்ணினர்.

மே 18 ஞாயிறன்று இலண்டன் ரவல்கர் சதுக்கத்திலே மக்கள் கூடினர். எமது எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வழமையாக வருவது போலவே பொதுமக்கள் பலரும் – அதிலும் குறிப்பாக இளைஞர்கள் – கைகளிலே கொடியேந்தியே வந்தனர். கொடியை ஏற்ற வேண்டுமெனக் குரலெழுப்பி வேண்டினர். அப்போது எமது நிர்வாகப் பொறுப்பாளரும் வேறு சிலரும் பி. த. பே. பொறுப்பாளருக்கு நிலைமையை விளங்கவைத்து ஒத்துப் போகும்படி அறிவுரையும் கூறினர். ஆனால் அவர்கள் மறுத்தனர்.

கூடியிருந்த பொதுமக்கள் 45 நிமிடங்கள் வரையிலே மிகமுயன்றனர். ஒருபுறம் கொடியேற்றுவதற்குரிய ஒழுங்குகளையும் செய்தனர். கொடியை ஏற்ற முறையிலே ஏற்ற வேண்டுமென்பது அவர்களின் ஆதங்கம். ஏற்றவேண்டிய முறையை நன்கு அறிந்தவர்கள் த. ஒ. குழுவினரென்பதை அம்மக்களறிவர். அதனாலே உதவி கோரினர். அவர்களின் நியாயமான ஆதங்கத்தை உணர்ந்தவரும் கொடியேற்றும் முறையை அறிந்தவருமான சிலர் அவர்களுக்குச் சரியான முறையைக் காட்டினர். கொடி பொதுமக்களாலே ஏற்றப்பட்டு நிகழ்ச்சியின் நிறைவுவரை பறந்தது.

இதுவே நிகழ்ந்தவை. உள்ளத்திலே நிறைந்தவை இரண்டு – ஒன்று பி. த. பே. இன் நிலை – அடுத்தது இளைஞரின் தேசியம் சார்ந்த செயற்பாடு.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் தேசியம் சார்ந்த எந்த நிகழ்ச்சிiயும் ஊக்குவிப்பர் என்பதையும் தேசியக் கொடி ஏற்றுவதற்கான பூரண ஒத்துழைப்பை எந்நேரத்திலும் எவருக்கும் வழங்குவதைத் தமது தார்மீகக் கடமைகளிலே ஒன்றாகக் கொண்டவரென்பதையும் இத்தால் உறுதி செய்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’

இவ்வேளையில் 2010 ஆம் ஆண்டு சுஜீத் என்பவர் போரின் பின்னான அவலங்கள் தொடர்பாக நெறிப்படுத்திய குறும்படம் கவனத்தில் கொள்ளத்தக்கது.

http://www.youtube.com/watch?v=266X4uvBSdA

http://inioru.com/?p=40421

முள்ளிவாய்க்கால் மண்ணில் இன அழிப்பிற்காய் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்காக மே 18 கொலண்ட் நாட்டிலும் நினைவு வணக்க நிகழ்வு நடை பெற்றது .இந்த சூழலில் கொலண்டில் தான் எம் மனிதநேய பணியாளர்க்கு அதிக நெருக்கடிகள் பெற்று வரும் இந்த சூழலிலும் பயம் இன்றி , அதே தேசிய உணர்வுடன் ,எம் மக்களை கொலை செய்தவனின் கோரக்குனத்தை மனதில் நிறுத்தி .தமிழீழ தேசியக்கொடியை ஏற்றி அக வணக்கம் மலர்வணக்கம் என சம்பிரதாய முறைப்படி மிக உணர்ச்சி பூர்வமாக இந்த நிகழ்வு நடை பெற்றது ........நெதர்லாந்து அரசாங்கத்தால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அதேவேளை அண்மையில் சிறி லங்கா அரசால் தடை செய்யப்பட்டு பெயர்பட்டியல் இட்ட அனைவரும் முன் நின்று இந்த நிகழ்வை ,வரலாற்று கடமையை நடாத்தினார்கள் ..................

குட்ட குட்ட குனியாமல் .வெட்ட வெட்ட தழைக்கும் பண்புடைய அந்த தில்லை தமிழர்களிடம் [உறவுகளிடம்] கண்டேன் .............நன்றி வணக்கம் 

1-600x450.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.