Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் அடுத்த பொறி சிக்கிய சிங்களமும் அனுசரனையாளரும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலரின் விளக்கங்கள், விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், உண்மையில் நாமெல்லாம் சர்வதேசத்தின் பொறியில் விழுந்து விட்டோம்!!!!!!

பேச்சுவர்த்தை, யுத்த நிறுத்தம், சர்வதேச உதவி மட்டுமல்ல சர்வதேசம் என்ற வார்த்தையின் பின்னனியே சதிதான்!!!!!!!!!!!!!!!

அப்படியாயின் இவ்வலையிலிருந்து மீள முடியுமா என்றால்???????????????

அளவுக்கு அதிகமாக சர்வதேச தொடர்புகளும் எமை மீள முடியாத இக்கட்டான சூழ்நிலைக்குள் கொண்டு செல்லுமே தவிர, சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்க முடியாது!!!!!

ஆனால் போரிடும் இரு பகுதியையும், பலமே தீர்மானிக்கும் சக்தியாக இருப்பது என்பது மறுக்க முடியாத உண்மை!!!!!!

ம்ம்ம்ம்ம்..... இவையெல்லாம் வேதனையான உண்மைகள்!!! உதைக் கதைத்து உண்டியலை கோட்டை விட்டு விடப் போகிறேன்!!! ... என்னத்துக்கும் ஒருக்கால் அவசர அவசரமாக உண்டியலை சித்துச் சுத்தி கும்பிட்டுட்டு வாறன்!!!

ரோகரா......

ஒருவருக்கு நோய் இருக்கிறது அதைக் குணமாக்க வேண்டும் என்று கூறுவதற்கும், வைத்தியரிடமே இந்த நோய்க்கு இந்த மருந்தைக் குடுதால் அது குணமாகும் என்று பரிந்துரை செய்வதற்கும் கனக்க வித்தியாசம் இருக்கிறது.

என்ன நோக்கில் எது எவ்வாறு எழுதப்படுகிறது என்பதை வாசிப்பவர்கள் உயித்து உணர்ந்து கொள்வார்கள். அரசியல் விழிபுணர்வு என்பது அது தான்.ஒரு கருத்து தேசிய விடுதலைப் போராட்டாத்துடன் ஒன்று இணைகிறதா அல்லது அதனைச் சிதைக்க எழுதப்படுகிறாதா என்பதை தமிழ் மக்கள் அடையாளம் காண நன்கு கற்றறிந்துள்ளதாலயே துரோகிகளையும் அவர்களின் உள் நோக்கங்களையும் உடனையே இனங்காணுகின்றனர்.

பலரின் விளக்கங்கள், விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், உண்மையில் நாமெல்லாம் சர்வதேசத்தின் பொறியில் விழுந்து விட்டோம்!!!!!!

பேச்சுவர்த்தை, யுத்த நிறுத்தம், சர்வதேச உதவி மட்டுமல்ல சர்வதேசம் என்ற வார்த்தையின் பின்னனியே சதிதான்!!!!!!!!!!!!!!!

அப்படியாயின் இவ்வலையிலிருந்து மீள முடியுமா என்றால்???????????????

அளவுக்கு அதிகமாக சர்வதேச தொடர்புகளும் எமை மீள முடியாத இக்கட்டான சூழ்நிலைக்குள் கொண்டு செல்லுமே தவிர, சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்க முடியாது!!!!!

ஆனால் போரிடும் இரு பகுதியையும், பலமே தீர்மானிக்கும் சக்தியாக இருப்பது என்பது மறுக்க முடியாத உண்மை!!!!!!

ம்ம்ம்ம்ம்..... இவையெல்லாம் வேதனையான உண்மைகள்!!! உதைக் கதைத்து உண்டியலை கோட்டை விட்டு விடப் போகிறேன்!!! ... என்னத்துக்கும் ஒருக்கால் அவசர அவசரமாக உண்டியலை சித்துச் சுத்தி கும்பிட்டுட்டு வாறன்!!!

ரோகரா......

------------------------------------------------------------------

சும்மா மனசை போட்டு குளப்பிக்கொள்ளதயும் ஜெயதேவன்!

நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் எதிரி Gangக்கு பூசை போட முதல் ஊர் பெரிசுகளை முறைப்படி கண்டு, எதிரி Gangக்கு உதவி ஏதும் வராமல் பார்த்துக்கொள்ளுவோம் இல்லயா? அது மாதிரித்தானெண்டு வைச்சுக்கொள்ளுங்கோவன்... :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[[size=18]size=18]பறவைகள் எழுதியது

தேவன் எழுதியது:

blue]பறவைகள் எழுதியது

தேசியத்தை குத்தகைக்கு எடுத்தவை கதைக்கினம் கேட்டிட்டு இருங்க!

]துரோகத்தனத்தை குத்தகைக்கு எடுத்தவர்களை விடவா இவை களத்துக்கு பாதிப்பு பறவைகளே!

இரண்டாலும் யாழ் களத்துக்கு பாதிப்பு அல்ல, ஏனென்றால் இரண்டும் களத்தை வளர்க்கும்,

ஆனால், போர் களத்தில் பாதிப்பு உண்டு, அதிமேதாவி ஆய்வுகளால்!--------------------------------------------------------

[color=red]அட சொல்லவேயில்லையே புலிஎதிர்ப்புதேசியவாதத்திட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவன்

ஜெனிவாவிலை துணைக்குழுக்களின் ஆயுதங்களைக் களையுறம் எண்டு ஒத்துக்கொண்ட அரசு ஈபிடிபி, புளட் கருணா கும்பல் போன்ற வற்றின் ஆயுதங்களைக் களைந்து விட்டது. அயுதங்களைக் களைய சர்வதேச சமூகம் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்து பேச்சில் ஒப்புக்கொண்டபடி அரசை செய்ய வைத்து விட்டது.

அதேபோல ஆக்கிரமிக்கப்பட்ட சம்புூரையும் விடுவிக்குமாறு ஒஸ்லோவில் போய் சொல்ல இராணுவம் விட்டுட்டுப் போய் விடுமாக்கும். அதனைச் செய்ய சர்வதேச நாடுகள் அணிதிரண்டு வந்து அழுத்தம் கொடுக்குமாக்கும். :?:

சும்மா இரும் ஐசே,

அரைகுறையாக் கதைக்கப் போயே துரோகிப்பட்டம் வேண்டுறம். இதுக்க முழுக்கக் கதைக்கவோ?

உமக்குத் துணிவிருந்தால் சொல்லும் பாப்பம் ஏன் புலிகள் நிபந்தனையற்ற பேச்சுக்குப் போகினம் எண்டு. :) :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா இரும் ஐசே,

அரைகுறையாக் கதைக்கப் போயே துரோகிப்பட்டம் வேண்டுறம். இதுக்க முழுக்கக் கதைக்கவோ?

உமக்குத் துணிவிருந்தால் சொல்லும் பாப்பம் ஏன் புலிகள் நிபந்தனையற்ற பேச்சுக்குப் போகினம் எண்டு. :) :cry:

:( :mrgreen: :smile2:

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர்,

அதெல்லாம் சரி,

ஆனா ஒவ்வொரு கட்டத்திலயும் தங்களை புலிகளின் பேச்சாளராகக் கருதிக்கொண்டு இங்கு நர்த்தனமாடுபவர்களைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

இந்தா சிங்களவனுக்கு அடியைப்பார், இந்தா திருகோணமலை விழுகுது பார், இந்தா யாழ்ப்பாண அடியைப் பார், இனி பேச்சுக்கே இடமில்லை எண்டு யாழ்க்களத்தில பறைஞ்சு திரிஞ்சவை குறித்து என்ன சொல்லிறியள்?

இப்ப தாங்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக நடக்கேக்கயும் அதை வைத்து அடுத்த புலம்பல் தொடங்கீட்டினம்.

புலிகளின்ர நகர்வுக் இருக்கட்டும், சம்பூரைவிட்டு படையினர் விலக வேண்டுமென்பதை நோர்வேயில் போய்ச் சொல்வது இன்னும் பலன் தருமென்ற கணிப்பில் எனக்கு உடன்பாடே.

ஆனால் இவர் வன்னிமைந்தன் (இவர் போன்ற மற்றவர்களும்) கடந்த ஒரு மாதத்தில் எழுதியவைகளைப் பாருங்கள், இப்போது எழுதுவதைப் பாருங்கள்.

கண்டபடி இராணுவ அரசியல் ஆய்வுகளை எழுதுவதை நிறுத்துவது எல்லாருக்கும் நன்று.

இப்ப நல்லவன் உங்களுக்கு என்ன பிரச்சனை? புலிகளுக்குத் தோல்வி! ஆகவே புலிகளை நம்பத் தேவையில்லை என்ற பாணியில் சொல்கின்றீர்களா?

எல்லா வேலையையும் உங்களுக்குச் சொல்லிப் போட்டுத் தான் செய்ய வேண்டும் என்று அடம்பிடிப்பது நன்றாக இல்லை :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ தூயவன்,

நானெங்க அப்பிடிச் சொன்னனான். புலியை நம்பாமல் வேற ஆரை நம்பிறது?

வன்னி மைந்தன் எண்ட பேரில அரசியல் இராணுவ ஆய்வுக்கட்டுரைகள் எழுதினவரோடையெல்லோ நான் கதைச்சனான்.

எதுக்கெடுத்தாலும் பொறி, கண்ணி எண்டு கட்டுரை வடிக்கிறதைத்தான் குறை சொன்னன்.

சிங்களவன் முட்டாள், அவனுக்கு மேல்வீடு காலி எண்டு நக்கலடிச்சுத் திரிஞ்சம். இண்டைக்கு வரலாறு தந்த பாடம் என்ன?

எதிரியை இளக்காரமா நினைச்சுக்கொண்டு செய்ய வேண்டியதுகளைச் செய்யாமல் விட்டிட்டோமோ எண்டு நினைக்கிறன்.

பொறுங்கோ உங்களுக்குப் பிடிச்சமாதிரி மின்னலுக்கு இன்னொரு பதில் குடுத்திட்டு வாறன்.

_______________________

மின்னல்,

அது ஜெனிவாவில நடந்த பேச்சுவார்த்தை,

இது நோர்வேயில நடக்கப்போறது.

ஜெனிவாவில பேசின படியாத்தான் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றச் சொல்லி சர்வதேசம் அழுத்தம் குடுக்கேல.

இப்ப பாருங்கோவன் விளையாட்டை. நோர்வேல நடக்கப்போற (நடந்தால்) பேச்சு முடிய சிறிலங்கா அரசுக்கு விழப்போற டோசில, சம்பூரை மட்டுமில்லை, கிளாலிப் பக்கம் முன்னேறி நிக்கிற இடத்தையும் விட்டிட்டு ஓடப்போறாங்கள்.

________________________

இப்ப திருப்தியோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒரு விடயம் குறித்து நாங்கள் மறந்து விடுகின்றோம். போராளியமைப்பு ஒன்றுக்கும், அரசாங்கத்துக்கும், ஒரே மாதிரியான வெளிப்பாட்டை உலகநாடுகளால் காட்ட முடியாது என்பதை!

முக்கியமாக ஒரு அரசினை வெளிப்படையாக எல்லா விடயத்திற்கும் கண்டிக்க முடியாது. அது அந்த நாட்டின் இறைமையில் குறுக்கிடுவது போலாகும். ஆனால் போராளியமைப்புக் குறித்து அவ்வாறில்லை.

பொருளாதாரரீதியாக இலங்கையரசு, வெளிநாடுகளை நம்பியிருக்கின்றது. புலிகள் அவ்வாறு அல்ல. எனவோ பொருளாதார அமைப்புரீதியாக இரண்டுக்கும் மாறுபட்ட செய்கையே செய்தாக வேண்டும்.

புலிகளைத் தடை செய்தது போல, இலங்கையரசைத் தடை செய்ய முடியாது. ஏனென்றால், ஜநாவால் அங்கிகரிக்கப்பட்ட, ஒரு நாட்டைத் தடை செய்வது என்பது, பொருளாராதரீதியில் மட்டுமல்ல, சம்பந்தமில்லாத பிரச்சனைக்காக மூக்கை நுழைத்தல் போலாகும்.

புலிகள் மீது ஆயிரம் குற்றச்சாட்டை விதிப்பதிலும் பார்க்க, இலங்கையரசு மீது இரண்டு வார்த்தைகளைப் பிரயோகிப்பது வலிதானது. உண்மையில் அது இலங்கையரசுக்கான அவமானமாகும்.

இன்று புலிகள் சமாதானத்துக்கு தயார் என்றால், இலங்கையரசும் சம்மதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது கூட, இலங்கையரின் மீதான அழுத்தம் மட்டுமல்ல, அது தன் நிலையைத் தொலைத்து விட்டதற்கான அடையாளமே!

------------------------------------------------------------------------------------

சவால்கள் வந்தால் அதைச் சந்திக்க வேண்டியதே எம் தேவை! எமக்குச் சம்பந்ததே இல்லை என்று ஓடுபவர்கள் துணிவற்றவர்கள். தமிழீழத்துக்கு எவ்வாறன திருத்தங்கள் வேண்டும் என்று ஆலோசனை கூறுவதில் தப்பில்லை. ஆனால் ஆலோசனை என்ற போர்வையில், கேலியும், கிண்டலையும் செய்வது பொருத்தமானது அல்ல!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவன் எழுதியது.

ஐயோ தூயவன்,

நானெங்க அப்பிடிச் சொன்னனான். புலியை நம்பாமல் வேற ஆரை நம்பிறது?

வன்னி மைந்தன் எண்ட பேரில அரசியல் இராணுவ ஆய்வுக்கட்டுரைகள் எழுதினவரோடையெல்லோ நான் கதைச்சனான்.

எதுக்கெடுத்தாலும் பொறி, கண்ணி எண்டு கட்டுரை வடிக்கிறதைத்தான் குறை சொன்னன்.

சிங்களவன் முட்டாள், அவனுக்கு மேல்வீடு காலி எண்டு நக்கலடிச்சுத் திரிஞ்சம். இண்டைக்கு வரலாறு தந்த பாடம் என்ன?

எதிரியை இளக்காரமா நினைச்சுக்கொண்டு செய்ய வேண்டியதுகளைச் செய்யாமல் விட்டிட்டோமோ எண்டு நினைக்கிறன்.

பொறுங்கோ உங்களுக்குப் பிடிச்சமாதிரி மின்னலுக்கு இன்னொரு பதில் குடுத்திட்டு வாறன்.

ஐயோ நல்லவா!

உங்கட புத்திசாலித்தனத்திடம் புலிகளின் புத்திசாலித்தனம் குட்டுவாங்குவதைப்பார்த்தால

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்.... பல பிழை சரிகள் உள்ளனதான், மறுப்பதற்கில்லை! மறைப்பதற்கில்லை!!!! ஆனால் .....

.... "இந்த மயான அமைதிக்குப் பின் ஒரு பூகம்பம் வர இருப்பதை எல்லோரும் உணர வேண்டும்" ..... :idea:

மின்னல்,

அது ஜெனிவாவில நடந்த பேச்சுவார்த்தை,

இது நோர்வேயில நடக்கப்போறது.

ஜெனிவாவில பேசின படியாத்தான் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றச் சொல்லி சர்வதேசம் அழுத்தம் குடுக்கேல.

இப்ப பாருங்கோவன் விளையாட்டை. நோர்வேல நடக்கப்போற (நடந்தால்) பேச்சு முடிய சிறிலங்கா அரசுக்கு விழப்போற டோசில, சம்பூரை மட்டுமில்லை, கிளாலிப் பக்கம் முன்னேறி நிக்கிற இடத்தையும் விட்டிட்டு ஓடப்போறாங்கள்.

அப்ப நோர்வேயிலை பேசுறபடியால் உலக நாடுகள் எல்லாம் சம்புூருக்கும் கிளாலிக்குமு; வந்து இராணுவத்தை விரட்டி அடிக்கும் என்கிறீர்கள்?

அப்ப வேறை ஏதாவது இடமிருந்தால் சொல்லுங்கள் யாழ்ப்பாணம் பலாலி என எல்லாத்தையும் விட்டுவிட்டு சிங்கள இராணுவம் ஓடுவதற்கு சர்வதேச நாடுகள் டோஸ் விடுமென்றால் அங்க போய் புலிகள் பேசட்டும்.

சிங்களவன் முட்டாள்' date=' அவனுக்கு மேல்வீடு காலி எண்டு நக்கலடிச்சுத் திரிஞ்சம். .[/color']

தமிழனை எப்படி எப்படியெல்லாம் ஒடுக்க முடியுமோ அப்படி அப்படியெல்லாம் திறமையாகச் செயற்பட்டு சிங்களவன் ஒடுக்கிக் கொண்டே வருகிறான்.

ஒப்பீட்டளவில் பார்க்கப்போனால் சிங்களவனை விட நாமே முட்டாள்கள்.

கொலை செய்பவன் எல்லாம் கெட்டிக்காரன் என்றால், பின்லாடன் பெரிய கெட்டிக்காரன். ரெண்டு கட்டத்தை அப்படியே இறக்கி விட்டானே. :D:):lol:

கொலை செய்பவன் எல்லாம் கெட்டிக்காரன் என்றால், பின்லாடன் பெரிய கெட்டிக்காரன். ரெண்டு கட்டத்தை அப்படியே இறக்கி விட்டானே. :lol::lol::lol:

உண்மையிலேயே அவன் தொறமையானவந்தான்....!

இலங்கையில் பொதுமக்கள் செத்தால் அரசு செலவளிப்பது இல்லை... இராணுவத்தினர் செய்த்தால்த்தான் பல்லாயிரக்கணக்காக இளப்பீடு கொடுக்கிறது....!

ஆனால் அமெரிக்கா இலங்கைப்பணத்தில் கோடிக்கணக்கில் பொதுமக்களுக்காய் செலவளிக்கிறது...! அதுதான் பின்லேடன் இராணுவம் எண்டால் என்ன இல்லை அமெரிக்கன் எண்டால் என்ன எல்லாரையும் கொல்கிறான்.... யார் செத்தாலும் இளப்பு அமெரிக்காவுக்குத்தான்...

இப்ப பாருங்கோவன் விளையாட்டை. நோர்வேல நடக்கப்போற (நடந்தால்) பேச்சு முடிய சிறிலங்கா அரசுக்கு விழப்போற டோசில, சம்பூரை மட்டுமில்லை, கிளாலிப் பக்கம் முன்னேறி நிக்கிற இடத்தையும் விட்டிட்டு ஓடப்போறாங்கள்.

பேச்சு வார்த்தை நடக்காது போல கிடக்கு. வன்னி மைந்தன் அதையும் பொறி எண்டு தான் எழுதப் போறார். எல்லாமே ஏற்கனவே தயாரிக்கப் பட்ட நிகழ்ச்சி நிரல் படி கச்சிதமா நடந்து கொண்டிருக்கு.

இதிலிருந்து நீங்கள் முட்டால் என்றுதெரிகிறது.ஈழவிடுதலை போரின் வரலாறுகளை என்ன மறந்துவிட்டீர்களா.போராட்டம் என்பது ஒரு அரசு செய்வது போல எடுத்தோம் கவுத்தோம் என செய்யமுடியாது அதற்கு என சில அழுத்தங்கள் இருக்குது.தெரிந்தோ தெரியாமலோ நாம் சர்வதேச வலைக்குள் விழுந்துவிடோம் ஆக எம் போராட்டத்தின் முனைகளை காலத்துக்குகாலம் தீட்டித்தான் ஆகவேண்டும்.பொறிக்குள் அம்பிட்ட எலிபோல சிங்களம் துடிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.ஓரிருநாள் வேலை இல்லையெண்டாலே யோசிக்கும் நாங்கள் 30 வருடங்களாக அழுத்தங்களுக்கும் யோசனைகளுக்கும் நடுவில் எமக்காக போராடும் மாவீரன் பிரபாகரன் அவர்களின் சூழ்நிலைகளையும் புரிந்து கொள்ளவேண்டும் நானும் முதல் இவ்வாறான கருத்துக்களை எழுதியவன் தான் பின்னர் என்னை யாழ்கள உறவுகள் பக்குவபடுத்திவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்

இணைத்தலைமை நாடுகள் போட்ட குண்டு

-அருஸ் (வேல்ஸ்)-

'சம்பூரை கைப்பற்றி கேக் வெட்டி கொண்டாடியாகி விட்டது. தற்போது படையினர் ஆனையிறவை நோக்கி முன்னேறி வருகின்றனர். ஏறத்தாழ 1,500 புலிகள் இதுவரை நடந்த தாக்குதல்களில் பலியாகி விட்டனர். கைப்பற்றிய இடங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் மேலும் புலிகளின் பிரதேசங்களை கைப்பற்றுவோம்" இது சிங்கள மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்குமான அரசினதும் அரசவை பேச்சாளர்களினதும் அறிவித்தல்கள். 'அரசு பேச்சுக்களை நடத்த தயாராக உள்ளது. சர்வதேச சமூகம் புலிகளை பேச்சு மேசைக்கு அழைக்க வேண்டும்" இது சர்வதேச சமூகத்திற்கான அரசினதும் அரசவை பேச்சாளர்களினதும் அறிவித்தல்கள்.

அரசின் குண்டு வீச்சுக்களினாலும் திட்டமிட்ட படுகொலைகளினாலும் அழிக்கப்படும் அப்பாவி தமிழ் மக்களும் புலிகளின் கணக்கில் தான் சேர்க்கப்படுகிறார்கள். இவை எதை காட்டுகின்றன இராணுவத்தீர்வு மீது அரசு கொண்டுள்ள நாட்டத்தையும், அரசியல் தீர்வு என்பது உலகை ஏமாற்றும் செயல் என்பதையும் தானே. அதாவது அரசை பொறுத்த வரை சர்வதேச சமூகத்தை முட்டாள்களாகவும், தன்னை அதி புத்திசாலியாகவும் கருதுதித்தான் நடந்து வந்துள்ளது.

1980-களில் சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் தான் தற்போதும் பின்பற்றப்படுகின்றன. ஆனால் உலகம் இன்டர்நெட், சற்லைட் தொலைத்தொடர்பு என சுருங்கிவிட்டதை மறந்துவிட்டது அரசு. முன்னைய காலங்களை போல அரச அட்டூழியங்களை இலகுவில் மறைக்க முடியாது பல நூறு இணையத்தளங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் அம்பலப்படுத்திவிடும்.

இந்நிலையில் தான் கடந்த 12 ஆம் நாள் கூடிய இணைத்தலைமை நாடுகள் அரசும் புலிகளும் நிபந்தனை அற்ற பேச்சுக்களுக்கு தயாராக உள்ளதாகவும், பேச்சுக்கள் எதிர்வரும் ஐப்பசி மாத முற்பகுதியில் நடைபெறும் என அறிவித்துள்ளதுடன் அரசுக்குரிய நிதியுதவியையும் அமைதி முயற்சிகளின் முன்னேற்றத்தை பொறுத்து வழங்குவதாகவும் கூறியுள்ளன.

சிங்கள அரசை பொறுத்த வரை அதன் 25 பில்லியன் டொலர் பொருளாதாரத்தில் இந்த உதவி கணிசமான தொகை. இது அரசுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விடயம். அரசின் பாதுகாப்பு அமைச்சு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தகவல் தருகையில் இணைத்தலைமை நாடுகளின் அறிக்கையை அறிந்த மகிந்த கோபமும், அதிர்ச்சியும் அடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த அதிர்ச்சியில் அர்த்தமில்லை ஏனெனில் கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் நாள் இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்களுடன் நடந்த சந்திப்பில் அரசு பேச்சுக்குத் தயாராக இருப்பதாக மகிந்தவே கூறியிருந்தார். அதை சில வேளைகளில் மகிந்த மறந்திருக்கலாம். ஆனால் அதை நம்பியே இணைத்தலைமை நாடுகளின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிர்ந்து போன அரசு நிபந்தனையற்ற பேச்சு ஏற்கமுடியாதது என அறிவித்துள்ளது.

உதட்டில் பேச்சுக்கான அழைப்பையும், செயலில் இன அழிப்பையும் மேற்கொண்டு வந்த அரசின் இரட்டை முகத்தை இணைத்தலைமை நாடுகளின் அறிவிப்பு மிக இலகுவாக அடையாளம் காட்டும் என்பதில் ஐயமில்லை.

இந்த நிபந்தனையற்ற பேச்சுக்கு முன் அரசு கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகள் பல உண்டு. போர் நிறுத்தம் இரு தரப்பாலும் மீறப்பட்டாலும் அரசின் செயற்பாடுகள் போர்நிறுத்த வரைமுறைகளை முற்று முழுதாக சிதைத்துள்ளது. அதாவது 2002 இல் மேற்கொள்ளப்பட்ட புலிகளின் நிலைகளுக்கும் படையினரின் நிலைகளுக்கும் இடையிலான எல்லைக்கோடுகளே மாற்றமடைந்துள்ளன.

பேச்சுக்களுக்கு முன்னர் போர்நிறுத்தம் முழுமையாக பேணப்பட வேண்டும். இதைத் தான் புலிகள் ஜெனீவாப் பேச்சில் இருந்து வலியுறுத்தி வந்துள்ளார்கள். போர்நிறுத்தத்தை முழுமையாக பேண வேண்டும் எனில் அரசுக்கு முன்னுள்ள பணிகள் ஏராளம் அவற்றில் முக்கியமான சில.

ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்.

அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும்.

தமிழர் பிரதேசங்கள் மீதான பொருளாதார, பயணத்தடைகள் நீக்கப்படவேண்டும்.

தமிழ் மக்களின் மீதான படுகொலைகள், அழுத்தங்களை நீக்கி இயல்பு நிலையை தோற்றுவிக்க வேண்டும்.

இவை நிபந்தனைகள் அற்ற நடைமுறைகள் என்பதுடன் இதை யாரும் நிபந்தனைகள் எனவும் வாதிட முடியாது.

நடுநிலமை அற்ற ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கண்காணிப்புப் பணியை செய்யமுடியாது என்பதை உலகு எப்படி மறுக்க முடியாது திணறியதோ. அதே போலவே போர்நிறுத்தத்தை அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் நிபந்தனையாக கொள்ள முடியாது.

இதில் சங்கடமானது ஆக்கிரமித்த சம்பூர், மாவிலாறு பகுதிகளில் இருந்து அரச படைகள் வெளியேற வேண்டிய நிலை தான். சம்பூரில் போர்நிறுத்தத்தை கேடயமாக்கி புலிகளால் தந்திரோபாய ரீதியில் வெளியேறிய இடங்களை ஏறத்தாழ 6,000 படையிரை கொண்டு அரசு ஆக்கிரமித்து இருந்தது.

ஆனால் அரசின் பிரச்சாரம் எதிர்மறையானது, அதாவது தாங்கள் வெற்றிகரமாக சம்பூரை கைப்பற்றி விட்டார்கள் என்றும், கடந்த சில மாதங்களாக நிகழ்ந்த சமர்களில் போரிடும் வலுவுள்ள 2,000 புலிகளில் படையினர் 1,500 புலிகளை கொன்று விட்டார்கள் என்றும் தேவை ஏற்படின் ஆனையிறவையும் கைப்பற்றிவிடுவோம் என்றும் அரசவை பேச்சாளர்களால் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஆனால் இந்த பிரச்சாரத்தை நம்பிய சிங்கள மக்களின் உள்ளக்கிடக்கை எப்படிப்பட்டது? புலிகளை முற்றாக முறியடித்து வெற்றியை நோக்கி முன்னேறும் அரசு ஏன் நிபந்தனையற்ற பேச்சுக்கு போக வேண்டும் என்பதாக தான் இருக்கும்.

அரசால் தூண்டப்பட்ட சிங்கள பேரினவாதிகளை மீறி அரசு எவ்வாறு பேச்சுக்கு செல்லப்போகிறது. புலிகளாக பேச்சுக்களை முறித்து விடுவார்கள் அல்லது அரச படைகளின் தாக்குதல்களுக்கு பதிலடியான தாக்குதல்களில் பெருமளவில் போராளிகளை இழந்து விடுவார்கள் என நம்பிய அரசுக்கு இரண்டுமே நிகழ்வில்லை என்பது பலத்த ஏமாற்றமே. மாறாக நோர்வேயின் கையில் இருந்த பந்தும் தற்போது அரசின் கையில் உள்ளது.

கடந்த மாதம் திருமலை மற்றும் முகமாலையில் அரசினால் தொடுக்கப்பட்ட வலிந்த தாக்குதலுக்கு பதிலடியாக புலிகளும் பெருமளவு பிரதேசங்களை கைப்பற்றி இருந்தால் தற்போது அரசு கண்ணை மூடிக்கொண்டு நிபந்தனை அற்ற பேச்சுக்கு சம்மதித்து இருக்கும்.

எரிபொருள் விலை உயர்வு அதனை ஒட்டிய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அன்னிய முதலீடுகளின் இழப்பு, உதவி வழங்கும் நாடுகளின் தயக்கம், அதிகரித்த பாதுகாப்புச் செலவு என நெருக்கடிக்குள் சிக்கிய அரசு சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்ப கையில் எடுத்தது போர்நிறுத்த காலத்தில் தேவையற்ற காரணங்களை கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பும், ஆக்கிரமிப்புப் போரையும் தான். அதாவது இனவாத்தின் மூலமே சிங்கள மக்களை திருப்திப்படுத்த முனைந்துள்ளது.

எனவே இனவாத்தில் மூழ்கிப்போயுள்ள அரசு 2002 இல் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தத்தை கடைப்பிடித்து நிபந்தனையற்ற பேச்சுக்கு வரப்போவதில்லை. ஆனால் அரசை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவரும் பொறுப்பு சர்வதேச சமூகத்திடம் தான் உண்டு. ஓவ்வொரு தடவையும் புலிகள் மீது தடைகளைப் போடும் போது சர்வதேச சமூகம் கூறும் காரணம் புலிகளை சமாதான வழிக்கு கொண்டு வருவதற்கே என்பதாகும். ஆனால் தற்போது சமாதானத்திற்கு உரிய அத்தனை வழிகளையும் மூடியுள்ள அரசை அதன் பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிட்டு அமைதி வழிக்கு கொண்டுவர எத்தகைய அழுத்தங்களை பிரயோகிக்கப் போகின்றன?.

போர் நிறுத்த காலத்தில் பலநூறு தமிழ் மக்களை படுகொலை செய்து, பல மில்லியன் ரூபாய் பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துக்களை அழித்து, 12,000-க்கும் மேற்பட்ட மக்களை இந்தியாவிற்கும், இரண்டு லட்சம் மக்களை உள்ளுரிலும் இடம்பெயர செய்த அரசின் செயல்களை புலிகள் பெறுமையுடன் சகித்துக்கொண்டு இருப்பதற்கு ஒரே காரணம் நோர்வேயின் கைகளில் இன்னமும் தொங்கிக்கொண்டு நிற்கும் சமாதான முயற்சிகள் தான்.

இது தான் சர்வதேசத்திற்கானத்திற்கான இறுதிச் சந்தர்ப்பமாகவும் இருக்கும். இணைத்தலைமை நாடுகள் இந்த சந்தர்ப்பத்தை எவ்வாறு பயன்படுத்த போகின்றன? தேவை ஏற்படின் அரசு மீது அழுத்தங்களையோ அல்லது தடைகளையோ பிரயோகிக்க போகின்றனவா? இதன் மூலம் அரசு வன்முறைகளை கைவிட்டு போர்நிறுத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி பேச்சு மேசைக்கு வருமா? என்பதில் தான் நோர்வேயின் நான்கரை வருட முயற்சி தங்கியுள்ளது.

முக்கியமாக புலிகள் பலவீனமாகி விட்டார்கள் சம்பூர் ஆக்கிரமிப்புடன் இராணுவம் வலுவில் மேலோங்கியுள்ளது என்ற அரசின் பொய்யான தகவல்கள் சர்வதேசத்தில் எடுபடவில்லை என்பதே இணைத்தலைமை நாடுகளின் அறிவிப்பின் பொருள். ஆகவே தான் 1995 இல் சந்திரிகா தொடுத்த போரின் போது மௌனமாக இருந்தது போல தற்போது அவர்கள் இருக்க முயற்சிக்கவில்லை.

ஏன் புலிகள் மூதூரிலும், அல்லைப்பிட்டியிலும் சமரை முடித்துக்கொண்டு வெளியேறினார்கள்? ஏன் சம்பூரிலும், மாவிலாறிலும் இருந்து தந்திரமாக வெளியேறினார்கள்? என்பவற்றிற்கான அர்த்தம் அரசிற்கும், சிங்கள பேரினவாதிகளுக்கும் தற்போது புரிந்திருக்கும். இருந்த போதும் ஒரு பெரும் போருக்கு முந்திய இறுதி முயற்சியாகவே இணைத்தலைமை நாடுகளின் இந்த முயற்சி நோக்கப்படுகின்றது என்பதுடன், அரசின் அமைதி முயற்சி தொடர்பான பொய்யான அறிக்கைகளின் மீது வீழ்ந்த குண்டு; போன்றதே இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை என்றால் மிகையாகாது.

http://www.tamilnaatham.com/articles/2006/...ep/arush/16.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா ஈழவன்,

சிங்களவன் முட்டாள் எண்டு சொல்ல வாறியளோ?

எதிர்பார்த்ததை விட மகிந்த கச்சிதமாகத்தான் காய்களை நகர்த்தி இன்னுமின்னும் தமிழர் தரப்பை இக்கட்டுக்குள்ள கொண்டு வந்திருக்கிறார்; அது அரசியல் எண்டாலும் சரி, இராணுவ வழிமுறை எண்டாலும் சரி.

சிங்கள அரசு இனவாத அரசாகவும், கடும்போக்காளராகவும் சர்வதேசத்தால் அடையாளங் காணப்பட்டிருக்கலாம். ஆனால் சிங்களவன் தான் நினைச்சதை அடைஞ்சு கொண்டுதான் இருக்கிறான். ஆராவது சிங்கள அரசுக்குக் குடுக்கிற உதவியை நிறுத்தினவையோ?

அதைவிட மறுபக்கத்தில இன்னுமின்னும் பன்னாட்டு அழுத்தங்கள் அதிகரிச்சுக்கொண்டிருக்கு. இதெல்லாம் கடும்போக்கு அரசாங்கம் வந்தபிறகுதான். இண்டைக்கு புலத்தில நிதிசேகரிப்பு உட்பட பல வேலைத்திட்டங்களுக்கு இருக்கிற நெருக்கடி சாதாரணமான விசயமா? எவ்வளவு காலத்துக்கு இந்த நிலைக்குள்ள தமிழர் போராட்டம் தாக்குப்பிடிக்கலாம்? கடந்த நாலு மாதத்தில் புலிகள் தற்காப்புக்காக மட்டும் பாவித்த வெடிபொருட்களின் தொகையைப் பார்த்தால் அது பெரியதொரு நிலமீட்பைச் செய்யக்கூடிய நடவடிக்கைக்குரிய தொகையாக இருக்கும்.

மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு வலைவிரித்து அதற்குள் ஈழ ஆதரவாளரையும் முன்னணிச் செயற்பாட்டாளரையும் விழவைத்து மேற்குலத் தாதா கைது செய்துள்ளது. இது தொடர்ச்சியான புல நடவடிக்கையில் நிச்சயம் கணிசமான தாக்கத்தைத் தரும்.

அதுக்காக எங்களைத் தடை செய்தவங்களெல்லாம் யோக்கியன் எண்டு சொல்ல வரேல. அல்லது வேற ஆரும் ஆட்சிக்கு வந்திருந்தால் தடை செய்திருக்க மாட்டாங்கள் எண்டு சொல்ல வரேல.

ஆனா நாங்கள் முட்டாள் எண்டு சொல்லிக்கொள்ளிற எதிரியை அரவணைச்சுக்கொண்டு தான் இவ்வளவு தமிழர் தரப்புக்கு மேல நடக்குது.

இது சமாதானப் பொறியில இருந்து வெளிவாற கடைசிக்கட்டம். ஆனா மிகப்பிரச்சினையான கட்டமும் இதுதான். தெளிவாகவே பெரிய நெருக்கடிக்குள்ளதான் தமிழர் போராட்டம் நிக்குது. இதுக்குள்ளபோய் பொறி கிறி எண்டு படம் காட்டிக்கொண்டு நிக்கிறதைத் தான் நான் விமர்சிக்கிறன்.

இண்டைக்கு, நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை எண்டதுக்கு புலிகள் தரப்பிலியிருந்து மறுப்பு வந்திருக்கு. அப்ப "பொறி"க்கு என்ன நடந்தது எண்டு வன்னி மைந்தன்தான் சொல்ல வேணும்.

என்ர கருத்து இதுதான். சும்மா விசிலடிச்சான் குஞ்சுகள் மாதிரி, எதிரியை இளக்காரமாகச் சொல்லிக்கொண்டும், எடுத்ததுக்கெல்லாம் பொறி கறி எண்டு புளுகிக்கொண்டும் இருக்கிறதை நிப்பாட்டுறது நல்லது.

புலிகள் தாக்குதல் நடத்தும்போது இந்தா அது பிடிபடுது இது பிடிபடுது எண்டு பெரிய பில்ட்-அப் குடுக்கிறது, அந்த நேரம் ஆராவது 'உது நிலமீட்புச் சண்டையில்லை' எண்டு சொன்னா அவனைத் திட்டிறது, பிறகு புலிகள் தாம் திட்டமிட்ட மாதிரியே பின்வாங்கி வந்தபிறகு, அது ஒரு பொறி எண்டு எழுதிறது.

இதுதானே இஞ்ச நடக்குது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின்னல்,

உமக்கு அந்தப் பதிலிலயே விளக்கம் வந்திருக்க வேணும்.

அதுக்குப்பிறகும் விளக்கம் கேக்கிறது சரியில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவன் எழுதியது.

ஐயா ஈழவன்,

சிங்களவன் முட்டாள் எண்டு சொல்ல வாறியளோ?

எதிர்பார்த்ததை விட மகிந்த கச்சிதமாகத்தான் காய்களை நகர்த்தி இன்னுமின்னும் தமிழர் தரப்பை இக்கட்டுக்குள்ள கொண்டு வந்திருக்கிறார்; அது அரசியல் எண்டாலும் சரி, இராணுவ வழிமுறை எண்டாலும் சரி.

சிங்கள அரசு இனவாத அரசாகவும், கடும்போக்காளராகவும் சர்வதேசத்தால் அடையாளங் காணப்பட்டிருக்கலாம். ஆனால் சிங்களவன் தான் நினைச்சதை அடைஞ்சு கொண்டுதான் இருக்கிறான். ஆராவது சிங்கள அரசுக்குக் குடுக்கிற உதவியை நிறுத்தினவையோ?

ஐயா நல்லவா!

உங்கட மேதாவிதனத்தை கடைபோடுவதற்க்கு ஒரு சந்தர்ப்பம் தரவேண்டாமோ அதுதான் புலிகளின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு காரணமோ என்று எனக்கு சந்தேகமாய் இருக்குது.

நல்லவன் எழுதியது.

ஐயா ஈழவன்,

சிங்களவன் முட்டாள் எண்டு சொல்ல வாறியளோ?

எதிர்பார்த்ததை விட மகிந்த கச்சிதமாகத்தான் காய்களை நகர்த்தி இன்னுமின்னும் தமிழர் தரப்பை இக்கட்டுக்குள்ள கொண்டு வந்திருக்கிறார்; அது அரசியல் எண்டாலும் சரி, இராணுவ வழிமுறை எண்டாலும் சரி.

சிங்கள அரசு இனவாத அரசாகவும், கடும்போக்காளராகவும் சர்வதேசத்தால் அடையாளங் காணப்பட்டிருக்கலாம். ஆனால் சிங்களவன் தான் நினைச்சதை அடைஞ்சு கொண்டுதான் இருக்கிறான். ஆராவது சிங்கள அரசுக்குக் குடுக்கிற உதவியை நிறுத்தினவையோ?

ஐயா நல்லவா!

உங்கட மேதாவிதனத்தை கடைபோடுவதற்க்கு ஒரு சந்தர்ப்பம் தரவேண்டாமோ அதுதான் புலிகளின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு காரணமோ என்று எனக்கு சந்தேகமாய் இருக்குது. :lol::D:D:D:D:lol:

15.08.06

பேச்சுவார்த்தைக்கு காரணம் பலமா? பலவீனமா?

விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் பேச்சுவார்த்தை நடப்பதற்கான சாத்தியங்கள் குறைந்து கொண்டே வருகின்றன.

விடுதலைப்புலிகள் உண்மையிலியே பேச்சுவார்த்தைகளில் பங்கு கொள்வதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலைகளை உருவாக்கும்படி சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்ற விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கு எவ்வித முன்னிபந்தனைகளையும் விதிக்கவில்லை. ஆனால் சிறிலங்கா அரசு தரப்பு பேச்சுவார்த்தைக்கு நிபந்தனைகளை விதித்துள்ளது

வன்முறைகளை கைவிடுவதாக தமிழீழத் தேசியத் தலைவர் உத்தரவாதக் கடிதம் தரவேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது. ஆயதங்களை கீழே வைக்க வேண்டும் என்று வேறு சிறிலங்காவின் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

தமிழீழத் தேசியத் தலைவர் நான்கரை வருடங்களிற்கு முன்பே சிறிலங்கா இராணுவத்தி;ற்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதாக உத்தரவாதம் அளித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளார். அதன் பின்பு சிறிலங்கா இராணுவமே நேரடியாகவும், துணை இராணுவக் குழுக்கள் மூலமும் தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் எதிரான வன்முறைகளில் ஈடுபட்டது. விடுதலைப்புலிகள் தற்காப்புத் தாக்குதல்கள் மட்டுமே நடத்தினார்கள். ஆகவே வன்முறைகளைக் கைவிடுவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டியது சிறிலங்கா அரசே.

இவ்வாறு சிறிலங்கா அரச தரப்பில் தொடர்ச்சியாக அர்த்தமற்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்புக்களை சீர்குலைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் பலவீனமாக உள்ளார்கள் என்று சிறிலங்கா அரசு நம்புவதே இதற்கு காரணம். சிறிலங்காவின் பிரதமர் கூற்றுக்களிலும் இது தெளிவாக தெரிகிறது.

விடுதலைப்புலிகள் பலவீனம் அடைந்திருப்பதாலேயே பேச்சுவார்த்தைக்கு சம்மதித்திருக்கிறார்கள் என்று சிறிலங்கா அரசு மட்டும் நம்பவில்லை. புலம்பெயர்ந்து வாழுகின்ற ஒட்டுக்குழுக்களின் அடிவருடிகளும் அவ்வாறே நம்புகிறார்கள்.

ஆனால் விடுதலைப்புலிகள் பலவீனமடையவில்லை, மிகப் பலத்துடன் இருக்கின்றார்கள் என்பதை யார் உணர்ந்து கொள்கிறார்களோ இல்லையோ, மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளின் பலத்தை சரியாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். இதனாலேயே விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்கைளில் கலந்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள்.

யாழ் குடாவில் இருந்து 5இலட்சம் மக்கள் வெளியேறிய பெரும் அவலம் நிகழ்ந்த பொழுது மேற்குலக நாடுகள ஓடிவரவில்லை. வன்னியில் ஜெயசிக்குறு நிகழ்ந்த பொழுது இந்த நாடுகள் வரவில்லை. விடுதலைப்புலிகள் ஓயாத அலைகளாக பொங்கி எழுந்த பொழுதே இந்த நாடுகள் ஓடி வந்தன. பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்றன. விடுதலைப்புலிகள் பலமாக இருப்பதை இந்த நாடுகள் உணருகின்ற போது மட்டுமே, எம்மைத் தேடி ஓடி வருகின்றன.

கடந்த வாரங்களில் இடம்பெற்ற சண்டைகளில் சிறிலங்கா இராணுவம் முழு வளத்தையும் பிரயோகித்து தனது உச்சக்கட்ட வலுவை வெளிப்படுத்தியது. ஆனால் விடுதலைப்புலிகள் தமது பலத்தில் ஒரு சிறு பகுதியையே வெளிப்படுத்தியிருந்தார்கள். தமது முக்கிய ஆயுதங்களையும், தாக்குதல் படையணிகளையும் விடுதலைப்புலிகள் இதுவரை சண்டைகளில் ஈடுபடுத்தவில்லை. இதை "மோட்டுச் சிங்கள அரசு" (வார்த்தைப் பிரயோகத்திற்கு மன்னிக்கவும்) விடுதலைப்புலிகளின் பலவீனமாக கருதுகிறது.

ஆனால் "கெட்டிக்கார" மேற்குலக நாடுகளுக்கு உண்மை தெரியும். சம்பூர் ஆக்கிரமிக்கப்பட்ட அடுத்த நாள் நோர்வேயின் தூதுவர்கள் வன்னிக்கு ஓடிச் சென்றார்கள். சம்பூர் ஆக்கிரமிப்புக்கு பதிலாக விடுதலைப்புலிகள் முழு அளவிலான போரை ஆரம்பிக்க வேண்டாம் என்று மன்றாட்டமாய் கேட்டுக் கொண்டார்கள். பல வாக்குறுதிகளையும் அள்ளி வழங்கி இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியே விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது.

உண்மையில் விடுதலைப்புலிகள் பலவீனமாக இருந்திருந்தால், மேற்குலக நாடுகள் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கும். ஆனால் விடுதலைப்புலிகள் உறுதியான பலத்தோடு நிற்கிறார்கள். அதனாற்தான் மேற்குலக நாடுகள் பேச்சுவார்த்தைக்கு போகும்படி வற்புறுத்துகின்றன. விடுதலைப்புலிகளும் அரசியல்ரீதியாக ஏதாவது நன்மைகளைப் பெற முடியுமா என்று பார்ப்பதற்கு நோர்வே செல்வதற்கு ஆவலுடன் இருக்கிறார்கள்.

ஆனால் முன்னைய சிங்கள அரசுகள் விட்ட தவறை விடாது, வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு மகிந்தவின் அரசு நியாயமான முறையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமா என்பது இன்று வரை பெரும் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

தற்போது பிரதமராக இருக்கின்ற இவர் முன்னால் ஆட்சியிலும் இருந்தவர்

அப்போதும் இவர் இந்த இனவாத கருத்தை முன் வைத்தவர்

என்பதது குறிப்பிடதக்கது.

ஆனால் தற்போது நடக்கின்ற நிலவரத்தை வைத்து பார்கின்ற பொழுது

இலங்கை அரசானது உடன பேச்சுக்கு போக வேண்டும் இல்லை எனின்

புலிகள் அவர்கள் மீது பாரிய தாக்குதலை நடாத்தும் போது

படை படை கல இழப்புக்களை சந்திக்கும் போது

உலக நாடுகளிடை போய் பேச்சுக்கு வாரோம் என சொன்னால் என்ன

நடக்கும்....???

சற்று தொலை தூர பார்வையோடு பார்த்தல் புலிகளின் தந்திர நகர்வகளுக்கான

விடை தெரியும் . இது அவர்கள் மகிந்தாவிற்கு கொடுக்கும் தற்கால அவகாசம்.

இதற்குள் அவர் ஒரு நிதானமான தீர்வை நோக்கிய ஒரு முடிவுக்கு வந்தே ஆக வேண்டும்.

இல்லை தமிழ் செல்வன் சொன்னது போல படைகள் அழிவை சந்திக்கும்

என்பதில் எந்தவித மாற்று காருத்துக்கும் இடமில்லை

என்பது தெழிவாகிறது..

தொடாந்து புலிகள் மௌனம் சகிப்பார்களா என்பது கேள்வி குறியே...??

அது சாத்தியமும் இல்லை...

இது எனது அறிவு எட்டிய கருத்தாக இருக்கிறது...

கள நிலவரங்களை மிக அவதானமான கவனிப்போமாயின்

பல விடயங்களை புரிந்து கொள்ள முடியும்....

நன்றி

அவதானி.....நீ...அவதானம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.