Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோச்சடையான் - திரை விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டையபட்டினம் நாட்டின் தலைமைத்தளபதி கோச்சடையான். தன் படைவீரர்களைக் காக்க அவர் செய்யும் ஒரு செயலால், தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படுகிறார். கோச்சடையானின் மகன் ராணா அவர் மீதான பழியை நீக்கி, பழிவாங்குவதே கதை. (அப்போ இந்தப் படம் ராணா தானேன்னு கேட்கக்கூடாது)

முதலிலேயே சொல்லிவிடுகிறேன்…நாம் பயந்த அளவிற்கு படம் மோசம் இல்லை.

 

 

படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்திற்கு ‘இது ரஜினி தானா? சரத்குமார் தானா? தீபிகா தானா?’ என்று நம் மனம் ஆராய்ச்சியில் இறங்குவது வாஸ்தவம் தான். உயிரோடு இருக்கும் ஆட்களின் தோற்றத்தில் பொம்மைகள் நடமாடும்போது, நாம் கம்பேர் பண்ணுவது இயல்பு தான். ஆனால் முதல் அரைமணி நேரத்தில் ‘ஓகே’ என்று செட்டில் ஆகிவிடுகிறோம்.

சிறுவன் ராணா கோட்டயப்பட்டினம் நாட்டில் இருந்து, அவர்களின் எதிரி நாடான கலிங்கபுரிக்கு போவதில் ஆரம்பிக்கிறது படம். அங்கே வளரும் ராணா, தன் வீரத்தால் படைத்தளபதியாக ஆகிறார். மனதிற்குள் ஒரு திட்டத்தோடு காய் நகர்த்தி, அந்த நாட்டின் மன்னன் ஜாக்கிசெராப் – இளவரசர் ஆதியை ஏமாற்றி, தான் நினைத்தபடியே கோட்டயப்பட்டினத்திற்கு ஒரு வீரனாகத் திரும்பி வருகிறார்.

 

கலிங்கபுரியில் மாமா நாகேஷ் (ஆம், அவர் கேரக்டரையும் பொருத்தமாக உருவாக்கியிருக்கிறார்கள்) கோச்சடையானின் தங்கையை வளர்த்து வருகிறார். கோச்சடையானின் அண்ணன் சிறுவயதிலேயே காணாமல் போய் விட்டதாகச் சொல்கிறார் நாகேஷ். ராணாவின் தங்கையை இளவரசர் சரத் குமார் காதலிக்க, இளவரசி தீபிகா படுகோனே ராணாவை காதலிக்கிறார். இந்த பண்டமாற்று முறை அரசர் நாசரை கடுப்பேற்றிவிடுகிறது. கூடவே ராணாவின் பழி வாங்கும் கதையும் சேர்ந்துகொள்ள, படம் அதன்பின் ஜெட் வேகத்தில் செல்கிறது.

 

உண்மையில் இந்தப் படத்தைக் காப்பாற்றுவது கே.எஸ்.ரவிகுமாரின் கதை-திரைக்கதை-வசனம் தான். கதை வலுவாக இருப்பதால், கொஞ்ச நேரத்திலேயே அனிமேசன் படம் என்பதை மறந்து படத்தில் ஒன்றிவிடுகிறோம்.இது அனிமேசன் இல்லை, மோசன் கேப்சரிங் டெக்னாலஜி என்றெல்லாம் சொல்கிறார்கள். நம் சிற்றறிவுக்கு பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. சில இடங்களில் முகத்தில் உணர்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதைத் தான் சொல்கிறார்களோ, என்னவோ. நமக்கு எல்லாமே பொம்மை தான்.

 

ஏ.ஆர்.ரஹ்மானின் பிண்ணனி இசையும் பாடல்களும் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கின்றன என்றே சொல்லலாம். மெதுவாகத்தான், கண்ணே கனியே, சில்லென்ற என எல்லாமே அட்டகாசமான பாடல்கள். காட்சிப்படுத்திய விதமும் பிண்ணனிக் காட்சிகளும் நன்றாகவே வந்திருக்கின்றன. படத்தின் ட்ரைலரும் பாடல் டீசரும் மொக்கையாகத் தெரிந்தன. ஆனால் தியேட்டரில் நன்றாகவே இருக்கின்றன.

 

அனிமேசன் கேரக்டர்களில் சூப்பர் ஸ்டார், நாசர், சோபனா, ஆதி உருவங்கள் அருமை. சரத் குமார், ஜாக்கி செராஃப் உருவங்கள் பரவாயில்லை. ஆனால் மிகவும் மோசம், தீபிகா படுகோனே மற்றும் தங்கையாக வரும் ருக்மிணி(பொம்மலாட்டம் ஹீரோயின்), சண்முகராஜா உருவங்கள் தான். அதிலும் தீபிகாவை க்ளோசப்பில் காட்டும்போது…….ஆத்தீ!

 

அதென்னவோ தெரியவில்லை, எல்லா சரித்திரப்படங்களிலும் மன்னன் மகளையே ஹீரோக்கள் லவட்டுகிறார்கள். அந்தக் காலத்திம் நம் மன்னர்களுக்குப் பெரும் தலைவலியாக இந்தப் பிரச்சினை இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அவதார் படத்தின் பட்ஜெட்டும் அவர்களின் டெக்னிகல் வசதிகளும் கோச்சடையானை விட, பலமடங்கு அதிகம். எனவே அதனுடன் இந்த ’ஸ்லோ’ மோசனை கம்பேர் செய்வது நியாயம் அல்ல. ஆனாலும் இந்திய சினிமா வரலாற்றில் இது புதிய தொடக்கமாக அமையலாம். அந்தவகையில் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இதுவரை அனிமேசன் படங்களுக்கென்று, தமிழ் சினிமாவில் மார்க்கெட் கிடையாது. இனி அது உருவாகலாம்.  அதே போன்றே மற்ற ரஜினி படங்களை நினைத்துப் பார்த்தாலும் கஷ்டம் தான். இரண்டு மணிநேரத்தில் படம் முடிவது, இன்னொரு ஆறுதல்.

 

கிளைமாக்ஸில் ராணா தன் தாயின் சபதத்தை நிறைவேற்றிவிடுகிறார். ஆனால் அதனாலேயே தந்தை கோச்சடையானின் சபதத்தை மீறிவிடுகிறார். படத்தின் இறுதிக்காட்சியில் காணாமல் போன அண்ணன் சோணா (அதுவும் ரஜினி தான்) வந்து நிற்கிறார். தம்பியும் அண்ணனும் மோத வேண்டிய சூழலில்………தொடரும் போட்டு விடுகிறார்கள். சோ, இன்னொரு பாகமும் வரலாம்!

 

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- படத்தைப் பற்றி நெகடின் இமேஜ் வரும் அளவிற்கு படத்தை உருவாக்க நேரம் எடுத்துக்கொண்டது

- படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல், கேப்டன் கூட்டணிப் பேச்சுவார்த்தை போல் விளையாட்டு காட்டியது

- மூலம் வந்தவங்க மாதிரி, காலை அகட்டி அகட்டி பல கேரக்டர்கள் நடப்பது

- என்ன இருந்தாலும், இது சூப்பர் ஸ்டார் படம் இல்லை

 

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- நச்சென்று எழுதப்பட்டிருக்கும் வசனங்கள்

- போரடிக்காமல் நகரும் திரைக்கதை

- கோச்சடையான் ஃப்ளாஷ்பேக்

- ஏ.ஆர்.ரஹ்மான்

- ரசிக்க வைத்த நாகேஷ்

 

பார்க்கலாமா? :

அதிகம் எதிர்பார்க்காமல் இது பொம்மைப் படம் என்ற புரிதலுடன் போனால், ஒருமுறை பார்க்கலாம்.

 

http://nilavaithedi.com/2014/05/kochadaiyaan-movie-review.html

  • கருத்துக்கள உறவுகள்

அனிமேஷன் படங்களின் ரசிகனாக சொல்கிறேன்.. கோச்சடையான் படத்தின் அனிமேஷன் படு மொக்கையாக இருக்கிறது. ஒரு சில காட்சிகளை தவிர்த்து ரஜினியை படு கேவலமாக அனிமேட் பண்ணியிருக்கிறார்கள். அதுவும் ரஜினி நடந்து வரும்போது அந்த கால்களை பார்த்தால் காமெடியாக இருக்கிறது. 

குழந்தைகள் சேனலில் வரும் அனிமேஷன்கள் கூட அவ்வளவு தத்ரூபமாக இருக்கின்றன. இதுக்கு சவுந்தர்யா மேடத்துக்கு படம் வருவதற்கு முன்பே விருது வேற கொடுத்துருக்காங்களாம். ஆனால் ரகுமான் இசை டிரைலரில் பார்க்கும்போதே அட்டகாசமாக இருக்கிறது.

ரஜினியை கார்ட்டூனாக்கி சொதப்பிட்டாங்க.. இந்த படம் ஓடட்டும்.. ஓடாம போகட்டும்.. அது நமக்கு தேவையில்லாதது..

ஆனால் தீபிகா மாதிரியான ஒரு பேரழகியை இப்படி பொம்மையாக அனிமேஷன் படத்தில் பார்க்க வைத்துவிட்டார்களே என்பதை நினைத்தால் தான் தாங்கவே முடியல பாஸ்.. 

 

Cartoonist Bala

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய  பார்வையில் "கொச்சடையான்:rolleyes: 

நேற்று  இரவு 10:00 மணி  படத்திற்கு 8:45 இற்கேமல்டி ப்ளெக்ஸ்” தியேட்டர் வாசலில் தவம் இருந்து உள்ளே நுழைந்தேன்.

நான் ஒன்றும் ரஜனி தீவிர ரசிகன் என்று சொல்லமாட்டேன் அனாலும் அவர் படங்கள் பிடிக்கும். என் நண்பர்களின் அதீத தொந்தரவு காரணமாக முதல் நாள் போக வேண்டிய நிலை. நான் நினைத்த அளவிற்கு ஜனத்திரளை காண முடியவில்லை. குறைந்தது ஒரு 100 இருக்கைகளுக்கு  மேல் காலியாகவே இருந்தன.

சொல்லியே ஆகவேணும் ...   ஒரு சீன அல்லது ஜப்பானிய இனத்து  வயது முதிர்ந்த ஒருவர் எங்கள் இருக்கைக்கு முன் வந்து அமர்ந்தார். நாங்கள்  இவர் எதோ அரங்கம் மாறி வந்து விட்டாரோ என்று நினைக்க , உண்மையில் அவர்கொச்சடையான்” தான் பார்க்கத்தான் வந்து இருந்தார்.

 எழுத்து ஓட்டம் தொடங்கவே விசிலடிப்பும் "தலைவா , தலைவா" போன்ற கோசங்களும் பறந்தன. இரண்டு இளைஞர்கள்  குத்தாட்டம் போட்டார்கள்!!

படம் "டைட்டில் " அழகாக இருந்தது. 3D  கண்ணாடியில் "சுப்பர் ஸ்டார் ரஜினி" எழுத்து வரும் போது என்னுடைய எதிர்பார்ப்பு கூடி விட்டது.

அம்புலி  மாமா  கதையில்  வரும் "அழக புரத்தை - அழகேசன் என்ற மன்னனும் " மகேச புரத்தை - மங்கலவர்மன் என்ற அரசனும்  ஆட்சி செய்தார்கள் " என்ற ரேஞ்சில் கதை  அறிமுகம் செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து ரஜனியின் அறிமுகம் ....  விசில், தலைவா சத்தம்முன் வரிசையில் ஆட்டம் தொடர்ந்தது.. நான் பாப் கார்னை  வாயில் திணித்து கோலாவை உறிஞ்சு விட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன் ...

ரஜனி - ரஜனி போல் இல்லை ... அவர் கண்களில் அதிகமான வெள்ளை ஒளி ... கண்கள் சொருகி வேறு எங்கோ பார்ப்பதை போல ஒரு பிரமை எனக்கு... ரஜனியின் நடையில் இருந்த மிடுக்கு இல்லை ..காலை அகற்றி அகற்றி நடப்பது ஆரம்ப காலங்களில் வந்த சிறுவர்களுக்கான அனிமேஷன் போல இருந்ததுதவிர அவது முகம் அறிமுக காட்சியில் சொதப்பலாய் இருந்தது .  

தீபிக்கா  - என்னத்தை சொல்வது..முக வதனத்தை  சொதப்பி உடல் வனப்பை (வளைவை ) காட்டி இருந்தார்கள். நடன காட்சியில் அதிகமான இடங்களில் motion synchronized ஆகாமல் அந்தரத்தில் துள்ளுவது போல இருந்தது.

பாடல்கள், இசை  - அருமையாக இருந்தாலும் படத்தில் அடிக்கடி பாடல் வருவது போல காட்சி அமைப்பு.

திரை கதை - பெரிதாக  வலுவுள்ள கதை என்று எனக்கு தெரிய வில்லை. வழமையான கதை .

முதல் முயற்சி என்ற விதத்தில் பாராட்டலாம் - இது ஒரு மைல் கல்  என்று சொல்லவதெல்லாம் சரியா நான் அறியேன். இதுவே 8 வருடங்களுக்கு முதல் வந்து இருந்தால் ..அப்படி சொல்லலாம். <_< 

இன்று வரும் நிறைய ஆங்கில அனிமேஷன் படங்களில் இந்தியர்கள் கைவண்ணம் நிறையவே இருகின்றது.

"அவதார்", "Skyfall," "Life of Pi" மற்றும் " "ட்விலைட் சாகா" போன்ற படங்களில் வந்த அற்புதமான காட்சிகள்  இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப wizard kids  வீட்டு கணினி திரைகளில் தான் உருவாக்கப்பட்டது

ஏன்  இன்று விஜய் டிவீயில் வரும் "மகாபாரதத்தில் " கூட அனிமேஷன் நிறைய இருகின்றது ஆனாலும் அமர்க்களமாய் தான் இருக்கிறது

கொச்சடையானாக வரும் ரஜனியின் காட்சிகள் அருமை. அவருக்கு மரணதண்டனை கொடுத்து சிரச்சேதம் செய்யும் போது  எந்த ரசிகனும் எதிர்பு  தெரிவிக்காதது வருந்த தக்கது. :)  :( 

படம் ~ சும்மா ஒரு முறை போய்  வரலாம்... பரவாயில்லை ...ரகம் .

ரஜனி அனிமேஷன் இல்லாமல் நடித்திருந்தால் இது தேறி இருக்கும் ..இது என் கருத்து:) 

  • கருத்துக்கள உறவுகள்

ரஐனியின் வெற்றிகளுக்கும் அவரது நட்சத்திரப்பிரகாசத்திற்கும் 

அவரிடமுள்ள ஒரு வேறுபட்ட சக்தியே  காரணம்

அதை அனிமேசனில் கொண்டுவரமுடியாது


நன்றி  சசி  நேரத்திற்கும்  விமர்சனத்துக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கார்ட்டூன் படத்துக்குள் ரஜனி என்ற பெயரை ஒளிச்சு வைச்சு.. வியாபாரம் செய்கிறார்கள். இதற்கு ஏன் இவ்வளவு கூப்பாடு. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

padu_zps4b6beb6f.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட தியேட்டரில இன்னும் படம் வரல வந்தாப்பிறகு.பாத்திட்டு சொல்லுறன்

அருமையான படம் இந்தியாவில் இப்படி ஒரு தொழில் நுட்பத்துடன் எதுவும் வந்தது இல்லை செம ..சூப்பர் தரம் ..அமேசிம் ..சொல்ல வார்த்தை இல்லை தலைவர் கலக்கிறார் ...

 

இப்படியானவங்க இருக்கும் வரை ரஜனி குடும்பம் வாழும் . :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மைல் கல்!

இனி பாருங்க உயிரோட இல்லாத அரசியல்வாதி சினிமா நடிகர் எல்லாம் இப்படி கார்டூனா வந்து எங்கட உயிர எடுக்கப்போகுதுவள். இந்த விசயத்தில இது ஒரு மைல்கல் :-)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட தியேட்டரில இன்னும் படம் வரல வந்தாப்பிறகு.பாத்திட்டு சொல்லுறன்

 

arju_zpse5ed0ead.jpg

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

arju_zps269fc57b.jpg

எப்பிடியான சமூகத்தில் வாழ்கிறோம்.தாங்கள் மட்டும் பார்க்கலாம் மற்றவன் பார்க்ககூடாது
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதுபோல் இன்னும் இரண்டு படம் நடித்தால் எப்படியும் ரஜனி லட்சாதிபதியாயிடுவார்...! :lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.