Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் பார்த்த ஒரு பதிவும் பின்னூட்டமும்...

Featured Replies

சில காலமாய் இந்தப் பதிவு ஒரு கேள்வியாக உள்ளிற்குள் துருத்திக்கொண்டிருந்தது. ஆனால் எழுதிப்போடும் அழவிற்கு அது துருத்தவில்லை அதனால் எழுதவில்லை.
 
நேற்று poetன் தலைப்பொன்றைப் படித்தபோது அதில் அத்தலைப்புச் சார்ந்து பொயட் முன் வைத்திருந்த ஒரு கெஞ்சுதலும் அதற்கான நிழலியின் எதிர்வினையும் படித்தபோது, உள்ளிற்குள் முன்னிற்கு வந்து குந்தியிருந்த கேள்வி, கண்ணடித்தது. அதனால் இந்தப் பதிவு.
 
'கைதட்டலிற்கு ஆசைப்படாத கலைஞன் இல்லை' என்ற வாக்கு ஓரளவிற்கு நமக்குப் பரிட்சயமாகிவிட்டதால் அது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளவும் பட்டுவிட்டது. பரிட்சயமான அபத்தங்கள் கூட அபத்தங்களாகத் தொடர்வதில்லை. ஆனால், கைதட்டல் குறியாக எழுகின்ற படைப்பில் ஓட்டைகளை எப்போதும் கண்டடைய முடியும். காரணம், அவை வலிந்த உருவாக்கங்கள். இன்னதைச் சொன்னால் இன்னது கிடைக்கும் என்ற தார்பரியத்திற்குட்பட்ட கணித்தல்களின் கட்டுப்பாட்டில் கருத்தரித்தவற்றில் ஓட்டைகள் தவிர்க்கப்படமுடியாதன. ஏனெனில் கைதட்டல் என்பது பிறரின் பெறுமதியில் உருவாவது.
 
எனது பெறுமதி என்பாட்டில் என்னால் முன்வைக்ப்படுகையில் எழுகின்ற கைதட்டல்கள்; எனது பெறுமதியோடு ஒத்துப்போகும், எனது அலைவரிசையில் இயங்கும் மனிதரை எனக்கு அடையாளப்படுத்துவது தான் அது தரும் போதையின் அடிப்படை. ஆனால். பிறரின் பெறுமதிகளைக் கணித்து, கைதட்டல் ஒலி மட்டுமே குறியாக,எனக்குப் புரியாத பிறரின் பெறுமதிகளை மனப்பாடம் செய்து ஒப்பித்து, அதற்குள் கைதட்டு வாங்க எழுதப்படுபவை, என்னைக் கூட்டமாக்கிவிடுவது தவிர்க்கமுடியாதது. மேலும், பிறரின் பெறுமதியினை எப்போதும் எம்மால் அவர் போல் உணரமுடியாது. அதன் நாடி நரம்புகளை அவர் போல் எம்மால் உணரமுடியாது. ஆதலால், பிறரின் பெறுமதிக்குள் நாம் பாட்டெழுதின் சங்கதிகள் சொதப்பவே செய்யும்.
 
கைதட்டல் நிச்சயம் போதை தருவது. "பச்சைப் புள்ளிகளை என்ன வங்கிக்கா எடுத்துச் செல்லமுடியும்" என்ற பஞ்ச் டயலாக் யாழில் மிகப்பழையது. ஆனால் பச்சைப் புள்ளிகளால் உள்ளிற்கு ஒரு பச்சை துளிர்க்கவே செய்யும். ஆனால், பச்சைப் புள்ளியாகட்டும் கைதட்டலாகட்டும் உண்மையானது என்று உணர்கையில் தான் போதை கிளைமாக்ஸினை அடையும்.
 
இந்தப் பதிவை எழுதக் காரணமாகிய இரண்டு பின்னூட்டங்களில் ஒன்றான நிழலியின் பின்னூட்டம் பச்சைப் புள்ளிகளைச் செயற்கையாகப் பொரிக்கவைக்கும் சூத்திரத்தினைப் பேசிநிற்பது கவனிக்கப்படவேண்டியது.
 
நிழலியின் பின்னூட்டத்தின் முதற்பகுதியில் நிழலி வாசகனாக ரசிகனாக வெளிப்பட்டுள்ள அதே நேரம், சற்றும் சுணங்காது யாழ்களப் பொறுப்பாளர் வந்துவிடுகிறார். உனது கவிதை வேகவில்லை என்ற விமர்சனம் உணரப்படமுன்னர் பிராயச்சித்தம் முன்வைக்கப்படுகிறது. நான் பச்சைபோட்டால் அவர்கள் எனக்குப் பச்சை போடுவார்கள் என்பது தெரிந்து, அதன் பிரகாரம் நான் நடக்கையில் இரண்டு துன்பங்கள் நிகழும். ஓன்று எனது பச்சைப் புள்ளி பெறுமதியற்றுப்போகும். இரண்டாவது எனக்கென எப்போதேனும் வரக்கூடடிய நிஜமான பச்சைப்புள்ளிகளை என்னால் அடையாளங் காணமுடியாது போகும். கொடுப்பதற்கும் பெறுமதியில்லை, வரவுகளும் பெறுமதியாயில்லை எனில் வாழ்வு வறண்டுபோகும். அத்தகைய பரிமாற்றம் நிகழ்வதும், எதையுமே எழுதாது எந்தப் பரிமாற்றமும் இல்லாதிருப்பதும் ஒன்று தான்.
 
பொயட்டில் ஒருபுறம் அனுதாபமும் இன்னுமொருபுறத்தில் சற்றுக் கோபமும் எழுந்தது. கோபம் வாசகனை நோக்கிய அலட்சியத்தால் எழுந்தது. "கவிதை கருத்துக்களாலும் பின்னூட்டங்களாலும் முற்பத்தில் நின்றால் தான் தொடர்ந்து என்னால் எழுதமுடியும்" என்ற வாக்க்கியத்தில், கவிதை முற்பக்கத்தில் இல்லாதுபோயின் நான் எழுதுவது குறையும் என்ற சங்கதியின் வெளிப்பாடானது, எனது எழுத்துக் குறையின் நட்டமைடயப்போவது வாசகனே என்ற சபையடக்கத்தைச் செய்ய விழைகிறது. ஒரு புறத்தில் கைத்தட்டலிற்காகச் கெஞ்சியபடி இந்தச் சபையடக்கம் சாத்தியப்படாது. அது கோபத்தையே வாசகனில் விட்டுச் செல்லும்.
 
எழுதுபவனிற்கு, அது கவிதையோ கட்டுரையோ கதையோ என்னவோ, எழுத்துத் தான் சன்மானமாக இருக்கவேண்டும். அதை எழுதாது விடின் அசௌகரியம் உள்ளுர உணரப்பட வேண்டும். பழுத்த கனி காம்பிலிருந்து விழுந்தே ஆகவேண்டும். அத்தகைய எழுத்துத் தான் புசிக்கப்படும்.
 
நாம் எழுதுவது மற்றையவரிற்குள் அதிர்வினை ஏற்படுத்தின் கைதட்டல் கேட்கும். அதிரவில்லையாயின் பதிவு தொலைந்து போகும். ஆனால் பதிவு தொலைகிறதே என்பதற்காகப் புரியாத பாசையில் எழுத ஆரம்பிக்க முடியாது. பத்தோடு பதினொன்று ஆவதில் தப்பில்லை, ஆனால் அந்தப் பதினொன்றாய் இருப்பது தானாய் நிகழின். வலிந்து எவராலும் பதினொன்று ஆகமுடியாது. உண்மையில் தனித்து நிற்பது மிகமிக இலகுவானது, அது தானாய் நடப்பது. ஆனால் பதினொன்று ஆவது மிகச்சிரமானது. முதற் பத்துப் பேரின் பெறுமதிகளைப் புரிந்து கட்டுப்பட்டுக் கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் போட்ட கோடுகளினூடு 'றைட்டா' 'றைட்டா' என்று ஒவ்வொரு அடிக்கும் கேட்டபடி, அங்கீகாரத்தை உறுதிப்படுத்தியபடி நடக்கவேண்டும். அப்படி நடந்து கோடுகளின் முடிவினை அடையின் கூட என்னதை அடைந்தோம் என்றே தெரியாத வெறுமை தான் மிஞ்சும்.
 
கைதட்டல் பிறப்பின் அது வெளிப்பட்டே ஆகும். நிர்ப்பந்தங்கள் சார்ந்து தட்டப்படாத கைகள் கூட உணரப்படக்கூடியன. எனவே கைதட்டல் கேட்கவில்லை எனின் அதற்கான காரணம் ஒன்றே ஒன்று தான். எவனிற்கும் தட்டத் தோன்றவில்லை.
 
யாழ்களத்தைப் பொறுத்தவரை, அது தனித்துவத்தோடு தொடர்வது, ஹார்வட் பல்கலைக்கழக எம்.பி.ஏ கற்றுக் கொடுத்த படிமுறைகளைப் பணிக்கமர்த்தியதால் அல்ல. மாறாக, எவரிற்கு என்ன எப்போது தோன்றுகிறதோ, அதை அவர்கள் பதிந்து கொள்வதால் தான் யாழ் யாழாக இருக்கிறது. எனவே கைதட்டலினை வலிந்து கேட்போரிற்கு, மற்றவரிற்கு நீங்கள் முதலில் தட்டுங்கள் என்ற பரிந்துரைக்குப் பதில் பதில் கூறாது விட்டுவிடலாமே!
 
வணக்கம் இன்னுமொருவன்,

என் பதில் சார்ந்த உங்கள் கருத்துகளை காண்பது மகிழ்ச்சி.

யாழ் களம் அநேக நேரங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற, தொடர் படைப்புகளால் இலக்கிய ஆளுமைகளை வளர்த்துக் கொண்டவர்கள் எழுதும் ஒரு தளம் அல்ல என்பதை அறிவீர்கள். சொந்த ஆக்கம் தரும் அநேக உறவுகள் யாழில் தான் தம் முதல் படைப்புகளை அல்லது இரண்டாம் மூன்றாம் படைப்புகளை எழுதி பயிற்சி பெறுகின்றனர்.  பொயட் போன்ற இலக்கிய ஆளுமை கொண்ட ஒருவரின் பின்னூட்டம் அது பாராட்டியோ அல்லது கடுமையான விமர்சனத்துடனோ அமைந்த ஒன்றாக இருப்பினும், முதற் படைப்புகளை எழுதுகின்றவர்களுக்கான ஒரு சிறந்த 'மல்டி விற்றமின் டொனிக்' ஆக அமையும் என்பதை பலதடவைகள் கண்டுள்ளேன். இவ்வாறு முதற் படைப்புகளை தருகின்றவர்களை ஊக்குவித்து, குறைகளை விமர்சித்து செலுமைப்படுத்தாது தன் படைப்புக்கான பதில்களை மட்டும் எதிர்பார்க்கும் ஒருவரிற்கான பதிலே அது.  பொயட்டுக்கு புதியவர்களின் படைப்புகளுக்கு பின்னூட்டம் இடுவதா இல்லையா என்பதை தீர்மானிக்க இருக்கும் உரிமை போன்று, மற்றவர்களுக்கும் உள்ளது என்பதை பார்க்கத் தவறி விட்டார்.

பொயட்டின் கருத்து தொடர்பான உங்கள் கணிப்பு தவறாக படுகின்றது.  பொயட் பச்சைப்புள்ளிகளை / மற்றவர்களின் கருத்துகளை எதிர்பார்த்து அதன் மூலம் தன்னை செலுமைப்படுத்தும் கட்டத்தினை கடந்த, மொழி ஆளுமை பெற்ற சிறந்த ஒரு கவிஞர். அதை அவரும் தெளிவாக உணர்கின்றவர். எனவே அவர் கருத்து ஒரு 'கெஞ்சுதலாக' கருதமுடியாது. ஆனால் வழக்கம் போன்று மற்றவர்களை குறைபட்டுக் கொள்ளும் அவரது போக்கிற்கான என் பதில் அது. அதே நேரத்தில் நீங்கள் கூறியது போன்று முதல் வரிகளை வாசகனாகவும் நீங்கள் குறிப்பிட்டுள்ள வரிகளை யாழ்களப் பொறுப்பாளராகவுமே எழுதி இருந்தேன் என்பதை மறுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தில் ஒருவரின் ஆக்கத்திற்கோ அல்லது இணைப்பிற்கோ
பதில் கருத்து எழுதுவது உறவுகளின் ரசனையைப் பொறுத்து உள்ளது.
சிலருக்குப் பிடிக்கும் பதிவுகள் பலருக்குப் பிடிக்காமல் போவதும் உண்டு,
பலருக்குப் பிடித்தது சிலருக்குப் பிடிக்காமல்  போவதும் உண்டு.

சுய ஆக்கங்கள் என்ற வரிசையில் பலரும் களத்தில் கவிதைகள் கட்டுரைகள் கதைகள் நகைச்சுவைச் சம்பவங்கள் எனப்பல விதமாகவும் உறவுகள் படைக்கின்றனர்.

-இங்கே சில உறவுகள்  தரும் ஆக்கங்கள் பல சர்ச்சைக்குரியவன ஆகின்றன.அல்லது உடனேயே காணாமற்போய்விடுகின்றன.
 -சுய தம்பட்டம் அடிக்கும் வகையில் பகிரப்படும் ஆக்கங்கள் எம் உறவுகளுக்கிடையில் எடுபடுவதில்லை.
-நான் தான் இந்தத்  துறையில் பெரியவன் என்ற தொனியில் வரும் ஆக்கங்களும் அடிபட்டுப்போகின்றன.
-எனது இந்தத் திரியில் நான் தான் கதா நாயகன் நீங்கள் எல்லோரும் விசிறிகள் வந்து விசிறிவிட்டுப் போங்கள் எனும் தொனியில் வரும் ஆக்கங்களும் எடுபடுவதில்லை. அல்லது அவரே அந்தத் திரியை ருக்மணி வண்டி வருது என்ற தொனியில் தனியாக தொடர்வார்.
-எனது திரியில் ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் மற்றவர்கள் வாய்பார்த்துக் கொண்டிருங்கள் என்ற தொனியிலும் சில ஆக்கங்கள் வரும். கள உறவுகள் அதையும் கடந்து போய்விடுவார்கள்
-ஆக்கங்களைத் தந்துவிட்டுக் கள உறவுகளைக்  கருத்தாட அழைத்துவிட்டு கருத்துக்குக் கருத்து எழுதத் தெரியாமல் நிர்வாகத்தைத் துணைக்கு அழைக்கும்  சிலரின் ஆக்கங்களும் புறக்கணிக்கப்படுகின்றன.
-ஏற்கனவே களத்தில் இணைக்கப்பட்ட தனது சொந்த ஆக்கத்தை மீண்டும் மீண்டும் புதிதாக இணைக்கும் போது வாசகர்களுக்கு இணைப்பவர்மீது ஒருவித நமைச்சலை உருவாக்கின்றது.
அடுத்த இணைப்பு வரும்போது அதிலும் ஒரு சந்தேகம் உருவாகின்றது.
-முக்கியமாக ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் என்பவனுக்கு மிக முக்கியமானது வாசகர்களுக்கு மதிப்பளிப்பது. இந்த வாசகர்கள் ஆக்கத்தை வாசித்துவிட்டுக் கருத்துக்களை எழுதினால் அவர்களுக்கும் நன்றி கூறுவது. ஏன் ஒரு வாசகன் தன்னுடைய ஆக்கத்தைப் புறக்கணிக்கின்றான் என யோசனை செய்யாமல் மாரடிக்கக்கூடாது.
-ஒரு கவிஞனைப் பார்த்து ஒரு வாசகன் எழுத்துப் பிழைகளைச் சரி செய்யுங்கள் எனக் கேட்டால் அதைக் காதில் வீழ்த்தாமல் தொடர்ந்து தனக்குப் பிடித்த கருத்துக்களுக்கு பதில் அளித்தால் எந்த வாசகன் அவருடைய ஆக்கத்திற்குக் கருத்து எழுதி ஊக்கம் அளிக்க முன்வருவான்.
 
வாத்தியாரின் இந்தக் கருத்துக்களுடன் முற்றிலும் உடன்படுகின்றேன். நன்றி வாத்தியார்.

  • தொடங்கியவர்
வணக்கம் நிழலி,
விமர்சனத்தை முதிர்ச்சியோடு அணுகியமைக்காக முதலில் மனமார்ந்த நன்றிகள்.
 
முன்னொருகாலத்தில் புத்தகம் எழுதி வெளியிடுவது என்றால் ஒரு பதிப்பகம் அதனை வெளியிட முன்வரவேண்டும். பதிப்பகம் பல விற்பன்னர்களைக் கொண்டிருக்கும். ஒரு நூலை வெளியிடுவதா இல்லையா என்பதை அவர்கள் விற்பனை சார்ந்தும் நிகழ்ச்சி நிரல் சார்ந்தும், அதிகாரங்களிற்குக் கட்டுப்பட்டுமே எடுத்துக்கொண்டிருந்தார்கள். இதனால் யார் எழுதமுடியும் என்பது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. என்ன செய்தி சொல்லப்படலாம் என்பது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இன்று எவரும் எழுதலாம் வெளியிடலாம். ஒரு புறத்தில் இது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. அதிகாரங்களைத் தாண்டி, நிகழ்ச்சிநிரல்களைத் தாண்டி எழுத்துக்கள் வெளிவருகின்றன. ஆனால் அதோடு கூடவே ஒரு பிரச்சினையும் கூடவே வருகிறது. 
 
முன்னர் எதை வாசிப்பது என்று தெரியாமல் ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்தால் தெரிவதற்கு சில பத்துப் புத்தகங்கள் புதிதாய் வந்திருக்கும். இன்று, எதைவாசிப்பது என்று தெரியாதவன் வாசிக்கத் தெரிந்தெடுப்பதற்கு எண்ணமுடியாப் புத்தகங்கள் பல வடிவில் இருக்கின்றன. ஏராளம் குப்பையாக இருக்கிறது. குப்பை என்பதை எனது இரசனை சார்ந்து மட்டும் கூறவில்லை, எழுத்தாளர் என்ற அங்கீகாரம் வேண்டி, கைதட்டலிற்கான கணிப்புக்களைச் செய்து, ஒரு சமன்பாட்டின் பிரகாரம் ஏகப்பட்டவர்கள் எழுதிக்குவிக்கிறார்கள். இத்தகைய நூல்களை வாசித்து முடிக்கையில்--வாசிக்காது சில பக்கங்களில் தூக்கிப் போடப்போடுவன ஏராளம்--ஒரே ஒரு கேள்வி தான் மிஞ்சிநிற்கும் 'நம்ம இப்ப என்ன பண்ணி முடிச்சம்' என்ற தோரணையில் அது இருக்கும். இது ஒரு வாசகனின் கையாலாகத்தனத்திலிருந்து எழுகின்ற சோர்வு. முத்துக்களைத் தேடியடையமுன்னர் சுழியோடி கடக்கவேண்டிய விரிந்து கிடக்கும் கடல் நாளிற்குநாள் பெருத்துக்கொண்டே இருக்கிறதே என்ற பெருமூச்சில் பிறக்கும் கழைப்பு.
 
எப்போதுமே ஊக்கம் உற்சாகம் தருவது தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை, உள்ளுக்குள் இருப்பது வெளிவந்தே தீரும். அவ்வாறு வெளிவருவன, அவை யார்வழியாக வருகின்றன என்பதற்கப்பால், வாசகரில் ஒரு அதிர்வினை உருவாக்கும். ஏனெனில் ஒரு மனிதன் உணர்ந்ததால் பிறந்தவை அவை. பிரபஞ்சத்தின் ஒருமையினை நினைவூட்டுவன அவை
 
இப்போது, பெருகிக் கிடக்கும் குப்பைகளிற்குள்ளால் (நான் தமிழை மட்டும் கூறவில்லை. ஆங்கிலத்தில் இப்பிரச்சினை இன்னமும் அதிகம்) நீந்திக்கொண்டிருக்கும் கடுப்பில் எனக்குத் தோன்றுகின்ற ஒரு விடயம், 'ஊக்கம்' என்பதை மனிதன் மீழாய்வு செய்யவேண்டுமோ என்பதாக இருக்கிறது. உதாரணத்திற்குச், சில பெற்றோர்கள் கணிதமே வராத குழந்தையினை ஊக்கப்படுத்தி ஊக்கப்படுத்தி உசுப்பேத்திக் கணிதத்துறையில் பணியில் அமர்த்தி விட்டு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். ஆனால் அந்தக் குழந்தையின் வாழ்வு அதன்பிறகு வாராவாரம் ஞாயிறு இரவுகளில் மனஅழுத்தத்தோடு கட்டிப்புரண்டபடி வீணாகத் தொடங்குகிறது. கணிதம் வருபவன் ஊக்கம் உள்ளதோ இல்லையோ கணிதத்தைக் கண்டுபிடித்துவிடுகிறான் என்றே தோன்றுகிறது. இதனால் தான் கைதட்டல் இல்லாதபோதும் எவன் பேசுகிறான் என்று தேடத் தோன்றுகிறது.
 
யாழ்கழத்தில் நான் பார்த்தவரை மிக அதிகமானவை அவரவர் உணர்ந்தவையாக வெளிவருகின்றன. அவர்களின் உணர்வோடு நாம் ஒத்துப்போகிறோமா இல்லையா என்பதற்கப்பால், அவர்களிற்கு அவர்கள் கூறுவது உண்மையில் தோன்றுவதாகப் பல தருணங்களில் உணரமுடிகிறது. வாசகராக எம்மை நாம் வளர்த்துக்கொள்ளக் கொள்ள அவர்களின் உணர்வுகளின் புதிய பரிமாணங்கள் தெரிகின்றன. ஒரு இரயில் பாடகனின் பாட்டின் பச்சைத்தனமும் அதற்குள்ளால் மனிதனின் பொதுமையின் பிணைப்பை உணரவும் முடிகிறது. கைதட்டல்களிற்கப்பால் இது தடையின்றி நடந்துகொண்டு தான் இருக்கிறது.
 
எனக்குப் பொயட்டோடு நேரடி அறிமுகம் இல்லை. அவரோடு சண்டைசெய்வதோ குறைகண்டு பிடிப்பதோ எனது நோக்கமல்ல. எனது தற்போதைய யுத்தம் கைதட்டுக்களால் தொடர்ந்து கொண்டிருக்கும் குப்பைகள் சாhந்தது மட்டுமே.
 
எவரையும் புண்படுத்துவதோ அவமதிப்பதோ கிஞ்சித்தும் என் நோக்கமல்ல.
 
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் இந்தக் கருத்துக்களுடன் முற்றிலும் உடன்படுகின்றேன். நன்றி வாத்தியார்.

சிலவற்றை  நானும் சிலருக்கு எழுத  நினைத்ததுண்டு

ஆனால் வழரும்  கலைஞர்கள்  எழுத்தாளர்கள் அவர்கள்

அத்துடன் புலம் பெயர் தேசங்களில் பல நெருக்குதல்களுக்கும் நேரமின்மைக்கும் இடையில் இந்தப்பணியையும் செய்கிறார்கள் என  உணர்வதால் சுட்டிக்காட்டுவதில்லை.

தொடரட்டும்  அனைவரதும் எழுத்துப்பணி

நன்றி

திரிக்கு இன்னுமொருவன்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று poetன் தலைப்பொன்றைப் படித்தபோது அதில் அத்தலைப்புச் சார்ந்து பொயட் முன் வைத்திருந்த ஒரு கெஞ்சுதலும் அதற்கான நிழலியின் எதிர்வினையும்/ பொயட்டில் ஒருபுறம் அனுதாபமும் இன்னுமொருபுறத்தில் சற்றுக் கோபமும் எழுந்தது. கோபம் வாசகனை நோக்கிய அலட்சியத்தால் எழுந்தது.   - innumoruvan

நன்றி இன்னுமொருவன். என்மீது அனுதாப படவேன்டாம்.

இனையத்தில் வெளியிடமுனம் எங்களுக்கு கவிதை அனுப்புங்கள் (வெளியிட்டபின் வேண்டாம்) என்று தமிழகத்தின் பிரபல சஞ்சிககள் கேட்கிறபோதும் நான் எழுய உஅன் யாழில் பதிவது ஈழத்து உறவுகளுக்குச் சேர வேன்டும் என்பதற்க்காகவே. எழுதியதை திரும்ப வாசிக்கவே நேரமில்லாத வாழ்வில் ஒரு நண்பர் மூலம் உங்கள் நக்கலை அறிந்து அதற்க்குப் உங்களுக்கு பதில் எழுதவும் நேர்ந்தது.  எழுத்துப்பிழைகள் தொடர்பாக ஒரு சொல். எனக்கு முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் பிழைத்தா மட்டுமே கண்ணுக்குப் புலப்படுகுது. எழுத்துப்பிழைக்காக ஐன்ஸ்டீன்போன்ற மாமேதைகளின் எழுத்தை யாரும் நிராகரிக்கவில்லை. நீங்கள் மட்டும்தான் இதுவரை என்னை நிராகரித்திருக்கிறீகள்.

யாழில் முன்னர் நடைமுறையில் இருந்த படைப்புக்கள பொருளடக்க நடைமுறையை ஒட்டியும் தற்போதய நடவடிக்கையை வெட்டியும் கருத்துச் சொல்ல உரிமை இருக்கு. அது என் எதிர்பார்ப்பு. என் கருத்தைப் பதிவு செய்யும் உரிமையை  யாரும் நக்கல் அடிக்க முடியாது

.

  • தொடங்கியவர்

கருத்துக்களத்தில் ஒருவரின் ஆக்கத்திற்கோ அல்லது இணைப்பிற்கோ

பதில் கருத்து எழுதுவது உறவுகளின் ரசனையைப் பொறுத்து உள்ளது.

சிலருக்குப் பிடிக்கும் பதிவுகள் பலருக்குப் பிடிக்காமல் போவதும் உண்டு,

பலருக்குப் பிடித்தது சிலருக்குப் பிடிக்காமல்  போவதும் உண்டு.

சுய ஆக்கங்கள் என்ற வரிசையில் பலரும் களத்தில் கவிதைகள் கட்டுரைகள் கதைகள் நகைச்சுவைச் சம்பவங்கள் எனப்பல விதமாகவும் உறவுகள் படைக்கின்றனர்.

-இங்கே சில உறவுகள்  தரும் ஆக்கங்கள் பல சர்ச்சைக்குரியவன ஆகின்றன.அல்லது உடனேயே காணாமற்போய்விடுகின்றன.

 -சுய தம்பட்டம் அடிக்கும் வகையில் பகிரப்படும் ஆக்கங்கள் எம் உறவுகளுக்கிடையில் எடுபடுவதில்லை.

-நான் தான் இந்தத்  துறையில் பெரியவன் என்ற தொனியில் வரும் ஆக்கங்களும் அடிபட்டுப்போகின்றன.

-எனது இந்தத் திரியில் நான் தான் கதா நாயகன் நீங்கள் எல்லோரும் விசிறிகள் வந்து விசிறிவிட்டுப் போங்கள் எனும் தொனியில் வரும் ஆக்கங்களும் எடுபடுவதில்லை. அல்லது அவரே அந்தத் திரியை ருக்மணி வண்டி வருது என்ற தொனியில் தனியாக தொடர்வார்.

-எனது திரியில் ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் மற்றவர்கள் வாய்பார்த்துக் கொண்டிருங்கள் என்ற தொனியிலும் சில ஆக்கங்கள் வரும். கள உறவுகள் அதையும் கடந்து போய்விடுவார்கள்

-ஆக்கங்களைத் தந்துவிட்டுக் கள உறவுகளைக்  கருத்தாட அழைத்துவிட்டு கருத்துக்குக் கருத்து எழுதத் தெரியாமல் நிர்வாகத்தைத் துணைக்கு அழைக்கும்  சிலரின் ஆக்கங்களும் புறக்கணிக்கப்படுகின்றன.

-ஏற்கனவே களத்தில் இணைக்கப்பட்ட தனது சொந்த ஆக்கத்தை மீண்டும் மீண்டும் புதிதாக இணைக்கும் போது வாசகர்களுக்கு இணைப்பவர்மீது ஒருவித நமைச்சலை உருவாக்கின்றது.

அடுத்த இணைப்பு வரும்போது அதிலும் ஒரு சந்தேகம் உருவாகின்றது.

-முக்கியமாக ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் என்பவனுக்கு மிக முக்கியமானது வாசகர்களுக்கு மதிப்பளிப்பது. இந்த வாசகர்கள் ஆக்கத்தை வாசித்துவிட்டுக் கருத்துக்களை எழுதினால் அவர்களுக்கும் நன்றி கூறுவது. ஏன் ஒரு வாசகன் தன்னுடைய ஆக்கத்தைப் புறக்கணிக்கின்றான் என யோசனை செய்யாமல் மாரடிக்கக்கூடாது.

-ஒரு கவிஞனைப் பார்த்து ஒரு வாசகன் எழுத்துப் பிழைகளைச் சரி செய்யுங்கள் எனக் கேட்டால் அதைக் காதில் வீழ்த்தாமல் தொடர்ந்து தனக்குப் பிடித்த கருத்துக்களுக்கு பதில் அளித்தால் எந்த வாசகன் அவருடைய ஆக்கத்திற்குக் கருத்து எழுதி ஊக்கம் அளிக்க முன்வருவான்.

நன்றி வாத்தியார். உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். இருப்பினும் ஒன்றைக் கூறத்தோன்றுகிறது, நீங்கள் கூறுகின்ற அனைத்துப் பிறழ்வுகளோடும் உள்ள யாரேனும் ஒருவேளை நமக்குள் அதிர்வினை ஏற்படுத்தும் எதையேனும் அற்புதமாக முன்வைத்தால், அதைப் பார்க்கையில் எம்மையறியாது கைதட்டத்தான் தோன்றுகிறது. இத்தகைய நிலையினைச் சந்திக்கும்  வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.

Edited by Innumoruvan

இன்னுமொருவன்,

உங்களின் பதில் பல விடயங்களை ஆழமாக நோக்குகின்றது.  கைதட்டுகளுக்காக எல்லா மொழிகளிலும் / கலைகளிலும் குப்பைகள் மலிந்து வருவதும் அதில் நல்லதை தேடி எடுக்க முயன்று வரும் சலிப்பையும் உணர முடிகின்றது.

கைதட்டல்களையோ ஊக்கத்தினையோ எதிர்பார்க்காமல் எழும் இயற்கையான படைப்புகள் உன்னதமாக இருப்பதையும் கண்டுள்ளேன். அதே நேரத்தில் ஊக்கம் கொடுப்பதால் தன் எழுத்தில் செலுமையை வளர்த்தெடுத்து ஆளுமை மிக்க எழுத்தாளர்களாக மாறி வருவதையும் கண்டுள்ளேன்.

மற்றது,  ஊக்கம் கொடுத்து கணிதம் படிப்பதற்கும் ஊக்கம் கொடுத்து இலக்கியம் / கலை படைப்புகளை கொடுப்பதற்கும் பெரும் இடைவெளி உள்ளது என்று நம்புகின்றேன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்களுக்காகவும், கைதட்டல்களுக்காகவும் எழுதப்படுபவற்றை படித்தவுடனேயே புரிந்துகொள்ள முடியும். அதே வேளையில் எதுவித சமரசமுமின்றி தன்னையே முதல்வாசகனாகக் கொண்ட எழுத்துக்களையும் இலகுவில் அடையாளம் கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரையில் மனதுக்குப் பிடித்தவற்றையும், புதிதாக எழுதுபவர்களை ஊக்கப்படுத்தவும் பாராட்டுவதில் தப்பில்லை. அதேவேளை எழுத்துத் துறையில் காலூன்றியவர்களது ஆக்கங்களை பாரபட்சமின்றி விமர்சனம் செய்வது அவர்களது எழுத்துக்களை செழுமையாக்க உதவும் என்று நம்புகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.