Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனதை கவர்ந்த face book பதிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி

40 நிமி. ·

இத்தன வருசமா இங்க குப்ப கொட்னதுக்கு அசிஸ்டன்ட் டைரக்டராவாவது அலைஞ்சிருக்கலாம். தேவயானில ஆரம்பிச்சு டிடி வரைக்கு அவனுகதான் கவ்விட்டு போறானுக

Edited by SUNDHAL

  • Replies 171
  • Views 15.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிகா பார்த்திபன்

1 மணிநேரம் முன்பு

Hussain Thala Rasigan

என்ன ஒரு வில்லத்தனம்...?.

கணவன் - செல்லம் எந்திரிடா

நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க

மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி

தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல

அதுக்குள்ள வந்துட்டாங்களா ?

வா்றவங்க ஒரு போன்

பண்ணிட்டாவது வரலாம்ல

இனி காலையில டிபன், மதியம்

சாப்பாடுன்னு மூணு நேரமும்

வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்

கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ

பேசுறத கேட்டு

கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...

மனைவி - போனா போவட்டும்

அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்

(ஐந்து நிடங்கள் கழித்த)

கணவன் - உண்மையாலுமே அவங்க

போயிட்டாங்கடி..

மனைவி - ஐயா....! ஜாலி

கணவன் - போறப்ப அத்தையையும்

மாமாவையும்

பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது

மனைவி -- (சற்று அதிர்ச்சியுடன்)

வந்தது எங்க அப்பா அம்மாவா ?

கணவன் -- (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே)

ஆமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Parthiban Viru JS Roshi

25 நிமிடங்களுக்கு முன்பு

உன் நெற்றியில் வியர்க்கும்போதுதான் நான் நினைத்தேன்.. அடடா நிலவிலும் நீர் இருக்கிறதென்று"......................!!

:D :d

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிகா பார்த்திபன்

1 மணிநேரம் முன்பு

Hussain Thala Rasigan

என்ன ஒரு வில்லத்தனம்...?.

கணவன் - செல்லம் எந்திரிடா

நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க

மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி

தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல

அதுக்குள்ள வந்துட்டாங்களா ?

வா்றவங்க ஒரு போன்

பண்ணிட்டாவது வரலாம்ல

இனி காலையில டிபன், மதியம்

சாப்பாடுன்னு மூணு நேரமும்

வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்

கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ

பேசுறத கேட்டு

கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...

மனைவி - போனா போவட்டும்

அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்

(ஐந்து நிடங்கள் கழித்த)

கணவன் - உண்மையாலுமே அவங்க

போயிட்டாங்கடி..

மனைவி - ஐயா....! ஜாலி

கணவன் - போறப்ப அத்தையையும்

மாமாவையும்

பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது

மனைவி -- (சற்று அதிர்ச்சியுடன்)

வந்தது எங்க அப்பா அம்மாவா ?

கணவன் -- (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே)

ஆமா

 

உப்புடி உங்கை கன வீடுவளிய நடக்குது.... :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி பட்டாசு கொளுத்தி 'விழுப்புண்' பெற்றுருக்கிறீர்களா? :lol:

 

https://www.facebook.com/photo.php?v=10203864897927560&set=vb.1374055902&type=2&theater

 

பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா...! மத்தாப்பு லுங்கி கட்டி ஆடட்டுமா...!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி பட்டாசு கொளுத்தி 'விழுப்புண்' பெற்றுருக்கிறீர்களா? :lol:

 

https://www.facebook.com/photo.php?v=10203864897927560&set=vb.1374055902&type=2&theater

 

பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா...! மத்தாப்பு லுங்கி கட்டி ஆடட்டுமா...!!

சுவரில் இருக்கும் படத்தை, அகற்றி விட்டுப் பார்த்தால், எல்லாமே 'யாழ்ப்பாணம்' மாதிரி தான் கிடக்குது! :lol:

 

சீன வெடி கொழுத்துபவரின் ' சண்டிக்கட்டு' உட்பட! :D

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத்துக்கு அப்புறமும்

ஒரு பொண்ணு தன்னோட செல் நம்பர்

மாத்தாம அதே சிம் கார்டு யூஸ்

பண்ணுன அவள் தான் கலியுக சீதை என அறிக......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் பெயரை நானும்

என் பெயரை நீயும்

ஒரே மரத்தில்

ரகசியமாய்

செதுக்கி வைத்ததில்

ஊர் முழுக்க

"கிசு கிசு" ஆகிப் போனது

நம் காதல் !!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெங்கடேஷ் ஆறுமுகம்

5 மணிகள் · தொகுத்தது ·

‪#‎பந்திக்கு_முந்துங்க‬

ஒரு கோப்பை இட்லி..! (மதுராந்தகம் ஹை-வே-இன் ஓட்டல்)

சென்னை மதுரை நெடுஞ்சாலையில் பிரயாணிப்பவர்களே (சொந்த வாகனத்தில்) உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் மதுராந்தகத்தில் அமைந்துள்ள ஹை-வே-இன் ஹோட்டல்.! பொதுவாக வெளியூர் பயணங்களில் நல்ல ஓட்டல் அமைவது கர்ணப் பரம்பரையில் பிறந்தவர்க்கு கூட அமையாது அதற்கு ஸ்பெஷல் புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும்.!

இந்தக் கடை உண்மையில் அந்த புண்ணியம் செய்தவர்க்கு அமைந்த கடை.. உயர்தர சைவக்கடை என இவர்கள் எழுதலாம் ஆனால் இவர்கள் அப்படி ஏதும் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை.. பெரு நகரத்தின் உயர்தர சைவ உணவகங்களை விட விலை குறைவு... உணவின் தரமும் அதன் சுவையும் அதை தயாரிக்கும் நேர்த்தியும் பாராட்டத்தக்கது..!

எண்ணெய் குடிக்காத பூரி மசித்த உருளைக்கிழங்கு மசால், நெய் மணக்கும் குழைந்த முந்திரி வெண்பொங்கல், புளிக்காத பொன்னிறத்தில் வார்த்த தோசை, மிளகும் முந்திரியும் சேர்த்த ரவா தோசை, முறுகலான மசால் தோசை, சுடச்சுட கிடைக்கும் ஸ்பெஷல் வடை இப்படி பல இருந்தாலும் ஹை லைட் ஒரு கோப்பை இட்லி தான்!அதென்ன கோப்பை இட்லி

இட்லி எப்படி கோப்பையில் வரும் என்று கேட்கிறீர்களா.. ஆம் அது தான் அக்கடையின் பிரசித்தமான சாம்பார் இட்லி..! ஹை-வே-இன் ஓட்டலின் சிறப்பே அதன் சாம்பார் தான்.. பொதுவாக நல்ல சாம்பாரை வைத்தே அந்த ஓட்டலின் இதர உணவுகளைப் பற்றி சொல்லி விடலாம்.. சாம்பார் வைப்பது ஒரு கலை..அதை ரசித்து செய்பவரே சிறந்த மாஸ்டர்..!

மிகச் சிறப்பாக சாம்பார் வைப்பவர் தான் எல்லா உணவுகளையும் சிறப்பாக செய்வார் என்பார் என் தந்தை.. எங்கள் கடைக்கு வேலைக்கு வரும் மாஸ்டர்களுக்கு முதல் பரீட்சையே அதுதானாம்..! சாம்பார் சிறப்பாக அமைந்து விட்டால் உணவுக்கு தனி ருசி வந்துவிடுமாம்..!

அந்த சாம்பாரில் தான் எத்தனை வகை..! சாப்பாட்டு சாம்பார் வேறு டிபன் சாம்பார் வேறு..!

கொஞ்சம் தண்ணீராக நிறைய காய்கறிகள் இருந்தால் அது சாப்பாட்டு சாம்பார்.. அதாவது இலையில் ஊற்றினால் ஓடுவது சாப்பாட்டு சாம்பார்.. டிபன் சாம்பார் அப்படி அல்ல கெட்டியாக இருக்க வேண்டும்..இலையில் ஊற்றினால் ஓடாமல் மெதுவாக பாயாசம் போல பரவவேண்டும் ஒரிரு காய்கள் தான் இருக்கும்.. நிறைய காய்கள் இருக்காது..!

பொதுவாக டிபன் சாம்பார் சிவாஜி மாதிரி... சிங்கம் சிங்கிளாக வரும் என்பது போல ஒரு காய் சாம்பாராக தான் செய்வார்கள் வெங்காய சாம்பார், பூசணி சாம்பார், முருங்கை சாம்பார், பருப்பு சாம்பார், தக்காளி சாம்பார் என ஏதாவது ஒரு காயை மட்டுமே சார்ந்திருக்கும்..! இதற்கெல்லாம் பேரரசனாக ஒரு சாம்பார் உள்ளது.. !

அதுதான் அரைத்துவிட்ட சாம்பார்..! அதாவது கையால் மசாலா அரைத்து வைப்பது.. இதற்கு தான் ஈடு இணையில்லை.. சரியாக அமையாவிட்டால் சமையலும் சொதப்பிவிடும்.. பொதுவாக அரைத்த சாம்பாரில் சின்ன வெங்காயம் பரங்கிக்காய் போடுவார்கள்.. அதை சாப்பிடும் போது சிணுங்கும் குழந்தையின் பிடிவாதம் போல மெல்லிய இனிப்பு இருக்கும்.!

ஆனால் ஹை-வே-இன் ஓட்டலின் சிறப்பே அந்த இனிப்பு சுவை இல்லாது.. சாம்பார் நல்ல சுவையுடன் மணமாக இருப்பது தான்.. அவர்கள் பூசணி பயன் படுத்துவதில்லை சின்ன வெங்காயம், முருங்கை, அவரை என்று பயன் படுத்துகிறார்கள்.. சின்ன வெங்காயத்தை சாப்பிடும் போது கூட அந்த இனிப்பு தெரியாத அளவு பக்குவமாக சமைக்கிறார்கள்..!

ஒரு பெரிய கோப்பையில் சூடாக 3 இட்லிகள் கோப்பை நிறைய சாம்பார் ஒரு ஸ்பூன் நெய்.. அதிலும் சாம்பாரின் சூடு அபாரமாக இருக்கும்.. மெல்ல ஸ்பூனால் அதை விண்டு சாம்பாரில் நனைத்து ஊதி ஊதி முதல் வாய் சுவைப்பது முதல் காமத்திற்கு ஈடானது.. அவ்வளவு ருசி.! சூடான உணவு எப்போதும் சுவையாக இருக்கும் அதிலும் இந்த காம்பினேஷன் சூப்பர்..!

இதற்கு தரும் தேங்காய் சட்னி.. பெரிய ஹீரோ படத்தில் நடித்த ஹீரோயின் போல.! அதிக ஸ்கோப் இருக்காது..யாரும் அதை தீண்ட மாட்டார்கள்.. ஆனால் கூடுதலாக சாம்பார் வாங்காமல் சாப்பிடுபவர்கள் அரிது.! இந்த சாம்பார் இட்லி ஜோடியை சிவாஜி -பத்மினிக்கு இணையாக சொல்லும் அளவிற்கு மிகச் சிறப்பாக இருக்கும்..!

இங்கு எந்த அரசுப் பேருந்தும் நிற்பதில்லை எனும் போதே இதன் தரம் உங்களுக்கு தெரியும்..! தென்னிந்திய வட இந்திய உணவுகளும் சூப்பர் என்றாலும் இந்த ஓட்டலின் ஹீரோ - ஹீரோயின் சாம்பார் இட்லி தான் காலை 10 மணிக்கு மேல் கிடைக்காது.. என் பயணங்கள் சரியாக அங்கு ஒன்பது மணிக்கு இருப்பதை போல திட்டமிட்டு போவேன்..!மாலையிலும் கிடைக்கும்...

அடுத்த முறை மதுராந்தகம் வழியாக சென்றால் ஹை-வே-இன்னின் சாம்பார் இட்லியை சுவைக்க மறக்காதீர்கள்..!

மொதலாளி அந்த தொழில் ரகசியம் என்னன்னா..!

சமையலுக்கு தேவையானவை:

அரைத்த சாம்பார் 5 அல்லது 6 பேருக்கு சமைக்க..

துவரம் பருப்பு - 100கி... க.பருப்பு - 25 கி... வரகொத்தமல்லி - 20கி... வரமிளகாய் - 20 கிராம்... ஒரு முழு கேரட்... ஒரு சிறிய அல்லது பாதி முருங்கைக்காய்... பரங்கிக்காய் துண்டு சிறியது... உரித்த சின்ன வெங்காயம் 10... அரைமூடி துருவிய தேங்காய்... தக்காளி 3... ஒரு ஸ்பூன் நெய்... நல்லெண்ணெய் 50 மிலி... முழு மிளகு & சீரகம் - இரண்டும் தலா ஒரு சிட்டிகை.. கருவேப்பிலை கொத்தமல்லி கடுகு உளுத்தம் பருப்பு - தாளிக்க... உப்பு -தேவைக்கு... காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்...

சமைக்கும் முறை : துவரம் பருப்பை நன்கு குழைவாக வேக வைத்து எடுத்து தனியாக வைத்து.. பிறகு வாணலியில் 25 ml எண்ணை விட்டு மிளகு,க.பருப்பு, வரகொத்தமல்லி, வரமிளகாய் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.. சிவந்த பின்பு அடுப்பை அணைத்து விட்டு துருவி வைத்த தேங்காயை இதில் கொட்டி வறுக்கவும்.. தேங்காய் சேர்க்கும் போது அடுப்பு எரியக்கூடாது தேங்காயும் நன்கு கலந்தவுடன் கடைசியாக சீரகம் சேர்த்து இறக்கி வைக்கவும்.. இதை நன்கு ஆற வைத்து மிக்சியில் தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.. இப்போது மீண்டும் வாணலியில் கடுகு உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு தாளித்து வெட்டி வைத்துள்ள முருங்கை, தக்காளி, பரங்கி காய்கறித்துண்டுகளை வாணலியில் கொட்டி வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.. காய்கறிகள் வெந்ததும் மிக்சியில் அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும்... நன்கு கொதித்ததும் து.பருப்பை சேர்த்து கிளறி நுரை அடங்கும் அளவில் உப்பு சேர்த்து நெய்விட்டு இறக்கி விடவும்.. சுவையான அரைத்த சாம்பார் ரெடி..! இட்லி, தோசை, வெண்பொங்கல், உப்புமா, பணியாரம் அனைத்திற்கும் ஏற்றது..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்சியினர் சுய பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் - கருணாநிதி

// இருக்குற காசையெல்லாம் எடுத்து உண்டியில்ல போடு உடன்பிறப்பே .. சுசகமா நடந்துக்கோங்க

:D :d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவு என்றால் என்ன?

கள்ளை ஒழிப்பதற்காக, நன்றாக வளர்ந்திருக்கும் தென்னந்தோப்பையே வெட்டி வீழ்த்துவதற்கு பெயர் தான் ‪#‎பகுத்தறிவு‬

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவு என்றால் என்ன?

கள்ளை ஒழிப்பதற்காக, நன்றாக வளர்ந்திருக்கும் தென்னந்தோப்பையே வெட்டி வீழ்த்துவதற்கு பெயர் தான் ‪#‎பகுத்தறிவு‬

 

பகுத்து அறிவது பகுத்தறிவு. பெரியார் சொன்னார் என்கிற காரணத்தினால் அச்சொல்லை வெறுப்பது எப்படி சரியாகும்?  :rolleyes:

 

ராஜபக்ச திருப்பதிக்குப் போய்விட்டார் என்பதற்காக தமிழர்கள் போகக்கூடாதா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரதி பலன் எதிர்பாராமல் செய்கின்ற உதவி மட்டுந்தான் ...

உங்கள் புண்ணிய கணக்கில் சேரூம் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர் ஸ்ரீதர் அவரின் படத்துக்கு இசையமைக்க

தொடர்ந்து ஆறு முறை வந்தார் ..

அத்துனை படங்களுக்கு எம் எஸ் வி இசையமைத்து விட்டு என்னிடம் வருவது எனக்கு ஏற்புடையதாக தெரியவில்லை !

நிச்சயம் அவர் இசையினை மதிப்பிட முடியாது..

.

ஐந்து முறை தவிர்த்து வந்த நான் ஆறாவது முறையாக சொல்லிவிட்டேன்..

சார்,, உங்களுடைய 56 படங்களுக்கு எம் எஸ் வி அண்ணா இசையமைத்துள்ளார்.. அதில் எங்கும் எதிலும் எந்த தொய்வும் இருந்ததில்லை.. எல்லாமே சிறப்பான பாடல்கள்..!

.

உங்கள் அவசரத்துக்கு பாடல்களை போட்டு கொடுத்துவிட்டு. அதை போல அல்லாமல்

ஸ்ரீதர் பட பாட்டு கெட்டு விட்டது என்று அந்த கெட்ட பேரை நான் வாங்கி கொள்ள தயாரில்லை..இசையமைக்க முடியாது என்று மறுத்து விட்டேன்..!

>

அங்கே இருந்த பாரதிராஜா , அமர் எல்லாமே நீ சரியான மண்டைக்கனம் பிடித்தவன் என்று திட்டினர்.. அவர்களை போலவே பலரும்.!

>

ஆனால் அன்றிரவு நான் நிம்மதியாக தூங்கினேன்..

>

அதன் பின்னர் எம் எஸ் வி அவர்களை சந்தோசமாக சந்திக்க முடிகிறது..

நவராத்திரி நாளில் வந்த எம் எஸ் வி இடம் இதை சொன்ன போது ஆச்சரியமாக கேட்டார்..

>

நான் இப்படித்தான் .. எதற்காக ஒத்துக்கொள்வேன்.. ஏன் மறுக்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்..

சில சமயங்களில் எனக்கே கூட தெரியாது.. .

>

பாஸ்கரும் , அமரும் , பாரதிராஜாவும் போல மண்டைக்கனம் என்று சொன்னாலும் ..ஆமாம் என்று சொல்லிவிட்டேன்.!

>

அன்றிரவு நிம்மதியாக தூங்கினேன் !

‪#‎இளையராஜா‬ !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவனுக்கு கிடைத்தது

என்று சக மனிதன்

பொறாமைப்படாத ஒரே

விஷயம் ‪#‎மரணம்‬ மட்டுமே

‪#‎படித்ததில்_உரைத்தது‬

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வி. சபேசன்

2 மணி நேரம் முன்பு

இன்று கலைஞருக்கு 91 வயதாகிறது.

ஈழத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் அழிவுக்கு கலைஞரை பலர் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு அறியாமை, மனப்பிறழ்வு, கயமைத்தனம் என்று நிறையக் காரணங்கள் இருக்கின்றன.

கலைஞர் மீதான வெறுப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்றால், தமிழ்நாட்டு அரசியலில் கலைஞரின் பக்கம் நிற்கிறார்கள் என்பதற்காக, எங்களோடு மிகக் கடினமான காலங்களில் எல்லாம் துணையாக நின்று ஆதரவு தந்த ஐயா வீரமணி, ஐயா சுபவீரபாண்டியன் போன்றவர்களை வசைபாடுகின்ற அளவிற்கு மனப்பிறள்வு முற்றிப் போய்க் கிடக்கின்றது.

எங்கள் பக்கத்தில் நடந்த தவறுகளை மறைக்கின்ற கயமைத்தனமே இதில் முக்கியமானது. எங்களின் தவறுகள் பேசப்படுவதில்லை. மேற்குலக நாடுகளின் பங்கு இதில் என்ன என்பது பற்றி பேசப்படுவதில்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் முதற் குற்றவாளி ஆக்கப்பட்டு விட்டார்.

போர் முடிவதற்கு பத்து நாட்களின் முன்னர் நடேசன் தமிழக வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளிக்கிறார். அதில்தான் தீபன் போன்ற தளபதிகள் வீரச்சாவு அடைந்து விட்டார்கள் என்பதையும் அறிவிக்கின்றார்.

அதில் நடேசன் போரின் நிலைமை பற்றி சொல்கின்ற போது 'இராணுவத்தினர் பலத்த அழிவை சந்தித்து விட்டார்கள், களைத்துப் போய் விட்டார்கள், நாங்கள் நடந்து போயே அவர்களை விரட்டி அடிக்கின்ற நிலையில் நிற்கின்றோம்' என்பதாக சொல்கின்றார்.

உண்மையில் போராட்டம் அழியப் போகிறது என்கின்ற செய்தி கலைஞருக்கு சரியான முறையில் தெரிவிக்கப்பட்டதா என்கின்ற கேள்வி இங்கே இருக்கின்றது. அப்படி தெரிவிக்கப்பட்டிருந்தால், அழிவை தடுப்பதற்காக கலைஞர் தெரிவித்த ஆலோசனைகள் கவனத்தில் எடுக்கப்பட்டதா என்கின்ற இன்னொரு கேள்வியும் இருக்கின்றது.

கலைஞர் தமது பதவியை ராஜினமா செய்திருந்தால், தமிழ்நாட்டில் திமுக இயக்கம் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கும். ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வாயே திறந்திருக்க மாட்டார். புலிகளால்தான் மக்கள் அழிகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருந்திருப்பார்.

முள்ளிவாய்க்கால் முடிவு எக்காரணம் கொண்டும் மாறியிருக்காது.

ஈழத்தில் ஒரு இன விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்றால், அதே போன்று தமிழ்நாட்டில் ஒரு சமூக விடுதலைப் போராட்டம் ஆண்டாண்டு காலமாய் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அதில் திமுக கட்சியினதும் கலைஞரினதும் பங்களிப்பும் தேவையும் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் வாழ்க!

  • கருத்துக்கள உறவுகள்

வி.சபேசன் சார்.. நல்லாவே சமாளிக்கிறீங்க... :D

  • கருத்துக்கள உறவுகள்

வி. சபேசன்

2 மணி நேரம் முன்பு

இன்று கலைஞருக்கு 91 வயதாகிறது.

ஈழத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் அழிவுக்கு கலைஞரை பலர் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு அறியாமை, மனப்பிறழ்வு, கயமைத்தனம் என்று நிறையக் காரணங்கள் இருக்கின்றன.

கலைஞர் மீதான வெறுப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்றால், தமிழ்நாட்டு அரசியலில் கலைஞரின் பக்கம் நிற்கிறார்கள் என்பதற்காக, எங்களோடு மிகக் கடினமான காலங்களில் எல்லாம் துணையாக நின்று ஆதரவு தந்த ஐயா வீரமணி, ஐயா சுபவீரபாண்டியன் போன்றவர்களை வசைபாடுகின்ற அளவிற்கு மனப்பிறள்வு முற்றிப் போய்க் கிடக்கின்றது.

எங்கள் பக்கத்தில் நடந்த தவறுகளை மறைக்கின்ற கயமைத்தனமே இதில் முக்கியமானது. எங்களின் தவறுகள் பேசப்படுவதில்லை. மேற்குலக நாடுகளின் பங்கு இதில் என்ன என்பது பற்றி பேசப்படுவதில்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் முதற் குற்றவாளி ஆக்கப்பட்டு விட்டார்.

போர் முடிவதற்கு பத்து நாட்களின் முன்னர் நடேசன் தமிழக வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளிக்கிறார். அதில்தான் தீபன் போன்ற தளபதிகள் வீரச்சாவு அடைந்து விட்டார்கள் என்பதையும் அறிவிக்கின்றார்.

அதில் நடேசன் போரின் நிலைமை பற்றி சொல்கின்ற போது 'இராணுவத்தினர் பலத்த அழிவை சந்தித்து விட்டார்கள், களைத்துப் போய் விட்டார்கள், நாங்கள் நடந்து போயே அவர்களை விரட்டி அடிக்கின்ற நிலையில் நிற்கின்றோம்' என்பதாக சொல்கின்றார்.

உண்மையில் போராட்டம் அழியப் போகிறது என்கின்ற செய்தி கலைஞருக்கு சரியான முறையில் தெரிவிக்கப்பட்டதா என்கின்ற கேள்வி இங்கே இருக்கின்றது. அப்படி தெரிவிக்கப்பட்டிருந்தால், அழிவை தடுப்பதற்காக கலைஞர் தெரிவித்த ஆலோசனைகள் கவனத்தில் எடுக்கப்பட்டதா என்கின்ற இன்னொரு கேள்வியும் இருக்கின்றது.

கலைஞர் தமது பதவியை ராஜினமா செய்திருந்தால், தமிழ்நாட்டில் திமுக இயக்கம் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கும். ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வாயே திறந்திருக்க மாட்டார். புலிகளால்தான் மக்கள் அழிகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருந்திருப்பார்.

முள்ளிவாய்க்கால் முடிவு எக்காரணம் கொண்டும் மாறியிருக்காது.

ஈழத்தில் ஒரு இன விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்றால், அதே போன்று தமிழ்நாட்டில் ஒரு சமூக விடுதலைப் போராட்டம் ஆண்டாண்டு காலமாய் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அதில் திமுக கட்சியினதும் கலைஞரினதும் பங்களிப்பும் தேவையும் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் வாழ்க!

 

தமிழகத்தின் முதலமைச்சராக  எத்தனை முறை  இருந்தார்....??

இதைக்கூட தெரிந்து கொள்ளாமல்..........???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தின் முதலமைச்சராக  எத்தனை முறை  இருந்தார்....??

இதைக்கூட தெரிந்து கொள்ளாமல்..........???

 

 விசுகர்! நரம்பில்லாத நாக்கால் எப்படியும் கதைக்கலாம் என்பதற்கு இவர்கள்தான் உண்மையான உதாரண புத்திரர்கள்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

calculator வந்தது ..வாய் கணக்கு மறந்தது ..cellphoneல் message text செய்து வார்த்தைகள் சுருங்கியது.... smartphone வந்தது ... spelling மறந்தது... மொத்தத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நம் மூளையை முடக்கியது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல்ங்கிறது ஒரு ‪#‎competition‬. அதுல நீ முதல்ல ஏமாத்துறியா, இல்ல அவ முதல்ல ஏமாத்துறாளாங்க்றது தான் போட்டியே .......

  • கருத்துக்கள உறவுகள்

காதல்ங்கிறது ஒரு ‪#‎competition‬. அதுல நீ முதல்ல ஏமாத்துறியா, இல்ல அவ முதல்ல ஏமாத்துறாளாங்க்றது தான் போட்டியே .......

உங்களுக்கான சந்தர்ப்பம் மிக மிக குறைவு

Edited by நந்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகநூளில் காதல் கண்டியில் சம்பவம் 65 வயது தாத்தா 17 வயது பொண்ணு கூட loves செய்தி கேள்வி படலியா? உங்க வயசுக்காரங்களுக்கே சந்தர்பம் இருக்கும் போது நமக்கு இருக்காதா என்ன...:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்துலயே ரொம்ப சீரியஸான விஷயம் காமெடி பண்றது.,

உலகத்துலயே ரொம்ப காமெடியான விஷயம் சீரியஸா இருக்குறது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்லடுப்புல கறிக்கொழம்பு வச்சப்ப கரி புடிக்கிற குண்டா மூஞ்சிங்களா, அடுத்தவன தாழ்த்தி பேசாம, உங்கள உயர்த்தி காமிக்கவே மாட்டீங்களா.............?

:D :d

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.