Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியா பிரஜாவுரிமைப் பரீட்சை - மோசடியும், சிக்கப் போகும் நம்மவர்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரித்தானியா பிரஜாவுரிமைப் பரீட்சை - மோசடிக் கூட்டமும், அவர்களிடம் சிக்கிய பல, நம்மவர்கள் உட்பட்ட, குடிவரவாளர்கள் குறித்து கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஒரு பதிவு ஒன்றை இட்டு இருந்தேன்.
 
பிரித்தானியா பிரஜாவுரிமை பெற இரு வழிகள் (கடந்த அக்டோபர் வரை) இருந்தன. 
 
முதலாவது: 82 பக்கங்கள் கொண்ட 'Life in the UK' எனும் புத்தகம் படித்து பரீட்சை.
 
இரண்டாவது: முதலாவது முறையில் படித்து சித்தி அடைய முடியாத ஆங்கில அறிவு இல்லாதோருக்கு ஒரு சலுகையாக 'ஒரு அங்கீகரிக்கப் பட்ட' ஆங்கிலம் கற்பிக்கும் நிறுவனத்தில் சேர்ந்து, குறைந்தது மூன்று மாதம் படித்து ஆங்கில பரீட்சை (ESOL - B1 Level) எழுதி, அந்த சான்றிதழை அனுப்பினால் ஏற்றுக் கொண்டார்கள்.
 
இங்கே இரண்டாவது முறையில் பெரும் மோசடிகள், மூன்று மாதம், இரண்டாகி, ஒன்றாகி, ஒருவாரமாகி, இறுதியில் வரவே தேவை இல்லை. £500 தந்தால்,  சான்றிதழை தருகிறோம் என்ற அளவுக்கு மோசடி வளர்ந்த நிலையில், கடந்த அக்டோபர் முதல் Life in the UK  புத்தகம் 192 பக்கமாகி, இரண்டுமே கட்டாயம் என அரசு அறிவித்து விட்டது.
 
இந்த முதலாவது பரீட்சை, எம்மவருக்கு மட்டமல்ல, பல படித்த ஆங்கிலம் வாசிக்க கூடியவர்களுக்கே மிகவும் கடினமாகி விட்ட ஒன்றாகி விட்டது.
 
இந்நிலையில், சற்றும் மனம் தளரா, மோசடியாளர்கள், முதலில் ஆங்கில பரீட்சையினை முடியுங்கள். பிறகு இரண்டாவதை பார்த்துக் கொள்ளலாம் என்று மோசடி முறையில் பணத்தினை வாங்கி சான்றிதழை கொடுக்கும் வேலையினை தொடர்ந்தார்கள்.
 
இவ்விரு பரீட்சைகளும், பிரஜாவுரிமை பத்திரம் பெறுவதற்கு மட்டுமே என்பதனையும், கடவுச் சீட்டு, பெறுவதற்கு, அதிகாரிகளுடனான நேர்முக அழைப்பு உள்ளது என்பதனை இந்த மோசடியில் சிக்கும் எம்மவரில் பலர் அறிந்திருக்கவில்லை என்பதனையும், இவர்களது ஆங்கில அறிவு அதிகாரிகளினால் மதிப்பிடப் படும் என்பது இவர்களுக்கு சொல்லப் படுவதில்லை எனவும், தமிழர்கள் இந்த மோசடி குறித்து அவதானமாக இருக்குமாறும் எனது பதிவில் குறித்து இருந்தேன்.
 
இந்த நிலையில் இரு வாரங்களுக்கு முன்னர், 'Lerarn, Pass, Succed' எனும் பாகிஸ்தானியருக்கு சொந்தமான நிறுவனத்தில், இந்த ஆங்கில சான்றிதழை £500 கொடுத்து, இல்லாத ஒருவருக்கு, London Daily Mail பத்திரிகையின் under cover reporter பெற்றுக் கொள்ள, இதை எதிர்க் கட்சிகள் பிடித்துக் கொள்ள, அரசு உடனடி விசாரணைக்கு உத்தரவு இட்டு உள்ளது.
 
அந்த நிறுவனத்தின் ஏழு கிளைகள் சீல் பண்ணப் பட்டு பல ஆவணங்கள், எடுத்து செல்லப் பட்டு உள்ளன. அனேகமாக பலர் சிக்கப் போகின்றனர். பலர் குடியுரிமை இழக்கும் நிலை வரலாம்.
 
குறுக்கு வழியில் நம்பிக்கை வைக்கும் எம்மவர்களுக்கு இது ஒரு பெரும் பாடமாகப் போகின்றது.
 
முதலாவது link ல் (Daily Mail) உள்ள (பாக்கியர் undercover reporter உடன் பேசும்)  வீடியோவினைப் பாருங்கள். 
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாற்றுபவர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாவது தவிர்க்க முடியாததுதானே..

Relook at all the applicants who went through this centre and any other that seems to have very high pass rates and start taking them away!!!! Have we not devalued our passp[orts enough?

இப்படி ஒருவர் கருத்து பதிந்துள்ளார். :rolleyes: 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏமாற்றுபவர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாவது தவிர்க்க முடியாததுதானே..

இப்படி ஒருவர் கருத்து பதிந்துள்ளார். :rolleyes: 

அதில் வேடிக்கை, சான்றிதழ் வழங்கிய  ஹெட் ஆபீஸ் பாக்கியர், undercover ரிப்போட்டரிடம்  சிக்கிய பிரான்ச் ஆபீஸ் பாக்கியர், மேல், குய்யோ, முறையோ, இப்படியும் மனிசன் செய்யலாமா என்று கதை அளப்பது தான்...

'Wrong and ridiculous'

Uzwan Ghani, a director of LPS, which has four branches in London, said the problem was confined to the Upton Park branch and the group was suspending exam results from the centre.

"I'm shocked that this has happened and am very concerned as to how it could have happened," he was quoted by the Mail as saying.

"We are very thorough when it comes to checking IDs of candidates before they take the test, so I will have to investigate which of the centres the test was taken in and who the assessor was.

"I've been in the business for five years and I've never come across something like this and I would not allow it. It is wrong and ridiculous."

மாட்டிய இவர்கள் பெரும் முதலைகள். இவர்களது சிறு கிளைகளாக தமிழர் நிறுவனங்களும் இருந்தன, இவர்களில் சிலர் கடந்த அக்டோபர் முதல் மூட்டை கட்ட, வேறு சிலர் தொடர்ந்தார்கள்.
 
இவர்களும் சிக்கக் கூடும்

Edited by Nathamuni

யாழில் லண்டன் அங்கத்தவர் எண்ணிக்கை குறைய போகுது  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏமாற்றுபவர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாவது தவிர்க்க முடியாததுதானே..

இப்படி ஒருவர் கருத்து பதிந்துள்ளார். :rolleyes: 

இன்னுமொரு பதிவில் ஒருவர் சொல்கிறார்:
 
ஒவ்வொருவரும் கொடுத்த £500 இந்த நிறுவனத்தில் இருந்து பறித்து, டிக்கெட் போட்டு அவர்களை சொந்த நாடுக்கு ஏத்தி அனுப்பினால் புண்ணியமாய் போகுமாம். 
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் குடியேற்ற வாசிகள் மீது உள்ளூர்வாசிகள் வெறுப்பில்தான் உள்ளார்கள். அரசியல் / சட்ட காரணிகளால் வெளியில் பேசுவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் லண்டன் அங்கத்தவர் எண்ணிக்கை குறைய போகுது  :lol:

எதிராளியில்லாமல் கோல் போடுவதற்க்கு உங்கடை ஆசை ஆனால் கடுமையான எதிராளிகளிடுடன் மோதி சென்று இறங்கும்  கோலை பார்க்கத்தான்  மக்கள் திரளுகிறார்கள் கணவு காண்பது அவரவர் உரிமை வாழ்த்துக்கள் பெரியவர்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் குடியேற்ற வாசிகள் மீது உள்ளூர்வாசிகள் வெறுப்பில்தான் உள்ளார்கள். அரசியல் / சட்ட காரணிகளால் வெளியில் பேசுவதில்லை. 

 குடியேற்ற வாசிகள் வராவிட்டால் லண்டன் முதியோர்களின் வாழ்விடமாயிருக்கும் அனேக கட்டிடங்களில் பேய்தான் குடியிருந்திருக்கும் அயல் வெள்ளைகிழட்டுக்கு அடிக்கடி வாயை அடைக்க சொல்லும்வசனம் எடுத்துக்காட்டாக குடியேற்ற வாசிகள் அற்ற இங்கிலாந்தின் முன்னைய நகரங்களை பார்கலாம்.நீ சொல்வதில் உண்மையிருக்கலாம் என்றவாறு பிராண்சில் இருந்து கொண்டுவரும் அவரின் விருப்பத்திற்க்குரிய போர்டெக்ஸ்(Bordeaux wine) வைனுடன் கிளம்பிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் மோசடி ஒரு பக்கம் இருக்க.. இங்கிலாந்திலேயே படிச்சு பட்டம் பெற்றவர்களையும் இந்த முதலாவது பரீட்சைக்கு தோற்றச் சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது. :lol:

எதுஎப்படியோ அண்மையில்... இந்தப் பரீட்சைக்கும் தோற்றி மிக இலகுவாக வெற்றி பெற முடிஞ்சுது. ஆனால் ஆங்கில அறிவு இல்லாமல் நாட்டுக்குள் நுழைந்தோர்..பலர் சித்தி பெற சிரமப்படுவதையும் அவதானிகக் கூடியதாக இருந்தது. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30,40 வருடங்களுக்கு முன்னர் வந்த ஈழ தமிழர்களுக்கும் இந்த பரீட்சை வைக்க வேண்டும். அப்பொழுதாவது தாயகப்பற்று வரட்டும்.........

நாட்டுபிரச்சனைகள் ஏதும் தெரியாத ஜடங்கள் வெளியேறட்டும்......   :)

பாபாவின் கதிரையை வைத்து பஜனை செய்பவர்களை நாடுகடத்த வேண்டும். :icon_idea:

இதனால் எமது சொந்தங்கள் நாடு கடத்த படுவது நகைப்புக்கு உரியதல்ல.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதனால் எமது சொந்தங்கள் நாடு கடத்த படுவது நகைப்புக்கு உரியதல்ல.........

நகைப்புக்குரியது நாடுகடத்தப்படுவதல்ல, சொந்தங்களின் முழு முட்டாள் தனம் தான்.
 
வீடு இல்லாமல் அலைந்தவனுக்கு, ஒதுங்க இடன் தந்தவனின் வீட்டில் ஆட்டையை  போட்ட கதை போல் தான் இதுவும். :(
 
தெளிவாக சொல்வதானால் வெண்ணை திரண்டு வரும் போது பானையை தூக்கி கடாசும் முட்டாள் தனம் அல்லவா இது. :o
 
என்ன அவசரம்? கொடுக்கும் பணத்துக்கு £500 களுக்கு ஆங்கிலம் முறையாக படிக்கலாம் அல்லவா?
 
அரசு சொன்ன மூன்று மாதத்துக்கு, அரச உதவியுடன் இலவசமாகவே படிக்கலாமே.
 
ஒரு பொருள் ஒரு கடையில் கிடைக்காவிடில் அடுத்த கடைக்கு போகலாம். அரசு தரும் பொருளை, பெற முறையாக முயற்சிக் காவிடில் வேறு எங்கே பெற முடியும்? 
 
தவறுக்கு வக்காலத்து வாங்க முடியாது. :blink:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.

எனக்கு தெரிந்த ஒருவர் மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன் கடவுச்சீட்டு நேர்முக தேர்வினை செய்திருந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் மோசடி ஒரு பக்கம் இருக்க.. இங்கிலாந்திலேயே படிச்சு பட்டம் பெற்றவர்களையும் இந்த முதலாவது பரீட்சைக்கு தோற்றச் சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது. :lol:

எதுஎப்படியோ அண்மையில்... இந்தப் பரீட்சைக்கும் தோற்றி மிக இலகுவாக வெற்றி பெற முடிஞ்சுது. ஆனால் ஆங்கில அறிவு இல்லாமல் நாட்டுக்குள் நுழைந்தோர்..பலர் சித்தி பெற சிரமப்படுவதையும் அவதானிகக் கூடியதாக இருந்தது. :icon_idea:

இந்த நாட்டில் குடி அமர விரும்புவோர், இந்த நாட்டின் வரலாறு, கலை, கலாச்சார, சட்ட விழுமியங்கள் தெரிந்து வாழ வேண்டும் என்பதே நோக்கம்.
 
இது மிகவும் வரவேற்கப் பட வேண்டியது.

நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.

எனக்கு தெரிந்த ஒருவர் மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன் கடவுச்சீட்டு நேர்முக தேர்வினை செய்திருந்தார்.

இதே போல ஆங்கில சான்றிதழ் அனுப்பி பின் மொழி பெயர்ப்பாளருடன், முட்டாள் தனமாக  சென்றவர்கள், முறையான அதிகாரிகளிடம் மாட்டி, ஆங்கிலம் படித்ததாக சான்றிதழ் அனுப்பி பின் எவ்வாறு  மொழி பெயர்ப்பாளருடன் வருகிறீர் என்று கேட்க, விழி பிதுங்கி, திருப்பி அனுப்பப் பட்டும் உள்ளனர்.

பள்ளிகூட பக்கம் போகாமல் கொடி பிடிப்பவர்கள் பாடு ரொம்ப திண்டாட்டம் தான் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்டில் குடி அமர விரும்புவோர், இந்த நாட்டின் வரலாறு, கலை, கலாச்சார, சட்ட விழுமியங்கள் தெரிந்து வாழ வேண்டும் என்பதே நோக்கம்.
 
இது மிகவும் வரவேற்கப் பட வேண்டியது.

ஒரு நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்வதும்.. அந்த நாட்டின் வழக்கங்களோடு ஒட்டிக்கொள்வதும்.. வரவேற்கப்பட வேண்டிய விடயம். அதனை திணிக்கப்படாது. மக்களா விரும்பிச் செய்யுற நிலையை உருவாக்கனும். உருவாக்கினால்.. மோசடிகள் நிகழ வாய்ப்பில்லை.

மேலும்.. இந்த நாட்டில்.. பிறந்து.. ஆண்டு 1 முதல் பல்கலைக்கழகம் வரை படிக்கிறவர்கள் கூட அறிந்திராத வரலாற்றை வெறும் குடியேற்றக்காரர்கள் என்பதற்காக அவர்கள் மீது திணிக்கக் கூடாது.

மேற்படி நூலில் உள்ள பல விடயங்களை உள்ளூர்வாசிகளே அறிந்திராத போது.. குடியேற்றக்காரர்கள் ஏன் அறிந்திருக்கனுன்னு ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மொழிப்புலமை வேறு.. வரலாற்றை திணிப்பது என்பது வேறு..! இதில் திணிப்புத்தான் அதிகம் உள்ளதாக உணர முடிகிறது. :icon_idea::)

Edited by nedukkalapoovan

உங்கள் வீட்டில் தங்க, உங்கள் அழைப்பு இல்லாமல் நான் குடும்பத்துடன் வந்தால், திரத்தாமல், சரி அப்படியே ஒரமாக, இருந்து பிழைத்துப் போ என்று பெரு மனதுடன் நீங்கள் வீட்டு, உங்கள் வீடு, குடும்ப பாரம்பரியம், வரலாறு குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்,  பாத்ரூம் பாவிக்கும் நேரம், கரண்ட் பாவனை, பிளைகளுக்கான அருகிலுள்ள பாடசாலை வசதிகள், மருத்துவ, போக்குவரத்து  வசதிகள்  குறித்து நாம் அறிய வேண்டும் என நீங்கள் எதிர் பார்த்தால், அது உங்கள் குடும்பத்துக்கு தெரியுமோ முதலில் என்று நான் கேட்டால் எப்படி? 

நாதமுனி.. எங்கள் வீட்டுக்கு இந்த இங்கிலாந்து விருந்தினர் வந்தபோது அடாத்தாக வீட்டையே பிடித்து வைத்திருந்தவர்கள்.. ஞாபகம் இருக்கே.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி.. எங்கள் வீட்டுக்கு இந்த இங்கிலாந்து விருந்தினர் வந்தபோது அடாத்தாக வீட்டையே பிடித்து வைத்திருந்தவர்கள்.. ஞாபகம் இருக்கே.. :D

இசையர்,
 
உங்கள் வீடு வந்து, உங்கள் முப்பாட்டன் அப்ப $1,000 கடன் வாங்கினார் , இப்ப நீங்கள் தான் திருப்பி தர வேண்டும். மான ரோசம் இருந்தால் கடனை அடையப்பா, இசையப்பா என்று சொன்னால்... என்ன சொல்வீர்கள்.  
 
'சரி தான் போடா.... எண்டு உலகிலுள்ள கெட்ட வார்த்தைகள் எல்லாம் தேடுவீர்கள் திட்ட.... இல்லையா..  :icon_mrgreen:
 
அவ்வாறு தான் அவர்களும் சொல்வார்கள், நாம் பழம் கதை சொன்னால்..
 
இந்த வெள்ளைக்காரர்களின்  'East India Company' முக்கியமாக இந்தியாவில, தமக்குள்ள அடிபட்ட அந்த நாதாரி மன்னர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து, கடனுக்கு ஆயுதம் கொடுத்து, அது சரியாக கொடுக்கப் படாத போது, நிலங்களை, ஊர்களை பெற்றுக் (பறித்துக்) கொண்டார்கள்.  :o
 
இந்த வட்டிப் பணத்தினை, திறை என்று சொல்லி மக்களை உசுப்பினார்கள் நம்ம கபோதிகள். எனினும் தம்மிடம் ஆயுதம் வாங்காது போனால், வாங்கிய அடுத்த ஊர் மன்னர் போரில் வென்று விடுவான் என்ற நிலையினை உண்டாக்கி, தந்திரமாக நடந்து கொண்டார்கள்.  :unsure:

East India Company தற்போதைய இந்தியாவுக்கு வர எத்தனை மன்னர்களிடம் விசா அனுமதி பெற்றார்கள்?  :icon_idea:

நாங்களும் இங்கிலாந்துக்குள் அடாத்தாக நுழைந்து நடுத்தரவர்க்க கடன் கொடுத்து அவர்கள் திருப்பித் தராதபட்சத்தில் அவர்களது வீடுகளைப் பறிப்போமா? :D

அமெரிக்கா சீனாவிடம் ட்ரில்லியன் கணக்கில் கடன் வாங்கியிருக்குதாமே? அதற்கென்ன வழி? :D

ஆக, தொடக்கி வைத்தது வெள்ளைகள்தான். இன்று குடியேற்ற வாசிகளை உள்ளே எடுப்பதும் தமது நன்மை கருதித்தான். உழைக்காத வயதான ஆட்களை ஸ்பொன்சர் செய்ய வெளிக்கிடும்போது தெரிகிறது இவர்களது கவனம் எங்கே உள்ளது என்பது.. :huh:  :D  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

East India Company தற்போதைய இந்தியாவுக்கு வர எத்தனை மன்னர்களிடம் விசா அனுமதி பெற்றார்கள்?  :icon_idea:

மன்னாதி மன்னா, இம்சை அரசா, புலிகேசி மன்னா,
 
இசையர், இங்கே வர, என்ன இலவோ, ஆங்...   வெசாவாம்.... கேட்கிறாரு... :D
 
என்ன எலவு அது, மாங்குனி மன்னரே?
 
புரியலை மன்னா.
 
மூடிக்கிட்டு, ஏதாவது, அவங்க ஊரு, சோமபானம் வாங்கிவர, ஆள் அனுப்பும் அமைச்சரே...அப்படியே, அவங்க ஊரு, அது.. அதுதான் பீடில்ல .... பீடி அதுவும் ....ஆ.. ஆங்....
:icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்வதும்.. அந்த நாட்டின் வழக்கங்களோடு ஒட்டிக்கொள்வதும்.. வரவேற்கப்பட வேண்டிய விடயம். அதனை திணிக்கப்படாது. மக்களா விரும்பிச் செய்யுற நிலையை உருவாக்கனும். உருவாக்கினால்.. மோசடிகள் நிகழ வாய்ப்பில்லை.

மேலும்.. இந்த நாட்டில்.. பிறந்து.. ஆண்டு 1 முதல் பல்கலைக்கழகம் வரை படிக்கிறவர்கள் கூட அறிந்திராத வரலாற்றை வெறும் குடியேற்றக்காரர்கள் என்பதற்காக அவர்கள் மீது திணிக்கக் கூடாது.

மேற்படி நூலில் உள்ள பல விடயங்களை உள்ளூர்வாசிகளே அறிந்திராத போது.. குடியேற்றக்காரர்கள் ஏன் அறிந்திருக்கனுன்னு ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மொழிப்புலமை வேறு.. வரலாற்றை திணிப்பது என்பது வேறு..! இதில் திணிப்புத்தான் அதிகம் உள்ளதாக உணர முடிகிறது. :icon_idea::)

இதில் நெடுக்கர் சொல்வது சரி.இங்கு பிறந்து வளர்ந்து,மெத்த படித்த ஆட்களுக்கே ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாமல் இருக்கும் போது குடியேற்றவாசிகளிடம் வரலாற்றை எதிர்பார்ப்பதை விட கேவலம் எதுவுமில்லை[சில நேரம் தங்கட நாட்டுக்காரனுக்கு தெரியாத விசயம் குடியேற்றவாசிகளுக்கு தெரிந்திருப்பது பெருமை என நினைக்கிறார்களோ என்னவோ].ஆனால் ஆங்கில் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்...நாதமுனியின் சில கேணத் தனமான கருத்துக்களை இந்தத் திரியில் தான் முதல்,முதல் காண்கிறேன்:D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வந்த காலபகுதிகளில் 70களிலும்80களிலும் வந்தவைகளிற்க்கு எங்களை கண்டால் பிடிக்காது காரணம் அவர்களின் இமேஜை நேரடியாகவே அகதி என்ற வட்டத்துக்குள் கொண்டுவந்துவிட்டமாம் 70களில் வந்த ஆன்டியும் சித்தும் எப்படிவாழ்கின்றனர் ஊருக்கு போன் அடிச்சு அப்ப £1.19+vat bt  ஒருத்தர் விடாம நம்ம தோஸ்த் சொல்லிவிட்டான் பொடியளாக வீடு எடுத்து சமையல்களை பிரித்து கடுமையான இரண்டுவேலை உலகவேலைகிடையில் அகதிகளை திருப்பியனுப்பபோறாங்கள் என நியூஸ் வரும்போது மட்டும் அந்த ஆண்டி சிரித்தமுகத்துடன் எங்கள் வீடு தாண்டி செல்வதை கண்ணுற்றுருக்கிறன் அங்கிள் ஒரு படிமேல் கண்ட இடத்தில் அட்வைஸ் மழை இலவசமாக குறைந்த பட்ச்சம் 30 நிமிடங்களாவது கிடைக்கும் காலப்போக்கில் நம்முடன் இருப்பவன் bmw காரில் வந்தான் பிறகு வீடு மோட்கேச் அவனை பின் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக வாழ்வில் நிலையாணர்கள்.

                                                                                                                                                                                                                          ஆனாலும் சிற்றிஷன் விளையாட்டு திருக்குறளில் கைவைத்து சத்தியபிரமாணத்துடன் தென்லண்டன் தமிழர் நல அமைப்பு முடித்துவிட்டது. ஆனாலும் ஒவ்வொரு முறை விசா பிரச்சினை அகதிகளை திருப்பியனுப்புதல் என்றவுடன் ஆண்டியும் அங்கிளும் சாய் பஜனை முடிந்தபின் சிரித்த முகத்துடன் காணப்படுவார்கள் பஜனையின் பின் நடக்கும் வீணை கிளாசுக்கு பிள்ளையை கூட்டி செல்லும்போது கவனித்திருக்கிறன் இந்த பஜனை கூட்டத்தில் புதிய முகங்கள் அவர்கள் சட்டதரனிகளாம்.இப்ப கணகாலத்திற்க்கு பிறகு கடந்த ஞாயிறு சிரித்த முகத்துடன் பஜனை கூட்டம் காணப்பட்டது.

                                                                                                                                                                           இனி இந்த திரியை திரும்பவும் ஒருக்கா படித்தால் களத்தில் சிரிப்பவர்களை கண்டு கொள்ளலாம் அய்யோ தெரியாமல் நம்ம உறவு பிழை விட்டு விட்டுதே அதை அரவனைச்சு சட்டரீதியாக எப்படி மீட்கலாம் என துடிப்பதை விட்டு நக்கலும் நையாண்டி தனமும்  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் நெடுக்கர் சொல்வது சரி.இங்கு பிறந்து வளர்ந்து,மெத்த படித்த ஆட்களுக்கே ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாமல் இருக்கும் போது குடியேற்றவாசிகளிடம் வரலாற்றை எதிர்பார்ப்பதை விட கேவலம் எதுவுமில்லை[சில நேரம் தங்கட நாட்டுக்காரனுக்கு தெரியாத விசயம் குடியேற்றவாசிகளுக்கு தெரிந்திருப்பது பெருமை என நினைக்கிறார்களோ என்னவோ].ஆனால் ஆங்கில் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்...நாதமுனியின் சில கேணத் தனமான கருத்துக்களை இந்தத் திரியில் தான் முதல்,முதல் காண்கிறேன் :D

நீங்கள் அந்த 'Life in the UK' புத்தகம் படித்திருக்கிறீர்களா?

படித்திருந்தால் இப்படி பதில் தர மாட்டீர்கள்.

உண்மையில் நெடுக்கர் பதிவு என்னை ஆச்சரியப் படுத்தியது.

குடிவரவாளர்களுக்கு இருக்க இடம் தந்தால், அமைதியாக இருப்பதை விட்டு விட்டு, இங்கே வந்த பின், 'கட்டாயக் கலியாணம்' ('Forced marrage') கௌரவ கொலை, ('Honour Killing'), பெண் குழதைகள் மீதான பெண் உறுப்பு சேதப் படுத்துதல் ('Female Gentile Mutilation) போன்றவடினை இங்கே கொண்டு வந்து துளைக்காதீர்கள் என்று வலியுறத்த படுகின்றது. மனைவியை அடித்து துவைப்பது (Domestic Violance) அது தொடர்பான விழிப்புணர்வு குறித்து அறிவுறுத்தப் படுகின்றது.

இங்கே கூட எத்தனை நம் தமிழ் பெண்கள் இந்த 'domestic vilolance' இனால் பாதிக்கப் பட்டும், விபரம் தெரியாத காரணத்தினால், நரக வாழ்க்கை வாழ்கிறார்கள் தெரியுமா?

பிரச்சனை வந்தால் போலிஸ் கார்களுடன் எவ்வாறு சமாளிப்பது, நீதிமன்றில் நின்றால் பேந்தப் பேந்த முழிக்காமல் என்ன முறைமை என்று சொல்லித் தருகின்றது.

இந்த நாட்டில், ஆங்கிலத்தினை படித்து முறையாக வாழ்ந்து பேர் சொல்லக் கூடிய வகையில் வாழாமல், நாயிக்கு கடலிலும் நக்குத் தண்ணி தான் (மன்னிக்கவும்) என்று வாழ வேண்டும் என்றா சொல்கிறீர்கள்?

ஆங்கிலம் தெரியாமல், தகுந்த வேலை செய்ய / எடுக்க முடியாமல் 1 பவுனுக்கு 5 வடை, நெருப்பு குளித்து, செய்து, பிழைப்பு தேடும் நம்மவர்கள் குறித்து அனுதாபம் இல்லையா?

சிலவேளைகளில் உங்கள் கருத்து முரண்பாடானது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி உண்மையில் இந்தப் புத்தகத்தை நான் இன்னும் படிக்கவில்லை.ஆங்கில அறிவு கட்டாயம் எல்லோருக்கும் இருக்க வேண்டும் அதை முதலிலே எழுதி விட்டேன்.ஆனால் பழைய வரலாறு,பழைய சரித்திரம் எல்லாம் குடியேற்றவாசிகள் தெரிந்திருக்க வேண்டிய தேவையில்லை என்பதே என் கருத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.