Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடைகளுக்கு தீவைப்பு: ஊரடங்கு சட்டத்தை மீறினால் கைது செய்யப்படுவர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கலவரம் யுத்தம் என்று எங்கு நடந்தாலும் ........
எதுவும் அறியாத அப்பாவிகள்தான் பலியாவது என்பது விதியாகி விட்டது.
 
தமிழர்களுக்கு கொடுமை செய்த எந்த முஸ்லீமும் இதில் பாதித்திருக்க வாய்ப்பில்லை.
அவர்களுக்கும் இராணுவ காவல் இப்போதும் இருக்கலாம்.
அனால்  இதில் உடமைகளை இழந்தவர்கள் என்னமோ கஷ்ட்டபட்டு உளைத்தவ்ர்கலாகதான் இருப்பார்கள்.
 
அப்பாவிகளின் மரணம் தடுக்கப்பட வேண்டிய ஒன்று !
இந்த நாதாரி உலகில் அது முடியாத காரியம்.
 
அப்ப்பவிகளுக்காக குரல் கொடுப்பவன் இந்த உலகில் பயங்கரவாதி !
  • Replies 59
  • Views 4.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அளுத்கமவில் 500க்கும் மேற்பட்டவர்கள் பொல்லு தடிகளுடன் ஆர்ப்பாட்டம்: முஸ்லிம்களை தாக்கவேண்டும் என கோஷம்

 

Dd32ad3a2dd.jpgவலகெதர, மீகம மற்றும் கொட்டபிட்டி கிராமங்களைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பொல்லு தடிகளுடன் அளுத்தகம பகுதியில் குழுமியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கின்றார். குறித்த நபர்கள் முஸ்லிம்கள் மீதும் படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ள வேண்டும் என கோஷம் இடுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

virakesari

  • தொடங்கியவர்
முஸ்லிம்களைப் பாதுகாக்க கோரி இலங்கை தூதரகம் சென்னையில் முற்றுகை.
 
இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக்கோரியும், பொதுபலசேனா அமைப்பைத் தடைசெய்யக் கோரியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்பாக இந்திய முஸ்லிம் அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தவ்ஹீத் ஜமாத் அமைப்பே இன்று காலை தூதரகத்துக்கு முன் கூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புகைப்படங்களையும் எரியூட்டினர். சம்பவம் அறிந்து தூதரகத்தைச் சுற்றி 500இற்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பேர்வரையானோரைப் பொலிஸார் கைது செய்தனர் என்றும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 
malarum.
 
 
ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக அரசு நடத்திய இனவாத யுத்தமே அளுத்கம சம்பவம் - மங்கள சமரவீர 
 
mangala%20samaraweera%204569ewd.jpg
 
தேசப்பற்று என்ற விடயத்தை முன்னிறுத்தி சிங்கள இனவாத வாக்குகளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கவரும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதே வேலை தெரியாத அரசாங்கத்தின் ஒரே தந்திரோபாயம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். இதற்காக தர்மத்தை போதிப்பதற்கு பதிலாக பகையை தூண்டும் காவியுடை அணிந்த பொறுக்கிகளை பயன்படுத்தி அரசாங்கம் இனவாதத்தை தூண்டி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில் - பொதுபல சேனா என்ற அமைப்பு அரச பாதுகாப்பின் கீழ், அளுத்கம மற்றும் பேருவளை நகரங்களில் மூன்று பேரை கொலை செய்து, பாடசாலைக்கு செல்லும் சிறுவனின் காலை உடைத்து, கடைகள் மற்றும் வீடுகளைத் தீயிட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்பு என்பது அரச புலனாய்வுப் பிரிவினரால் வழிநடத்தப்படும் அமைப்பாகும். அந்த அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் என்பவர் பௌத்த பிக்குவா என்பது சந்தேகத்திற்குரியது. அரச புலனாய்வுப் பிரிவினரால் வழிநடத்தப்படும் நபர்களின் பெயர் பட்டியல்களை எதிர்வரும் நாட்களில் ஊடகங்களுக்கு தரப்படும். புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்களும் பொதுபல சேனா அமைப்பில் இருக்கின்றனர். அளுத்கமவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இனவாத யுத்தம் பதுளை வரை பரவியுள்ளது. பதுளை நகரில் இதுவரை மூன்று கடைகள் தீயிடப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தியவர்களுக்கு அங்கு சென்ற பாதுகாப்பு தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கினர். அவர்கள் அதனை தடுக்க முயற்சிக்கவில்லை. பொதுபல சேனா அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தை போல் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமோ ஐக்கிய தேசியக்கட்சியோ நடத்தியிருந்தால், அதனை அடக்கி ஒடுக்கியிருப்பார்கள். இதனால், இது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக அதிரடிப்படையினரின் உதவியுடன் அரசாங்கம் நடத்திய இனவாதம் யுத்தம் என்பது தெளிவாகியுள்ளது - என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டார். 
 
malarum.

Edited by Athavan CH

அரசியல் அழுகை!

http://www.youtube.com/watch?v=DLr10LGQxw8

Sri Lanka Muslims 'fear Buddhist extremists
Three Muslims are reported to have been killed in clashes with hard-line Buddhists in southern Sri Lanka.
For the past two years, Sinhalese Buddhist groups have been staging anti-Muslim demonstrations, but these fatalities are the worst outbreak of sectarian violence in recent years.
 
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

முஸ்லிம்களைப் பாதுகாக்க கோரி இலங்கை தூதரகம் சென்னையில் முற்றுகை.
 
இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக்கோரியும், பொதுபலசேனா அமைப்பைத் தடைசெய்யக் கோரியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்பாக இந்திய முஸ்லிம் அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தவ்ஹீத் ஜமாத் அமைப்பே இன்று காலை தூதரகத்துக்கு முன் கூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புகைப்படங்களையும் எரியூட்டினர். சம்பவம் அறிந்து தூதரகத்தைச் சுற்றி 500இற்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பேர்வரையானோரைப் பொலிஸார் கைது செய்தனர் என்றும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 
malarum.

 

எண்ணெய் ஊற்றி  நாம் வளர்க்கவேண்டும்..............

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால், இன அழிப்பு, போர்குற்றம் என்று எல்லாம் இப்ப இரண்டாவது பிரச்சனையா பின்னுக்கு போய்ட்டுது. 

 

இலஙகையில நடக்கிறது மதங்களுக்கிடையிலான போர் என்றது அமெரிக்க தீர்மானம். அது இப்ப நடைமுறையில வந்திட்டுது. 

 

அடுத்த தீர்மானத்தில புத்தம்-முஸ்லிம் என்ற சொற்கள் மட்டுமே இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

 

முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க நிறைய முஸ்லிம் நாடுகள் இருக்கு. இதுக்குள்ள நாங்க போய் பலியாடாகி அடி வாங்காம இருக்கிறது நல்லது. அம்மனத்தை மறைக்க ஒரு பிட்டு துண்டுடன் அலைகின்றோம். அப்புறம் அதுவும் இல்லாமல் தான் நிற்க வேண்டும். 

 

முஸ்லிம்கள் மீதான தாக்குதலை நான் கடுங்கோபத்துடன் தண்டிக்கின்றேன்! 

  • கருத்துக்கள உறவுகள்

1983 தமிழ் சிங்கள இனக்கலவரம்.....ஐ.தே.க ஆட்சி....நீதிஅமைச்சர் தேவநாயகம்....பின்புலம் ஜெ.வி .பி ...படைத்தரப்பு பார்வையாளர்கள்.....பாதிப்படைந்தவர்கள் அப்பாவிதமிழர்கள்....

2014 முஸ்லிம் சிங்கள இனக்கலவரம்.....ம.சு.மு ஆட்சி...நீதி அமைச்சர் கக்கீம்.....பின்புலம் பொதுபலசேனா....படைத்தரப்பு பார்வையாளர்கள்......பாதிப்படைந்தவர்கள் அப்பாவிமுஸ்லிம்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு அறிவே இல்லையா? அங்கு பலியிடப்படுவது உயிர்களை,முஸ்லீம்கள் துரோகிகள்தான் இருக்கட்டுமே தமிழர்களுக்கு தமிழர்கள் செய்ததை விட அவர்கள் செய்தது மிகவும் குறைவு,குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கத்தை இந்தியன் ஆமியின் செல்லுக்க விட்டு சாகடிக்கனும் என்றது தான் என்னுடைய ஆசையா இருந்தது. ஏன்னா அது அவருக்கு கொழும்பில்.. இருக்கேக்க.. ரப்பர் செல்லா எல்லோ தெரிஞ்சது.

 

அவர் வடக்குக் கிழக்கு பக்கமே தலைவைச்சுப் படுக்கேல்ல. அதனால ரப்பர் செல்லில மாட்டுப்படாத காரணத்தால்.. நிஜ புள்ளட்டுக்கு மாட்டுப்பட்டார். அமிர்தலிங்கத்தின் சாவுக்கு ஒரு உண்மைத் தமிழன்.. மனிதன்.. வருந்தமாட்டான். இங்க சிலர் வருந்துவினம். அவை யார் என்பது உலகிற்கே தெரியும்.

 

இங்க சிலருக்கு பொதுமக்கள் தாக்கப்படுவதற்கும்.. துரோகிகள் அழிக்கப்படுவதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் தெரியல்ல.

 

முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதற்கு அழுகிறவை.. கல்முனை.. மூதூர்.. கிண்ணியா.. நிலாவெளி.. சம்பாந்துறை.. என்று பல வடக்குக் கிழக்கு ஊர்களில் இருந்து முஸ்லீம்களால்.. எமது மக்கள் உடுக்கத் துணி கூட இல்லாமல் வெட்டியும் கொத்தியும் வெளியேற்றப்பட்டதற்கு ஏன் அழுகினம் இல்ல. அப்பவும் எமது மக்கள் மெளனமாகத்தான் இருந்தவை அகதி முகாம்களில். இப்ப கூட.. சம்பூரில் இருந்தும்.. வலி வடக்கில் இருந்தும் அடித்து விரட்டப்பட்ட நிலையிலும் மெளனமா அகதி முகாமில தான் இருக்கினம்..!

 

 

அதுதான் PLOT .....நீங்க இதைப் போயி....இவைக்கு கறிக்கு கறிவேப்பிலை சேர்க்கிறமாதிரி...புலியை சேர்க்காடில் சரிவராது கண்டியளோ....

  • தொடங்கியவர்
56 பெற்றோல் குண்டுகள் மீட்பு
 
அளுத்கமையில் பெற்றோல் குண்டுகள் 56 உட்பட தாக்குதல் நடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக அளுத்கமை பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்த ஆயுதங்களுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் அலவாங்கு, கோடரி, துப்பாக்கி வடிவிலான இரும்பு கம்பிகள் இரண்டும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.