Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுத எழுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் முகவரி சஞ்சிகை ஆசிரியர் குழுமம் தாங்கள் வெளியிடப் போவதாக தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்கள்.விரைவில் அவர்களுக்கு அனுப்பி வைப்பேன் அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்

சாஸ்திரியார் உங்களது புத்தகத்தை வெளியிடுவதாக முகவரி சஞ்சிகை ஆசிரியர்குழு சொல்லவில்லையாமே ? அவர்களது ஆசிரியர்குழுவில் இருக்கும் ஒருவரை முகநூலில் நீங்கள் தொடர்பு கொண்டு உங்கள் நூல கனடாவிற்கு  அறிமுகம்  செய்து தருமாறு கேட்டிருந்தீர்களாம். ஆனால் நீங்கள் உங்கள் நூலை அறிமுகம் செய்து விற்பனை செய்து தருமாறு கேட்ட நபர் உங்களது புத்தகத்தில் 3 முதல் அனுப்புங்கள் படித்துவிட்டு சொல்லாம் என சொன்னாராம். 
என்றாலும் உங்களது புத்தகத்தை கனடாவில் தங்கள் சஞ்சிகையானது வெளியிடும் எண்ணம் எதுவும் இல்லையென முகவரி ஆசிரியர்குழுவினர் தெரிவித்துள்ளனர். நீங்களாக கேட்டுவிட்டு உங்களை முகவரி ஆசிரியர்குழு அழைத்து புத்தகங்கள் கேட்டதாக பொய்யுரைத்துள்ளீர்கள். முகவரி வாசகனாகிய நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். 
சாஸ்திரி என்பவரை முகவரி ஆசிரியர் குழுவிற்கு யாரெனவே தெரியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். நீங்கள் முகநூலில் இணைத்துள்ள அந்த ஆசிரியர்குழு அண்ணருக்கு உங்களை யாரென்றே தெரியாது எனவும் கூறியிருப்பதாகவும் சொல்கிறார்கள். 
 
கனடா கருத்துக்கள உறுப்பினர்கள் முகவரி ஆசிரியர் குழுவிடம் விசாரித்தால் உண்மையை அறிய முடியும். சாஸ்திரியார் நீங்களும் முகவரி ஆசிரியர் குழுவினரின் உண்மையான கருத்தை கேட்டறிந்து சொல்லுங்கள். புலிகளின் போராட்டத்தை புலிகளை அழித்துவிட்டு பிணவிசாரணை செய்யும் உங்கள் புத்தகத்தை இன்று மட்டுமல்ல என்றும் கனடாவில் முகவரி சஞ்சிகை அறிமுகம்  வியாபாரம் செய்யப் போவதில்லை என்பதனை ஆணித்தரமாக கூறியுள்ளார்கள். 
(இவ்வுண்மையை இன்று ஸ்கைப் உரையாடலின் போது முகவரி ஆசிரியர் குழுவுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருக்கும் உறவு ஒருவர் தெரிவித்தார்)

Edited by முதல்வன்

  • Replies 141
  • Views 23.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் போராட்டத்தை, புலிகளை சாத்திரியார் அழித்தாரா? :o

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தர் இணைய அங்காடியை பார்த்தபோது சிரிப்புத்தாங்க முடியவில்லை ஆமா என்னுடைய வேங்கையன் பூங்கொடியில் பண்ணையார் என்ற சொற்பதம் வந்தபோது சுட்டிக்காட்டிய சாத்திரியா இந்த இணைய அங்காடிக்குள் தன்னுடைய நூலையும் இணைத்திருக்கிறார் ஆ?

சாஸ்திரியார் இப்படி தனக்கென்றால் படபடப்பார் சாகாரா அக்கா கண்டுக்காதீர்கள் அக்கா. கனடாவிலிருந்து வெளியாகும் முகவரி சஞ்சிகையும் தன்னை அழைத்து புத்தகம் கேட்டதா ஒரு பென்னம்பெரிய பூசணிக்காயை முன்னுக்கு கொண்டு வந்துள்ளார். நீங்களும் கனடா தானே அக்கா முகவரியிடம் ஒருக்கா கேளுங்கோ. சிரிப்பா சிரிக்கிறாங்க.

புலிகளின் போராட்டத்தை, புலிகளை சாத்திரியார் அழித்தாரா? :o

அட விடுங்க வாலிசார். ஏதோ நானும் நாலும் தெரிஞ்சமாதிரி போராட்டம் புலிகள் என்று எழுதலாமென்றால் நீங்கள் விடமாட்டியள் போல. முகவரி பத்திரிகையின் ஆள் சொன்னத்தை எழுதினனப்பா வாலிசார்: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகவரி சஞ்சிகை ஆசிரியர் குழு தாங்களாகவே எனது புத்தகத்தினை அறிமுகம் செய்ய கேட்டிருந்தார்கள் அவர்களை எனக்கு தெரியும்( முகவரி ஆசிரியர் குழுவுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருக்கும் உறவு ஒருவர்அல்ல .)நேரடியாக தொலை பேசியில் பேசியிருந்தேன் .அவர்களுக்கான புத்தகமும் அனுப்பி விட்டேன் இங்கு முக மூடிகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை .அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து யாராவது கனடாவில் எனது புத்தக வெளியீட்டை தடுத்து நிறுத்த முயன்றாலும் எனது புத்தகம் அங்கு வெளியிடப் படும் என்பதை அறியத் தருகிறேன் ..காரணம் யாழ் இணையத்தில் நான் எழுதத் தொடக்கி பலரால் தடுத்து நிறுத்தப்பட்ட தொடர் தான் எனது ஆயுத எழுத்து நாவலாக வெளி வந்துள்ளது ..இந்த நாவல் ஆங்கிலத்திலும் விரைவில் வரவுள்ளது ..நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு எதிர்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வேகமாக நான் வேலை செய்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் ..

................

...........

நியானி: பண்பற்ற வரிகள் நீக்கப்பட்டுள்ளன.

Edited by நியானி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத எழுத்து நாவல் பற்றி மலைகள் இதழில்  தமிழ்க்கவி  அவர்கள் ..

“ஆயுத எழுத்து“  ( நாவல் )     “ படித்ததில் புரிந்தது“ /       தமிழ்க்கவி

[ A+ ] /[ A- ]

download-21.jpg

போராட்டம் வலுவிழந்து நிற்கும் காலப்பகுதியில் வரும் ஒப்புதல் வாக்குமூலம்.1983ம் ஆண்டு தின்னவேலித்தாக்குதலோடு தொடங்கும்.கதை பரந்து விரிந்த போராட்டத்தின் பல பரிமாணங்களை விளக்குகிறது

”அப்பு ராசா வாடா போராட எண்டால் வரமாட்டாங்கள்” அவர்களை களத்துக்கு அனுப்ப சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளையும் கையாளவேண்டித்தான் வரும்.இங்கு அந்த காரணங்களில் சில வெளிவருகிறது.

1987க்குப்பினனரான காலத்தில் நடக்காத எதையும் புலிகள் செய்யவில்லை. இந்திய ராணுவத்தின் அனுசரணையுடன் ஆள் பிடித்தவர்களால் தமிழீழப்பிரதேசமே அரண்டு போய்க் கிடந்ததை நாம் மறக்க முடியுமா? இயக்கத்துக்கு போவதற்கு பல காரணங்கள்உண்டு.

சிலவற்றை முடிச்சவிழ்க்கிறது. ஆயுத எழுத்து. போர் பிரபலமடைந்ததே இயக்க மோதல்கள் தொடங்கியபின்னர்தான்.அதையும் புலிகள்தான் தொடக்கி வைத்தார்களா?  தனிப்பட்ட பகைகளால் நடந்த அசம்பாவிதங்கள். உயிர் நண்பா்களால் விடுவிக்கப்பட்டபுலியால், உயிர் நண்பனைக் காப்பாற்ற மனசில்லாமற் போனதும், வெட்கமற்று விரிகிறது காரணத்தோடும் காரணமேஇல்லாமலும் மனித உயிரகள் தமர் பிறர் என்றில்லாமல் காவு கொள்ளப்பட்ட விந்தை. வலக்கரத்தில் துப்பாக்கி பிடித்தபின் இடக்கரத்தால் மாலை போட்டு வீரவணக்கம் செலுத்தும்..அசகாய சூரத்தனம்..ஒருபுறம்.

பெண்கரும்புலிகளின் போ் சொல்ல முடியாத சாதனைகள்.

“வாய்விட்டு போ் சொல்லி அழ முடியாது

வெறும் வார்த்தைகளால்… உன்னை தொழ முடியாது… இவரகள் புகழ் பாட முடியாது எனற பாடலடிகளுக்கு விளக்கம் வெளியிடப் பட்டுள்ளது.

ஒருதேச விடுதலைப் போராட்டத்தின் மறுபக்கம் உடைக்கப்பட்டிருக்கிறது.அது ஆயுத எழுத்தாக வெளிவந்திருக்கிறது.

”நீதி வழங்கப்பட்டால் போதாது…நீதிவழங்கப் பட்டதாக காட்டப்பட வேண்டும்” என்றசட்டப் பழமொழிக்கமைய அதிக  நீதியை கடைப்பிடிக்க முடியாத நிலையே உலக யதார்த்தமாகும்.

இந்த நுாலின் தாத்பரியமும் அதில் வரும் ஒரு பாத்திரத்தால் பேசப்படும்.” எனது நாட்டுக்காகவும் எமது மக்களுக்காகவும்”  என்ற போர்வையில் நடந்தேறிய அராஜகங்கள்தான்..என துடைத்தெறிய முடிகிறதா பாருங்கள்.

திட்டங்களைத் தீட்டி ஏவாமல் ஏவப்பட்டவரே திட்டங்களைத் தீட்ட முடிந்துள்ளது.

“சினைப்பர் “திரைப்படத்தில் வருவது போல ” அங்க அறைக்குள்ள இருந்து திட்டம் போடுறவன்ர கட்டளைகள நாங்க நிறைவேற்ற முடியாது.   இஞ்ச என்ன சூழ்நிலை இருக்கோ அதற்கு ஏற்றமாதிரிதான் நாங்கள் செயல்பட முடியும்”

மற்ற இயக்கப் போராளிகள் பரவலாக வந்து போகிறார்கள். இயக்க மோதல்கள் மிக தெளிவாக அதற்கான துாசுக் காரணங்களுடன் விபரிக்கப்படுகிறது.மனித உயிர் நண்பன் பகைவன் என்ற வேறுபாடின்றி பந்தாடப்பட்டுள்ளது.

கதைக்கு தேவையானதற்கு மேலாகவே உடலுறவுச் சம்பவங்கள் ஏராளமாக,தாராளமாக.உள்ளது சில இடங்களில் அது தேவையானதாக உள்ளது இன்னொரு வகையில் பழைய மித்திரன் தொடர்களான ,பட்லீ, அலீமாராணி, பூலான்தேவி தொடர்களை நினைவூட்டத் தவறவில்லை. ஆடை களையும் வரை அருகிலிருந்து குறிப் பெடுக்கும்  எழுத்தாளர்களைப் போலல்லாது விடயத்தைசுருங்கச்சொல்லி விலகி விடுகிறார். சாத்திரி

கற்பனையல்ல நிஜம். என்பது சிறீசபாரத்தினம் கொலைச்சம்பவஙகளில் விழிகளைத் திறந்து வைத்திருக்கிறது

எல்லாம் சரி இப்போது எதற்காக இதையெல்லாம் வெளியே சொல்லவேண்டும். தகவல்களை வைத்துக் கொண்டிருக்க முடியாமல் தத்தளித்து கொட்டிவிட்டார் ஆசிரியா். கொடூரமான சம்பவங்கள்ஊடாக பயணிக்கும்போதும் எழுத்தில் எள்ளல் சுவை துள்ளி நடை போடுகிறது. எல்லாம் நானே என்பதான கர்வம் தொனிக்கிறது.

ஆயுத எழுத்துக்குள் மக்கள் எவ்வளவு மட்டமாக முட்டாள்களாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுபல இடஙகளில் செரிமானமாகாமல் வலிக்கிறது.அழகான இந்த ஆயுத எழுத்தை எழுதிய நபர்  இங்கு நடமாடுவது  நானல்ல,இது உங்களில் ஒருவராகவும் இருக்கலாம். ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு நபர்களைப் பொருத்திப்பாருங்கள்.என்கிறார்.

இவைபற்றி இயக்கவேறுபாடின்றி எல்லோரும் கருத்துக் கூறப் போகிறார்கள். எனபது சர்வ நிச்சயம். ஆசிரியரின் தீர்க்க தரிசனம் அல்லஇது

ஏற்கெனவே தெரிந்திருந்தும் நாம் பேசாது விட்ட பல விடயங்களை உடைத்து வெளிவந்திருக்கிறது ஆயுத எழுத்து .ஒரு சுய விசாரணை கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து மீளெழுகைக்கான வழிகாட்டலாக…..நிச்சயமாக இது இருக்கவேண்டாம்.

                     •••

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய நாவல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்து குலைப்பன் காச்சல் பிடித்திருந்தவர்களுக்கு .தமிழ்க்கவியின் விமர்சனம் கொஞ்சம் நிம்மதியை கொடுத்திருக்கும் என நினைக்கிறேன்

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல்வன் முகவரியின் வாசகனா?  எனது ஆக்கக்கங்களும் அதில் இருப்பதால் சந்தோசம் .

சாத்திரி- முகவரி தொடர்பு பற்றி நான் எழுதவிரும்பவில்லை .ஆனால் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

முகவரி சஞ்சிகை ஆசிரியர் குழு தாங்களாகவே எனது புத்தகத்தினை அறிமுகம் செய்ய கேட்டிருந்தார்கள் அவர்களை எனக்கு தெரியும்( முகவரி ஆசிரியர் குழுவுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருக்கும் உறவு ஒருவர்அல்ல .)நேரடியாக தொலை பேசியில் பேசியிருந்தேன் .அவர்களுக்கான புத்தகமும் அனுப்பி விட்டேன் இங்கு முக மூடிகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை .அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து யாராவது கனடாவில் எனது புத்தக வெளியீட்டை தடுத்து நிறுத்த முயன்றாலும் எனது புத்தகம் அங்கு வெளியிடப் படும் என்பதை அறியத் தருகிறேன் ..காரணம் யாழ் இணையத்தில் நான் எழுதத் தொடக்கி பலரால் தடுத்து நிறுத்தப்பட்ட தொடர் தான் எனது ஆயுத எழுத்து நாவலாக வெளி வந்துள்ளது ..இந்த நாவல் ஆங்கிலத்திலும் விரைவில் வரவுள்ளது ..நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு எதிர்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வேகமாக நான் வேலை செய்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் ..

................

...........

நியானி: பண்பற்ற வரிகள் நீக்கப்பட்டுள்ளன.

நீங்கள் முகமூடிபற்றி கதைக்க தகுதியில்லாத ஆள். திரும்பத்திரும்ம வெருட்டி உறுட்டி புழுக வேண்டாம். உங்கள் புத்தகத்தை முகவரி சஞ்சிகை வெளியிடாது. நீங்கள் முகவரியின் ஒரு அள்ளக்கையின் கதையை கேட்டு அப்பாவித்தனமாக நம்புகிறீர்கள். உங்களை ஒரு கொசுவாகத்தான் முகவரி ஆசிரியர்குழு கருதுகிறது. ஏனெனில் எவ்வித தொடர்புகளும் இல்லாத தங்கள் பத்திரிகையின் பெயரை பயன்படுத்துகிறீர்கள் என்றுதான் தெரிவித்துள்ளார்கள்.

கனடாவில் உங்கள் புத்தகத்தை யாரும் வெளியிடலாம். எங்கள் தோழர் அர்சுன் வெளியிடக்கூடும் தனது செலவில். முகவரி உங்களுக்கு முகவரி தராது என்பதனை மட்டும் நம்புங்கள். ஆங்கிலத்தில் மட்டுமல்ல அரபியிலும் உங்கள் புத்தகம் வர வேண்டும். ஆனால் முகவரி சஞ்சிகை மானமுள்ள சஞ்சிகை பெயருக்காக அம்மணமாக ஓடும் உங்களுக்கு ஒருபோதும் இடம் தராது.

முகவரி ஆசிரியர்குழுவுக்கு உங்களுடன் தொடர்புகள் எதுவும் இல்லை. ஒரு அள்ளக்கைதான் உங்களுடன் கதைத்து உங்களை ஏமாற்றுகிறது.

நியாணி பண்புபற்றி இவர்களுக்கு வகுப்பெடுத்தாலும் சிலவால்களை நிமிர்த்த முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வன் முகவரியின் வாசகனா?  எனது ஆக்கக்கங்களும் அதில் இருப்பதால் சந்தோசம் .

சாத்திரி- முகவரி தொடர்பு பற்றி நான் எழுதவிரும்பவில்லை .ஆனால் தெரியும் .

தோழர் அர்சுன் முகவரியில் விளையாட்டுச்செய்தி எழுதும் தங்கள் செய்தியையும் வாசிக்கிறேன். விளம்பரப்பிரியர்கள் நீங்கள் வந்து சொல்லாமல் நான் வாசகன் சொல்லக்கூடாதென்று இருந்தேன். அர்சுன் முகவரி பற்றி எல்லாம் தெரிந்த நீங்கள் உண்மையை எழுதலாமே ? ஏன் சாஸ்திரி போல கள்ளமவுனம் ?

பொய் எழுதினால் உங்களையும் முகவரி துரத்திவிடும் என பயப்படுகிறீர்களா தோழர் ? சாஸ்திரி தனது தேவைக்காக முகவரி பெயரை பயன்படுத்துவதற்கு நீங்களும் துணைபோகிறீர்கள். முகவரி சஞ்சிகை சாஸ்திரி தங்கள் பெயரை பயன்படுத்துவதற்கு வழக்கு ஒன்றும் போடலாம்.ஒரு லச்சம் கனடியடொலரை கேட்டால் உங்கள் கொம்பனியிலிருந்து கொடுத்து சாஸ்திரியின் பொய்யை காப்பீர்களா ?யால்ரா போட்டு படம் ஓட்டாமல் தெரிஞ்ச உண்மையை எழுதுங்கள் தோழர் அர்சுன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத எழுத்து பக்கம் 141

https://www.facebook.com/gowripal.sri/posts/10202087670353044:0

CdLWB1.jpg

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

10013673_634734423270130_240138312297291

யாயினியின் பக்கத்தில் படித்ஹதில் பிடித்தது.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

தோழர் அர்சுன் முகவரியில் விளையாட்டுச்செய்தி எழுதும் தங்கள் செய்தியையும் வாசிக்கிறேன். விளம்பரப்பிரியர்கள் நீங்கள் வந்து சொல்லாமல் நான் வாசகன் சொல்லக்கூடாதென்று இருந்தேன். அர்சுன் முகவரி பற்றி எல்லாம் தெரிந்த நீங்கள் உண்மையை எழுதலாமே ? ஏன் சாஸ்திரி போல கள்ளமவுனம் ?

பொய் எழுதினால் உங்களையும் முகவரி துரத்திவிடும் என பயப்படுகிறீர்களா தோழர் ? சாஸ்திரி தனது தேவைக்காக முகவரி பெயரை பயன்படுத்துவதற்கு நீங்களும் துணைபோகிறீர்கள். முகவரி சஞ்சிகை சாஸ்திரி தங்கள் பெயரை பயன்படுத்துவதற்கு வழக்கு ஒன்றும் போடலாம்.ஒரு லச்சம் கனடியடொலரை கேட்டால் உங்கள் கொம்பனியிலிருந்து கொடுத்து சாஸ்திரியின் பொய்யை காப்பீர்களா ?யால்ரா போட்டு படம் ஓட்டாமல் தெரிஞ்ச உண்மையை எழுதுங்கள் தோழர் அர்சுன்.

ஒரு பத்திரிகையில் ஒரு ஆக்கம் எழுதுவது விளம்பரத்திற்கு என்று நினைப்பவர்களுடன் எப்படி உரையாடுவது ?

முதலில் அருகில் பாடசாலை ஏதும் இருந்தால் எட்டி பாருங்கள் .

முதலாவது முகவரி விவசாயி விக் உடன் ஆனா சந்திப்பின் போது உறவுகளுக்கு கொண்டுபோய் கொடுத்தேன் 

உங்களுக்கு வேலை வெட்டி இல்லாமல் அடிபடுவீர்கள் அதற்கு என்னை ஏன் சாட்சிக்கு இழுகின்றீர்கள் .

நல்லா அடிபடுங்கோ பார்த்து ரசிக்கலாம் வேணுமென்றால் விசிலும் அடித்துவிடுகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

10013673_634734423270130_240138312297291

யாயினியின் பக்கத்தில் படித்ஹதில் பிடித்தது.

இது மோசமாய் புலிகளை விமர்சிப்போருக்கும் பொருந்தும்தானே?

  • கருத்துக்கள உறவுகள்

இது மோசமாய் புலிகளை விமர்சிப்போருக்கும் பொருந்தும்தானே?

பொது விமர்சனம் என்பது ஒருவரின் விருப்பத்துக்கு மற்றவர் செய்வதல்ல. நாம் நேரில் எதையுமே காணாமல் இங்கு ஊடகங்களால் நாம் அறிந்து கொள்பவற்றை மட்டும் கேட்டு எம்மனதுக்கு ஏற்புடையதாக இருப்பதுபோல் இருந்தால் அதையே உண்மை என்று  நம்பி அதுவே சரி என்று வாதிடுகிறோம். உண்மையில் எம் மனச்ச்சாட்சிக்குத் தெரியும் நாம் எண்ணுவதும் நம்புவதும் சரி அல்ல என்று.அனாலும் மற்றவர்களுக்காகவும் மற்றவரிடம் எம்மைப்பற்றிய எண்ணத்தை உயர்த்தவுமே யாழ் களத்தில் மட்டுமல்ல எங்குமே பலர் நடித்துக்கொண்டு இருக்கிறோம்.

சரி சாத்திரி பொய் கூறுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அவரும் நீண்டநாள் யாழ்கள உறவுதானே. எதற்காக  அவரை தனிப்பட விமர்சிப்பான். அதனால் நீங்கள் காண்பது ஒரு அற்ப சந்தோசம் மட்டுமே. அதுவும் சிலர் சிலருக்காகவும் பலர் பலருக்காகவும் கட்சிகட்டிக்கொண்டு ..... நினைக்கவே வேதனையாக இருக்கு. நான் யாழுக்கு வந்ததன் பின்னரே இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை பேர் யாழில் ஆர்வமாக எழுதியவர்கள் இப்ப வருவதில்லை. பொது விடயத்தில் யாரும் எதுவும் எழுதுங்கள் எதற்காக தனிமனிதர்களை ...... யாரும் திருந்தவே போவதில்லை என்பதுதான் உண்மை. :unsure: :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது மோசமாய் புலிகளை விமர்சிப்போருக்கும் பொருந்தும்தானே?

நிச்சயமாய் அனைவருக்கும் பொருந்தும்  இது உங்களுக்கும் பொருந்தும் எனக்கும் பொருந்தும் ..ஆளாளுக்கு பம்மாமல் நேரே விமர்சனங்களை வைக்கும் அனைவருக்கும் பொருந்தும் சுபேஸ் ..இனி உங்கள் தனி விமர்சனங்களை இங்கு வையுங்கள் நானும் வைக்கிறேன் வேணுமானால் தனி திரி திறவுங்கள் இருவர் மட்டுமே உரையாடுவோம் பகிரங்கமாக ..இப்படி நான் யாழில் பகிரங்க அழைப்பு விடுவது இது முதல் தடவையல்ல .எல்லாருமே ஓடித்தான் போயிருக்கிறாக்கள் .சுபேஷ் நீங்களாவது பகிரங்க விவாதத்துக்கு வந்து ஒரு ....ம் ....எதோ ஒண்டு என்று நிருபியுங்கள் ..கெஞ்சி கேக்கிறன் நான் ..முடியவில்லையா பொத்திக் கொண்டு போயிட வேணும்

நானும்தான்

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

எதைப்பற்றி விமர்சனம் வைக்கவேண்டும்?

புலிகளில் எந்த விமர்சனம் வைத்தாலும் அது மோசமான விமர்சனம் தான் என்பது அவர்களுக்கு .கருத்து 

புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்றே இன்றும் அவர்கள் நிற்கின்றார்கள் .புலிகளின் வெற்றியும்அதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்

பொது விமர்சனம் என்பது ஒருவரின் விருப்பத்துக்கு மற்றவர் செய்வதல்ல. நாம் நேரில் எதையுமே காணாமல் இங்கு ஊடகங்களால் நாம் அறிந்து கொள்பவற்றை மட்டும் கேட்டு எம்மனதுக்கு ஏற்புடையதாக இருப்பதுபோல் இருந்தால் அதையே உண்மை என்று நம்பி அதுவே சரி என்று வாதிடுகிறோம். உண்மையில் எம் மனச்ச்சாட்சிக்குத் தெரியும் நாம் எண்ணுவதும் நம்புவதும் சரி அல்ல என்று.அனாலும் மற்றவர்களுக்காகவும் மற்றவரிடம் எம்மைப்பற்றிய எண்ணத்தை உயர்த்தவுமே யாழ் களத்தில் மட்டுமல்ல எங்குமே பலர் நடித்துக்கொண்டு இருக்கிறோம்.

சரி சாத்திரி பொய் கூறுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அவரும் நீண்டநாள் யாழ்கள உறவுதானே. எதற்காக அவரை தனிப்பட விமர்சிப்பான். அதனால் நீங்கள் காண்பது ஒரு அற்ப சந்தோசம் மட்டுமே. அதுவும் சிலர் சிலருக்காகவும் பலர் பலருக்காகவும் கட்சிகட்டிக்கொண்டு ..... நினைக்கவே வேதனையாக இருக்கு. நான் யாழுக்கு வந்ததன் பின்னரே இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை பேர் யாழில் ஆர்வமாக எழுதியவர்கள் இப்ப வருவதில்லை. பொது விடயத்தில் யாரும் எதுவும் எழுதுங்கள் எதற்காக தனிமனிதர்களை ...... யாரும் திருந்தவே போவதில்லை என்பதுதான் உண்மை. :unsure: :unsure:

கருத்து வறட்சி உடையவர்கள் அல்லது இலேசில் உணர்ச்சிவசப்படுபவர்கள்தான் தனிமனித தாக்குதல் செய்வது. யாராயினும்/யாருக்காயினும் கருத்துக்கு கருத்தால் பதில் அளியாமல் தனிமனித தாக்குதல் செய்வது தவறு. அதை யாழ் களவிதிகளும் வலியுறுத்துகின்றன

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் இன்னும் இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை. சாத்திரியண்ணா சொல்லிவருகின்ற பலவிடயங்கள் எனக்குத் தெரிந்தவரை உண்மையென நம்புகின்றேன். அந்த இயக்கத்தின் குறுக்குவெட்டுமுகம் ஒன்றை பத்தில் ஒருவீதமேனும் இந்த நூல் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. பலர் அலறித் துடிப்பதில் இருந்து விளங்குகின்றது நூலின் வீச்சு. உண்மையில் என் போன்ற வரலாறு விரும்பிகளுக்கு இந்நூல் அல்வா சாப்பிட்டமாதிரி இருக்கும்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதைப்பற்றி விமர்சனம் வைக்கவேண்டும்?

நீங்கள் தான் சொன்னது புலிகள் மீது விமர்சனம் வைப்பவர் என்று அதுக்கு நான் தயார்  ..எந்த கருத்து வறட்சியும் எனக்கு இல்லை  பசுமையாக இருக்கிறது  மேயலாம் ..யாரென்று தெரியாத முக மூடிகளோடு  விவாதித்து நேரத்தை வீணடிப்பதை விட முகம்  கட்டும் நீங்கள் இங்கு பதில் கொடுக்க தயாரா ??

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

பொது விமர்சனம் என்பது ஒருவரின் விருப்பத்துக்கு மற்றவர் செய்வதல்ல. நாம் நேரில் எதையுமே காணாமல் இங்கு ஊடகங்களால் நாம் அறிந்து கொள்பவற்றை மட்டும் கேட்டு எம்மனதுக்கு ஏற்புடையதாக இருப்பதுபோல் இருந்தால் அதையே உண்மை என்று  நம்பி அதுவே சரி என்று வாதிடுகிறோம். உண்மையில் எம் மனச்ச்சாட்சிக்குத் தெரியும் நாம் எண்ணுவதும் நம்புவதும் சரி அல்ல என்று.அனாலும் மற்றவர்களுக்காகவும் மற்றவரிடம் எம்மைப்பற்றிய எண்ணத்தை உயர்த்தவுமே யாழ் களத்தில் மட்டுமல்ல எங்குமே பலர் நடித்துக்கொண்டு இருக்கிறோம்.

சரி சாத்திரி பொய் கூறுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அவரும் நீண்டநாள் யாழ்கள உறவுதானே. எதற்காக  அவரை தனிப்பட விமர்சிப்பான். அதனால் நீங்கள் காண்பது ஒரு அற்ப சந்தோசம் மட்டுமே. அதுவும் சிலர் சிலருக்காகவும் பலர் பலருக்காகவும் கட்சிகட்டிக்கொண்டு ..... நினைக்கவே வேதனையாக இருக்கு. நான் யாழுக்கு வந்ததன் பின்னரே இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை பேர் யாழில் ஆர்வமாக எழுதியவர்கள் இப்ப வருவதில்லை. பொது விடயத்தில் யாரும் எதுவும் எழுதுங்கள் எதற்காக தனிமனிதர்களை ...... யாரும் திருந்தவே போவதில்லை என்பதுதான் உண்மை. :unsure: :unsure:

புலிகள் இருந்த காலத்தில் சாத்திரி என்பவருக்கு என்ன பேனை பஞ்சமா இருந்தது ?
இப்போது ஏன் இழுத்துவிடுகிறார்கள்?
 
சுய விளம்பரம் 
சுய விளம்பரம் 
சுய சுய விளம்பரம்.
 
எல்லோரும் இறந்துவிட்டார்கள். பிராபகரன் சுடும்போது நான் அருகில் நின்று பார்த்தேன் என்று இஸ்டத்தில் கதை அளக்கலாம். இதை தவிர உண்மையான நோக்கம் காரணம் எல்லாம் வேறு. அதை ஆறு அறிவு உள்ளவன் தெரிந்துகொள்வான். தெரியாதவர்களுக்கு ஆறாம் அறிவு செயற்பட தொடங்கும்வரை காத்திருப்பதே நல்லம்.
 
எதிரிகளும் 
துரோகிக்களும்தான் 
நாட்டை விடுதலை போரை காட்டிகொடுப்பர்கள்.
 
போராளிகளின் பிணங்களை புணர்ந்த சிங்களவன் எவளவோ மேலானவன்.
அவற்றை வியாபாரம் பண்ண அவன் எண்ணியதில்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

நான் தயார் ..எந்த கருத்து வறட்சியும் எனக்கு இல்லை பசுமையாக இருக்கிறது மேயலாம் ..யாரென்று தெரியாத முக மூடிகளோடு விவாதித்து நேரத்தை வீணடிப்பதை விட முகம் கட்டும் நீங்கள் இங்கு பதில் கொடுக்க தயாரா ??

புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் முழுதும் வாசித்துவிட்டு எழுதுகிறேன்.

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் முழுதும் வாசித்துவிட்டு எழுதுகிறேன்.

அப்போ புத்தகம் கிடைக்கும் வரை பொத்திக் கொண்டு இருந்து விட்டு முழுதும் வாசித்து விட்டு இங்கு வந்து எழுதி யிருக்க வேண்டும் ..

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.