Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார்

Featured Replies

நாரதர் அண்ணா உங்கள் பதில்களிலும் அதில் உள்ள கருத்து செறிவுகளிலும் ஒவ்வொரு நாளும் வந்து பார்வையிட்டதில் உண்மையில் எனக்கு பெரிய சந்தோசம். சாதாரணமாக ஒரு விளம்பரத்தில் சம்மந்தம் இல்லாத ஒரு விடயத்தை காட்டி ஒரு பொருளுக்கு விளம்பரம் செய்வார்கள். அதன் நோக்கம் தங்களது பொருட்களை மக்களுக்கு அறிமுகபடுத்துவது. அப்படியான வழியை இவர்கள் பின்பற்றுகிறார்கள் என எனக்கு தோன்றுகிறது. அதை தவிர்ப்பது நல்லது என்று எனக்கு தோன்றியது அதுதான் அப்படி எழுதினேன். தவறு என்றால் மன்னித்து கொள்ளுங்கள்.

  • Replies 211
  • Views 26.9k
  • Created
  • Last Reply

அவர்களின் நோக்கம் உங்களுக்குப் புரிவதைப்போல் எல்லோருக்கும் இலகுவில் புரிந்து விடாது, அதற்காகத் தான் எழுதுகிறோம்.இது எமது கருத்துக்களை எந்தவித தளம்பலும் இன்றி கொண்டு வர அவசியம்.இவர்கள் இங்கே காவி வருபவை பெரும்பாலும் கூலிக்குழுக்களின் தளங்களில் எழுதப் படும் கருத்துக்கள் தான்.அவர்கள் என்ன நோக்கத்திற்காக காவி வந்தாலும் அவற்றிற்கு நாம் பதில் எழுதுவது அவசியம்.ஏனெனில் எமது பக்கம் உண்மை இருக்கிறது, நியாயம் இருக்கிறது.ஆனால் சும்மா நக்கல், நளினமாக எழுதினார்களோ இங்கே மதிவதனத்தாருக்கு நடந்தது தான் அவர்களுக்கும் நடக்கும்,அதனைக் கள நிர்வாகம் பாத்துக் கொள்ளும்.எந்த விதமான ஆரோக்கியமான கருதாடலைலும் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.போராட்டம் மீதும் , நீதி, நியாயத்தின் மீதும்,புலிகளின் தலமைத்துவத்திலும் இருக்கும் நம்பிக்கையே எமக்கான பலம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்குத் தீமோர் பற்றிய சில முக்கிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

------

US, UK and Other Support of IndonesiaWhen Indonesia invaded East Timor in 1975, it was with the OK from the

then US President, Ford. Ever since then, the US, UK and Australia have been criticized for their support of the regime.

It has also been reported that Washington trained death squads, sponsored by the Clinton Administration.

The US provided military support even to this latest crackdown

The UK has also provided training and military arms in the past to Indonedisa.

Business interests have been a factor in the slow response.

Australia's much needed peace-keeping was also slow going as they also have additional interests in East Timor.

Find out more about the support of Indonesia by countries like the United States, and United Kingdom as well as other international issues.

http://www.globalissues.org/Geopolitics/EastTimor.asp

கிழக்குத் தீமோர் விவகாரத்தை அமெரிக்கா பிரித்தானியா அவுஸ்திரேலியா போன்றன அணுகிய முறைகளையும்.நோட்டோவில் அமெரிக்காவின் பிரித்தானியாவின் ஆதிக்கம் என்னவென்பத்தும் உலகறிந்த நிதர்சனங்கள்.

-------

ஈழ வரலாறு போல் அல்லாமல் மற்றைய போராட்ட வடிவங்களுக்கு தெளிவான பதிவுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஈழ வரலாற்றுக்குள் குழப்பங்களை விதைப்பதே விளங்கமளிப்பதாகி விட்டுள்ளது.

இவற்றால் விடுதலைப் புலிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது சாத்தியக் குறைவான விடயம். விடுதலைப் புலிகள் ஒரு போதும் எதிரிக்கு சாதகமாக எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களைப் பகிரங்கப்படுத்தப் போவதில்லை இவ்வேளையில்.

அந்த வகையில் சமாதானமே விடுதலைப் புலிகளைப் போர் வெறியர்கள் என்ற சிறீலங்கா அரசின் பிரச்சார வெற்றியில் இருந்து விடிவிக்கவும் உதவும்.

போர் என்பது தந்திர ரீதியாக இருந்தால் மட்டுமே அரசியல் மாற்றங்களை நன்மைகளைப் ஈட்ட முடியும். கண்மூடித்தனமான போர் உலகின் முன் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்த மேலும் உதவிடும்.

அந்த வகையில் விடுதலைப் புலிகளின் நிதானமான அரசியல் இராஜதந்திர இராணுவ நகர்வுகள் கூர்ந்து நோக்கப்படுவதும் அவர்களின் சமாதானத்தின் மீதான பற்றுறுதிக்கான காரணங்களையும் மக்கள் விளங்கிக் கொண்டு விடுதலைப் புலிகளை இன்னும் பலப்படுத்த முனைய வேண்டும்.

ஒவ்வொரு தமிழனும் கியுப விடுதலைக்கு தன்னை உட்படுத்திய சோகுவரா போல் உலகெங்கும் இருந்து புறப்பட்ட வேண்டியதே இன்றைய அவசியம். விடுதலைப் புலிகளை விமர்சித்துக் கொண்டு வீண் பொழுது போக்குவதில் பயனில்லை. புலிகள் தங்களால் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் தங்கள் இலக்கு நோக்கிய வெற்றிக்காக பயணிப்பர் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

ஆகா ஆகா என்ன சிந்தனை என்ன சிந்தனை, நெடுக்கால போவார்

உதே கருத்தோட நிலையா நில்லும், பிறகு திருப்பிக் குத்துக் கரணம் போடாமா.

அதென்னப்பு சமாதனாம் சமாதனம் எண்டுறியள், உதை முதலில ஒழுங்கா விளங்கிக் கொள்ளுங்கோ.விடுதலைப்புலிகள் எப்போது சொன்னார்கள் தாங்கள் சமாதானத்தை விரும்பவில்லை என்று ,இங்கே உள்ளவர்கள் எப்போது சொன்னார்கள் தாங்கள் அதனை விரும்பவில்லை என்று.எல்லோரும் சமாதனமா சகல உரிமையோட வாழத் தானே போராடுகிறோம்.பின்னர் எவ்வாறு சமாதனமும் ஆயுதப் போராட்டமும் ஒன்றுக்கு ஒன்றுக்கு முரணாக இருக்கமுடியும்? இங்கே போரை தமிழர் மீது திணிப்பது சிறிலங்கா அரசு தான், ஆயுத பலத்தால் தமிழரின் போராட்டத்தை நசுக்கமுற்படுகிறது அதற்கு எதிராகத் தொடங்கப் பட்டது தான் புலிகளின் ஆயுதப்போராட்டம்.எதோ இங்கே இருப்பவர்கள் எல்லாம் ஆயுதபோராட்டத்தை விரும்புபவர்கள் போலவும், புலிகளுக்கு சமாதானத்தில் அக்கறை இல்லாதது போலவும் எழுதியது யார்?

இரட்டை வேடம் போடுவதை நிப்பாடுங்கள்,பச்சோந்திகள் போல் உருமாறுவதை நிற்பாட்டுங்கள்.

சரி நாரதர் அண்ணா. வாழ்த்துக்கள். உங்களை மாதிரி திறமையான வாதிகள் எங்களுக்கு எப்போதும் தேவை. உங்களை மாதிரியே ஒரளவுக்கு கருத்துள்ளவன் நான். எழுத முயற்சிக்கிறேன்.

தனது இராணுவ நலங்களுக்காக அமெரிக்காவே எதியோப்பிய அரசுக்கு முண்டு கொடுத்து வந்தது,ஈற்றில் எரித்ரிய மக்களின் ஆயுதப் போர் தான் அமெரிக்காவையும் எதியோப்பியாவையும் மண்டி இட வைத்தது.வரலாறு தெரியாமல் கதையளப்பது தான் உமது கருத்தாடலாக இருகிறது

சரி எரித்திரியா பற்றி உங்களுக்கு விலாவரையாக சொல்லலாமெண்டு நினைக்கிறன். முதலில் நவீன எரித்திரிய வரலாறு மூன்று முக்கிய கால கட்டங்களை கொண்டது. 'ஸெலாசி' காலம் (1974 வரை), மென்ஞிற்சு காலம் (1974 - 1991) மற்றும் சுதந்திர எரித்திரிய காலம்.

இத்தாலியானது கூட்டுப்படைகளிடம் தோல்வியடைந்ததும் எதியோப்பியா பிரித்தானியாவின் கைக்கு வந்தது. 1951ம் ஆண்டு பிரித்தானியா, எரித்திரியா உள்ளடங்கிய எதியோப்பியாவை ஸெலாசியிடம் (மன்னராட்சி) ஒப்படைத்தது. இவர் மேற்குலகின் விசுவாசியாகவும் அமெரிக்காவின் அடி வருடியாயும் இருந்தார். (நாரதர் குறிப்பிட்ட அந்த அமெரிக்க சார்பு பத்தாண்டுகள் காலம் இது தான்)

ஆனால் 1973ம் ஆண்டளவில் எதியோப்பியாவில் ஏற்பட்ட பஞ்சமும் அக்காலத்திலும் ஸெலாசியின் ஆடம்பர வாழ்வும் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. இதை பயன் படுத்தி இடது சாரியாகத் தன்னை காட்டிக் கொண்ட மென்ஞிற்சு (1974) ஆட்சியக் கைப் பற்றிக் கொண்டார். ஆட்சியைக் கைப்பற்றி சிறிது காலத்திலேயே இவருக்கும் இவரோடு துணை நின்றவர்களுக்குமிடையே உள்மோதல் நடந்தது. இதை பயன் படுத்த முடியாத படி எரித்திரிய விடுதலை படயினரான ஈ.எல்.எவ் (அரபு சார் அணி) உம் ஈ.பி.எல்.எவ் உம் மோதி கொண்டிருந்தனர். ஆனால் இறுதியில் ஈ.பி.எல்.எவ் அணி தலை தூக்கி எரித்திரியாவின் முக்கிய நகரங்களை கைப் பற்றிக் கொண்டிருந்த வேளை தான் சோவியத்தினதும் பின்னர் கியூப மற்றும் வார்சோ அணியின் ஆதரவு எதியோப்பிய அரசிற்கு கிடைக்க தொடங்கியது. எரித்திரியப் போராளிகள் மீண்டும் மறைவிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை வந்தது.

தொடர்ச்சியான போரும் சோவியத் சார்பான அரசு மீது அமெரிக்கா வரித்த பொருளாதார நெருக்கடிகளும் எதியோப்பியாவில் பெரும் பஞ்சத்தை (1984 - 1985) மீண்டும் தோற்றுவித்தது. துரதிஷ்ட வசமாக போராடும் இனம் என்ற வகையில் எரித்திரியாவையே இது வெகுவாகப் பாதித்தது.

சோவித்தின் வீழ்ச்சியும் அதை தொடர்ந்து சோவியத் தனது உதவிகளை நிறுத்திய கால கட்டத்தை சாதகமாகக் கொண்டு எதியோப்பிய அரசிற்கெதிரான அமைப்பான ஈ.பி.ஆர்.டி.எவ். அடிஸ்-அபாபாவை கைப்பற்றிக் கொள்ள மென்ஞிற்சு சிம்பாப்வே ற்கு தப்பி சென்றார். புதிய புரட்சிகர எதியோப்பிய அரசு எரித்திரிய மக்கள் மேல் கரிசனை கொண்டதாக இருந்தது.

மென்ஞிற்சு கால சொவியத் சார்பு நிலையால் கொதித்து பொயிருந்த நேட்டோ அணி, இப்புதிய சூழ்நிலையை பயன் படுத்தி தமக்கு சார்பான அரசுகளை அங்கு கொண்டு வரும் வகையில் இரு தரப்பினரையும் லண்டனில் பேச வைத்து இறுதியில் வாக்கெடுப்பு மூலம் எரித்திரியா பிரிந்து சென்றது. எரித்திரியாவை அங்கீகரித்த நாடுகளில் அமெரிக்கா முன் நின்றது.

மேலதிக தகவல்களுக்கு:

http://www.imperialethiopia.org/selassie.htm

http://www.bookrags.com/Haile_Selassie_I_of_Ethiopia

http://www.bookrags.com/Mengistu_Haile_Mariam

http://www.bookrags.com/wiki/Ethiopian_Peo...emocratic_Front

http://en.wikipedia.org/wiki/Eritrean_Peop...iberation_Front

நாரதரே, இனியாவது வரலாறுகளை நன்றாக படித்து விட்டு எழுதுங்கள்.

நான் ஆங்கிலத்தில் இணைத்ததை மொழி பெயர்த்ததுக்கு முதலில் நன்றிகள், இதில் இருந்து நானெழுதியவற்றில் என்ன பிழை இருப்பதாக்கூறுகிறீர்? எரித்திரிய மக்கள் ஆயுதம் தாங்கிப் போராடவில்லை என்கிறீரா? அவர்களுக்கு அமெரிக்கா தான் சுதந்திரம் வழங்கியதா?

உலகின் எந்தப் போரட்டத்திலும் புறச்சக்திகள் தாக்கம் செலுத்தும் தான் அதற்கு எரித்ரியாவோ ,ஈழமோ விதிவிலக்கல்ல.எரித்ரியாவில் மக்கள் புறக்காரணிகள் எதுவாக இருந்தாலும் தொடர்ந்தும் பல ஆண்டுகாளாக ஆயுதப் போரை மேற்கொண்டனர் என்பதுவும், பொருளாதாரரீதியாக நலிவடைந்த எதியோப்பியாவாலும்,இராணுவ ரீதியாக அவர்கள் தம்மைப்பாதுகாத்து பின் வாங்கிப் பின்னர் பல நகரங்களைக் கைப்பற்றி முனேறியதாலும் தான் சமாதனப்பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு சர்வதேச அங்கீகாரம் அவர்களுக்குக் கிடைத்தது.இங்கே எரிதிரிய மக்களின் தொடர்ச்சியான ஆயுதப் போரட்டம் இன்றி அவர்களுக்கு விடுதலை இல்லை என்பதே அந்தப்போரட்டம் சொல்லும் பாடம்.அமெரிக்காவின் தயவில் அவர்கள் விடுதலை பெற்றனர் என்று எங்காவது கூறப் படுள்ளதா?

வித்தின் வீழ்ச்சியும் அதை தொடர்ந்து சோவியத் தனது உதவிகளை நிறுத்திய கால கட்டத்தை சாதகமாகக் கொண்டு எதியோப்பிய அரசிற்கெதிரான அமைப்பான ஈ.பி.ஆர்.டி.எவ். அடிஸ்-அபாபாவை கைப்பற்றிக் கொள்ள மென்ஞிற்சு சிம்பாப்வே ற்கு தப்பி சென்றார். புதிய புரட்சிகர எதியோப்பிய அரசு எரித்திரிய மக்கள் மேல் கரிசனை கொண்டதாக இருந்தது.

மென்ஞிற்சு கால சொவியத் சார்பு நிலையால் கொதித்து பொயிருந்த நேட்டோ அணி, இப்புதிய சூழ்நிலையை பயன் படுத்தி தமக்கு சார்பான அரசுகளை அங்கு கொண்டு வரும் வகையில் இரு தரப்பினரையும் லண்டனில் பேச வைத்து இறுதியில் வாக்கெடுப்பு மூலம் எரித்திரியா பிரிந்து சென்றது. எரித்திரியாவை அங்கீகரித்த நாடுகளில் அமெரிக்கா முன் நின்றது.

நாரதரே, இனியாவது வரலாறுகளை நன்றாக படித்து விட்டு எழுதுங்கள்.

:arrow:

In 1990 the EPLF had captured the strategically important port of Massawa, and they entered Asmara, now the capital of Eritrea, in 1991.

The Ethiopian army under Haile Mariam Mengistu (an army officer who deposed Haile Selassie in 1974) intensified the war against Eritrea, but it was easily defeated in 1991 after Mengistu fell from power.

It was at 10:00 a.m. on May 24, 1991 that Asmara residents realized EPLF fighters had entered their city. In a spontaneous outburst of happiness and relief, Asmarinos flung open their doors and rushed into the streets to dance in jubilation, some still in their pajamas. The dancing lasted for weeks.

On May 24th 1991, after thirty years of relentless struggle, the EPLF entered Asmara to a universal and delirious welcome.

:arrow:

At a conference held in London in 1991 the Ethiopian People's Revolutionary Democratic Front (EPRDF), who were now in control of Ethiopia having ousted Mengistu and were sympathetic to Eritrean nationalist aspirations, accepted the EPLF as the provisional government of Eritrea. So began the long process towards independence and international legitimation of Eritrea as a country in its own right.

In April 1993 a referendum was held in which 1,102,410 Eritreans voted; 99.8% endorsed national independence and on May 28 Eritrea became the 182nd member of the UN. Later that year, Eritreans elected their first president, Isaias Afewerki, formerly secretary-general of the EPLF.

நான் ஆங்கிலத்தில் இணைத்ததை மொழி பெயர்த்ததுக்கு முதலில் நன்றிகள், இதில் இருந்து நானெழுதியவற்றில் என்ன பிழை இருப்பதாக்கூறுகிறீர்?

இன்னும் புரியவில்லையா?

எரித்திரியப் போர் இறுதியில் அமெரிக்காவையும் எதியோப்பியாவையும் மண்டியிட வைத்ததாக எழுதியுள்ளீர். இதிலிருந்து உமக்கு எந்த முகாமில் யார் இருந்தார்கள் என்பது கூட தெரியவில்லையென்பது புரிகிறது.

எரித்திரிய மக்கள் ஆயுதம் தாங்கிப் போராடவில்லை என்கிறீரா?

நல்ல வேடிக்கையிது. எரித்திரிய மக்கள் தாங்கள் போராடாமல் 'றொபோ' வைத்து அடி பட்டார்கள் என்று யாராவது சொன்னர்களா?

உலகின் எந்தப் போரட்டத்திலும் புறச்சக்திகள் தாக்கம் செலுத்தும் தான் அதற்கு எரித்ரியாவோ ,ஈழமோ விதிவிலக்கல்ல.

உதைத் தானப்பா அடியேனும் சொன்னன். நீங்கள் தான் அதை வரலாற்று திரிப்பென்றீர்கள்.

இங்கே எரிதிரிய மக்களின் தொடர்ச்சியான ஆயுதப் போரட்டம் இன்றி அவர்களுக்கு விடுதலை இல்லை என்பதே அந்தப்போரட்டம் சொல்லும் பாடம்.

இதில் எனக்கும் உடன்பாடுதான். :idea:

அமெரிக்காவின் தயவில் அவர்கள் விடுதலை பெற்றனர் என்று எங்காவது கூறப் படுள்ளதா?

அமெரிக்காவின் அங்கீகாரம் அவர்களுக்கு கிடைத்தது. அதை தவிர நான் வேறொன்றும் சொல்லவில்லையே.

நான் சொல்ல வந்தது அமெரிகாவினால் அவர்களுக்கு விடுதலை கிடைக்க வில்லை என்பதே.அவர்கள் அமெரிக்க அரசினால் எதியோப்பிய அரசு முண்டுகொடுக்கப்பட்ட காலத்திலும் ,பின்னர் சோவியத் அரசால் முண்டு கொடுக்கப்பட்ட காலத்திலும், ஆயுதப் போரட்டத்தை தொடர்ந்து நடாத்தினார்கள்.முப்பது வருடங்களாக அவர்களுக்கு எந்த சர்வதேச உதவியோ அங்கீகாரமோ கிடைக்க வில்லை. அவர்கள் சர்வதேசம் சொல்கிறது அமெரிக்கா சொல்கிறது என்பதற்காக தமது ஆயுதப் போரைக் கைவிடவில்லை.

இங்கே சமாதானம் என்பவர் சொல்வது எல்லாமே சர்வதேசம் சொல்கிறது அமெரிக்கா சொல்கிறது என்பதால் உங்கள் ஆயுதப் போரைக்கைவிடுங்கள்,உங்கள் அரசியல் இலக்குகளை மாற்றுங்கள், என்டிஎலெf போன்ற அமைப்புக்களுக்கு தமிழர் சார்பாக அரசியல் செய்யும் அதிகாரத்தை வழங்குங்கள் அது தான் பன்முகத்தன்மை என்பதாக இருக்கிறது.அதனை வழி மொழிந்தே நீர் எரித்ரியப் போராட்டதைப் பற்றிக் கூறி இருந்தீர் , அவ்வாறே எனக்குப் பட்டது. அது அவ்வாறு இல்லை என்று இப்போது கூறுகீறிர் , நல்லது.அதுவே உமது தற்போதைய கருது எனெனில் நன்று. நான் தவறுதலாக புரிந்து கொண்டிருந்தால் மன்னிக்கவும்.

எரித்ரியாப்போராட்டம் எமக்கு நாம் ஏன் அமெரிக்கா சொல்வதையோ அன்றி வேறு எவர் சொல்வதையோ கேட்காமல் எமது இலக்கில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம்.

[cஒலொர்=ரெட்]நான் சொல்ல வந்தது அமெரிகாவினால் அவர்களுக்கு விடுதலை கிடைக்க வில்லை என்பதே.அவர்கள் அமெரிக்க அரசினால் எதியோப்பிய அரசு முண்டுகொடுக்கப்பட்ட காலத்திலும் ,பின்னர் சோவியத் அரசால் முண்டு கொடுக்கப்பட்ட காலத்திலும், ஆயுதப் போரட்டத்தை தொடர்ந்து நடாத்தினார்கள்.முப்பது வருடங்களாக அவர்களுக்கு எந்த சர்வதேச உதவியோ அங்கீகாரமோ கிடைக்க வில்லை. அவர்கள் சர்வதேசம் சொல்கிறது அமெரிக்கா சொல்கிறது என்பதற்காக தமது ஆயுதப் போரைக் கைவிடவில்லை.[/cஒலொர்]

இங்கே சமாதானம் என்பவர் சொல்வது எல்லாமே சர்வதேசம் சொல்கிறது அமெரிக்கா சொல்கிறது என்பதால் உங்கள் ஆயுதப் போரைக்கைவிடுங்கள்,உங்கள் அரசியல் இலக்குகளை மாற்றுங்கள், என்டிஎலெf போன்ற அமைப்புக்களுக்கு தமிழர் சார்பாக அரசியல் செய்யும் அதிகாரத்தை வழங்குங்கள் அது தான் பன்முகத்தன்மை என்பதாக இருக்கிறது.அதனை வழி மொழிந்தே நீர் எரித்ரியப் போராட்டதைப் பற்றிக் கூறி இருந்தீர் , அவ்வாறே எனக்குப் பட்டது. அது அவ்வாறு இல்லை என்று இப்போது கூறுகீறிர் , நல்லது.அதுவே உமது தற்போதைய கருது எனெனில் நன்று. நான் தவறுதலாக புரிந்து கொண்டிருந்தால் மன்னிக்கவும்.

எரித்ரியாப்போராட்டம் எமக்கு நாம் ஏன் அமெரிக்கா சொல்வதையோ அன்றி வேறு எவர் சொல்வதையோ கேட்காமல் எமது இலக்கில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம்.[/ஃஉஒடெ]

நான் இங்கு யாருடைய கருத்தையும் வழிமொழிய வரவில்லை. பன் முகத்தன்மை என்ற போர்வையில் ஈ.என்.டி.எல்.எவ் போன்ற துரோக கும்பல்கள் மறு பிரவேசம் செய்வது தமிழ் மக்கழுக்கு தேவையில்லையென்று ஏற்கனவே இங்கே நான் சொன்னதை அதற்குள் மறந்து விட்டீர்களா?

எவ்வாறாயினும், நான் எழுதிய முறை தவறான புரிதலுக்கு வழி வகுத்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். எமக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் அப்பப்போ வந்து போனாலும் வெளி எதிரிகளுக்கெதிராக எமது குரல் ஒன்றாகவே ஒலிக்கும். :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யோ இம்சை பண்ணுறாங்கப்பாபாபாபாபாபாபா

  • தொடங்கியவர்

.......இங்கே சமாதானம் என்பவர் சொல்வது எல்லாமே சர்வதேசம் சொல்கிறது அமெரிக்கா சொல்கிறது என்பதால் உங்கள் ஆயுதப் போரைக்கைவிடுங்கள்,உங்கள் அரசியல் இலக்குகளை மாற்றுங்கள், என்டிஎலெf போன்ற அமைப்புக்களுக்கு தமிழர் சார்பாக அரசியல் செய்யும் அதிகாரத்தை வழங்குங்கள் அது தான் பன்முகத்தன்மை என்பதாக இருக்கிறது.அதனை வழி மொழிந்தே நீர் எரித்ரியப் போராட்டதைப் பற்றிக் கூறி இருந்தீர் , அவ்வாறே எனக்குப் பட்டது. அது அவ்வாறு இல்லை என்று இப்போது கூறுகீறிர் , நல்லது.அதுவே உமது தற்போதைய கருது எனெனில் நன்று. நான் தவறுதலாக புரிந்து கொண்டிருந்தால் மன்னிக்கவும்.

எரித்ரியாப்போராட்டம் எமக்கு நாம் ஏன் அமெரிக்கா சொல்வதையோ அன்றி வேறு எவர் சொல்வதையோ கேட்காமல் எமது இலக்கில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம்.

யாழ் கருத்துக்களம் பயனனுள்ள ஒரு விவாத அரங்கு என்பதை மனதிற்கொண்டுதான் இங்கு எனது கருத்துகள் வைக்கப்படுகின்றன. ஆனால் நீர் உமது பலவீனமான வாதங்களுக்கு மிக மோசமான வழிமுறைகளில் பலன்சேர்க்க முற்படுவதை களத்தின் வாசர்கள் அறிவர். எனவே அது பற்றி நான் விபரமாக கருத்து எழுதாது ஒரு சிறு குறிப்பொன்றை தருகிறேன்.

1. அமெரிக்கா சொல்கிறது ஆயுதப்போரை கைவிடுங்கள்.

2. புலிகள் தமது அரசியல் இலக்கை மாற்ற வேண்டும்.

3. ஈ என் டி எல் எவ் போன்ற அமைப்புகளுக்கு தமிழர் சார்பாக அரசியல் அதிகாரத்தை வழங்குகள்.

4. அதுதான் பன்முகத்தன்மையானது.

மேல் குறிப்பிட்ட வாசகங்களையோ அல்லது அவைகளது பொருள்பட நேரடியாகவோ மறைமுகமாகவோ கருத்துகள் எதுவும் என்னால் முன்வைக்கப்படாதபோதும் நாரதரின் விசமத்தனமான திரிப்புகள் அவரின் அரசியல் வங்குரோத்தை மறைக்க முடியாமல் அம்பலப்படுவது தவிர்க்கமுடியாத யாழ் கருத்துகளத்தின் இன்றைய யதார்த்தம்.

தனது வசதி கருதி நாரதர் மறக்க அல்லது மறைக்க நினைக்கும் விடயங்களை மீண்டும் குறிப்பிடுகிறேன்.

1. இலகுவில் வெல்ல முடியாது புலிகளால் கட்டியெழுப்பப்பட்ட இராணுவ பலத்தில் இருந்து அடுத்த கட்ட அரசியலை செய்ய புலிகள் முன் நகர்வது எப்படி

என்பது தான் எனது கருத்தே அன்றி ஆயுதங்களை கைவிடும்படி அல்ல.

2. இலக்கை மாற்ற வேண்டும் என்பதல்ல எனது கருத்து இலக்கை அடையும் வழிமுறைகளில் காலத்தின் காட்டாயம் கருதி மாற்றம் வேண்டும் என்பதுதான்.

3. இந்த கருத்து உமது அப்பட்டமான திரிப்பு. பரந்தன் ராஜனுக்கும் கருணாவுக்குமான பிரிவின் பின் ராஜன் குழு வன்னிக்கு தொடர்புகளை ஏற்படுத்த முயன்றதன் பின்னணியில் சில மாற்றங்கள் நிகழக் கூடும் என்றுதான் எழுதினேன். நிகழக்கூடும் என்பது மிக நிகழ்தகவு குறைந்த ஒரு சொற்பதம் என்பதை இங்கு கவனத்தில் கொள்தல் வேண்டும்.

4. மீண்டும் உமது பொறுப்பற்ற கதை அளப்பு. பன்முகத்தன்மைக்கும் ஈ என் டி எல் எவ் க்கும் முடிச்சுப்போடும் மொட்டையும் முழங்காலும் தொடர்பில்லாத உமது கருத்துகள் நோய்க்கூறுள்ள விசமத்தனம் கொண்டவை.

அறிவுபூர்வமான ஆக்கபூர்வமான ஒரு கருத்து பரிமாற்றத்தை விரும்பியே எனது யாழ் கருத்துக்கள எழுத்துகள் பதிவாகின்றது என்பதை அழுத்திக் கூறிக்கொள்ளவிரும்புகிறேன்.

அதை மீறி எந்த உள்நோக்கமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம் அண்ணா!!!

தோழர் என்னை மன்னித்துவிடுங்கள். ஆரம்பகாலத்தில் என்னால் உங்களை புரிய முடியவில்லை ஆதலால் எனக்கு உங்கள்மீது சந்தேகமாக இருந்தது அதனால் நான் உங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்பு எழுதியிருக்கிறேன். இப்போது தெளிந்துவிட்டேன் உங்களை புரிந்துவிட்டேன் உங்களின் சமாதான பிரியம் கண்டு நான் நெகிழ்ந்து போகிறேன்......... உங்களுக்கு முடிந்த அளவில் ஆதரவு தருவதோடு உங்களுக்கு துணைநிற்கவும் துணிந்துவிட்டேன். (தோழரே உமக்கு ஏதாவது தூய சக்திகளிடமிருந்து சமாதனத்தை வலியுறுத்துவதற்காக ஏதாவது சிறிய தொகை கிடைப்பின் உம்மால் முடிந்தால் என்னுடனும் ஒரு சிறிய தொகையையெனினும் பங்கிடுங்கள் நன்றி.)

இத்தால் எனது சமாதானபணியை தொடர்கிறேன்!

யாழ் களத்தில் கருத்து எழுதுபவர்கள் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். எதிர் கருத்துக்கள் எழுதுவதால் நீங்கள் கூறுவது உண்மையாகிவிடாது.

யாழ்நகரில் பள்ளி மாணவர்கள் பகிஸ்கரிப்பை மேற்கொள்வதால் யாருக்கு நட்டம் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.

அதுகும் க.பொ.த சாதாரண பாPட்சைக்கு இன்னமும் சில மமாதங்களே இருக்கின்றன. க.பொ.த சாதாரண பாPட்சை என்பதால் இதை சில கனவான்கள் சாதாரண பாPட்சையாகவே பார்கின்றார்கள். இது இவர்கள் நினைப்பது போல் சாதரணமாக எடுக்கமுடியாது. சில கனவான்கள் பள்ளிமாணவர் பள்ளிக்கு செல்ல கூடிய இயல்வுநிலை யாழில் இல்லை என்று சொல்கிறார்கள். எந்த அடிப்படையில் இவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்?? இவர்கள் இலவச கல்வியை வழங்கும் அரசு மீதும் அதன் படைகள்மீதும் சந்தேகபடுகிறார்கள். யாழ்நகரம் கல்வியாளர்களால் நிறையவேண்டும் என்பதற்காக அரசு கொடுக்கும் விலையை தெரிந்துகொள்ள வேண்டும். இலவசமாக கல்வி வழங்கும் அரசின் படைகள் பள்ளி மாணவரை கடத்துவதையும் கற்பளிப்பதையும் கொலை செய்வதையுமே இவர்கள் பெரிதுபடுத்தி எழுதுகிறார்கள். கிருசாந்தி போன்ற மாணவிகளின் துயரங்களை இவர்கள் துணைக்கிளுக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் இவ்வாறு அழிந்து போய்விடின்....... கல்வி?? சுவர் இருந்தால்தானே சித்திரம் கீறலாம் என்கின்றார்கள். பள்ளி மாணவர் பள்ளிக்கு செல்லும் போது பல தமிழ் இளஞ்ஞர்களை சகமாணவரை கொலை செய்த இராணுவ முகாம்களை தாண்டும்போது அஞ்சி அஞ்சி உடல் நடுங்கி கொண்டே போகிறார்கள் இந்மனநிலையில் பள்ளி செல்லும் மணவர்கள் இராணுவ முகாம்களின் முன்னால் அமைந்திருக்கும் பள்ளிகளில் எவ்வாறு படிக்க முடியும் என்கிறார்கள்.

இந்த கனவான்கள் முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.

யாழ் மணவர்கள் இறந்து போவற்கு சிங்கள கொலைவெறிபிடித்த இராணுவத்தை ஒரு போதும் காரணம்காட்ட முடியாது.

காரணம் ஜனநாயக கோட்பாடும் உண்மை யதார்த்த நிலைகளும் அதை நிராகரிக்கின்றன. இறப்பு என்பது பிறப்பினால் வருவது இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே பிறக்காதவர்கள் இறக்க முடியாது. எனவே பிறப்பிற்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களே இறப்பிற்கும் காரணிகள் ஆவார்கள். அப்படியாயின் யாழ் மாணவரை பெற்ற பெற்றோர்களே மாணவரின் இறப்புக்கு பொறுப்பாளிகள்.

அதைவிட பௌத்த சிங்கள இராணுவத்தினர். பௌத்த மதத்தினராக இருந்தபோதும்..... இந்து சமய கோட்பாட்டின் பிரகாரம் அழித்தல் கடவுளின் பணியை முன்னேடுக்கிறார்கள். இவர்கள் பெருந்தன்மையுடையவர்கள். இவர்கள் மீதே சில கருத்தெழுதும் கனவான்கள் பழிபோட முனைகிறார்கள். யாழ்நகர மாணவர்கள் தமது இறப்பிற்கு தம்மை பெற்றதன் மூலம் காரணமான பெற்றோரை கொலைசெய்ய துணியவேண்டும். அவர்கள் இவர்களை பெற்றிராதுவிடின் இவர்கள் இறக்க வேண்டிய நிலை ஏற்படாது எனும் ஜனநாயக கோட்பாட்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

(தோழர் சமாதானம்... எப்படி யாழ்களத்தை குழப்புறேனே. இது தொடக்கம்தான் போக போக குருவை மிஞ்சும் சிஸ்யகாகிடுவேன்)

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டுமாப் புரியவில்லை. என்ன இங்கே நடக்கின்றது? :roll: :roll: :roll: :roll:

தனது வசதி கருதி நாரதர் மறக்க அல்லது மறைக்க நினைக்கும் விடயங்களை மீண்டும் குறிப்பிடுகிறேன்.

1. இலகுவில் வெல்ல முடியாது புலிகளால் கட்டியெழுப்பப்பட்ட இராணுவ பலத்தில் இருந்து அடுத்த கட்ட அரசியலை செய்ய புலிகள் முன் நகர்வது எப்படி

என்பது தான் எனது கருத்தே அன்றி ஆயுதங்களை கைவிடும்படி அல்ல.

2. இலக்கை மாற்ற வேண்டும் என்பதல்ல எனது கருத்து இலக்கை அடையும் வழிமுறைகளில் காலத்தின் காட்டாயம் கருதி மாற்றம் வேண்டும் என்பதுதான்.

3. இந்த கருத்து உமது அப்பட்டமான திரிப்பு. பரந்தன் ராஜனுக்கும் கருணாவுக்குமான பிரிவின் பின் ராஜன் குழு வன்னிக்கு தொடர்புகளை ஏற்படுத்த முயன்றதன் பின்னணியில் சில மாற்றங்கள் நிகழக் கூடும் என்றுதான் எழுதினேன். நிகழக்கூடும் என்பது மிக நிகழ்தகவு குறைந்த ஒரு சொற்பதம் என்பதை இங்கு கவனத்தில் கொள்தல் வேண்டும்.

4. மீண்டும் உமது பொறுப்பற்ற கதை அளப்பு. பன்முகத்தன்மைக்கும் ஈ என் டி எல் எவ் க்கும் முடிச்சுப்போடும் மொட்டையும் முழங்காலும் தொடர்பில்லாத உமது கருத்துகள் நோய்க்கூறுள்ள விசமத்தனம் கொண்டவை.

அறிவுபூர்வமான ஆக்கபூர்வமான ஒரு கருத்து பரிமாற்றத்தை விரும்பியே எனது யாழ் கருத்துக்கள எழுத்துகள் பதிவாகின்றது என்பதை அழுத்திக் கூறிக்கொள்ளவிரும்புகிறேன்.

அதை மீறி எந்த உள்நோக்கமும் இல்லை.

நல்ல பகிடி சமாதானம் இங்க நீர் என்ன எழுதுனீர் எண்டு வாசிச்சுப் போட்டு வாரும் இல்லாட்டி நீர் எழுதினதிற்கு விளக்கம் தாரும்,

1) அடுத்த கட்ட அரசியல் எண்டால் என்ன,புலிகள் என்ன செய்ய வேண்டும்?இப்போது அதனை அவர்கள் செய்ய வில்லையா? நான் முன்னர் கேட்ட கேள்விகளிவை தான் அதற்கு நீர் தந்த பதிலும் இங்க தான் இருக்கு.எதோ இடைக்காலத் தீர்வு புதிய திருப்பம் என்று எதோ அலம்பினீர்.எல்லாம் புலிகள் செய்தது தான் இதில என்ன புதிசாக்கிடக்கு எண்டு கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை.

2) நீர் சொன்னது அமெரிக்காவின் சொற்படி நடவுங்க எண்டு,அமெரிக்கா புலிகள் அரசியல் சமரசங்களைச் செய்ய வேண்டும் என்று தான் இணைத் தலமை நாடுகளின் கடைசிக் கூட்டத்திலும் கேட்கப் பட்டது.அப்படியானல் நீர் என்னதைச் சொல்ல வாறீர், புலிகள் இலக்குகளை மாற்றுவதா போராட்ட வழி முறையை மாற்றுவதா? அப்ப அமெரிக்க சொலுறதைக் கேட்க வேண்டாமா? அது என்ன புதிய வழி முறை ? புலிகள் ஆயுதப் போரட்டத்தை இடை நிறுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளனர்.இதை விட நீர் சொல்லும் புதிய வழி முறை என்ன? இந்தக் கேள்விக்கும் நீர் பதில் அழிக்க வில்லை.

3)ஓ நிகழக்கூடும் என்று எதன் அடிப்படையில் எழுதுனுஈர் ,உமது கனவா? நிகழ்தகவு குறைந்த உமது கனவுகள் எதற்கு எமக்கு?

4)பனுமுகத் தன்மையின் கீழ் யார் யார் தமிழர் பிரதி நிதிகள் என்று கேட்ட போது ,தேர்தலில் நின்று தோற்றவர்கள் எல்லோரும் என்று தானே எழுதுனீர், பிறகென்ன நான் திரிகிறன்.உமது வியாக்கினாம் நாளுக்கு நாள் வித்யாசகமாகப் போய்க் கொண்டிருகிறது.இங்கே நீர் எழுதுயவற்றை மற்றவர்களும் படித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

நீர் எழுதும் சொற்களின் பின்னால் இருக்கும் கேள்விகளுக்கு நீர் தான் விளக்கம் எழுத வேண்டும்,ஆகவே மேற்கூறியவற்றிற்கு விளக்கம் எழுதும். நீர் தெளிவா என்ன சொல்லுறீர் என்பதை விளக்கினா நாங்கள் அதற்கு அர்த்தங்களைக் கூற வேண்டிய அவசியம் இல்லை.

மருதங்கேணி நீங்க குருவையும் மின்ச்சி விட்டீர்கள்.

1. இலகுவில் வெல்ல முடியாது புலிகளால் கட்டியெழுப்பப்பட்ட இராணுவ பலத்தில் இருந்து அடுத்த கட்ட அரசியலை செய்ய புலிகள் முன் நகர்வது எப்படி

என்பது தான் எனது கருத்தே அன்றி ஆயுதங்களை கைவிடும்படி அல்ல.

2. இலக்கை மாற்ற வேண்டும் என்பதல்ல எனது கருத்து இலக்கை அடையும் வழிமுறைகளில் காலத்தின் காட்டாயம் கருதி மாற்றம் வேண்டும் என்பதுதான்.

இந்த விடயங்கள் உண்மையில் விடுதலை புலிகளால் வெகுஜன தளத்தில் செய்யப் பட வேண்டிய அல்லது விவாதிக்கப் பட வேண்டியவை. மாறாக இங்கு கதைக்கப் படுவதால் புலிகளுக்கு அறிவுரை கூறுவது போலவே பார்க்கப் படுகிறது. இதனால் சந்தேகங்களும் குதர்க்கங்களும் தான் வளர்கின்றனவே தவிர ஆரோக்கியமாக ஒன்றும் நடப்பதாக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளால் ஒரு போதும் ஏகபிரதிநிதிகள் ஆகமுடியாது!

காரணம் ஏகபிரதிநித்துவமும் ஜனநாயக கோட்பாடும் வேறு வேறானது. அந்த அடிப்படையில் யாருமே ஏகபிரதிநிதிகள் ஆகமுடியாது. உயிர்கள் வாழும் இடங்களில் ஏகபிரதிநித்துவம் எனும் சொல் அர்தமே இல்லாதது. கடவுள்களே ஏகபிரதிநிதிகளாகமுடியாது. காரணம் அவர்களும் உயிர்வாழுகிறார்கள் என்ற யதார்த்த நிலையை நீங்கள் உணர வேண்டும். ஆதலால்தான் ஜேசு புூமியில் பிறந்தபோது கர்த்தரின் தூதுவராக பிறந்தார். பின்பு இறந்து பரலோகம் செல்லும் போதும் தூதுவராகவே சென்றார் அவரால் புூமியில் இருந்த மக்களின் ஏகபிரதிநிதி ஆகமுடியவில்லை. கிருஸ்ண பகவான் அர்சுனனுக்கு தேரோட்டியாக முடிந்ததே தவிர அந்தநாடகளில் வாழ்ந்த மக்களுக்கு ஏகபிரதிநியாக முடியவில்லை. காரணம் அந்த மக்கள் உயிர்வாழ்ந்து கோண்டிருந்தார்கள். ஜனநாயக கோட்பாடும் ஏகபிரதிநித்துவவும் வேறு வேறானது என்பதால் உயிர்கள் வாழும் இடத்தில் யாராலும் ஏகபிரதிநிதியாக முடியாது.

ஆனாலும்..............................

ஆனந்தசங்கரியாரோ அல்லது அவர் வழிநடத்தும் ஈ.ன்.டி.ல்.வ் யினரோ ஏகபிரதிநிதியாகும் போது பன்முக அரசியலுகடகுட்பட்ட ஜனங்களால் அதை நிராகரிக்க முடியாது. காரணம் .....

ஜனநாயகோட்பாடும் ஏகபிரதிநித்துவமும் வேறு வேறானது எனினும்.

அணுசக்தி கோட்பாடு அதை ஒன்றிணைக்கிறது. எவ்வாறாயின். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களுமே அணுக்களால் ஆனவை. ஆகவே ஜனநாயகவாதியாயினும்.... ஏகபிரதிநிதியாகினும் அணுவின் கூட்டு சேர்கையால் உருவாக்கபட்டவர்கள் ஆதலால் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுகின்றன. அவ்வாறான ஒரு கோட்பாட்டை பன்முக அரசியல் முன்நிறுத்தும்போது ஈ.ன்.டி.ல்.வ் னர் ஏகபிரதிநியாகிறார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. சில கனவான்கள் அந்த கோட்பாட்டை ஏன் புலிகள் முன்நிறுத்த முடியாது எனும் ஓரு முட்டாள்தனமான கேள்வியை கேட்க முடியும். புலிகள் அதை முன்நிறுத்த முடியாது காரணம். புலிகளின் காலம் வெறும் கண்ணிமைக்கும் காலத்தில் முடியும் அபாயநிலையிருக்கிறது.

அமெரிக்க படைகள் வியாட்னமீது அராஜகயுத்தத்தை தொடர்ந்த போது. அதனால் வந்த போரழிவை வியட்னாமியர்கள் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் ஆனால் அவர்கள் அமெரிக்கர்களுக்கு எதிராக போர்தொடுப்பது எனும் ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்தார்கள். வியாட்னாமியரின் 3000 வருட கால வரலாற்றில் அமெரிக்க படையெடுப்பு காலமென்பது ஒரு கண்ணிமைக்கும் காலத்திற்குள் முடிந்து விடுகிறது. ஆதலால் அமெரிக்கா ஆக்கிரமித்தபோது வியட்நாமியர்கள் எல்லோரும் ஒன்று கூடி கண்ணிமைத்திருப்பின் அந்தகாலம் அதற்குள் அடங்கியிருக்கம் ஆனால் முட்டாள்தனமாக அவர்கள் முடிவெடுத்த பலனை பின்பு அனுபவித்தார்கள். அது போல் தமிழ்மக்கள் ஒன்று கூடி கண்ணிமைத்தால் புலிகளின் காலம் முடிந்துவிடும் அபயாநிலை இருக்கிறது. ஆனால் ஈ.ன்.டி.ல்.வ் னருக்கு அந்த அபாய நிலையில்லை. காரணம் அவர்கள் சிங்கள படை முகாமிலும் இந்திய றோவின் அடைக்கலத்திலுமே இருக்கிறார்கள். அவர்கள் தமிழ் ஜனங்களின் தயவுலோ. அன்றி ஜனநாயக கோட்பாட்டிற்கு ஏதிரான முறையில் ஜனங்கள்வாழும் இடங்களிலோ வாழவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

என்னை போன்றோர் தோழர் சமாதானம் போன்றோர் இப்பாடியான சொற்சுவை பொருட்சுவை நிறைந்த கருத்துக்களை முன்வைக்கும்போது சிலர் அதை சுவைக்காமல் எம்மீது புலி எதிர்ப்பு முத்திரையை குத்துகிறார்கள்.

அவர்களுக்கு நான் எழுத விரும்புவது. புலிகள் போராடுகிறார்கள் என்பதிலோ புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக தமிழ்செல்வன் இருக்கிறார் என்பதிலோ எனக்கோ தோழர் சமாதானத்துக்கோ மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

பின்னிடீங்க போங்க.. உந்த கருதுக்களை நீங்கள் வைக்க வேண்டிய தளமே வேறு, இங்கே யாழ்க் களத்தில் கருத்தாடுபவர்களுக்கு இதெல்லாம் விளங்காது... எதாவது புதிசா இருந்தா சொல்லுங்கோ மாற்று மற்றும் சமாதானம்....இல்லாட்டி புலிகளுக்கு அரசியல் ஆலோசகரா போங்கோ ....மருதங்கேணி நீங்கள் பிரதம ஆலோசகராகிற தகுதி கனக்க இருக்கு...ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை எண்டானாம்..

அய்யா சமாதானம், ஒரு விடையத்தைப்பற்றி பல தடவைகள் கேட்டு பல கிழமைகளாக உமது பதிலுக்கும் விளக்கத்திற்கு காத்திருக்கிறேன். உலக அரசியலுக்கு வியாக்கியானம் குடுகிறனீங்களுக்கு சொந்த கைய்யெழுத்து பற்றி விளக்கம் கேட்டால் மொழி பெயர்போடை முடிச்சு போட்டு பூச்சாண்டி காட்டினியள் பிறகு சத்தத்தை காணம்.

அது தான் உமது கைய்யெழுத்து

"There is plenty of guilt in our region. No one is innocent, but as long as we allow the events on the ground to dictate policies, we are in trouble."

இதை சொன்னது யார்? இது எவ்வாறு எங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது?

அவர்களுக்கு நான் எழுத விரும்புவது. புலிகள் போராடுகிறார்கள் என்பதிலோ புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக தமிழ்செல்வன் இருக்கிறார் என்பதிலோ எனக்கோ தோழர் சமாதானத்துக்கோ மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

எனக்கு எல்லாம் புரியுறனாதிரி சொல்லி இருக்கிறீங்கள்... எனக்கும் பங்கு தருவதாக இருந்தால் என் வேலை வெட்டி எல்லா வற்றையும் விட்டுவிட்டு உங்கள் பின்னால் வரத்தயாராக இருக்கிறேன்...

இது நிமிர்த்தம் நோர்வே தூதரகத்துக்கு முன்னால் எனக்கு தெரிந்தவர்கள் யாரையாவது தீக்குளிக்க வைக்க கூட முயற்ச்சி செய்யலாம்.... மற்றது சமாதானம் அண்ணாவின் கொள்கையே எங்கள் கொள்கை...

வருவாய் வரும் எண்றால்

" எங்களின் தாகம் சமாதானம்"

சமாதானம் அண்ணா!!!

தோழர் என்னை மன்னித்துவிடுங்கள். ஆரம்பகாலத்தில் என்னால் உங்களை புரிய முடியவில்லை ஆதலால் எனக்கு உங்கள்மீது சந்தேகமாக இருந்தது அதனால் நான் உங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்பு எழுதியிருக்கிறேன். இப்போது தெளிந்துவிட்டேன் உங்களை புரிந்துவிட்டேன் உங்களின் சமாதான பிரியம் கண்டு நான் நெகிழ்ந்து போகிறேன்......... உங்களுக்கு முடிந்த அளவில் ஆதரவு தருவதோடு உங்களுக்கு துணைநிற்கவும் துணிந்துவிட்டேன். (தோழரே உமக்கு ஏதாவது தூய சக்திகளிடமிருந்து

இத்தால் எனது சமாதானபணியை தொடர்கிறேன்!

இதயே சமாதானம் அண்ணாவுக்கான பதிலாக நானும் வளங்க விரும்புகிறேன்...!

தோழர்கள் தூயவன், நாரதர், குறுக்காலபோவன், ஈழவன், வன்னியன், தேவன், வன்னி1, வினித், வடிவேலுக்கள், மாற்று, சாத்து... இப்பிடி நான் பேர் குறிப்பிடாதவர்கள் கூட வந்து இணைந்து கொள்ள முடியுமா எண்று விசாரிக்குமாறு தாள்மையுடன் வேண்டுகிறேன்....!

(தோழரே உமக்கு ஏதாவது தூய சக்திகளிடமிருந்து சமாதனத்தை வலியுறுத்துவதற்காக ஏதாவது சிறிய தொகை கிடைப்பின் உம்மால் முடிந்தால் என்னுடனும் ஒரு சிறிய தொகையையெனினும் பங்கிடுங்கள் நன்றி.)

சமாதானம் அப்ப நானும் வாரன். அங்க ஜெமினி அண்ணா இடையிடையே தன்னோடும் வந்து எழுதட்டாம் :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.