Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Featured Replies

சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உயர் நீதிமன்றம உத்தரவு!

vikki_office.pngவடமாகாண பிரதான செயலாளர் மற்றும் அவரது நிர்வாக குழுவினரின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் வகையில் வடமாகாண முதலமைச்சரால் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சுற்றறிக்கை ஒன்றை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று முதலமைச்சருக்கு உத்தரவிட்டது. 

வடமாகாண பிரதான செயலாளரினால் இந்த சுற்றறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று பிரதம நீதியரசர் மொஹான்பீரிஸ் தலைமையிலான மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழுவினால் பரிசீலிக்கப்பட்டது.

முதலமைச்சரின் சுற்றறிக்கையின் மூலம் தமதும், தமது அலுவலக நிர்வாக குழுவினரதும் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக வடமாகாண செயலாளர் சுட்டிக்காட்டி இருந்தார்.

அத்துடன் தமது கடமைகளில் தலையிட்டு தம்மை பதிவி விலக்க முதலமைச்சர் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் ஏற்கனவே இந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, வடமாகாண முதலமைச்சரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த சுற்றுநிரூபத்தை ரத்து செய்வதாக அறிவித்து, மற்றுமொறு சுற்றுநிரூபத்தை அனைத்து தரப்பினருக்கும் வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அதேநேரம் வடமாகாண செயலாளரை பதவி விலக்க முயற்சிப்பதாக, முதலமைச்சர் மீது முன்வைக்கப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு தொடாபிலும் விளக்கமளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் ஒருமைப் பாட்டைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் 28ம் திகதி இது தொடர்பான விளக்க உரையை நீதிமன்றத்தில் முன்வைக்குமாறும் உயர் நீதிமன்றம் முதலமைச்சரை பணித்துள்ளது.

 

http://www.pathivu.com/news/32420/57//d,article_full.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபை அதிகாரங்கள் அற்ற.. உப்புச்சப்பற்ற ஒன்று என்று விடுதலைப்புலிகள் அன்றே சொல்லி புறக்கணித்து விட்டார்கள்.

 

இன்று மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை வைச்சுப் பார்க்கிறப்போ.. அது எவ்வளவு தீர்க்கதரிசனமான நுண்ணிய அவதானிப்பு.. ஆராய்தலுடன் கூடிய புறக்கணிப்பு என்பது புலனாகிறது.

 

ஆனால் சட்டம் படிச்ச தமிழர்கள் மக்களுக்கு என்ன சொன்னார்கள்.. ஐயோ அரிய வாய்ப்பை புலிகள் தவற விடுகிறார்கள் என்று.

 

இப்ப என்னாச்சு..??! சிறீலங்காவின் நீதித்துறை அரசின் வசம். மாகாணச் செயலர்கள் அரசின் வசம். மாகாண சபைகள்.. அர்த்தமற்ற செலவீனங்களாக உள்ளனவே தவிர மக்களுக்கு எதையும் நல்க முடியாத.. இந்திய - இலங்கை கூட்டு ஏமாற்றல் வடிவமாக மட்டுமே உள்ளது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபை அதிகாரங்கள் அற்ற.. உப்புச்சப்பற்ற ஒன்று என்று விடுதலைப்புலிகள் அன்றே சொல்லி புறக்கணித்து விட்டார்கள்.

 

இன்று மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை வைச்சுப் பார்க்கிறப்போ.. அது எவ்வளவு தீர்க்கதரிசனமான நுண்ணிய அவதானிப்பு.. ஆராய்தலுடன் கூடிய புறக்கணிப்பு என்பது புலனாகிறது.

 

ஆனால் சட்டம் படிச்ச தமிழர்கள் மக்களுக்கு என்ன சொன்னார்கள்.. ஐயோ அரிய வாய்ப்பை புலிகள் தவற விடுகிறார்கள் என்று.

 

இப்ப என்னாச்சு..??! சிறீலங்காவின் நீதித்துறை அரசின் வசம். மாகாணச் செயலர்கள் அரசின் வசம். மாகாண சபைகள்.. அர்த்தமற்ற செலவீனங்களாக உள்ளனவே தவிர மக்களுக்கு எதையும் நல்க முடியாத.. இந்திய - இலங்கை கூட்டு ஏமாற்றல் வடிவமாக மட்டுமே உள்ளது. :icon_idea:

முள்ளிவாய்க்காலில் முடிந்ததிலும் பார்க்க குறைவான பாதிப்பு தானே? முள்ளிவாய்க்காலுக்கு வேலை செய்யாத தீர்க்கதரிசனம் மாகாணசபைக்கு வேலை செய்திருப்பது பற்றி நீங்கள் சந்தோசப்படுவது நியாயம்தான், எதோ ஒன்றுக்காவது தீர்க்கதரிசனம் வேலை செய்திருக்கிறதே?

  • கருத்துக்கள உறவுகள்

அட விடுங்கப்பா!

வேலை வெட்டி இல்லாமல், இலையான் ஓட்டிக் கொண்டு இருக்கிறார்.

மகிந்த கூட்டம் இப்படி ஏதாவது வேலையைக் கொடுத்து பொழுது போகவைக்கட்டுமன்.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் முடிந்ததிலும் பார்க்க குறைவான பாதிப்பு தானே? முள்ளிவாய்க்காலுக்கு வேலை செய்யாத தீர்க்கதரிசனம் மாகாணசபைக்கு வேலை செய்திருப்பது பற்றி நீங்கள் சந்தோசப்படுவது நியாயம்தான், எதோ ஒன்றுக்காவது தீர்க்கதரிசனம் வேலை செய்திருக்கிறதே?

 

நீங்கள் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்ததற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்..?!

 

விடுதலைப்புலிகள்.. எனி ஒரு யுத்தம் நடந்தால்.. அதுதான் வெற்றியோ தோல்வியோ இறுதி யுத்தமாக இருக்கும் என்று எப்பவோ சொல்லிவிட்டார்கள்.

 

அது 5ம் ஈழப்போர் என்று சொல்லவில்லை.

 

மேலும் முள்ளிவாய்க்கால் தெரிவு என்பது சாதாரணமானதல்ல.

 

காயப்பட்ட மக்களின் வெளியேற்றம்

 

உணவு வழங்கல்

 

செஞ்சிலுவைக்கான.. ஐநாவுக்கான கடல்வழி தொடர்பை வழியுறுத்தல். (தரை வழித் தொடர்பு சிங்கள அரசால் தடுக்கப்பட்டிருந்தமை)

 

செய்மதிகளின் கண்காணிப்பின் கீழ் மக்களைக் கொணருதல்.

 

கடல்வழி வெளியேற்றம்.

 

இப்படி நிறையக் காரணிகள்.

 

இதே மக்களை ஆனையிறவுக்கோ.. அல்லது கிளிநொச்சிக்கோ செல்லச் சொல்லி இருந்தால்... அழிவு இதை விடப் பலமடங்காக இருப்பதோடு.. செய்மதிச் சாட்சியமே இல்லாமல் காட்டோடு இலையாகிப் போயிருப்பர் எம் மக்களில் அநேகர்.

 

கடல்வழி செஞ்சிலுவையின் துணையோடு தான் போரில் காயப்பட்ட 5000 - 8000 மக்கள் வெளியேற்றப்பட்டனர் போர் நடந்த போது. அதுவே கிளிநொச்சி என்றால்.. நிச்சயம் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அவ்வளவு சனமும் அழிஞ்சிருக்கும்..!

 

யுத்த களம் எமக்குச் சார்ப்பாக எப்பவும் இருக்கும் திட்டமிடலுக்கு அமைவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதுவும் பல்வேறு நாடுகளின் கூட்டு நடவடிக்கை ஒன்றின் போது. அந்த வகையில்.. விடுதலைப்புலிகள் தீர்க்கதரிசனத்தோடு தான் முள்ளிவாய்க்காலையும் தெரிவு செய்தார்கள்.. சில முடிவுகளையும் எடுத்தார்கள்.

 

இன்றேல்.. 3,50000 மக்களில் 70,000 பேருக்கு தான் கணக்குக் காட்டியது சிங்கள அரசு. 280,000 பேரை கொல்ல அது போட்டிருந்த கணக்கு.. முறியடிக்கப்பட்டதும் முள்ளிவாய்க்காலில் தான்..! அதனை சுலபமாக மறந்திருப்பீர்களே..!!!! :icon_idea:

நெடுக்கு இந்த யாழ் களத்திலேயே மிகவும் அதி கூடிய கல்வித்தகமை உடையவர் நீங்கள் என்று நினைக்கிறன்...ஆனால் புலிகளுக்கு நீங்கள் வாங்கும் வக்காலத்து சிலவேளை மிகவும் கேள்விக்குரியது...(உங்களது எண்ணத்தில் புலிகள் உயர்ந்தவர்கள்...அதில் பிழையில்லை..ஆனால்).

 

"விடுதலைப்புலிகள்.. எனி ஒரு யுத்தம் நடந்தால்.. அதுதான் வெற்றியோ தோல்வியோ இறுதி யுத்தமாக இருக்கும் என்று எப்பவோ சொல்லிவிட்டார்கள்."  தோத்தால்.. கொடுமையான சிங்களஇராணுவத்திடம் அகப்படும் மக்களை பற்றி தலைவர் சிந்தித்தாரா?  அறிவுள்ளவர் என்றால் அதற்கு அல்லவா முதல் தீர்வு காணவேண்டும்.....பிரச்சனையை அபாயகரமான நிலைக்கு கொண்டுவந்து விட்டு கையை விரிப்பதா அழகு??? எந்த அறிவுள்ளவனும் அந்த முடிவு எடுக்க மாட்டார்கள்...உலகில் எந்த முட்டாளும் எதையும் அரைகுறையாக செய்ய முடியும்...ஆனால் செய்வதில்லை ஏனென்றால் முடிவுகளை யோசித்தே முட்டாள் தனமாக எதையும் செய்வதில்லை...

 

"

இதே மக்களை ஆனையிறவுக்கோ.. அல்லது கிளிநொச்சிக்கோ செல்லச் சொல்லி இருந்தால்... அழிவு இதை விடப் பலமடங்காக இருப்பதோடு.. செய்மதிச் சாட்சியமே இல்லாமல் காட்டோடு இலையாகிப் போயிருப்பர் எம் மக்களில் அநேகர்.

 

கடல்வழி செஞ்சிலுவையின் துணையோடு தான் போரில் காயப்பட்ட 5000 - 8000 மக்கள் வெளியேற்றப்பட்டனர் போர் நடந்த போது. அதுவே கிளிநொச்சி என்றால்.. நிச்சயம் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அவ்வளவு சனமும் அழிஞ்சிருக்கும்..!

 

யுத்த களம் எமக்குச் சார்ப்பாக எப்பவும் இருக்கும் திட்டமிடலுக்கு அமைவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதுவும் பல்வேறு நாடுகளின் கூட்டு நடவடிக்கை ஒன்றின் போது. அந்த வகையில்.. விடுதலைப்புலிகள் தீர்க்கதரிசனத்தோடு தான் முள்ளிவாய்க்காலையும் தெரிவு செய்தார்கள்.. சில முடிவுகளையும் எடுத்தார்கள்.

 

இன்றேல்.. 3,50000 மக்களில் 70,000 பேருக்கு தான் கணக்குக் காட்டியது சிங்கள அரசு. 280,000 பேரை கொல்ல அது போட்டிருந்த கணக்கு.. முறியடிக்கப்பட்டதும் முள்ளிவாய்க்காலில் தான்..! அதனை சுலபமாக மறந்திருப்பீர்களே..!!!!" 

 

மேலே கூறிய ஒன்றுமே புலிகள் எடுத்த முடிவு அல்ல..முழுவதும் இந்த போரை கொண்டு நடத்தியவர்கள் தமிழர்களுக்கு தந்த ஒரே ஒரு தெரிவு..... :) புலிகளால் எந்த ஒரு முடிவையுமே எடுக்கும் நிலையிலே இல்லை :) இதை புலிகளின் ஆதரவாளர்களுக்கு ஜீரணிக்க கஷ்டமா தான் இருக்கும்..ஆனால் உண்மையை மறைக்க முடியாது அல்லவா... புலிகளால் தலைவரையே காப்பற்ற முடியவில்லை....

 

மகாபாரத்தை எப்படி கிருஷ்ணன் நடத்தினானோ...அதே மாதிரி.. :) துரயோதணனை முன்னுக்கு வைத்து கர்வத்தை கூடி எப்படி அழிக்கப்பட்டானோ...அதே போல் தலைவரும் போய் அழிந்தது தான் உண்மை..

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அது உண்மையல்ல.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு இந்த யாழ் களத்திலேயே மிகவும் அதி கூடிய கல்வித்தகமை உடையவர் நீங்கள் என்று நினைக்கிறன்...ஆனால் புலிகளுக்கு நீங்கள் வாங்கும் வக்காலத்து சிலவேளை மிகவும் கேள்விக்குரியது...(உங்களது எண்ணத்தில் புலிகள் உயர்ந்தவர்கள்...அதில் பிழையில்லை..ஆனால்).

 

"விடுதலைப்புலிகள்.. எனி ஒரு யுத்தம் நடந்தால்.. அதுதான் வெற்றியோ தோல்வியோ இறுதி யுத்தமாக இருக்கும் என்று எப்பவோ சொல்லிவிட்டார்கள்."  தோத்தால்.. கொடுமையான சிங்களஇராணுவத்திடம் அகப்படும் மக்களை பற்றி தலைவர் சிந்தித்தாரா?  அறிவுள்ளவர் என்றால் அதற்கு அல்லவா முதல் தீர்வு காணவேண்டும்.....பிரச்சனையை அபாயகரமான நிலைக்கு கொண்டுவந்து விட்டு கையை விரிப்பதா அழகு??? எந்த அறிவுள்ளவனும் அந்த முடிவு எடுக்க மாட்டார்கள்...உலகில் எந்த முட்டாளும் எதையும் அரைகுறையாக செய்ய முடியும்...ஆனால் செய்வதில்லை ஏனென்றால் முடிவுகளை யோசித்தே முட்டாள் தனமாக எதையும் செய்வதில்லை...

 

"

இதே மக்களை ஆனையிறவுக்கோ.. அல்லது கிளிநொச்சிக்கோ செல்லச் சொல்லி இருந்தால்... அழிவு இதை விடப் பலமடங்காக இருப்பதோடு.. செய்மதிச் சாட்சியமே இல்லாமல் காட்டோடு இலையாகிப் போயிருப்பர் எம் மக்களில் அநேகர்.

 

கடல்வழி செஞ்சிலுவையின் துணையோடு தான் போரில் காயப்பட்ட 5000 - 8000 மக்கள் வெளியேற்றப்பட்டனர் போர் நடந்த போது. அதுவே கிளிநொச்சி என்றால்.. நிச்சயம் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அவ்வளவு சனமும் அழிஞ்சிருக்கும்..!

 

யுத்த களம் எமக்குச் சார்ப்பாக எப்பவும் இருக்கும் திட்டமிடலுக்கு அமைவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதுவும் பல்வேறு நாடுகளின் கூட்டு நடவடிக்கை ஒன்றின் போது. அந்த வகையில்.. விடுதலைப்புலிகள் தீர்க்கதரிசனத்தோடு தான் முள்ளிவாய்க்காலையும் தெரிவு செய்தார்கள்.. சில முடிவுகளையும் எடுத்தார்கள்.

 

இன்றேல்.. 3,50000 மக்களில் 70,000 பேருக்கு தான் கணக்குக் காட்டியது சிங்கள அரசு. 280,000 பேரை கொல்ல அது போட்டிருந்த கணக்கு.. முறியடிக்கப்பட்டதும் முள்ளிவாய்க்காலில் தான்..! அதனை சுலபமாக மறந்திருப்பீர்களே..!!!!" 

 

மேலே கூறிய ஒன்றுமே புலிகள் எடுத்த முடிவு அல்ல..முழுவதும் இந்த போரை கொண்டு நடத்தியவர்கள் தமிழர்களுக்கு தந்த ஒரே ஒரு தெரிவு..... :) புலிகளால் எந்த ஒரு முடிவையுமே எடுக்கும் நிலையிலே இல்லை :) இதை புலிகளின் ஆதரவாளர்களுக்கு ஜீரணிக்க கஷ்டமா தான் இருக்கும்..ஆனால் உண்மையை மறைக்க முடியாது அல்லவா... புலிகளால் தலைவரையே காப்பற்ற முடியவில்லை....

 

மகாபாரத்தை எப்படி கிருஷ்ணன் நடத்தினானோ...அதே மாதிரி.. :) துரயோதணனை முன்னுக்கு வைத்து கர்வத்தை கூடி எப்படி அழிக்கப்பட்டானோ...அதே போல் தலைவரும் போய் அழிந்தது தான் உண்மை..

 

 

புலிகள் 2002 இல் இருந்த நிலையை விட பலமான நிலையில் தான் 2006 இல் இருந்தார்கள்.

 

புலிகளுக்கு 2002 இல் இல்லாத ஆனால் 2006 இல் இருந்த முக்கிய விடயம் சர்வதேச அழுத்தம் மட்டுமே.

 

சர்வதேசத்தின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர். (இன்று ரஷ்சியாவின் பின்னணியோடு இயங்கும்  உக்ரைன் போராளிகளையும்.. சர்வதேசம் (அதாவது அமெரிக்க தலைமையிலான மேற்குலகம்) இதன் பேரில் தான் எதிர்கொண்டு பெரும் அழிவுகளை ஏற்படுத்தி உக்ரைனின் ஒற்றுமையை நிலைநாட்டுகினம். அதேவேளை சிரியாவில்.. ஈராக்கில்.. பயங்கரவாதத்தை ஊக்குவித்து பிரிவினையை உருவாக்கினம்.)

 

சர்வதேசத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற நிழலில் சிறீலங்கா கச்சிதமாக பதுங்கிக் கொண்டதும்.. பூகோள நிலையை தனக்குச் சாதமாக்கிக் கொண்டதும்.. விடுதலைப்புலிகள் கட்டி அமைத்திருந்த இராணுவ பலம்.. எதிரியை எதிர்கொள்ளப் போதுமானதாக அமையாமல் செய்து விட்டிருந்தது.

 

1987 இல் இந்தியப் படைகளை எதிர்கொண்ட போது புலிகள் சிறிய அமைப்பு. தலைவரை போராளிகளை இலகுவாக இடம் நகர்த்தவும்.. தலைமறைவு தாக்குதல் வடிவம் ஒன்றுக்குள் தங்களை கொணரவும் இலகுவாக முடிந்திருந்தது. ஆனால்.. 2009 இல் அப்படி அல்ல. புலிகள் அமைப்பு ஒரு மரபு வழி இராணுவமாகி இருந்தது. அதனை நம்பி 350,000 மக்கள் தம்மை பாதுகாப்பார்கள் என்று நின்றனர். அவர்களை எல்லாம் கைவிட்டுட்டு விட்டு புலிகளால் காட்டுக்குள் சென்று தலைமறைவு யுத்தம் ஒன்றுக்கு தயார் செய்வது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. புலிகள் அதனை மக்களின் எதிர்காலம் கருதியும் எடுக்க நினைக்கவில்லை.

 

பேரழிவுகளை.. தேசம் கண்டுவிட்டிருந்த நிலையில்.. மீண்டும் ஓர் தலைமறைவு இயக்கமாக முழு இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருந்து போராடுவது என்பது மக்களையே அதிகம் பாதிக்கும். அதேவேளை சர்வதேசத்தின் பயங்கரவாத முத்திரை எதிரிக்கு எப்போதும்.. பக்க பலமாக இருக்கும். இந்த நிலையில்.. புலிகள் எடுத்த முடிவுதான்... ஆயுதப் போராட்டத்தை.. மெளனித்து.. போராளிகளை சமூக வாழ்வில் இணைத்து விடுதல். தமிழர்களின் தேசிய அபிலாசைகள் அடங்கிய போராட்டத்தை பிறிதொரு தளத்தில் இருந்து இன்றைய சர்வதேச.. பூகோள நகர்வுகளுக்கு ஏற்ப நடத்துதல். புலிகள் அதில் தோற்றிருப்பதாகத் தெரியவில்லை. புலிகளின் இராணுவத் தலைமைகள் இழக்கப்பட்டிருக்கலாம்.. ஆனால்.. புலிகள் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை சாகடித்துவிட்டுச் சென்றுவிடவில்லை..!

 

மகாபாரதம்.. ஓர் கட்டுக்கதை. புலிகள் வரலாறு எம் கண்ணெதிரே நிகழ்ந்த ஒரு வீரவரலாறு. மகாபாரதம் வேறு.. மகா சூழ்ச்சிகளை வென்று நின்ற புலிகள் வரலாறு வேறு.

 

புலிகள் தமிழ் மக்களிடம் ஒற்றுமையை வலியுறுத்தி கொணர்ந்த விடயமே ஏக பிரதிநிதிகள் என்ற நிலைப்பாடு. அது அன்றைய நிலையில் தமிழ் மக்கள் சர்வதேச அரங்கிலும்.. உள் நாட்டிலும் தமது பேரம் பேசும் வலுவை அதிகரிக்கச் செய்திருந்தது என்றால் மிகையல்ல. அந்த வலுவில் உதித்ததே இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற புலிகள் ஆரம்பித்த நிலை. தமிழர்கள் வரலாற்றில்.. தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக நின்று சிங்களவனை சந்தித்தது கிடையாது. ஆனால் புலிகள் அந்த நிலையை முடிந்த வரை கொண்டு வந்தார்கள்.

 

போர் ஒன்றில்.. எதிரியின் வெற்றியுடனான முடிவு எவ்வளவு ஆபத்தானது என்பதை புலிகள் அறிந்திருந்ததால் தான் வெள்ளைக்கொடி விவகாரத்துக்கு உடன்பட்டார்கள். ஆனால் அதுவும் துரோகத்தோடு எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை.

 

இன்றும் புலிகளுக்கு எதிரான செயற்பாடுகளை சர்வதேச சமூகம் முன்னெடுத்தே வருகின்றது. ஆனால் அதே சர்வதேசம்.. தமிழர்களின் தேசிய அபிலாசைகளை பூர்த்தி செய்ய எந்தக் காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதில் இருந்து தெரிகிறது அவர்களின் அன்றைய நகர்வுகளின் நோக்கம் என்ன என்பது. புலிகள் இதனை நன்கு அறிந்து கணக்குப் போட்டுத்தான்.. ஆயுதங்களை மெளனிக்கச் செய்தார்கள். ஒருவேளை புலிகள் கரந்தடி படையாக மாறி போராட்டத்தை நீட்டி இருந்தால்.. இன்று சிங்களவனுக்காக...அமெரிக்க ரோன்கள் எம்மை தாக்கிக் கொண்டிருந்திருக்கும். பாகிஸ்தானில்.. ஆப்கானில் அப்பாவி மக்கள் செத்து அழிவது போல.. எமது மக்களும் அழிந்து கொண்டிருப்பார்கள்.

 

புலிகள்.. அன்று தமது நலன் கருதாது மக்களின் நீண்ட நாள் நலன் கருதி எடுத்த அந்த முடிவால் தான்.. சர்வதேசம் மனித உரிமைகள் என்ற ஒன்றை உச்சரித்துக் கொண்டு.. தாம் ஆதரித்த சிறீலங்காவின் உண்மை முகத்தை ஓரளவுக்கு ஏனும் உணர்ந்து கொள்ளும் நிலை பிராந்தியத்தில் தோன்றி உள்ளது. அதுமட்டுமன்றி இந்துமா சமுத்திரத்தில் தமக்குரிய நிலை என்ன என்பதை உணரச் செய்துள்ளது. இன்றேல் புலிகளின் இருப்பைக் காட்டி சிங்களமும்.. உலகையே தன் மடியில் வைத்துக் கொண்டு தமிழர்களை முழு இலங்கைத் தீவில் இருந்தும் அழித்தொழித்திருக்கும்..!

 

இன்று.. அந்த நிலையில் இருந்து கொஞ்சம் மாற்றம் இருக்கிறது. தமிழர்களின் தேசிய அபிலாசைக்கு முன் அவர்களின் அழிவை தடுத்து நிறுத்த வேண்டியதும் புலிகளுக்கு அன்று ஓர் தெரிவாக இருந்தது. அதனால் தான் தேசிய தலைவர் 2008 மாவீரர் தின உரையில் ஒன்றைச் சொன்னார்.. போராட்டம் எனி புலம்பெயர் மக்களின் கையில் என்று. அது எவ்வளவு தீர்க்க தரிசனமான பேச்சு என்பதை இன்றும் எதிர்காலமும்.. உங்களுக்கு உணர்த்திக் கொண்டுள்ளது. அதனை உணர மறுத்தால்... அது புலிகளின் தவறு அல்ல.

 

புலிகளின் தலைமை வாழ்வதற்காகவோ.. அதிகார ஆசை கொண்டோ.. அகங்காரம் கொண்டோ போராடவில்லை. மக்களை ஒற்றுமைப்படுத்தி.. தமிழ் மக்களின் தேசிய அபிலாசையான சுதந்திர தமிழீழம் நோக்கியே போராடினார்கள். இடைநிலையில்.. எத்தனையோ இடைநிலைத் தீர்வுகளுக்கும் உடன்பட்டார்கள். ஆனால் ஒருபோதும் தமிழ் மக்களின் தேசிய அபிலாசையை கைவிடவில்லை. தமிழ் மக்களுக்காக பேரம் பேசுவதை.. விட்டுக் கொடுக்கவில்லை. அதுதான் புலிகள் சர்வதேசத்தின் காண்டுக்கு முகம் கொடுக்க முக்கிய காரணம்.

 

எங்களை சிங்களவனோடு கூட இரு என்று சொல்ல சர்வதேசத்துக்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால் இன்று சொல்ல முடிகிறது. ஏனெனில்.. நாம் ஒற்றுமையாக இல்லை. எமக்கிடையே ஒற்றுமையை வலியுறுத்திய புலிகளின் ஏக பிரதிநிதித்துவம் இருந்த போது.. எம்மோடு சர்வதேச மத்தியஸ்தம் வைக்க வந்தவர்கள் எல்லாம் இன்று.. சிங்களவன் சொல்ல பதுங்கும் பூனைகளாகி ஓடுகிறார்கள்.  ஒற்றுமையின் பலம் என்ன என்பதையும் புலிகள் இதன் மூலம் உணர்த்தியே சென்றுள்ளனர்.

 

ஆனால்.. இன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள்.. குறிப்பாக சம்பந்தன் சுமந்திரன்.. இணக்க அரசியல் என்ற பழைய ஒன்றுக்கும் உதவாத தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு விரோதமான பாதையில்.. இயங்குவதும்.. மீண்டும் தமிழ் மக்கள் கருத்து பேதங்களோடு..கட்சிகளாக பிரிந்து நிற்பதும்.. குழுக்களாக இயங்குவதும்.. புலிகள் அன்று வலியுறுத்திய ஏக பிரதிநிதித்துவம் என்பதன் கள யதார்த்தத்தை அப்படியே விளக்கி நிற்கிறது. அதனை ஜனநாயக விரோதம் என்றோர் தான் பின்னர் புலிகளோடு பேச்சு மேடைக்கும் வந்தனர்.

 

புலிகள் ஏக பிரநிதிகளாக இருந்த போது.. தென்னாபிரிக்கா புலிகளின் தெரிவாக இருந்தது. அதாவது தமிழ் மக்களின் தெரிவாக இருந்தது. இன்று.. தென்னாபிரிக்கா மகிந்த என்ற பூனை தட்டி விளையாடும் சுண்டெலி ஆகி உள்ளது.

 

அன்று உலக மத்தியஸ்தத்துடன்.. பல்வேறு நாடுகளில் பேச முடிந்ததை.. இன்று கொழும்பில் கூட பேச முடியவில்லை. அன்று இணைத்தலைமை நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கி தமிழர் விவகாரத்தை கையாள வேண்டிய நிலைக்கு வந்தன உலகின் வல்லரசுகள் .இன்று... உலக அரங்கில்.. தமிழர் பிரச்சனை முக்கியமற்றுக் கிடக்கிறது.

 

புலிகள் ரோக்கியோ மாநாட்டை ஏன் புறக்கணித்தார்கள்... பிரபா - ரணில் உடன்படிக்கையின் பிரகாரம்.. பாதுகாப்பு வலயங்களை அகற்று என்று கூறித்தான். அன்று தான் சர்வதேசம் உணரத் தலைப்பட்டது.. இப்படியான வலயங்கள் உள்ளது என்பதை. (அப்படியான வலயங்களை உருவாக்கக் கற்றுக் கொடுத்ததும் இஸ்ரேல்.. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தான்)

 

சில விடயங்களை ஆற அமர இருந்து பல்வேறு கோணங்களில் யோசிக்க வேண்டும். சில வேதனையான முடிவுகள்.. தொடர இருக்கும் பல வேதனைகளை குறைக்க கூட எடுக்கப்பட்டிருப்பதை காணலாம். புலிகள் ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்லிச் சென்றுள்ளார்கள்.. எமது மக்களின் அபிலாசை என்பது எமதானதல்ல. அது எமது மக்களதே என்பதை. அந்த அபிலாசைகள் வெல்லவே போராடினோம் என்று. மக்கள் அதனை இத்தனை துயர்களின் மத்தியிலும்.. இப்போதும் வாக்குகளால் நிரூபித்துக் கொண்டு தான் உளர். புலம்பெயர் மக்களின் பெரும் பகுதியும் அதனை உணர்த்தத் தவறவில்லை..! 

 

புலிகள் பகிரங்கமாக இயங்க முடியாத இந்த நேரத்திலும்..மக்கள் வலியுறுத்துவது.. ஒற்றுமையும்.. தங்கள் அபிலாசை வெல்லப்படுதலையுமே. இணக்க அரசியலோ.. சிங்களவனுக்கு மண்டியிடுவதையோ.. மறப்போம் மன்னிப்போமையோ அல்ல..!!!!!! இது புலிகள் மக்களிடம் வளர்த்துவிட்ட வீரத்தின் விளைவு...! இதனை யாரும் எப்போதும் அழிக்க முடியாது..!!!! ஆக தமிழர்கள் உள்ளவரை புலிகள் வாழ்வார்கள்...!! போர்க்களத்தில் அவர்கள் வீழ்ந்திருந்தாலும் கூட...!! :icon_idea::)

 

Edited by nedukkalapoovan

நெடுக்கு நீங்கள் சொல்வது எல்லாம் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் ஒருவரே அமோதிப்பார்களே தவிர வேறு ஒருவரும் ஆமோதிக்க போவதில்லை என்று நினைக்கிறன்...காரணம் நீங்களே சொல்லுகிறீர்கள்

போன பேச்சுவார்த்தைகளில் எல்லாம் புலிகளை தான் அழுத்தம் கொடுத்தார்கள் என்று...எங்களை ஆதரிப்பாரும் இல்லை...இலங்கையை கட்டுபடுத்தவும் ஆட்கள் இல்லை....இலங்கையரசு ஆயுத/இராணுவ கட்டமைப்பை பலப்படுத்துகின்றது...இந்நிலையில் போரை எப்படி வெல்ல முடியும்? :)  அதுவும் இந்தியா மும்முரமாக இலங்கைக்கு ஆதரவாக செயல் படும் போது?? உலகின் அரசியல் ஓட்டம் எல்லாம் விளங்கினால் அதற்கேற்றவாறு முடிவு எடுப்பது தானே விவேகம்...காரணம் இது புலிகளின் வாழ்வு மட்டும் அல்ல...முழு தமிழரின் வாழ்வு கூட...

 

பாருங்கள் இப்போ...உலகமே இலங்கை அரசை போர்குற்றவாளி என்று சொன்னால் கூட அவர்களால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்?

அடுத்து வரும் அரசும் தான் நினைத்த மாதிரி முழு இலங்கையிலும் எதுவும் செய்ய முடியும்....இப்போது புலிகள் முற்றாக அழிந்தும் தமிழர்களுக்கு என்ன பயன்? புலிகள் இருந்தாலாவது மற்றநாடுகள் இலங்கையை தமிழர் பிரச்சனையை தீர்க்க சொல்ல முடியும்... இப்போ தனக்கு ஆதரவான மாகாண அரசை அமைத்து இலங்கை முழு பிரச்சனையையும் தீர்த்து விட்டது தானே.... 

 

..புலிகள்/PLO போன்றவர்களுக்கு எப்போதுமே இன்னொரு வெளி ஆதரவு சக்தி தேவை...அது புலிகளிடம் இல்லை...(PLO க்கு அரசியல் ஆதரவு இல்லாவிட்டாலும் பணமாவது கிடைகிறது....மேற்கு கரையாவது ஒரு தனி நாடாக வரமுடியும்...இஸ்ரேல் தனக்கு வேண்டிய நிலத்தை எடுத்து முடிய :) )

எனது எண்ணம் புலிகளை குறை சொல்லுவதில்லை.அதுவும் அவர்கள் உணமையாக தமிழீழம் எடுக்கவேண்டும் என்னும் அவர்களின் நோக்கை ஒருவரும் குறை சொல்லபோவதில்லை.....ஆனால் அவர்களும் நடைமுறையில் மற்றவர்கள் போல் சரி பிழையுடன் கூடியவர்களே...கடைசி போர் அவர்களின் கையை மீறி விட்டது..ஆனால் அந்த கை மீறலுக்கும் ஒரு உங்களை போன்றோர் ஒரு "விளக்கம்" தரும் போது தான் சிலவேளை சீண்ட தோன்றும்.....

மற்றது ஏகபிரதிநிதிகளால் ஒற்றுமை நிலைநிறுத்தப்படும் என்று நீங்கள் கூறினால் அதை என்ன என்று கூறுவது.......உலகில் எமமூலையில் இருந்தும்...எக்காலத்தில் இருந்தும் இதற்க்கு உதாரணம் காட்ட முடியாது...இந்த ஏகபிரதிநிதித்துவமே எல்லா பலம்பொருந்தியவர்களின் அழிவிற்கும் காரணம்..... சிலவேளை புலிகளே முதல் உதாரணமாக வந்திருப்பார்கள் ஏகபிரதிநிதிதுவத்தால் வென்று ஒரு வளமான நாட்டை அமைத்தார்கள் என்று....

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் புலி ஆதரவுக் கருத்தல்ல.

 

தொடர்ச்சியாக புலிகள் முன்னெடுத்த நகர்வுகளை கண்காணிக்கும் எந்த ஒரு நடுநிலையாளனும் இதனை அப்படியே சொல்லி விடலாம்.

 

மேலும்.. PLO போன்று புலிகள்.. ஆயுத முகமும்.. ஜனநாயகமுகமும் காட்ட விரும்பவில்லை என்பதை 1988/9 இல் தமிழீழ விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியை உருவாக்கியதன் மூலம் நிதர்சனமானது.

 

அதேவேளை தமிழ் மக்களை பிளவுபடுத்தும் ஜனநாயகப் பல் கட்சி போட்டி அரசியலையும் புலிகள் விரும்பி இருக்கவில்லை. தேவையோடு உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி பின்னர் கைவிடப்பட்டதும்.. பாலகுமார் தலைமையிலான ஈரோஸிற்கு முதன்மை அளித்ததும் 1989 தேர்தலில்.. அவர்கள்.. இந்திய வல்லாதிக்க சக்தியின் ஆதரவு பெற்றவர்களை வீழ்த்தி.. மக்களின் அமோக  ஆதரவுடன் வெற்றி பெற்றதும்.. கடந்த கால வரலாறு.

 

விடுதலைப்புலிகள் அதன் பின்னரும் கூட தமது மாற்று அரசியல் கட்சியை விரும்பவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியை முன்னிறுத்துவதை விட்டு.. உள்ள தமிழ் கட்சிகளை தமிழ் தேசியத்தின் பால் ஒருங்கிணைத்து.. ஒரு பொதுக் கூட்டமைப்பை உருவாக்க விரும்பினார்கள்.

 

அதற்குரிய கள நிலவரம் அமைந்த போது.. அதனை உருவாக்க ஊக்கமும் ஆக்கமும் அளித்து தமிழ் மக்களுக்கான ஜனநாயக சக்திகள் யார் என்பதையும் அடையாளப்படுத்தி இரண்டு தேர்தல்களில் அவர்களை அமோக வெற்றி பெறவும் செய்தார்கள்.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. இன்று தடம் மாறி இருக்கலாம். ஆனால்.. தேசிய தலைவரின் தீர்க்க தரிசனமான அதன் அங்கீகாரமே.. இன்றும் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்து நிற்கக் காரணம்.

 

புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவு படுவதை ஒரு போதும் விரும்பியதில்லை. அதனால் சங்கரி முதற் கொண்டு.. சுரேஸ் பிரேமச்சந்திரன் வரை புலிகளால் அங்கு இடம்பெற வைக்கப்பட்டனர். அதுமட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு தேசிய தனிக் கட்சியாக்கவும் புலிகள் முயற்சி செய்தார்கள். மலையகக் கட்சி தலைவர்களையும் அழைத்துப் பேசினார்கள். ஆனால்  மலையகக் கட்சிகள் தங்களின் தனித்துவமான களச் சூழலைக் காரணம் காட்டி அதில் இணைய மறுத்தாலும்.. ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.

 

அதேபோல்.. முஸ்லீம் காங்கிரஸிற்கும்.. இடமளிக்கப்பட்டது. ஹக்கீம் - பிரபா உடன்படிக்கை கைச்சாத்தானது. முஸ்லீம் காங்கிரஸ் முஸ்லீம்களின் ஏக பிரதிநிதித்துவம் என்றதை முன்மொழிந்த போது புலிகள் சொன்னது.. நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாருங்கள்.. நாங்கள் அதனை அங்கீகரிக்கிறோம் என்று. பேரியல் அஸ்ரப் ஒரு பக்கம்.. பெளசி ஒரு பக்கம்.. ஹிஸ்புல்லா ஒரு பக்கம் என்று வந்தால்.. நாங்கள் என்ன செய்வது என்று.. சொன்னார்கள்.

 

முஸ்லீம்களிடம் இன்று வரை அந்த ஒற்றுமை தோன்றவில்லை.

 

இறுதியில்.. 2009 மே க்குப் பின் கூட்டமைப்பையும் சம்பந்தன் - சுமந்திரன் தலைமை சிதைத்து விட்டது. தேசிய தலைவர் என்ன நடக்கும் என்று எதிர்பார்த்து ஏக பிரதிநிதித்துவத்தை முன் வைத்தாரோ அதை புலிகளின் தோல்வியின் பின் சம்பந்தன் நிலைநாட்டி வருகிறார்.  இதுதான் இன்றுள்ள பிரச்சனை. புலிகள்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் தேசிய அபிலாசையை வென்றெடுக்கும் ஜனநாயக சக்தியாகவே அடையாளம் கண்டனர் காட்டினர். ஆனால்.. அது இன்று கேலிக் கூத்தாகி நிற்பது எமது மக்களை இன்னும் இன்னும் அரசியல் அனாதை ஆக்கிவிட்டுள்ளது. அதனால் தான் புலிகளின் இராணுவத் தோல்வி என்பது தமிழ் மக்களை பொறுத்தவரை பெரும் இழப்பாகிவிட்டது. இதற்கு சம்பந்தன் போன்றவர்களின் தூர நோக்கற்ற மறப்போம் மன்னிப்போம்..சரணாகதி.. இணக்க அரசியலும் முக்கிய காரணமாகும்.

 

இருந்தாலும்.. கூட்டமைப்பில் மிஞ்சி உள்ள ஒரு சில தலைவர்களால் சம்பந்தன் பூரணமாக சோரம் போவது தடுக்கப்பட்டு வருகிறது. அந்த நிலையில் தான் கூட்டமைப்பு இன்னும் தமிழ் தேசிய அடையாளத்தை சுமந்து கொண்டிருக்கிறது. புலிகள் எதிர்பார்த்தது என்னவோ.. இன்று சம்பந்தன் தரப்பினர் நடத்திக் கொண்டிருப்பது என்னவோ ஆகும்..!

 

இது தமிழ் மக்களிற்கான அரசியல் சாபக்கேடு எனலாம். இதனை தடுக்க வேண்டும் என்றால்.. மீண்டும் புலிகள் எதிரிக்கு எதிராக மட்டுமல்ல.. எமது அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் ஆயுதத்தை தூக்க வேண்டும்.. என்ற நிலை தான் உள்ளது. இது தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிகப் பரிதாபகரமான நிலையாகும்.

 

ஆனாலும்.. இதனை எல்லாம் கடந்து வரக் கூடிய நிலை இன்னும் தாயகத்தில் புலிகளால் வளக்கப்பட்டவர்கள் மத்தியிலும்.. புலம்பெயர் மண்ணிலும் தமிழகத்திலும் உள்ளது. அந்த நேரம் வரை தமிழ் மக்கள் காத்திருக்க வேண்டிய ஒரு நிலை இன்றுள்ளது துரதிஸ்டவசமானது ஆகும்..! இது புலிகள் தோற்றுவித்த நிலை அல்ல. புலிகளுக்குப் பின் பொறுப்பற்ற தனமாக நடந்து கொண்ட அரசியல் சக்திகள் தோற்றுவித்த நிலை ஆகும்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

ஒரு எள்ளளவு உரிமை ஊட தமிழர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாமல் இவ்வளவு பொதுமக்களையும் போராளிகளையும் பலி கொடுத்துவிட்டு முழு இனத்தையும் சிங்களவனின் அடைவு வைத்துவிட்டு போய்விட்டார்கள்.

 

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த குற்ற உணர்சியில் போலியாக புலி புகழ் பாடுவதுதான் சுயநல தமிழர்கள் பலரின் நிலைப்பாடு .

மூன்று நேரமும் மூக்கு முட்ட சாப்பாடு அது சேமிக்க வாரமவிடுமுறையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் வீடு குடும்பம் பிள்ளைகள் படிப்பு எல்லாம் அந்த மாதிரி பாவம் முப்பதுவருடமாக நாட்டில் அவதியுற்ற மக்களும் உயிரை விட்டவர்கள் குடும்பங்களும் .

மாகாணசபை மண்ணாங்கட்டி எல்லாம் இரண்டாம் பட்சம் 2009 ஆண்டிற்கு பின்னர்  அவர்கள் உயிர்பயமின்றி நிம்மதியாக இப்போ  மூச்சு விடுகின்றார்கள் அதுவரை புண்ணியம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் மற்றவர்கள் எல்லாம்.. போராடி தமிழீழம் எடுத்துக் கொடுத்து விட்டு இப்போ வெளிநாடுகளில் ஓய்வெடுக்கிறார்களாக்கும்.

 

புலிகள் மக்களின் அபிலாசைகளை வெல்லவே கூடாது என்று அவர்களின் ஆரம்பம் முதல் அவர்களுக்கு கேடும்.. கெடுதலும்.. செய்தவர்களுக்கு.. மேற்படி கருத்தை எழுத எந்த அருகதையும் கிடையாது..!

 

இதனை மக்கள் ஒருபோதும்.. ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். புலிகள் தங்கள் சக்திக்கு இணங்க மக்களுக்காக செய்திருக்கிறார்கள்.. செய்து கொண்டும் இருக்கிறார்கள்..!

 

மற்றவர்கள் வழமை போல.. காட்டிக்கொடுத்து.. ஒட்டி இருந்து.. மக்களை உறிஞ்சி அழித்துக் கொண்டே இருக்கிறார்கள். இன்றும் எம் மக்கள் துரோகிகளால் எதிரியின் கைகளால் கொல்லப்படுகிறார்கள். துன்புறுத்தப்படுகிறார்கள். விரட்டி அடிக்கப்படுகிறார்கள். ஆனால்.. மக்களுக்கு ஒன்றேமே செய்ய துப்பற்று ஓடியவர்கள்.. மக்கள் அமைதியாக வாழ்வதாக வார்த்தைகளில் அளந்து வருகிறார்கள். அவ்வளவு தான் அவர்களால் தாங்கள் வெளிநாடுகளில் பத்திரமாக இருந்து கொண்டு செய்ய முடியும்.

 

vikki%20and%20mahinda006_0.jpg?itok=X7pw

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.