Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி கடும்வரட்சி நாளாந்தம் 3 இலட்சத்து 71 ஆயிரத்து 850 லீற்றர் (371,850) குடிநீர் விநியோகம்

Featured Replies

கிளிநொச்சி கடும்வரட்சி நாளாந்தம் 3 இலட்சத்து 71 ஆயிரத்து 850 லீற்றர் (371,850) குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
கிளிநொச்சியில் தொடர்ச்சியாக நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்;டில் பிரதேச செயலகங்கள் ஊடாகவும்,மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மூலமும் பல கிராமங்களுக்கும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் தொடர்ச்சியாக கிணறுகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து செல்வதனால் மக்களுக்கான குடிநீர் தேவையும் அதிகரித்து செல்கிறது.
 
கிளிநொச்சியில் நிலவும் வழமைக்கு மாறான வரட்சி காரணமாக பெரும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளும் வகையில் மேலும் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை  பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையியற் குழுக் கூட்டத்தில் விடுத்த அவசர கோரிக்கைக்கு அமைவாக கிளிநொச்சிக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால், கிளிநொச்சி மாவட்;டத்தின் நான்கு பிரதேச செயலகங்கள் ஊடாகவும் நாளாந்தம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தோடு பிரதேசபைகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் எரிபொருள் வழங்க்கப்பட்டு சபைகள் மூலமும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.
 
அதனடிப்படையில்
 
பளை
 
பிரதேச செயலகம் மூலம்
 
கோவில்வயல் 4000 லீற்றா,; புலோப்பளை 8000 லீற்றர், புலோப்பளை மேற்கு 8000 லீற்றர், கச்சார்வெளி 8000 லீற்றர், அல்லிப்பளை 4000 லீற்றர் என்றடிபப்படையிலும்,
 
பிரதேச சபை மூலம்
 
வேம்பொடுகேணி 4000 லீற்றர், கிளாலி 6000 லீற்றர், அரசர்கேணி 2000 லீற்றர், முகமாலை பாடசாலை 1000 லீற்றர், இத்தாவில் 3000 லீற்றர், இயக்கச்சி 6000 லீற்றர், பளை நகரம் (பாடசாலை) 2000 லீற்றர்.
 
கரைச்சி
 
பிரதேச செயலகம் மூலம்
 
வன்னேரிக்குளம் 8000 லீற்றர், ஆணைவிழுந்தான் 8000 லீற்றர், கண்ணகைபுரம் 8000 லீற்றர், ஸ்கந்தபுரம் 8000 லீற்றர், அக்கராயன்குளம் 4000 லீற்றர், கோணவில் 16000 லீற்றர், அம்பாள்குளம் 16000 லீற்றர், அம்பாள்நாகர் 20000 லீற்றர், உருத்திரபுரம் வடக்கு 8000 லீற்றர், உருத்திரபுரம் மேற்கு 4000 லீற்றர், பெரியபரந்தன் 4000 லீற்றர், வட்டக்கச்சி 4000 லீற்றர், மாயவனூர் 16000 லீற்றர், மாவடியம்மன் 8000 லீற்றர், இராமநாதபுரம் 8000 லீற்றர்
 
பிரதேச சபை மூலம்
 
தொண்டமான்நகர் 3000 லீற்றர், தட்டவன்கொட்டி.4000 லீற்றர்,    ஆனையிறவு,உமையாள்புரம் 2800 லீற்றர்.
 
கண்டாவளை
 
பிரதேச செயலகம் மூலம்.
 
தர்மபரம் கிழக்கு 6000 லீற்றர், தர்மபுரம் மேற்கு 4500 லீற்றர், உழவனூர் 2000 லீற்றர், நாதன் திட்டம் 2000 லீற்றர், கண்ணநகர் 4000 லீற்றர்,புன்னைநீராவி பாடசாலை 1000 லீற்றர், முசுறன்பிட்டி இந்தியன் வீட்டுத்திட்டம் 4500 லீற்றர், ஊரியான் 2500 லீற்றர், கண்டாவளை 10000 லீற்றர், கல்லாறு 13000 லீற்றர், கல்லாறு பாடசாலை 1500 லீற்றர், பிரமந்தனாறு பாடசாலை 1500 லீற்றர், பெரியகுளம் ஜயனார் வித்தியாலயம் 500 லீற்றர், கல்மடுநகர் 4500 லீற்றர்,பரந்தன் 4000 லீற்றர்.
 
பூநகரி.
 
பிரதேச செயலகம் மூலம்
 
பரமன்கிராய் பாடசாலை 400 லீற்றர்,பூநகரி மத்திய கல்லூரி 1000 லீற்றர்,ஞானமடம் பாடசாலை 400 லீற்றர்,கறுக்காய்த்தீவு மவி 750 லீற்றர் செல்லியாதீவு 500 லீற்றர், சுன்னாவில் பாடசாலை 400 லீற்றர் ,விக்கினேஸ்வரா வித்தியாலயம் 750 லீற்றர், செம்மன்குன்று பாடசாலை 400 லீற்றர் நல்லூர் மவி 750 லீற்றர் செல்லிபுரம் முன்பள்ளி 200 லீற்றர் ஞானிமடம் செட்டியகுறிச்சி 10,000 லீற்றர்.
 
பிரதேச சபை
 
கொள்ளக்குறிச்சி 1000 லீற்றர், மட்டுவில்நாடு கிழக்கு 3000 லீற்றர், பள்ளிக்குடா 7000 லீற்றர், மட்டுவில்நாடு மேற்கு 4000 லீற்றர், பரமன்கிராய் 3000  லீற்றர்,;, நாச்சிக்குடா 2000 லீற்றர், பொன்னாவெளி 22000 லீற்றர், (வேரவில்,பாடசலை வைத்தியசாலை வலைப்பாடு பாடசாலை) இரனைமாதாநகர் 6000 லீற்றர், வாடியடி வைத்தியசாலை 4000 லீற்றர்.கரியாலைநாகபடுவான் 1000 லீற்றர்
 
இதேவேளை கிளிநொச்சியில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் கிளிநொச்சி நகர குடிநீர் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ள கிராமங்களில் 35 நீர்தாங்கிகள்; வைக்கப்பட்டு 35000 லீற்றர் குடி நீர் நாளாந்தம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பாரதிபுரம் 5000 லீற்றர்,பொன்னகர் 9000 லீற்றர்,மலையாளபுரம் 4000 லீற்றர்,விவேகானந்தநகர் 1000 லீற்றர்,கிருஸ்ணபுரம் 2000 லீற்றர்,உதயநகர் கிழக்கு 1000 லீற்றர்,ஆனந்தநகர் 2000 லீற்றர்,கனேசபுரம் 3000 லீற்றர்,காஞ்சிபுரம் 2000 லீற்றர்,கமரிக்குடா 1000 லீற்றரும் விநியோகிக்கப்படுகிறது.  
 
மேலும் கிளிநொச்சியில் மேலதிகமாக குடிநீர் தேவைப்படும் பிரதேசங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் வகையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இன்று(15) 1000 லீற்றர் நீர்த் தாங்கிகள் 40 கொள்வனவு செய்யப்பட்டு நீர் விநியோக நடவடிக்கைள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
ஏற்கெனவே அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 50 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் மேற்க்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சியில் நிலவி வருகின்ற கடும் வரட்சி காரணமாக மக்களுக்கான குடிநீர் தேவை மேலும் அதிகரித்துச் செல்வதனால் அனர்த்த முகாமைத்து அமைச்சிடம் விடு;த்த வேண்டுகோளுக்கு அமைவாக மேலதிக நிதி குடிநீர் விநியோகத்தற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு ஊடாக படிப்படியாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் .
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் யாழ் நகருக்கு குடிநீர் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு விட்டதா?  :huh:  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய அபிவிருத்தி வங்கி புதிய திட்டத்துடன் இம்முறை வரவுள்ளது திட்டம் இதுதான் வன்னியில் திரியும் நாம்பன் மாட்டிலிருந்து பால் கறக்கும் திட்டம்   இத்திட்டத்துக்கு பால் கறவையாளர்கள் வேலைக்கு எடுக்கவுள்ளது விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு இரணைமடுக்குளத்தில் இருந்து நீர் என்று எந்த நேரத்தில வாய் திறந்தான்களோ தெரியாது இப்ப கிளிநொச்சிக்கே நீர் தட்டுபாடு ஏற்பட்டுவிட்டது    

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சிக்கே.... இந்த நிலை என்றால்... மற்றைய இடங்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.
தமிழகம் மாதிரி..... காலங்கடந்து யோசிக்காமல், மழை நீரை  சேமிக்கும் வழிவகைகளை பொதுமக்களிடம் ஊக்குவிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முழுசா வத்த முன் எல்லாரும் அவஸ்சுக்கோ சுவிசுக்கோ வந்தால் பிரச்சனை தீர்ந்துச்சு :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சிக்கே.... இந்த நிலை என்றால்... மற்றைய இடங்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.

தமிழகம் மாதிரி..... காலங்கடந்து யோசிக்காமல், மழை நீரை  சேமிக்கும் வழிவகைகளை பொதுமக்களிடம் ஊக்குவிக்க வேண்டும்.

 

பொதுமக்களால் இது முடியாத காரியம்.....வேட்டியுடன் அல்லது பட்டுவேட்டியுடன் நஷனல் போட்டுக்கொண்டு வருபவர்கள்தான் இதை முன்னெடுக்க வேண்டும்.
 
அவர்களாலும் இப்படியான நடவடிக்கைகள்  நடைமுறைக்கு   சாத்தியமில்லை. :(
 
இதற்கு நம்ம ஊர்  பாஷையில் சொல்லப்போனால்:- எங்களுக்கு வேறை வேலையில்லை. :lol:  :D
  • தொடங்கியவர்

மழைநீர் சேகரிப்பின் மகத்துவம் அறிந்த தேனி தொழில் அதிபர்: 2 கோடி லிட்டர் தண்ணீர் சேகரிப்பு.

 

http://www.yarl.com/...howtopic=142850

  • தொடங்கியவர்

கறைத்துறைப்பற்றில் குடிநீர் வசதியை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை

 

Pic-01.JPG

-ரஸீன் ரஸ்மின் 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட குமாரபுரம் மற்றும் முள்ளியவளை கிழக்கு ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொதுநோக்கு மண்டபத்திலுள்ள பொதுக்கிணற்றில் நீர் இல்லாமையினால் பொதுமக்கள் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் இரு கிராமங்களிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொது மண்டபங்களில் உள்ள குறித்த பொதுக்கிணறுகள் ஐம்பது அடிக்கும் கூடுதலான ஆழத்தைக் கொண்டுள்ள போதிலும் அக்கிணற்றில் சிறிதளவு கூட நீர் இல்லாமல் வெற்றுக்கிணறுகளாக காட்சியளிப்பதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் குறித்த பொதுமண்டபத்தில் இருந்து கடமைபுரியும் கிராம உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட கிராம அபிவிருத்தி சங்கம், கமக்கார அமைப்பு உட்பட, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் என பலரும் நீரின்றி கஷ்டப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/118580-2014-07-18-08-31-15.html

  • தொடங்கியவர்

கிளிநொச்சி தட்டுவன்கொட்டி கிராமத்திற்கு உவர் நீரே குடிநீராக வழங்கப்படுகிறது.

 

kili%20water0117_CI.JPG



தட்டுவன்கொட்டி கிராமத்திற்கு வழங்கப்படுகின்ற குடிநீர் சுத்தமான குடிநீர் இல்லாமல் உவர் நீரே வழங்கப்படுகிறது என தட்டுவன் கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் தியாகராசா அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலுள்ள தட்டுவன் கொட்டி கிராமம் ஆனையிறவுக்கு கிழக்கே அமைந்துள்ள உவர்நீர் பிரதேசமாகும் ,ங்கு வருடம் முழுவதற்கும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படல் வேண்டும். இந்த நிலையில் தற்போது நிலவும் மிகவும் கடுமையான வரட்சி காரணமாக மக்கள் குடிநீர் உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்கு நீரை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
கிளிநொச்சியி;வ் ஏற்பட்டுள்ள ,ந்த வரட்சி நிலைமையினை அடுத்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் நிதி வழங்கப்பட்டு பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் மூலம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.அந்த வகையில் பிரதேச சபையினால் தங்கள் கிராமத்திற்கு குடிநீர் என விநியோகிக்கப்படுகின்ற நீர் உவர் நீர் எனவும் அதனை பிரதேச சபையிடம் சுட்டிக்காட்டிய போதும் அவர்கள் அதனை கவனத்தில் எடுப்பதாக இல்லை எனத் தெரிவிக்கும் தட்டுவன்கொட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர்  தியாகராசா அவர்கள் மக்களின் மிகவுமு; அவசிய மற்றும் அவசர நிலைமையினை கருத்தில் எடுத்து குடிப்பதற்குரிய நீரை வழங்குவதற்கு ஆவணம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109542/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.